1/11/2010

ஏதோ என்னாலான உதவி

பெங்களூருவிலிருந்து நண்பர் ஸ்ரீராம் சிவராமன் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே தந்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Dear Raghavan Sir,

I am Sriram from Bangalore. Hope you can recollect that we have interacted over phone few times.

I am a member in TamilBrahmins.Com website which is doing good service for our community. In that regard, I have volunteered for the Vivaha Sangamam (Parents Meet) to be held in Bangalore on 24th of this month. For giving publicity, I need your help by posting the
below content in your blog. Please help!


விவாஹ சங்கமம் - ஜனவரி 24 - பெங்களுரு

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/ அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும் http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர், http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!


--
Thanks,
Sriram Sivaraman

ஓக்கே ஸ்ரீராம் அவ்வாறே செய்து விட்டேன். உங்கள் முயற்சிகள் நல்லபடி நடக்க எனது ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

rajan RADHAMANALAN said...

ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !

கெடக்கரதெல்லாம் கெடக்கட்டும் ! கெளவியத் தூக்கி மனையில வெய்! நடத்துங்க !

நக்கீரன் பாண்டியன் said...

ஒரு நல்ல காரியம் ஒருவர் பண்ணினால் மனமுவந்து பாராட்டுவோம்.எனது நண்பர்களுக்கு இந்தச் செய்தியை மின்னஞ்சல் செய்துள்ளேன்.

செந்தழல் ரவி said...

நக்கீரன் பாண்டியன் said...
ஒரு நல்ல காரியம் ஒருவர் பண்ணினால் மனமுவந்து பாராட்டுவோம்.எனது நண்பர்களுக்கு இந்தச் செய்தியை மின்னஞ்சல் செய்துள்ளேன்///


நான் இல்லை நான் இல்லை...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல் டோண்டு சார்

ஜோதிஜி said...

உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்

maddy73 said...

Thanks for the messege..
& Dear Dondu Sir,
"ஏதோ உங்களால் செய்யக்கூடிய மற்றுமொரு உதவி"

http://madhavan73.blogspot.com/2010/01/alexander-great.html

Anonymous said...

இந்த நிகழ்வுகள் பற்றி உங்கள்( நங்க நல்லூர் பஞ்சாமிர்தம் டைப்பில் ) விமர்சனம்?
1.தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்
2.எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை
3.கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம்
4.முலாயசிங்க்கு அம்ர்சிங்ன் சூப்பர் பஞ்ச்
5.பப்ளிக் செக்டார் பங்குகள் ( கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்)விற்பனை முஸ்தீபு( பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)

Anonymous said...

தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்

அதிமுக தலைவியின் நிலமை அய்யோ பாவம்

Anonymous said...

//எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை//

தமிழினத் தலைவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த தமிழ் சமுதாயம் உய்ய பாடுபடவேண்டும்

Anonymous said...

//கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம் //

ஆனால் இது வரை இப்படி பேசியதில்லையாம்.எல்லாம் காலக் கோளாருதனா?

Anonymous said...

//முலாயசிங்க்கு அம்ர்சிங்ன் சூப்பர் பஞ்ச்//


காசேதான் கடவுளாடா எனப் பாடவேண்டும்

Anonymous said...

//பப்ளிக் செக்டார் பங்குகள் ( கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்)விற்பனை முஸ்தீபு( பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)//

இந்தியாவில் ராணுவத்தை தவிர பிற துறைகள் தனியார்மயம் ஆவதை இனி கடவுள்கூட தடுக்க முடியாது.

Anonymous said...

//ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !

கெடக்கரதெல்லாம் கெடக்கட்டும் ! கெளவியத் தூக்கி மனையில வெய்! நடத்துங்க !//

அவாள் பற்றிய செய்தியை அவாளுக்கு அவாள் சொல்லமால் யார் சொல்லுவாவோய்!
இந்தப் பகுத்தறிவு பிரச்சாரம் வேற கிராமங்களில் உள்ள அஹ்கிரகாரத்தை வாழும் சமத்துவபுரமாய் மாற்றிய பிறகு அவாளுக்கு இது மாதிரி செய்வது பார்ப்பன இனமானமுரசு டோண்டுவுக்கு புண்ணியம் ஓய்!

Anonymous said...

தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்

1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா?இல்லையா?

2.அதிமுகவின் நிலை இதில் தெளிவாக இல்லையே?

3.எழுத்துச் சீர்திருத்தம் போல் இதற்கும் வரும் காலத்தில் முழு ஆதரவு கிடக்கும் போல் உள்ளதே?

4.முற்பட்ட சாதியினர் மட்டும் எதிர்ப்பதாய் கூறப்படும் புகார்கள் பற்றி?

5.கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில் ?

Anonymous said...

அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது எனும் எதிர்க்கட்சிகளின் குற்ற்ச்சாட்டு

1.இலவசம்தான் ஓட்டுகளை அள்ளுகிறது எனத் தெரிந்தபிறகும் இந்த நிலை மாறமா?

2.வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?

3.உணவு,உடை,உறைவிடம் மூன்றும் இலவசமாய் கொடுத்து பொழுது போக டீவியும் கொடுத்த அரசு அடுத்து மக்களை கவர என்ன செய்யும்?

4.ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானல் அடுத்த தேர்தலுக்கு எவ்வளவு பணம் கைமாறும்?

5.திமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் சரிவு எனும் அதிமுக தலைவியின் குற்றச்சாட்டு உண்மையா? புள்ளிவிபரம் சரியா?

Anonymous said...

எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக்க மாட்டேன் என கலைஞரின் உருக்கமான பேச்சு
1.இந்த நினைப்பு கூட அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு இல்லாதது சரியா?

2.அதிமுக உள்கட்சி தேர்தலில் குழம்பியுள்ள தொண்டர்களை மேலும் குழப்பவா?

3.இவ்வளவு கரிசனம் உள்ள திமுக தலைவர் ஏன் எம்ஜிஆரை கடசியை விட்டு நீக்கினார்?

4.அண்ணாவின் மறைவுக்கு பின்னால் நடந்த திமுக தலைவர் தேர்தலில் எம்ஜிஆரின் திடிர் அணி மாற்றம் உண்மையில் என்ன நடந்தது?

5.இன்னும் எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்ற தகவல்-தலைவரின் இந்தப் பேச்சு தொடர்பு உண்டா?

Anonymous said...

14-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள்,சாதனைகள்,குறைபாடுகள்,பேச்சுக்கள்,சாதனைகள்,வெற்றிகள்,சந்தித்த இடர்கள், குணநல மாற்றங்கள் இவற்றின் அடிபடையில் இவர்களை ஒப்பிடுக?
1.திரு மோடி-திரு கருணாநிதி
2.திரு அத்வானி-திரு மன்மோஹன்சிங்
3.அதிபர்அனில் அம்பானி-அதிபர் முகேஸ் அம்பானி
4.உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
5.தேமுதிக வி.காந்த்-சமதா சரத்
6.சன்டீவி-கலைஞர்டீவி
7.தமிழக அரசு-கேரள அரசு-நதிநீர் பிரச்சனை
8.சீனா-இந்தியா-எல்லை பிரச்சனை
10.முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
11.டோண்டு-பெரியார் கொள்கை காக்கும் பதிவர்கள்
12.தமிழ்மணம் திரட்டி-தமிழிஷ் திரட்டி
13.துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி
14.அமைச்சர் ராஜா-அமைச்சர் தயாநிதி
15.சிபிஎம்வரதராஜன் -சிபிஐ தா.பாண்டியன்
16.சினிமா பழைய பிரபல சினிமா இயக்குனர்கள்-சாதனை புரியும் புது இளம் இயக்குனர்கள்
17.பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்

நக்கீரன் பாண்டியன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

பிரபல பதிவர் “க”


மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு

முற்போக்கு பதிவர் “ர”-

பதிவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள். கொஞ்ச பேருக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களும்.


ithu sariyaa Naalai kaali 5 MANIKKU
DONDU PATHILKAL VILAKKAM SOLLUMAA?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது