எபிசோட் - 79 (05.05.2010) சுட்டி - 79 & சுட்டி - 80
சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு ஆர்த்திக்காக நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை பட்டாபி வருகிறான். அவரிடம் அவன் ஆர்த்தியை பீச்சுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கிறான். அவர் நன்கு யோசித்து அனுமதி மறுத்து விடுகிறார். அவனும் சரி எனக் கூறிவிட்டு செல்கிறான்.
அவன் அந்தண்டை போனதும் ஆர்த்தி தன் அப்பாவிடம் அவர் வருங்கால மாப்பிள்ளையிடம் அவ்வாறு கூறியிருக்கலாகாது எனக் கூறுகிறாள். முடிவை தன் கையில் விட்டிருந்தால் தானே நாசுக்காக மறுத்திருப்பேன் எனக் கூறுகிறாள். அப்போது பட்டாபிக்கும் இது அவ்வளவு பெரிய வருத்தமாகப் பட்டிருக்காது என்கிறாள். அப்போது பிரியா உள்ளே வருகிறாள். தான் பட்டாபியை போக விடாது வெளியிலேயே நிற்க வைத்திருப்பதாகவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இம்மாதிரி செல்வது உதவியாக இருக்கும் என எடுத்துக் கூறி அவரை சம்மதிக்க வைக்கிறாள். ஆர்த்தியும் மகிழ்ச்சியுடன் செல்கிறாள்.
அசோக் வீட்டில் அவனுக்காக சில பெண்களின் போட்டோக்களை செலக்ட் செய்து வைத்திருக்கிறாள் வசுமதி. அவற்றை நாதனிடம் காட்டுகிறாள். நாதனும் அசோக்கின் அபிப்பிராயம் கேட்க, தாய் தந்தையர் பார்த்து எந்தப் பெண்ணை செலக்ட் செய்தாலும் அவனுக்கு சம்மதமே என்கிறான்.
அழகான பொண்ணா பாருங்கோ, இல்லேன்னாக்க பார்யாள் ரூபவதி சத்ரு என்பான் அவன் என வசுமதி கிண்டல் செய்கிறாள். அது என்ன பார்யாள் ரூபவதி சத்ருங்கறது என சந்தேகம் கேட்கிறார் சோவின் நண்பர்.
இந்த இடத்தில் எனக்கு பளீரென ஒரு பொருத்தமின்மை தென்பட்டது. அதையே சோவும் சுட்டிக் காட்டுகிறார். அதாவது வசுமதி சொன்ன மேற்கோள் தவறு என்று. உண்மை கூறப்போனால் அழகு அதிகம் இல்லாத பெண்ணைத்தான் பார்க்க சொல்லிவிட்டு, அப்போது வேண்டுமானால் பார்யாள் ரூபவதி சத்ரு என கோட் செய்யலாம் என அவர் கூறுகிறார்.
இது ஒரு வடமொழி ஸ்லோகத்தின் ஒரு பகுதி. அதாகப்பட்டது, கடனை வைத்து விட்டு இறந்து போகும் தந்தை சத்ரு, நடத்தைக் குறைவுள்ளவளாக தாய் அமைந்தால் அவள் சத்ரு, அழகிய மனைவி சத்ரு, படிப்பறிவில்லாத பிள்ளை சத்ரு.
இன்னொரு ஸ்லோகமும் கூறுகிறார். அதன் பொழிப்புரை இதோ. சீதைக்கு அவளது பேரழகே சத்ரு, ராவணனுக்கு அவனது கர்வமே சத்ரு, தர்மவானான மகாபலிக்கு அவனது தர்ம சிந்தனைகளே சத்ரு, ஆக, எதிலுமே மிகையாக இருத்தல் ஆகாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்றும் இதைக் குறிக்கலாம்.
இவ்வாறான மேற்கோள்கள் வட மொழியிலும் தமிழிலும் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் நாம்தான் ஆங்கிலத்தில்தான் அவை அதிகம் உள்ளன என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாதன் காண்பித்த ஃபோட்டோக்களில் உள்ள பெண்கள் வேலைக்கு போகிறார்கள், தனது கிருகஸ்தாஸ்ரம தர்மத்துக்கு துணையாக இருக்க மாட்டார்கள் என அசோக் அபிப்பிராயப்படுகிறான். பின்னால் ஆலோசனைக்காக கூப்பிடப்பட்ட சாம்பு சாஸ்திரிகளும் அதையே கன்ஃபர்ம் செய்கிறார். முழுக்க முழுக்க கிரகஸ்தாஸ்ரமத்துக்கு ஒத்துப் போகும் பெண்கள் துர்லபம் என்றாலும், முடிந்தவரை தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கலாம் என சாம்புவும் அபிப்பிராயப்படுகிறார்.
காஞ்சனாவை அவள் வீட்டில் டிராப் செய்ய வசுமதி வருகிறாள். அங்கும் அசோக் கல்யாணம் பற்றிய பேச்சு தொடர்கிறது. வசுமதி பணக்கார இடங்களிலிருந்து பெண்ணைத் தேடாமல் நடுத்தர வகுப்பினர் வீடுகளிலிருந்து தேடலாம் என கருத்து கூற, வசுமதி ஆலோசனையில் ஆழ்கிறாள்.
(தேடுவோம்)
எபிசோட் - 80 (06.05.2010) சுட்டி- - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரிகளின் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை சாமான்கள் அனுப்பப்படுகின்றன. அவர், சுப்புலட்சுமி மற்றும் அவர் அக்கா யார் அவற்றை இதை அனுப்பியிருப்பார்கள் எனப்புரியாது திகைக்கின்றனர். தங்கள் மகள் ஜயந்தி அனுப்பியிருப்பாளோ என சுப்புலட்சுமி கேட்க, சான்ஸே இல்லை என்கிறார் வேம்பு சாஸ்திரிகள். குழப்பம் தொடர்கிறது.
பிரியாவை பார்க்க நீலக்ண்டன் வருகிறார். அவள் தனது ஜூனியர் வேலையை விட்டதற்கு வக்கீல் அனந்தராமன் வருத்தப்படுவதாகக் கூறுகிறார். அனந்தராமன் ரமேஷ் கேசை எடுத்துக் கொண்டது தனக்கு பிடிக்கவில்லை எனவும், இப்போது அதன் விளைவாக நாதன் அவரை தனது லீகல் அட்வைச்ர் நிலையிலிருந்து நீக்கி விட்டார் என்றும் பிரியா கூறுகிறாள்.
இந்த இடத்தில் டோண்டு ராகவன். அனந்தராமன் ஏற்கனவே நாதனின் லீகல் அட்வைசர். அப்படியிருக்க அவர் ரமேஷின் கேசை எடுத்ததே முதல் தவறு. ரமேஷ் நாதன் கம்பெனியில் ஜி.எம். ஆக இருக்கையில் மோசடி செய்து அவரது புகாரின் பெயரில் சிறையில் இருப்பவன். அனந்தராமன் இப்போது செய்ததால் நேரெதிர் நலன்களின் மோதல்கள் வருமே (conflict of interests). இனிமேல் அவரது நாதனது லீகல் அட்வைசராக இல்லை என்று ஆனாலும், இத்தனை நாட்கள் அந்த வேலையில் இருந்ததால் அவரது கம்பெனிகளின் பல உள்விஷயங்களை அறிந்திருக்கலாம் அல்லவா. அவை privileged confidential information அல்லவா? அதைக் காரணமாக வைத்தே அவரது சன்னதை பிடுங்கலாமே? ஒரு வேளை சீரியலில் இது பற்றி பிறகு டீல் செய்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
எது எப்படியானாலும் தான் அனந்தராமனை விட்டு விலகியது விலகியதுதான் என பிரியா திட்டவட்டமாகக் கூறுகிறாள். நீலகண்டனின் மாப்பிள்ளை ரிலீசாக தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறாள்.
காஞ்சனாவும் காதம்பரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் காஞ்சனாவின் கணவன் எல்.ஐ.சி. ஏஜெண்டும் அவரது மைத்துனன் பிச்சுமணியும் கலந்து கொள்கின்றனர். பேச்சு அசோக் பக்கம் செல்கிறது. எல்லோருமாகச் சேர்ந்து அசோக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு காதம்பரிக்கு வேப்பிலை அடிக்கின்றனர். அவளும் இது சம்பந்தமாக தன் மனதில் உள்ள பல ஆட்சேபங்களை தெரிவிக்கிறாள்.
இந்திய ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத் எழுதிய A suitable boy என்னும் கதையிலும் இப்படித்தான் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள் எனவும் காதம்பரி கூறுகிறாள்.
அப்படித்தானே தேடணும் என சோவின் நண்பர் கூற, அது பற்றிய ஒரு தமாஷ் கதையை மகாபெரியவள் சொன்னதாக சோ கூறுகிறார்.
ஒருவன் தன் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க, அவளோ அந்த ஊரிலேயே அதிகம் சக்தியுள்ளவனையே தானே தேர்ந்தெடுக்கப் போவதாக கூறிவிட்டு புறப்படுகிறாள். முதலி அரசன் ராஜ தோரணையில் பவனி வருவதைப் பார்த்து அவனாக இருக்குமோ என மயங்கினால், அவனோ ஒரு சாமியாரை பார்த்து வணங்குகிறான். சாமியாரோ குளக்கரை பிள்ளையாரை வணங்க, அச்சிலை மேல் வழியே செல்லும் நாய் அசிங்கம் செய்து விட்டு செல்கிறது, ஆனால் அந்த நாயை ஒரு சிறுவன் கல்லால் அடித்து துரத்த, அப்பக்கம் வந்த ஒரு வாலிபன் அச்சிறுவனை தண்டிக்கிறான். கடைசியில் அந்த வாலிபனை அவள் தேர்ந்தெடுக்க, அவனே அவளுக்காக அவள் தந்தையால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளை என்பது தெளிவாகிறது.
கடைசியில் அசோக்கை நேரில் சந்தித்துப் பார்த்து பிறகு தன் கருத்தைக் கூறுவது நலமாக இருக்கும் என்பதையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள்.
தன்னைப் பார்க்க வரும் உமாவிடம் பிரியா பேசி அவள் தனது கணவன் ரமேஷை ஒரு முறை சிறைக்கு சென்று பார்க்க சம்மதிக்க வைக்கிறாள். உமாவும் செல்கிறாள். ஐந்து நிமிடம் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசாது அமர்ந்திருக்கின்றனர். பிறகு உமா எழுந்து செல்கிறாள்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
6 hours ago
17 comments:
எங்க பிராமணன்னு தெரியலைனா தேடிப்பாக்க வேண்டியது தானே(சைபர் கிரைமில் சொல்லிப்பாருங்க). ஏன் பதிவு போட்டு கலாய்க்கிறீங்க.சுத்தமா புரியலை. துக்ளக்ல எழுதுறத காப்பியாவது அடிக்கலாமே
சீரியலை கவனமாக பார்த்தால் உங்களது பல ஐயங்களுக்கு விடை கிடைக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிரம்மத்தை அறிந்தவன் பிராம்ணன். நீங்க எப்படி பிராமணரானீங்க
ஆனானப்பட்ட மகாதேவ பாகவதர், சாம்பு சாஸ்திரிகள், சாரியார் ஆகிய அவர்களே பிராமணர்கள் இல்லை என அசோக் ஸ்தாபித்தப் பிறகு, இந்த சுண்டைக்காய் பேர்வழி டோண்டு ராகவன் தன்னை (வர்ண ரீதியான) பிராமணன் என நாக்கில் பல்லைப் போட்டு சொல்லத் துணிவானா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்ப்டின்னாக்கா நீங்க ஆரு?
ஜே.ஜே!
தொடர்பதிவுக்கு காரணம், தொடங்கியாச்சு, இடையிலே விட்டுட்டா போக முடியும்?
அதனால எங்கே பிராமணனு தேடுறாங்க.
உங்கபக்கத்திலே ஆராவதிருந்தா புடிச்சிக்க்கொடுங்க!
இவண்
ஜொ.அ.ரா.ப
/////
டோண்டு ராகவன்!
எங்கவூர்பக்கத்திலே கோவில்பட்டின்னு ஒரு ஊரு. அங்க ஒருத்தர் இருக்கார். அவர் தம் பிள்ளைகளை டி.வி பாக்கவிட மாட்டார். அவங்க வீட்டிலே டிவியே வாங்கலே. சாப்பாடெல்லாம், பழைய் முறைப்படிதான். தீடீர் புளி, திடீர் காப்பி, என்று எதுவும் செய்றகை கிடையா. அவர் பிள்ளைகள் தமிழ் படிக்கல்ல. இங்கிலீசு பக்கமே தலைவைக்கிறது கிடையாது. ஸ்கூலுக்கு அனுப்பினா கெட்டுடுன்னு அவரே கத்துக்கொடுக்கிறார். புரோகிதம்தான் தொழில். ஒரு நேரந்தான் முழுச் சாப்பாடு. மத்தவேளை அரைவய்றுதான்.
இவரைப்பற்றி ராணி வாரயிதழ் போட்டுச்சு. அவரை நான் பிடிச்சி மெடராஸ் கொண்டு வந்து காட்டனும்னு நினைச்சேன். அவர் சொல்றார்:
”1000 மாவ்து எபிசோட் போடுவார. அப்போ புடிச்சுட்டுப்போங்கோ. சோ ராமசாமி சுவாமிகள், டோண்டு ராக்வன் சுவாமிகள்ளாரும் எங்களை நன்னா பாக்கட்டும். என் கால வய்த்தை. எம்புள்ளைகளோட காவய்த்தை. என் பாரியா வெறுங்கழ்ததை. கிழிஞச சீலையை!”
அப்படின்னுட்டார்.
என் பொழப்பு போச்சு. இவிங்களைக்காமிச்சு ரெண்டு காசு பாக்கலாம்னா இப்போ புடிச்சுட்டு போகக்கூடாதாம். 1000 எபிசொட்லதான்.
அவ்ளொ தூர்ம் வெயிட் பண்ணனுமா?
1000 மாவ்து எபிசோட் எப்ப? எனக்கு கூரியாசிட்டி தாங்க முடியல.
திகில் நாவல் ‘ஆகிர் கோன்’ என்று நான் பாக்கிறது கிடையாது. முதல் பக்கம் கொலைன்னு தெரிந்தவுடன் கடைசிபக்கத்திலே இன்ஸ்பெக்டர் வஹாப் ஆரைப்புடிச்சார்னு கடைசிப்பக்கம் பாக்கப்போனா எவனோ ஒருத்தன் அந்தப்பக்கத்தைக் கிழிச்சி வைச்சிருப்பான்.
ஆனால் ராகவன் நல்ல மனுசன். அப்படி கிடையாது.
பிளீஸ், சஸ்பென்ஸை உடைச்சுருங்க.
ஆரெந்த பிராமணன்? டோண்டு ராகவன் கிடையாதென்றால், ஆர் பின்னே!?
டோண்டு சார்...
நான் கல்லூரி மாணவன் .. விடுதியில் தங்கியிருப்பதால் தொலைக்காட்சி பார்க்கும் வாய்ப்புகளும் இல்லை ... இணைய தொடர்பு பெற்றதும் இந்த மாதம் முதல் தான் ... நீங்கள் எழுதிவரும் சோ வின் தொடர் பற்றி நாலைந்து வரிகளில் கதை சுருக்கம் அளியுங்களேன் ... பிறகொரு தருணம் உங்கள் பழைய பதிவுகளை படிக்கிறேன் ...
பகவத் கீதை குறித்து பதிவொன்றை வீரமணியாரின் நூலை முன் வைத்து இட்டிருக்கிறேன் ... படித்து பின்னூட்டமிடுங்கள் ...
@நியோ
கதை சுருக்கம்:
கைலாயத்தில் ஒரு சர்ச்சை எழுகிறது. யார் பிராமணன் என்பதே அது. அதை அறிய வசிஷ்டர் பூமியில் அவதாரம் செய்வது என தீர்மானமாகிறது. வசிஷ்டர் பிறந்து பூணூல் போட்டு காயத்ரி மந்திர உபதேசம் பெறும் வரை மிகவும் சாதாரண மனிதராகவே இருப்பார். பிறகுதான் தனது அவதார நோக்கத்தை புரிந்து நிறைவேற்றுவார் என்பதையும் கைலாயத்திலேயே முடிவு செய்து விடுகிறார்கள்.
வசிஷ்டர் அசோக் என்னும் பெயரில் தொழிலதிபர் நாதனுக்கு ஒரே மகனாகப் பிறக்கிறார். எதிலும் ஆர்வமின்றி அவர் பாட்டுக்கு வளர்கிறார். நன்றாக படிக்கிறார், இருப்பினும் ஒரு தொழிலதிபரின் ஒரே மகன் என்ற பந்தாவெல்லாம் இல்லாது, ரொம்பவுமே எளிமையாக இருக்கிறார். நாதனின் நண்பர் அவரை வேலைக்காரன் என புரிந்து கொள்ளும் அளவுக்கு இது போகிறது. பேச்செல்லாம் கூட ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆகவே அவருக்கு சித்த சுவாதீனம் இல்லை என்னும் அளவுக்கு போகிறது. நாதனுக்கு ராஜகுரு மாதிரி ஒருவர் இருக்கிறார். அவர் சொல்படிதான் நாதன் நடக்கிறார். அவர் மனைவி வசுமதி லேடீஸ் க்ளப் என்றெல்லாம் சேவை செய்கிறார்.
அப்படி வந்த அசோக் மெதுவாக தான் தேட வேண்டிய விஷயத்தை உணர்ந்து பிராமணனை தேட முயல்கிறார். ஆனால் இக்காலக் கட்டத்தில் வர்ணரீதியான பிராமணன் அவருக்கு கிட்டவில்லை என இதே தலைப்பில் சோவின் நாவலில் குறிப்பிடப்பட்டு கதை தொங்கு நிலையில் முடிக்கப் படுகிறது. எங்கே பிராமணன் பார்ட் - 1-ம் அதே தொனியில்தான் முடிகிறது. அதன் கடைசி பகுதியில், சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும் என கூறுகிறார்.
மேலே கூறப்பட்ட முதல் பகுதி 103 எபிசோடுகளுடன் முடிந்தது. மெகா சீரியல்களுக்கே உரித்தான இழுவைகள், திசை திருப்பல்கள், மற்ற அவலட்சண விஷயங்கள் இந்த சீரியலில் அறவே இல்லை என்பதே ஒரு புதுக்காற்றை சுவாசித்த உணர்வைத் தந்தது.
அனியாயமாக இவ்வளவு சீக்கிரம் முடிந்ததே என வருந்தியவர்கள் பலர். ஜெயா டிவி கொடுக்க வந்த நீடிப்புகளை மறுத்து இன்னொரு சரித்திரம் படைத்தார் சோ.
பலருக்கும் இது சம்பந்தமான கழுத்து மட்டும் குறைகள் இருக்க, அதன் இரண்டாம் பகுதி வர வேண்டும் என பலர் விரும்ப அதுவும் வந்து 80 எபிசோடுகள் ஆகிவிட்டன.
இதில் அசோக் உண்மையான வர்ணரீதியான பிராமனனை தன்னுள்ளிலிருந்தே தேடுகிறான். முதல் படியான பிரும்மச்சரிய நியமத்தை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் நியமமான கிரகஸ்தாஸ்ரமத்துக்குள் நுழைய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இனிமேல் நீங்கள் மேற்கொண்டு எபிசோடுகளை பார்க்கலாம். இரண்டாம் பகுதியில் எல்லா எபிசோடுகளுக்குமே வீடியோ சுட்டி தந்துள்ளேன். அவற்றையும் பார்ப்பது நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு டோண்டு!
எனது வேண்டுகோளை ஏற்று கதை சுருக்கத்தை தந்ததற்கு நன்றிகள் !
கைலாயம் வசிஷ்டர் என்பனவற்றை தவிர்த்து பார்க்கும் போது கதை எனக்கு பிடித்திருந்தது....
ஹெஸ்ஸே யின் கதையில் சித்தார்த்தன் மண்ணில் இருப்பார் ... இங்கு அசோக் விண்ணில் இருந்து அவதரித்த பரிசுத்த ஆவி ...
சோ வை சொல்லியும் குற்றமில்லை ... கைலாயம் போன்றவற்றை சொல்லாமல் பிராமணர்களை விமர்சித்தால் குல விரோதி என்று முத்திரை விழும் ...
ஆயினும் எத்துணை பேர் தன்னுள் உள்ள பிராமணனை(?) தேட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ...
நான் சாதாரணன் என்று சொல்வதோ சுண்டைக்காய் பேர்வழி என்று சொல்லிக்கொள்வதோ பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலே அன்றி வேறொன்றுமில்லை ...
அவரவர்க்கான தர்மங்கள் என்பதை நான் எப்போதும் மதிக்கிறேன், அதை அவர்கள் முழுமையாக கடைபிடிக்கும் பட்சத்தில் ...
பல்வேறு வயதுகளிலிருக்கும் நாற்பதுக்கும் அதிகமான பிராமண(?) நண்பர்களிடம் பழகியிருக்கிறேன் ...ஒருவரிடம் கூட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் so called பிரம்மமோ இல்லை அதற்குரிய தேடலையோ ஒரு போதும் நான் கண்டதில்லை
எனது வகுப்பு தோழன் கடந்த வருடம் சொர்க்க வாசல் திறப்பு (?) நாளன்று 18 வயதில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வரும் வழியில் சாலை விபத்தில்இறந்து போன ஆந்திரா 'சாய் கிருஷ்ணா' ஒரு விதிவிலக்கு ! நல்ல பையன் !
தொலைக்காட்சி எபிசோடுகளையோ வீடியோ சுட்டிகளையோ பார்க்க ஒருபோதும் நான் விரும்பியதில்லை ....உங்கள் பதிவுகளே போதுமானது என்பது என் எண்ணம் ...
எங்கே பிராமணன் என்ற வினாவை எங்கே மனிதன் என்று நான் நீட்டித்து பார்க்கிறேன் ...
நன்றி!
ஜெய்சங்கர் சார்,
/// பிரம்மத்தை அறிந்தவன் பிராம்ணன். நீங்க எப்படி பிராமணரானீங்க
May 07, 2010 6:48 PM ///
உங்களுக்கு செக்கும் தெரியவில்லை, சிவலிங்கமும் தெரியவில்லை. கொஞ்சம் ஓரமாய் உக்காந்து வேடிக்கைப்பார்க்கவும். வெள்ளாட்டெல்லாம் வேண்டாம். பிரம்மம் என்றால் என்ன தெரியுமா? பிரம்மோபதேசம் என்றால் என்ன தெரியுமா? தெரியாவிட்டால் மொதல்ல கொஞ்சம் கத்துகிட்டு வாங்க...
-- சொல்மண்டி இரா.
நியோ,
//// சோ வை சொல்லியும் குற்றமில்லை ... கைலாயம் போன்றவற்றை சொல்லாமல் பிராமணர்களை விமர்சித்தால் குல விரோதி என்று முத்திரை விழும் ...
ஆயினும் எத்துணை பேர் தன்னுள் உள்ள பிராமணனை(?) தேட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ...
நான் சாதாரணன் என்று சொல்வதோ சுண்டைக்காய் பேர்வழி என்று சொல்லிக்கொள்வதோ பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலே அன்றி வேறொன்றுமில்லை ... /////
சோ பலப்பல வருடங்களாகவே பிராமண சமுதாயத்தை விமர்சித்திருக்கிறார். அந்த சமுதாயம் தன்னை சுயமதிப்பு செய்துகொண்டு மாறிக்கொள்வது போல இந்தியாவில் வேறு எதுவும் இல்லை. பிராமண சமுதாயத்தில் குலதுரோகி என்று யாரும் இல்லை. இந்தியாவில் சமூக சீர்திருத்தங்கள் கொண்டுவந்தவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களே. அவர்களையும் யாரும் குலத்துரோகி என்று சொன்னது இல்லை. உங்களுக்கு சோவையும் தெரியவில்லை, பார்ப்பன சமுதாயத்தையும் தெரியவில்லை. பார்ப்பனர்கள் என்ன துலுக்கர்களா பட்வா போடுவதற்கு??
2. உள்ளே இருக்கும் பிராமணனையா? உள்ளே யாராவது குந்திகிணு இருக்காங்களா? தெரியவில்லை? என்னுள்ளே யாராவது செட்டியார் இருப்பாரோ?
3. பிராமண வர்ண முறை என்பது ஆன்மீகத்தில் அடைய வேண்டிய கடைசீ படி. அதற்கும் சமுதாயத்தில் இருக்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இதுதான் இந்த தொடரின் மெசேஜ்.
- சொல்மண்டி இரா
//இந்த பின்னூட்டம் என்ன ஆச்சு டோண்டு சார். வெளியிட மாட்டீங்களா
@ஜெயசங்கர் ஜகன்னாதன்
எல்லா பின்னூட்டங்களையும் ரிலீஸ் செய்தேனே. ஒரு வேளை பிளாக்கர் சொதப்பலில் ஏதேனும் ஒன்று தவறியிருக்கலாம்.
எதற்கும் சிரமத்தைப் பார்க்காமல் இன்னொரு முறை அதை இட்டு விடுங்களேன்.
டோண்டு ராகவன்
//உங்களுக்கு செக்கும் தெரியவில்லை, சிவலிங்கமும் தெரியவில்லை. கொஞ்சம் ஓரமாய் உக்காந்து வேடிக்கைப்பார்க்கவும். வெள்ளாட்டெல்லாம் வேண்டாம். பிரம்மம் என்றால் என்ன தெரியுமா? பிரம்மோபதேசம் என்றால் என்ன தெரியுமா? தெரியாவிட்டால் மொதல்ல கொஞ்சம் கத்துகிட்டு வாங்க...//
செக்கும் சிவலிங்கத்துகும் உங்களூக்கு என்ன வித்தியாசம் தெரியும்னு முதல்ல எழுது இரா. அப்புறம் பேசலாம். எனக்கு என்ன தெரியும் தெரியாதுன்னு சொல்ல நீங்கள் யார். உங்கள் வேலையை சரியா பாருங்க
@ஜெயசங்கர் ஜகன்னாதன்
விட்டுப் போன உங்கள் பின்னூட்டம் என்று சொன்னது இதைத்தானா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//விட்டுப் போன உங்கள் பின்னூட்டம் என்று சொன்னது இதைத்தானா?
/
இதுவும் தான் அடுத்து எழுதினது காணவில்லை. எனக்கும் ஞாபகம் இல்லை. எல்லாம் ஒரு கோபத்தில் எழுதினது(எனக்குப்போய் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியலைனா என்ன அர்த்தம்).
சும்மா ஒரு தமாஷ்
Dear Sri. Dondu Sir,
Kindly read the following article in our blog
பிராமணனை டி. வீ சீரியலில் தேட வேண்டாம், நீங்களே பிராமணராக முடியும்!
http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/11/bhramin-1/
and register your comments.
Post a Comment