பாண்டிய நக்கீரன்:
1. தமிழக மின்வெட்டு அதிகமாகிக் கொண்டே போகிறதே (தினம் 4-5 மணி நேரம்?)
பதில்: இத்தனை நாட்களாக அதிகாரபூர்வமாக இல்லாது நடத்தப்பட்டது இப்போது வெளிப்படையாக வந்துள்ளது. ஒரு விதத்தில் நல்லதுக்குத்தான். வி.ஐ.பி. பகுதிகளுக்கும் மின்சார வெட்டு இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளலாம். அவ்வாறு ஷெட்யூலில் இல்லை என்றால் ஏன் இல்லை என தட்டிக்கேட்கலாம்.
2. சென்னையில் எப்படி?
பதில்: தலைநகரம், ஆகவே அவ்வளவாக வெட்டு இல்லைதான். எங்கள் ஏரியாவில் முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணி வரை. மாநிலத்தின் மற்ற இடங்கள்? மனதுக்கு கஷ்டமாகவே உள்ளது.
3. பருவ மழை போக்கு காட்டுகிறதே?
பதில்: நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என ஔவை கூறினாள். ஒருவர் கூடவா நல்லார் இல்லை? அவர்களில் யாரும் ஒருவர் கூடவா உளறவில்லை?
4. மின்வெட்டு போய் மின் சப்ளை 4 மணிநேரம்தான் ஆகும் போல் உள்ளதே?
பதில்: அவ்வளவு மோசமாகாது நிலைமை என நம்புவோமே.
5. யார் காரணம்? dmk or admk?
பதில்: சரியான திட்டமிடாமை, மின் திருட்டுக்களை அரசியல் நோக்கத்துக்காக அனுமதித்தல் ஆகியவையே காரணம். இதில் அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளிலுமே வேற்றுமை ஏதும் இல்லை.
6. இந்த நிலைக்கு தள்ளியது அரசா? பயனீட்டாளர்களா? (பங்கு என்ன)?
பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.
7. பகலில் எரியும் தெருவிளக்குகளை அணைத்தாலே?
பதில்: அதற்கென்று ரிலே செட் செய்கிறார்கள். அதன் கஷ்டம் என்னவென்றால், மின்சாரம் வேலை செய்யாத போது ரிலேயின் கடிகார அமைப்பும் வேலை செய்யாது. மெதுவாக லைட் ஆன் ஆகும் நேரங்கள் தள்ளிப்போகும். ஆகவேதான் பகலில் விளக்குகள் எரிகின்றன.
8. பணியாளர்கள் பணி நேரம் தாண்டியும், அவர்கள் போன பிறகும் அலுவலக அறைகளில் பயன்படும் மின் சாதனங்களை நிறுத்தினாலே?
பதில்: கணக்கு போட்டு கொள்ளுங்கள். ஒரு ஃபேன் 100 வாட்டுகள், இரட்டை குழல் விளக்கு 80 வாட்டுகள். ஆக, ஒரு ஃபேன் மற்றும் ஒரு இரட்டைக் குழல் விளக்கு சேர்ந்து 180 வாட்டுகள். 12 மணி நேரம் விடாது எரிந்தால் இரண்டு யூனிட்டுகளுக்கு மேல். அம்மாதிரி லட்சக் கணக்கான ஜோடிகள். யோசியுங்கள்.
9. அணுஒப்பந்தம் கூட (to increase the power supply only 10 %) இதில் பெரும் பங்கினை அளிக்க முடியாதாமே?
பதில்: இப்போதைக்கு உடனே பலன் இல்லைதான். ஆனால் ஒப்பந்தம் போடாவிட்டால் எப்போதுமே பலன் கிடைக்காதே.
10. மின்பற்றாக்குறை நமது முன்னேற்றத் தடையாய் மாறுவது பற்றி?
பதில்: அதுதான் கொடுமை. அவசரம் அவசரமாக மொழிபெயர்ப்பை கணினியில் தட்டச்சிடும்போது மின்சாரம் போனால் என்னாவது? எரிச்சல்தான்.
11. மின் பகிர்மானத்தில் உள்ள குளறுபடி பற்றி?
பதில்: அத்துடன் சேர்ந்து மின்சார திருட்டும் நிலைமையை மோசமாக்குகிறதே.
12. இலவச மின்சாரம் (குடிசை, விவசாயம்) தவறாய் பயன்படுத்துவது பற்றி (ஒரு பகுதியினரால்)
பதில்: இங்கும் மோடி மாதிரி முதல்வர் தேவை.
13. தேவை இல்லா இடத்தில் ஒளி உமிழும் விளம்பர விளக்குகள் பற்றி?
பதில்: மின்சாரம் போவது மட்டுமல்லாமல், பல இடங்களில் போக்குவரத்தில் இருக்கும் காரோட்டிகளது கவனத்தை திசை திருப்பி விபத்துகள் நடக்கவும் காரணமாகி விடுகின்றன.
14. அரசியல் கட்சிகளின் (தலைவர்களின் வருகை, பிறந்த நாள் விழாக்கள், மாநாடுகள்) கண்சிமிட்டும் விளக்கு விளம்பரங்கள்?
பதில்: திருட்டு மின்சாரத்தின் ஊற்றுக் கண்கள்.
15. இதற்குப்பிறகும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என அறிக்கை விடுவது பற்றி/?
பதில்: அமைச்சருக்கே இது குறித்து நாணமாகி விட்டது போலிருக்கிறது. அதிகாரபூர்வமாகவே மின் வெட்டு வந்து விட்டது.
16 பிற மாநிலங்களில் (வட) நிலையென்ன?
பதில்: அங்கும் அதே நிலைகள்தான். நேரடி அனுபவம் இல்லை.
17. காற்றாலைகள் கண்ணில் நிறைய தெரிகின்றனவே?
பதில்: ஆனால் காற்று எங்கே?
18. தனியார்மயம் பகிர்மானத்தில் என்றார்களே?
பதில்: அதை செய்தால் மட்டும் போதாது. மின்பகிர்வு நியாயமானதாகவும் அரசியல் அச்சுறுத்தல்கள் இல்லாதும் இருத்தல் வேண்டும்.
19. பம்பாயில் இந்தக் குறைபாடில்லை என்கிறார்களே (அணுவின் /அம்பானியின் புண்ணியமா)
பதில்: தெரியவிலை. நான் சமீபத்தில் 1974-ல் பம்பாயை விட்டு வந்த பிறகு மூன்று முறைதான் போயிருக்கிறேன். மொத்த நாட்கள் 6. அங்கு பரவாயில்லையாகத்தான் இருக்க வேண்டும்.
20. மோடியின் குஜராத்தில் எப்படி மின் தடை) (as on 18-07-2008)
பதில்: கேள்வி 'நுனிப்புல்' ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு திருப்பப்படுகிறது.
எழில் அரசு:
21. மாமியார் ஒடைச்சா மண் கொடம், மருமக ஒடைச்சா பொன்கொடமாம்!
"அப்போ நாத்தனார் உடைத்தால்" என்று இக்கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது.
22. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
அதற்காக சோம்பேறியாக இருக்கக் கூடாது.
23. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.
24. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்
தண்ணி கிடைக்கல்லைன்னா என்ன செய்வது?
25. மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறாம்.
பிரிட்டனில் 1947-க்கு முன்னால் காலனி அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை காலனிகள் எல்லாம் சுதந்திரமடைந்த பிறகு பல மடங்கு ஆனது பற்றி வயிரெறிந்து பார்க்கின்சன் விதியை உருவாக்கியவர் நினைவுக்கு வருகிறார்.
26. வழுக்கி விழுந்தவனுக்கு அரிவாள்மனை கூரை முட்டு கொடுத்த மாதிரி
அது சரி, அரிவாள்மனையினால் வெட்டப்படவில்லைதானே?
27. கழுதைக்கு வாக்கப்பட்டு கத்தாமல் இருக்க முடியுமா
கத்தலாம் பரவாயில்லை, உதையெல்லாம் வாங்காது இருந்தால் சரிதான்.
28. இடிச்சவன் பொடைச்சவன் இருக்க எட்டி பாத்தவன் கொட்டிகிட்டு போனானாம்.
காத்திருந்தவன் பெண்டாட்டியை கூட்டிட்டு போக நேத்து வந்தவனாக இருப்பானோ?
29. ரெண்டு வீட்டு விருந்தாடி கெண்டையேறி செத்தானாம்.
வேறு எது ஏறி செத்தால் பரவாயில்லையாம்?
30. ஈ கடிச்ச புண்ணுக்கு எழவு கொண்டாடினானாம்.
இது கொசுவுக்கு செய்யும் துரோகம் என்று கொசுக்களின் கொபசெ கோப அறிக்கை தந்துள்ளார்.
விக்ரம்:
1) Persons like komanakrishnan, luckylook etc., why without any logic, blindly support DMK, despite knowing that their leader is selfish, corrupt and take care of only his family and not 'thondars'?
இக்கேள்விக்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் அல்லவா?
2) on what basis they spew venom on brahmins?
அவர்கள்தான் எதிர்வினை தராது தன் வழி போகிறவர்கள். மற்றவர்களை கூறிவிட்டு யார் உதை வாங்குவதாம்?
3) any plan of starting counseling center for youths?
இல்லை.
4) why cant you use your blogging popularity by contesting in election?
டோண்டு ராகவன் திவாலாவதில் என்ன அப்படி ஆசை?
5) with the same reason, any plan of entering cini field?
நேரமில்லை என்று நான் புருடாவிட்டால் யாராவது கண்டுகொள்வார்களா?
6) when will our country be free of communists?
எப்போது கடலில் அலைகள் ஓயும்?
7) how will u compare the commerically popular restaurents with the old type (such as Iyer mess, mami mess etc) messes which serve tasty food? which one will u prefer?
எனக்கு மாமி மெஸ்ஸே போதும். ஆனால் என்ன சிலமெஸ்களில் சாப்பாடு ரொம்ப சுவையாக இருப்பதால் பெரிய கியூவே நிற்கும்.
ராமகிருஷ்ணஹரி:
Please give your answers in " dondu's style.(as on 19-07-2008)
1. A person who does not get what he wants or needs is a frustrated person and will be easily provoked to rage.
பதில்: கேட்கும் பொம்மை கிடைக்காது கோபத்துடன் கூச்சல் போடும் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த விஷயத்தில் மட்டும் எல்லோருக்கும் பெரிய அளவில் முன்னனுபவம் இருக்கும்.
2. To choose between two equally bad alternatives in a serious dilemma
அதாவது வோட்டு திமுகாவுக்கா அதிமுகாவுக்கா என்று கேட்பது போல இல்லை?
3. When a person really wants to do something, he will find a way of doing it.
இதைத்தான் மனதிருந்தால் மார்க்கபந்து என்று வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். கூறியுள்ளார்.
4. A bad experience or a horrifying incident may scar one's attitude or thinking for a lifetime
சிறு வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு சுட்டிப் பெண் குழந்தை பிற்காலத்தில் கல்யாணம் என்றாளே பயந்தாள். அந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வருகிறது.
5. The first in line will be attended to first.
அன்று ஜி.ஜயராமன் முதலில் நின்றான். ஹிந்தி வாத்தியார் சேஷாத்ரி ஐயங்காரால் நன்றாக கவனிக்கப்பட்டு கையில் இரண்டு பிரம்படிகள் வாங்கினான்.
6. A friend who helps when one is in trouble is a real friend
இதை விட முக்கிய விஷயம் துன்பம் வந்த போது ஓடிவிடும் நண்பனை அவன் நண்பன் இல்லை எனக் கண்டு கொள்வது.
7. If you say discretion is the better part of valor, you mean that avoiding a dangerous or unpleasant situation is sometimes the most sensible thing to do
புலி பதுங்குவது பாய்வதற்காக அல்லவா? நீங்கள் சொல்லும் discretion is the better part of valor என்பது கூட மொண்டித்தனமாக போரிட்டு மடிவதைவிட அப்போதைக்கு பின்வாங்கி பிறகு வந்து சண்டை போடுவதே மேல் என்று நினைப்பதையே குறிப்பிடுகிறது.
8. A person's age is immaterial - it is only when he thinks and feels that he is ageing that he actually becomes old
என்னுடைய வயது ஆவதைப் பற்றிய உணர்வு பதிவை படித்து விட்டீர்கள் போலிருக்கிறதே.
9. Those people who talk a lot and are always teaching others usually do not do much work.
அவர்களும் என்னதான் செய்வார்கள்? மற்றவர்களுக்கு அறிவுறை கூறுவதிலேயே டைம் போவதால் சொந்த வேலைகளில் பின்னடைவு.
10. One who has nothing to do will be tempted to do many mischievous acts
சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இருக்காது என்பது இதுதானோ?
பாண்டிய நக்கீரன்:
1. ஒரு ஓட்டுக்கு 25 கோடியாமே?
சீப்பா இருக்கற மாதிரி இருக்கே!
2. பணநாயகமா, ஜனநாயகமா ?
பணக்கார ஜனநாயகம்.
3. லஞ்சத்தை இவர்களா ஒழிப்பார்கள்?
கண்டிப்பாக ஒழிப்பார்கள். இங்கு சில அனுமானங்கள் தேவை. அதாவது லஞ்சம் என்றால் லஞ்சப் பணம். அதை ஒழிப்பது என்றால் அதை செலவழிப்பது என்று பொருள்.
4. அத்வானிதான் அடுத்த பிரதமரா?
அதற்கு பி.ஜே.பி. ஜெயிக்க வேண்டுமே. காங்கிரஸ் இன்னும் சில முட்டாள்தனமான வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் அதற்கு.
5. மதவெறி என்பது இருக்கா?(பா.ஜா.விடம்-இன்னும்)
யாரிடம் இல்லை?
6. இடதுசாரிகளும் பாஜாகாவும் ஒரே அணியில்? எப்படி?
எப்படி இருக்கும் என கேட்க எண்ணினீர்களா?
7. தவளையும், எலியும் கதையின் முடிவு இதில் மாறுமா?
இதில் யார் தவளை, யார் எலி, யார் கழுகு?
8. சோமனாத் சட்டர்ஜி செய்வது சரியா?
நல்ல சபாநாயகர், அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. கறைபடாத கைகளை உடையவர்களில் அவரும் ஒருவர் எனக் கேள்விப்படுகிறேன்.
9. அரசு கவிழ்ந்தால்?
நல்லவேளையாக கவிழவில்லை.
10. அணு ஒப்பந்தம் வெற்றி பெறாவிட்டால்?
இப்போதைக்கு விடை கூற இயலாது.
தென்காசி:
விடுகதைகள் டோண்டு அவர்களின் விடை என்ன
1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?
காற்று.
2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?
உணவில் விஷம் வைப்பவன்.
3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?
நகம்.
4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?
விடாது கரப்பு (நன்றி பெயரிலி).
5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
இளநீர்
6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?
சட்டை
7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?
நாய்.
8. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
காஸ்ட்ரோவின் தம்பி.
9. சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸ் என்று அழைக்கப்படுவது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று படித்துள்ளேன்.
10. ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன?மனைவியின் விதவைக் கோலம். ஆனால் அதையும் கவுண்டமணி ஒரு படத்தில் கண்டு விட்டார்.
11. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
மூங்கில் தடி.
12. உடன்வருவான் உதவிக்கு வரமாட்டான் அவன் யார்?
நிழல்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
3 hours ago
17 comments:
////9. அணுஒப்பந்தம் கூட (to increase the power supply only 10 %) இதில் பெரும் பங்கினை அளிக்க முடியாதாமே?
பதில்: இப்போதைக்கு உடனே பலன் இல்லைதான். ஆனால் ஒப்பந்தம் போடாவிட்டால் எப்போதுமே பலன் கிடைக்காதே. ////
உண்மைதான். எதிர்ப்பாளர்கள் அதை ஒப்புக்கொள்ள மறுப்பதுதான் சோகம்!
இந்த வார கேள்வி பதிலுக்கு நன்றி.
உங்கள் பதிலில் உங்கள் பரந்த அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் இதை கேலி,கிண்டல்,கார்ட்ட்டூன் கேலி பண்னுவது பற்றி தங்கள் உடனடி பதில்?
பதில் சுடச் சுட?
நன்றி.
சுடச் சுட பதில்தானே தந்தால் போயிற்று.
எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ!
ஒப்புதல் வாக்குமூலங்களில் யார் யார் பெயரெல்லாம் உள்ளதோ!!
டென்ஷனை எப்படித்தான் குறைப்பதாம், ஆகவே குரைக்க வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸ் என்று அழைக்கப்படுவது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று படித்துள்ளேன்.//
- It is Yellow
1.பணவீக்கம் குறைய ஆரம்பித்துவிட்டதே?அரசுக்கு வெற்றியா?
2.கச்சா எண்னெய் விலையும் குறையுதே?200 டாலர் ஆகும் என்றார்களே/
3.அமெரிக்காவின் நிலை ( பொருளாதர)பரவாயில்லையா?
4.விலை வாசி குறையக் காணோமே?
5. இன்னும் வட்டி விகிதம் கூட்டுவது எதற்காக?(inflation கட்டுபட்டதாக தகவல்)
6.காங்கிரஸ் ஆட்சி எதுவரை?
7. முந்துவது அண்ணனா? தம்பியா?(தமிழ்நாடு)
8. இந்தியாவில் யார்?
9.L.G & senchiyarr எதிர்காலம்?
10.நல்லவ்ர் சோ.சட்டர்ஜீ என்ன செய்வார்?
//2.கச்சா எண்னெய் விலையும் குறையுதே?//
After Bush announced that he was rescinding his father's executive order and permitting off shore drilling and after OPEC announced a weakening of oil demand, the futures market price dropped $15 per barrel.
//200 டாலர் ஆகும் என்றார்களே//
Market prices reflect future as well as current conditions. .... new information on greater supplies of oil tomorrow push today's oil prices down.
http://cafehayek.typepad.com/hayek/2008/07/nonsense-on-spe.html
//அவசரம் அவசரமாக மொழிபெயர்ப்பை கணினியில் தட்டச்சிடும்போது மின்சாரம் போனால் என்னாவது? எரிச்சல்தான்.//
டோண்டு சார்!இப்பவாவது நீங்க ஏன் ஒரு மடிக்கணிணி வைத்துக் கொள்ள கூடாது?
இது கிட்டத்தட்ட எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் கதை என்று நீங்கள் புறந்தள்ளுமுன் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - backup 3 மணி நேரம்
மற்றும் இன்னபிற சவுகரியங்கள்
Give it a thought!
அன்புடன்
வெங்கட்ரமணன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்களே. வாங்குவதற்கு தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் இந்த( 21 to 30) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)
1.வைக்கோற் போர் நாய் போல.
2.வேலிக்கு ஓணான் சாட்சி
3.வெளுத்ததெல்லாம் பாலல்ல.
4.வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
5.வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
6.விளையும் பயிரை முளையிலே தெரியும்.
7.விரலுக்குத் தக்கதே வீக்கம்
8.விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
9.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
10.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
//நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்களே. வாங்குவதற்கு தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.//
Though you can happily do all your offline activities. Be advised that internet may not be available even if use a laptop during power-cut.
//Be advised that internet may not be available even if use a laptop during power-cut.//
அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//Be advised that internet may not be available even if use a laptop during power-cut.//
அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்//
டோண்டு சார் இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு.
invertor with tubler standby battery( maintenance free)
500 va to 1kva
ரூபாய் 10000 லிருந்து 20000 வரை செலவாகும்.
விட்டில் உள்ள இரண்டு
மின் விசிறிகள்,இரண்டு குழல் விளக்குகள் ,கணனி. மோடம், etc..
கவலையில்லாமல் உங்கள் பணியை தொடரலாம்.( depends upon the battery capacity-4 hours to 6 hours).
அதுக்குள்ள மின்சாரம் வந்துவிடுமே!
நல்ல நிறுவனத்தில் இவைகளை வாங்கவும்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_24.html
//அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?//
very good then.
Freedom from state monopoly electric supply.
All the best.
//பருவ மழை போக்கு காட்டுகிறதே?
பதில்: நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என ஔவை கூறினாள். ஒருவர் கூடவா நல்லார் இல்லை? அவர்களில் யாரும் ஒருவர் கூடவா உளறவில்லை?//
ஒ அதுக்கு தான் அரசே மதுக்கடை திறந்திருக்கிறதா.
குடித்து விட்டு எல்லோரும் உளர வேண்டியது தானே
வால்பையன்
1.ஜெயித்து யார்?
2.நஷ்டம் இடதுசாரியினருக்கா?
3.பெரியவர் டாடா இந்தியா பொருளாதார வல்லரசாய் ஆவதை விட அமைதியான் சுதந்திரம் தான் தேவை?
4.அம்பானிகள் ,டாடா ஒப்பிடுக?
5.அரசு டீவி பற்றி?
6.சன் டீவி மாறன்கள் எதிர்காலம்?
7.ஸ்டாலினுக்கு கலைஞரின் அளப்பறிய பாரட்டு?
8.மதுரை யாரின் கை இறங்குகிறதா?
9. மதிமுகா-பாம.க நெருங்குவது போல் உள்ளதே?
10.அனுஒப்பந்தத்துக்கும் சமீபத்திய தீவிரவாதத்துக்கும் தொடர்பு இருக்கா?
இன்னொரு பாண்டிய நக்கீரன் வலைப்பதிவில் இருப்பதால் இனி நக்கீரன் பாண்டியன் என் பின்னூட்டன் இடுகிறேன் டொண்டு சார்.
நக்கீரன் பாண்டியன்.
//ஒ அதுக்கு தான் அரசே மதுக்கடை திறந்திருக்கிறதா.
குடித்து விட்டு எல்லோரும் உளர வேண்டியதுதானே//
நல்லாரா வேற இருக்கணுமே அதுக்கு. ஆகவே நல்ல மனிதர்களை கண்டுபிடித்து அவர்களை டாஸ்மாக்குக்கு அழைத்து செல்வோமாக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment