10/10/2007

என் நாடக அனுபவங்கள்

நாடகத்தில் நான் நடித்த அனுபவங்களை பற்றி இங்கு கூற வரவில்லை. அவை அவ்வளவாக இல்லை. சாரணர் இயக்கத்தில் இருந்த போது போட்ட நாடகங்களை பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன். நான் இங்கு கூற வருவது மற்றவர் போட்ட நாடகங்களைப் பார்க்க நான் சென்ற சமயங்களில் நிகழ்ந்தவை பற்றித்தான்.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் ஷண்முகானந்தா ஹாலில் மேஜர் சுந்தரராஜன் குழுவினரின் நாடகங்கள் நடந்தன. அவற்றில் ஒன்று டைகர் தாத்தாச்சாரி. இரண்டாம் பால்கனியில் நான் பைனாக்குலருடன் ஆஜர் (அது என் தந்தை சமீபத்தில் 1956-ல் ரூபாய் 4.50 க்கு வாங்கியது). இரண்டாம் பால்கனியில் ஒரு சௌகரியம் என்னவென்றால் மேடையின் முழு அகலமும் நம் பார்வைக்கு வரும். அதோடு பைனக்குலர் வேறு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் முகபாவங்கள் எல்லாமே க்ளோசப்பில் பார்ப்பது போல பார்க்கலாம். என்ன, பைனாக்குலரை வெகு நேரம் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். அந்த நாடகம் போட்ட போது ஒரு தவறை கண்டுபிடித்தேன்.

நாடகம் முடிந்தது. நேராக க்ரீன் ரூமுக்குள் சென்றேன். சுந்தரராஜனிடம் சென்று நான் "சார் நான் இரண்டாம் பால்கனியிலிருந்து பைனாக்குலர் மூலம் உங்கள் நாடகம் பார்த்தேன். அதில் ஒரு குறை கண்டேன்" என்றேன். அவரும் சிரித்த முகத்துடன் என்னை மேலே கூறுமாறு சொன்னார். "உங்கள் மனைவியாக நடித்தவர் அழகாக ஐயங்கார் மடிசார் கட்டு புடவை கட்டியிருந்தார். சாதாரணமாக ஐயர் கட்டுதான் போட்டு சொதப்புவார்கள். ஆனால் இங்கு அந்த தவறு நடக்கவில்லை. வேறொரு தவறுதான் நடந்தது. அதாவது உங்கள் மனைவியாக வந்த நடிகை மெட்டி போடவில்லை" என்றேன். அவ்வளவுதான் மேஜர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. இடிக்குரலில் அந்த நடிகையை அழைத்தார். அவரும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தார். "என்ன நளினி, நீ மெட்டி போடவில்லையா" என்று கர்ஜிக்க அவரும் பயந்த குரலில், "இல்லீங்க அது தொலைந்து போயிற்று. கடைசி 3 ஷோக்களாக போடவில்லை என கூறினார். "என்னம்மா இது ஒரு ஆறேமுக்காலணா விஷயம், ஏதாவது வாங்கி போட்டிருக்கலாமே. இப்ப சாரைப் பாரு (என்னை சுட்டிக் காட்டியபடி) இரண்டாம் பால்கனியிலிருந்து பைனாக்குலர் வச்சு பாத்துட்டு சொல்றார்" என்றார் சுந்தரராஜன். நளினி அவர்கள் என்னை பாதகா என்பது போல பார்த்தார்.

சமீபத்தில் 1981. விஜயகுமார் மற்றும் மஞ்சுளா குழுவினரது நாடகம் "சிவசக்தி". அதில் மஞ்சுளா ஒரு கவிஞர், அவர் எழுதிய கவிதைகளுக்கு விஜயகுமார் மெட்டமைத்து பாடுபவர். நல்ல வெற்றிகரமான ஜோடி. அவர்களுக்குள் தகராறு வந்து விஜயகுமார் இன்னொரு கவிஞரை ஏற்பாடு செய்கிறார். அவர் ஒரு தெலுங்கு கவிஞர். அவர் ஒரு கவிதை தெலுங்கில் கூற, விஜயகுமார் அதை செலக்ட் செய்ய, ஒத்திகை பார்க்கும் சமயத்தில் மஞ்சுளா அக்கவிதை தான் ஒரிஜினலாக தமிழில் எழுதியதின் தெலுங்கு மொழிபெயர்ப்பு என்ற உண்மையை ராபணா என்று உடைக்கிறார். பிறகு நாடகம் அதன் போக்கில் செல்ல கடைசியில் மஞ்சுளாவே கவிதை எழுத, விஜயகுமார் அதைப் பாட என்று கதை போகிறது. இதில் என்ன வேடிக்கை மஞ்சுளா எழுதியதாகச் சொல்லப்பட்ட அத்தனை கவிதைகளும் வடமொழியில்தான் இருந்தன. தமிழில் அல்ல. வழக்கம்போல கிரீன் ரூமில் நாடகம் முடிந்ததும் டோண்டு ராகவன் ஆஜர். முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன். "என்ன சார் தமிழ் கவிஞர்னு கதையில் சொன்னீர்கள், ஆனால் அத்தனையும் வடமொழியில் அல்லவா இருந்தன" என்று கேட்டேன். விஜயகுமார் அசந்தாலும் சற்று சுதாரித்தார். என்ன சார் இவங்களுக்கு வடமொழி தெரியாதுன்னு எங்கேயுமே சொல்லவில்லையே" என்றார். அது சரி அதுக்காக பகவத் கீதை ஸ்லோகங்களை அப்படியே போடணுமா என்று கேட்டதும் திகைப்படைந்தார். நான் மேலும் கூறினேன், "ஸ்திதப் பிரக்யனை பற்றிய ஸ்லோகங்கள் அவை" என்றேன். உங்களுக்கு எப்படித் தெரியும் என்று மஞ்சுளா என்னைக் கேட்க, அந்த ஸ்லோகங்கள் ஒப்பிக்கும் போட்டியில் நான் மூன்றாம் பரிசை சமீபத்க்தில் 1955-ல் பெற்றதை பற்றி கூற, கணவன் மனைவி இருவருமே மெர்சல் ஆனார்கள். விஜயகுமார் என்னை அப்படியே அணைத்து சற்று தள்ளி அழைத்து போய், "சார், இதெல்லாம் யார் பார்க்கப் போறாங்கன்னு நினைத்து விட்டோம். நீங்கள் சொல்லி வைத்தது போல வந்தது அதிர்ச்சிதான், கண்டுக்காதீங்க" என்று கூறினார். என்ன செய்வது, அவர்கள் இருவருமே எனக்கு ஃபேவரைட் ஜோடி. ஆகவே இனி வரும் காட்சிகளிலாவது யாராவது தமிழ் கவிஞரை வைத்து தமிழ்க் கவிதைகள் போட்டு கொள்ளுமாறு கூறிவிட்டு வந்தேன். அவரும் அவ்வாறே செய்கிறேன் என்றார். அவ்வாறே செய்தாரா இல்லையா எனத் தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

58 comments:

Anonymous said...

//சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் முகபாவங்கள் எல்லாமே க்ளோசப்பில் பார்ப்பது போல பார்க்கலாம். என்ன, பைனாக்குலரை வெகு நேரம் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கும்.\\

முகபாவத்தை மட்டும் தான் பார்த்தீர்களா? ஏன்னா நம்ம ஞானி சொல்லியிரிக்கிறார். அந்த வயசிலே முகத்தப்பாக்கமாட்டோம். ....அதைத்
தான் பார்ப்போம் என்று.

dondu(#11168674346665545885) said...

//முகபாவத்தை மட்டும் தான் பார்த்தீர்களா?//

ஹி ஹி ஹி. ஆனால் மெட்டி இல்லை என்பது பைனாக்குலர் இல்லையென்றால் தெரிந்திராது.

மற்றப்படி சராசரி ஆணின் கண்பார்வை முதலில் எங்கே போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகுதான் மற்ற டீடய்ல்ஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

டோண்டு சார்,

நீங்கள் "சமீபத்திலேயே" இருந்தால் எப்படி சார்? இப்போதெல்லாம் புடவை கட்டவே தெரியாதபடி நாயகிகள் சீரியல்களிலும் சினிமாக்களிலும் வந்து சொதப்புகிறார்கள். மடிசார், கச்சம் என்று இவர்களின் கட்டை பார்த்தால் அபத்தமாய் இருக்கிறது. அதுபோல குஜராத்தி, மார்வாடி வேஷங்களும் இவர்கள் போடுவது மகா ஜோக்...

அந்த அற்புதமான ஷண்முகானந்தா ஹால் நான் சமீபத்தில் 89களில் பம்பாயில் இருந்தபோது எறிந்துபோயிற்று. அதற்கு பிறகு நாலைந்து வருஷம் கழித்து மறுபடியும் கட்டினார்கள். நான் சயானில் வசித்துவந்து இந்த ஹால் ஒரு அற்புத கலாசார சென்டராக எத்தனையோ இனிய மாலைப்பொழுதுகளை எனக்கு கொடுத்திருக்கிறது... உங்கள் பதிவு பார்த்து அது ஞாபகம் வந்தது. நன்றி

dondu(#11168674346665545885) said...

வாங்க ஜயராமன்,

ரொம்ப நாளைக்கப்புறம் பதிவுக்கு வந்திருக்கீங்க. இப்போ புதுசா கட்டியிருக்கிற ஷண்முகானந்தா ஹாலில் வசதிகள் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

நெருப்பில் எறிந்த அரங்கம் மீண்டும் கிளம்ப எட்டு வருஷங்களுக்கு மேலாகியது. நிறைய பணம் வசூல் பண்ணி செலவழித்து சுப்ரமணியம் செகரட்ரி கட்டினார். சீட் கெபாசிடி கொஞ்சமாக குறைந்தது.

இருந்தும் இன்றும் அது ஆசியாவிலேயே பெரிய ஹால். நாதபிரம்மம், ஷண்முக சுவாமி சிலைகள் அற்புதமாக வந்திருக்கின்றன. அந்த ஹாலில் ஒருமுறையாவது கச்சேரி கேட்காதவன் அபாக்கியவான்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

நான் எழுபதுகளில் பார்த்தவரை அதன் சவுண்ட் சிஸ்டம் அபாரம். சின்ன பேப்பர் சலசலத்த்தாலும் அரங்கம் முழுக்க கேட்கும். அதை நிலைநிறுத்தியுள்ளனரா? அப்போது செக்ரடட்ரி ராமானுஜம் அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அனுபவம் எல்லாம் சரிதான் சார். ஆனால் இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த கருத்து என்ன? விளங்கவில்லையே?

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

இங்கு என்ன நீதிக்கதையா சொல்லிகிறார்கள், இதனால் நீங்கள் அறியும் நீதி என்ன என்று? அனுபவத்தை அனுபவிக்கணும் விளக்கமெல்லாம் கேட்கப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<--
சிங்கமுத்து சொல்றார்
அனுபவம் எல்லாம் சரிதான் சார். ஆனால் இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த கருத்து என்ன? விளங்கவில்லையே? ==>
இந்த குசும்புதான் வேண்டாங்கறது.படிச்சமா இரசிச்சமான்னு போய்கிட்டே இருக்கணும் ."னீஙக "மொக்கை" பதிவுன்னு கேள்விபட்டதில்லையா?

Anonymous said...

நல்ல பதிவு.

மஞ்சுளாவை ஜொள்ளுவிட தான் க்ரீன் ரூமுக்கு போனீர்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்கள் டோண்டு அய்யா.

சக்திவேல்

Anonymous said...

திராவிட குஞ்சுகளும் சமீபத்தில் 1970களில் நாடகம் நடத்தினார்களாமே? பகுத்தறிவு ஆபாச நாடகம் ஏதாவது கண்டதுண்டா டோண்டு?

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

இல்லை சிங்கமுத்து அவர்களே. பார்த்ததில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பெருமதிப்புக்குரிய சோ இராமசாமி அவர்களின் நாடகங்கள் நிறைய கண்டிருப்பீர்கள். அதுபற்றி தனிபதிவு போடலாமே?

சக்திவேல்

dondu(#11168674346665545885) said...

சோ நாடகங்கள் பார்க்காமலா. ஆனால் அதிலெல்லாம் கிரீன் ரூமுக்கு செல்லவில்லை. ஆகவே இப்பதிவில் வராது. நீங்கள் சொன்னது போல தனிப்பதிவுதான் போட வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

அப்பவே டார்ச்சர் தங்கப்பனாகத்தான் இருந்திருக்கிறீர்கள்...மெட்டி போடலைன்னா என்ன போட்டா என்னான்னு போகவேண்டியது தானே...

நான் நினைக்கிறேன், நீங்க க்ரீன் ரூமுக்கு சைட் அடிக்கத்தான் போயிருப்பீங்க..

dondu(#11168674346665545885) said...

//நான் நினைக்கிறேன், நீங்க க்ரீன் ரூமுக்கு சைட் அடிக்கத்தான் போயிருப்பீங்க..//
அது பாட்டுக்கு அது, மெட்டி பாட்டுக்கு மெட்டி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

//dondu(#11168674346665545885) said...
//நான் நினைக்கிறேன், நீங்க க்ரீன் ரூமுக்கு சைட் அடிக்கத்தான் போயிருப்பீங்க..//
அது பாட்டுக்கு அது, மெட்டி பாட்டுக்கு மெட்டி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.//

கொடுமைடா சாமி..

பேரன் வயசுல ஒருத்தன் எதையோ கேக்குறான்.. தாத்தா ஆமாங்குறாரு..

காலம் கெட்டுப் போச்சு..

மகரநெடுங்குழைநாதன்கிட்டதான் நீதி கேக்கணும்..

dondu(#11168674346665545885) said...

உண்மைத் தமிழன் அவர்களே எனது வயது ஆவது பற்றிய உணர்வு என்னும் பதிவை சற்று சிரமம் பார்க்காது பின்னூட்டங்களுடன் படியுங்களேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_30.html

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்.

இப்போது கூட அப்படி என்ன வயது ஆகிவிட்டது எனக்கு?

அன்புடன்,
61 வயது வாலிபன் டோண்டு ராகவன்

Anonymous said...

MR. dondu.

may we gummi here?

Anonymous said...

இங்கே கும்மி அலவுடா?

எனக்கு போர் அடிக்குது

Anonymous said...

திராவிட குஞ்சுகள் தான் கும்மியடிக்கணுமா? நாங்களும் அடிக்கிறோமய்யா கும்மி

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

//may we gummi here?//

தாராளமாக, யாரையும் திட்டாமல் கும்மி அடிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உண்மைதமிழன் அவர்களே, உங்களை விட டோண்டு சாருக்கு ஆறுமாதமோ, ஒருவருடமோ வயது அதிகமாக இருக்க போகிறது. அதற்கேன் இப்படி கவலைபடுகிறீர்கள்?

Anonymous said...

//

அன்புடன்,
61 வயது வாலிபன் டோண்டு ராகவன//

யோவ் நீரே வாலிபன்னு சொல்ற்ச்சே நாங்கலாம் என்னன்னு சொலறது?

Anonymous said...

//தாராளமாக, யாரையும் திட்டாமல் கும்மி அடிக்கலாம்.//

நன்றி டோண்டு ராகவன் அவர்களே

Anonymous said...

//
தாராளமாக, யாரையும் திட்டாமல் கும்மி அடிக்கலாம்.//

நோண்டு மாமாவ வையலாமா?

Anonymous said...

//61 வயது வாலிபன் டோண்டு ராகவன்//

இந்த வார்த்தையில் உண்மையிலேயே எந்த உள்குத்தும் இல்லை.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 60 வயது என்று கேள்விபட்டேன். சமீபத்தில் 1970ல் அந்தபடம் வந்தது.

Anonymous said...

//மற்றப்படி சராசரி ஆணின் கண்பார்வை முதலில் எங்கே போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகுதான் மற்ற டீடய்ல்ஸ்.//

எங்கு போகும்?

நீங்க சராசரி ஆணா?

மற்ற டீடெய்ல்ஸ்னா என்னா?

dondu(#11168674346665545885) said...

//நோண்டு மாமாவ வையலாமா?//
யாரையுமேன்னாக்க டோண்டுவும் அதில் வருகிறான் என்றுதானே அர்த்தம். மேலும் கலாய்ப்பு வேறு, திட்டுதல் வேறு. கலாயுங்கள் ஆட்சேபணை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சோ நாடகங்கள் பார்க்காமலா.//

பெருமதிப்பிற்குரிய சோ அவர்கள் காதல் நாடகங்கள் நடித்திருக்கிறாரா? ஒரு படத்தில் அவர் மனோரமாவை காதலிப்பார். செம டமாஷ்.

Anonymous said...

டோண்டு சார்,

இந்த பதிவையும் திராவிட குஞ்சுகள் ஆக்கிரமிக்கிறது என்று நினைக்கிறேன். திராவிட குஞ்சுகளுக்கு கும்மியடிக்க இடம் கிடைக்காததால் இங்கே வந்திருக்கிறது. செம தமாழ் தான் போங்க.

சிங்கமுத்து

Anonymous said...

தம்பி சிங்கமுத்து,

கும்மின்னு வந்துட்டா பாப்ஸ், திராவிட்ஸ், ஈல்ஸ்(அதாம்பா சிறீலங்கா தமிழர்கள்)னு எந்த பதிவும் விதிவிலக்கு கெடியாது.

1913னுலர்ந்தே பொப்மார்லி கஞ்சா குடிச்ச "தீவு" அய்யா பதிவு அல்டிமேட் கும்மி...அதனால கூச்சப்படாம கும்மி அடிக்கவும்.

என்னா கும்மும் போது கும்மியடிக்கற எடத்தோட டவுசர் கயிட்டக்கூடாது அப்போ தான் நமக்கு டயம் பாஸ் ஆவும்

Anonymous said...

"என் நாடக அனுபவங்கள்"

ஒருவேளை நீங்கள் தான் நாடகங்களில் நடித்தீர்களோ என்று பயந்துவிட்டேன்.

Anonymous said...

////நோண்டு மாமாவ வையலாமா?//
யாரையுமேன்னாக்க டோண்டுவும் அதில் வருகிறான் என்றுதானே அர்த்தம். மேலும் கலாய்ப்பு வேறு, திட்டுதல் வேறு. கலாயுங்கள் ஆட்சேபணை இல்லை.//

ஒக்கே ஒக்க பின்னூட்டத்துக்காக இப்புடி லோ ப்ரொபலா காட்சி தர்ரீங்களே இதுக்கே ஒங்களுக்கு சமாதானத்துக்கான
னோபில் ப்ரைஸ் கொடுக்கலாம்

Anonymous said...

//பெருமதிப்பிற்குரிய சோ அவர்கள் காதல் நாடகங்கள் நடித்திருக்கிறாரா? //

கருணாநிதி கூட காதல் நாடகங்களில் நடித்திருக்கும்போது சோ அவர்கள் நடித்திருக்க மாட்டாரா? உபரிதகவல் ஒன்று. கருணாநிதி, ராஜாத்தி என்பவரை திருமணம் செய்துகொள்ள ஒரு மேடைநாடகம் காரணம்.

dondu(#11168674346665545885) said...

//ஒருவேளை நீங்கள் தான் நாடகங்களில் நடித்தீர்களோ என்று பயந்துவிட்டேன்.//
நானும் நடித்துள்ளேன். அது பற்றி வேறு பதிவில். ஒரு நாடகத்தில் அபிமன்யுவாக நடித்திருக்கிறேன். அதிலிருந்தே மகாபாரதத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

////சோ நாடகங்கள் பார்க்காமலா.///

நாட் ஒன்லி சோ...பட் ஆல்சோ யூ கேன் சீ எனி டிராமாஸ் யார்...

Anonymous said...

//என்னா கும்மும் போது கும்மியடிக்கற எடத்தோட டவுசர் கயிட்டக்கூடாது அப்போ தான் நமக்கு டயம் பாஸ் ஆவும்//

ஏதோ ஒருத்தரின் கொண்டை தெரியிது போலிருக்கே. விழயம் இல்லாமல் திராவிட குஞ்சுகள் இந்த பக்கம் வராதே.

Anonymous said...

//நானும் நடித்துள்ளேன். அது பற்றி வேறு பதிவில். ஒரு நாடகத்தில் அபிமன்யுவாக நடித்திருக்கிறேன். அதிலிருந்தே மகாபாரதத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.//

அப்போல இருந்தே போங்கு ஆட்டம் தான் புடிக்குமா?

Anonymous said...

//ஒரு நாடகத்தில் அபிமன்யுவாக நடித்திருக்கிறேன்.//

அபிமன்யூவுக்கு அழகான கதாநாயகி இருந்தாரா?

Anonymous said...

//
ஏதோ ஒருத்தரின் கொண்டை தெரியிது போலிருக்கே. விழயம் இல்லாமல் திராவிட குஞ்சுகள் இந்த பக்கம் வராதே.//

நான் கொண்டையை அறுத்து சமீபத்தி 1983ல் தான். ஆகையால் என் கொண்டையை யாராலும் பாக்க முடியாது

Anonymous said...

40 ஆச்சு

எஸ்கேப்புபூபூ ப்ய்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

Anonymous said...

இங்கியும் 40 ஆயிடிச்சா. வேற கொளம் பாக்க வேண்டியது தான்.

Anonymous said...

என் கொமெண்டு ரிலீஸ் செய்யாவிட்டால் கொமட்டில் குத்துவேன்

உண்மைத்தமிழன் said...

"http://dondu.blogspot.com/2006/09/blog-post_30.html" - இந்தக் 'கண்றாவி'யையும் படிச்சு முடிச்சிட்டேன்.. இன்னும் ஒரு 25 வருஷம் இந்த 61 வயசு வாலிபனாகவே இருந்து தொலையுங்கள் என்று வாழ்த்துகிறேன்..

dondu(#11168674346665545885) said...

ரிக்க்ஷா மாமா அவர்களே,

மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டம் கருணாநிதி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்வதாக உள்ளது. ஆகவே அதை மட்டுறுத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்.... திராவிட குஞ்சு, கும்மி, பகுத்தறிவு நாடகம் என்றெல்லாம் பின்னூட்டமிட்ட 'சிங்கமுத்து' நானில்லை. ஏன் இப்படி என் பெயரில் போடுகிறார் என்றும் தெரியவில்லை!!! கலாய்ப்பதற்கா?!!

தவறாக நினைக்காதீர்கள்...

original சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

ஐயா ஒரிஜினல் சிங்கமுத்து,

என்னை பொருத்தவரை ந்நீங்களும் சரி இன்னொரு சிங்கமுத்துவும் சரி இருவருமே அனானிகளே. நீங்கள் சிங்கமுத்து என்று பிளாக்கர் பின்னூட்டமாக போட்டோவுடன் வந்து, இன்னொரு சிங்கமுத்து அதர் ஆப்ஷனில் போட்டோ இல்லாமலோ, அல்லது போட்டோவுடன் ஆனால் வேறு பிளாக்கர் எண்ணிலோ வந்தால் சுலபமாகக் கண்டுபிடிக்கப்படுவார். அப்போது போலியின் பின்னூட்டம் அது எத்தன்மைத்தாயினும் வடிக்கட்டப்படும்.

அது இல்லையேல் யார் ஒரிஜினல் யார் டூப்ளிகேட் என்றெல்லாம் சொல்ல முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் said...

அன்புள்ள டோண்டு,

61 வயதில் இளமைத்துடிப்புடன், உண்மையான இளைஞர்களுடன் போட்டிபோட்டு எழுதிகிறீர்கள்,கும்மி அடிக்கிறீர்கள்,தண்ணி அடிக்கறிங்க

கொஞ்சம் பொறாமையத்தான் இருக்கு உங்களை பார்க்க

வாழ்த்துக்கள்,எங்க அலுவலகத்தில் சராசரி வயது 24 தான்.38 வயதில் இருக்கும் என்னையெல்லாம் ரொம்ப ஒரு மாதிரியாத்தான் பார்க்கறாங்க.


அன்புடன்
அரவிந்தன்

ரவி said...

///கொடுமைடா சாமி..

பேரன் வயசுல ஒருத்தன் எதையோ கேக்குறான்.. தாத்தா ஆமாங்குறாரு..

காலம் கெட்டுப் போச்சு..

மகரநெடுங்குழைநாதன்கிட்டதான் நீதி கேக்கணும்..////

உண்மைத்தமிழன் அவர்களே...

நீங்க டோண்டுவை சரியாக புரிந்துகொள்ளவில்லை...

மேலும் இந்த பதிவில் கும்மி அடித்தது நான் அல்ல அல்ல அல்ல...,

Anonymous said...

டோண்டு சார்... ஒரிஜினல் சிங்கமுத்து என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருப்பவர் போலி... நான் தான் ஒரிஜினல் சிங்கமுத்து.. ஒரிஜினல் என்பதற்கெல்லாம் ஆதாரமா காட்ட முடியும்?

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

அரவிந்தன் அவர்களே,

வாழும் ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களை கற்கும் ஆர்வம் இருக்க வேண்டும். சந்தோஷப்பட வேண்டியவற்றுக்கு உடனேயே சந்தோஷப்பட வேண்டும். அவ்வாறு இருந்தல் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

நேரம் கிடைத்தால் எனது இப்பதிவை பின்னூட்டங்களுடன் படிக்கவும், பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_05.html

அப்படியே இப்பதிவையும் பின்னூட்டங்களுடன் படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் அரவிந்தன், இரண்டாம் பதிவின் சுட்டி இதோ: http://dondu.blogspot.com/2006/11/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஒரிஜினல் என்பதற்கெல்லாம் ஆதாரமா காட்ட முடியும்?//
கண்டிப்பாக முடியும். பதிவராக பிளாக்கர் பின்னூட்டம் இடவும். நான் அவ்வாறு செய்துதானே எல்லோரிடமும் ஒரிஜினல் டோண்டு நானே என்பதை நிரூபித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இல்லையே செந்தழல் ரவி,

எலிக்குட்டி சோதனையில் அது ஒரிஜினல் செந்தழல் ரவி என்றுதானே காட்டுகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பகுத்தறிவு தந்தை பெரியாரையும் திராவிடரையும் கேவலமாக பேசி பதிவு போடும் ஒரிஜினல் சிங்கமுத்தும் சரி டூப்ளிகேட் சிங்கமுத்துவும் சரி, பார்ப்பனர்கள் என்பதும், நீங்கள் அவர்களுக்கு போடும் ஜால்ராவும் எதற்காக என்பதும் அனைவருக்கும் தெரியும்.

முங்கசித்து

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== சோ நாடகங்கள் பார்க்காமலா. ஆனால் அதிலெல்லாம் கிரீன் ரூமுக்கு செல்லவில்லை. ==>
பின்னே சோவே வெளியே கம்புடன் நின்றிருப்பார்."னீஙக கொடுக்கற காலணாவுக்கு(ஒரு குத்து மதிப்புதான்) மெட்டியெல்லாம் போட முடியாது என்று...."

dondu(#11168674346665545885) said...

//."னீஙக கொடுக்கற காலணாவுக்கு(ஒரு குத்து மதிப்புதான்) மெட்டியெல்லாம் போட முடியாது என்று...."//
சோ நாடகங்களில் அம்மாதிரி தவறு எதுவும் கண்ணுக்கு படவில்லை. மேலும் அவர் கிரீன் ரூமில் கும்பல் அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது