3/30/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008

என் கார் காந்தி சிலையை அடைந்தபோது மணி 5.45 போல் ஆகிவிட்டது. என்னை அங்கு இறக்கிவிட்டு என் வீட்டம்மாவும் மகளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை நோக்கி சென்றனர். அவர்களை கோவிலிலிருந்து நேரே அடையாறு சென்று எனது மச்சினி வீட்டில் காத்திருக்கும்படி கூறிவிட்டு, ரோடை கிராஸ் செய்து வந்தால் சட்டென்று யாரும் கண்ணில் படவில்லை. மணலுக்கு இறங்கும் படிக்கட்டுக்கு வந்ததும் செல்லை கையில் எடுத்தேன் அதியமானை கூப்பிட. எதேச்சையாக திரும்பினால் ஒரு கோணாமாணாவென்று வளைந்து ஒரு மாதிரியான வட்டக் குளத்தை சுற்றி காலை தொங்கப்போட்டு அதியமான் உட்பட பலர் அமர்ந்திருந்தனர். தண்ணியில்லா குளம். உண்மைத் தமிழன் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

பிளாக் செய்வதை தன் சுய இச்சையால் நிறுத்தி, டென்ஷனில் இருந்து விடுபட்டவராக மா.சிவகுமார் காட்சியளித்தார். நான் போனபோது சுண்டல் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு போன சமயம் என் கண்களில் பட்ட பதிவர்கள் (மேலே சொன்னவர்களை தவிர்த்து) வினையூக்கி, சந்தோஷ், பாலபாரதி, ஜ்யோவ்ராம் சுந்தர், குப்புசாமி செல்லமுத்து,பைத்தியக்காரன்,ஆடுமாடு,நித்யகுமாரன்,கடலையூர் செல்வம், ஊற்று,முரளிக்கண்ணன்,
ஜேகே,வெங்கட்ரமணன், NHM புகழ் நாகராஜன், சௌந்தரராஜன்,நந்தா, பாரி, லக்கிலுக், ஆகியோர். முழு லிஸ்ட் கைவசம் இல்லை. பாலபாரதி அவர்கள் பிறகு மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாக வாக்களித்தார். வினையூக்கி அவர்களின் பதிவிலிருந்து சில பெயர்களை பெற முடிந்தது. அவருக்கு நன்றி.

பதிவர் சந்திப்பின் முக்கிய நோக்கமே குசும்பன் மற்றும் அபி அப்பாவை சந்திப்பதாகும். குசும்பன் வரும் 16-ஆம் தேதி திருவாரூரில் நடத்தப்பட இருக்கும் தனது திருமணத்துக்கான அழைப்பிதழ்களை எல்லோருக்கும் தந்தார். திருமணம் செய்யவிருக்கும் இன்னொரு பதிவர் சுகுணா திவாகர். ஷர்ட்டை பேண்டுக்குள் உள்ளிட்டு வந்தது குறித்து சிலர் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அந்தப் பக்கம் போன ஒரு ஃபிகரும் அவரை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு சென்றதை நான் பார்த்தேன்.

NHM எழுதியை பற்றி வலையில் வந்த அவதூறு பற்றி பேச்சு வந்தது. பாலபாரதி அது பற்றி போட்ட டெக்னிகல் பதிவை நான் சிலாகித்து பேசிவிட்டு, அவரா ஒரு காலத்தில் தனது பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைக் கூட அழிக்கத் தெரியாமல் திகைத்தார் என்ற ஆச்சரியக் கேள்வியை எழுப்பினேன். அவரும் அச்சமயத்தில் தனக்கு விஷயஞானம் இல்லையென்றும் பிறகு கற்று கொண்டதாகவும் கூறினார். பரவாயில்லை எங்கிருந்து எந்த நிலைக்கு இவ்வளவு துரிதமாக உயர்ந்தார் என எண்ணி மேலும் வியப்படைந்தேன்.

இப்போது மா.சிவகுமார் வந்து அருகில் அமர்ந்தார். நான் சற்று இளைத்திருப்பதாகக் கூறினார். உடலைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் எனக்கு இது ஒரு டானிக் போல அமைந்தது. தமிழ் - 99 விசைப்பலகை ஒட்டிகளை விநியோகம் செய்வதற்காக எடுத்தார். நானும் வாங்கலாமா என யோசித்து பிறகு வேண்டாம் என விட்டேன், ஏனெனில் எனது விசைப்பலகை ஜெர்மன் விசைப்பலகை. இந்த ஒட்டிகளால் எனக்கு குழப்பம் ஏற்படும் சாத்தியக்கூறு இருந்தது.

இதற்குள் ஈரோடிலிருந்து வால்பையனின் ஃபோன் அழைப்பு வந்தது. பதிவர் மீட்டிங்க் நல்லபடியாக போகிறதா எனக் கேட்க, அவருக்கு பதிலளித்து விட்டு அவருடன் உண்மைத்தமிழன், லக்கிலுக் மற்றும் அதியமானைப் பேசவைத்தேன். சற்று நேரத்தில் பதிவர் ஆதிஷா (நான் இளம் பெண்ணை எதிர்ப்பார்த்தால் ஒரு ஆண் வந்து எண்ணத்தில் மண்ணையள்ளி போட்டார்), அபி அப்பா ஆகியோர் வந்தனர். இதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டதில் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்பது புலப்படவில்லை. முதன்முறையாக நான் சந்திக்கும் ஒரு பதிவர் என்னுடன் எனது பதிவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பெயர் மறந்து விட்டது, அவர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பதிவில் எழுதி விடுவேன்.

NHM உருவாக்கிய நாகராஜன் என்னிடம் வந்து அதில் உள்ள சில பிழைகளை கூடிய சீக்கிரம் சரி செய்து விடுவதாகக் கூறினார். பிரச்சினை என்னவென்றால் எனது டிஃபால்ட் அமைவை இந்த மென்பொருள் ஜெர்மனிலிருந்து அமெரிக்க ஆங்கிலத்துக்கு தன்னிச்சையாக மாற்றுவதேயாகும். நான் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அடிக்க ஏதுவாக ஜெர்மன் விசைப்பலகை வைத்திருக்கிறேன். ஆகவே ஜெர்மனில் தட்டச்சு செய்ய NHM மென்பொருள் அப்ளிகேஷனிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம். இன்னொரு பிரச்சினை நான் பாட்டுக்கு பரணரில் அடித்து கொண்டிருக்க கோப்பு தானாகவே லதா எழுத்துருவை உள்ளிட ஆரம்பிக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டு ஏரியல் யூனிகோட் எம்.எஸ்-ஐ தேர்ந்தெடுத்து ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. மேலும், வாடிக்கையாளருக்கு ஏரியல் யூனிகோட் எம்.எஸ் எழுத்துரு கோப்பை அனுப்ப இயலவில்லை ஏனெனில் கோப்பின் அளவு 20 மெகாபைட்டுக்கும் மேலாம். கிழிந்தது கிருஷ்ணகிரி என்று எண்ணினேன். பிறகு NHM அமைவுகளில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றியும் அன்புடன் நாகராஜன் அவர்கள் எடுத்து கூறினார்.

முதலில் மா.சிவகுமார் விடை பெற்று சென்றார். பிறகு குழுக்களாகப் பிரிந்து பேச்சுகள் நடந்தன. உலகமயமாக்கலை அதியமான் ஆதரிக்க அவரைச் சுற்றி பலர் அவரை எதிர்க்க அவர் அபிமன்யு போல போராடிக் கொண்டிருந்தார். நானும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி பேசினேன். மோடியின் குஜராத், மோடி ஆகியோர் பற்றியும் பேச்சு சென்றது. எல்லா பதிவரும் அவரவரது வழமையான நிலைகளிலேயே இருந்து வாதாடினாலும் விவாதங்கள் எல்லாமே தோழமை சூழலில்தான் நடந்தன. மிகுந்திருக்கும் பதிவர்கள் இரு குழுவாகப் பிரிந்து ஒன்று தீர்த்த யாத்திரைக்கு புறப்பட, இன்னொன்று அருகே இருந்த டீக்கடைக்கு விரைந்தது. நான் இரண்டாவது குழுவில் இருந்தேன், ஏனெனில் தீர்த்த யாத்திரைக்கு சென்றால் வீடு திரும்ப நேரமாகும் என்பதே. ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில்தான் அதிக சேனல்கள் இருப்பது பற்றியும் பேச்சு வந்தது. ஒவ்வொரு சேனலும் தனது வெற்றிக்காக எப்படியெல்லாம் பாடுபட வேண்டியுள்ளது என்பது பற்றியும் பேச்சு வந்தது. டீக்கடையில் ஆளுக்கு ஒரு கேக் ஒரு டீ. காசு கொடுக்க நான் முயன்றபோது பாலபாரதி என்னை முந்தி கொண்டார். அவரை முந்திக் கொண்டு ஓகை பணம் தந்தார்.

அதற்குள் மணி ஒன்பதாயிற்று. ஒவ்வொருவராக விடை பெற ஆரம்பித்தனர். நானும் பஸ் ஸ்டேண்டை நோக்கி நகர, பஸ் கிடைக்கும் வழியாக இல்லை. நல்ல வேளையாக அப்பக்கம் எனது ஆயிரக்கணக்கான கார்களுக்குள் ஒரு கார் வந்து நிற்க அதில் ஏறி அடையாறு சென்றேன். அங்கு மச்சினி வீட்டில் என் மனைவியும் மகளும் நான் ஒரிஜினலாக எடுத்து வந்த காருடன் காத்திருந்தனர். வீட்டுக்கு வரும்போது சரியாக மணி பத்து.

31.03.2008 09:43 hrs.- க்கு சேர்க்கப்பட்டது
சந்திப்புக்கு வந்தவர்களின் முழு பட்டியல், பாலபாரதி அனுப்பியது:
1.லக்கி 2.டோண்டுராகவன் 3.ஜேகே 4.சந்தோஷ் 5.வினையூக்கி 6.ஆடுமாடு 7.பைத்தியக்காரன்
8.நந்தா 9.முரளிக்கண்ணன் 10.உண்மைத் தமிழன் 11.சுகுணாதிவாகர் 12.வரவணை 13.ஓகை நடராஜன் 14.வெங்கட்ராமணன் 15.நாகராஜ்(NHM) 16.நித்தியகுமாரன் 17.ஊற்று 18.குப்புசாமி செல்லமுத்து 19.ஆழியூரான் 20.அதிஷா(இருவர்) 21.மா.சி 22. சவுந்தரராஜன் 23.அதியமான்
24.மரபூரார் 25.செல்வம் 26.பாரி(தமிழ்குரல்) 27.குசும்பன் 28.பாலபாரதி 29.அபிஅப்பா
30. ஜ்வ்ராம் சுந்தர்.
ஃபோட்டோக்களையும் பாலபாரதி அனுப்பினார். அவற்றைக் காண இங்கே சொடுக்கவும்.

நன்றி பாலபாரதி அவர்களே. அவற்றை எடுத்த குப்புசாமி அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

26 comments:

சுரேகா.. said...

அடேயப்பா..சுடச்சுட மீட்டிங் கவரேஜ்..


குசும்பனைப்பத்தி ஒண்ணுமே சொல்லலயே?
உடனே போய்ட்டாரா?
இல்ல..
தீர்த்தயாத்திரை போனா..
திருமணத்தில் கொடுக்க வேண்டிய பரிசை மாத்தணும்..

அதான் :)

dondu(#11168674346665545885) said...

பிரச்சினை என்னன்னா நாங்கள் சந்தித்த இடத்தில் விளக்குகள் வெளிச்சம் சரியாக விழவில்லை. சற்று நேரம் கழித்து யார் எங்கே இருக்கிறார்கள் என்பதும் பார்க்க இயலவில்லை. அபி அப்பாவிடம் ஒருவர் பற்றி விசாரிக்க நினைத்தேன், அதற்குள் அவர் சீக்கிரமே கிளம்பி சென்று விட்டார். வந்ததே லேட்தான் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.

பிறகு நான் எனது காரில் நங்கநல்லூரை நெருங்கும்போது அவர் செல்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. அவரும் என்னுடன் பேச நினைத்ததையெல்லாம் பேச நேரம் கிடைக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

நானும் சமயத்தை நழுவ விடாமல் அவரிடம் தீபா வெங்கட் சௌக்கியமா எனக் கேட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வரவனையான் said...

ம்ம் நான் கூட சுகுணாவிடமும் லக்கியிடமும் ( உங்களிடம் பேசுவதில்லை என்பதால்) கேட்டேன் டோண்டு மாமா ஏன் இளைச்சுட்டார் சுகரா என்று. உடனே சுகுணா "டேய் சாயந்திரம் என்னை பார்த்து விட்டு இப்படித்தானே கேட்ட யார் இளைச்சாலும் சுகரா என்றுதான் கேட்பாயா" என்று. ஆனால் பரவாயில்லை இளைப்பது நன்று.

dondu(#11168674346665545885) said...

கடவுள் புண்ணியத்தில் எனக்கு சர்க்கரை பிரச்சினை அறவே இல்லை வரவணையான் அவர்களே.

விஷயம் என்னவென்றால் எனது முரட்டு வைத்தியம் ஒன்று கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி பதிவு பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/5.html

இன்னும் இளைக்க வேண்டும்.

மற்றப்படி சர்க்கரை வந்து அதன் மூலம் இளைப்பது ரொம்பவும் கொடுமைதான். அது விரோதிக்கும் வரக்கூடாது என்பதுதான் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீமாச்சு.. said...

டோண்டு சார்.

இங்கு உங்களுக்கு ஒரு செய்தி..

http://seemachu.blogspot.com/2008/03/59.html

போன் பண்ணினாங்களா?

அன்புடன்,
சீமாச்சு...

dondu(#11168674346665545885) said...

நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீமாச்சு.. said...

//நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.
//

நன்றி டோண்டு சார்.. ச்சின்ன பிள்ளைகளாதலான்.. ஆங்கிலத்தில் அவ்வளவு சரளமில்லை..

பாண்டியில் ப்ரெஞ்ச் பேசுபவர்கள் நிறைய இருந்தாலும்.. சென்னையில் உதவி தேவைப்பட்டால் என்ன செய்வார்களோ.. என்றுதான்.. உங்கள் தொலைபேசி எண் தந்தேன்..

உங்களுக்கும் உடனேயே போன் செய்ய வேண்டுமென்றுதான் நினைத்தேன்.. காலையில் அவர்களைப் பாண்டியில் இறக்கி விடும் போது மணி அதிகாலை 5:30. உங்களை அந்தக் காலை வேளையில் எழுப்ப வேண்டாமென்றுதான் கூப்பிடவில்லை..

உங்களை இந்த முறை சந்தித்திருக்கலாம்.. வந்த நேரம் அப்படி..

அன்புடன்
சீமாச்சு..

லக்கிலுக் said...

//(நான் இளம் பெண்ணை எதிர்ப்பார்த்தால் ஒரு ஆண் வந்து எண்ணத்தில் மண்ணையள்ளி போட்டார்), //

கலக்கல் :-)

உங்கள் பதிவுகள் பற்றி உங்களிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த பதிவரின் பெயர் பாரி!

dondu(#11168674346665545885) said...

பாரி அவர்களது பெயரை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி லக்கிலுக் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முரளிகண்ணன் said...

அதிஸா என்றதும் த்ரிஷா போல ஒரு பெண்ணை எதிர்பார்த்து இருந்தீர்களோ?

Anonymous said...

//6.ஆடுமாடு 7.பைத்தியக்காரன//

enna peru saar ithu..
ithellam romba over.. saar

வால்பையன் said...

பதிவர் சந்திப்புக்கு வராமலேயே என் பெயர் உங்கள் பதிவில் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி,
குசம்பனிடம் கேட்டு நாங்களும் திருமணத்திற்கு வரலாமா என்று கேட்டு சொல்லுங்கள்.
இன்னொரு கேள்வி நாங்கள் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தினால் வருவீர்களா?

வால்பையன்

K.R.அதியமான் said...

உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்
கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'ந‌ல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...
இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..

1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞ‌ர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது.

டோண்டு சார்,

நீங்க 70களில் இருந்த நிலைமை பற்றியும், அப்போது இருந்த சம்பளம்/ விலை வாசி /
வேலை வாய்ப்பு / இந்திய பாணி சோசியலிசம் பற்றியும் விரிவாக ஒப்ப்பிட்டு எழுதுஙக்ளேன். அய்.பி.எம் ந்றுவனத்தை 1977இல் இந்தியாவை விட்டே துரத்திய புண்ணியாவன்கள் இவர்கள். வ‌ருட‌ந்தோரும் அய்.எம்.ஃப் இட‌ம் அண்ணிய‌ செல‌வாணிக்காக‌ கை ஏந்திய‌ கால‌ங்க‌ள் அவை.

உலகமயமாக்கல் என்றால் கோக், பெப்ஸி, வால்மார்ட் நிறுவனங்களின் "மோனொபோலி" பற்றி மட்டும்தான் பேசுவர். ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ நூறு துறைக‌ளில் இங்கு புதிய‌ தொழிற்ச்சாலைக‌ள‌, வேலைவாய்ப்புக‌ள், வ‌ரி வ‌ருமான‌ம், அன்னிய‌ செல‌வாணி வ‌ருமானம் போன்றவற்றை உருவாக்கியிருப்பதை பற்றி பேசுவதில்லை. கனரக தொழிற்சாலைகள், கம்ப்ரெஸ்ரகள், விமான சேவைகள், ட்ராக்டர்கள்,
ரோடுகள், பாலங்கள், என்று பல துறைகளில் இன்று உள்ள உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு 1977இல் இல்லை. அன்று நாம் ஒரு
closed economy. stagnant growth rate with too high a poverty ratio and growing inflation and unemployment even on a lesser population base of 70 crores when comapred to today's 110 crore population base.

Anonymous said...

//ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் பல நூறு துறைகளில் இங்கு புதிய தொழிற்ச்சாலைகள, வேலைவாய்ப்புகள், வரி வருமானம், அன்னிய செலவாணி வருமானம் போன்றவற்றை உருவாக்கியிருப்பதை பற்றி பேசுவதில்லை.//

அது சரி.

இவர்களது உலகமயமாக்கல் எதிர்ப்புக்கு காரணம் தவறான புரிதல் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்களுடைய எண்ணம் எல்லாமே zero-sum game அடிப்பையில் உருவானது என்று நினைக்கிறேன். அதாவது யாரவது லாபம் அடைந்தால் மற்றொருவன் நட்டம் அடைய வேண்டும் என்ற கட்டாயம்.

ஆனால் உலகமயமாக்கல் zero-sum game கிடையாது.

உலகமயமாக்கல், வாணிகம் (உள்நாட்டு - பன்னாட்டு - பரி ) எல்லாம் non-zero game ல் அடங்கும்.

non-zero sum game என்பதை win-win relationship என்றும் சொல்லலாம்.

Anonymous said...

//இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..
//
appadiyendral moottai thookkupavan, sengal sumappavan, kuppai porukkupavn, malam allupavan kaalam kaalamaaga
appadiye irukkavendum. avan munnera koodaathu. aanaal pannaattu company muthalaaliyum avanidam vilai
pogum namathu ooru muthaaliyum ezaiyai surandi kodi kodiyaay panaththai kuviththu kondiruppaargal!!! umathu
pannaattu company muthalaaliyum, namathu ooru muthaaliyum moottai thookkuvaargalaa? sengal sumappaargalaa?
kuppai porukkuvaargalaa? malam allvaargalaa? allathu avargalukku jaalraa podum athiyamaan, dondu
pondravargalthaan seyvaargalaa?

ezai melum ezaiyaaga vendum. panakkaran melum panakkaranaga vendum enbathilthan ungalukku evvalavu akkarai?!!

komanakrishnan

Anonymous said...

//appadiyendral moottai thookkupavan, sengal sumappavan, kuppai porukkupavn, malam allupavan kaalam kaalamaaga
appadiye irukkavendum. avan munnera koodaathu. aanaal pannaattu company muthalaaliyum avanidam vilai
pogum namathu ooru muthaaliyum ezaiyai surandi kodi kodiyaay panaththai kuviththu kondiruppaargal!!!///

Good example of Zero-Sum thinking.

நாகை சங்கர் said...

சந்திப்பு பற்றிய கவரேஜ் அருமை.

ரொம்ப நாட்களாக தமிழ் பதிவுகளை வாசித்து வந்தாலும் இப்பொழுது தான் பதிய ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.


அன்புடன்,
நாகை சங்கர்.

தமிழ் குரல் said...

//* K.R.அதியமான். 13230870032840655763 said...
உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்
கருதுவது ஒரு நகைமுரண்.
*//

அதியமான் & மாமா டோண்டு,

உங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது...

http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post_05.html

dondu(#11168674346665545885) said...

மரியாதை தெரியாத தமிழ் குரல்,
எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது.

டோண்டு ராகவன்

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு டோண்டு அய்யா

Anonymous said...

//மரியாதை தெரியாத தமிழ் குரல்,
எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது///

பாரி அரசுன்னு சொல்லுங்க :))

தமிழ் குரல் said...

//*
dondu(#11168674346665545885) said...
மரியாதை தெரியாத தமிழ் குரல்,
எனது அடுத்த பதிவு உம்மைப் போன்று உளறும் அரைகுறைகளுக்காகத்தான். இப்போது தயாரிப்பில் இருக்கிறது.

டோண்டு ராகவன்
*//

மாமா டோண்டு,

நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...

நான் ஒன்றும் அரைகுறை இல்லை... எல்லோருக்கும் தனி கருத்தூ என்று ஒன்று உண்டு...

உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு... அடிவருட எல்லோராலும் முடியாதே?

தமிழ் குரல் said...

//*

பாரி அரசுன்னு சொல்லுங்க :))

*//

நான் தமிழ் குரல்... நானும் பட்டுகோட்டை பாரி அரசு வேறு...

விட்டு விடலாமே... அவரை...

dondu(#11168674346665545885) said...

//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...//
முதற்கண் நான் உமக்கு மாமா இல்லை. டோண்டு மாமா என்று கூறியிருந்தால்கூட ஏற்று கொள்ளலாம். அதென்ன 'மாமா டோண்டு' என்று இழிவுபடுத்துவதுபோல அழைப்பு?

இந்த அழகில் என்ன அவமரியாதை என்று வேறு கேள்வி. நீர் நிச்சயம் அரைகுறைதான்.

//உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு...//
என்ன ஜாதிவெறியை என் தரப்பிலிருந்து கண்டுவிட்டீர்? நான் எழுதிய எதிலிருந்தாவது எனது ஜாதி வெறியைக் காட்ட இயலுமா?

நான் பார்ப்பனன் என வெளிப்படையாகக் கூறியது உம்மைப் போன்ற பார்ப்பன வெறுப்பளர்களுக்கு எதிர்வினையாகத்தான்.

டோண்டு ராகவன்

Anonymous said...

ஏதோ இவரு மட்டும்தான் தமிழில குரல் கொடுக்கிறாரா மத்தவங்க எல்லாம் இங்குலீஸு குரலா?

தமிழ் குரல் said...

//*
//நான் அப்படி என்ன மரியாதை இல்லாமல் எழுதியுள்ளேன்...//
முதற்கண் நான் உமக்கு மாமா இல்லை. டோண்டு மாமா என்று கூறியிருந்தால்கூட ஏற்று கொள்ளலாம். அதென்ன 'மாமா டோண்டு' என்று இழிவுபடுத்துவதுபோல அழைப்பு?

இந்த அழகில் என்ன அவமரியாதை என்று வேறு கேள்வி. நீர் நிச்சயம் அரைகுறைதான்.

//உங்களை போன்ற ஜாதி வெறிகளுக்கு...//
என்ன ஜாதிவெறியை என் தரப்பிலிருந்து கண்டுவிட்டீர்? நான் எழுதிய எதிலிருந்தாவது எனது ஜாதி வெறியைக் காட்ட இயலுமா?

நான் பார்ப்பனன் என வெளிப்படையாகக் கூறியது உம்மைப் போன்ற பார்ப்பன வெறுப்பளர்களுக்கு எதிர்வினையாகத்தான்.

டோண்டு ராகவன்

*//

அய்யோ... மன்னிக்கவும்... நான் சில காலம் அக்கிரகாரத்தில் வளர்ந்தால் மாமா என்று அழைப்பது வழக்கம்... இனிமேல் உங்களை அன்போடு டோண்டு மாமா என்றே அழைக்கிறேன்...

ஜாதி வெறிக்கு என்று ஒரு அளவுகோள் உள்ளது... அது உங்கள் அளவுகோளின் படி தவறாக பட வில்லை... பொதுவான அளவுகோளின் படி தவறாக தோன்றும்...

மீண்டும் சொல்கிறேன்... தனிமனிதர் டோண்டு மாமாவிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை... நமக்கிடையே உள்ள வேறுபட்ட கருத்துகளைதான் விவாதம் செய்கிறோம்...

உங்கள் கண்ணுக்கு நான் அரைகுறை என்றால் பரவாயில்லை... இருந்து விட்டு போகிறேன்...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது