2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்து சந்தித்த முதல் தேர்தல் 1967-ல்.
லோக் சபாவை பொருத்தவகையில் காங்கிரசுக்கு 40.78% ஓட்டுடன் 283 சீட்டுகள் கிடைத்தன.
இந்த ரிசல்டை முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிட்டால்,
1962-ல் பெற்ற ரிசல்ட் 44.72%, 361 சீட்டுகள்.
1957-ல் பெற்ற ரிசல்ட் 47.78%, 371 சீட்டுகள்
1952-ல் பெற்ற ரிசல்ட் 44.99%, 364 சீட்டுகள்.
ஆக, முதல் முறையாக, 300-க்கும் குறைவான சீட். ஓட்டுக்கள் எண்ணப்படும்போது காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதே சற்று சந்தேகமாகக் காணப்பட்டது. ராஜாஜி அவர்களின் சுதந்திரக் கட்சியின் ஆதரவை கேட்கலாம் என்ற ஹேஷ்ய செய்திகளும் வெளியாயின. ஆனால் கடைசியில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடைத்தது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 25 சீட்டுகள் கிடைத்தன. இது பற்றி பின்னால் மேலும் எழுதுகிறேன்.
மாநிலங்களை பொருத்தவரை தமிழகம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பதவி இழந்தது. வேறு சில மாநிலங்களில் கட்சித் தாவல்கள் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூடிய சீக்கிரம் பதவி இழந்தது. அச்சமயம் ஆ.கே. லக்ஷ்மண் அவர்களது ஒரு கார்ட்டூன் மிக பிரசித்தம். ஒரு சட்டசபை உறுப்பினர் உடம்பெல்லாம் கட்டுகளுடன் நின்று கொண்டிருப்பார். சுற்றிலும் நிற்கும் நிருபர்களுடன் கூறிக் கொண்டிருப்பார்: "Just as I was crossing the floor, he was crossing in the opposite direction".
இந்த தேர்தலில் இந்திராவுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால், அவரை கட்டுப்படுத்தக் கூடியவர்களில் பலர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தனர். முக்கியமாக காமராஜ் அவர்கள். இம்முறை உள்கட்சி தேர்தல் இன்றி அவரால் பிரதமராக வர முடிந்தது. மொரார்ஜி தேசாய் அவர்கள் உதவிப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவி பெற்றார். காமராஜையும் மற்றவர்களையும் மெதுவாக அலட்சியப்படுத் துவங்கினார்.
அவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.
இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.
1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.
அமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.
நடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்தியாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.
சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.
இம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன.
அவற்றைப் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
27 comments:
Thanks for sharing Indian Political history with so much passion .
Raveen
NJ
"சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார்."
மனிதன் - அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
சொசியலிஸ்ட்டு - டேய் யாருடா இங்க தமில் ?
மனிதன் - யாரெல்லாம் சோசியலிசத்தை மற்றும் அரசுக்கு முக்கியத்துவத்தை அதிகமாக கொடுக்கனம்னு இன்னும் சொல்றானோ, அவன் கன்னாடி முன்னாடி நின்னு "நீ உருப்பட மாட்ட" சொல்லிக்கனும்.
எல்லாமே ஒரு கம்பேரிசனே. ஏழைகளை பணக்காரனாக ஆக்குவது கடினம். ஆனால் பணக்காரனை தாராளமாக ஏழையாக்க முடியும். அதைத்தான் நேரு இந்திரா அரசுகள் ஏகப்பட்ட வரி விதித்து அரசு செய்ய முயன்றன.
1990-ல் கிழக்கு ஜெர்மனி உலக வரைபடத்திலிருந்து மறைந்தது. 1991-திசம்பரில் கிறிஸ்துமஸ் பரிசாக சோவியத் யூனியன் சிதறுண்டது.
1991 துவக்கத்தில் இந்தியா அன்னியச் செலாவணி அதல பாதாளத்துக்கு சென்ற நிலையில் தன்னிடம் இருக்கும் தங்கத்தை அடகு வைக்க நேர்ந்தது.
ஆக, நரசிம்ம ராவ் அரசு வந்ததும் பொருளாதாரக் கொள்கைகள் நேர் எதிர்ப்பாதை எடுத்தன என்பது ஒன்றும் எதேச்சையானதில்லை.
இத்தனை குளறுபடிகளுக்கும் இந்த உளுத்துப் போன சோஷலிசக் கொள்கைகளே காரணம். அதுதான் நேரு அவர்கள் நம் நாட்டுக்கு விட்டு சென்ற சொத்து.
ஏதோ நல்லபடியாக மாமனிதர் ராஜாஜி அவர்கள் போதித்த பொருளாதாரக் கொள்கைகளை வைத்து அதை சரிக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், காஷ்மீரில் நேரு அவர்கள் செய்த குளறுபடிகளை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிரோம்.
சைனாவிடம் அவர் ஏமாந்து நாம் இழந்த ஆயிரக்கணக்கான சதுரமைல்கள் இன்னும் அப்படியே இழந்ததாகவே உள்ளன.
இன்னமும் சைனாவுக்கு ஜால்ரா அடிக்கும் கம்யூனிஸ்டுகள் அதை மக்கள் கவனத்திலிருந்து அகற்ற முயற்சி செய்கின்றனர். அதே சமயம் சைனாவே உளுத்துப் போன சோஷலிச கொள்கைகளை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதை குறித்து சங்கடமான மௌனம் காக்கின்றனர்.
Yet, they make giant efforts to preach socialism, which at the first opportunity they discards, when their own private dealings are concerned.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு டோண்டு ஐய்யா,
இந்த மெகா-தொடரில் நிறைய விசியங்கள் தந்துள்ளீர். மிக்க நன்றி!
வேற எதாவது எழுத வேண்டியதுதான. நீங்க இப்படித்தான் எழுதுவீங்கன்னு தெரிஞ்சதுதான். இந்த கதைய துக்ளக்லேயும் நிறைய தடவ படிச்சாச்சு. ரொம்ப போர் அடிக்குது.
//இந்த கதைய துக்ளக்லேயும் நிறைய தடவ படிச்சாச்சு. ரொம்ப போர் அடிக்குது.//
அப்ப ஒண்ணு பண்ணுங்க. என்னுடைய இந்தக் கதையை படியுங்க. இதை எனக்கு யாரும் மண்டபத்திலே வச்சு எழுதித் தரல்லைன்னு உறுதி சொல்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் எழுத்துக்களை படிப்பதால் சிலருக்கு வேண்டுமானால் போரடிக்கலாம். எனக்கு அப்படி இல்லை. தெரியாத பல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்.
நேரு, இந்திரா பற்றியெல்லாம் மிக சுவாரஸ்யமாக எழுதுகின்ற உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி பற்றியும் எழுத வேண்டும். ஓய்வு கிடைக்கும் போது தான் - செய்ய இயலுமா?
Thanks for the post.
I have a question which may be irrelevant to this post...You mentioned about president Zakir Hussain, and I have read that he is referred as "rubber stamp" president as he never questioned Indira Gandhi's decisions and always sign on the dotted lines.
Is that true?
Thanks
Rajesh
//I have a question which may be irrelevant to this post...//
இது ஒன்றும் பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி என்று கூற இயலாது. இருந்தாலும் ரப்பர் ஸ்டாம்ப் என்ற பெயருக்கு அதிகப் பொருத்தமாக இருந்தவர் அடுத்த குடியரசு தலைவர் வி.வி. கிரி அவர்களே.
ஆனால் ஒன்று. நமது அரசியல் நிர்ணய சட்டத்தின்படி பிரதமருக்குத்தான் எல்லா அதிகாரமும். குடியரசுத் தலைவருக்கு பெத்த பெயர், ஆனால் அதிகாரம் அதிகம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலங்கையின் சிங்கள அரசு இந்தியத் தமிர்களுக்கு வாக்குரிமை கொடுக்காமல் இன்று வரை ஏமாற்றியதற்கு நேருவும், இந்திராவும் தான் ஒரே காரணம் என்பதையும் தெளிவாக எழுதவும்.
வாக்குரிமை இல்லாத வம்சாவளி இந்திய ஆனால் எந்த நாட்டுரிமையும்
இல்லாத தமிழன்
//நீங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி பற்றியும் எழுத வேண்டும். ஓய்வு கிடைக்கும் போது தான் - செய்ய இயலுமா?//
கண்டிப்பாக இயலும் ராஜாமணி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இலங்கையின் சிங்கள அரசு இந்தியத் தமிர்களுக்கு வாக்குரிமை கொடுக்காமல் இன்று வரை ஏமாற்றியதற்கு நேருவும், இந்திராவும் தான் ஒரே காரணம்//
இது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதே சமயம் கூகளாண்டவரையோ விக்கியையோ நம்புவதும் கடினமே. சுமாராகவாவது தெரிய வேண்டாமா?
எனக்கு தெரிந்து ஐ.பி.கே.எஃப். பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதை எனக்கு யாரும் மண்டபத்திலே வச்சு எழுதித் தரல்லைன்னு உறுதி சொல்றேன்.//
கோவிச்சுக்கிட்டிங்கனு நினைக்கிறேன். நான் ஜாலியாத்தான் சொன்னேன்
//கோவிச்சுக்கிட்டிங்கனு நினைக்கிறேன். நான் ஜாலியாத்தான் சொன்னேன்//
இதில் என்ன கோபப்பட இருக்கிறது? நான் மண்டபத்தைப் பத்திப் பேசும்போது நாகேஷ் அதை தன் குரலில்கூறுவது போலத்தான் கற்பனை செய்து கொண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் நன்றி
இந்தியா சோவியத் ரழ்யாவோடு ஏற்படுத்தி கொண்ட நட்பால் தானே இந்திரா ஆட்சி காலத்தில் அனுகுண்டு வெடிக்க முடிந்தது!!
அமைதி படை பற்றி எழுதும் போது என்னை கேட்டு விட்டு எழுதவும் . உண்மை ஏதாவது எழுதினால் தற்கொலை பெண்ணை உங்கள் வீட்டுக்கு அனுப்புவேன்
எம்ர்ஜென்ஸி பற்றிய பதிவு எழுதுவீர்களா?
very good article dondu ragahavan. really you are highly talented person .
Baskar
ஈழ போராளிகளுக்கு ஆயுத உதவி அளித்தது இந்திரா தானே. அதையும் எழுதுவீர்களா? படிக்க ஆவல்.
//அடேங்கப்பா, இவ்வளவு கோபமா?//
என்று நீங்கள் அனுப்பிய மடல் ஒன்று எனது கூக்ள் ரீடருக்கு வந்துள்ளது. அது எப்படி? நான் அனானியாக வந்தாலும் நான் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?
//எனக்கு தெரிந்து ஐ.பி.கே.எஃப். பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம்//
Waiting .......
Raveen
NJ
காமராஜர் காலத்தில் இந்திரா காங்கிரசில் இருந்த த்மிழக காங்கிரஸ் தலைவர்கள் யார் யார்?. மூப்பனார் இந்திரா காங்கிரஸில் இருந்த்தாக ஞபபகம் !
//நான் அனானியாக வந்தாலும் நான் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?//
இது என்ன குழந்தை மாதிரி விளையாட்டு முகமூடி அவர்களே? உங்களது ஆரியக் கூத்தாடிடா என்ற பதிவுக்கு நான் அனுப்பிய அந்தப் பின்னூட்டம் உங்களது கூகள் ரீடருக்கு வராது வேறு எங்கு வரும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//காமராஜர் காலத்தில் இந்திரா காங்கிரசில் இருந்த த்மிழக காங்கிரஸ் தலைவர்கள் யார் யார்?//
காமராஜ் இறக்கும் வரை மூப்பனார் பழைய காங்கிரசில்தான் இருந்தார். உண்மை கூறப்போனால் காமராஜர் அவர்கள் தலைமையில் இருந்ததுதான் உண்மையான காங்கிரஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எம்ர்ஜென்ஸி பற்றிய பதிவு எழுதுவீர்களா?//
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவனா?
இனிப்பில்லாத சர்க்கரையா?
சுவை இல்லாத மாங்கனியா?
என்று கண்ணதாசன் கூறியது போல.
அதுவும் சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்ம சோ ஆற்றிய மகத்தான போராட்டத்தை கூறாமல் விடுவேனா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டானந்தாவின் அருமையான பதிவு...! கலக்கி இருகீங்க ஸ்வாமிகளே..
Post a Comment