எபிசோட் - 14 (06.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வீடு வந்து சேர்ந்த சாம்பு சாஸ்திரிகள் தன் மனைவி செல்லம்மாவிடம் நாதன் வீட்டில் வசுமதி தன்னிடம் போலீசுக்கு போவதாகச் சொல்லி மிரட்டியதை கூறுகிறார். அவர்கள் பொல்லாப்பு வேண்டாம், பேசாமால் அசோக்குடனேயே இது பற்றி பேசிவிடலாம் என சாம்பு முடிவு செய்யும்போது அசோக் அங்கு வந்து சேருகிறான். அவனிடம் நடந்ததைக் கூற, அவன் தானே தன் வீட்டுக்கு போய் பேசுவதாகக் கூறி செல்கிறான்.
வசுமதி கோவிலுக்கு போகப் போகும் தருணத்தில் அசோக் வந்து சேர்கிறான். வசுமதி மகிழ்கிறாள். நாதன் அவனிடம் அன்று அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என அவள் கூற, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என அவன் கூறுகிறான். “இது பகவத் கீதையில் வரதுன்னு நான் படிச்சிருக்கேன்” என சோவின் நண்பர் உடனே கூற, அப்படியெல்லாம் இல்லை, பகவத் கீதையில் அவ்வாறு கூறவில்லை என சோ ஒரு போடு போடுகிறார். மேலே அது பற்றிக் கூறவில்லை. அப்புறமாக கூறுவாராக இருக்கும்.
நடந்ததை மாற்ற முடியாது, தவிர்க்க முடியாததை ஏற்றே ஆகவேண்டும் என்றெல்லாம் விளக்கிக் கூறுகிறான் அசோக். சாம்பு வீட்டில் தான் தங்கி அவருக்கு சிசுருஷை செய்து குருகுலவாசம் கடைபிடிப்பதாக அவன் கூற, இக்காலத்தில் இம்மாதிரி ஏன் பின்னோக்கி போக வேண்டும் என வசுமதி அவனைக் கேட்கிறாள். காரில் ஒரு தவறான பாதையில் டிரைவ் செய்து, பிறகு ரிவர்ஸ் எடுப்பது போலத்தான் இது என அசோக் விளக்குகிறான். மேலும், தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே சாம்பு சாஸ்திரிகளை அணுகியதாகவும், ஆகவே அவரை போலீசைக் காட்டி மிரட்டுதல் வசுமதி செய்யக்கூடாதது எனவும் கூறி விட்டு அவளது ஆசியுடன் கிளம்புகிறான்.
என்ன இம்மாதிரி ஆகிவிட்டதே என சமையற்காரமாமியும் வசுவும் பேசுகிறார்கள். கடைசியில் நாதனுக்கு இப்போது எதையும் கூற வேண்டாமென வசுமதி முடிவு செய்து அதையும் சமையற்கார மாமியிடம் கூறுகிறாள்.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்த அசோக் அவரிடமும் செல்லம்மாவிடமும் தான் அழுத்தமாகவே பேசிவிட்டு வந்திருப்பதாகவும், இனிமேல் தன் பெற்றோர் தரப்பிலிருந்து சாம்புவுக்கு ஒரு தொந்திரவும் கிடையாது என்று கூறிவிட்டு அப்பால் நகர்கிறான். தனக்கு வேலைபோன விஷயத்தை சாம்பு அசோக்கிடம் கூறவில்லை.
சாம்புவை பார்க்க வேம்பு வருகிறார். அசோக் இவ்வளவு சீரியசாக போவான் என்பதை தான் எதிர்ப்பார்க்கவில்லை என அவர் கூறுகிறார். அவனது மன உறுதி அவன் வயதில் இருந்தபோது தங்களுக்கு ஏன் இல்லை என அவர் திகைக்க, அசோக் ஒரு உதாரண புருஷன், அவன் செய்வது லட்சத்தில் ஒருவர் கூட செய்ய மாட்டார்கள். வர்ண ரீதியான பிராமணனாக அவன் மாற நினைத்து முயற்சி செய்கிறான் என சாம்பு பதில் கூறுகிறார். அதில் அவன் வெற்றி பெறுவானா என்ற வேம்புவின் கேள்விக்கு எல்லா பெரிய காரியங்களை துவக்கும் போதும் இம்மாதிரியான கேள்விகள் வருவது ச்கஜம் என சாம்பு கூறுகிறார். அதில் வெற்றி பெற்றால் அவன் ஒரு உதாரண புருஷன் என சாம்பு கூற, வெற்றி பெறாவிட்டால் என்னவாகும் என சந்தேகத்தைக் கிளப்புகிறார் வேம்பு.
அப்போதும் அவன் உதாரண புருஷனே, ஏனெனில் இதுவரை யாரும் முயற்சிக்காத காரியத்தை அவன் செய்யத் துணிவதே அது சம்பந்தமட்டில் செயற்கரியச் செயலே என சாம்பு கூறுகிறார்.
“அதெப்படி சார், வெற்றி பெற்றாலும் உதாரண புருஷன் இல்லாவிட்டாலும் உதாரண புருஷன், இதில் லாஜிக் இல்லையே” என சோவின் நண்பர் கேட்கிறார். அது அப்படியில்லை, இம்மாதிரியான கேள்விக்கு பகவத் கீதையில் கண்ணனும் அதே பதிலைத்தான் கூறுகிறார் என சோ விளக்குகிறார். யோக மார்க்கத்தை வேண்டி பக்தி மார்க்கத்தை விடுபவன், நல்ல முயற்சிக்கு பிறகும் அதில் வெர்றி பெறவில்லையென்றாலும், அவன் செய்த முயற்சிக்காக நற்கதியே பெற்று, அடுத்து வரும் பிறப்புகளில் ஏற்றம் பெறுவான் என சோ அவர்கள் விளக்குகிறார்.
வசுமதி நாதனிடம் மேம்போக்காக அசோக் வந்து போனதை கூறுகிறாள். அவள் எதிர்ப்பார்ப்பது போல நாதன் சாம்பு மேல் கோபப்படாமல், அப்படியாவது அவர் வீட்டிலேயே இருந்தால் அவர் அசோக்கை பார்த்து கொள்வார் என கூறி, தங்கள் வீட்டுக்கு புரோகிதர்தானே சாம்பு, அவரிடம் அசோக் பற்றி விசாரித்துக் கொண்டால் போகிறது எனக் கூற, வசுமதி பேய்முழி முழிக்கிறாள். தான் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய விஷயத்தை அவள் கூறவில்லை.
சாம்பு சாஸ்திரிகளின் சம்பந்தி ஜட்ஜ் வீட்டில் அவர் மனைவி அசோக்கை பற்றி கேலியாக பேசுகிறாள். சாம்பு செய்தது பைத்தியக்காரத்தனம், அவர் வீட்டில் வயது பெண் இருக்க அங்கு அசோக்கை வைப்பது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூற, ஜட்ஜ் அவளை அம்மாதிரியெல்லாம் சாம்பு வீட்டார் விஷயத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியும் அந்த மாது சிரோன்மணி கேட்பதாக இல்லை. சாம்புவின் மரியாதையை அவளால் காப்பாற்ற முடியாது, என ஜ்ட்ஜ் கூற, ஏன் முடியாது என சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார்.
(தேடுவோம்)
எபிசோட் - 15 (07.01.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
நண்பரின் கேள்விக்கு சோ அவர்கள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக அது நடக்காத காரியம் என்கிறார். அவரவர் உயர்வுக்கோ தாழ்வுக்கோ அவரவரே பொறுப்பு, இதி மற்றவரால் ஒன்றும் செய்யவியலாது. இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்,
"தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!"
என்று குறிப்பிடுகிறார்.
நாதனின் அலுவலகத்துக்கு சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். அவரிடம் தனது நிலை பற்றிய விளக்கம் அளிகிறார். நாதனும் புரிந்து கொள்கிறார். பிறகு குருகுலம் என்றால் என்ன என்பதையும் சாம்புவிடம் அவர் கேட்கிறார்.
அதையே சோவின் நண்பரும் கேட்க, சோ குருகுலவாசம் என்றால் குருவின் வீட்டிலேயே தங்கி அவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் கற்பிப்பது, நடத்தை ஆகியவற்றைப் பார்த்து கற்று கொள்வது என்பதெல்லாம் செய்வது. இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பிடிக்கும். ஒரே குரு என்று கட்டாயமும் இல்லை. பல விஷயங்களுக்கு பல குருக்கள். கற்றுக் கொள்வது சிஷ்யனின் திறமையைப் பொருத்து அமையும். ஒரு ஸ்படிகத்தின் ஊடே ஒளியை செலுத்தினால் அது பிரகாசிக்கும், அதுவே மண்ணாங்கட்டி மேல் ஒளியை செலுத்தி என்ன பயன்? லவகுசர்களின் குருகுலவாசத்தின் போது ஆத்ரேயீ என்னும் பெயருடைய அவர்களது சகமாணவி கூறியதையும் இந்த விஷயத்தில் சோ எடுத்துரைக்கிறார்.
எல்லா விளக்கங்களை கேட்டு நாதன் தெளிவு பெற்றாலும் அவரது தந்தைப்பாசம் அவரை கலங்கச் செய்கிறது. சாம்பு அவர்களுக்கு பணம் அளிக்க முன்வரும்போது அவர் மறுத்து விடுகிறார்.
ஒரு பேக்கரி கடையில் அரசியல்வாதி வையாபுரியின் தோற்றமுடைய ஒருவர் பிரெட் வாங்குவதை அடியாள் சிங்காரம் பார்க்கிறான். கடைக்கருகில் ஓடி வரும்போது அந்த மனிதரைக் காணவில்லை.
ஜட்ஜ் வீட்டில் அவரது மாப்பிள்ளை கிருபா அமர்ந்திருக்கிறான். அவனது மாமியார் பிரியாவை தபால் படிப்பு மூலம் சட்டம் படிக்க வைத்ததை சிலாகித்து பேசுகிறாள். அவள் ஜூனியராக பணி புரிய நல்ல லாயர் தேவை எனக் கூற, ஜட்ஜ் அதற்கு ஆவன செய்வதாகக் கூறுகிறார்.
நாதன் வீட்டில் நாதன் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். வசுமதியிடம் அவர் முந்தைய நாளன்று சாம்பு சாஸ்திரிகள் அவரைப் பார்க்க அலுவலகம் வந்ததாகக் கூறுகிறார். வசுமதியிடம் குருகுல வாசத்தின் முழுவிவரங்களைக் கூறாமல் பூசி மெழுகுகிறார். வசுமதி தங்கள் வீட்டிலிருந்து தினசரி அசோக்குக்கு சாப்பாடு அனுப்பப் போவதாகக் கூற, அவர் மென்று விழுங்குகிறார். வசுமதிக்கு இன்னமும் அசோக் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் உள்ளதை மென்று விழுங்கி விடுகிறார்.
நாதன் வெளியே கிளம்பும் சமயம் ஓடிவரும் சிங்காரம் வையாபுரி இன்னும் சாகவில்லை எனக் கூறுகிறான்.
(தேடுவோம்)
எங்கே பிராமணன் பார்ட் - 2 ஜெயா டிவியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
3 comments:
இந்த பிரபலங்கள் இப்போது?
1.முன்னாள் மாணவர் திமுக மாநில அமைப்பாளர் திருவாளர் எல்.ஜி
2.கர்மவீரரை வென்ற மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன்?
3.முன்னாள் நகைச்சுவை மன்னர்களில் சிறப்பான ஜனக்ராஜ்
4.முன்னாள் தமிழக சபாநாயகர் தமிழ்க்குடிமகன்
5.புன்னகை அரசி கேஆர்விஜயா
6.தேவர் பிலிம்ஸ் வெற்றி இயக்குணர் எமஏதிருமுகம்
7.பாம்பாய் சினிமா புகழ் அழகன் அரவிந்த சாமி
8.மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன்
9.நகைச்சுவையில் வடிவேலுவுடன் கல்ககிய கோவை சரளா
10.மூலிகை பெட்ரோல் ராமர்
All Gentlemen,
I request all of your attention on an important humanaitarian issue.
//மலேசியாவில் வாழும் ரேவதி என்ற மலேசியர், மத வெறி அடிப்படையில் கொடுமைப் படுத்தப் படுகிறார்.
ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார்.
முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்’ ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் – குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள்.
ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது.//
Kindly refere the below article
http://www.tamilhindu.com/2010/01/malaysian-hindu-women-fight-for-rights/
அய்யா,
"எங்கே ப்ராமணன்" தொடரில் அங்கங்கே வரக்கூடிய இந்த பாடல்
----
"ப்ரம்மனின் தவத்தினால் பிறந்தவனாம்
பேரருள் கொண்ட வாசிஷ்ட முனி"
----
பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது? முழுப்பாடல் online-ல் உள்ளதா? Link please.
Post a Comment