அனானி (20.01.2010 காலை 09.10-க்கு கேட்டவர்)
1. அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?
பதில்: இம்மாதிரியெல்லாம் இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம். ஒரு உறைக்குள் இரு கத்தி இருக்க முடியாது. அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடம் மட்டும் தெளிவாக இருப்பதே ஒரு கட்சியின் நிலைத்தன்மைக்கு உகந்தது.
2. மீண்டும் சகோதர மோதலா?
பதில்: அது எப்போதுமே இருப்பதுதான். என்ன, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வெளியே வருகிறது.
3. தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?
பதில்: தொண்டர் பலம் இல்லாதவர். இப்போட்டியில் அவர் இருப்பது கடினம்.
4. ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?
பதில்: அப்படியாவது ஒரு தீய சக்தி ஒழியட்டுமே.
5. இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்தவரின் கதி இனி?
பதில்: யாரைச் சொல்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல ஒருவர் நடந்தால் மருத்துவ ரீதியாக பிரச்சினைகள் வரும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை.
அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்,நடிகைகள் வீடுகளில் வருமான வரி ரெய்டு,ஆவணங்கள் பறிமுதல்.
6.இதற்கும் அரசியல் சாயம் சிலரால் பூசப்படுவதில் உண்மை உண்டா?
பதில்: நெருப்பில்லாமல் புகையுமா?
7. திமுகவில் பிளவு போது கூட இந்த ஆயுதம் எம்ஜிஆர் மேல் பாய்ந்ததது என் சொல்லபட்டதே?
பதில்: வருமான வரி பிரச்சினை வந்தது. அதனாலேயே பிறகு அவர் மத்திய அரசில் யார் பதவியில் இருந்தாலும் அவர்களை அனுசரித்தே நடந்தார்.
8. ஜெ மீது போடப்பட்ட வழக்குகளின் கதி?
பதில்: அவற்றை சீக்கிரம் நடத்தவிடாமல் தடுப்பது எது என எனக்கும் புரியவில்லை.
9. திமுக இந்த செயலுக்காக இந்தத்துறையில் துணை மந்திரியாவது தொடர்ந்து வைத்துள்ளது பற்றி?
பதில்: வைத்ததில் ஏதேனும் பிரயோசனம் இதுவரை கண்டார்களாமா?
10. இந்தத் துறையில் இதுவரை இருந்தவர்களில் சிறப்பான நடுநிலையான செயல்பாடு யாருடையது?
பதில்: என்னைப் பொருத்தவரை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
//தமிழகத்தில் முதன் முறையாக 3 ஜி மொபைல் போன் சேவை அறிமுகம் : கோவையில் மத்திய அமைச்சர் ராஜா துவக்கினார்//
11. நலிவடைந்திருந்த ஜவுளித்துறையை பொலிவுள்ளதாக்கும் தயாநிதி வகித்துவந்த துறையின் நலிவான நிலைக்கு இவரது தன்னாலமான செயல்பாடுகள் காரணம்?
பதில்: புத்திசாலித்தனமாக தனது தலைவரின் நலத்தையும் பார்த்து கொள்வதால் அவர் பிழைக்கிறார்.
12. நாளைய பிரதமர் ராகுல் காந்திக்கு இவரை பிடிக்கவில்லை அதனால் இவரை செக் வைக்க பைலட் அவர்களை இணை அமைச்சர் போட்டுள்ளார் எனற தகவல் பலன் கொடுத்ததாய் தெரியவிலையே?
பதில்: கடலில் மிதக்கும் ஐஸ் கட்டியின் ஒன்றின் கீழ் பத்தின் பாகம்தான் வெளியே தெரியும் என்பது தவிர்க்க முடியாத விஷயம்.
13. இவர்மீது ரெய்டுகள் எனத் தகவல் கடைசியில் புஸ்வானமாய் மாற்றவது யார்?
பதில்: ஐஸ் கட்டியின் மறைந்துள்ள பாகம்
14. தயாநிதி காலத்தில் 2 ம் இடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல் செல் சேவையை இன்று 6 ம் இடத்துக்கு வர வைத்துவிட்டு பெரிய சாதனை செய்தவர் போல் பேசும் இவரது கித்தாப்பு பேச்சு பற்றி?
பதில்: அதுதான் நோக்கம் என நினைத்து செயல்பட்டிருந்தால் அவர் அதில் வெற்றியடைந்தார் என்றுதானே கொள்ள வேண்டும்?
15. கருணாநிதி இவருக்கு கொடுக்கும் சிறப்பு சலுகைக்கு, அதீத பாதுகாப்புக்கு வெளியே பேசப்படும் பத்திரிக்கைகளில் எழுதப்படும் கிசு கிசுக்கள் உண்மையா?(பிளட் இஸ் திக்கெர் தேன் வாட்டெர்)
பதில்: ஒரு பழைய பாட்டு ஏனோ நினைவுக்கு வருகிறது. “மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், அழகான மதராசு மாப்பிள்ளை டோய்”. ஆனால் அது ஏன் நினைவுக்கு வர வேண்டும் என எனக்கு சொல்லத் தெரியவில்லை.
maddy73
1) "ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது", இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். அது பற்றி?
பதில்: அதே உரலில் வந்த கருத்துக்களில் ஒன்று மாத்யூ என்பவருடையது, அது இதோ. அதுதான் எனது பதிலும்.
என் மனம் பெரியது என்ற சொல்லினாலே உங்கள் மனம் சின்னது என்று உறுதிபடுத்தி விட்டீர்கள். ஏனென்றால் குறுகிய மனம் படைத்தவர்களால் மட்டுமே தன்னை தானே புகழ்ந்து கொள்ள முடியும். மக்கள் உங்களுக்கு vote போட்டு முதல் அமைச்சர் ஆக்கினதே அவங்கள் நலன் காப்பதற்கு தான். அது உங்களுக்கு தெரியும் போது (?!) நீங்களும் விழா எடுப்பை நிறுதிகொள்ளுவீர்கள் அவர்களும் உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பாடுவதை நிறுத்துவார்கள்! அது வரை இந்த கேவலம் தொடரத்தான் செய்யும். ஒரு கேள்வி, நம்ம முன்னால் குனிஞ்சு கும்பிடு போடறவன் எல்லாம் முதுகுக்கு பின்னால் கேவலமா திட்டற ஆட்கள்தான் என்று என்னைக்காவது உங்கள் மூளைக்கு (?!) எட்டினது உண்டா?
by S Mathew,Toronto,Canada 1/22/2010 9:20:17 PM IST
2) ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம்; இனவெறியில்லை என கெவின் ருட் மறுப்பு.
பதில்: இது ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கக்கூடிய பிரச்சினை அல்ல. இன்னும் தகவல்கள் தேவை. நம்மவர்கள் நடத்தையும் அம்மாதிரி தாக்குதல்களுக்கு அழைப்பு தருகின்றன என்னும் ரேஞ்சிலும் பேசுகின்றனர். உண்மையறிந்து கருத்து சொல்வது நலம்.
3) விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசின் அறிவிப்பு, "ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 10 கிலோ அரிசி : 2 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு"
பதில்: 2 மாதங்களுக்கு அப்புறம் என்ன செய்வதாம்? வயிற்றில் ஈரத்துணிதானா?
4) 44 நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய பரிந்துரை, "நாட்டின் இன்றைய கல்லூரிக்கல்வியின் நிலை"
பதில்: அவற்றுக்கு முதலில் அங்கீகாரம் ஏன் வழங்கப்பட்டது என்பதுதான் முதலில் எழும் கேள்வி? அவர்றில் பெரும்பான்மை தமிழகத்தில்தான் உள்ளன என்பது வெட்கக்கேடான விஷயம்.
5) சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட எனது வலைப்பூவின் மணம் உங்களை வந்தடைந்ததா? என்னைபோன்ற இளம் வ(க)லைஞர்களை நீங்களும் ஊக்குவிக்கலாமே.
பதில்: பார்த்தேன். நன்றாக உள்ளது.
கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1. வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் -தமிழன் சோத்தால் அடித்த பிண்டம் அல்ல!
பதில்: சோற்றால் அடித்த பிண்டம் என்னும் சொலவடைக்கு காப்புரிமை வேறு யாரிடமோ இருப்பது போலத் தோன்றுகிறதே?
2. ராணுவ ஆட்சியை ஏற்படுத்த ராஜபட்ச திட்டம்: ரணில் -இலங்கை ஜெ வா?
பதில்: இலங்கை அரசியல் எனக்குத் தெரியாது.
3. கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி புழக்கத்தை தடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம் -சும்மா உதார் விடுதலா?
பதில்: கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித ஒத்துழைப்புத்தானோ?
4. நிகர்நிலை பல்கலை. முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது: மாணவர் பெருமன்றம் -மத்தளத்துக்கு இரண்டுபக்கம் இடியா?
பதில்: இடியாப்பச்சிக்கல்தான். மாணவர்களின் நலம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.
5. யாருடைய பரிந்துரையும் இன்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: பழநிமாணிக்கம் -ஆனா கடனை திருப்பி கேட்கக்கூடாது!
பதில்: அடுத்தவீட்டுக்காரன் நெய்யே என் பெண்டாட்டி கையே.
6. திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிதான் அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தது -உங்களை டெல்லிக்கு அனுப்பாட்டா இங்கே?
பதில்: டில்லி ட்ரான்ஸ்ஃபர் பிடிக்கல்லைன்னா என்ன செய்வதாம்?
7. உரிமையாளர் கண்ணெதிரே ரூ.5 லட்சம் பணத்துடன் பைக் அபேஸ்! -இதைத்தானே அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்!
பதில்: திருட்டு நடப்பதோ, அரசியல்வாதிகள் கொட்டம் அடிப்பதோ புதிதொன்றும் இல்லையே.
8. கட்டாய ஹெல்மெட்டில் இருந்து இளம்பெண்களுக்கு விதிவிலக்கா? -சொள்ளர்கள் வேறு என்ன செய்வார்கள்!
பதில்: பெண்கள் உயிரென்றால் கிள்ளுக்கீரையா?
9. தமிழகம், புதுவையில் தற்பொழுது தகுதிநீக்கம் செய்யும் அளவுக்கு மோசமாக உள்ள 17 கல்வி நிலையங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுத்த நடவடிக்கை சரிதானா? - பொறவு தேர்தல் செலவுக்கு யார் காசு தருவாக!
பதில்: அதுக்காக மாணவர்களது எதிர்காலத்தை பணயம் வைக்கும் உரிமையை யார் இவர்களுக்கு தந்தது?
10. தமிழகத்தில் மர்மக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் இல்லை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் -முழுப்பூசணிக்காய் சோற்றில் மறையுதுங்கோ!
பதில்: பின்னே என்னவாம்?
அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. இலங்கை தேர்தலில் பொன் சேகா - ராஜபக்சே யார் வெற்றி பெற்றால இந்தியாவுக்கு நல்லது?
பதில்: யாராக இருந்தாலும் அவர்கள் மீது ராஜரீதியாக நிர்ப்பந்தம் வைக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. அப்போதுதான் இந்தியாவின் ந்நலனை பாதுகாக்க இயலும். ஈழத்தமிழர்களின் நலனை புறக்கணிப்பதுவும் இந்திய நலனுக்கு உகந்தது அல்ல.
2. தமிழக அரசின் குண்டர் சட்டத்தால் திரைஉலகை காப்பாற்ற முடியுமா?
பதில்: தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கெதிராக எவ்வளவுதான் செய்ய முடியும்?
3. சம்பள உயுர்வு கேட்டு போராடும் இந்திய ஹாக்கி அணியினரின் தகராறு நியாயம் தானே?
பதில்: நியாயம்தான். அத்துடன் கூட சம்பளத்தையே பாக்கி வைத்திருப்பது அநியாயத்திலும் அநியாயம்.
4. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: எவ்வளவு டிபாசிட்டுகள் முடியுமோ அத்தனை டிபாசிட்டுகளையாவது காத்துக் கொள்ள வேண்டும்.
5. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: தாம் மூன்றாம் சக்தியாகவாவது இருப்பது என்னும் நிலையை மட்டும் மனதில் கொண்டால் அவ்வாறே இருந்துவிட வேண்டியதுதான். நோக்கத்தில் தெளிவு வேண்டும்.
6. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: மத்தியில் ஆட்சி செய்தால் போதும் என்னும் மனநிலை இருக்கும்வரை தமிழகத்தில் அவர்களுக்கு ஆப்ஷன்கள் கம்மி.
7. பெரும் குழப்பத்தில் இருக்கும் ஆந்திரப் பிரச்னை பற்றி?
பதில்: எது எப்படியானாலும் தெலுங்கானா அமைவது நாட்டில் பல விபரீதங்களுக்கு முன்னுதாரணமாகி விடும் நிலைமைதான் உள்ளது.
8. சகலருக்கும் விருதுகள் வழங்கி சாதனை புரியும் திமுக அரசு?
பதில்: கலைஞருக்கு விருதுகளின் புரவலர் என்னும் புது விருது தந்து விடுவோமா?
9. விஷமாய் ஏறியுள்ள அரிசி,பருப்பு விலை குறையும் எனச் சொல்லுவது?
பதில்: Wishful thinking.
10. மொத்த விலையில் ஏற்படும் சரிவு சில்லறை விற்பனையில் தெரியவில்லையே?
பதில்: இடையில் இருக்கும் இத்தனை இடைத்தரகர்களை மறந்து விட்டீர்களா?
11. கருணாநிதியின் தந்திரத்தால் நிதி நெருக்கடி இல்லாத் தமிழகம் எனும் கழகத்தின் பேச்சு?
பதில்: வெந்த புண்ணில் வேல் வீச்சு.
12. தமிழகத்தில் தங்கபாலு காங்கிரஸ்; ஜி.கே.வாசன் காங்கிரஸ்; ப.சிதம்பரம் காங்கிரஸ்; ஈ.வெ.கி.ச. இளங்கோவன் காங்கிரஸ்- இவைகளின் இன்றைய நிலவரம்?
பதில்: இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் திருநாவுக்கரசு காங்கிரசும் வந்து சேர்ந்து கொள்ளும்.
13. பரபரப்புடன் வெளிவந்த ஜக்குபாய் திரைப்பட சி.டி பார்த்தீர்களா?
பதில்: இல்லை, பார்க்க மனம் இல்லை.
14. ராகுல் புண்ணியத்தால் ப.சிதம்பரம் தமிழ்க முதல்வராய்?
பதில்: ராகுலுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதான் என்ன?
15. கருணாநிதியின் சமத்துவபுரம் திட்டம் செயல்பாடு எப்படி
பதில்: ஆரம்ப சூரத்தனம்.
16. கருணாநிதியின் காங்கிரீட் வீட்டு வசதித்திட்டம் திமுகவின் வாக்கு வங்கியை வளமாக்க எனும் குற்றச்சாட்டு?
பதில்: அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே.
17. தற்காலத்தில் வாழும் இன்றைய பெண்களை யாரோடு ஒப்பிடலாம்?
பதில்: இதற்கு பதிலளிப்பது முரளி மனோகர்.
ஏன் ஓப்பிட வேண்டும்? பெண்களோ ஆண்களோ அவரவர் இடங்களில் இருக்கட்டுமே. இருவருக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் உண்டு. வாழ்க அந்த வித்தியாசங்கள்.
ஆமென். நன்றி முரளி மனோகர் (எனக்கூறுவது டோண்டு ராகவன்).
18. நடக்கும் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாக்க்கள் ஆள்சேர்க்கும் செயலாய் இருக்கிறதே?
பதில்: எதற்கு ஆள் சேர்க்கிறார்களாம்? கொள்ளையில் பங்கு பெறவா? இருக்காதே.
19. அட்ரஸ் தேடும் கம்யூனிஸ்டுகள் வரும் தேர்தலில் என்ன செய்வார்கள்?
பதில்: கூகளில் தேடினால் அட்ரஸ் கிடைக்கலாம்.
20. பம்பாய் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் பாதுகாப்புக்கு இதுவரை 31 கோடி ரூபாய் செலவாகியுள்ளதை பார்க்கும் போது?
பதில்: சட்டுபுட்டென வழக்கை முடித்து அவனை தூக்கில் போடாமல் ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள்? அவனை வைத்து பயணக் கைதிகளை பிடிப்பார்கள். இதெல்லாம் தேவையா?
21. வாழும் மக்களின் தன்னம்பிக்கை குறைவது போல் செய்திகள் வருகிறதே?
பதில்: நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு ஒரு சீரியல் ஏ.வி.எம். பேனரில் வந்தது. அதுதான் உண்மை. எல்லாமே நம்ம சாய்ஸ்தான்.
22. மாநில அளவில் அடுத்த அறுவடை கூவம் நதியைச் சீரமைப்பா?
பதில்: மாநில அளவிலா? குடும்ப அளவில் எனச் சொல்லுங்கள்.
23. மாவட்ட அளவில் அடுத்த அறுவடை செம்மொழி மாநாடா?
பதில்: தனிப்பட்ட அளவில் பாராட்டுகள்தான் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் என நினைகிறேன்.
24. அகில இந்திய அளவில் அடுத்த அறுவடை எது என நினைக்கிறீர்கள்?
பதில்: ஸ்பெக்ட்ரம் அடுத்த தலைமுறை ஏதேனும் வராமல் போய் விடுமா என்ன?
25. பொருளாதாரத்தை சீரழிக்கும் கள்ள நோட்டும் பெருகிவிட்டதை பார்க்கும் போது?
பதில்: இந்தோநேசியாவில் சுகர்ணோவின் சோஷலிச அரசு ஆட்சி செய்தபோது அன்னாட்டு நாணயத்தை கள்ளத்தனமாக அச்சிட ஆட்கள் கிடைக்கவில்லை, ஏனெனில் அதன் மதிப்பு அதல பாதாளத்தில் இருந்தது. பிறகு தனியார் பொருளாதாரம் வந்ததும் ஒரு கட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அதாவது அவற்றை அச்சிடுவது கள்ளநோட்டு வியாபாரிகளுக்கு கட்டுப்படியானது என்று பொருள். அம்மாதிரி பார்த்தால் இந்திய ரூபாயை இன்னும் கள்ள நோட்டாக தயாரிக்கிறார்கள் என்றால் என்ன யோசிக்கலாம்? இது ஒரு பார்வை கோணம் மட்டுமே. நான் படித்தவற்றிலிருந்து தொகுத்த எண்ணங்களை சார்ந்தது அது. அது உண்மையா என்பதை பொருளாதாரம் நன்கு கற்றறிந்தவர்கள் யாரேனும் கூறலாம்.
26. மக்களிடம்பெரும் வரவேற்பு பெற்று உள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு
அரசின் கஜானா எவ்வளவு காலி?
பதில்: மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல திட்டம்போலத்தான் தெரிகிறது. ஆனால் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். புரூனோ போன்றவர்கள் இன்னும் ஆதண்டிக்கான பதில்கள் தரலாம்.
27. தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தை ஆதரிக்கும் செயலை பார்த்தால் ஆதாயம் யாருக்கு?
பதில்: மாதம் ஆறாயிரம் ரூபாய் வருமான வரம்பாக கொண்டால் எத்தனை பேச்ருக்கு பலன் வரும்? அதுவும் தனியார் மருத்துவமனைகளுகு ஏன் முன்னுரிமை? எங்கேயோ இடிக்கிறது.
28. அழகிரியின் கோபம் இந்ததடவை தலைவர் எப்படி சமாளிப்பார்?
பதில்: தெரியவில்லை, கஷ்டம்தான்.
29. கல்கத்தா தமிழ் சங்கத்தின் தமிழ்த் தலைமகன் விருது கலைஞருக்கு?
பதில்: கல்கத்தா என்ன டாக்காவில் ஏதேனும் தமிழ்ச்சங்கம் இருந்தால் அவர்களிடமும் விருதுகள் பெற ஏற்பாடு செய்து கொள்வார் அவர்.
30. மக்களிடம் சமச்சீர் கல்விக்கு வரவேற்பு எப்படி?
பதில்: இம்மாதிரி முயற்சிகள் எல்லோரையும் ஒரு common lower factor-க்குத்தான் கொண்டு செல்கின்றன என்பதால் ரொம்ப நம்பிக்கை எல்லாம் இல்லை.
31. பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு சில ஆசிரியர்களின் சில்மிஷங்களை பார்க்கும் போது?
பதில்: அவ்வாறு செய்பவர்களுக்கு சவுதி அரேபியா முறைப்படி எதையாவது வெட்டிவிட வேண்டியதுதான்.
32.மதியூகம் -தலைவிதி -விளக்க்மாய் கதை சொல்லி விளக்கவும்?
பதில்: அம்புலிமாமா எல்லாம் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கைவசம் கதை ஏதும் லேது.
அடுத்த வாரம் முடிந்தால் மீண்டும் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
18 comments:
/
அடுத்த வாரம் முடிந்தால் மீண்டும் சந்திப்போமா?//
ஏன் டோண்டு சார் என்னாச்சு?
Anonymous Anonymous said...
/
அடுத்த வாரம் முடிந்தால் மீண்டும் சந்திப்போமா?//
ஏன் டோண்டு சார் என்னாச்சு?
//மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், அழகான மதராசு மாப்பிள்ளை டோய்”.//
ஆனாலும் டோண்டு உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
///23.2
வினவு
says: January 28, 2010 at 4:17 pm
டோண்டு இராகவன் பெயரில் மறுமொழியிட்டிருக்கும் அனானி நண்பரே உங்கள் ஈமெயில் முகவரியை சரிபார்த்த பின்னர் அனுப்பியிருக்கலாம். உங்கள் அடுத்த பின்னூட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.///
http://www.vinavu.com/2010/01/27/muthukumar/#comment-16136
இத பாத்தீங்களா சார்?
//அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?//
அண்ணாத்தைக்கு அப்பாவோட சீட்டு மேல தான் கண்ணு போல!
//மீண்டும் சகோதர மோதலா?//
இந்த முறை எத்தனை உயிர் பலியாகும்ன்னு தெரியலையே
// தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?//
அவரு பொழப்ப பார்க்க போயிட்டாரு!
//ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?//
அம்பானி குரூப்பு பிரியும்னு நினைச்சோமா என்ன!?
// ஜெ மீது போடப்பட்ட வழக்குகளின் கதி?//
அதெல்லாம் பேருக்கு தான்!
எதாவது அறிக்கை விட்டால் மட்டும் நியூஸ் வரும்!
// தமிழகத்தில் மர்மக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் இல்லை://
அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் இல்லாமல் இருந்திருக்கும்!
//தமிழக அரசின் குண்டர் சட்டத்தால் திரைஉலகை காப்பாற்ற முடியுமா?//
திருடனை வீட்டுகுள்ளயே வச்சிகிட்டு வெளியே தேடினால் முடியுமா!?
//சம்பள உயுர்வு கேட்டு போராடும் இந்திய ஹாக்கி அணியினரின் தகராறு நியாயம் தானே?//
கிரிக்கெட்டில் இப்படி செய்திருந்தால் ஆட்சியே கலைக்கப்பட்டு இருந்திருக்கலாம்!
//வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் எப்படி இருக்கும்?//
மஞ்சள் துண்டு வாங்க வேண்டியிருக்கும்!
//கருணாநிதியின் தந்திரத்தால் நிதி நெருக்கடி இல்லாத் தமிழகம் எனும் கழகத்தின் பேச்சு?//
கழக கண்மணிகளூக்கு நெருக்கடி இல்லை போல!
//வால்பையன் said...
//கருணாநிதியின் தந்திரத்தால் நிதி நெருக்கடி இல்லாத் தமிழகம் எனும் கழகத்தின் பேச்சு?//
கழக கண்மணிகளூக்கு நெருக்கடி இல்லை போல!//
mr.vall paiyan
ask some critical questions to dondu
nowadays the question asked by people are very dry and not worthy.
k.r
Respectful Dondu Sir,
Thanks for the answers to my Qs & also your visit to my blog page.
--maddy alias Madhavan
சினிமா தவிர கருணாநிதி என்ன பிரச்சனையை வெற்றீகரமாக சாதித்தார் என்று சொல்ல முடியுமா?
//jaisankar jaganathan said...
சினிமா தவிர கருணாநிதி என்ன பிரச்சனையை வெற்றீகரமாக சாதித்தார் என்று சொல்ல முடியுமா//
தலைவர் கலைஞரின் சாதனை பற்றி பகடி பேசும் பார்ப்பன பதரே.ஜாக்கிரதை.
தலைவரின் சாதனை பார்த்து உலகமே வியந்து வாய் பிளந்து நிற்கும் போது நீ மட்டும்!
Post a Comment