1/07/2010

டோண்டு பதில்கள் - 07.01.2010

நக்கீரன் பாண்டியன்
1. உங்களை மிகவும் கவர்ந்த கேள்வி?
பதில்: ஒவ்வொரு பதில்கள் பதிவு முடிவிலும் “அடுத்த வாரம் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா” என எழுதுவேன் அல்லவா? பதிவு அடுத்தது வருமா என்பதுதான் சுவாரசியமான கேள்வி எனக்கு ஒவ்வொரு வாரமும். வந்தால் சரி இல்லாவிட்டால் இல்லை என்ற நிலையில் இருப்பதால் இது டென்ஷன் அளிக்காத கேள்வி என்பது வேறு விஷயம்.

2. உங்களை மிகவும் கவர்ந்த பதிவர்?
பதில்: பதிவர்கள் என்று கூறலாம். என்றென்றும் அன்புடன் பாலா, பத்ரி, ஜீவி, ஜெயமோகன் ஆகியோர் உள்ளனர்.

3. உங்களை மிகவும் கவர்ந்த பதிவு?
பதில்: ஜீவி அவர்களின் “ஆத்மாவைத் தேடி” வரிசையில் வரும் பதிவுகள்.

4. உங்களுக்கு மிகவும் ஆனந்தம் கொடுத்த நிகழ்ச்சி?
பதில்: மடிக்கணினி வாங்கியதில் மேஜைக்கணினியின் சார்புநிலை முடிவுக்கு வந்தது. இது ஒரு சுதந்திர உணர்ச்சியை தந்தது. கூடவே ரிலையன்ஸ் டேட்டாகார்ட் வேறு அந்த உணர்ச்சியை அதிகரித்தது.

5. உங்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்த நிகழ்ச்சி?
பதில்: என்னதான் புலிகளை எதிர்ந்து வந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் அடைந்த தோல்வி மனதை பாதித்தது.

6. உங்களுக்கு நல்ல அனுபவம் தந்த நிகழச்சி?
பதில்: வெறும் வாதங்களால் பலரது முன்முடிவுகளை மார்ற முடியாது என்று உணர்த்திய பல நிகழ்ச்சிகள் மனதுக்கு வருகின்றன.

7. அதிகம் பின்னூட்டம் பெற்ற உங்கள் பதிவு?
பதில்: இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

8. அதிக ஹிட்டுகள் பெற்ற பதிவு?
பதில்: அவ்வாறு தனிப்பதிவுகளுக்கு ஹிட்டுகள் பார்க்கும் வசதி என் வலைப்பூவில் வைக்கவில்லை.

9. பிறரால் பார்க்கப்படாத நல்ல பதிவு?
பதில்: முந்தைய கேள்விக்கு சொன்ன பதில்தான் இங்கும்.

10. நீங்கள் பாராட்டும் வகையில் சென்னை பதிவர் சந்திப்பு (பெஸ்ட்) நடந்த நேரம், இடம்?
பதில்: சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006

11. வால்பையனை தவிர உங்கள் பதிவுக்கு விடாமல் பின்னுட்டம் போட்டவர்களில் யார் பின்னூட்டம் நீங்கள் ரசித்தது?
பதில்: அப்படி விடாமல் பின்னூட்டம் போடுபவர்கள் வேறு யாரும் குறிப்பிடும் வகையில் இல்லை. வால்பையன் கூட டோண்டு பதில்கள் பதிவுகளுக்கு மட்டும்தான் அதிகமாக பின்னூட்டங்கள் இடுவார்.

12. உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்திய பதிவு?
பதில்: அதிக பின்னூட்டங்கள் பெறும் பதிவுகளில் பின்னூட்டங்களுக்கான எனது பதில்களை எழுதுவதில் நேரம் எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றப்படி பதிவை முதலில் எழுதுவது என்பதை மட்டும் பார்த்தால் பெரும்பாலும் அதை தட்டச்சிடும் நேரம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும்.

13. தமிழகத்தில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
பதில்: இடைதேர்தல்களில் இப்போது ஓட்டுகள் விற்று, வாங்கப்படும் நிகழ்வுகள். தேர்தல் கமிஷனே தன்னால் ஒன்றும் செய்யவியலாது என கைவிரித்து விட்டது.

14. இந்தியாவில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
பதில்: பம்பாய் ஹோட்டல் தாக்குதல்

15. உலகில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
பதில்: அமெரிக்காவின் பொருளாதார பிரச்சினைகள். அவை உலகில் எல்லா நாடுகளையுமே பாதித்தன.

16. நீங்கள் விரும்பும் பதிவுலக மாற்றங்கள் வரும் 2010 ல்?
பதில்: பதிவுலக மாற்றங்கள் என்று எதையும் குறிப்பாக நான் சிந்திக்கவில்லை. மாற்றங்கள் வரட்டும், அதற்கேற்ப செயல்படுவோம் என்னும் ரேஞ்சில்தான் எனது செயல்பாடுகள் இருக்கும்.


கிருஷ்ணன்
1. Can you tell me the books you intend to purchase at the 33rd Chennai Book Fair ?
பதில்: இக்கேள்விக்கு பதிலளிக்கும் இன்னேரத்தில் புத்தகக் கண்காட்சிக்கு போய் விட்டு வந்தாயிற்று. நான் வாங்கியது நான்கு புத்தகங்கள். 1. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் (10 வால்யூம்களையும் அடக்கிய ஆம்னிபஸ் எடிஷன்), 2. வனவாசம் 3. மனவாசம் மர்றும் 4. முக்கூர் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் எழுதிய கனாக்கண்டேன் தோழி நான். நான்காவது புத்தகம் எனது வீட்டம்மாவுக்காக வாங்கியது.

2. Comment on BJP-Shibu Soren deal in Jharkhand.
பதில்: பாஜகவை பொருத்தவரை விநாசகாலே விபரீத புத்தி. வேறு என்ன சொல்வது?

3. Which do you think is the best book you read this year?
பதில்: சூரியின் ஜெஸ்டஸ். கதையின் பிளாட் முற்றிலும் எதிர்பாராதது. எனது சி.பி. டபிள்யூ.டி. சக பொறியாளர் எழுதியது. அதில் நானும் வருகிறேன் என்பதும் சுவையான விஷயம் என்னைப் பொருத்தவரை. நம்ம சூரியா இப்படி எழுதியிருக்கிறான் என்ற பெருமிதம் வேறு.

Maddy73
1. 'தமிழ்' தன்னாலத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும், இன்றைய 'தமிழ் தாத்தா' அவர்கள், திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரம் பாடியுள்ளார் எனத் தெரிந்தும் கடவுள் இல்லவே இல்லை என சொல்லி வாழ்கையை ஒட்டிகொண்டிருப்பது பற்றி?
பதில்: இக்கேள்வியை நீங்கள் எப்போது அவரிடம் கேட்டாலும் தனக்கு அப்போது இருக்கும் அரசியல் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏதேனும் பேசுவார். அதெல்லாம் என்னவாக இருக்கும் என்பது இப்போதைக்கு அவருக்கே தெரியாது.


சங்கர்லால் (இவர்தான் வழக்கமாக 32 கேள்விகள் கேட்பவரோ?)
1. தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி வந்தால் இளைய சமுதாயம் முன்னேறுமா?
பதில்: அந்த திட்டத்தின் முழுவிவரம் தெரியவில்லை. பார்த்தவரைக்கும் மேலே இருப்பவனை கீழே இழுத்து எல்லோரையும் சமமாக ஏழையாக்கும் கம்யூனிஸ்ட் திட்டம் மாதிரித்தான் எனக்கு படுகிறது.

2. அதில் புத்தகச் சுமை குறைய வாய்ப்புள்ளதா?
பதில்: கல்வி வியாபாரிகளின் புத்தக விற்பனை லாபி அதை அவ்வாறு செய்ய விடாது.

3. வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?
பதில்: ஒரு புது முறை செயலாக்கம் பெறும்போது பல அரசு வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அம்மாதிரியான வேலை அதிகரிப்புகள் நல்லதுக்கா என்பதை கூறுவது கடினம்.

4. அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளியின் தரத்திற்கு உயருமா?
பதில்: அது முடியாவிட்டால் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தைக் குறைத்துவிட்டு போகிறார்கள். அதுக்கு என்ன இப்போ?

5. கல்வியை ஒரு சிலரால் வியாபாரம் ஆக்கியுள்ள தன்மை மறையுமா?
பதில்: (வடிவேலு குரலில்) கிண்டலு?

6. தற்கால சூழ்நிலையில் (குழந்தை நலம்) பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?
பதில்: குடும்பம் ஒரு கதம்பம் என்று நினைக்கிறேன். இந்த விசுபடத்தில் இதே கேள்வி கேட்கப்பட்டு ஒவ்வொருவராலும் வெவ்வேறுவிதமாக விடை தரப்படுகிறது. கடைசியில் நித்யா அதன் விடை சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தேவைகளைப் பொருத்தது எனக் கூறிவிடுவார். அந்தப் பதில்தான் இங்கும்.

7. இன்றைய அரசியலில் பல நிலைகளிலும் ஊழல் பெருக காரணம் என்ன?
பதில்: முக்கியக் காரணமே ஊழலால் வரும் செல்வம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மரியாதைக் குறைவையும் தரவில்லை என்பதே. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ரயிலுக்கு காசு இல்லாது தவித்த ஒருவர் இப்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் வருமானவரிக்காரர்கள் என்ன ஏது என விசாரியாமல் வேடிக்கை பார்த்தால் வேறு என்னதான் விளைவை எதிர்பார்க்கிறீர்கள்?

8. இளம் பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடு?
பதில்: இயற்கையின் இந்த விளையாட்டு காலம் காலமாய் நடப்பதுதானே. விண்ணையும் அடைவோம், காதற்பெண்டிரின் கடைக்கண் பார்வைக்காக என பொருள்வரும்படி பாரதியார் பாடியிருப்பதாக படித்திருக்கிறேனே.

9. இந்தியாவில் படிக்காத பெண்கள்,ஏழை பெண்கள் கறுப்பாக உள்ள பெண்களுக்கு திருமணமாவது கஷ்டமாகி வருகிறதே?
பதில்: தவறு. படித்த பெண்களுக்குத்தான் சிரமம் அதிகம். எங்கள் நங்கநல்லூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண் சர்வசாதாரணமாக பட்டங்கள் பெற்றிருக்க, அவர்தம் சமூகத்தில் பிள்ளைகள் எட்டாவது கூட தாண்டாமல் இருப்பதால் அரேஞ்சுடு திருமணங்களில் பிரச்சினை வருகிறது. காதல் திருமணங்களில் வேறு விதமான பிரச்சினை. மற்றப்படி ஏழை பெண்கள், கருப்பான பெண்கள் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருவதுதானே.

10. வழக்கத்தில் கன்னித்தன்மையோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், "வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது?
பதில்: வெர்ஜின் என்றே அழைக்கலாம்.

11. உலகம் முழுவதும் ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள், உடல் பருமனையும் குறைக்க செய்யும் முயற்சிகள் எப்படி பலனளிக்கிறது?
பதில்: இது ஒரு தீரா பிரச்சினை. போக்குவரத்து வசதிகள் அதிகமாகிவிட்ட இத்தருணத்தில் வெறுமனே ஒருகிலோமீட்டர் தூரத்துக்கும் பேருந்துகளை/ஆட்டோக்களை உபயோகிக்கின்றனர். சாப்பாடு அளவு அப்படியே இல்லாது நொறுக்குத் தீனி அதிகமாகி விட்டது. ஆக மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்னும் நிலைமைதான்.

12. சமூகத்தின் மீதான சிந்தனை இக்கால இளைஞர்களுக்கு இருக்கிறதா?
பதில்: எனது இப்பதிவைப் பார்க்கவும்.

13. ஒரு பகுதியினருக்கு பிழைக்க வழி தெரியவில்லை... இது, யாருடைய தவறு?
பதில்: வாழநினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்? கவியரசு இவ்வரிகளை காதல் சம்பந்தமாக கூறியிருந்தாலும் அவை எல்லா இடங்களிலும் செல்லும்.

14. இதில் எது டாப்-வளை ஓசை... கொலுசு ஓசை?
பதில்: காதலி வரும் ஓசை கேட்கும்போது கொலுசு ஓசை இனிமை. விளக்கையும் காதலியையும் அணைத்தபிறகு வளையோசை இனிமை. அதாகப்பட்டது காதலியின் எந்த அங்கம் வேலை செய்கிறதோ, அதன் அணியின் சப்தமே இனிமை.

15. வாழும்போது மனைவியின் பெருமித செயல்களை அடிக்கடி பாராட்டும் கணவன்கள்
பதில்: அதை செய்யத் தெரியாமல் கோட்டைவிடும் மற்ற கணவர்களை விட புத்திசாலிகள்.

16. பரவலாய் பேசப்படும் சிக்ஸ் பேக்... சிக்ஸ்பேக்னு சொல்றாங்களே.. அப்படின்னா என்ன?
பதில்: Six pack-னா இப்படி இருக்கும், பார்க்க படம்:


17. அதில் நம் நடிகர்களில் நம்பர் ஒன் யார்?
பதில்: சூர்யா, விக்ரம், ரியாஸ்கான் (வின்னர் படத்தில் கட்டதுரையாக வருபவர்), லிஸ்ட் முற்றுப்பெறவில்லை.

18. இது பெண்களுக்கும் சாத்யமா?
பதில்: ஓ, சாத்தியமே? ஆனால் அவர்கள் அதை விரும்புவார்களா என்பது ஆண்கள் அதை விரும்புவார்களா என்பதையும் பொருத்துள்ளது. பார்க்க, படம்:


19. அரசியல் வரலாற்றில் நேர்மையின் அடையாளங்களாய் வாழ்ந்த காந்தி, காமராஜர், கக்கன் போன்றோர் இருந்து... தேர்தலில் நின்றால்?
பதில்: கட்சி சார்பாக நின்றால் வெற்றிபெறலாம். சுயேச்சையாக நின்றால்? கஷ்டம்தான்.

20. மாகாணி, அரைக்கால் வாய்ப்பாட்டில் வாழ்ந்த மனிதனின் ஞாபக சக்திக்கு , கால்குலேட்டர், செல்போன் (மெமரி) கம்ப்யூட்டர் எல்லாம் வேட்டுவைத்து விட்டது என்பது உண்மை தானே.
பதில்: உண்மைதான். ஆனால் இந்த அவசர யுகத்தில் வேறு திறமைகள் தேவைப்படுகின்றன. கணக்கிடும் வேலையை கருவிகள் கவனித்துக் கொள்ள, தேவையான திறமைகளை பெறுவதில் கவனம் செலுத்தவியலும்.

எங்களூர் மளிகைகடையில் சாமான் லிஸ்ட் கொடுத்து, அவற்றின் விலைகளை முதலாளி லிஸ்டிலேயே நிரப்பிக் கொண்டு வர வர நான் மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டே போவேன். என்னால் ஒவ்வொன்றாக நான்கு இலக்கங்களில் உள்ள எண்களைக்கூட கூட்ட முடியும். உதாரணத்துக்கு 2346 + 3454 என்று இருந்தால் 5800 என மனதுக்குள் கூட்டுவேன். முக்கால்வாசி மளிகை பொருட்களின் விலைகள் மூன்று இலக்கங்களைத் தாண்டாது என்பது இன்னும் சௌகரியமாகப் போயிற்று. இம்மாதிரியே விலைகளை கூட்டிக்கொண்டே போவேன். பிறகு முதலாளி காகுலேட்டரில் கூட்ட ஆரம்பிக்கும் முன்னரே மொத்தத் தொகையை கூறிவிடுவேன். அவர் கூட்டி முடித்து பார்த்தால் அனேகமாக நான் சொல்லும் விடைதான் வரும். தவறு எங்கு வரும் என்றால், கடைக்காரர் சில சமயம் நான்கை 9 போல எழுதியிருப்பார், அல்லது பைசா காலத்தில் தெளிவாக இருந்திருக்காது.

நான் செல்லும் பத்திரிகைக் கடையில் ஒரு சுட்டிப்பெண் இருக்கிறாள். ஏழாவது வகுப்பில் படிக்கிறாள். அவளிடம் 100 ரூபாயை கொடுத்து 25.75 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி தரச்சொன்னால் 74.25 என ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே மீதியை எடுத்துத் தருவாள். அவளது பெற்றோரோ முதலில் 25 பைசா எடுத்துக் கொண்டு 26 ரூபாய் எனக்கூறிவிட்டு நான்கு ரூபாய்களை சேர்த்து முப்பது எனக் கூறி விட்டு, பிறகு இரண்டு பத்துகள், கடைசியாக ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை வைத்து நூறு என எண்ணி முடிப்பார்கள்? கையில் அவ்வளவு சில்லறை இல்லாவிட்டால்? இருக்கவே இருக்கிறது காகுலேட்டர்.

ஆனால் இந்தத் திறமை இக்காலத்தில் அவ்வளவாகத் தேவையில்லை என்பதும் உண்மையே.

21. தமிழகத்தில் எந்த அரசியல் தலைவரை இலகுவாக சந்தித்து பேச முடியும்?
பதில்: பாண்டிச்சேரியையும் சேர்த்து கொண்டால் ரங்கசாமியை சொல்லலாம். மற்றப்படி கலைஞரையும் சந்திப்பது எளிது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். வீரமணியை எளிதாகவே சந்தித்தேன்.

22. உங்கள் சொந்த அனுபவம் எப்படி?
பதில்: ரங்கசாமி மற்றும் வீரமணியை சந்திப்பதில் சிரமம் ஏதும் இல்லை எனக்கு.

23. பத்திரிக்கைகள்/நிகழ்வுகள்/சம்பாஷனைகள் இவற்றில் சமீபத்தில் (கடந்த ஒரு வருடத்திற்குள்) நீங்கள் படித்து/கேட்டு, ரசித்த ஜோக்?
பதில்: கலைஞரின் மூன்றுமணி நேர உண்ணாவிரதத்தால் ஈழப்பிரச்சினை தீர்ந்தது பற்றிய ரிப்போர்டுகள்.

24. தற்சமயம் உங்கள் மோடி ஆட்சியில் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது?
பதில்: இந்த உரலில் சில தகவல்கள் உள்ளன. ஆனால் ஒன்று. மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் மட்டும் கள்ளச்சாராய சாவு இல்லையா?

25. இந்தியாவில் உள்ள, "சாப்ட்வேர்' நிறுவனங்களில் மீண்டும் களைகட்ட ஆரம்பித்து விட்டதே. அமெரிக்காவில் நிலைமை சரியாய் விட்டதா?
பதில்: முழுக்கவும் சரியானதாகச் சொல்லவியலாது. ஆனால் சரியாக ஆரம்பமாகி விட்டதாகத்தான் தோன்றுகிறது.

26. இந்த மீட்சிக்கு அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைதான் காரணமா?
பதில்: அதுவும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

27. பொதுவாய் இது போல் பொருளாதார தேக்க நிலமை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதில் உண்மை உண்டா?
பதில்: நான்கு ஆண்டுகள் என்றெல்லாம் இல்லை. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை என நினைக்கிறேன்.

28. செழிப்பாய் செல்லும் வளர்ச்சி வேகம் பின்னோக்கி செல்வது ஏன்?
பதில்: வளர்ச்சிவேகம் பின்னோக்கி செல்வதா? புரியவில்லையே? குறைந்தது என்று சொல்ல வருகிறீர்களா?

29. சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேக்களில் முக்கியமான, உபயோகமான தகவல் ஏதும் உண்டா?
பதில்: எதை பற்றிய சர்வே? சுட்டி ஏதேனும் தரவியலுமா?

30. ஈ.வெ.ரா. வையும், அண்ணாதுரையையும் விட, கருணாநிதி சிறந்தவர் (சமூகநீதி காப்பதில்) என வரலாறு சொல்லி மகிழுமா?
பதில்: ஈவேரா பதவியில் இருந்ததே இல்லை. அவர் காத்ததாகச் சொல்லப்படும் சமூக நீதி பார்ப்பன எதிர்ப்பு, பார்பனரல்லாத மற்ற உயர் சாதியினருக்கு ஆதரவு என்ற நிலையிலேயே நின்று விட்டது. தலித்துகளுக்கு ஆதரவு என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அப்படியே தலித்துகள் பற்றிப் பேசினாலும் அதற்கு காரணம் பார்ப்பனரே எனப்பேசி தனக்கு பிடித்த சாதிக்காரர்களை காத்தார். கீழ்வெண்மணி விவகாரம் ஒன்று போதுமே.

அண்ணா அதிகாரத்தில் இருந்ததே சொற்பகாலங்கள். ஆகவே அவரைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லை.

கருணாநிதி? உத்தபுரத்தில் பிள்ளைமார்களை திருப்திப்படுத்துவதோடு நின்றுவிட்டாரே. இன்னமும் வன்கொடுமைகள் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றனவே. அவரது ரிகார்ட் மெச்சும்படி இல்லை.

31. மக்கள் நலத்திடங்கள் தேர்தலை குறி வைத்து செய்ப்படவில்லை எனும் கருணாநிதியின் அறிவிப்புக்குப்பிறகும் இந்த எதிர் கட்சிகளின் தொல்லை?
பதில்: கருணாநிதியால் செய்யப்படுவதாக சொல்லப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அவரது சொந்த மக்களின் நலன்களாக அமைவதே எதிர்கட்சிகளின் ஆட்சேபணைகளுக்கு முக்கியக் காரணம்.

32. முடி சூட்டு விழாவிற்கு ஜூன் வரை காதிருக்கமுடியாது என தலைவருக்கு கொடுக்கபடும் நெருக்கம் என வரும் கிசு கிசு பற்றி?
பதில்: இக்கேள்விக்கு லக்கிலுக், உண்மைத் தமிழன் ஆகியோர் சரியான பதில்களைக் கூறுவார்கள்.


சுரேஷ்குமார்
1) மேலை நாடுகளில் டாய்லட்டுகளில் தண்ணீர் இருப்பதில்லை. டாய்லட்டின் கதவும் முழுவதும் கிடையாது. கீழே இடைவெளி இருக்கும் (வெர்ஜின் மொபைல் விளம்பரம் பார்ப்பதுண்டா). தண்ணீர் இல்லாமல் எப்படி டிஸ்யூ காகிதம் மட்டும் கொண்டு நமது ஆசனவாயை க்ளீன் செய்யமுடியும்? இதனால் சுகாதாரக் கேடு ஏற்படாதோ?
பதில்: அதில் நேக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே பிளஷ் செய்யவும். பக்கங்களிலிருந்து வரும் தண்ணீர் கீழே சென்றடையும் முன்னாலேயே அதை உங்கள் உள்ளங்கையில் வாங்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் முதலிலேயே பிளஷ் டேங்கியில் போதுமான நீர் இருக்கிறதா என்பதை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியது. பிளஷ் டேங்க் எனது பதிவில் காட்டப்பட்டதுபோல இருந்தால் பிரச்சினை இல்லை. பழைய் டிசைன்படி கூரையருகில் இருந்தால் பிரச்சினைதான். ஆகவே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து கொண்டு போகவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது hand wash என்று ஒருவிஷயம் வேறு வந்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு திவ்யமாக சுத்தம் செய்து கொள்ளலாம். படம் கீழே:


2) மேலை நாட்டினர் இதுமாதிரி தண்ணீர் கொண்டு தங்கள் ஆசனவாயை க்ளீன் செய்யாததால் எப்படி அவர்களுக்கு தொற்று மற்றும் பிற நோய்கள் வராமல் உள்ளது?
பதில்: அவர்கள் உணவில் நார்ச்சத்து குறைவு. ஆகவே மலம் மிக இறுக்கமாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். பேப்பர் போதும் என எங்கோ படித்துள்ளேன். பப்ளிக் ஹெல்த் பொறியாளர்கள் பதில் கூறுங்களேன், பின்னூட்டங்கள் மூலமாக. வடுவூர் குமார்? சாதாரணமாகவே இந்தியர்களை மனதில் வைத்து டிசைன் செய்யப்படும் கிளாசட்டுகள் அளவில் பெரியதாக இருக்கும். நாமெல்லாம் பெருஞ்சாணிக்காரர்கள் என ஒருவர் என்னிடம் கூறினார். அது சரியெனவே எனக்கு படுகிறது.

3) மேலை நாடுகளில் டாய்லட் செல்லும் போது தண்ணீர் வேண்டுமென்றால் - ஒரு பாட்டிலில், சொம்பில் தண்ணீர் எப்படி எடுத்துச் செல்வது? மற்றவர்களுக்கு இடையே (பொது கழிப்பறைகளில்) எடுத்துச்செல்ல தயக்கமாக இருக்கிறதே?
பதில்: வேறு வழியில்லை என்றால் பாட்டிலில்தான் எடுத்து செல்லவேண்டும். இந்த சங்கடத்துக்கு பயந்து பால்மாறினால், இன்னும் பெரிய சங்கடங்கள் வரும் வாய்ப்பு உண்டல்லவா?

கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1. செம்மொழி மாநாடு: கோவையில் சாலைகளை மேம்படுத்த 59 கோடி ஒதுக்கீடு -அட்ரா சக்கை அட்ரா சக்கை!

பதில்: பல புது பணக்காரர்கள் வருவார்கள், ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் கோடீஸ்வரராவார்கள்.

2. ஓய்வு பெற்றவர்களுக்கு தேர்தல் பணியா? தேர்தல் ஆணையத்துக்கு ஜெயலலிதா கடிதம் - அய்யோ பாவம் ஜெ!
பதில்: தினமணியில் வந்த செய்திப்படி அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை, மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பணியில் நியமிக்கப் போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. இப்படி ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெறுவோரை, தேர்தல் அதிகாரிகளாக நியமிப்பதால், தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் அரசின் விருப்பத்துக்கு ஏற்படியே நடப்பதால், பணி நியமனம் பெறுவோர் அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. அப்போதுதான், அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெறுவோர், ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டார்கள் என்பதால், முறைகேடுகள் செய்தாலும்கூட அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே, வரும் இடைத் தேர்தலும் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலும் நியாயமாக நடைபெற வேண்டுமானால், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெறுவோரை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமாகத்தானே இருக்கிறது?

3. ஓய்வு பெற்றவர்களுக்கு பணி: வைகோ கண்டனம் - ஜெ ஐ குஷிபடுத்தவா?
பதில்: நியாயத்தை ஆதரிப்பதில் என்ன தவறு?

4. தபால் நிலையங்களில் முகவரி அடையாள அட்டை விநியோகம் -அவங்களும் செய்யாத வேலையில்லை!
பதில்: நல்ல வேளை நினைவுபடுத்தினீர்கள். போய் அடையாள அட்டை வாங்க வேண்டும்.

5. அருந்ததியர்க்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு: வேலைவாய்ப்பு பதிவில் மறுப்பதாக குற்றச்சாட்டு -ஆண்டவன் கொடுத்தாலும் இந்த பூசாரிகள்!
பதில்: இதற்கும் ஏதாவது வாய்மொழி உத்தரவை சம்பந்தப்பட்ட சாமியே போட்டிருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

6. அமெரிக்கர்களை துரத்தும் பயங்கரவாத பகீர் : விமானநிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் -அடுத்து?
பதில்: அமெரிக்கா தயக்கமின்றி இதற்கு இஸ்ரவேலர்களின் துணையை நாடலாம்.

7. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை : அடக்கி வாசிக்கும் இலங்கை கடற்படை -சோழியன் குடுமி!
பதில்: ஆக, தாக்குதல் இல்லை. மகிழ்ச்சிதானே? சோழியன் குடுமியை விடாது கையில் பிடித்து வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு.

8. தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது-காமம் கண் மறைக்கும்!
பதில்: கள்ளப் புருஷன், கள்ளக்காதலி ஆகிய விவகாரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன. ஆயிரத்தோரு இரவுக்கதைகளை படித்தால் தெரியவரும். இது ஒன்றும் புதிதல்லவே.

9. பாக்.கிற்கு சீனா ஆயுதம்: மந்திரி கிருஷ்ணா கவலை-முதலையும் மூர்க்கனும்!
பதில்: யார் முதலை, யார் மூர்க்கன் இந்த விஷயத்தில்?

10. வன்னியர்கள் வீணாகி விட்டோம்: ராமதாஸ் 'விரக்தி'--எதுக்கு அடி போடுகிறாரோ!
பதில்: எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என இருக்கிறார், பாவம். அவரை விட்டுவிடுங்கள்.


மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம். ஐந்து கேள்விகளுடன் ராமானுஜம் அக்கவுண்ட் ஓபன் செய்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

54 comments:

Nataraj said...

//மேலை நாடுகளில் டாய்லட் செல்லும் போது தண்ணீர் வேண்டுமென்றால் - ஒரு பாட்டிலில், சொம்பில் தண்ணீர் எப்படி எடுத்துச் செல்வது? மற்றவர்களுக்கு இடையே (பொது கழிப்பறைகளில்) எடுத்துச்செல்ல தயக்கமாக இருக்கிறதே?
பதில்: வேறு வழியில்லை என்றால் பாட்டிலில்தான் எடுத்து செல்லவேண்டும். இந்த சங்கடத்துக்கு பயந்து பால்மாறினால், இன்னும் பெரிய சங்கடங்கள் வரும் வாய்ப்பு உண்டல்லவா?
//
இந்த கேள்விக்கு லஜ்ஜையை ஓரம்கட்டிவிட்டு சில சரித்திர உண்மைகளை கூற வேண்டும். அமெரிக்கா வந்து 7 ஆண்டு ஆகியும் நமக்கு tissue பேப்பர் பழக்கம் செட் ஆகவில்லை. எனக்கோ travelling ஜாப். ஏர்போர்டில் அவசரம் என்றால் 3.75$ குடுத்து ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி கொள்வேன். (குடிப்பதற்கு கூட தண்ணி வாங்க மாட்டேன். வாட்டர் fountain தான். ஆனால் இதுக்கு வாங்குவேன். வாட்டர் fountain இன்னொரு சுகாதார கேடு. அது பற்றி தனியே சொல்ல வேண்டும்). வாங்கிய தண்ணி பாட்டிலை ஸ்டைலாக ஜெர்கின் பாக்கெட்டுக்குள் சொருகி கொண்டு டாய்லெட் உள்ளே சென்று விடுவேன். US -இல் வேறு டாய்லெட்களுக்கு பாதி கதவு தான். privacy ரொம்ப கம்மி. கொண்டு வந்த தண்ணி பாட்டிலை யூஸ் பண்ணால் சத்தம் வருமே! அதனால் சும்மானாச்சிக்கு flush செய்வேன். flush ஆகிற கடமுடா சத்தத்தில் அவசர அவசரமா wash செய்து கொள்வேன். ஐயோ இது பெரும்பாடு. ஹோட்டல் ரூமிலும் நோ mug . பட் பாத்ரூமில் தண்ணி குடிக்கவோ என்ன இழவிற்கோ அழகா கண்ணாடி கிளாஸ் (கண்ணாடி, கிளாஸ் ரெண்டும் ஒன்றில்லையோ நடு சென்ட்டர் மாதிரி ) வைத்திருப்பார்கள். அது தான் கை குடுக்கும். இல்லை ஐஸ் கட்டி போட்டு வைக்க icebox ஜாடி போல் வைத்து இருப்பார்கள். அது யூஸ் ஆகும். இப்போது அதே ரூமில் அந்த icebox இல் இருந்து ஸ்டைலாக ஐஸ் எடுத்து ரம் அருந்தும் கனவான்களே..ஐயம் சாரி ;)
US இல் நண்பர்கள் வீட்டில் தங்கினாலும் சில சமயம் சிரமம் தான். சில முற்போக்கு நண்பர்கள் guest பாத்ரூமில் tissue பேப்பர் வைத்து இருப்பார்கள். ஆனால் mug இருக்காது. ஒரே கஷ்டம் தான் போங்கள்.
மனுஷன் நிம்மதியாக 'இருப்பதே' இந்த ஒரு இடம் தான். அங்கும் US இல் நாங்கள் என்ன பாடு படுகிறோம் என்று இப்போது தெரிகிறதா ?

Nataraj said...

பை தி வே, இந்த handwash pipe கல்ச்சர் அமெரிக்காவில் கிடையாது. டாய்லெட்டில் இருக்காது. ஒரு தடவை எங்கள் ஊரில் இருந்து கண்ணா பின்னா என்று flight மாறி kualalampur வழியாக india வந்தோம். கோலாலம்பூர் ஏர்போர்ட் டாய்லெட்டில் handwash கண்டவுடன் "ஆஹா, நம்ம ஊரு பக்கம் நெருங்கிட்டோம் டா" என்று நானும் நண்பனும் குதித்தோம். "இத இத இத தான் நான் எதிர்பார்த்தேன்" என்று திவ்யமா சரித்ரம் 'படைத்து' விட்டு வந்தோம் :)

Nataraj said...

aaha, so me the first??

கிருஷ்ணமூர்த்தி said...

ஆஹா! ஆய் போய்விட்டுக் கழுவுவதில் இத்தனை சிரமம் இருக்கிறது என்பது நடராஜ் பின்னூட்டத்தில் இருந்து தான் தெரிகிறது!

டோண்டு சார், கேள்வி நிறையக் கேட்டவர், தொடர்ந்து கேட்டவர் எல்லாம் சரி! வந்த கேள்விகளிலேயே, நீங்களும் ரசித்து, நீங்கள் எழுதிய பதிலையும் ரசித்தது என்று ஒரு ரகம்,(ரசிப்பது நீங்களாகவும், கேள்வி கேட்டவராகவும் அல்லது படித்தவராகவும் கூட இருக்கலாம்) அதைப் பற்றிச் சொல்லவே இல்லையே!

வால்பையன் said...

//வால்பையனை தவிர உங்கள் பதிவுக்கு விடாமல் பின்னுட்டம் போட்டவர்களில் யார் பின்னூட்டம் நீங்கள் ரசித்தது?//

பொதுவான மொக்கைகள் என்றால் ஒகே!

அவரது துறை சார்ந்த மொக்கைகளுக்கு நான் தலை கொடுக்க முடியாதே! அதுக்கு அவரது படித்த பதிவர்கள் வருவாங்க!

வால்பையன் said...

//தமிழகத்தில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?//

சிம்ரன் கல்யானம்னு பேசிக்கிறாங்க!

வால்பையன் said...

//இந்தியாவில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?//

போன பதில் இதுக்கு வர வேண்டியது!

வால்பையன் said...

// 'தமிழ்' தன்னாலத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும், இன்றைய 'தமிழ் தாத்தா' அவர்கள், திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரம் பாடியுள்ளார் எனத் தெரிந்தும் கடவுள் இல்லவே இல்லை என சொல்லி வாழ்கையை ஒட்டிகொண்டிருப்பது பற்றி?//

திருவள்ளுவர்க்கு முன்னாடி இருந்தே கடவுள் நம்பிக்கை இருக்குது! அதுக்காக அதை ஏற்று கொள்ள வேண்டும், அதுவும் வள்ளுவரே சொல்லிட்டார் என்பதெல்லாம் ஓவர்!

வள்ளுவர் நிலபிரபுக்களின் சொம்புதூக்கி என்று நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலைக்காணோம்!

வால்பையன் said...

//பார்த்தவரைக்கும் மேலே இருப்பவனை கீழே இழுத்து எல்லோரையும் சமமாக ஏழையாக்கும் கம்யூனிஸ்ட் திட்டம் மாதிரித்தான் எனக்கு படுகிறது.//


ரொம்ப வலிக்குதோ!?
சமமா உட்கார்ந்து தான் படிக்க வைக்கிறது புள்ளைகல, எதாவது ஒட்டிக்குமா!?

வால்பையன் said...

//கல்வி வியாபாரிகளின் புத்தக விற்பனை லாபி அதை அவ்வாறு செய்ய விடாது.//

வியாபாரின்னா முதலாளி!

போன பதிலில் கம்யூனிஸ்டுக்கு ஒரு தாக்கு, இங்கே முதலாளிக்கு ஒரு தாக்கு!

யப்பா பெரிய அரசியல்ரா இது!

வால்பையன் said...

//வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?//

வாய்ப்புகள் இப்பவும் நிறைய இருக்கு, வேலைக்கு தான் எவனும் போக மாட்டிகிறான்!

வால்பையன் said...

// அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளியின் தரத்திற்கு உயருமா?//

நம்புறதுக்கு அவ்ளோ கஷ்டமான திட்டமா அது!

வால்பையன் said...

//கல்வியை ஒரு சிலரால் வியாபாரம் ஆக்கியுள்ள தன்மை மறையுமா?
பதில்: (வடிவேலு குரலில்) கிண்டலு?//

உண்மை சுடுது பாருங்கோ!

வால்பையன் said...

//தற்கால சூழ்நிலையில் (குழந்தை நலம்) பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?//

அவரவர் எண்ணத்தை பொறுத்தது, இதற்காகவாவது கூட்டுகுடும்ப முறை பெருகும் என்பது என் கருத்து, பெண்கள் வேலைக்கு போக விரும்பினால் அனுமதிப்பது ஆணுக்கு அழகு!

வால்பையன் said...

//இன்றைய அரசியலில் பல நிலைகளிலும் ஊழல் பெருக காரணம் என்ன?//

இந்த கேள்வியே உங்களிடமே கேட்காமால் இங்க கேட்டிங்க பாருங்க அதுவும் ஒரு காரணம்!

பெறுவது மட்டும் ஊழலல்ல, கொடுப்பதும் ஊழல் தான்!

வால்பையன் said...

//இளம் பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடு?//

குனிய குனிய குட்டு விழும், பேசாம வேலைய பார்த்தால் தானா அமையும்!

வால்பையன் said...

//இந்தியாவில் படிக்காத பெண்கள்,ஏழை பெண்கள் கறுப்பாக உள்ள பெண்களுக்கு திருமணமாவது கஷ்டமாகி வருகிறதே?//

சிகப்பா, படிச்ச, பணக்கார பொண்ணு கேக்குறவங்களை பார்த்து கேக்கனும்!

வால்பையன் said...

//படித்த பெண்களுக்குத்தான் சிரமம் அதிகம். எங்கள் நங்கநல்லூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண் சர்வசாதாரணமாக பட்டங்கள் பெற்றிருக்க, அவர்தம் சமூகத்தில் பிள்ளைகள் எட்டாவது கூட தாண்டாமல் இருப்பதால் அரேஞ்சுடு திருமணங்களில் பிரச்சினை வருகிறது.//


இதுக்கு பேரு சமூகம் இல்ல, குழுமம், கூட்டத்துல்லயே கோவிந்தா போடனும்னா அப்படி தான் சுருதி சிக்காது, வெளியேவும் வரணும்!

வால்பையன் said...

//வழக்கத்தில் கன்னித்தன்மையோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், "வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது?//

வெர்ஜின் என்ற வார்த்தையின் மூல அர்த்தம் கன்னிதன்மை அல்ல! எந்த கேப்மாறியோ மாத்தி விட்டுருக்கு!

யாராவது மூல அர்த்தம் சொல்லமுடியுமா?

வால்பையன் said...

//உலகம் முழுவதும் ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள், உடல் பருமனையும் குறைக்க செய்யும் முயற்சிகள் எப்படி பலனளிக்கிறது?//

அடுத்தவர்களுக்கு தொந்தரவு அளிக்கிறது!

வால்பையன் said...

//ஒரு பகுதியினருக்கு பிழைக்க வழி தெரியவில்லை... இது, யாருடைய தவறு?//


பகுதிகுள்ளயே தேடுனா கஷ்டம் தான்!

வால்பையன் said...

//. இதில் எது டாப்-வளை ஓசை... கொலுசு ஓசை?//

உளியின் ஓசை!

விலங்களில் கூட பெண் சிங்கம் தான் டாப்

வால்பையன் said...

// இந்த மீட்சிக்கு அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைதான் காரணமா?//

நிச்சயமா இல்லை!
அவருக்கு ஆப்கானிஸ்தானத்தை காப்பாற்றவே நேரம் சரியா இருக்கு!

வால்பையன் said...

//பொதுவாய் இது போல் பொருளாதார தேக்க நிலமை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதில் உண்மை உண்டா?//

முப்பது ஆண்டுகள் என்று கூட கணக்கு கிடையாது! எப்போ வயிறு நெம்புதோ அப்போ வாந்தி எடுப்பதற்கு கால நேரம் கிடையாது!

வால்பையன் said...

//செழிப்பாய் செல்லும் வளர்ச்சி வேகம் பின்னோக்கி செல்வது ஏன்?//

செழிப்பில்லாத விவசாயத்தால்!

வால்பையன் said...

//சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேக்களில் முக்கியமான, உபயோகமான தகவல் ஏதும் உண்டா?//

இன்னுமா இந்த உலகம் சர்வேக்களை நம்புது!

வால்பையன் said...

//ஈ.வெ.ரா. வையும், அண்ணாதுரையையும் விட, கருணாநிதி சிறந்தவர் (சமூகநீதி காப்பதில்) என வரலாறு சொல்லி மகிழுமா?//

செலவழிக்கும் காசுகேற்ப பணியாரம் கிடைக்கும்!, சில சமயம் கருகிபோய் கூட!

வால்பையன் said...

//மக்கள் நலத்திடங்கள் தேர்தலை குறி வைத்து செய்ப்படவில்லை எனும் கருணாநிதியின் அறிவிப்புக்குப்பிறகும் இந்த எதிர் கட்சிகளின் தொல்லை?//

கருணாநிதி வாய் திறந்தால் உண்மை மட்டும் தான் பேசுவார் என சில கழக கண்மணிகள் மட்டுமே நம்புவார்கள்!

வால்பையன் said...

//செம்மொழி மாநாடு: கோவையில் சாலைகளை மேம்படுத்த 59 கோடி ஒதுக்கீடு -அட்ரா சக்கை அட்ரா சக்கை!//

ரோடு போட்டு மொழி வளக்குறாங்க

வால்பையன் said...

//ஓய்வு பெற்றவர்களுக்கு தேர்தல் பணியா? தேர்தல் ஆணையத்துக்கு ஜெயலலிதா கடிதம் - அய்யோ பாவம் ஜெ!//

ஓய்வு பெற்றவர்கள் தப்பு பண்ணினாங்கன்னு மீண்டும் டிஸ்மிஸ் பண்ணமுடியாதே! அந்த விசயமெல்லாம் அம்மணிக்கு எங்க தெரியப்போவுது!

வால்பையன் said...

//தபால் நிலையங்களில் முகவரி அடையாள அட்டை விநியோகம் -அவங்களும் செய்யாத வேலையில்லை!//

தப்பா தெரியல!

வால்பையன் said...

//அருந்ததியர்க்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு: வேலைவாய்ப்பு பதிவில் மறுப்பதாக குற்றச்சாட்டு -ஆண்டவன் கொடுத்தாலும் இந்த பூசாரிகள்!//

சாமி கொடுக்குற மாதிரி கொடுக்கும் ஆனா ஒன்னும் இருக்காது! சாமிக்கு தேவை உண்டியல் நெம்பனும் அம்புட்டு தான்!

வால்பையன் said...

//அமெரிக்கர்களை துரத்தும் பயங்கரவாத பகீர் : விமானநிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் -அடுத்து?//

எல்லா பக்கமும் உண்டு, நாம கண்டுகிறதில்ல!

வால்பையன் said...

//வன்னியர்கள் வீணாகி விட்டோம்: ராமதாஸ் 'விரக்தி'--எதுக்கு அடி போடுகிறாரோ!//

”வன்னியர்களை வீணாக்கி விட்டேன்”னு தான் அவர் அறிக்கை கொடுத்திருக்கனும்! சாதியை விட்டு வெளி வராம ஒருபயலும் உருப்பட முடியாது!

Manickam said...

I am surprised to know that the first book published by the Tamil hindu site is selling like a hot cake in the book exhibition. They do not even have a marketing team and do not represent any political party or group, neither they advertised the book so far.

What do you think could be the reason of the success of their book பண்பாட்டைப் பேசுதல்?

Anonymous said...

டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.இலங்கையில் மீண்டும் ஜனநாயகம்: தேர்தல் அறிக்கையில் பொன்சேகா - அப்போ இதுவரை என்னவாம்!
2.நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபுசோரன் அரசு வெற்றி -அநியாயத்தின் கொடி பறக்கு!
3.பென்னாகரம் தொகுதியில் 2 ஆயிரம் பாமக-வினர் திமுகவில் இணைப்பு: அமைச்சர் தகவல் -அப்போ பாமகவின் டெபாஸிட்!
4.சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு -சரியான பாம்பு ஏணி விளயாட்டா!
5.புதுவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு - அங்க ஒன்னும் இடைத்தேரதல் இல்லையே!
6.பிரபாகரனின் தந்தை மரணம் - இது தேர்தலில் எதிரொலிக்குமா!
7.அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி நீர் கிடைக்குமா? -இப்படியே போனால்!
8.வீடுகளுக்குச் சென்று ஆட்சியர் ரேஷன் கார்டுகள் ஆய்வு -சபாஷ்!
9.2011-க்கு பிறகு அவார்டு படஙகளில் விஜய் நடிப்பார் -அப்போ அதுவரை குருவி,வில்லு,வேட்டைக்காரன் ரேங் தானா!
10.குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு -அமெரிக்கா காரன் கெட்டிக்காரன்!

கந்தசாமி

maddy73 said...

//வால்பையன் said...

'தமிழ்' தன்னாலத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும், இன்றைய 'தமிழ் தாத்தா' அவர்கள், திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரம் பாடியுள்ளார் எனத் தெரிந்தும் கடவுள் இல்லவே இல்லை என சொல்லி வாழ்கையை ஒட்டிகொண்டிருப்பது பற்றி?

திருவள்ளுவர்க்கு முன்னாடி இருந்தே கடவுள் நம்பிக்கை இருக்குது! அதுக்காக அதை ஏற்று கொள்ள வேண்டும், அதுவும் வள்ளுவரே சொல்லிட்டார் என்பதெல்லாம் ஓவர்! //

The idea of my Question is say that some people are cheating the public ( by saying dis-belief in GOD) for the sake of power/money.

I hope/believe a day will come that you will also realize there is one supreme power which is clearly beyond ur control(rather anybody's control & we call that as 'kadavul'). On that day, I hope u will certainly remember 'me' and 'Dondu Sir'.

பித்தனின் வாக்கு said...

// எங்கள் நங்கநல்லூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண் சர்வசாதாரணமாக பட்டங்கள் பெற்றிருக்க, அவர்தம் சமூகத்தில் பிள்ளைகள் எட்டாவது கூட தாண்டாமல் இருப்பதால் //
எந்த சமூகத்தில் இது மாதிரி நடக்கின்றது. நாங்கள் எல்லாம் மண வயது கடந்து பெண்கள் கிடைக்காமல் இருக்கின்றேம். அங்கு இருந்தால் சொல்லுங்கள்.

Mukhilvannan said...

50 ஆண்டுகளுக்கு முன்னால் ரயிலுக்கு காசு இல்லாது தவித்த ஒருவர் இப்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் வருமானவரிக்காரர்கள் என்ன ஏது என விசாரியாமல் வேடிக்கை பார்த்தால் வேறு என்னதான் விளைவை எதிர்பார்க்கிறீர்கள்?
நேற்று ஜீ.என்.பி. நூற்றாண்டுவிழாவில் நான் கேட்ட ஒரு செய்தி:
”50 அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே, ஜீ.என்.பி. தன் கச்சேரிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியது எல்லோருக்கும் தெரியும். ஒரு நிகழ்ச்சியில் பாடிய அவருக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் வழங்கப்பட்டது. ஜீ.என்.பி அந்த வருமானத்தை ஒழுங்க்காகத் தன் வருமான வரிக் காட்டினார்.” என்று ஒரு பிரமகர் தன் உரையில் கூறினார்.
இன்று?

Anonymous said...

//50 ஆண்டுகளுக்கு முன்னால் ரயிலுக்கு காசு இல்லாது தவித்த ஒருவர் இப்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் வருமானவரிக்காரர்கள் என்ன ஏது என விசாரியாமல் வேடிக்கை பார்த்தால் வேறு என்னதான் விளைவை எதிர்பார்க்கிறீர்கள்?//

namma thaanai thalavrai sollavillaiye?

வால்பையன் said...

//
I hope/believe a day will come that you will also realize there is one supreme power which is clearly beyond ur control(rather anybody's control & we call that as 'kadavul'). On that day, I hope u will certainly remember 'me' and 'Dondu Sir'. //

எனக்கு சுப்ரீம் ஸ்டார் தான் தெரியும்!
சரி அதை விடுங்க!

இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி வருடங்கள் ஆச்சு! அதுவும் ஒரே நாளில் பொசுகென்றெல்லாம் உருவாகவில்லை, அனைத்தும் படிப்படியாக கோடிக்கணக்கான வருடங்களில், அதனுடன் கணக்கிடும் போது, மனிதனின் காலம் சில நொடிகள் எனலாம், ஆரம்பத்திலிருந்து இந்தா வருது, அந்தா வருது சொல்றாங்களே தவிர வந்தபாடக்காணோம்! வரட்டும், அப்போ உங்களையும், டோண்டு சாரையும் நினைச்சிகிறேன்!

Anonymous said...

//வால்பையன் said...

//
I hope/believe a day will come that you will also realize there is one supreme power which is clearly beyond ur control(rather anybody's control & we call that as 'kadavul'). On that day, I hope u will certainly remember 'me' and 'Dondu Sir'. //

எனக்கு சுப்ரீம் ஸ்டார் தான் தெரியும்!
சரி அதை விடுங்க!

இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி வருடங்கள் ஆச்சு! அதுவும் ஒரே நாளில் பொசுகென்றெல்லாம் உருவாகவில்லை, அனைத்தும் படிப்படியாக கோடிக்கணக்கான வருடங்களில், அதனுடன் கணக்கிடும் போது, மனிதனின் காலம் சில நொடிகள் எனலாம், ஆரம்பத்திலிருந்து இந்தா வருது, அந்தா வருது சொல்றாங்களே தவிர வந்தபாடக்காணோம்! வரட்டும், அப்போ உங்களையும், டோண்டு சாரையும் நினைச்சிகிறேன்!//

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

Anonymous said...

டோண்டுவுக்கு பவர் கொடுக்கப்பட்டால் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்?
1.ஆந்திர தெலுங்கான விவகாரம்
2.ஆந்திர முனனாள் முதல்வர் மரணத்தில் உள்ள மர்மம்
3.ஸ்டாலின் அழகிரி ஆடு புலி ஆட்டம்
4.தமிழக காங்கிரஸில் உள்ள தள்ளு முள்ளு
5.அதிமுகவில் உள்ள உட்கட்சி தேர்தல் விவகாரம்
6.ஜக்குபாய் திருட்டு சீடி பூதம்?
7.மீனவர் புது சட்டம் பற்றிய சர்ச்சை
8.நெல்லையில் மந்திரிகளின் மனிதாபிமானமற்ற போக்கு
9.நடக்கும் மணல்கொள்ளை ,மரக் கடத்தல்
10.உணவுப்பொருட்களின் விஷ விலை ஏற்றம்

maddy73 said...

// வால்பையன் said...
இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி வருடங்கள் ஆச்சு! அதுவும் ஒரே நாளில் பொசுகென்றெல்லாம் உருவாகவில்லை, அனைத்தும் படிப்படியாக கோடிக்கணக்கான வருடங்களில், அதனுடன் கணக்கிடும் போது, மனிதனின் காலம் சில நொடிகள் எனலாம்//

Agreed..

//...வந்தபாடக்காணோம்! வரட்டும், அப்போ உங்களையும், டோண்டு சாரையும் நினைச்சிகிறேன்!//

I appreciate ur +ve way of taking my words.

Friendly.... maddy http://madhavan73.blogspot.com

butterfly Surya said...

உங்க ஸ்டைல் எப்போதும் சூப்பர்.

டோண்டு சார். நலமா..?? எந்த பதிவர் சந்திப்பிலும் பார்க்க முடியவில்லையே..??

Guru said...

Nataraj - u r effin' disgusting & shameless. no wonder westerners make fun of indians.

at home, take shower everytime after crapping.(ofcourse after using tissue)

at other places, use enough tissue paper, its almost as good as washing with water.

when you get home, take shower. problem solved.

why are you guys so obsessed with washing(with water)anyway?geez

you make the entire toilet a disgusting place. think about the others using it.

can anyone set foot in any of the indian public toilets.a big NO. why? disgusting filthy water everywhere.
while washing with water youmake the entire toilet a big mess, needless to say, you wet your underwear & pants too when you put them back on.

moreover bombay toilet(indian toilets) its hard to sit down there for shitting esply when wearing pants. you have to remove shoes in order to remove pants. even you would not want to step in the disgusting toilets after your business.

then you have to (soap)wash your hands since you touched your shit. before washing with soap(which is outside) you have to touch ur clothes to put them back on)- thats disgusting.

in western toilet you never touch the shit, but still people wash their hand. toilets are clean(if not used by stupid indians like you)

western toilets are much more hygeinic than shitholes in india.

look at you. shamelessly used the ice jar for your shitty business.
where other people use it for keeping edible things.

since that was a hotel room, that was all yours, shit naked(so you wouldn't stain your precious underwear at all), clean it with tissue paper, wash your hands, go straight into shower box & take shower.

in this way, everything is clean.

grow up guys. western people always think ahead of you. thats a fact. they know whats sanitary & whats not.

indians are biggest hypocrites. people wash their shits, take bath in the same river a few feet apart.
look whos talking.

problem with indians is, their mindset. you'll realise oneday that tissue paper method is not that bad at all, even bettr than your mathod. time only can tell.

in vadivel's word, you guys are "LATE PICK UP DA NEE"

வஜ்ரா said...

குரு என்பவர் அளப்பறியா சுய ஏளனச் சிந்தனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

எப்படி ஐரோப்பியாவில் டாய்லெட் போன பிறகு துடைக்கும் பழக்கம் வந்தது என்பது பற்றி அவருக்குத் தெரியவில்லை.
அவர்கள் சாப்பிடும் சாப்பாடு அந்த மாதிரி.
நார் சத்து இல்லாத சாப்பாடு. ஆகவே நம்மூர்காரர்கள் மலம் போல் இல்லாமல் கெட்டியாக இருக்கும். பேப்பர் போதும்.

நீங்கள் மணக்க மணக்க ரசம் சாதம், பொரியல் கூட்டு என்று அடித்துவிட்டு பேப்பரில் துடைத்தால் சண்டே இந்து பேப்பர் முழுதும் வேண்டும்...கூடவே அழுத்தித் துடைப்பதனால் ஏற்படும் ரணங்கள் நாளை பிரச்சனையாகும் அபாயம் உள்ளது.

இந்தியர்களின் மைண்ட் செட் என்ன என்பது பற்றி குரு அவர்கள் கூறவியலாது. அவர் அவரது மைண்ட் செட்டே இந்தியர்களின் மைண்ட் செட் என்று நினைக்கிறார். அது தவறு.
அவரது மைண்ட் செட் ஒரு குப்பை. அப்படித்தான் எல்லா இந்தியர்களும் நினைக்கிறார்கள் என்று அவர் நினைத்தால் அதற்கு அவரே பொறுப்பு.

இரண்டு நூற்றாண்டுகள் முன்பு குரு பிறந்திருந்தால் இப்படி மேற்குலக சிஷ்யனாக இருந்திருக்க மாட்டார்.
குழிப்பது ஆதிபாவங்களில் ஒன்றாக பாவிக்கப்பட்டது ஐரோப்பாவில்.
Throw the baby out with the bath water என்கிற சொல்லாடல் எங்கிருந்து வருகிறது என்பதை சற்று ஆராய்ந்தால் இன்று சுத்தசிகாமணிகள் என்று குரு போற்றும் மேற்குலகம் பற்றி தெரியவரும்.

Guru said...

//இந்தியர்களின் மைண்ட் செட் என்ன என்பது பற்றி குரு அவர்கள் கூறவியலாது. அவர் அவரது மைண்ட் செட்டே இந்தியர்களின் மைண்ட் செட் என்று நினைக்கிறார். அது தவறு.//

:))) LOL..Nah,Nah...YOU are wrong

my mindset is definitely NOT indian. otherwise how would i criticize the likes of my own? you totally missed the point.

in case you haven't noticed i'm criticising you all from the western point of you.

//அவரது மைண்ட் செட் ஒரு குப்பை.//
what a brilliant discovery. you must a genius.

// அப்படித்தான் எல்லா இந்தியர்களும் நினைக்கிறார்கள் என்று அவர் நினைத்தால் அதற்கு அவரே பொறுப்பு.
//

indian mindset: using tissue is unhygenic. this is what indians think. can you deny that? i can prove it with a question asked in this very post.//மேலை நாட்டினர் இதுமாதிரி தண்ணீர் கொண்டு தங்கள் ஆசனவாயை க்ளீன் செய்யாததால் எப்படி அவர்களுக்கு தொற்று மற்றும் பிற நோய்கள் வராமல் உள்ளது?//

whose mindset is this,Mr.Genius?

do you have problem in understanding?

//அளப்பறியா சுய ஏளனச் சிந்தனையில்//
LOL :))))) i'm an OCI. i'm proud of that. i never ashamed of myself because i'm totally westernised ages ago. But ashamed of you(all), bringing disgrace to india.

all i'm saying is "vandhu maanaththa vaangaatheengade"

Guru said...

corrections:
/western point of you/
western point of view

/you must a genius/
you must be a genius

வஜ்ரா said...

குரு,

அங்கு இருக்கும் குளிருக்கும், அவர்கள் உண்ணும் உணவிற்கும் ஏற்றார்போல் தான் துடைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. அதே போல் நமக்கு ஏற்ற உணவுப்பழக்கம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் தான் கழுவும் பழக்கம் வந்துள்ளது.
துடைப்பது தான் சுத்தம், கழுவுவது அசுத்தம் என்று நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள் வேறுயாரும் இல்லை.

But i still think that you suffer from deep inferiority complex.

//
my mindset is definitely NOT indian. otherwise how would i criticize the likes of my own? you totally missed the point.

in case you haven't noticed i'm criticising you all from the western point of you.
..
LOL :))))) i'm an OCI. i'm proud of that. i never ashamed of myself because i'm totally westernised ages ago. But ashamed of you(all), bringing disgrace to india.

all i'm saying is "vandhu maanaththa vaangaatheengade"
//

உப்பில் ஊறுவது ஊறுகாய் தான் ஆகும். உப்பாகாது. (நன்றி ஜெ.மோ)

நீங்கள் என்னதான் மேற்கத்தியர் என்று சொல்லிக்கொண்டாலும் நீங்கள் இந்தியர் தான். அதை ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாது.

உங்களைப்போன்றவர்கள் சக இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் முன் அவமானப்படுத்துவது அடிக்கடி நடக்கும், அப்படிச் செய்து உங்கள் நாட்டை நீங்களே அவமானப்படுத்திக்கொள்கிறீர்கள்.

ஆங்கிலத்தில் எழுதுவதாக இருந்தாலும் சொற்பிழை இல்லாமல் உங்களால் எழுத முடியவில்லை. உங்கள் "வெஸ்டர்ன் மெண்டாலிடி" அதில் பல்லிழிக்கிறது.

Guru said...

vajra,

nowhere i said washing with water is unhygenic or inferior than using tissue paper. i simply discussed the problems associated with it.

read properly. i said // using enough tissue paper is as good as washing with water// what does that say to you? which one is better, do you think i said?

once again you proved that you have a comprehending problem.
may be i should ask you this first. seriously, do you really speak/understand english? 'caz you never seem to get anything i say, fully.

all i'm saying is, when in rome, do as romans do. don't come here & try to implement your methods in public places & discomfort the others/locals & bring disgrace upon india(do whatever you want in your house - but not outside)

//நீங்கள் என்னதான் மேற்கத்தியர் என்று சொல்லிக்கொண்டாலும் நீங்கள் இந்தியர் தான். அதை ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாது.//
:)) do you want an award for this?
grow up man.

here we are talking about habits. 'westernised' does NOT mean changing RACE.

//ஆங்கிலத்தில் எழுதுவதாக இருந்தாலும் சொற்பிழை இல்லாமல் உங்களால் எழுத முடியவில்லை.//

btw regarding my english, when we think fast while typing, we tend to miss out some words or letters. thats normal.(ask bloggers they'll tell you about that)important thing is, how well you communicate your ideas.

i don't think my english is THAT bad. EVEN if it is, what that has to do with my westernisation?

do you think 'westerninsation' means learning english well? do you really know the meaning of that word? europians(west) are western people too. they don't speak english that well? what are they, pakisthanis now?

have a decency to stick to the topic we discuss.

//உங்கள் "வெஸ்டர்ன் மெண்டாலிடி" அதில் பல்லிழிக்கிறது//

LOL :)))) அது பல்லிழிக்கிறது இல்லை.

பல்லிளிக்கிறது. உங்களுக்கு தமிழே தகராறு. இதில் என் ஆங்கிலத்தை குறை கூறுகிறீர். வாழ்க நின் புலமை.

இதை வைத்து உங்கள் தமிழறிவை அல்லது தமிழ் பண்பாட்டை மதிப்பிடுவது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் நீங்க என் westernisation ஐ குறை கூறுவது. புரிந்திருக்கும் என நினைக்கிறேன்

//உங்களைப்போன்றவர்கள் சக இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் முன் அவமானப்படுத்துவது அடிக்கடி நடக்கும், அப்படிச் செய்து உங்கள் நாட்டை நீங்களே அவமானப்படுத்திக்கொள்கிறீர்கள்//

if you had that bad experience, i really feel sorry for you.

i've never criticised any indian in front of westerners. rather i try to help indians understand things, so that they don't have to go through the situation of getting criticised by westerners.
lets not give them chance to make fun of us.

see, here,in a tamil blog only, i discuss my ideas.
(Dondu sir, any westerner follow your blog? if yes, then i apologize for airing OUR dirty laundry in public)

அளவில்லா ஆதங்கத்துடன்
குரு

கிறு said...

குரு பெயரில் வந்துள்ள லூசே!!
வஜ்ரா சொல்றதின் சாரம்சத்தை பற்றி விவாதிக்காமல்
லூசுத்தனமா அல்பம் மாதிரி மற்ற விசயங்களைப் பற்றி
விவாதிக்கிறாயே...
முதலில் இந்த விசயத்திற்கு பதில் கூறு....
//
அங்கு இருக்கும் குளிருக்கும், அவர்கள் உண்ணும் உணவிற்கும் ஏற்றார்போல் தான் துடைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. அதே போல் நமக்கு ஏற்ற உணவுப்பழக்கம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் தான் கழுவும் பழக்கம் வந்துள்ளது.
//

Guru said...

முட்டாளே (கிறு)

முண்டமே, வஜ்ரா சம்பந்தமில்லாமல் கேட்டா அந்த திசையில் தான் பேச்சு திசை மாறும்.

//முதலில் இந்த விசயத்திற்கு பதில் கூறு....
//
அங்கு இருக்கும் குளிருக்கும், அவர்கள் உண்ணும் உணவிற்கும் ஏற்றார்போல் தான் துடைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. அதே போல் நமக்கு ஏற்ற உணவுப்பழக்கம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் தான் கழுவும் பழக்கம் வந்துள்ளது.
//
//

டேய் வெண்ணை, என்னய்யா இதுக்கு பதில் கூறணும்? இப்ப யாரு அத இல்லன்னு சொன்னா?

சிறுபிள்ளைத் தனமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தை சொல்ற. ரொம்ப புத்திசாலின்னு நெனப்பா?

இந்த ஒரு விசயத்த தவிர வேற எதுவும் தெரியாதா? சும்மா திரும்ப திரும்ப அதையே சொல்லிகிட்டு.
கல்வெட்டுல வெட்டி வெச்சிட்டு பக்கத்துலயே உக்காந்துக்க. முட்டாள்.

ஏன் தொடைக்கிறான், ஏன் கழுவுரான்னு ஆராய்ச்சியா நடக்குது இங்க?

எது சுகாதார....

ம்ம் பிரயோஜனமில்லை. விவாத நேர்மை இல்லாத, தேவையற்ற தனி மனித தாக்குதலை பிரதானமாக கையாளும் 'கிறு' போன்றோருடன் விவாதம்?? செய்தால் நானும் "அத்தளத்திற்கு" கீழிறங்க வேண்டி இருப்பதால், (முடியும் என்றாலும்) அத்தகையது யாராயினும் ஏற்புடையதன்று என்பதால் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

துஷ்டனை கண்டால், தூர.....

நான் விலகிக்கொள்கிறேன்

குரு

வஜ்ரா said...

குரு,
உங்களுடன் விவாதிக்க வேண்டியிருந்ததே உங்கள் இந்த கருத்துக்காகத்தான்.

விவாதப்பொருளாக நீங்கள் நிறுவ முயன்றது அல்லது நீங்கள் நம்புவது.

//
western people always think ahead of you. thats a fact. they know whats sanitary & whats not.
//

அதிலேயே பலருக்கு இங்கு ஆட்சேபம் இருக்கிறது. அதில் நானும் ஒருவன்.பேப்பர் கண்டு பிடிப்பதற்கு முன்னால் மேற்கில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று யோசிக்கத் தோன்றிகிறது.

//
indians are biggest hypocrites. people wash their shits, take bath in the same river a few feet apart.
look whos talking.
//


பல நேரங்களில் அப்படித்தான் எனக்கும் தோன்றியது. இன்றும் அப்படித்தான் பல நதிகள் உள்ளன. சில நூற்றாண்டுகள் முன்பு குளிப்பதே ஆதிபாவங்களில் ஒன்று என்று நம்பிய கூட்டத்தினரை இன்று நீங்கள் சுத்த சிகாமணிகள் என்று சொல்கிறீர்கள்.
அதுவும் இல்லாமல், எப்பவுமே சுத்தத்தில் அவங்க ஒரு படி மேலே...என்றெல்லாம் உளருகிறீர்கள். இதெல்லாம் ஓவர்.


நாம் மேற்குலகத்து செயல்களை அப்படியே காப்பியடிக்காமல் சுத்தத்தைப் பற்றி நாமே ஆராய்ந்து ஒரு நல்ல சுகாதார முறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

for example: http://japanesestuff.net/toilets/japan%20toilet.jpg


//
problem with indians is, their mindset. you'll realise oneday that tissue paper method is not that bad at all, even bettr than your mathod.
//

நீங்களே பேப்பர் தான் சிறந்தது என்று வாதிடுகிறீர்கள். பின்னர்


//
nowhere i said washing with water is unhygenic or inferior than using tissue paper. i simply discussed the problems associated with it.
//


பின்னர் இப்படியும் சொல்கிறீர்கள்.

இந்தியர்கள் தான் மாபெரும் ஹிப்போகிரிட்கள் என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே பொருத்திப்பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சப்ப மேட்டருக்காக உங்களுடன் விவாதித்தது வீண் வேலை...


வெள்ளைக்காரன் தான் சுத்தத்துக்கே முன்னோடி என்ற உங்கள் நம்பிக்கையை மாற்ற நான் யார் ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது