இப்போது நான் கூறப்போவது எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. ஆகவே சற்று விவரமாகவே கூறி விடுகிறேன்.
தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை டெலிஃபோன் வைத்து கொள்வது என்பது சொகுசாகக் கருதப்பட்டது. பொருளாதாரத்தில் மூன்றுவித தேவைகள் கூறுவார்கள். அத்தியாவசியம் (necessities) சௌகரியங்கள் (comforts) மற்றும் சொகுசுகள் (luxuries) என்பவை அவை. இப்போது ஏதாவது ஒரு வகையில் டெலிஃபோன் பலரிடம் உள்ளது. ஆனால் தொண்ணூறுகளில் டெலிஃபோன் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்ற மாயை இருந்து வந்தது. 1997-ல் டெலிஃபோன் வைத்திருப்பவர்கள் நிச்சயம் வருமான வரி ரிடர்ன் தர வேண்டும் என்றே அக்கால நிதி மந்திரி சிதம்பரம் ஒரு ஸ்கீம் கொண்டு வந்தார். அதாவது ஆறு வகை காரணிகள். வெளி நாட்டுக்கு பயணம் செய்தவர்கள், டெலிஃபோன் வைத்திருப்பவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கிளப்புகளில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் (மீதி இரண்டு வகைகள் மறந்து விட்டன) என்றெல்லாம் அமர்க்களப்பட்டது.
டெலிஃபோன் இணைப்பு பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருப்பு வேறு. 1987-ல் Own Your Telephone (OYT) விண்ணப்பித்த நான் 1990-ல்தான் இணைப்பு பெற முடிந்தது. வீடு மாற்றினால் வரும் தொல்லைகள் தனி. டெலிஃபோன் இணைப்பை புது இடத்துக்கு மாற்றுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.
இந்தப் பிண்ணனியில்தான் நான் சொல்ல வரும் வாய்ஸ் மெயில் செர்வீஸ் என்னும் குரல் வழி அஞ்சல் சேவையின் முக்கியத்துவம் தெரியும். 1992-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு டெலிஃபோன் இணைப்பு தேவையில்லை. 376 என்று ஆரம்பிக்கும் எண் தருவார்கள். 376-க்கு பின்னால் நான்கு எண்கள் வரும். உதாரணத்துக்கு எனது எண் 3760602. என்னை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். அதில் முதலில் ஒரு ரிகார்டட் அறிவிப்பு வரும். தேவையானால் நீங்களே உங்கள் குரலில் இதை ரெகார்ட் செய்து கொள்ளலாம். பிறகு ஒரு பீப் வரும். பீப்புக்கு பிறகு உங்கள் மெசேஜை சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட வேண்டியதுதான். நான் இந்த செய்திகளை பெற 3770602-க்கு டயல் செய்ய வேண்டும். எனது சங்கேத எண்ணை டயல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவேன். அவ்வாறு செய்ததும் மெசேஜுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். ஆன்சரிங் மெஷின் போலத்தான். ஆனால் நாம் டெலிஃபோன்களில் வைக்கும் ஆன்சரிங் மெஷின்களுக்கும் இந்த ஏற்பாட்டுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. முதலாவதில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு போய்த்தான் ஆன்சரிங் மெஷினை ஓட விட்டு செய்திகளைக் கேட்க முடியும். ஆனால் வாய்ஸ் மெயில் செர்வீஸில் அதற்கு அவசியமே இல்லை. நகரத்தில் உள்ள எந்த டெலிஃபோனில் வேண்டுமானாலும் அவற்றை நீங்கள் பெறலாம். ஒரே ஒரு தேவை என்னவென்றால் நீங்கள் அதற்காக உபயோகிக்கும் டெலிஃபோன் DTMF வசதியுடன் இருக்க வேண்டும். அக்காலக் கட்டத்தில் வந்த எல்லா புது டெலிஃபோன்களுமே அவ்வசதியுடந்தான் வந்தன. ஆகவே நீங்கள் அவற்றை அணுகுவதில் கஷ்டமே இல்லை.
சொந்த டெலிஃபோன் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே. எனது வாடிக்கையாளர்களிடம் இந்த எண்ணை கொடுத்து விடுவேன். ஒரு நாளைக்கு பலமுறை 3770602-க்கு டயல் செய்து செய்திகளை பெறுவேன். மாத வாடகை 100 ரூபாய்கள் மட்டுமே. அதற்கு 500 மெமரி யூனிட்டுகள் செய்தி இலவசம். அப்படியே மெமரி யூனிட்டுகளுக்கு மேல் செய்திகளை சேமித்தாலும் ஒவ்வொரு அதிக யூனிட்டுக்கும் பத்து பைசாதான். செய்திகளை கேட்டவுடன் அவற்றை அழிப்பது நல்லது. எவ்வளவு காலம் சேமிக்கிறீர்களோ அவ்வளவு மெமரி யூனிட்டுகள் செலவழியும். எது எப்படியோ நான் இந்த செர்வீசை வைத்திருந்தவரை ஒரு முறை கூட 100 ரூபாய்க்கு மேல் பணம் கட்டியதில்லை. எனக்கு இந்த அழகில் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.
சொந்த டெலிஃபோன் வந்து விட்ட நிலையிலும் எனக்கு இது வரப்பிரசாதமே. எனது டெலிஃபோனுக்கு வரும் கால்களை வாய்ஸ் மெயிலுக்கு மாற்றினால் தீர்ந்தது விஷயம். எந்த வாடிக்கையாளரும் என்னை மிஸ் செய்தார் என்ற நிலை வராது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சேவைக்கு பல விரோதிகள் இருந்தனர். அவர்களுக்காக செயல் புரிய சக்தி வாய்ந்த லாபிகள் உண்டு. முக்கியமாக செல்ஃபோன் மற்றும் பேஜர் சேவைகளே அவை. வாய்ஸ் மெயில் காரணத்தால் என் போன்ற கூட்டாளிகள் செல்ஃபோன் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். வெறும் 100 ரூபாய் எங்கே, ஆயிரக்கணக்கில் வரும் அப்போதைய செல்ஃபோன் பில்கள் எங்கே. ஆகவே தேவையின்றி இந்த சேவையை அழித்தார்கள். அதுவும் ஒரு அறிவிப்பும் இல்லை. 2000 ஆண்டு வந்த போது இச்சேவை நிறுத்தப்பட்டது.
பிறகு செல்ஃபோன்கள் விலை குறைந்து, இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று ஆனதில் வாய்ஸ் மெயில் சேவையின் தேவையும் மறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் அச்சேவை வெற்றி பெறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அத்தனையும் செய்யப்பட்டன.
தன்னால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, இன்னொருவன் வெற்றி பெறக்கூடாது என்ற கேவலமான மனப்பான்மையைத்தான் இதில் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
3 hours ago
16 comments:
Whether this facility is still available pl.
I tried your no. - it is engagaed continuously
Nann than First Doondu
தன்னால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, இன்னொருவன் வெற்றி பெறக்கூடாது என்ற கேவலமான மனப்பான்மையைத்தான் இதில் பார்க்கிறேன்.
அன்புடன்,
Vanndu Siva
Pondicherry.
புஷ்பா அவர்களே. 3760602 எண்ணையா டயல் செய்தீர்கள்?
அந்த சேவை இப்போது நான் சொன்ன அந்த வடிவில் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை டயல் செய்ய வேறு சில நம்பர்கள் சேர்க்க வேண்டும்.
முதலில் 23760602 என்று டயல் செய்ய வேண்டும் டெல்லியில் நீங்கள் இருந்தால். வேறு இந்திய நகரங்களில் இருந்தால் 01123760602 என்று டயல் செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்தால் 00911123760602 என்று டயல் செய்ய வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Nann than First Doondu//
தப்பு, தப்பு. நான் Dondu.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதாவது ஆறு வகை காரணிகள். வெளி நாட்டுக்கு பயணம் செய்தவர்கள், டெலிஃபோன் வைத்திருப்பவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கிளப்புகளில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் (மீதி இரண்டு வகைகள் மறந்து விட்டன) என்றெல்லாம் அமர்க்களப்பட்டது.//
credit card and mobile phone
நினைவுபடுத்தியதற்கு நன்றி அருண் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கலைஞர் இதை கேள்விப்பட்டால் ஏழைகளுக்கு வீட்டுக்கு ஒரு இலவச வாய்ஸ் மெயில் இணைப்பு அளித்திருப்பார்
சிங்கமுத்து
ஆம் சிங்கமுத்து அவர்களே. அவர் அதை கேள்விப்படவில்லை என்பதுதான் சோகம். :)))))
ஆனால் சீரியசாக ஒரு விஷயம் கூறுகிறேன். வாய்ஸ் மெயில் செர்வீஸ் தில்லியில் குர்ஷீத்லால் பவனில் மையம் கொண்டிருந்தது. அது ஒரு கோட்டகப் பொறியாளரின் கீழ் இயங்கி வந்தது. அவரை சந்திக்க நான் ஒரு நாள் சென்றிருந்தேன். வழி தெரியாது எம்.டி.என்.எல். (Mahanagar Telephone Nigam Limited) அதிகாரி ஒருவரிடம் நான் ஹிந்தியில் நிகழ்த்திய உரையாடலின் தமிழாக்கம் இதோ.
நான்: சார், டி.இ. (வி.எம்.எஸ்.) அறை எங்கிருக்கிறது எனக் கூற இயலுமா?
அவர்: வி.எம்.எஸ்.? அப்படீன்னா என்ன அது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உழைக்கும் வர்க்கமான ஏழைகளுக்கு கலைஞர் ஏதாவது நன்மை செய்தால் சில பருப்புகளுக்கு பொறுக்காதே? 2000 வருடம் உழைக்காமல் உட்கார்ந்து தின்றது போதாதா?
முங்கசித்து
என்னமோ கலைஞர் ஏழைகளுக்கு தன் கையிலிருந்து, தான் உழைத்து சம்பாதித்ததை எடுத்து தானம் செய்த மாதிரி பேச்சுக்கு குறைவில்லை.
அத்தனையும் ஓட்டுக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து தருவது ஸ்வாமி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தான் உழைத்து சம்பாதித்ததை எடுத்து தானம் செய்த மாதிரி பேச்சுக்கு குறைவில்லை.
அத்தனையும் ஓட்டுக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து தருவது ஸ்வாமி. //
Adra sakka! Adra sakka!
Potu thakku.....
என் அலைபேசி மூலமாக 01123760602 என்று டயல் செய்தேன். டயல் ஆகவில்லை."No. error" என்று வந்தது.
I don't see anything wrong with this apporach (i.e intentionally terminating VM service) .
Take a look at how many ppl are now employed thru cellphone/pager industry (phone sales& support, billing, service not to mention it equipment technicians involved) and I am sure this number is much more than the number of ppl employed for your VMS service.
I'd say this is a small price to pay to get bigger ones!
//I don't see anything wrong with this apporach (i.e intentionally terminating VM service)//
அதுவாகவே போவதென்பது வேறு. வேண்டுமென்றே ஒடுக்குவது வேறு. அவ்வாறு ஒடுக்கியதில் பலர் காசு பார்த்தனர் என்பதையும் மறக்கக் கூடாது.
இப்போதும் கூறுகிறேன், வாய்ஸ் மெயில் வைத்துக் கொள்ள தொலைபேசி கூடத் தேவையில்லை. அதை எங்கிருந்து கொண்டு வேண்டுமானாலும் அணுக இயலும். அது இருந்திருந்தால் அதை உபயோகிப்பவர்களும் இருந்திருப்பர்.
அன்புடன்,
டோண்டு ராகவன் .
//அவ்வாறு ஒடுக்கியதில் பலர் காசு பார்த்தனர் என்பதையும் மறக்கக் கூடாது.// how do you know?
you (even I) probably don't how much did that cost to keep the VMS service running. If a service is provided this cheap (less than $3) then they may not even see a profit from running this service unless there is a high volume of users. I am sure the telecom equipments that are needed to support this cost in millions!
So someone might've decided it wasn't worth (from a business reason) running the service for few thousand ppl and decided to side with cell/pager industry!
//you (even I) probably don't how much did that cost to keep the VMS service running. If a service is provided this cheap (less than $3) then they may not even see a profit from running this service unless there is a high volume of users. I am sure the telecom equipments that are needed to support this cost in millions!//
It was just memory space in the centralized computer at Kurshidlal Bhavan. No separate maintenance was required after setting the values for the input and output. Fact was the volume was quite high and many people benefited. Please remember that in those days even incoming calls would cost money in case of mobile phones. It worked successfully from 1992 to 2000, when it was forcibly closed without even an announcement to us subscribers. Itas billing was not computerized and its accounting was done manually. In short everything was done to make it unattractive. I was rhere and I know what I am talking about.
To sum up: It was a useful service and yet withdrawn in favor of costlier options. That is all.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment