7/15/2008

சுட்டிப் பையன் பி. லட்சுமணன் ஜன்னலை உடைத்த ஒரு மொக்கை கதை

நண்பர் சந்திரசேகரன் அவர்கள் ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். உடைந்த ஜன்னல் பற்றிய கதையுடன் அவர் சுட்டும் கட்டுரை ஆரம்பிக்கிறது.

பட்டாம்பூச்சியால் சுனாமி வந்த கதையைப் போல இதுவும் ஆரம்பிக்கிறது.

Frederic Bastiat என்பவரால் எழுதப்பட்ட இக்கதை பொருளாதார மாணவர்களுக்கு மிகவும் பரிச்சயம் என்று இக்கட்டுரை கூறுகிறது. அது இப்போது எனது வார்த்தை மற்றும் உதாரணங்களில்:

பிரணதார்த்தி ஹரனின் மகன் பி. லட்சுமணன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அடுத்த தெருவில் வசிப்பவனும் அன்றுதான் அவன் எனிமி விட்டிருந்தவனுமான ஆர். கோபாலசுவாமி கருவிக் கொண்டே பந்துவீச, பி. லட்சுமணன் சமீபத்தில் 1958-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னை டெஸ்டில் அணித்தலைவர் வினூ மன்காட் கில்கிரிஸ்டின் முதல் பந்தை அனாயாசமாக லேட் கட் செய்து பவுண்டரி அடித்தது போல அவனும் முயற்சி செய்ய, பந்து சட்டென்று மேலே எழும்பி அவன் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைக்க, அவன் தாயார் பெரிய நாயகியால் அப்பளக்கட்டையுடன் துரத்தப்பட்டதால், அடுத்த பந்தில் பி.லட்சுமணன் மன்காட் அவுட் ஆனது போல க்ளீன் போல்ட் ஆனானா என்பதை நாம் அறிய முடியவில்லை. அது இப்பதிவுக்கு தேவையுமில்லை.

பிரணதார்த்தி ஹரன் வீட்டுக்கு வந்து பெரியநாயகி அளித்த புகாரின் பேரில் பி.லட்சுமணனை விசிறிக்கட்டையால் அடித்துவிட்டு, ஜன்னலுக்கு கண்ணாடி போடும் கோவிந்த ஆச்சாரியை கூப்பிட்டு ஜன்னல் கண்ணாடியை போடவைத்தார். அவர் தந்த பணத்தை வைத்து கோவிந்த ஆச்சாரி தன் மகன் ராம ஆச்சாரிக்கு ஸ்லேட் பலப்பம் வாங்கித்தந்தார். ஸ்லேட் வியாபாரி இல. ராமனாத செட்டியார் என்ன செய்தார் என்பதும் இப்பதிவுக்கு தேவையில்லை. அவர் மேலே செலவு செய்து இப்படியே தொடர் சங்கிலியாக பொருளாதார நடவடிக்கை சென்றதாக நிச்சயம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஜன்னல் மட்டும் உடையாமல் இருந்தால் கோவிந்த ஆச்சாரி பாவம்தானே என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள் என்ற தொனியில் அக்கதை செல்கிறது. அதுவும் இப்போதைக்கு நிற்க.

இப்போது நண்பர் சந்திரசேகர் சுட்டியிட்ட கட்டுரைக்கு வருவோம். ஜன்னலை உடைத்தது மேலும் செல்வத்தை பெருக்க உதவியது என்று இக்கதை கூறுவதை ஆசிரியர் மறுக்கிறார். ஜன்னல் உடையாதிருந்தால் என்ன ஆகியிருக்குமாம், அதன் ரிப்பேருக்கு தந்த பணத்தை வைத்து பிரணதார்த்தி ஹரன் திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் உள்ள துணிக்கடை ஸ்ரீராம் ஸ்டோர்ஸில் வேட்டி, சட்டை வாங்கியிருக்கலாம். அதன் முதலாளி ரங்கனாத ஐயங்கார் அகோபில மடத்தில் நடந்த அன்னதானத்துக்கு நன்கொடை அளித்திருக்கலாம், அதன் மூலம் அரிசி மண்டி ஹுஸேன் பாய் ஹஜ் போவதற்கு அதை உபயோகித்திருக்கலாம் என்றும் அடுக்குகிறது இக்கட்டுரை. அதாவது, ஜன்னல் உடைந்ததால், இழந்த செல்வம் மட்டும் சரி செய்யப்பட்டது. ஆனால் அது உடையாமல் இருந்ததால்தான் செல்வம் பெருகியது என்பது இக்கட்டுரையின் துணிபு.

காலங்கார்த்தாலே இப்படி குழப்பறயே என்று முரளி மனோஹர் கோபப்படுகிறான். ஆகவே மேலே கூற வருவதை சுருக்கமாகவே கூறிவிடுகிறேன்.

ஜன்னல் தியரியை உபயோகிப்பவர்கள் யுத்தம், சுனாமி ஆகிய வருவதால் வரும் பொருளாதார செயல்பாடுகளை பட்டியலிட்டு, மேற்படி யுத்தம் மற்றும் சுனாமி வந்ததும் நல்லதற்கே எனக் கூறுகிறார்கள். நம் பதிவர் உலகத்திலும் நன்றி சுனாமி என்றெல்லாம் பதிவு போட்டு அல்லோலகல்லோலப்பட்டதை பழைய பதிவர்கள் அறிவார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பானவர்கள் யுத்தம் மற்றும் சுனாமியால் சொத்துக்கள் உருவாகவில்லை, அழிந்தது மட்டுமே பலன் எனக் கூறுகிறார்கள்.

இக்கட்டுரை ஆசிரியர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர், அதாவது உடைந்த ஜன்னல் கதையை ஏற்று கொள்ளவில்லை. யுத்த காலங்களில் பணப்புழக்கம் அதிகமாவது போலத் தோன்றுவது கூட ஒரு இல்யூஷன் என்றே கூறுகிறார் அவர். அரசாங்கங்கள் பேப்பர் பணத்தை நிறைய அச்சடிப்பதுதான் இத்தோற்றத்தின் முக்கியக் காரணம் என்றும், உண்மையிலேயே லாபம் என்று ஒன்றுமில்லை என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இது பணப்புழக்கம் அல்ல, பணப் புழுக்கமே என்று இவரது அணி வாதாடுகிறது. "நல்ல வாதம்யா, எதிரணி என்ன சொல்லப் போவுதுன்னு பார்க்கலாம் என்று கூறுவது நம்ம சாலமன் பாப்பையா".

எதிரணியில் இப்போது வருவது பதிவர் டோண்டு ராகவன். அவன் என்ன கூறப் போகிறானோ, எவ்வளவு ஹைப்பர் லிங்குகள் தரப்போகிறானோ என எதிர் அணியில் இருப்பவர்கள் படும் டென்ஷனுக்கேற்ப முதலிலேயே ஒரு ஹைப்பர்லிங் தருகிறேன். சுனாமியோ, யுத்தமோ நாம் சொல்லி வருவதல்ல. அவை வந்து விட்டன, உலகமயமாக்கல் போல. இப்போது போய் அது வந்தது தவறா இல்லையா என்றா பேசுவது? மேலே என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம் ஐயா. அவனவன் உழைத்து, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை கோட்பாட்டில் ஆழ்ந்துள்ளான். அதை எதிர்த்து பேசி மனித இயற்கைக்கு புறம்பான தத்துவத்தை வைத்து கட்டி அழுபவர்கள் அழட்டும், நாம் மேலே செய்வோம். "அது சரி இப்பதிவினால் நாம் பெறும் நீதி என்ன? நீ சொன்ன ஒரே ஒரு கேள்வியுடன் கூடிய நீதிக்கதை போல இருக்காது என நம்புகிறேன்" என்கிறான், கொட்டாவி விட்டபடியே முரளி மனோஹர்.

ஒரேயடியாக அப்படி கூற இயலாது. நான் கூற வருவது என்னவென்றால் சுனாமியோ, யுத்தமோ வந்து விட்டன, மனித இனத்திடமிருந்து ஏற்கனவே பெரிய விலையை பெற்று விட்டன. ஆகவே அதனிலிருந்து பெறும் லாபமான பொருளாதார நடவடிக்கைகளை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதுதான் என் கேள்வி. யுத்தங்களினால் அழிந்த ஜெர்மனி, ஜப்பான் போன்றவை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டன. அச்சமயம் நல்ல டவுன் பிளானிங்கில் கட்டிடங்கள் கட்டி, சாலைகளை அமைக்க முடிந்தது. யுத்தம் வராதிருந்தால் அவற்றை செய்திருக்க முடியாது. ஆக கெடுதல்களிலிருந்தும் நல்லதைப் பெறலாம் என்பதுதான் நான் கூறும் நீதி. "அப்பாடா, இப்போதாவது என்னிடம் பதிலளிக்குமாறு கேள்வி கேட்டு படுத்தவில்லையே" என்று கூறும் முரளி மனோஹருக்கும் மற்றவர்களுக்கும் இப்போது டோண்டு ராகவனின் கேள்வி. இந்த நிலைப்பட்டை டோண்டு ராகவன் எடுத்ததற்கு முக்கியக் காரணமே அவன் இப்பதிவர்கள் உலகில் பெற்ற அனுபவங்களே. அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

bala said...

//ஆக கெடுதல்களிலிருந்தும் நல்லதைப் பெறலாம் என்பதுதான்//

டோண்டு அய்யா,

ஜன்னல் தத்துவம் சூப்பர்.உலக நாயகனுக்கு 20 அவதாரங்கள் கதை சினிமாவுக்காக கிடைத்துவிட்டது.வாழ்த்துக்கள்.
அது சரி,கெடுதலிலிருந்து நனமை கிடைக்கும் என்பதுதான் பகுத்தறிவு கொள்கையா?எதுக்கு சொல்றேன்னாக்க நம்ம மஞ்ச துண்டு மற்றும்,மானமிகு கும்பல் மாஞ்சி மாஞ்சி கெடுதல்கள் செய்கின்றனரே,அதனால தமிழ் நாடு அடையப்போகும் நன்மைகளை நினைத்தால் நெஞ்சு சிலிர்க்கிறது.இன்னும் ஒரு கேள்வி.இந்த தத்துவத்தின் கான்ட்ரா,அதாவது நன்மை செய்தால் கெடுதலில் முடியும் என்பதும் உண்மையா?அப்ப பகுத்தறிவு வில்லன் கும்பல் கெடுதலே செய்யட்டும்,தமிழ்நாடு மேலும் மேலும் செழிக்கட்டும்.

பாலா

Anonymous said...

இந்த பதிவை கோபகிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சரவணன்

ezhil arasu said...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் (2)

(கொடுத்ததெல்லாம்)

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா


2.வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

3.கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை


4.புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதைக்
கேட்க யாரும் இல்ல தோழா

(புஞ்சை உண்டு)

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு



ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
?????
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா


என்ன டோண்டு சார் என் பங்குக்கு
கோபம் வேண்டாம் ஐயா.

இது தான் நடக்கப் போகிறது

வால்பையன் சார்
அதியமான் சார்

உங்கள் பின்னுட்டங்கள் பார்த்த பிறகு தொடர்கிறேன்

Anonymous said...

//யுத்தங்களினால் அழிந்த ஜெர்மனி, ஜப்பான் போன்றவை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டன. அச்சமயம் நல்ல டவுன் பிளானிங்கில் கட்டிடங்கள் கட்டி, சாலைகளை அமைக்க முடிந்தது. யுத்தம் வராதிருந்தால் அவற்றை செய்திருக்க முடியாது.//

நல்ல கருத்து டோண்டு.
உங்கள் வீட்டை ஏதாவது அரசியல் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கிவிட்டால்(அமெரிக்கர்கள் ஜப்பானில் செய்தது போல) நீங்களும் புது ப்ளான் போட்டு உங்கள் வீட்டை முனபு இருந்ததை விட அழகாக கட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்கிறீர்கள்,அப்படித்தானே?

கோமணகிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லையே கோமணகிருஷ்ணன், பாதி தெளிவுக்கு வந்து விட்டீர்கள்.

அதாகப்பட்டது, வீடு இடிந்தால் அதற்காக இடிந்து போகாது வேறுவீடு கட்டிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். வெறுமனே பதிவு போட்டு விட்டா சும்மா உட்கார முடியும்? அப்போது புது மோஸ்தரில் வீடு கட்டிக் கொள்வதும் ஒரு நன்மையே.

கீப் இட் அப், இப்படியே முன்னேறினால் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் முழுத் தெளிவு பெறுவீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், பின்னூட்டங்களை மட்டுறுத்துவதில் தாமதம் ஏற்படும். வந்தவுடனேயே செய்யப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உன் அறிவையும் திறனையும் பயன்படுத்து, முன்னேறு வாய்ப்புக்கள் ஏராளம் - புத்திக்கு சொல்வது புத்திமதி

உன்னை எல்லோரும் சுரண்டுகிறார்கள் புரட்சி செய்யப்போகிறோம் எங்களுடன் சேரு - உணர்ச்சியை தூண்டுவது

எதை நம்ம தமிழன் கேட்பான் என்று நினைக்கிறீர்கள் டோண்டு சார்..

சரவணன்

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Dondu Sir,

This story reminds me of a lesson that I had in 11th standard on the similar lines named "The man who saved pumpledrop". This story talks about a town called pumpledrop which had a severe economic slakness. A lunatic (basically from a well-to-do family) escapes from the asylum and walks in to a near by Rolls Royce showroom and books a top of the line trim asking for a christmas delivery. The story rolls further wherein every individual in the town is positively impacted by the booking and the money starts flowing again (The Butterfly effect). Though it is a buying spree that gets ignited, the story is almost on the same lines of what is being discussed.

Anonymous said...

//கீப் இட் அப், இப்படியே முன்னேறினால் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் முழுத் தெளிவு பெறுவீர்கள்.
//

எப்படி??
நீங்கள் ஐபிஎல்'ல் இருந்த 60 களில் முயற்சி தொடங்கி,சுமார் 40 வருடம் கழித்து 2008 ல் இப்போது 'முழுத்தெளிவு' அடைந்திருக்கிறீர்களே,அதைப் போலவா?

komanakirishnan

Anonymous said...

//யுத்தங்களினால் அழிந்த ஜெர்மனி, ஜப்பான் போன்றவை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டன. அச்சமயம் நல்ல டவுன் பிளானிங்கில் கட்டிடங்கள் கட்டி, சாலைகளை அமைக்க முடிந்தது. யுத்தம் வராதிருந்தால் அவற்றை செய்திருக்க முடியாது.//

டோண்டு சார்,

யுத்தம் இல்லாமல் சாலைகளை மற்றும் நகரத்தை அழகுபடுத்தி, சீர்படுத்தி இருக்க முடியாதா ?

நகரத்தை சீர்படுத்த யுத்தம் தேவையா ?


யுத்தம் நடந்ததால் நல்லது தான் என்று சொல்லும் பொது நீங்கள் செய்யும் தவறு என்னவென்றால். நீங்கள் புதிதாக அமைக்கபட்ட சாலைகளை தான் பார்க்கிறீர்கள், ஆனால் யுத்தத்தால் இழந்த பல லட்ச கணக்கான உயிர்களை மறந்துவிட்டீர்கள். யுத்தத்தால் எவ்வளோ J.K. ரோவ்லிங்-களை , எவ்வளோ டெண்டுல்கர்-களை, எவ்வளோ ரஜினிகாந்த்-களை இந்த உலகம் இழைந்தது என்று தெரியாது.

இதை தான் பொருளாதார மேதை Frédéric Bastiat, அவர்கள் "What is seen what is not seen" , கட்டுரையில் விளக்குகிறார்.

அந்த கட்டுரையின் லிங்க் இதோ:
http://www.econlib.org/library/Bastiat/basEss1.html

அவர் கூறுவது:

"And if we were to take into consideration what is not seen, because it is a negative factor, as well as what is seen, because it is a positive factor, we should understand that there is no benefit to industry in general or to national employment as a whole, whether windows are broken or not broken."


"ஜன்னல்களை உடைப்ப்தாலோ, உடைக்காமல் இருப்பதாலோ வேலை வாய்பிலோ அல்லது நாட்டின் பொருளாதாரதிர்க்கோ எந்த பயனும் இல்லை" என்று சொல்கிறார்.

dondu(#11168674346665545885) said...

//யுத்தம் நடந்ததால் நல்லது தான் என்று சொல்லும் போது..//

நான் எங்கு அவ்வாறு சொன்னேன். இப்பதிவில் சுட்டப்பட்ட கட்டுரையின் தளத்திலிருந்து சற்றே விலகி நான் எப்போதும் கூறுவதையேதான் கூறினேன். வந்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் முக்கியம்.

//யுத்தம் இல்லாமல் சாலைகளை மற்றும் நகரத்தை அழகுபடுத்தி, சீர்படுத்தி இருக்க முடியாதா?//
அதற்கு மிகவும் பாடுபட வேண்டியிருக்கும், மோட்டிவேஷனும் இருந்திருக்காது. யுத்த நேரங்களில் அட்ரெனலின் சுரப்பது போல மற்ற நேரங்களில் அதன் தேவை அவ்வாளவாக இல்லாததால் சுரப்பதில்லை என்பதுதான் உண்மை.

நான் எங்குமே யுத்தம் வந்தது நல்லது எனக் கூறவில்லை. அது செயல்பாடுகளை தூண்டி நல்லது நடந்தது என்பதுவும் நிஜம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நீங்கள் ஐடிபிஎல்'ல் இருந்த 60 களில் முயற்சி தொடங்கி,சுமார் 40 வருடம் கழித்து 2008 ல் இப்போது 'முழுத்தெளிவு' அடைந்திருக்கிறீர்களே,அதைப் போலவா?//
அப்படியாவது நான் இப்போது முழுத் தெளிவில் இருப்பதை ஒத்து கொண்டீர்களே, அது போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நான் எங்குமே யுத்தம் வந்தது நல்லது எனக் கூறவில்லை. அது செயல்பாடுகளை தூண்டி நல்லது நடந்தது என்பதுவும் நிஜம்தானே.//


மன்னிக்கவும் சார் சிறு தவறு நடந்துவிட்டது. யுத்தம் நல்லது என்று நீங்கள் சொல்லவில்லை.

நகரம் சீரமைந்தது நல்லது என்றால் அதற்கு நாம் கொடுத்த விலை என்ன ?
விலை மிக அதிகம். ஆதலால் பயன் மிக குறைவே.

நான் கூற வரும் பாயின்ட்.Frédéric Bastiat, அவர்கள் சொன்னதே.

"And if we were to take into consideration what is not seen, because it is a negative factor, as well as what is seen, because it is a positive factor, we should understand that there is no benefit to industry in general or to national employment as a whole, whether windows are broken or not broken." (or whether wars happen or don't happen)

"யுத்தம் நடந்தாலோ , நடைபெறாமல் இருந்தாலோ வேலை வாய்பிலோ அல்லது நாட்டின் பொருளாதாரதிர்க்கோ எந்த பயனும் இல்லை."

dondu(#11168674346665545885) said...

//நகரம் சீரமைந்தது நல்லது என்றால் அதற்கு நாம் கொடுத்த விலை என்ன ?
விலை மிக அதிகம். ஆதலால் பயன் மிக குறைவே.//
விலை குறைவு என்று கூட கூறவில்லை. ஆனால் ஏற்கனவே நம்மிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டது, குறைவாக இருக்கிறது என்பதனால் பயனை எடுக்காது இருக்க இயலுமா? வா ஃபைட் வெச்சுக்கலாம் என்று போனால்தான் தவறு.

பல ஆயுத உற்பத்தியாளர்கள் அதைத்தான் செய்வதாக எனது அபிமான எழுத்தாளர் Taylor Caldwell Dynasty of Death, Where eagle gather மற்றும் The final hour என்னும் மூன்று நாவல்கள் கொண்ட ட்ரையாலஜியில் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஆனால் ஏற்கனவே நம்மிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டது, குறைவாக இருக்கிறது என்பதனால் பயனை எடுக்காது இருக்க இயலுமா?//

அந்த பயன் பெறுவதற்கு கொடுத்த விலை மிக மிக அதிகம். தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதனால், அதனை விலையில் இருந்து நீக்க முடியாது.

//
வா ஃபைட் வெச்சுக்கலாம் என்று போனால்தான் தவறு... பல ஆயுத உற்பத்தியாளர்கள் அதைத்தான் செய்வதாக எனது அபிமான எழுத்தாளர...குற்றம் சாட்டியுள்ளார்.
//

தனிபட்ட நபர்களுக்கோ, கம்பெனிகளுக்கோ நன்மை இருக்கலாம். ஒரு நாட்டின் மீது இருக்கும் தாக்கம்.... கூட்டி கழித்து பார்த்தல் சைபர் என்றுதான் சொல்லவேண்டும்.

dondu(#11168674346665545885) said...

//தனிபட்ட நபர்களுக்கோ, கம்பெனிகளுக்கோ நன்மை இருக்கலாம். ஒரு நாட்டின் மீது இருக்கும் தாக்கம்.... கூட்டி கழித்து பார்த்தல் சைபர் என்றுதான் சொல்லவேண்டும்.//
100 % உண்மை.

Taylor Caldwell எழுதிய Dynasty of Death புதினத்தி இது சுவையாகக் கூறப்படுகிறது. முதல் உலக மகாயுத்தம் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும்போது ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்தில் அவ்வப்போது மீட்டிங் போட்டு குலவி வந்தனர் என ஆசிரியை எழுதுகிறார்.

என்ன செய்வது, அதுதான் உலகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.நாஸ்டர் தாம்ஸ் பற்றி?

2.அவர் சொன்னதிl நடந்ததில் எது பெரிது?

3. சொல்லி நடக்காதது?

4.இனி நடக்கப் போவது என்று உலக்ம் எதை எதிர் பார்க்கிறது?

5." ஆண்டி கிரைஸ்ட்" என்றார்களே?

6.மிஸ்மர் பற்றி?

7.மெச்மரிசம் நம்புகிறிர்களா?

8.யூரிகெல்லரின் ஹிப்னாடிசம் பற்றி?

9.நமது ஆரியப்பட்டரின் கருத்துகள் பற்றி?

10.நமது வராஹமிகிரர் பற்றி?

11.கைரேகை அறிவியல் சார்ந்ததா?

12.விதியை மதியால் வெல்லலாம் -இது ஜோதிட சாஸ்திரத்தோடு ஒப்பிட்டு கருத்து சொல்லவும்?

Jay said...

destroying resources makes societies poorer, not richer.

more here:
Broken Glass Everywhere
http://mises.org/story/3044

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது