எபிசோட் - 12 (04.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டுக்கு பர்வதம் வருகிறாள். வசுமதி தன் தோழி மைதிலி வீட்டுக்கு போயிருப்பதாக சமையற்கார மாமி சொல்கிறாள். அதற்குள் நாதனே கீழே இறங்கிவருகிறார். பர்வதத்தைப் பார்த்ததும் வசுவுக்கு ஃபோன் செய்து பர்வதம் வந்ததைத் தெரிவிக்கிறார். வசுமதி தான் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் எனக்கூறிவிட, பர்வதம் பிறகு வருவதாக கிளம்புகிறாள். நாதன் அவளை நிறுத்தி பேச ஆரம்பிக்கிறார்.
பர்வதம் வீட்டு விசேஷத்தில் அசோக்குக்கும் வேம்பு சாஸ்திரிகளுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை குறிப்பிட்டு நீலகண்டனும் பர்வதமும் அதை தடுத்து நிறுத்தவில்லை என நாதன் கோபப்படுகிறார். முதலில் சமாதானம் சொல்ல முற்பட்ட பர்வதம், நாதனாலேயே அவர் பிள்ளையை கண்ட்ரோல்செய்யவியலாதபோது தங்களை குற்றம் கூறுவது சரியில்லை என்கிறாள். மனத்தாங்கலுடன் அவள் நாதன் வீட்டை விட்டு புறப்படுகிறாள்.
வீட்டுக்கு வந்ததும் பர்வதம் தனது கணவனிடம் நாதன் வீட்டில் நடந்ததைக் கூற, நீலக்ண்டனும் கோபப்படுகிறார். நாதனுடன் சண்டை போடுவதற்காக போன் செய்ய் முயலும்போது பர்வதம் அவரைத் தடுக்கிறாள். அதெல்லாம் வேண்டாம், அடுத்த நாள் காலையில் நாதனே கூல் ஆகிவிடுவார் அப்போது அவரே மன்னிப்பு கேட்பார் என்று பர்வதம் கூறிக்கொண்டிருக்கும்போதே நாதனிடமிருந்து செல்பேசியில் கால் வருகிறது. டிஸ்ப்ளேயிலிருந்து பார்த்து அது நாதன் என பர்வதம் கூற நீலக்ண்டன் தான் இல்லை என்றுகூறும்படி பர்வதத்தைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் அவள் ஒத்துக் கொள்ளாமல் ஃபோனை நீலகண்டனிடமே தர, அவரும் கோபத்தையெல்லாம் மறந்து நாதனுடன் குழைந்து பேசுகிறார். பர்வதம் ஜாடை காட்டி அவரை கேலி செய்கிறாள்.
சிறிது நேரம் கழித்து வசுமதியிடமிருந்தே ஃபோன் வர, இப்போது நீலகண்டனின் முறை பர்வதத்தை மாட்டிவிட. சர்றே காமெடி ரிலீஃப் இந்த சீனில்.
சாம்பு சாஸ்திரிகளின் ஆசியுடன் அவரிடமிருந்து பிட்சை பாத்திரம் பெற்று அசோக் செல்கிறான். சாம்புவின் குடும்பத்தார் அவன் செல்வதை பிரமிப்புடன் நோக்குகின்றனர். பின்னணியில் “வேதகோஷம், வேதகோஷம் வேண்டும் பொருள் என்னவோ” எனத் துவங்கும் சீரியலின் டைட்டில் பாட்டு கம்பீரமாக ஒலிக்கிறது. மிகவும் பொருத்தமான சேர்க்கை.
ஏதோ என்னால் ஆனது, பாடலின் முழுவரிகளையும் இங்கே தருகிறேன்:
வேத கோஷம் வேத கோஷம் வேண்டும் பொருள் என்னவோ!
யோகம் வாழ்க லோகம் வாழ்க எண்ணும் வரம் அல்லவோ!
நடைபெறும் துன்பம் மெல்ல விடைபெறும் என்றே சொல்ல யாரும் உரியவரோ...
இடைவரும் காலம் மெல்ல இனியவை யாவும் செய்ய யாரும் உரியவரோ..
அவரடி தேடித் தேடி நானும் போனால் ஷாந்தி ஷாந்தியடா
இதிலொரு பாவம் ஏது?!
வேதம் என்றால் மனித நேயமடா!
செடியும் கொடியும் செழித்திடும் கனியும் விளைந்திடவே, பணியும் வரமே வேண்டுகிறோம்.
ஜனமும் மனமும் விலங்குகள் இனமும் நலம் பெறவே, தினமும் திருவை தேடுகிறோம்
போதும் சூது தீது வன்முறை பாதை மாறிடவே..
அலை மோதும்போது நெஞ்சமே அலை ஓய்ந்து தூங்கிடுவே..
இணக்கம் பிறக்க இதயம் திறக்க இறைவன் அடி விருந்தே (???)
(singer : Doctor. k. narayanan
lyricist: doctor. Kruthiya
music: Rajesh vaidhya )
அசோக்கின் முதல் நாள் அனுபவம் உத்சாகம் அளிப்பதாக இல்லை. ஓரிடத்திலும் பிட்சை கிடைக்கவில்லை. கடைசியில் உமா வீட்டுக்கு வர அவள் பிட்சை எடுத்துவர செல்கிறாள். அப்போது அங்கு வரும் அவள் கணவன் ரமேஷ் அசோக்கை இது என்ன கோமாளி வேஷம் என்று கேட்டு கேலி செய்கிறான். அசோக் இம்மாதிரி செய்தால் யாரும் அவனை மதிக்க மாட்டார்கள், தானே அவனை மதிக்கப்போவதில்க்லை எனவும் ரமேஷ் கூற, மற்றவர்கள் மதிப்புக்காக தான் காரியம் செய்பவன் அல்ல என்பதை அசோக் திட்டவட்டமாகக் கூறுகிறான். அசோக்குக்கு இந்துமதத்தைப் பற்றி ஆழ்ந்த ஞானம் இருக்க அதை அமெரிக்காவிற்கு சாமியாரக வேஷம் இட்டுச்சென்று காசாக்க பல ஆலோசனைகள் ரமேஷ் தருகிறான்.
“அப்படித்தானே பல சாமியார்கள் செய்கிறார்கள்” என சோவின் நண்பர் கேட்கிறார். ஆம் என ஒத்துக் கொள்கிறார் சோ. எல்லாவற்றிலும் போலிகள் வந்துவிட்டனர். போலி டாக்டர், போலி வக்கீல்கள் என்றெல்லாம் இருப்பதுபோல போலி சாமியார்களும் உள்ளனர். ஆதி சங்கரரே போலி சாமியார்கள் பர்றி மக்களை எச்சரிக்கை செய்துள்ளார் எனவும் சோ கூறுகிறார். போலி டாக்டர்களோ அல்லது போலி வக்கில்கள் இருப்பதால் மட்டும் இனிமேல் டாக்டரிடம் போக மாட்டேன், வக்கீலிடம் போக மாட்டேன் என கூறவியலாதுதானே. அதே போலத்தான் நல்ல குருவை நாம்தான் கண்டுபிடித்து போக வேண்டும். ஞான மார்க்கத்தில் செல்ல ஒரு நல்ல குரு அவசியமே என சொல்கிறார் சோ அவர்கள்.
ரமேஷ் கூறுவதையெல்லாம் புன்னகையுடன் மறுக்கிறான் அசோக். அவன் அவ்வாறு இருந்தால் அவனை யாரும் பிரும்மச்சாரி என ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பிட்சை எடுப்பதால் பிச்சைக்காரன் என்றுதான் கூறுவார்கள் எனவும் ரமேஷ் கூறுகிறான். அசோக் பிட்சை பெற்று புறப்பட்டுச் செல்கிறான். உமாவிடம் அவள் இனிமேல் அசோக்குக்கு பிட்சை போடக்கூடாது என ரமேஷ் கூறுகிறான்.
அசோக் தனக்கு கிடைத்த பிட்சையை சாம்புவிடம் அளித்து அவரின் ஆசியுடன் அதைப் பெற்று உண்கிறான். சாம்பு சாஸ்திரியின் மகள் தன் சகோதரனிடம் அசோக் என்ன செய்கிறான் எனக் கேட்க, அசோக் பிட்சை எடுத்து உண்டு பிரும்மச்சரியம் கடைபிடிக்கிறான் எனக் கூறுகிறான். பிரும்மச்சாரின்னாக்க பிட்சை எடுக்கணுமா என சாம்புவின் மகள் கேட்கிறாள்.
அதே கேள்வியை சோவின் நண்பர் வைக்க சோ அழுத்தம் திருத்தமாக ஆமாம் என்கிறார். பூணல் போடும் சமயம் பிட்சை அடுத்துத்தான் ஒரு பிரும்மச்சாரி உண்ண வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்படுகிறது. அது தன்னடக்கத்தை பேணுகிறது என்கிறார் சோ.
(தேடுவோம்)
எபிசோட் - 13 (05.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்புவின் வீட்டில் அவரிடம் தான் உணவு உண்டுவிட்டதாகவும் தான் வேதபாடசாலை வரை சென்றுவிட்டு வருவதாகக் கூறி அவரிடம் அனுமதி பெற்று செல்கிறான். சாம்புவும் தான் அசோக்கின் வீட்டு பூஜைக்கு போக வேண்டும் என அவனிடம் கூறுகிறார்.
சாம்புவின் மகள் ஆர்த்தி தன் அண்ணனிடம் அசோக் இவ்வாறெல்லாம் செய்யும்போது அதே நியமம்தானே அவனுக்கும், அவன் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என கேட்கிறாள். தனக்கு இத்ற்கான பதில் தெரியவில்லை என கூறிவிட்டு தன் தந்தையிடமும் இது பற்றிக் கேட்கிறான். அவரோ அசோக் செல்லும் பாதை எல்லாரும் செல்ல முடியாது எனக்கூற, அவர் மனைவியும் அதை ஆமோதிக்கிறாள்.
சோ அவர்களும் இதை கீதையிலிருந்து உதாரணத்துடன் விளக்குகிறார். சாம்பு மேலே பேசுகையில் தான் தனது புதல்வர்கள் புரோகிதத்தில் ஈடுபடுவார்கள் என எப்போதுமே நினைத்ததில்லை எனக்கூறுகிறார்.
சோ அவர்கள் புரோகிதர்களது இம்முடிவை புரிதலுடன் விளக்குகிறார். ஏனெனில் இத்தொழிலில் வருமானம் இல்லை, முன்பிருந்த கௌரவமும் இல்லை ஆகவே புரோகிதர்கள் இம்மாதிரி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு. அப்படியிருந்தும் தொழில் செய்யும் புரோகிதர்கள் வணக்கத்துக்குரியவர்களே. புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை. ஆனால் புரோகிதர் அதையும் செய்கிறார் என்கிறார் சோ.
அசோக்கின் வீட்டில் அவன் தனது ஆத்தில் இருந்து குருகுல வாசம் செய்வதை தான் கூறப்போவதாக சாம்பு கூற, அவர் மனைவி அவரை தடுக்கப் பார்க்கிறாள். பிறகு அவளும் ஒத்துக்கொள்கிறாள்.
கோவிலில் நீலகண்டனும் பர்வதமும் இருக்கின்றனர். பர்வதத்துக்கு உமாவிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வருகிறது. உமா அவளிடம் அசோக் தங்கள் வீட்டுக்கு பிட்சை கேட்க வந்தது பற்றி கூறுகிறாள். நீலகண்டன் அதைக் கேட்டு வருத்தப்படுகிறார். எது எப்படியானாலும் நாதனுக்கு இது பற்றிய விவரங்கள் தங்கள் மூலமாகத் தெரிய வேண்டாம் என முடிவு எடுக்கிறார்.
இம்மாதிரி கோவிலில் செல்பேசியெல்லாம் வைத்து பேசலாமா என சோவின் நண்பர் கேட்க, அது தவறு என சோ அழுத்தம்திருத்தமாகக் கூறுகிறார். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் விவரிக்கிறார். பிரதிட்சணம் எப்படி செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது, செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்குகிறார்.
நாதன் அலுவலகத்துக்கு கிளம்பும் சமயம் சாம்பு சாஸ்திரிகள் அவரிடம் வந்து ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக்கூற, அவரோ வசுமதியிடம் அதுபற்றி பேசுமாறு கூறிவிட்டு சென்றுவிடுகிறார். சாம்பு சாஸ்திரிகள் வசுமதியிடம் அசோக் தன் வீட்டில்தான் இருக்கிறான் எனக்கூற, முதலில் சந்தோஷப்படும் அவள் முழுவிவரம் கேட்டதும் கோபப்படுகிறாள். சாம்பு சாஸ்திரிகளை கண்டபடி ஏசிவிட்டு அவர் குடும்பம் பற்றி போலீசில் புகார் செய்யப்போவதாகவும் கூறிவிட்டு, இனிமேல் தங்களாத்து பூஜைக்கு அவர் வேண்டாம் என்றும் கூறிவிடுகிறாள்.
(தேடுவோம்)
இப்போதுதான் இந்த சீரியல் அதனுடைய முக்கியமான நோக்கத்தை நோக்கிச் செல்கிறது. அசோக் வசிஷ்டர் அம்சம்தான். ஆகவே அவனால் இந்தத் தேடலை செய்ய முடியும் என்பதும் உண்மையே. ஆனாலும் இனிமேல்தான் அவனுக்கு பல சோதனைகள் வரப்போகின்றன. பல இடங்களிலிருந்து புரிதலின்மையும் அவமானங்களும் வரும் என அஞ்சுகிறேன். ஆனால் அவன் புடம் போட்ட பொன்னாக வருவான் என்பதையும் பார்க்கலாம்.
எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன்முடிய இரவு எட்டு முதல் எட்டரை வரை ஜெயா டிவியில் காட்டப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
17 hours ago
2 comments:
டோண்டு அவர்களே, நன்றி.
தேதியை மட்டும் திருத்தவும்.
ஸ்ரீதர்
மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-1
--தமிழ் ஓவியா
மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-2--சங்கமித்திரன்
What happend....It seems big confusion for him. Mr.DOndu..can you shed some light.
Post a Comment