1/10/2010

சூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 2

மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.

முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே

மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 2)

ரோஜாக்களின் எழுச்சி - 2

ஒன்று தெளிவாக புரிந்தது. ஜெஸ்டஸை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் எப்போது சென்றாலும் எனக்குள்ளே செயல்பட்ட ராடார் என்னை கைவிட்டதேயில்லை. அந்த குகையை கண்டுபிடிப்பதில் எந்தவித சிரமும் இல்லை. அதை அடையும் முன்னரே அவரது விடாத சிரிப்பொலிகள் கேட்டவண்ணம் இருந்தன. சுற்றியிருந்த பாறைகள் அந்த சிரிப்பொலிகளை எதிரொலித்தன. காட்டிலுள்ள மரங்கள் அவற்றுடன் ஒத்திசைவாக ஆடின. பறவைகளின் கீச்சு கீச்சு என்னும் ஒலிகள் கேட்டன. சுற்றிலும் வேறுயாரும் இல்லை.

எனது காலடிசப்தம் கேட்டு அவர் சற்றே நிதானித்தார். அவர் இருக்குமிடத்தை அடைந்து, அவரை வணங்கி சப்பணம் போட்டு அமர்ந்தேன். ஒரு நாஜி சல்யூட்டை தமாஷாக வைத்து “ஹைல் ஹாட்டர், என்ன சமாச்சாரம்” என்று கேட்டார்.

நான் புன்னகையுடன் கூறினேன் “பாகஸ், நீங்க கூகளண்ணன் மாதிரி. உங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சுருக்கே”
பாகஸ்: “எனக்குத்தான் எல்லாம் தெரியும்னாக்க, அப்ப நாம ஏன் பேசணும்? இப்பவே நீ திரும்பிப் போலாமே”.
நான்: “ஐயா வணக்கத்துக்குரியவரே, நான் ஒரு மரியாதைக்காக அப்படி சொன்னேன்”
அவர்: “அதாவது எனக்கு எல்லாம் தெரியுங்கறத நீ நம்பலை, அப்படித்தானே”?

அப்படீன்னா அப்படி, இப்படீன்னா இப்படின்னு பேசினா என்ன பண்ணறது. நான் நெளியறதையும் என் முகம் போன போக்கையும் பார்த்து அவருக்கு சிரிப்பு வந்தது. பரவாயில்லை என்று சொல்வது போல என் தோளில் தட்டினார். லாஃபன்ஷ்டைனோட பேசியெல்லாம் ஜெயிக்க முடியாது. அதே சமயம் அவரை விரும்பாமலும் இருக்க முடியாது. அவர் பைத்தியமா இருக்கலாம். ஆனால் உங்களையும் அவர் பைத்தியமாக்கி விடுவார். கடைசியில நீங்க அவர் மேல பைத்தியமாவதுதான் நடக்கும்.

தன் முதுகின் பக்கத்திலிருந்து இரண்டு கல் டம்ளர்களை எடுத்தார். ரெண்டுலேயும் குளிர்ந்த ஆரஞ்சு ஜூஸ் இருந்தது. ஒரு டம்ளரை என்னிடம் நீட்டினார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். இருவரும் ஜூஸ் குடிக்க ஆரம்பித்தோம். அவர் நிதானமாக அனுபவித்து சிப் செய்தார். நானோ மடமடவென குடித்து விட்டு காலி டம்ளரை கீழே வைத்த பிறகும் அவர் ஒவ்வொரு சொட்டாக அனுபவித்து குடித்து கொண்டிருந்தார். நான் அதற்குள் அவரிடம் எனது அண்டைவீட்டார் தரும் செல்பேசி தொந்திரவுகள் பற்றி ஒன்றுவிடாமல் கூறி முடித்தேன். எனது கையறு நிலையையும் விளக்கினேன்.

“பாகஸ், இதெல்லாம் கடைசி ஒரு வருஷமா அனுபவிக்கிறேன். இப்ப முடியல. உங்க கிட்டே ஆறுதலுக்காக வந்தேன்”. ஒன்றும் பேசாமல் ஒரு நிமிடம் என்னையே பார்த்தார். பிறகு சொன்னார்,
“பேசாம வீட்டை மாத்தறதுதானே”
“இந்த ஊர்ல நான் இருக்கற வரைக்கும் அது நடக்காது. இங்கே இதை விட குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்காது. அதிக வாடகை எனக்கு கட்டுப்படியாகாது”.
“இது பத்தி அண்டை வீட்டாரிடம் பேசறதுதானே? நீ படற கஷ்டத்தையும் அவங்ககிட்டே சொல்லறதுதானே”?
“ஐயா லாஃப்டாகஸ், அதை நான் பண்ணாம இருப்பேனா? இந்த ஊர்க்காரங்க கிட்டேயெல்லாம் பேச முடியாது. சைரன் மாதிரி கத்தற அந்த பக்கத்து வீட்டு பெண் கிட்டே பேசிப் பார்த்தேன். அவளோட செல்பேசியால எனக்கு வர தொல்லைகளையெல்லாம் பட்டியல் போட்டேன். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. முதல்ல என்னை முழுக்க முழுக்க இக்னோர் செஞ்சா. நான் விடாமல் பேசறத பார்த்து வீட்டுக்குள்ளே போய் படாரென கதவை சாத்திக்கிட்டா.

அந்த கம்பெனி அதிகாரி கிட்டேயும் பேசினேன். நான் சொல்லறதை பொறுமையா கேட்டா மாதிரித்தான் இருந்தது. நான் பேசி முடிச்சதும், என்னை இரக்கத்துடன் பார்த்தபடி, நான் ரொம்பத்தான் தேவைக்கதிகமா சென்ஸிடிவா இருக்கறதா சொன்னார். பேசாமல் ஒரு மனோதத்துவ நிபுணரை பார்க்கலாம்னு ஆலோசனை வேற இலவசமா தந்தார். பேசாம நானும் ஒரு செல்பேசியை வச்சு சுற்று வட்டாரத்தில் இருப்பவங்களை போல அதை உபயோக்கிக்கலாம்னு வேறு சொன்னார்.

அந்த காலேஜ் பையன் எல்லோரையும் விட மோசமா நடந்துண்டான். என்னை முறைத்து பார்த்தான். அவன் செல்பேசில பேசறதுக்கு நான் ஆட்சேபணை செய்யறேனா அப்படீன்னு கேட்டான். பிறகு நான் அந்த மாதிரி பேசறது சட்டப்படி குற்றம்னு கூடச் சொன்னான். அப்படி என்ன தன்னோட டெசிபெல் லெவல் அதிகம்னு கேட்டான். காலிங் பெல், சர்ச் பெல் எல்லாம் பார்த்திருக்கேன். ஆனால் டெசிபெல்? பார்த்ததே இல்லை. பேசாம வீட்டுக்கு வந்துட்டேன்.

இது மட்டும் நடக்கலே பாகஸ். நான் சொல்லற லிஸ்ட் முழுமையானதில்லை.”
பாகஸ் சிரிக்க ஆரம்பித்தார். “லிஸ்ட் இன்னும் முடியல்லியா? ஏதோ அரசு அதிகாரி பேசற மாதிரி ஒரு எஃபக்டை கொடுக்கறியே”. நீண்ட நேரம் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். எனக்கு பொறுமையில்லை. “பாகஸ், உங்க கிட்டே உதவிக்காக வந்தேன். உங்களோட பைத்தியக்காரத்தனமான கற்பனைகள் மூலமா ஏதேனும் செய்ய முடியுமா”?

கண்காலி திறந்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். என்னை சிறிது கலாய்த்தார்.

“அதாவது மோசமான நிலைமைக்கு அவசரமான உதவி, அப்படித்தானே”?

“ஆமாம், அப்படீன்னு கூட வச்சுக்கலாம். நீங்கதான் எக்ஸ்பர்ட். ஐடியா எவ்வளவு அபத்தமா இருக்கோ அதன் வெற்றியும் அவ்வளவு கூடவே இருக்கும்னு எனக்குப் படறது. உங்க கிட்டேயிருந்துதான் கற்பனைகள் நயாகரா அருவி மாதிரி வந்துண்டே இருக்குமே”.

அவர் ஆமோதிப்பதுபோல தலையை அசைத்தார். சற்றே திரும்பி குகையின் சுவற்றில் தட்டினார். நான்கு சதுரமான பிளாஸ்டிக் துண்டுகள் கீழே விழுந்தன. அவர்றை எடுத்து என்னிடம் கொடுத்தார். அவற்றின் அளவு சுமார் நான்கு அங்குலங்கள், நீல நிறத்தில் இருந்தன.

“இதுங்களை ஒன்னோட வீட்டோட நாலு வெளிச்சுவர்களிலேயும் ஒட்டி விடு. அவை தாமே பசக்குன்னு ஒட்டிக்கும். காந்த சக்தி உடையவை”.

“ஆனால் ஜெஸ்டஸ், இதுங்க பிளாஸ்டிக்ல செஞ்சிருக்கு. சுவரோ செங்கலால ஆனது”, என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. என் கன்னத்தில் தட்டியவாறே அவர் சொன்னார், “நான் சொல்லறா மாதிரி செய்யப்பனே. வெறுமனே அதுங்களை சுவரின் கிட்டே கொண்டுப் போனாலே, சுவர் அதுங்களை தன் பக்கம் இழுத்துக்கும்”.
“சரி, அப்படியே செய்யறேன். அப்புறம் என்ன”?
“ஒட்டறது மட்டும்தான் ஒன்னோட வேலை. பிறகு அதுங்களை நீ மறந்துடலாம்”.
“அதுங்க என்ன பண்ணும்”?
“அதுங்க ஒரு மாதிரியான எதிரொலிகளை கிளப்பும்”.
“ஏதேனும் அசௌகரியமான வைப்ரேஷன்களை தருமா”
“இதப்பாரப்பா, ரொம்பக் கேள்வியெல்லாம் கேட்காதே. நான் சொல்லறது எதிரொலி”.
“புரியறது, என்னோட அண்டை வீட்டார் பேசறதையெல்லாம் உள்வாங்கி எதிரொலியா கொடுக்கும் அப்படீன்னு சொல்லறீங்களா”?
“அதையும் செய்யும், அதுக்கு மேலேயும் செய்யும். நிலைமைக்கேற்ப நடந்துக்கறா மாதிரி அதுங்களுக்கு ப்ரொக்கிராம் செஞ்சிருக்கு. நீ எவ்வளவுக்கெள்ளவு அதுங்க மேல நம்பிக்கை வைக்கறயோ, அவ்வளவுக்கவ்வளவு அதுங்க வேலை செய்யும். இப்பவெல்லாம் சொல்லற செயற்கை அறிவை விட அதுங்களுக்கு அறிவு ஜாஸ்தி”.
நான் ஏற்கனவே பல முறை சொன்னதுபோல லாஃபன்ஷ்டைனோட பேசி ஜெயிக்க முடியாது. ரொம்ப ஜாக்கிரதையா அந்த சதுரங்களை என்னோட பையில் போட்டுக் கொண்டேன்.

சலசலவென் காற்று அடித்து குகையின் வாயிலைக் கடந்து சென்றது. அதன் பின்னாலேயே உதிர்ந்த இலைகள் பறந்தன. நான் இதுவரை பார்த்திராத ஒரு சிவப்பான பூ குகைக்குள்ளே விழுந்து என்னை நோக்கி வந்தது. அதன் பின்னாலேயே ஒரு காட்டுப் பூனை நின்று கொண்டிருந்தது. எங்கள் இருவரையும் பார்த்து, “பைத்தியங்கள் டோய்” என்ற முகபாவனையுடன் அங்கிருந்து ஓடி மறைந்தது.

“நல்ல சகுனங்கள்”, என்றார் பாகஸ்.
“நன்றி பாகஸ்”, என்றேன் நான்.

அவரது கண்கள் விஷமத்துடன் பளபளத்தன. ஆசியர்கள் செய்வதுபோல கைகூப்பி வணங்கி விடை பெற்றேன். அவர் கடைசியாக ஒன்று சொன்னார். “இதப்பாரப்பா, வீட்டுக்கு போற வரைக்கும் அந்த சதுரங்களை வெளியே எடுத்து பார்க்காதே. அப்படி செஞ்சால் அவை உடனே பனித்துளிங்க சூரிய வெப்பத்தில் காணாமப்போற மாதிரி மறைஞ்சிடும், ஜாக்கிரதை” என்றார்.

“நீங்க சொல்லற மாதிரியே செய்யறேன் ஐயா”, எனக்கூறி விட்டு நகரம் நோக்கிச் சென்றேன்.

(தொடரும்)

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Anonymous said...

An ingenious example of speech and politics occurred recently in the United Nations Assembly that made the world community smile.


A representative from India began: 'Before beginning my speech I want to tell you something about Rishi Kashyap of Kashmir, after whom Kashmir is named. When he struck a rock and it brought forth water, he thought, 'What a good opportunity to have a bath.'

He removed his clothes, put them aside on the rock and entered the water.


When he got out and wanted to dress, his clothes had vanished. A Pakistani had stolen them.'


The Pakistani representative jumped up furiously and shouted, 'What are you talking about? The Pakistanis weren't there then.'

The Indian representative smiled and said, 'And now that we have made that clear, I will begin my speech.


'And they say Kashmir belongs to them"JAI HIND !!!!!

Anonymous said...

This poem was nominated by UN as the best poem of 2008, Written by an African Kid

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray

And you calling me colored?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது