8/01/2008

டோண்டு பதில்கள் 01.08.2008

பாண்டிய நக்கீரன்:
1. பணவீக்கம் குறைய ஆரம்பித்துவிட்டதே? அரசுக்கு வெற்றியா?
பதில்: பணவீக்கம் இம்மாதிரி சிறிய அளவில் மாறுவது நடக்கும் விஷயம்தான். அதை ஃபைன் ட்யூன் செய்வது கடினம்.

2. கச்சா எண்னெய் விலையும் குறையுதே? 200 டாலர் ஆகும் என்றார்களே/
பதில்: இப்போது 125-க்கு வந்து விட்டது போல் செய்தி வந்தது?

3. அமெரிக்காவின் நிலை (பொருளாதர) பரவாயில்லையா?
பதில்: அமெரிக்கர்களின் சுதந்திர உணர்ச்சி இருக்கும் வரைக்கும் அந்த நாட்டுக்கு ஒரு குறையும் இல்லை. சிறு பின்னடைவுகள் வந்தாலும் இது வரை அமெரிக்கா சமாளித்தே வந்துள்ளது. இனிமேலும் அப்படியிருப்பதுவே எல்லோருக்கும் நல்லது.

4. விலைவாசி குறையக் காணோமே?
பதில்: விலைவாசி என்பது ஏறியது ஏறியதுதான். தேவைகள் இருக்கும்வரை விலை குறைவது கடினமே. ஏதேனும் பொருளின் விலை குறைகின்றதென்றால் அது முக்கால்வாசி நாம் பேபர்காரரிடம் எடைக்கு போடும் பேப்பரின் விலையாகத்தான் இருக்கும்.

5. இன்னும் வட்டி விகிதம் கூட்டுவது எதற்காக? (inflation கட்டுபட்டதாக தகவல்)
பதில்: குறைந்த வட்டிவிகிதம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும், விலைவாசிகள் ஏறும் என்பது பொருளாதார பொது அறிவு. அது எல்லா விஷயத்துக்கும் பொருந்துமா என அறிய சிறப்பு அறிவு பொருளாதாரத்தில் தேவை. நான் வெறுமனே பி.யு.சி. வகுப்பில் (சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில்) படித்தவன் அவ்வளவே. அவ்வப்போது பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் படிப்பதுடன் சரி. ஆக அந்த சிறப்பு அறிவு என்னிடம் இல்லை.

6. காங்கிரஸ் ஆட்சி எதுவரை?
பதில்: பி.ஜே.பி. வரும்வரை.

7. முந்துவது அண்ணனா? தம்பியா? (தமிழ்நாடு)
பதில்: மூத்தது மோழை என்பார்கள்.

8. இந்தியாவில் யார்?
பதில்: கண்டிப்பாக ராகுல் இல்லை என நம்புகிறேன்.

9. L.G & senchiyarr எதிர்காலம்?
பதில்: யார் அவர்கள்?

10. நல்லவர் சோமனாத் சட்டர்ஜீ என்ன செய்வார்?
பதில்: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என இன்றைய ஹிந்துவில் (30.07.2008) செய்தி படித்தேன்.


எழில் அரசு:
டோண்டு சார் இந்த( 21 to 30) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)

1. வைக்கோற்போர் நாய் போல
பதில்: வைக்கோற்போர் பன்னி மட்டும் மட்டமா என்ன?

2. வேலிக்கு ஓணான் சாட்சி
பதில்: இதைத்தான் கூட்டுக் களவானின்னு சொல்லுவாங்க.

3. வெளுத்ததெல்லாம் பாலல்ல.
பதில்: பினாயிலும் அல்லதான்.

4. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
பதில்: அதானே, பலர் வெண்ணையை அருகில் இருக்கும் கொக்கின் தலையில் வைக்க முயலுகின்றது போல இருக்கிறது?

5. வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
பதில்: இது என்ன பூஜை வேளையில் கரடி மாதிரி?

6. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
பதில்: தெரிய வேண்டும். அப்போதுதான் களையானால் அதை முளையிலேயே கிள்ளி எறிய இயலும்.

7. விரலுக்குத் தக்கதே வீக்கம்
பதில்: வீக்கத்துக்கு தக்கதே நகச்சுத்தி, அதற்குத் தக்கதே எலுமிச்சைப் பழம்

8. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
பதில்: ஆ, காந்தி இறந்து விட்டாரா?

9. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
பதில்: கட்டுவார் கட்டினால் மணியோசைக்கு பின்னால் வரும் பூனை.

10. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
பதில்: அண்ணா இருந்தால் நேரில் இல்லாவிட்டால் கலைஞர் கனவில்.


அனானி (26.07.2008 அன்று 18.26 மணிக்கு கேட்டவர்):
Please give your answers in " dondu's style."(as on 26-07-2008)
1. Don't cry before you're hurt.

பதில்: You will get enough opportunities to cry afterwards.

2. Dog does not eat dog
பதில்: Then why does it not hesitate to eat hot dog?

3. Bad news travels fast.
பதில்: Truth always stands because it has legs, but lies fly because they have wings.

4. Do as you would be done by.
பதில்: Lest you should be done as you would not want to be.

5. A deaf husband and a blind wife are always a happy couple.
பதில்: As ideal as the sadist and the masochist.

6. Delays are dangerous.
பதில்: If you hesitate to give answer, someone else will and take all the credit.

7. Birds of a feather flock together.
அதில்: கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

8. A cat in gloves catches no mice.
பதி: What are then claws for?

9. Appearances are deceptive
பதில்: A person looking intelligent better guard his silence lest others should know about his ignorance.

10. The devil is not so black as he is painted.
பதில்: But the one I saw was blacker than painted. He was just evil.


பாண்டிய நக்கீரன்:
1. ஜெயித்தது யார்?
நிச்சயம் ஜனநாயகம் இல்லை. இந்தவார துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் அதை அழகாக விளக்குகிறது. இப்படி தோத்துட்டோமே என பரதன், கராத், சந்திரபாபு நாயுடு ஆகியோர் முக்காடு போட்டுக் கொள்ளும்போது இந்த மாதிரி கேவலமான முறையில் ஜெயித்ததற்காக மன்மோகன் சிங்கும் முக்காடு போட்டு கொள்வதாக கார்ட்டூன் அமைந்துள்ளது. பிரமாதம். அதுதான் சோ.

2. நஷ்டம் இடதுசாரியினருக்கா?
பதில்: இத்தனை நாட்களாக புலிவருது என பயமுறுத்தினார்கள். ஆனால் வந்ததென்னவோ கழுதைப்புலி ஆகிவிட்டது.

3. பெரியவர் டாட்டா இந்தியா பொருளாதார வல்லரசாய் ஆவதை விட அமைதியான சுதந்திரம்தான் தேவை என்று கூறுவது பற்றி?
பதில்: இன்றைய உலகமயமாக்கலில் ஒரு இடத்தில் நிலையாக நிற்பதற்கே விடாது ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இந்த அழகில் அமைதியாக இருந்தால் தலையில் மிளகாய் என்ன சட்டினியே அரைப்பார்கள்.

4. அம்பானிகள், டாட்டா ஒப்பிடுக?
பதில்: அவரவர் காலக்கட்டங்களின் பிரதிநிதிகள்.

5. அரசு டீவி பற்றி?
பதில்: உருப்படாமல் போகும் வழி.

6. சன் டீவி மாறன்கள் எதிர்காலம்?
பதில்: எப்படியும் பிசினஸில் பிழைத்து கொள்வார்கள். கருணாநிதி ஒன்றும் சாஸ்வதம் இல்லையே.

7. ஸ்டாலினுக்கு கலைஞரின் அளப்பறிய பாராட்டு?
பதில்: அழுத பிள்ளைக்கு வாழைப்பழம்.

8. மதுரையாரின் கை இறங்குகிறதா?
பதில்: அவர் கை என்ன கைக்காட்டி மரமா?

9. மதிமுக-பாம.க நெருங்குவது போல் உள்ளதே?
பதில்: தண்ணீரில் முழுகும் தருவாயில் சிறு துரும்பையும் விடுவதற்கில்லை.

10. அணு ஒப்பந்தத்துக்கும் சமீபத்திய தீவிரவாதத்துக்கும் தொடர்பு இருக்கா?
பதில்: அப்ப்டீன்னு யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.


அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

கோவி.கண்ணன் said...

டோண்டு சார்,

இந்தவாரம் மொத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் கூட அளவு குறைவாக இருக்கிறதே ?
(இதை அடுத்தவாரத்திற்கான கேள்வியாக எடுத்துக் கொண்டாலும் சரி)

Unknown said...

//அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

posted by dondu(#11168674346665545885) at 6:50 AM on Aug 1, 2008


என்ன டோண்டு சார் இன்னிக்கு கொஞ்சம் "லேட்"
வழ்க்கமாய் 5 மணிக்கே கேள்வி பதில்
வந்துடுமே

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்


இந்த வாரம் பதில் களுக்கு நன்றி.


நக்கீரன் பாண்டியன்

dondu(#11168674346665545885) said...

//இந்தவாரம் மொத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் கூட அளவு குறைவாக இருக்கிறதே?//
இதெல்லாம் மூட் சம்பந்தப்பட்ட விஷயம். கேட்பவர்களுக்கு மூட் இருக்க வேண்டும். பதில் சொல்பவருக்கும் அதே நிலைதான். இம்முறை கேள்விகள் அவ்வளவாக பதில்களைக் கிளப்பவில்லை.

மேலும், போன மாதம் 23-ஆம்தேதி நடந்த ஒரு விஷயத்தைக் குறித்து பல கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவை திருடனுக்கு தேள் கொட்டிய ரேஞ்சில் மௌனம் காத்த/காக்கும் பல பதிவர்களை குறித்த பெர்சனல் கேள்விகள். அதே அபிப்பிராயம் எனக்கும் இருந்தாலும் அக்கேள்விகளை அனுமதிப்பது நியாயமாக இருக்காது. பாவம், அவரவருக்கு அவரவர் நிர்ப்பந்தங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//என்ன டோண்டு சார் இன்னிக்கு கொஞ்சம் "லேட்"//
பதில்கள் நேற்று இரவே தயார். என்ன, இன்று எழுந்திருக்க லேட். மீண்டும் ஒரு முறை அவற்றை படித்து பிழைதிருத்து, சேர்க்கைகள் நீக்கங்கள் ஆகியவற்றை முடிக்க நேரம் பிடிக்கும் அல்லவா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இன்னும் சுப்பையா வாத்தியார் பின்னூட்டம் காணுமே :(

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
இதெல்லாம் மூட் சம்பந்தப்பட்ட விஷயம். கேட்பவர்களுக்கு மூட் இருக்க வேண்டும். பதில் சொல்பவருக்கும் அதே நிலைதான். இம்முறை கேள்விகள் அவ்வளவாக பதில்களைக் கிளப்பவில்லை.

மேலும், போன மாதம் 23-ஆம்தேதி நடந்த ஒரு விஷயத்தைக் குறித்து பல கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவை திருடனுக்கு தேள் கொட்டிய ரேஞ்சில் மௌனம் காத்த/காக்கும் பல பதிவர்களை குறித்த பெர்சனல் கேள்விகள். அதே அபிப்பிராயம் எனக்கும் இருந்தாலும் அக்கேள்விகளை அனுமதிப்பது நியாயமாக இருக்காது. பாவம், அவரவருக்கு அவரவர் நிர்ப்பந்தங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//


டோண்டு சார்,

நீங்கள் மறைமுகமாகச் இங்கே சொன்னாலும் நான் நேரடியாகவே இந்த பதிலைச் சொல்லிவிடுகிறேன்.

எனக்கெல்லாம் ஒரு மண்ணாங்கட்டி நிர்பந்தமும் இல்லை. கடந்த பிப்ரவரியில் பிரச்சனை என்னை வைத்து கிளம்பிய போதே எனக்கு தெரிந்த விபரங்கள் அனைத்தும் சொல்லியாகிவிட்டது, இந்த உள் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவும் இல்லை.

உங்கள் பதிவில்

இப்படி பாராட்டியும் வரும்,

http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

இப்படி வாழ்த்தியும் கூட வரும்,

https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=114388036281009895

அதுக்கெல்லாம் எப்படி கருத்துக் கூற முடியாதோ அது போன்று தான் இங்கேயும்.

இந்த விசயம் எப்போதும் நடப்பது தானே, இப்போது கொஞ்சம் உச்சக்கட்டத்தை அடைந்தது போல் இருக்கிறது. ஆனாலும் முடிவுக்கு வரும் என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிவிட முடியது என்றே நினைக்கிறேன்.

நாளைக்கே 'நாங்கெளெல்லாம் பெரும்தன்மை மிக்கவர்கள்' என்று நீங்கள் இருவருமே கட்டித் தழுவிக் கொண்டால் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவு எதிர்ப்பு என்ற நிலையெல்லாம் எடுக்கும் எல்லோருடைய முகத்திலும் இருவருடைய எச்சிலும் தானே இருக்கும், ஏற்கனவே பட்டது வரையில் போதும்.

மாறுபட்டக் கருத்துக்கள் இருந்தாலும் அது உங்கள் எழுத்துக்கள் மீதான விமர்சனமேயன்றி உங்கள் மீதானதல்ல.

dondu(#11168674346665545885) said...

//எனக்கெல்லாம் ஒரு மண்ணாங்கட்டி நிர்பந்தமும் இல்லை. கடந்த பிப்ரவரியில் பிரச்சனை என்னை வைத்து கிளம்பிய போதே எனக்கு தெரிந்த விபரங்கள் அனைத்தும் சொல்லியாகிவிட்டது, இந்த உள் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவும் இல்லை.//
எது சார் உள்விவகாரம்? இணைய தீவிரவாதியாக செயல்பட்டு வந்த ஒருவனை கடைசி வரை தாங்கிப் பிடித்தவர் நீங்கள். டேப்பில் பேசியது அவர்தான் என்பதை உறுதி செய்த நீங்கள்தான், தாந்தான் போலி என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறி ஒரு fig leaf கொடுத்தீர்கள். தமிழ்மணத்தையே நாற அடித்தவரை உங்கள் நண்பராக கடைசி வரை வைத்து கொண்டிருந்துவிட்டு இப்போது உள்விவகாரம் என ஒதுங்குவது ஏன்?

முரளிமனோஹர் என நான் ஒருபுனைப்பெயர் வைத்து கொண்டதற்காக (அதுவும் கண்ணியமான முறையிலேயே எழுதியதற்காக) "தார்மீகக் கோபம்" அடைந்து ருத்ர தாண்டவம் ஆடியவர்கள் எல்லாம் இப்போது வாயடைத்திருப்பதை இம்மாதிரித்தான் கௌரவமாகக் கூறிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//எது சார் உள்விவகாரம்? இணைய தீவிரவாதியாக செயல்பட்டு வந்த ஒருவனை கடைசி வரை தாங்கிப் பிடித்தவர் நீங்கள். டேப்பில் பேசியது அவர்தான் என்பதை உறுதி செய்த நீங்கள்தான், தாந்தான் போலி என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறி ஒரு fig leaf கொடுத்தீர்கள். தமிழ்மணத்தையே நாற அடித்தவரை உங்கள் நண்பராக கடைசி வரை வைத்து கொண்டிருந்துவிட்டு இப்போது உள்விவகாரம் என ஒதுங்குவது ஏன்?//


டோண்டு சார்,

இதே கேள்வியை நானும் கேட்கிறேன், அவர்தான் விடாது கருப்பு என்று உங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும் என்று நீங்களும் நண்பர் மாயவரத்தானும் எதோ ஐபி எல்லாம் காட்டி முன்பே எழுதிக் கொண்டு தானே இருந்தீர்கள், பிறகு ஏன் அவருக்கு உங்களால் பாராட்டு பதிவும், அவர் உங்களைப் வாழ்த்துவதெல்லாம் நடந்தேறியது ?
அப்போதெல்லாம் அவர் நாறடிக்கவில்லை முரளிமனோகர் போலவே டீசண்டாகவே எழுதினார் என்று சொல்வீர்களோ ?

அவருடைய குரலை உறுதிப்படுத்தியது நான் தான் என்று ஒப்புக் கொண்டவரையில் நன்றி !
எனக்கு தெரிந்தவரையில் நான் சொல்லிவிட்டேன். 'அவரை அப்படி சொல்லாதீர்கள் அவர் உத்தமர் என்று நான் எங்கும் சொல்லவில்லை'. போலியைக் கண்டுபிடித்து செருப்பால் அடிங்கள் என்று முன்பே பதிவிட்டும் இருக்கிறேன். அந்த முயற்சி எடுப்பதற்கு வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறேன்.

http://govikannan.blogspot.com/2007/09/blog-post.html

அதில் தெளிவாகவே பெயர் குறிப்பிட்டே எழுதி இருக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//பிறகு ஏன் அவருக்கு உங்களால் பாராட்டு பதிவும், அவர் உங்களைப் வாழ்த்துவதெல்லாம் நடந்தேறியது ?
அப்போதெல்லாம் அவர் நாறடிக்கவில்லை முரளிமனோகர் போலவே டீசண்டாகவே எழுதினார் என்று சொல்வீர்களோ?//
நான் போலியை எங்கே பாராட்டினேன்? நன்றி மட்டும் தெரிவித்தேன், அதுவும் நான் பாராட்டியது பெரியாரைத்தான். கருப்புவின் பெயரைப் போட்டு அவர்மேல் உள்ள விமரிசனமும் தொடரும் என்றுதானே போட்டிருக்கிறேன்.

இதில் நடந்த நல்லவிஷயம் என்னவென்றால், கருப்புவே தனது டிபிகல் பின்னூட்டம் போட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதுதான்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் அப்போதைய முரளிமனோஹர் சம்பந்தமான எதிர்வினைக்கும் இப்போதைய இடிபோன்ற மௌனத்தையும் விளக்க நான் சொன்னதைத் தவிர வேறு construct இருக்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ezhil arasu said...

பாரதி இப்போது இருந்தால் இதற்கு என்ன சொல்லியிருப்பார்.

1.உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?

2.வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?

3.தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ?

4.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ?

5.நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ?

6.தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய்

7.புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே

8.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ?

9.குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ?

10.தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ?

ரமணா said...

சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில்
தவறு இழைத்தவர்களுக்கு " அன்னியன்" பாணியில் "கருட புராணம்' சொல்லும் தண்டனையை விளக்கமாய் சொல்லவும்

1.உணவுப் பொருட்களை பதுக்குவோர்

2.அதை கடத்துவோர்

3.அதை கொள்ளை விலக்கு விற்போர்

4.இதற்கு உதவும் அதிகாரிகள்

5.உதவும் அரசியல் புள்ளிகள்

6.கண்டும் கான பொதுஜனம்

7.பணம் புடுங்கும் "வசூல் ராஜக்கள்"( மருத்துவர்கள்-தவறிழைப்போர்).

8.உழைக்காத மக்கள்

9.உழைப்பை உறிஞ்சும் உன்மத்தர்கள்

10.பதிவுலகில் குழப்புவோர்

Anonymous said...

//தனது டிபிகல் பின்னூட்டம் போட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதுதான். //

கோமனக்ரிஷ்ணன் என்று இன்னொரு டிபிகல் பினூட்டம் போடும் பார்ட்டியை கொஞ்ச நாளா காணுமே.

Anonymous said...

Why is Kerala govt. running with murderous intentions? [kolaiveri], they want to punish
with Rs.10,000 fine to people for having 3 or more children.
{Even though the population growth there 0.9 is less than the replacement level of fertility 2.1}

Why aren't Indians not learning anything from murderous communist population control policies world over?
Will the people India ever become free of these bad communist rascals?

One wise economist said that Population is the Ultimate Resource. We need more people not less.

Unknown said...

ennamo nalla irruntha sari....

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது