முகமூடி அவர்களின் இப்பதிவில் சிலருக்கு பயங்கர சந்தேகம் ஒன்று வந்துள்ளது. அதாவது டோண்டு ராகவன் ஏன் பலரைப் போல இன்னும் தமிழ்மணத்தை விட்டு விலகாதிருக்கிறான் என்று.
எஸ்.கே. கூறுகிறார்: "டோண்டுவை எனக்கு தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தபின்தான் தெரியும். அவருடைய "நான் ஐயங்கார்" அறைகூவலுக்கு பயங்கர எதிர்ப்பு எழுந்தபோது அவர் தமிழ்மணத் திரட்டியிலிருந்து வெளியேறுவார் என்று எண்ணினேன்.
சமீபத்தில் அவரிடம் நான் விலகிவிடுவதாக இருக்கிறேன் என்றபோது, அவர் தன்னிலை விளக்கம் கொடுத்தார் - அதாவது தமிழ்மணத்தில் அவருடைய இடுகைகள் தெரிந்தால்தான் நிறைய பேர் வாசிப்பார்கள். அதனால் அவருக்கு நிறைய காண்டேக்ட்ஸ் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு வேலைகள் கிட்டுகின்றன. தமிழில் எழுதுவதும் சீர்படுகிறது என்றார். மேலும் தன் இடுகைகளுக்கு ஏராளமாக பின்னூட்டம் கிடைப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறார். எப்போதும், "பதிவு", "பின்னூட்டம்" என்ற obsession-னுடன் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் விடாது கருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில அவருடையை பதிவை தேடிப்பிடித்து நன்றி சொல்லி லிங்க் கொடுத்து எல்லோரையும் அங்கு செல்ல வைத்தார். அதற்காக அவரை நேரிடையாக சாடியிருக்கிறேன். அவர் இந்த மாயையிலிருந்து எப்போது வெளிவருவாரோ நானறியேன்"!
நான் அவரிடம் அவ்வாறு கூறியது உண்மையே. இதை அவரிடம் மட்டுமல்ல பலரிடமும் கூறியுள்ளேன். எனது பங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய இப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த செந்தழல் ரவி மற்றும் குமரன் எண்ணத்திடம் கூட இதை கூறியுள்ளேன். அதே ரவியிடம் இதை பலமுறை கூறியுள்ளேன்.
எஸ்.கே. அவர்கள் மேலே குறிப்பிட்ட பெரியார் பற்றிய பதிவை பற்றி ஒரு விளக்கம் அளித்து விட்டு, தமிழ்மணத்தில் நான் இருப்பதை பற்றி பேசுகிறேன்.
அதுவரை வெறுமனே ஈவேரா என்றே நான் குறிப்பிட்டு வந்த பெரியார் பற்றிய இப்பதிவு ஒருவித தனி அனுபவம். பெரியாரை பற்றி எனக்கு நிறைய விமரிசனங்கள் உண்டு. அவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அவர் தன் இறந்த மனைவியைப் பற்றி ஒரு கையறுநிலையில் எழுதியது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன்னைப் பற்றிய சில உண்மைகளை அவர் ஒத்து கொண்டது மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் செய்த சுயவிமரிசனங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றே எண்ணினேன். அதனால்தான் தயங்காமல் அதை இடுகையாக இட்டேன். 'அது இருக்கட்டும், ஏன் விடாது கருப்புவின் பதிவை சுட்ட வேண்டும்' எனக் கேட்டால், எனது பதில் இவ்வாறாகத்தான் இருக்கும். வி.க.வின் பதிவில்தான் இச்செய்தியை முதன் முதல் பார்த்தேன். அந்த உண்மையை எப்படி மறைக்க முடியும்? பெரியார் எழுதிய உண்மையை சிலாகித்து எழுதும் அப்பதிவில் நான் மட்டும் எப்படி பொய்யுரைக்க முடியும்? குடியரசு பத்திரிகையிலிருந்து நேரடியாக கோட் செய்து போடுவதுதானே என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. செய்தால் யாருக்கு உண்மை தெரிந்திருக்கும்? கேள்வியில் விஷயம் இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மை தெரிகிறதோ இல்லையோ, இந்த டோண்டு ராகவனுக்கு உண்மை தெரியுமே. தன்னிடமே பொய் சொல்லும் டோண்டு ராகவன் எப்படிப்பட்ட மனிதனாக அந்த டோண்டு ராகவனாலேயே கருதப்படுவான்?
வி.க.வின் பதிவுகளைப் படிப்பேனா என்பதற்கு எனது ஒரே பதில் ஆம் என்பதே. ஏனெனில் எதிரி என்ன செய்கிறான், என்ன எழுதுகிறான் என்பதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். அதில் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், தேவையானபோது உபயோகிக்க வேண்டும் என்பது அடிப்படை விஷயம். ஆக, படித்தது உண்மை, அதில் ஒரு பதிவு எனக்கு புதிய விஷயத்தைக் கூறியது உண்மை. அப்படியிருக்க எங்கு அதைப் பார்த்தேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டியதுதானே முறை?
ஆனால் இதில் நான் சற்றும் எதிர்ப்பார்த்திராத ஒரு விளைவு ஏற்பட்டது. அது வி.க.வின் எதிர்வினையால் ஏற்பட்டது. அதுவரை வி.க. என்பது உண்மையிலேயே யார் என்பது பாதி சந்தேகத்தில் இருந்தவர்களுக்கும் புலப்பட்டு விட்டது.
சரி, மீண்டும் தமிழ்மணத்துக்கு வருகிறேன். எஸ்.கே. அவர்கள் சொன்ன காரணம் சரிதான். ஆனால் அதுவே முழு உண்மையல்ல. தமிழ் வலைப்பூக்களை பற்றி நான் 2004 அக்டோபரில் எதேச்சையாகத்தான் அறிந்தேன். நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களது திருவல்லிக்கேணி நினைவுகள் சக திருவல்லிக்கேணிவாசியான எனது உள்ளத்தைக் கவர்ந்தன. அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே நான் பிளாக்கர் கணக்கு துவங்கினேன். பிறகு தமிழ் தட்டச்சு வந்தது. எனது பதிவுகள் தொடர்ந்தன.
ஆனால் அப்போதெல்லாம் ஒவ்வொரு வலைப்பூவாகத் தேடிப் போக வேண்டும். தமிழ் வலைப்பதிவர் பட்டியல் இருந்ததோ அந்த வேலை சற்று எளிமைப்படுத்தப்பட்டதோ. ஆனால் நான் உள்ளே வந்த சில நாட்களுக்குள் காசி அவர்களது தமிழ்மணம் எனது இந்த வேலையை சுலபமாக்கி விட்டது. அதன் பெருமையை நான் கூற விழைவது சொந்த சகோதரனிடம் ஒரு பெண் தன் பிறந்தகப் பெருமையைப் பேசுவதற்கு சமமாகும்.
ஆக முக்கியமான காரணம் இதுதான். பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.
இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.
பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.
ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?
ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question. ஓக்கேவா கால்கரி சிவா மற்றும் எஸ்.கே. அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
19 hours ago
24 comments:
உங்களுக்கு பிரச்சினை என்று வந்தபோது யார் துணை நின்றது என எண்ணிப்பார்த்தீர்களா, டோண்டு?
அவர்கள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முடிவை பார்க்கிறீர்கள்.
நன்றியை மறக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
பரம பிதா
டோண்டு தமிழ் மணத்தை வெளியேறினால் நங்கநல்லூர் பேருந்து நிறுத்ததில் கூட்டாக தீக்குளிப்போம்
டோண்டு ரசிகர் மன்றம்
டோக்கியோ
பரம பிதா அவர்களே,
நான் கூற மறந்த ஒரு விஷயத்தை இப்போது கூறுவதற்கு உங்கள் பின்னூட்டம் வழி செய்து விட்டது.
ஒரு குறிப்பிட்ட பார்வை கோணத்தை எடுத்துக் கூறும் வலிவுடையவர்கள் வேறு காரணங்களால் களம் விட்டு அகல்கின்றனர். நான் களத்தில் இருந்து கொண்டு மேலே யுத்தம் செய்கிறேன். அவர்வர் நிலைப்பாடு அவரவருக்கு.
//உங்களுக்கு பிரச்சினை என்று வந்தபோது யார் துணை நின்றது என எண்ணிப்பார்த்தீர்களா, டோண்டு//?
பலரும் நின்றனர். தமிழ்மணம் நிர்வாகமும் நின்றது. அதையும் நான் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
ஏன் டோண்டுவுக்கு மட்டும் இத்தனை சலுகை என்று பலர் கேட்கும் அளவுக்கு எனக்கு சாதகமான விஷயங்களை தமிழ்மணம் செய்தது.
மாடரேஷன் வந்தது என்னால் மட்டும் என்று கூறும் அளவுக்கு நான் புத்தியில்லாதவன் இல்லையென்றாலும், பலர் அவ்வாறே நினைக்கும் அளவுக்கு அது அமைந்ததும் நிஜம்.
என் மனைவி மற்றும் மகள் பெயரில் வந்த இடுகைகளை தமிழ்மணம் அனாயாசமாக நீக்கியது. இதற்காகவெல்லாம் கூட நான் தமிழ்மணத்துக்கு கடமைப் பட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விளம்பரவெறி + பின்னூட்ட வெறி= டோண்டு ராகவன்
நேசகுமாரை நீக்கியதால் அனைவரும் மனமுடைந்து கிடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு ஜால்ரா பதிவு தேவையா?எரியும் வீட்டில் சுருட்டு பிடிக்கும் மனப்பான்மைக்கும் உங்கள் பதிவுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதா?
பிளாக்மெயில் பேர்வழிகள் இனிவந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். பின்னூட்டம் மலை, மலையாகக் குவியும். மகிழ்ச்சியில் உங்கள் உள்ளம் கூத்தாடும்.
வாழ்க வளமுடன்
Your Service is simply great.
Leave it to god ..
வாருங்கள் உதயணன் அவர்களே,
வாசவதத்தைக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.
எனது இந்த வரிகளைப் பார்க்கவும்.
//ஒரு குறிப்பிட்ட பார்வை கோணத்தை எடுத்துக் கூறும் வலிவுடையவர்கள் வேறு காரணங்களால் களம் விட்டு அகல்கின்றனர். நான் களத்தில் இருந்து கொண்டு மேலே யுத்தம் செய்கிறேன். அவர்வர் நிலைப்பாடு அவரவருக்கு.//
மேலும் நன்றி கூறுவது அவ்வளவு பெரிய குற்றமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நேசகுமாரை நீக்கியதால் அனைவரும் மனமுடைந்து கிடக்கும் /////
அனானி,
நெஞ்சை நனைத்து விட்டீர்கள். தள்ளாடுகிறது
//விடாதுகருப்பு has left a new comment on your post "டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா?":
தமிழ்மணத்துக்கும் வெட்கம் இல்லை. உனக்கும் ரோஷமில்லை. என்னத்தைச் சொல்ல.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.//
மேலே உள்ள பின்னூட்டம் விடாது கருப்பு போட்டதா என்பதை சுட்டுவது மூலம் காண இயலவில்லை.
இருப்பினும் எலிக்குட்டி சோதனையில் தேறுவதால் அனுமதிக்கிறேன்.
இரு கருத்துக்களுமே உண்மையின் அடிப்படையில் இல்லை. அதிலும் தமிழ்மணத்தைப் பற்றிய கருத்தை வன்மையாக மறுக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் யுத்தம் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை. யுத்தகளத்தில் வியாபாரம் செய்கிறீர்கள். கூட நின்று யுத்தம் செய்த நண்பர்களின் முதுகில் குத்துகிறீர்கள். உங்கள் ஜாதியையும் மதத்தையும் உங்கள் சுயவிளம்பரத்துக்கும் பின்னூட்டம் வாங்கவும் பயன்படுத்துகிறீர்கள்.
இந்து நண்பர்களே, பிராமண பதிவர்களே
நேசகுமாரை நீக்கிய கும்பலுக்கும், முகமூடியை கேவலப்படுத்திய கும்பலுக்கும் இவர் அடிக்கும் ஜால்ராவை பார்த்தீர்களல்லவா? உப்பு போட்டு சோறு தின்னும் சுயமரியாதை உள்ள எந்த இந்துவும் இனி இவருக்கு பின்னூட்டம் போட வேண்டாம்.
//இன்னா *சுத்துக்குத் துப்புற ? உனக்கு ஏன் அம்புட்டு ஆத்துரம் ? தமிழ் மணத்தப் பத்தி முகமூடி எதுவுமே பேசாதப்போ நீ ஏன் வந்து துப்புற? பொண்ண வளத்து நல்ல அப்பனா இருந்தா நல்ல பையனா பாத்து கொடுப்பான், இப்படி காசு வாங்கிகிட்டு ரவுடிக் கும்பல் கிட்ட கொடுத்தா அதுக்கு பேரு கட்டிக் கொடுக்குறது இல்ல , நம்ம கால்கரி சொன்னமாதிரி \"கூட்டிக் கொடுக்குறது\". இதையும் உங்க மரியாதை ராமன் கிட்ட போய் சொல்லுங்க டோண்டு சார்.//
முகமூடியின் பதிவில் இருக்கிறது இந்தப் பின்னூட்டம். டோண்டு ஐயா - இப்படி எழுதியவர்கள்தான் உங்களுக்கு உதவினார்களா? ஜாதி குறித்த உங்களது கருத்துக்களுடன் உடன்பாடு இல்லாதபோதும், ஒரு வயதான ஆளும் அவரது குடும்பத்தினரும் போலியால் தெருவுக்கு இழுக்கப்பட்டது மட்டுமில்லாமல், அவர்கள் கருத்துடன் ஒத்து வராதபோது, போலி என்ற மனநோய் பிடித்த ஜென்மத்தை எதிர்க்க உங்களுக்கு உதவியவர்கள் என்று கூறிக்கொள்பவர்களாலும் இழுக்கப்படுவது வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் நேரத்தைக்கொண்டும் மொழித்திறமையைக் கொண்டும் எத்தனையோ ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்யலாம். போலி விஷயத்தில் உங்களை ஏற்றி விட்டு ஏற்றி விட்டு முன்னுக்குத் தள்ளி உதை வாங்க வைத்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அனாமதேயப் பின்னூட்டங்களில் தாண்டவம் ஆடுவதையும், தன் பாட்டுக்கு ஒத்துவரவில்லையென்றால் உங்களையும் பலிபீடத்தில் ஏற்றக் கூசாததையும் பார்த்தாவது, அசலில் நாகரிகம் உள்ளவர்கள் யார் அற்றவர்கள் யார் என்று புரிந்துகொள்வீர்கள் என்று நம்பலாமா?
//சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அனாமதேயப் பின்னூட்டங்களில் தாண்டவம் ஆடுவதையும்,..//
எல்லோருமா அனாமதேயமாக வந்தார்கள்? கால்கரி சிவா மற்றும் எஸ்.கே. எனக்கு சொந்தப் பெயரிலேயே ஆதரவு அளித்தவர்கள். அவர்கள் இப்போது மாற்றுக் கருத்தைக் கூறுவதால் எனக்கு வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்களா என்ன?
அதிலும் எஸ்.கே. சார் இருக்கிறாரே, மிகவும் அருமையான மனிதர். மரணத்தைத் தொட்டு திரும்பிய இவரது கணினி அறிவு மிகவும் அபாரம். நான் அவ்வப்போது உதார் விட்ட எனது மூன்று எலிக்குட்டி மற்றப் பிற சோதனைகளை பற்றிய அறிவை எனக்களித்தது அவரே.
முந்தா நாளன்று அவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தேன். கிட்டத்தட்ட 3 மணி நேர சந்திப்பு. பல விஷயங்களை மனிதர் அனாயாசமாகக் கூறுகிறார். பல விஷயங்களை கற்று கொண்டேன் அவரிடம். சல்மா அயூப் விஷயம் பற்றியும் பேசினோம். ஜோதிதான் போலி டோண்டு என்பதற்கான பல ஆதாரங்களையும் காட்டினார்.
அனானிகளாக வந்து என்னை முகமூடி பதிவில் சாடியவர்களும் நண்பர்கள்தான். இப்போதைக்கு என் மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். எனக்கு பின்னூட்டம் இடாதீர்கள் என்று ஒப்பனாகவே கூறினர் என்றாலும் எனக்கு யாரேனும் பின்னூட்டம் இட்டால் செந்தமிழில் அவ்வாறு பின்னூட்டம் இட்டவர்களை அவர்கள் திட்ட மாட்டார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு"
Are you here just for kicks?
//Are you here just for kicks?//
சற்று கஷ்டமான கேள்வி. இருப்பினும் முயற்சிக்கிறேன்.
என்னைத் தமிழ்மணத்திலிருந்து துரத்துவதுதான் எதிரியின் நோக்கம். அதிலும் அவன் துரத்தப்பட்டதிலிருந்தே இந்த வெறியில்தான் இருக்கிறான். ஆகவே இப்போது வெளியேறுவதை நான் எனது தோல்வியாகத்தான் பார்க்கிறேன். இதுவும் நான் இங்கிருந்து அகல மறுப்பதற்கு ஒரு காரணமே.
ஆனால் அதுதான் ஒரே காரணம் என்று கூறவியலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார்!!
நீங்கள் நேசிக்கும் மொழிபெயர்ப்பு, தொழில் மற்றும் கருத்துக்கள் உங்கள் விருப்பப்படியே உங்களுடன் இருக்கட்டும். எனக்கு இழப்பே கிடையாது.
ஆனால் சாதியின் பெயரால் அடிக்கும் கும்மாளம் கொஞ்சம் ஓவர். எழுதிக்கொண்டிருங்கள். ஆனால்,
மூடிஞ்ச வரைக்கும் உங்கள் அறிவை அடக்கத்துடன் பகிர்ந்து கொள்வதோடு
நிறுத்திக்கொள்வது ஊருக்கு நல்லது.
புள்ளிராஜா
சரியான முடிவு. உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு. நீங்கள் விலகினால் தமிழ்நாட்டில் பிரிவினவாத தீய சக்திகள் கை நீளும். இந்த நாட்டிற்கு உங்களை போன்ற நேர்மையானோர் தேவை. பயந்து விலகியவர்களால்தான் பல சீர்கேடுகள் சரித்திரத்தில் நிகழ்ந்தன. நல்லது நடந்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் வேலை தொடரட்டும். இதில் கோடுமை என்ன்வென்றால் தீய சக்திகளின் மிரட்டல்களுக்கு பயந்து பலர் அவருக்கு(களுக்கு) தலை ஆட்டுவதுதான். இந்த தீய சக்திகளுக்கு பின்புறம் இருந்து உதவி செய்பவர்கள் யாரென நாளுக்கு நாள் தெளிவாகிறது.
பாசிச-சொஷலிச & புரட்சிகர பைத்தியகாரர்களால் பாதிக்கபட்டவர்களுக்கு இந்த பின்னுட்டம் சமர்ப்பனம்!
பிரிவினவாத அரசியல் ஒழிக!
அது சரி, நேசகுமார் எங்கே ஆளையே காணோம். இப்படி தமிழ்மணத்தை எரியவிட்டுவிட்டு அந்த மனிதர் தனது இஸ்லாமிய ஆராய்ச்சியில் மீண்டும் இறங்கிவிட்டாரா?
நேசகுமார் தமிழ்மணத்தை விட்டுத்தான் விலகினார். வலைப்பதிவர் உலகத்தில் அவருக்கான இடம் அப்படியே உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் நேசிக்கும் மொழிபெயர்ப்பு, தொழில் மற்றும் கருத்துக்கள் உங்கள் விருப்பப்படியே உங்களுடன் இருக்கட்டும். எனக்கு இழப்பே கிடையாது.//
ரொம்பவும் பெரிய மனது சார், தன்யனானேன் என்னை இவ்வாறு அனுமதிப்பதற்கு.
//ஆனால் சாதியின் பெயரால் அடிக்கும் கும்மாளம் கொஞ்சம் ஓவர்.//
யார் எங்கே கும்மாளம் அடித்தது என்பதையும் கூறினால் நலம்.
//எழுதிக்கொண்டிருங்கள். ஆனால்,
முடிஞ்ச வரைக்கும் உங்கள் அறிவை அடக்கத்துடன் பகிர்ந்து கொள்வதோடு
நிறுத்திக்கொள்வது ஊருக்கு நல்லது.//
அடக்கமில்லாமல் ஆடுவது யார் என்பது பார்ப்பவருக்கே புரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///நேசகுமார் தமிழ்மணத்தை விட்டுத்தான் விலகினார். /
அடிச்சு துரத்தனதா கேள்விப்பட்டனே? வடிவேலு பாணியில் ஏதாவது பதில் சொல்லவும்
மூனுக்கு வாங்க
//அடிச்சு துரத்தனதா கேள்விப்பட்டனே?//
தவறான புரிதல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/
//அடிச்சு துரத்தனதா கேள்விப்பட்டனே?//
தவறான புரிதல்.
///
நிஜமாவா சொல்றீங்க? தகவலுக்கு நன்றி
////Are you here just for kicks?//
சற்று கஷ்டமான கேள்வி. இருப்பினும் முயற்சிக்கிறேன்.//
That anony might have been convinced. But I am not. Why are you still clinging on inspite of so many having left ThamizmaNam?
Unconvinced
//That anony might have been convinced. But I am not. Why are you still clinging on inspite of so many having left ThamizmaNam?
Unconvinced//
இப்போது நடப்பது மிக துரதிர்ஷ்டவசமானது. அவரவர் நிலைப்பாடு அவர்களுக்கு. நான் எனது நிலைப்பாட்டைத்தான் எழுத முடியும்.
1. நான் ஏன் தமிழ்மணத்தில் உள்ளேன் என்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன.
2. வாழ்க்கையில் எதுவுமே முழு கருப்போ அல்லது முழு வெள்ளையோ அல்ல.
3. இருக்கும் விஷயங்களை வைத்து செயலாற்றுவதுதான் நலம் என நான் கருதுகிறேன்.
4. வேறு திரட்டிகள் வந்தால் அதிலும் சேர்ந்தால் போயிற்று.
5. என்னைப் பொருத்தவரை எனது கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் நானே மற்றவர் போதும் போதும் என்று கதறும் அளவுக்கு அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் நம்ம பொறுமை திலகம் மா.சிவகுமார் அவர்களே தனது எழுத்து வலைப்பூவின் பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதினார்.
"இன்றைக்கும் டோண்டுவின் இன்னொரு பீற்றல் வந்தது. இஸாக் அசிமோவும் அவரும் ஒண்ணாம்". நினவிலிருந்து கூறுகிறேன் மாசிவகுமார் அவர்களே. உங்களது எதிர்வினை எனது இப்பதிவுக்காக வந்தது.
http://dondu.blogspot.com/2006/06/blog-post_05.html
ஆகவே வேறு யாராவது என் தகவல்களை கண்டு பிடித்து விடுவார்களோ என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.
6. மற்றப்படி டோண்டு ராகவன் பயந்தவன் என்று யாராவது நினைத்தால் அப்படியே நினைத்து கொள்ளுங்கள் என விட்டுவிடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment