கல்கி பகவான் என்று தன்னை அறிவித்து கொண்டிருக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியும் அவரைச் சார்ந்தவர்களும் செய்த லீலையால் இருபதுக்கும் மேற்பட்ட ஏமாளி பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் விட்ட நிகழ்ச்சி இப்போது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முன்னோடியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது: "மிகவும் சக்தி வாய்ந்த சூரிய யந்திரத்தின் முப்பரிமாண வடிவில் அமைந்திருப்பதுதான் 'ஒன்னெஸ்' (எல்லாம் ஒன்றே) திருக்கோயில். ஸ்ரீஸ்ரீ (ரொம்ப முக்கியம்) அம்மா (?) பகவான் எழுப்பியிருக்கும் இந்தக் கோயிலுக்குள் சென்று வந்தாலே கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், பூரண குணத்துடன் வெளியே வருவார்கள். நம்மை மிகப்பெரிய செல்வந்தர்களாக்கி மேம்பட்ட பொருளாதார நிலையை அடையச் செய்யும் 'ஒன்னெஸ்' திருக்கோயில். அனைவரும் வருக, பேரானந்த நிலையை அடைக". (நன்றி ஜூனியர் விகடன்).
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் மகாகும்பாபிஷேகத்துக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுவர, கோயில் திறந்த சில மணித்துளிகளிலேயே நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிலர் உயிர் துறந்த பரிதாபம் நடந்திருக்கிறது. இப்போது கோயில் மூடப்பட்டுள்ளது.
கோயில் கட்டப்பட்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் தடாவுக்கு அருகில் காளஹஸ்திக்கு செல்லும் வழியில் பத்தலவல்லம் என்னும் குக்கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ளது. அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட இடம் வேறு. இனிமேல் வனம் பாதுகாக்கப்பட்டாற்போலத்தான்.
இந்த நெரிசலில் சிக்கி பலரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க கல்கி பகவான் ஹெலிகாப்டரில் ஏறி எஸ்கேப் ஆனதுதான் கொடுமை.
இதெல்லாம் ஆன பிறகும் கோயிலின் உள்ளே தங்கியிருக்கும் ஏராளமான வெளி நாட்டினருக்கும், வி.ஐ.பி.களுக்கும் உயர்தர உணவு தயாரிப்பில் சென்னையைச் சேர்ந்த ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் ஈடுபட்டிருந்ததது என செய்திகள் தெரிவிக்கின்றன. என்ன கொடுமை ஐயா? மரணங்கள் நடந்த அதே இடத்தில் சாப்பாடா? அதென்ன வயிறா வேறு ஏதாவதா? எப்படி சாப்பாடு இறங்கும்?
கல்கி பகவான் என்று தன்னைத்தானே அறிவித்து கொண்டிருக்கும் இந்தப் பேர்வழியை பற்றி நான் முதலில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கேள்விப்பட்டேன். அவர்தான் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி என்று அவரது பக்தர் ஒருவர் என்னிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். "எவ்வாறு அவ்விதம் கூறுகிறீர்கள்" எனக் கேட்க அந்த பக்தர் அதே குருட்டு பக்தியுடன் கூறினார் "அதை அவரே கூறினார்" நான் அவுட்டு சிரிப்பை வெளியிட, அபசாரம் அபசாரம் என்று அவர் தன் கன்னத்தில் போட்டு கொண்டு இடத்தை பைய காலி செய்தார்.
Dhangaa Fasaad (அடிதடி, வன்முறை) என்ற தலைப்பில் ஒரு ஹிந்தி நாவல். அதில் இம்மாதிரி பக்தியின் பெயரில் மக்களை மொட்டை அடிக்கும் போலி சாமியார்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளனர். அதுவும் பம்பாயில் ஒரு காலிமனையை இருவர் சேர்ந்து ஸ்வாஹா செய்ததைப் பற்றி சுவையாக எழுதியுள்ளார் ஆசிரியர். அதில் ஒருவன் ஹிந்து இன்னொருவன் முசல்மான் என்று தங்களை அறிவித்து கொண்டவர்கள். ஹிந்துவின் கனவில் ஒரு சூஃபி அறிஞர் வந்து அந்த இடத்தில் ஒரு தர்க்கா கட்டும்படி கூறினாராம். முசல்மான் கனவில் சிவபெருமான் வந்து தனக்கு அங்கு கோயில் கட்டுமாறு கூறினாராம். (இதில் குழப்பமே வேண்டாம், கதையில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டது) இருவரும் அந்த நிலத்துக்கு சண்டை போட - அதாவது ஹிந்து தர்க்காவை கட்டுவதற்கும் முசல்மான் சிவன் கோவில் கட்டுவதற்கும் - பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் நிலத்தை பங்கு போட்டு கொண்டதாக கதை செல்கிறது. இதில் சூட்சுமம் என்னவென்றால் இருவருமே நண்பர்கள், தங்களுக்குள் பேசிவைத்து கொண்டு இந்த நாடகம் ஆடியுள்ளனர்.
ஆக கல்கி பகவான் போன்ற போலி சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை, ஏனெனில் காதில் பூவைத்த ஏமாளிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
23 comments:
சங்கரராமனை கொலை செய்யத் தூண்டிய இருள் நீக்கியும் போலி சாமியார் தானே ?
சங்கரராமன் கொலை வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
நான் ஏற்கனவே எனது டோண்டு பதில்கள் - 28.03.2008-ல் ஜெயேந்திரரை பற்றி இவ்வாறு கூறியுள்ளேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை: "நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே".
அன்புடன்,
டோண்டு ராகவன்
சங்கராச்சரியாரை வனங்குவது, அவர் ஆசி வழங்குவது, பாதபூஜை செய்வது மட்டும் போலித்தனம் இல்லையா?. அது போலித்தனம் இல்லையென்றால், கல்கியின் செய்கைகளும் போலித்தனம் இல்லை என்று ஒப்புக்கொள்வீர்களா?
அருமையான பதிவு!
பெரியார் கூட ஆன்மிகத்திற்கு எதிரி இல்லை, இம்மாதிரியான போலிகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் தான் எதிரி, கடவுள் உண்டு என்று சொல்பவனை விட நான் தான் கடவுள் என்று சொல்பவனை மன நல மருத்துவமனைக்கு தான் அனுப்ப வேண்டும்
வால்பையன்
சங்கராச்சாரியர் தன்னை எங்கும் கடவுள் என்று சொன்னதாகத் தெரியவில்லை. அவர் ஒரு மடாதிபதி. மடத்துக்கு சில நிர்வாகக் கடமைகள் உண்டு, அவற்றை சரிவர செய்விப்பதே அவர் வேலை. மற்றப்படி அவரைப் பற்றிய எனது வெளிப்படையான எண்ணங்களை ஏற்கனவே கூறியுள்ளேன்.
ஆனால் கல்கி அப்படியில்லை. தன்னையே கடவுள் எனக் கூறிக்கொண்டவர். மிக அதிகம் ஆபத்தானவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஓ, கேள்வி - பதில் முடிஞ்சு, மேட்டர் வந்திடுச்சி. நான் இனிமேல் கேள்வி-பதில் மட்டும் என்று நினைத்துவிட்டேன்.
//நான் இனிமேல் கேள்வி-பதில் மட்டும் என்று நினைத்துவிட்டேன்.//
ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொன்னதாக ஞாபகம், அய்யா சாமி காலையாவது ஆட்டிக்கிட்டே இரு, இல்லேன்னா செத்துட்டேன்னு தூக்கிட்டு போயிடுவாங்கன்னு" :)))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Dondu Sir,
Whats surprising is the Ads of -Oneness kalki- appears in popular magazines like Aval vigadan appear with famous personalities like S.V. Sekar, TV personality Mohan Vaidya, film playback singer Saindavi etc. endorsing them!!.
ஐயா டோண்டு எனும் புதிய குத்தறிவுவாதி அவர்களே,
திருப்பதி கோயிலிலும், திருவிழாக் கூட்டங்களிலும் நெரிசலால் மக்கள் செத்துப்போவதற்கு மகரநெடுங்குழைக்காதன் போன்ற போலிக்கடவுள்கள்தான் காரணமா?
ஈவேரா போன்ற போலி-மனிதாபிமானிகளோடு ஒப்பிடும்போது, நிஜமாகவே போலியான சாமியார்கள் எவ்வளவோ தேவலைதான்.
அதெல்லாம் இருக்கட்டும், கல்கி பகவான் போலி என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது. எந்த அடிப்படையில் அவர் போலிச் சாமியார் என்று சொல்லுகிறீர்கள்?
அவரை போலிச் சாமியார் என்று நீங்கள் சொல்ல உங்களுக்குத் தோன்றுவதற்கான காரணங்களை, மகரநெடுங்குழைக்காதனுக்கும், பகவத்கீதையில் என்னை வணங்குபவர்களை நான் காப்பாற்றுவேன் என்று சொல்லுகிற கிருஷ்ணனுக்கும் சொல்ல முடியும். அதை புரிந்துகொள்கிறீர்களா?
மற்ற மதத்துக்காரனை கொன்று, அவனது குழந்தைகளையும், அவன் வீட்டுப் பெண்களையும் அடிமையாக மாற்று, அவனது சொத்தை அபகரி என்று சொல்லுகிற ஆட்கள் (அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டுமே) நிஜமான போலிச் சாமியார்கள்.
குருடனைப் பேசவைக்கிறேன், முடவனை நடக்கவைக்கிறேன், எய்ட்ஸ் வந்தவனை குணப்படுத்துகிறேன் என்று பம்மாத்துச் செய்பவர்கள் போலிச் சாமியார்கள்.
இவர்களைப் பற்றி எழுதத் துணிவில்லாதவர்கள் போலி-பகுத்தறிவுவாதிகள்.
நீங்கள் அத்தகையவர் அல்ல என்பதே என் நம்பிக்கை. ஆனால், அத்தகைய எண்ணம் இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணும்போதே எனக்கு வலிக்கிறது.
நான் ஒரு ஆச்சிரமம் நடத்த தீர்மானித்திருக்கின்றேன். என்னைக் குருஜியாக ஏற்று தாங்கள் என் வழி நடக்க வேண்டும் என்பது என் சித்தம். இல்லற பந்தங்களைத் துறந்து என்ணை தாங்கள் சரணடையும் நாள் எப்போது எனத் அறியப்படுத்துங்கள்.
சுவாமி புள்ளிராஜாஜி
பி.கு. தாங்கள் வரும்போது சிஷ்யைகள் இருந்தால் அழைத்து வாரும்.
/* சங்கராச்சாரியர் தன்னை எங்கும் கடவுள் என்று சொன்னதாகத் தெரியவில்லை. அவர் ஒரு மடாதிபதி.
*/
சங்கராச்சாரியார் தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஐய்யமாருங்க எல்லாம் அவரை கடவுளுக்கு மேல் நிலையில் வைத்து கொன்டாடுவதை ஒரு அர்த்தமான புன்னகையில் ஏற்றுக்கொள்வதும் அதுக்கு ஒப்பானதுதான். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று உங்களாலே ஒத்துக்கொள்ள முடியலையே. கல்கியை இப்படி கைது செய்து ஜெயிலில் போட்டு மானத்தை வாங்கினார்களா என்ன? நீங்களே பேதம்பார்ப்பது உங்கள் பதிவில் பட்டவர்த்தனமாக தெரியுதே.
ராகவன் சார்,
முதலில் கல்கி பகவான் என்ற பெயரில் அந்த சாமியாரை கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள், கொஞ்ச காலமாக அந்த போலியின் மனைவியை "அன்னை" என்று பயங்கர அலம்பல் செய்து வருகிறார்கள் ! இந்த போலி சாமியார் மேட்டரில், படித்தவர், பாமரர் என்று எல்லாருமே நம்பி ஏமாறுவது தான் சோகம் :( இந்த கல்கி பகவான், 1990-களில் ரயில்வேயில் விஜயகுமார் என்ற பெயரில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், பெரம்பூரில் வீடு என்று ஞாபகம்.
கல்கியின் மாஜி ரயில்வே மேலாளர் ஒரு பேட்டியில், பணிக்காலத்தில் 'கல்கி பகவான்' வேலையில் படு சுமார் என்றும், கொஞ்சம் கிறுக்கு என்றும் கூறியிருக்கிறார் :)
கல்கி சாமியாரின் அடிவருடி ஒருவர் ஏதோ பிரச்சினையில் மாட்டியபோது மனம் விட்டு அவரின் புகைப்படத்தின்முன்பு நின்று கொண்டு அழுதாராம். சிறிது நேரத்தில் கல்கி போட்டோவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததாம் என்று சொன்னார். அடடா.. என்ன ஒரு மகிமை...போட்டோவிலேயே கண்ணீரை விட்ட கல்கி அவர்களின் போட்டோவினை ஒவ்வொரு பைப்படியிலும் மாட்டி வைத்தால் தண்ணீருக்கு பஞ்சமே வராது.
சரியாக் சொல்லியுள்ளீர்கள் டோன்டு, கல்கி, அம்மா, பங்காரு போண்றோர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிகழ்வுக்கு தடையாக இருக்கும் இந்துத்வா கோஷ்டிகளையும், எந்த கடவுளின் பெயரால் இந்த திட்டத்திற்கு தடை போடுகிறார்களோ அந்த கடவுளையும் கூட நடுத்தெருவில் நிறுத்தி நாக்கை புடுங்க கேள்வி கேட்க வேண்டும்.
அப்புறம் கூட்ட நெரிசலில் சிக்கி மகாமகத்தில் செத்தார்களே, அந்த மோசடிக்கு யாரை தண்டிப்பது? அந்த மகாமக சாமியையா? அல்லது அம்மாவையா??
//அப்புறம் கூட்ட நெரிசலில் சிக்கி மகாமகத்தில் செத்தார்களே, அந்த மோசடிக்கு யாரை தண்டிப்பது? அந்த மகாமக சாமியையா? அல்லது அம்மாவையா??//
பதிவு எதைப் பற்றி என்பதை புரியாது எழுதியுள்ளீர்கள். தன்னையே கடவுள் என்று கூறி ஊரையே ஏமாற்றும் ஒரு பேர்வழியை பற்றி இப்பதிவில் எழுதப்பட்டுள்ளது. இதில் தேவையின்றி இந்து மதத்தின் மேல் உள்ள உங்கள் வெறுப்பைக் காண்பிக்கிறீர்கள். அப்படியென்றால் சவுதியில் கூடத்தான் சாத்தான் மேல் கல்லெறியும் சடங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மரணமடைந்தனர். வேளாங்கண்ணியில் ஒரு மத சடங்கின் போது சுனாமி வந்தது. அவையா இங்கு பதிவின் விஷயம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சாமியார் கள் பற்றி சொன்னீர்கள் , நான் சாமி + சாமியார் இரண்டு பேரையும் சொன்னேன்.. கல்கி என்பது இந்துக்களின் அடையாளம் தானே. அதை தான் நீங்கள் குறை சொல்லியிருக்கின்றீர் , அப்புறம் நான் ஏன் தனியாக என் இந்து துவேஷத்தை காண்பிக்க வேண்டும்.. நீங்கள் இந்து மதத்தின் சார்ந்த கல்கி அல்லது போலிசாமியார் பற்றி சொன்னதால், நான் 2 இந்து சார்ந்த சம்பவத்தை சொன்னேனே தவிர, இந்து என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.. அது எந்த மதம், மதக்கடவுள் என்றாலும் எனக்கு ஒரே மாதிரி தான்.
நீங்கள் தான் பிரித்து பார்க்கின்றீர்... எங்கே யார் இந்து மதத்தை பற்றி எழுதினாலும்,. அங்கே சென்று அப்படியில்லை என்ற உங்கள் வாதம் வைக்காமல், உடனே , கிற்ஸ்து, முஸ்லிம் என்று எழுதி அங்கே இருக்கிறதே, இங்கே இருந்தால் என்ன என்ற ரீதியில் பதில் தருகின்றீர்..
தமிழகத்தில் ஏன் விலைவாசி ஏறியது என்று கேட்டால் கலைஞர் என்ன சொல்லுவார் ? காரணங்களை சொல்லுவதை விட்டு.. ஜெ ஆட்சியில் அப்படி இருந்ததே என்று குறை சொல்லுவார், அதை அனைவரும் விமர்சிப்போம் (நான் , நீங்கள் உட்பட).. ஆனால், நீங்களும் அதே பானியில் தான் செய்கின்றீர்..
//சாமி + சாமியார் இரண்டு பேரையும் சொன்னேன்..//
அப்படியா? நான் போலி சாமியார் அதுவும் அபாயகரமான முறையில் தன்னையே கடவுள் என அறிவித்து கொண்டவனைப் பற்றி கூறினேன். நீங்களோ சாமியை பற்றியும் கூறுவதாகக் கூறுகிறார்கள். அப்போது இசுலாமியச் சாமி மற்றும் கிறித்துவச் சாமியையும் சேர்த்து கொள்கிறேன் நான்.
மறுபடியும் கூறுகிறேன். உங்கள் வார்த்தை பிரயோகங்கள் ஹிந்து மதத்தின் மேல் வெறுப்பைத்தான் காண்பிக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதனால் நான் புரிந்துகொண்டது என்னவென்றால் "தன்னைத்தானே கடவுள் என்று சொல்பவன் போலி சாமியார்". ஆனால், "நான் கடவுளுடன் பேசுகிறேன் என புரியாத பாஷையில் பேசுபவர்கள் நல்லவர்கள்".
எனக்கு சில சந்தேகங்கள்.
"தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" அப்போ என் உடம்புல இருக்க மாட்டாரா? அப்போ கடவுள் என்னோட அங்கம் இல்லைய? நான் கடவுள் இல்லைய? கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை இல்லையா?
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே பூசன நீர்
பள்ளிகொள்ள வாராய் - நு பாடும்போது கடவுள் நெஞ்சாங்கூட்டுக்குள்ள வந்துடா அப்பவும் நான் கடவுள் இல்லையா?
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
@@@Anonymous said...
கல்கி சாமியாரின் அடிவருடி ஒருவர் ஏதோ பிரச்சினையில் மாட்டியபோது மனம் விட்டு அவரின் புகைப்படத்தின்முன்பு நின்று கொண்டு அழுதாராம். சிறிது நேரத்தில் கல்கி போட்டோவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததாம் என்று சொன்னார். அடடா.. என்ன ஒரு மகிமை...போட்டோவிலேயே கண்ணீரை விட்ட கல்கி அவர்களின் போட்டோவினை ஒவ்வொரு பைப்படியிலும் மாட்டி வைத்தால் தண்ணீருக்கு பஞ்சமே வராது.@@@
ஏங்க அவர் அப்படி அழுத அழுகையில அவர் வாயிலிருந்து தெரித்த எச்சீலைப் பார்த்து கண்ணீர் என நினைத்து விட்டாரோ?
//அதெல்லாம் இருக்கட்டும், கல்கி பகவான் போலி என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது. எந்த அடிப்படையில் அவர் போலிச் சாமியார் என்று சொல்லுகிறீர்கள்?//
vanakkam..
kalki polia illyangardhu avar seyyarthulaye theriyudhe..
"oneness kovilkula vanda great aiduveenganu" sonnavar.. 20 per sethu pona podu enna panninaru... bayanthu odi thane ponaaru..
similarly this kalki's devottes thollai..
avanga sonna naama kette aganum..
if we refuse or don't agree..
the way they curse us..!!
//நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே பூசன நீர்
பள்ளிகொள்ள வாராய் - நு பாடும்போது கடவுள் நெஞ்சாங்கூட்டுக்குள்ள வந்துடா அப்பவும் நான் கடவுள் இல்லையா//
nichayamai neengalum kadavul than..
aana adha solli kasu pudunga koodathu..
kasu tharamattennu sonna sabikka koodathu..
கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளை ஓரம் கட்ட வேண்டும்.
ஆனால், இது ஒரு முடியாத கரியம். ஏன் என்றால் ஏமாறுபவார்கள் இருக்கும்வரைக்கும் இதனை ஒழிக்க முடியாது.....
ஏமாறுபவார்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவார்களும் இருப்பார்கள்.
போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்
http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html
- சிமுலேஷன்
Post a Comment