அமெரிக்கா பற்றியும் ரிபப்ளிகன் கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது பிரிட்டனின் முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று முரளி மனோஹர் கத்துகிறான்).
அப்பதிவில் உள்ளதுபோலவே இங்கும் என்னை ஒரு சராசரி ஆங்கிலேயனாக (John Bull) கற்பனை செய்து கொண்டுதான் எழுதுகிறேன். பிரிட்டனில் கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சிகளைத் தவிர லிபெரல் கட்சியும் உண்டு ஆனால் அவ்வளவு பெரிய அளவில் அல்ல. அதன் தலைவர் ல்லாய்ட் ஜார்ஜுக்கு பிறகு அக்கட்சியிலிருந்து யாருமே அரசு அமைக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்பதிவில் இதற்கு மேல் வேண்டாம்.
நான் அமெரிக்கா விஷயத்தில் கூறியது போலவே கன்சர்வேடிவ் கட்சியினர் ஆட்சி காலத்தில்தான் பிரிட்டன் பல பெருமைகளை அடைந்தது. மனதுக்கு வருபவர்கள் சர்ச்சில் மற்றும் மார்கரெட் தாட்சர். சர்ச்சில் பற்றி கூறவே வேண்டாம், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் அவர் பிரிட்டனுக்கு அளித்த திறமையான தலைமை சரித்திர புகழ் பெற்றது.
மார்கரெட் தாட்சர் பற்றி இப்போது கூறுவேன். அதற்கு முன்னால் சிறு டைவர்ஷன். "Yes Minister" "Yes Prime Minister" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:
"It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!)
"It is quite a courageous step, Mr. Minister" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு!)
"That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)
அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை.
ஓக்கே, விட்டால் இந்த டோண்டு ராகவன் அந்த சீரியலைப் பற்றி கூறிக்கொண்டே போவான், அதற்கென்று தனிப்பதிவு வரும் என்று உங்களையும் முரளி மனோஹரையும் எச்சரிக்கிறேன்.
இந்த நிலையில்தான் பிரிட்டன் தாட்சர் பதவி ஏற்றபோது இருந்தது. சாண் ஏறினால் முழம் சறுக்கியது. அப்போது மார்கரெட் தாட்சர் நெடிந்து எழுந்தார். அவர் எண்பதுகளின் முழுதிலும் பதவியில் இருந்தார். நீண்ட கால பிரதமர். தனது குறுகிய கால அரசியல் எதிர்க்காலத்தை நினையாது தடாலடியாகச் செயல்பட்டார். 1982 வாக்கில் அர்ஜண்டைனாவுக்கு எதிராக ஃபால்க்லேண்டை மீட்டு பிரிட்டிஷாரின் சுயமதிப்பை அதிகரித்தார். முற்றிலும் அரசியல் செயல்பாடுதான் இது ஆனால் அந்த நேரத்துக்கு தேவைப் பட்டது. பிறகு அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கினார். அதன் பலனாக அதுவரை வெள்ளை யானையாக செயல் பட்டு பொது பணத்தை முழுங்கிய அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஆரம்பித்தன. அவர் செயல்பட்ட முறை மற்றவர்களாலும் கடைபிடிக்கத் தக்கவை. என்ன, அதற்கு நல்ல தில் வேண்டும் அவ்வளவே. அது அவரிடம் அபரிதமாக இருந்தது. "இரும்பு பெண்மணி" என ரஷ்யர்கள் அவரை அழைத்தனர். அதே காலக் கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரீகனுடன் சேர்ந்து அவரும் சோவியத் யூனியன் அழியக் காரணமாக இருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுவேன்.
அந்த அளவுக்கு லேபர் கட்சி சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். பிரதமர் க்ளெமெண்ட் அட்லீயை பற்றி அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சர்ச்சில் கிண்டலுடன் கூறினார்: "Atlee is a very modest man, he has got a lot of things to be modest about"! (அட்லீ ரொம்பவும் அடக்கமான மனிதர். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் ரொம்பவுமே உண்டு)! அவரது காலத்தில்தான் பிரிட்டனின் சாம்ராஜ்யம் கரைய ஆரம்பித்தது. இதில் அவர் தவறு ஏதும் இல்லை என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன். ஆனால் ஒரு சராசரி ஆங்கிலேயன் இதை நினைத்து பார்க்காமல் இருக்க மாட்டான்.
சர்ச்சில், மார்கரெட் தாட்சர் அளவுக்கு லேபர் தரப்பிலிருந்து ஒரு பிரதம மந்திரியும் என் கண்ணில் படவில்லை. அப்படி இருந்தால் பதிவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.
பதிவை பப்ளிஷ் செய்த பிறகு இன்று வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு வேலை விஷயமாக செல்ல வேண்டியுள்ளது. சில மணி நேர வேலைகள், ஆகவே பின்னூட்டங்கள் வெளியிடப்படுவதில் தாமதம் வரலாம், மன்னிக்கவும். (என்னை அழைத்து செல்ல எனது கார் பத்து மணிக்கு வரும், அதுவரை கணினியை திறந்து வைக்க உத்தேசம்).
அது சரி, அடுத்து வரப்போகும் பதிவுகளில் ஜெர்மனியை பற்றி பேசும்போது டோண்டு ராகவன் எந்தக் கட்சியை ஆதரிப்பான் என்பதை ஊகிக்க இயலுமா?
வாழ்க மொக்கை!
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுயவிமர்சனம், கடிதம்
-
நமது கிராமங்களும் மோசடிகளும், கடிதம் ஆசிரியருக்கு, குறைந்தபட்ச சுய
விமர்சனத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின்
தரத்தை அறிக...
39 minutes ago
28 comments:
இதில் என்ன சந்தேகம். கிருஸ்துவ ஜனநாயக கட்சியைத்தான் ஆதரிப்பீர்கள்!!!
எங்களுக்கு எள்ளவும் சந்தேகமில்லை யாரை ஆதரிப்பீர்கள் என்று.தாங்கள் தான் ஒரு முதலாளித்துவ ஆதரவாளர் என்பதை ஆயிரம் முறை சொல்லியுள்ளிர்களே.
அதுவும் உங்கள் கொள்கை வேறு இட்துகளாலே மேற்கு வங்கத்தில் ஜாடை மாடையாக செயல் படுத்த படுகிறது போல் உள்ளதே
Political Parties
Christian Democratic Union/Christian Social Union (CDU/CSU). An important aspect of postwar German politics was the emergence of a moderate, ecumenical Christian party--the Christian Democratic Union (CDU)--operating in alliance with a related Bavarian party, the Christian Social Union (CSU). Although each party maintains its own structure, the two form a common caucus in the Bundestag and do not run opposing campaigns. The CDU/CSU has adherents among Catholics, Protestants, rural interests, and members of all economic classes. It is generally conservative on economic and social policy and more identified with the Roman Catholic and Protestant churches.
Social Democratic Party (SPD). The SPD is one of the oldest organized political parties in the world. It originally advocated Marxist principles, but in the 1959 Godesberg Program abandoned the concept of a "class party" while continuing to stress social welfare programs. Under the leadership of Gerhard Schroeder, the SPD-Greens government implemented in 2003 the centrist Agenda 2010 reforms, designed to modernize the country's social system and labor market. The SPD has a powerful base in the bigger cities and industrialized states.
Free Democratic Party (FDP). The FDP has traditionally been composed mainly of middle and upper class Protestants who consider themselves heirs to the European liberal tradition. It supports free trade and reducing the role of the state in economic policy. It is libertarian on social issues. The party has participated in all but three postwar federal governments but has not been in federal government since 1998.
The Left. The PDS (composed largely of former East German communists) and the WASG (composed of western leftists) merged in June 2007 to form a party simply known as "The Left." The party's foreign policy is largely shaped by its rigid opposition to foreign military deployments. On domestic policy, the party opposes economic and social reforms, such as Hartz IV, which aim to increase free markets and reduce unemployment benefits. The Left proposes to replace the free market system with a return to socialist principles.
Alliance 90/Greens. In the late 1970s, environmentalists organized politically as the Greens. Opposition to nuclear power, military power, and certain aspects of highly industrialized society were principal campaign issues. In the December 1990 all-German elections, the Greens merged with the Eastern German Alliance 90, a loose grouping of civil rights activists with diverse political views. The Greens joined a federal government for the first time in 1998, forming a coalition with the SPD.
Other parties. Because of the instability caused by the need for multi-party coalitions in the Weimar Republic, Germany's Basic Law today requires parties reach 5% of the vote to win seats in the Bundestag. In addition to those parties that won representation in the Bundestag in 2005, a variety of minor parties won a cumulative 2.7% of the vote, down from 3.0% in 2002. Several other parties were on the ballot in one or more states but did not qualify for representation in the federal Bundestag.
2005 Federal Elections
The 2005 federal elections were held after Chancellor Schroeder asked for a Bundestag "vote of confidence" on the SPD-Greens coalition. The July 1, 2005, confidence motion failed, and President Koehler called for elections to be held on September 18, 2005, a year earlier than planned. The results of the 2005 Bundestag elections are as follows:
CDU/CSU
35.2%
226 seats
SPD
34.2%
222 seats
FDP
9.8%
61 seats
LP/PDS
8.7%
54 seats
Greens
8.1%
51 seats
Other parties
4.0%
no representation
After several weeks of negotiations, the CDU/CSU and SPD agreed to form a "grand coalition" under the leadership of Chancellor Angela Merkel. Angela Merkel and the new cabinet were sworn in on November 22, 2005.
(compiled)
please read the above and answer our dondu ragavanji's question.
ramakrishanahari.
special note to KomanaKrishnan.
please.
you can also give your answer "UnkkaL Nakassuvai Paaniyil"
ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின்னூட்டங்களுமே சரியான ஊகமே செய்துள்ளன. ஜெர்மனிக்கான விரிவான பதிவு பிறகு வரும்.
இஸ்ரேலில் இந்த டோண்டு ராகவன் யாரை ஆதரிப்பான் என்பதியும் சுலபமாகவே கூறிடுவீர்கள் என நினைக்கிறேன். (இஸ்ரேலையே அவன் மொத்தமாக ஆதரிப்பவன் என்பது உண்மையானாலும்...)
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?
கோமணகிருஷ்ணன்
டோண்டு அவர்களே, நான் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த்தவன். ஏழைகளின் துயரத்தை அனுபவமாக உணர்கிறவன். நான் அய்.டி அல்லது BPO வில் வேலை செய்து லட்சங்களை அள்ளுபவன் அல்ல. சிறிய electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். அதனால்தான் எனது பதிவுகள் ஏழைகள் கண்ணோட்டத்தில் போடுகிறேன். ஆனால் அது பலருக்கு நகைச்சுவையாக தெரிகிறது.
கோமணகிருஷ்ணன்
சோ ஒரு படத்தில் சொல்வார்.
காட்சி ஒரு பொதுக்கூட்டக் காட்சி.
எதிரில் பெரிய பொட்டல் போன்ற இடத்தில் ஐந்து பேர் அமரந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்...அரசியல்வாதி சோ சொல்வார்..
'இங்கு கூடியிருக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்,,,நான் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன்..."
எனக்கு அதே காமெடிதான் நினைவுக்கு வருகிறது...
komanakirishnan
எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியாதை, அது SPD உடன் 2005 ல் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்த போது போனதுதான். SPD நமது இடது சாரிகள் மாதிரி ஜேர்மனியில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முட்டுகட்டையாக இருக்கிறது.
//electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன்.//
இந்தியாவிலேயே பதிவு போடும் ஒரே electrician நீதான் கோமனா.
வலையில் நீங்கள் பாசிஸ்டா ஜெயமோகன் பாசிஸ்டா என்று அய்யனார் கேள்வி கேட்கிறார்.
பாசிஸ்ட் என்ற சொல்லுக்கெல்லாம் டோண்டு தகுதி படைத்தவர் இல்லை. அவரது எழுத்துக்கள் ஒவ்வாமை வகையை சார்ந்தது என்று ஜ்யோவ்ராம் சுந்தர் பதில் அளிக்கிறார்.
என்னதான் நடக்கிறது?
இந்த வலையுலக அறிவுஜீவிகள் உங்களை ஒதுக்கிவைப்பதாக நினைக்கிறீர்களா
// ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின்னூட்டங்களுமே சரியான ஊகமே செய்துள்ளன. ஜெர்மனிக்கான விரிவான பதிவு பிறகு வரும்.
இஸ்ரேலில் இந்த டோண்டு ராகவன் யாரை ஆதரிப்பான் என்பதியும் சுலபமாகவே கூறிடுவீர்கள் என நினைக்கிறேன். (இஸ்ரேலையே அவன் மொத்தமாக ஆதரிப்பவன் என்பது உண்மையானாலும்...)
அன்புடன்,
டோண்டு ராகவன்
July 07, 2008 10:01 AM
Anonymous Anonymous said...
டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?
கோமணகிருஷ்ணன்
July 07, 2008 10:02 AM
Anonymous Anonymous said...
டோண்டு அவர்களே, நான் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த்தவன். ஏழைகளின் துயரத்தை அனுபவமாக உணர்கிறவன். நான் அய்.டி அல்லது BPO வில் வேலை செய்து லட்சங்களை அள்ளுபவன் அல்ல. சிறிய electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். அதனால்தான் எனது பதிவுகள் ஏழைகள் கண்ணோட்டத்தில் போடுகிறேன். ஆனால் அது பலருக்கு நகைச்சுவையாக தெரிகிறது.
கோமணகிருஷ்ணன்//
கோ.கி அவர்களுக்கு,
நான் ஏதோ தாங்கள் வேண்டுமென்றே இப்படி பின்னுட்டங்கள் போடுவதாக தவறாக எடுத்துக் கொண்டேன்.
தனி ஒருவனுக்கு உண்வில்லையென்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் எனும் பாரதியின் வாசகம் போல் அல்லலுறும் ஏழைகள் பால் இரக்கம் கொண்டு "வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடைமை" உண்மையாக எதிர்க்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் தங்கள் நண்பன்
வணக்கம் டோண்டு சார்,
பதிவு நன்றாக் உள்ளது, கும்மிக்கு நல்ல வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.
வெள்ளை யானை ரசிகர்கள் நிறைய பேர் வந்து கும்முவார்கள் என நினைக்கிறேன்
சரவணன்
வணக்கம் கோபகிருஷ்ணரே,
//டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?//
அரசியல்வாதி : ஏழைகள் துயரை துடைப்பதற்கு ஒரு கோடி மீட்டர் துணி வாங்கன கணக்குல ஒரு 10 கோடிய போடுங்கப்பா...
If am here to help others;
then what exactly are others here for
சரவணன்
வாங்க கோபகிருஷ்ணன்,
எலெக்ட்ரிகல் ஷாப் வச்சுர்க்கீங்க .. இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க.
தமிழ்நாட்டுல பவர் ஃபெயிலியராமே நிசமா ?
பவர் - மின்சாரம் மட்டுமே அதிகாரம் என்று எடுத்துக்கொண்டால் அது உங்கள் நுண்ணரசியல் அல்லது பார்பனீயமாக இருக்கலாம்
சரவணன்
I am still in client's place. Will reply as soon as I am back. Till then please excuse me.
Regards,
Dondu N. Raghavan
dondu(#11168674346665545885) said...
I am still in client's place. Will reply as soon as I am back. Till then please excuse me.
Regards,
Dondu N. Raghavan
July 07, 2008 4:24
இங்கே களை கட்டுகிறது.சூப்பர் கும்மி.உலகப் பொருளாதாரமே அலசப்படுகிறது.
1.இன்றய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வரிசைபடுத்தவும்(name with url)
2.தமிழ்மனத்தில் ஒரு சில நல்ல பதிவுகள் பலர் கண்ணில் படாமாலே போகிறதே,ஏதாவ்து வ்ழி உண்டா?
3.பாலுணர்வு சம்பந்த பதிவுகளுக்கு ஆதரவு குமிகிறதே?
4,.அதுவும் சமீபகாலமாக அவை கொத்து கொத்தாய் வந்து ஆலவட்டம் போடுகின்றதே? நல்லதற்கா?
5.மலையாள சினிமா போஸ்டர் போல் தலைப்புகள் வைத்து வாசகர்க இழுக்கப் படுகிறார்கள் போலுள்ளதே
6.மலிவான தந்திர விளப்பர யுக்தியின் வெற்றி கண்டு சில நல்ல பதிவாளர் கூட அதை கையில் எடுக்க முயலுகிறார்களே?
//எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியாதை, அது SPD உடன் 2005 ல் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்த போது போனதுதான்.//
இம்மாதிரி மகா கூட்டணி வைப்பது ஜெர்மனியில் புதிதல்லவே. சமீபத்தில் 1966-ல் வைத்துள்ளார்கள் இதே கட்சியினர். அது காலத்தின் கட்டாயம். ஜெர்மனியில் உள்ள தேர்வு முறை proportional representation செய்யும் கூத்து அது.
அச்சமயம் வெளி உறவு மந்திரி வில்லி ப்ராண்ட், சான்ஸ்லர் கிசிஞ்சர் (அமெரிக்காவின் கிசிஞ்சர் அல்ல).
1966 முதல் 1969 வரை அது நீடித்தது. அச்சமயமமும் எஃப்.டி.பி. ரொம்ப அலட்டியதாலேயே இது வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
7.இலை மறை காய் என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு விளக்கு கதைகள் போல் வலம் வருகிறதே?
8. ஏற்கனவே இன்றய இளய தலைமுறையினர் இந்த சமாச்சாரத்தை"just like that " எனப் பாவிக்கும் போக்கு கண்கூடு.
9.திரைப் படங்கள்,சின்னத் திரை ஆட்டங்கள், பத்திரிக்கை களில் வரும் அந்த மாதிரிச் செய்திகள் இளைஞர்களுக்கு தூபம் போடுவது போலுள்ளதே?
10.உங்கள் பதில்கள் ஒரு பொறுப்புள்ள பண்பாடு காக்கும் குடுப்பத்தலைவன்
பார்வையில் இருக்க வேண்டும்.
(வழ்க்கம் போல் வசதியும் வாய்ப்பும் இருந்தால் அனுபவி ராஜா அனுபவி(skin to skin no sin) என்பது போல் பதில்கள் இருக்கவேண்டாம் கொஞ்சம் சிரியஸ் டோண்டு ராகவன் சாராக)
//இம்மாதிரி மகா கூட்டணி வைப்பது ஜெர்மனியில் புதிதல்லவே. சமீபத்தில் 1966-ல் வைத்துள்ளார்கள் இதே கட்சியினர். அது காலத்தின் கட்டாயம்.//
ரொம்ப முன்னாடி போய்டீங்க சார். நான் அதற்க்கு பிறகு சுமார் 25 வருடங்களுக்கு பிறக்க வில்லை.
//ஜெர்மனியில் உள்ள தேர்வு முறை proportional representation செய்யும் கூத்து அது.//
இருந்தாலும் எனக்கு proportional representation கொஞ்சம் பிடிக்கும்.
//அச்சமயமமும் எஃப்.டி.பி. ரொம்ப அலட்டியதாலேயே இது வந்தது.//
அது சரி. அலட்டலைனா பாதிக்க படுவது அப்பாவி பொது மக்கள் தானே. இப்ப பாருங்க SPD கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடை போடுகிறது, இதனால் ஊக்கு வாங்குவது சராசரி மனிதன் தான்...
CDU வின் அங்கேலா மெர்கெல் நம்ம மன்மோகன் சிங் மாதிரி செமையா மாட்டிகிட்டு இருக்காங்க.
நீங்க DW tv பார்ப்பது உண்டா ?
1.பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம்
போலுள்ளதே?
2.காடுவெட்டியாரை சும்மா விட்டுவிடுவது போல் பாவ்லாகாட்டி கட்சியில் கைது படலம் ஆரம்பம்?
3.அறிவிக்கும் போரட்டங்கள் பிசுபிசுப்பதாக செய்திகள்
4 இதெல்லாம் பார்த்தால் அம்மையார் கூட பிகு பண்ணுவாரே?
5.ஏற்கனவே கொடநாடு பங்களாவில் மணி அவர்களுக்கு ( சட்ட சபை கட்சி தலைவர்)தரிசனம் மறுக்கப் பட்டுள்ளது?
6.விஜயகாந்த்,சரத்குமார்,மாறன் பிரதர்ஸ்
யாரு கூடவும் சேர முடியாதே?( விமர்சனத்தின் விபரீதம்)
7.மருத்துவர் ஐயா ஒரு கணக்கு போட்டால் அரசியல் வேறு ஒரு கணக்குப் போடுகிறதே?
8.இந்த தடவை தனித்து விடப்படுவோர் போலுள்ளது?
(மகனும் கைவிடுவார்)
9.அவரது சம்மபந்தியை கூட காங்கிரசின் தலமையிலிருந்து தூக்கிவிட்டார்களே?முதலில் ராம தாஸ்க்கு கல்தா கலைஞரால்,அடுத்து கிருஷ்ண சாமி சோனியா அம்மையாரால்,அடுத்து யாருக்கு கல்தாவா?
10.மு.யாதவ் ஆதரவு கிடத்துள்ளதால் இனி அன்புமணி (அமைச்சர் பணி கோவிந்தாவா!-கலைஞர் அவர்களின் ராஜ தந்திரம் மீண்டும்)கட்சிபணியாற்ற வேண்டியது தான் போலுள்ளத்தே?உப்பை திண்ணவர் தண்ணி குடிக்கவேண்டாமா!
என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்க..
வரிசையா கேள்வி கேக்கறீங்க ஒரு கேள்வி கேட்ட காணாமல் போய் விடுகிறீர்களே நியாயமா.
தமிழகத்தில் பவர் ஃபெயிலியராமே உண்மையா?, தமிழ்நாடு முழுக்கவா இல்லை சென்னையில் மட்டுமா, எனக்கு தெரிஞ்சு மதுரையில பவர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காமே பவர் லீக்கேஜ்ல சில பல இடங்கள் பத்தி எரியுதாமே
சரவணன்
//சரவணன் said...
என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்க..
வரிசையா கேள்வி கேக்கறீங்க ஒரு கேள்வி கேட்ட காணாமல் போய் விடுகிறீர்களே நியாயமா.
தமிழகத்தில் பவர் ஃபெயிலியராமே உண்மையா?, தமிழ்நாடு முழுக்கவா இல்லை சென்னையில் மட்டுமா, எனக்கு தெரிஞ்சு மதுரையில பவர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காமே பவர் லீக்கேஜ்ல சில பல இடங்கள் பத்தி எரியுதாமே
சரவணன்
சிவ பார்வதியாம் கலைஞர்-தயாளு அம்மையார் இருக்கும் கைலாயமாம் கோபலபுரத்தில் அண்ணன் கணேசனாய் வலம் வரும் மதுரையார், தம் அதீத சக்தியாஃல் நோஞ்சான் தம்பியின்(தடாலடி அரசியல் பார்வையில்)பவர் கம்மிதானே சரவணன் சார்.
அதானே கலைஞரும்!!!!!!!
Dear Dondu,
The Falk Islands belong to Argentina. Do you disagree with it?
What Uk did was the same as Portugal did when it refused to give Goa back to India. India had to use force to take Goa back.
Do you think what India did was wrong? If not how come Argentina is not right here?
நெதர்லாந்துல உங்க ஆதரவு யாருக்கு ?
நான் புதுசா blog எழுத ஆரம்பிச்சி இருக்கேன்
Saavu.blogspot.com
உங்க ஆதரவு அவனுக்கா அவளுக்கா ?
1.திடீரென்று எப்படி தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைவரானர்?
2.அவர் அம்மையார் விசுவாசியே?
3.கலைஞர் எப்படி ஒத்துக்கொண்டார்?
4.பா.ம.க தலைவரும் அவர் சப்மந்தியும்( கி.சாமி) இப்போ ஒரே நிலையிலா?
5.வாலிழந்த நரிகள் என்ன செய்யும்?
6.திடீரென்று விஜயகாந்த் பாசம் தி.மு.காவில்,பார்த்தீர்களா?
7.அவரும் அடக்கி வாசிக்கிறாரே?
8.திரை மறைவில் நடப்பது என்ன?
9.அ.தி.மு.க தலைவி தேர்தலுக்கு ரெடியாமே?
10.ராமதாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது என மதுபான அரசரின் நெருக்கடியாமே?
11.சிங் அரசு தப்புமா?
12.ஒருவேளை தேர்தல் வந்தால் இடதுகள்
என்ன செய்யும்?
13. ஆந்திர நாயுடுவுக்கு சிரஞ்சீவி கை கொடுக்கிறார்.உண்மையா?
14.3வது அணி கோவிந்தோ! கோவிந்தோ!கோவிந்தோ!
15.கடைசியில் கறுப்புபணத்துக்குத் தான் இறுதி வெற்றியா?
16.இவர்கள் எல்லாம் துக்ளக் வாரிசுகள் போல் செயல்படுகிறார்களே?
17 இனி துக்ளக் சோவுக்கு நல்ல எழுத்துவேட்டை?இல்லையா?
18.அம்பானிகளில் முந்துவது தம்பி போலுள்ளதே?
19.அப்பாடி மீண்டும் அமிதாப் பச்சன்
ராஜிவ் குடும்ப வழையத்துக்குள்?
20.இந்தியாடுடேயின் மு.கருணாநிதியின் காவியப் பயணம்(june 2008-சிறப்பிதழ்)
பற்றிய உங்கள் விரிவான, விளக்கமான விமர்சனம்.?
பாண்டிய நக்கீரன் அவர்களே,
உங்கள் 20 கேள்விகளின் பதில்களை நான் 18-ஆம் தேதி பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
பாண்டிய நக்கீரன் அவர்களே,
உங்கள் 20 கேள்விகளின் பதில்களை நான் 18-ஆம் தேதி பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அடுத்த வார கேள்வி பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நாளை காலை 5 மணிக்கு.
good night dondu sir.
Post a Comment