இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை:
நான் ஏற்கனவே கூறியபடி மொரார்ஜி அவர்களுக்கு எதிராக இந்திராவை நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்தது காங்கிரஸ் மேலிடம். அதனுள் காமராஜ் அவர்களும் அடக்கம். அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார். அவருக்கு மெழுகு மொம்மை என்ற பட்டப் பெயரும் இருந்தது. அவரை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க இயலும் என தப்புக் கணக்கு போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
முதலும் கடைசியும் முறை லோக்சபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இந்திரா காந்தி அவர்கள் சௌகரியமான மெஜாரிட்டியில் வென்றார்.
இந்திரா பதவி ஏற்ற சமயம் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்க் கொண்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ரூபாய் வர்த்தகத்தில் வாங்கப்பட்டது. அன்னியச் செலாவணி இல்லை. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் 1966-ஜனவரியில் மரணமடைய இந்திரா அவர்கள் மேலே கூறியபடி பதவி ஏற்றார். முந்தைய ஆண்டு 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. அது தேசத்துக்கு 1966-ல் பொருளாதசர நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், 1965-ல் தென்/மேற்கு பருவக்காற்று வேறு பொய்த்தது. ஜூன் 6, 1966 இந்திரா அவர்கள் ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். மேலும் நிலைமையை மோசமாக்குவதாக 1966 பருவ மழையும் பொய்த்தது.
ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கோதுமையின் இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவின் நிலைமை ரொம்பவும் மோசமாயிற்று. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவை கோதுமைக்கு கெஞ்ச வேண்டியதாயிற்று. கோதுமையை அன்னியச் செலாவணி இல்லாது ரூப்பய்க்கு விற்குமாறு அமெரிக்காவை கேட்க வேண்டியிருந்தது.
ஆனால் அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருந்தது. அதுவும் வியட்னாம் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை ரொம்பவே கண்டித்து வந்தது. இருந்தாலும் என்ன செய்வது. இந்திரா அவர்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான்ஸனுக்கு இந்திரா காந்தி நேரடி டெலிபோன் செய்து கோதுமைக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திரா அவ்ரது முகம் ரோஷத்தால் சிவந்து போயிருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் தேவை என்றால் சுய கௌரவம் பார்க்க இயலாதுதானே. அந்த விஷயத்தில் சமயோசிதமாக நடந்த இந்திரா அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.
நல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. இந்த பசுமைப் புரட்சி எப்படி வந்தது என்பதை விவரிக்கும் இந்தக் கட்டுரையை பாருங்கள்.
இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தை மொத்தமாகப் பார்க்கும்போது இந்த முதல் காலக்கட்டம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார். அதை அப்போது பலர் கவனிக்கவில்லை. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டம் வேறு அவர் மேல் ஒரு வசீகரத்தை மக்களிடம், முக்கியமாக பெண்களிடம், ஏற்படுத்தி வந்தது. இந்தக் காலக் கட்டம் துரதிர்ஷ்டவசமாக வெறும் 13 மாதங்களே நீடித்தது.
1967 மார்ச் மாதம் பொது தேர்தல் வந்து பலவற்றைப் புரட்டிப் போட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
21 hours ago
12 comments:
"அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார்."
சும்மாவா சொன்னாங்க ஊமை ஊர கேடுகும்ன்னு!
"இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார்."
Power corrupts, Absolute Power corrupts Absolutely - Lord Acton
//Power corrupts, Absolute Power corrupts Absolutely//
சரியாத்தான் சொல்லியிருக்காங்க. இதே மாதிரி எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சி காலத்தையும் 1980 வரைக்குமான காலம் பிறகு 1987 வரைன்னு பிரிக்கலாம். முதல் கட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஊழலை அருகில் நெருங்க விடாது நெருப்பு போல இருந்தார். ஆனால் அவர் ஆட்சியை இந்திராவை வச்சு தேவையில்லாம கலைக்க வைத்தார் கருணாநிதி. அப்பவும் எம்.ஜி.ஆர். ஜெயிச்சு மேலே வந்தார். கருணாநிதியை உண்டு இல்லைன்னு பண்ணார். அவர் இறக்கும் வரை அவரே முதன் மந்திரி. அவர் இறந்த பின்னாலும் அவரோட பெயர் அவர் கட்சி இருமுறை ஆட்சிக்கு வரக் காரணமாயிருந்தது. ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வே திகைக்கும் வண்ணம் காரியம் ஆற்றினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Please elaborate about the "mannar maaniya ozippu" by Indira gandhi.She used it to come to power in 1971,dint she?What was so great about it?I heard that at that time many kings withdrew privy purses of few hundred rupees only.So how did it become an electoral issue at all?
//இந்திரா அம்மையார் பதவி ஏற்க முக்கிய காரணகர்த்தா காமராஜர் தானே?//
1966-லே லால பஹதூர் சாஸ்திரி இறந்த போதும் சரி, அதுக்கு முன்னாலே 1964-லே நேரு இறந்த போதும் சரி காமராஜ் அவர்கள் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார்.
முக்கியமாக 1964-லே மொரார்ஜி தான் பிரதமராக வருவோம்னு எதிர்பார்த்த போது அவரை கழித்துக் கட்டி லால் பஹதூர் சாஸ்த்ரியை கொண்டு வந்தனர் காங்கிரஸ் மேலிடத்தார். அவர்கள் சார்பில் முடிவு எடுத்த சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்த காமராஜ்தான் மொரார்ஜியிடம் "லால் பஹதூர் சாஸ்திரி" என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்றார். அப்போதிலிருந்தே காமராஜ அவர்கள் கிங் மேக்கராக உருவெடுத்திருந்தார்.
1966-லும் கிட்டத்தட்ட அதே நிலைதான், ஆனால் இம்முறை உள் கட்சி தேர்தல் நடந்தது. அதில் இந்திரா வெற்றி பெற்றார். ஆகவே தான் பதவிக்கு வந்ததற்காக அவர் காமராஜ் அவர்களிடம் நன்றியெல்லாம் பாராட்டவில்லை.
மேலும் இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. 1967 எலெக்ஷனில் காமராஜ் தோற்றுப் போனார். அது அவர் நிலையை பலவீனப்படுத்திவிட்டது. அவரும் ஜெயித்து காங்கிரசும் சட்டசபையில் பெரும்பான்மை பெற்றிருந்தால் ஒரு வேளை காமராஜ் அவர்கள் தமிழகத்திற்கே முதன் மந்திரியாகக் கூட திரும்பியிருக்கலாம். ஆனால் இது பற்றி இப்போது பேசி என்ன பயன்?
1968 அளவில் நாகர்கோவில் (அல்லது கன்னியாகுமாரி) பாராளுமன்ற இடை தேர்தலில் காமராஜ் அவர்கள் ஜெயித்து எம்.பி. ஆனார். அப்போது கூட அவருக்கு இந்திரா காந்தி ஒன்றும் மந்திரி பதவி தந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று இந்திரா அவர்கள் நாளுக்கு நாள் பலம் பெற காமராஜ் அவர்களது பலம் குறைந்து வந்தது. அதுதான் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Please elaborate about the "mannar maaniya ozippu" by Indira gandhi.//
அடுத்த பதிவுகளில் இதையும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ததால் ஒரு பக்க விளைவு. கோதுமையுடன் பார்தினியம் விஷ செடியும் கலப்படமாகி இந்தியாவில் மாசு உன்டாக்கியது.
பார்த்தினிய விஷம் மனிதர்களுக்கு சுவாச பிரச்சனைகளும், தோல் வியாதிகளை உருவாக்குகிறது.
மேலும் படிக்க
http://www.environment.gov.au/biodiversity/invasive/publications/p-hysterophorus.html
http://tinyurl.com/yr23or
நான் ஒன்னும் தேவையில்லாமல் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைக்கவில்லை. எங்களுக்கு தேவை இருந்தது கலைத்தோம்.
இந்திராவுக்கு கொடுகக் வேண்டியதை கொடுதோம் அவர் கலைத்தார், அவரை வைத்து வெற எதுவும் செய்யவில்லை.
தேவை இல்லாமல் ஆட்சியை கலைத்து அவர் அவமானப்பட்டதும் எனக்கு பணம் செலவானதும்தான் மிச்சம்.
பார்த்தனீயம் பற்றி அரிய தகவல் தந்ததற்கு நன்றி ஜே அவர்களே. இது எனக்கு முற்றிலும் புதிய தகவல். புதிதாக கற்பதென்றாலே வயது குறைந்த உணர்வு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி.
:)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது//
Green revolution was the biggest contribution Indira did and the next perhaps- in creating a new nation of Bangladesh.
//Green revolution was the biggest contribution Indira did and the next perhaps- in creating a new nation of Bangladesh.//
நான் சில நாட்களுக்கு முன்னால் கேட்ட கேள்வி பதில் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பை பந்தயத்தில் தோற்க முக்கியக் காரணம் யார்?
இந்திரா காந்தி.
ஏஏஏன்ன்ன்ன்? (ஜில் ஜில் ரமாமணி குரலில்)
இவரை யார் பங்களாதேஷை உருவாக்கச் சொன்னது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment