நண்பர்களுக்கு நன்றி - 1
நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3
நண்பர்களுக்கு நன்றி - 4
நண்பர்களுக்கு நன்றி - 5
இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (02.05.2010, நேரம் காலை 05.19 IST) ஹிட் கவுண்டர் 598,994 காண்பிக்கிறது. ஆறு லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. ஐந்து லட்சம் வந்த நேரம் 11.11.2009, 23.13 hrs. ஆறு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் ஐந்து லட்சத்துக்கும் இடையில் 6 காலண்டர் மாதங்களுக்கு குறைவாகவே (174 நாட்கள்?) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.
இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த முறை டோண்டுவின் பதில்கள் அவனாலேயே நிறுத்தப்பட்டன. குறிப்பிட்ட காரணம் என ஒன்றும் இல்லை, திடீரென ஒரு அலுப்பு வந்ததே காரணம். எங்கே பிராமணன் இரண்டாம் பகுதி டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் எல்லா எபிசோடுகளும் இது வரை என்னால் கவர் செய்யப்பட்டுள்ளன. இது வரை நான் பார்த்த சீரியல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது அது.
எனக்கு பெர்சனலாக பிடித்த பதிவுகள் என்று பார்ப்பதை செய்யும் முன்னால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைச் சந்தித்த ஒரு பதிவு பற்றிப் பேசுவேன். நான் குறிப்பிட நினைப்பது பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த நிகழ்வு பற்றித்தான். அது ஒட்டுமொத்த எதிர்ப்பை பெற்றது. தமிழ்மணத்தின் அதற்கான பரிந்துரை 13/126, அதாவது 13 ஆதரவு ஓட்டுகள் ஆனால் 113 எதிர்ப்பு ஒட்டுகள்.இதுவே பெரிய ரிகார்டாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது பெருமை கொள்ளும் விஷயம் அல்ல என்பதையும் உணர்ந்துள்ளேன். என் மனதுக்கு சரி என பட்டதைத்தான் எழுதியுள்ளேன். எனது பார்வை கோணத்தை அதில் சரியாகத்தான் விளக்கியுள்ளேன்.
ஆனால் அதற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் அவை எல்லாமே மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர். அம்மாதிரியான பார்ப்பன எதிர்ப்புக்கு என்ன காரணம் என தனிப்பட்ட முறையில் பார்த்தால் ரொம்ப அல்பமாகவே இருக்கும்.
எனக்குப் பிடித்த பதிவுகள் என்று பார்த்தால் எனது நண்பன் வி.எஸ். சூரியின் ஜெஸ்டஸ் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான் செய்யும் மொழிமாற்றத்தை உள்ளடக்கியனவற்றைக் கூறலாம்.
பலே ஆர்.வி அவர்களே, காதோடுதான் நான் பேசுவேன், பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், வெஸ்டர்ன் டாயிலட்டை வெறுப்பவரா நீங்கள்?, வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி, கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிய இடதுசாரி இயக்கம், யாழ்தேவியால் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்நாட்டு பதிவர் என்ற முறையில் நான் போட்ட 9 பதிவுகள், பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்சினைகள், இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை, இலாப நோக்கமற்ற அமைப்புகள் முதல்வர் முன்னிலையில் வக்கீல்களுக்கு விழுந்த அடி ஆகியவை.
எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் சரியென நினைத்ததை மாற்றிக் கொள்ளாத என் மனவுறுதியை எனக்கே நிரூபித்த, மேலே குறிப்பிட்ட பார்வதி அம்மாள் பற்றிய அப்பதிவும் எனக்கு பிடித்ததே.
போன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை அல்லது நாளை மறுநாள்தான் 6 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது நேரம் காலை 6.48 மணி (இந்திய நேரம்), ஹிட்கள் 5,99,020.
தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 980, 979, 978, 977, 976 .......
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
65 comments:
வாழ்த்துகள் டோண்டு அவர்களே.
வாழ்த்துகள்.. மென்மேலும் சிறப்பாக எழுத உங்கள் அப்பன், உள்ளங்கவர் கள்வன், மகரநெடுங்குழைக்காதர் துணை இருக்கட்டும்.
ஆறு, ஏழு, எட்டு என விரைந்து தொடரட்டும்.
வாழ்த்துகள் ஐயா.
வாழ்த்துக்கள்!
You have written many statements here, that are conflicting in my view.
//அதற்கான பரிந்துரை 13/126, அதாவது 13 ஆதரவு ஓட்டுகள் ஆனால் 113 எதிர்ப்பு ஒட்டுகள்.இதுவே பெரிய ரிகார்டாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது பெருமை கொள்ளும் விஷயம் அல்ல என்பதையும் உணர்ந்துள்ளேன். என் மனதுக்கு சரி என பட்டதைத்தான் எழுதியுள்ளேன். எனது பார்வை கோணத்தை அதில் சரியாகத்தான் விளக்கியுள்ளேன்.
//
பெரிய ரிக்கார்டென்றால், ஏன் பெருமை கொள்ளும் விடயமல்ல.
மனதுக்கு சரியென்று நினத்ததை எழுதுவதற்கு ஏன் guilt complex
ஏன் பெருமை கொள்ளக்கூடாது?
//மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர். //
அவர்கள் உண்மை முகம், பொய் முகம் என்றெல்லாம் இல்லை. அவர்க்ள் தங்கள் உண்மை முகத்தைத்தான் தைரிய்மாக காட்டுகிறார்கள். நீங்களாகவே கற்பனை செய்கிறீர்கள். வினவு என்ன மறைந்து நினறா உங்களைத் தாக்குகிறது? அசோக் புனைப்பெயரில் எழுதியா தாக்கினார்?
ஒரு தனிமனிதனின் பார்வை என்பது சரிதான். பின் ஏன் அது ஒரு ஜாதிய்னரின் பார்வையாக்கப்பட்டு ஒட்டு மொத்த சாதியினரும் இலங்கைத்தமிழ்ராலும் பிற ப்திவர்களாலும் தாக்கப்படுகிறது.
இந்தப்பார்வை மட்டுமல்ல, மற்றும் பல controversial subjects பற்றி, - வட்மொழி பூசைகளில், தமிழா வடமொழியா? குலக்கல்வித்திட்டம், சோ எதைச்சொன்னாலும் சரி. பெரியாரைப்பற்றி அவதூறான பதிவுகள், நித்தியானந்தது செய்ததற்கு பெரியாரைப்பற்றி சொன்னது, இடஒதுக்கீடு கொள்கை, இந்து மத ஆதரவு, பிஜேபி,மோடி இவர்களுக்கு ஆதரவு, மோடி முசுலிம்களைக்கொன்றது சரி! மசூதி உடைப்பு, இராமர் பாலம்- இன்னும் ஏராளம் உங்கள் கருத்துகள்.
இவை அனைத்தும் தனிநபர் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பார்வது அம்மாள் பதிவு மட்டுமல்ல, மற்றவற்றிலும் உங்கள் பார்வை உங்கள் ஜாதியினரின் ஒட்டுமொத்தப் பார்வையாகவே பார்க்கிறார்கள்.
அவர்கள் செய்வது தப்பென்றால், நீங்கள் ஏன் அதை ஒரு disclaimer ஆக போடக்கூடாது at least in controversial subjects which have the potential to isolate Tamil brahmins from others.
இப்படி:
”இங்கே சொல்லபபட்ட கருத்துகள் என் சொந்தக்கருத்துகளே. என் ஜாதியனரின் ஒட்டுமொத்தக்கருத்துகளாக இவை கருதப்படலாகாது.”
சோ இராமசாமி, சு. சாமி, மற்றும் டோண்டு இராகவன் போன்றோர் பார்ப்பன ஜாதி வெறியர்கள் என எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களால் ஒட்டு மொத்த சாதிய்னரும் தாக்கப்படுகிறார்கள் வலைபதிவுகளில்.
Why not boldly say to your attackers that you are alone responsble for your views.
Announce to them:
"Come on, lets war face to face!"
//எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் சரியென நினைத்ததை மாற்றிக் கொள்ளாத என் மனவுறுதியை எனக்கே நிரூபித்த, மேலே குறிப்பிட்ட பார்வதி அம்மாள் பற்றிய அப்பதிவும் எனக்கு பிடித்ததே. //
இந்த ஒரு காரணத்திற்காகவே உங்களை மனமுதிர்ச்சியடையா முதிய்வர் என்கிறார்கள்.
இன்று நான் ஒரு கொள்கை உடைய்வனாயிருக்கிறேன் என்றால் என்ன பொருள்? இன்று எனக்கு கிடைத்த ஆதாரங்களின் படி நான் எடுத்த முடிவு அது. நாளை அவ்வாதரங்கள் பொய் என நிரூபிக்கப்படலாம். அல்லது, நாளைய சூழ்னிலையில் அவை obsolete ஆகலாம். என்வே நான் எடுத்த முடிவை நான் பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இப்படி செய்வோரைத்தான் உலகம் பாரட்டும் கற்றறிந்த மாந்தரென புகழும். இல்லாவிட்டால்,
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று ஏசிவிட்டுச்செல்லும்.
Last Friday, J&K court released a prisoner after 18 year imprisonment concluding that he was innocent.
Imagine: the judge, who gave the wrong sentence, trumpets like you:
நான் செய்தது சரி. அதை மாற்றிக்கொள்ளமாட்டேன்.
Similarly, every person in society, who does a thing maintains tenaciously that what he did is absolutedly right, for all time to come, no harm will come to society if his act was right. If not? If a robber, a murderer, a corrupt govt bureacract, maintains that his act is absolutely correct and unchangeable for all time,.
THE MORAL ORDER OF OUR SOCIETY WILL COLLAPSE.
//
இன்று நான் ஒரு கொள்கை உடைய்வனாயிருக்கிறேன் என்றால் என்ன பொருள்? இன்று எனக்கு கிடைத்த ஆதாரங்களின் படி நான் எடுத்த முடிவு அது. நாளை அவ்வாதரங்கள் பொய் என நிரூபிக்கப்படலாம். அல்லது, நாளைய சூழ்னிலையில் அவை obsolete ஆகலாம். என்வே நான் எடுத்த முடிவை நான் பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இப்படி செய்வோரைத்தான் உலகம் பாரட்டும் கற்றறிந்த மாந்தரென புகழும். இல்லாவிட்டால்,
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று ஏசிவிட்டுச்செல்லும்.
//
எவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் பார்ப்பானத்துவேசம் மட்டும் மாறாமல் உங்களிடம் இருப்பது ஏன் ?
Dear Mr Dondu,
Congrats for nearing the 6 lakh mark. keep going.The following need not be published if you desire so.
While I like most of your stuff, I feel peeved when you justify everything. I too belong to the same community of yours and also grew up in Triplicane in my formative years.0-26.I am sure you will accept that many, if not most,rituals practised by brahmins are bogus.Science teaches us to have changing views about changing things. But, our people will never change. We are the worst hypocrites. many of us are selfish and have no social responsibility. Even if you dare to be different, immediate family. will discourage you.Kindly notice how Cho, in his Engey Brahmanan, justifies all the silly things also. Just because something is mentioned in Vedas , it doesnt have to be true. In fact, I can give you scores of things which Brahmin's practice to be unsound and unscientific and sometimes even bizarre. Our attitude towards Death, dead body, untouchable,Madi acharam, etc are outdated and needs to be publicly decried.Treatments meted out to young and old widows are/ were barbaric.
You must also understand they, being a minuscule percentage , they were holding the majority to ransom in many fields.
If time permits we can sit and discuss many such things.
But you are much more courageous than an average guy and keep up the good just.Do not trust too much, people like Cho. They are opportunists and know which side of the bread is buttered. He is very intelligent and sharp, but I am not sure I can say the same about his intentions. Compared to him Gnani is better.
Sorry for the longish outburst.
regards
Shankar
@Shankar
Whether a person practises his religion, follow its rituals etc are not a part of discussion here.
Fact is, I quite object to people, who abuse a person just because he is born in a particular caste.
I dont support Cho because he is a Brahmin, but only because I feel that what he says is right.
Personally I am no orthodox person.
Regards,
Dondu N. Raghavan
வாழ்த்துக்கள்.மேலும் வளர்க
டோன்டு,தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு பெரிய சதி வியூகத்தின் நடுவே சிக்கியுள்ளீர்கள்.அதுதான் பார்பன எதிர்ப்பு என்ற ஒரு வெறி பிடித்த பதிவர் கும்பல்..உங்களை முன்னிறுத்தி அந்த கும்பல், பகை மற்றும் பழி உணர்வை மற்றவர்களிடம் வளர்க்கிறது.
இவர்களிடம் என்னதான் கரடியாக கத்தினாலும் உங்கள் வாதம் எடுபடாது.ஏனெனில் இவர்கள் இருப்பது கி.மு 2010 இல்.
உங்கள் வாயை பிடுங்கி வார்த்தைகளை பெற்று பிறகு அதை உங்களுக்கு எதிராக உபயோகிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்.எனவே ஜாதி மற்றும் இலங்கை தமிழர் சம்பந்தமான பதிவுகளை தவிர்க்கவும்.இது கோழைத்தனம் அன்று.சிந்தித்து செயல்படவும்.
நன்றி.
வாழ்த்துகள்
"சம்புகன், ஏகலைவன், இராவணன், மாவலி வழிவந்த" என்னைப் போன்ற உங்கள் எதிரிகளுக்கும் ஒரு ஓரத்தில் நன்றி சொன்னால் என்ன?
@அருள்
"இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் கூட எழுதியிருக்கிறேனே. நீங்கள் மற்றவர்கள் வகையில் வருகிறீர்கள்.
இது எனது டெம்பிளேட் வாக்கியம் ஆயிற்றே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹிட் கவுன்ட்களால் மட்டும் ஒரு வலைதளத்தை தீர்மானிக்கமுடியாது என்பது எனது சொந்தக்கருத்து.
இருந்தும் இந்த கவுண்டுகளும் பலம் சேர்க்கும் என்பதால் வாழ்த்துக்கள்.
இராவணனின் தந்தை பிராமணன்.
இராவணன் அக்மார்க் பார்ப்பானன். இராமன் தான் பார்ப்பானன் அல்லாதவன்.
ஆகவே அருள் நீங்களும் ஒரு பார்ப்பானன் என்கிறீர்களா ?
@Smart
ஹிட்களே வாழ்க்கை என நானும் சொல்லவில்லை. ஆனால் பதிவு எழுதுபவருக்கு ஒரு உற்சாகத்தைத் தருகிறது என்பதும் நிஜம்.
வாழ்த்துக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்!
- சிமுலேஷன்
டோண்டு ராகவன் said...
///மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் கூட எழுதியிருக்கிறேனே. நீங்கள் மற்றவர்கள் வகையில் வருகிறீர்கள்.///
நன்றிக்கு நன்றி அய்யா.
க.கா.அ.சங்கம் said...
///இராவணனின் தந்தை பிராமணன்.
இராவணன் அக்மார்க் பார்ப்பானன். இராமன் தான் பார்ப்பானன் அல்லாதவன்.
ஆகவே அருள் நீங்களும் ஒரு பார்ப்பானன் என்கிறீர்களா?///
"'இராவணன் எங்களது பூசையைக் கலைக்கிறான்; ஓமம் வளர்க்க இடம் கொடுக்காமல் செய்கிறான்; வேதம் ஓதுவதற்குச் சம்மதிக்கமாட்டேன் என்கிறான்; யாகம் செய்ய அனுமதிக்கமாட்டேன் என்கிறான்' என்றுதான் தேவர்களிடம் பார்ப்பனர்கள் முறையிட்டு இருக்கிறார்கள். எனவே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? அந்தக்காலத்தில் பார்ப்பனியத்தின் கொடுமையால், நமது முன்னோர்கள், சாதியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள், இதனால்தான் இராக்கதர்கள் - அசுரர்கள் ஆனார்கள்; சாதியை ஆதரிப்பவர்கள் ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் ஆனார்கள்.
என்று தந்தை பெரியார் பேசியுள்ளார். (குடியரசு 21.1.1952)
"சூர்ப்பநகையை இராமன் மானபங்கம் செய்ததைபோல் சீதையையும் அந்தப்படியே இராவணன் செய்திருக்க முடியும். ஆனாலும், அப்படிச்செய்யவேண்டும் என்று இராவணன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. சீதையை அசோகவனத்திலே தம்பியின் மகளையே அவளுக்கு காவலாக இருக்கும்படிச் செய்துவைத்தான். அதுமட்டுமல்ல; இராவணன் மிகவும் நல்லவன்; அவன் பெருமை உடையவனாகவும் விளங்கினான். ஆனால், பிராமணர்கள் யாகம் செய்வதையும், சோமரசம் அருந்துவதையும் கண்டால்மட்டும் அவர்களைக் கண்டிப்பான் என்று வால்மீகியே கூறுகிறார்.
இப்படியெல்லாம் சொல்லப்படுகின்ற இராவணனும் அவன் கூட்டத்தாரும் பார்ப்பனர்களுடைய விரோதிகள் என்பதால் - அவர்களை கொடியவர்களாக, அரக்கர்களாக ஆக்கிவிட்டார்கள்"
என்றும் தந்தை பெரியார் பேசியுள்ளார். (குடியரசு 19.11.1954)
பார்ப்பனர்களுடைய விரோதி, அரக்க கூட்டத்தலைவனை "அக்மார்க் பார்ப்பானன்" ஆக்குவதும் உங்கள் திறமைதான்.
அதுசரி, அக்மார்க் பார்ப்பானைக் கொல்வது ப்ரம்மஹத்தி தோஷமாச்சே - அப்புறம் எப்படி இராமன் சாமி ஆனான்?
அருள்.
பெரியாரிடம் ராமாயணம் படிப்பது என்பது சோ விடம் திராவிடர் கழக வரலாறு படிப்பது போல் தான். உங்கள் அறிவு என்று முதிர்ச்சி அடைகிறதோ அன்று உங்களுடன் பேசுகிறேன்.
முடிந்தால் இன்று போய் நாளை அறிவை வளர்த்துக்கொண்டு வாருங்கள்.
க.கா.அ.சங்கம்.
//
அதுசரி, அக்மார்க் பார்ப்பானைக் கொல்வது ப்ரம்மஹத்தி தோஷமாச்சே - அப்புறம் எப்படி இராமன் சாமி ஆனான்?
//
தம்பி, தப்பு செஞ்சவன் செத்தாகனும். அவன் பார்ப்பானன்னா என்ன இப்ப ?
அதுக்கும் ஒரு யாகம் வெச்சிருக்கோம்ல...அதை செஞ்சு நாங்க சரிகட்டிருவோம்...ஒனக்கென்னப்பு கவலை. நீங்கள்ளாம், பிரம்மஹத்தியை லார்ஜ் ஸ்கேலில் ஓப்பனாகச் செய்யச்சொன்னவனின் வாக்கை அப்படியே செய்யத் துடிக்கும் ஜாம்பிக்கள் (zombie) தானே ?
அதெல்லாம் இருக்கட்டும், ராமாயணமே கட்டுக்கதை எனும் போது அதில் ராவணன் என்ற "திராவிடன்" மட்டும் ஏன் நல்லவன்னு சொல்றீங்க...அப்ப ராமன் அயோத்தியில் பொறந்த "ஆரியன்" என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா ?
அப்ப அயோத்தியில் பாபர் பில்டிங்கை இடித்துவிட்டு கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா ?
போயி, புள்ளகுட்டிங்களப் படிக்க வைப்பா...போப்பா...அவிங்களாவது அறிவோட வளரட்டும்...
க.கா.அ.சங்கம்
@அருள்
நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ராவணன் பார்ப்பனனே. ராமர் க்ஷத்திரியரே.
ராவணனை கொன்றதற்கான பிரும்மஹத்தி தோஷம் அவரையும் பிடிக்கிறது. ஆகவே அவர் சிவபூஜை செய்து பரிகாரம் தேடுகிறார் என்பதுவும் ராமாயணத்திலேயே வருகிறது.
இத்தருணத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்கள் சமீபத்தில் 1961-ல் கூறியது நினைவுக்கு வருகிறது.
அதாகப்பட்டது, "ஈ.வே.ரா. அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். திராவிடனான ராவணன் பெயரை வைத்து தன் பெயரை ராவணசாமி என்று மாற்றிக் கொள்ள விரும்பினார். அப்போது அவரிடம் கூறப்பட்டது, அதாவது ராவணன் பார்ப்பனன் என்று. சரி அப்படியானால் ராமசாமியாகவே இருந்து விட்டுப் போகிறேன்" என்றார்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_30.html
ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. அசோக வனத்தில் இருக்கும் சீதையை ஏமாற்ற ராவணனே ஏன் ராமனாக உருமாறி சீதையிடம் செல்லக்கூடாது என அவனது ராணிகளில் ஒருத்தி ஆலோசனை கூறுகிறாள். ராவணன் சலிப்புடன் கூறுகிறான், “எனக்கு மட்டும் அது தோன்றாமல் இருக்குமா? அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம்? ராமனது ரூபத்தை எடுத்த பிறகு பிறன்மனை நோக்கா பேராண்மை எனக்கும் வந்து விட்டதே. இதென்ன முதலுக்கே மோசமாகப் போனது என துணுக்குற்று வேடத்தைக் களைந்தேன்”.
அன்புடன்,
டோண்டு ராகவன்
03.05.2010 காலை 06.27-க்கு தலை கீழ் எண்ணிக்கை 178, 177 ...
இன்றே 6 லட்சம் தாண்டி விடும் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் அதற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் அவை எல்லாமே மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர்.//
நீங்களும் சோ இராமசாமியும் ஒட்டு மொத்த பார்பனர்களின் குரலாக ஒலிப்பதாகத்தானே காட்டிக் கொள்கிறீர்கள். பார்பனர்கள் என்றாலே உங்களைப் போன்றவர்கள் என்பதாக நீங்கள் பதிய வைத்துவிட்டு பிறரை நொந்து கொள்வது ஏன் ?
//நீங்களும் சோ இராமசாமியும் ஒட்டு மொத்த பார்பனர்களின் குரலாக ஒலிப்பதாகத்தானே காட்டிக் கொள்கிறீர்கள்.//
அப்படியா, சோவோ நானோ அப்படி பொருள் வருமாறு எங்கே எழுதியுள்ளோம் என்பதை முடிந்தால் காட்டுங்களேன். யார் தடுத்தது?
தேவையின்றி எல்லாவற்றுக்கும் பார்ப்பனர்களை இழுக்கும், அதுவும் தொடர்பு உள்ளதா இல்லையா என கவலை ஏதும் இன்றி அதைச் செய்யும் பலரது பகுத்தறிவற்ற செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதால் மட்டுமே நீங்கள் சொல்வது உண்மையாகி விடுமா?
என்னைப் பொருத்தவரை பார்ப்பனர்களை திட்டுபவர்களுடன் தானும் சேர்ந்து திட்டினால் தன்னை பாப்பான் எனத் திட்டாது விட்டுவிடுவார்கள் என எண்ணி சில தொடைநடுங்கி பேர்வழிகள் விசேஷ அறிவிப்பெல்லாம் விட, அட அப்படி இல்லை அப்பனே, தேவையானால் உம்மையும் கும்முவார்கள் என எடுத்துக் காட்டியது பல இடங்களில், அவ்வளவே.
ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்வது சரி என. நாங்கள் இருவரும்தான் மொத்த பார்ப்பனர்களின் குரலாக இருப்பதாக நீங்களும் ஏன் எண்ண வேண்டும்? உங்களுக்கு சுய அறிவே கிடையாதா?
அவ்வாறு இல்லாமல் போனவர்கள் பற்றியே நான் இங்கு குறிப்பிட்டு சொன்னேன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளச்வும்.
எது எப்படியானாலும், எனது 6 லட்சம் ஹிட்களுக்கான தலைகீழ் எண்ணிக்கைக்கு உங்கள் வரவால் ஒரு எண்ணிக்கை வந்தது. அதற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னைப் பொருத்தவரை பார்ப்பனர்களை திட்டுபவர்களுடன் தானும் சேர்ந்து திட்டினால் தன்னை பாப்பான் எனத் திட்டாது விட்டுவிடுவார்கள் என எண்ணி சில தொடைநடுங்கி பேர்வழிகள் விசேஷ அறிவிப்பெல்லாம் விட, அட அப்படி இல்லை அப்பனே, தேவையானால் உம்மையும் கும்முவார்கள் என எடுத்துக் காட்டியது பல இடங்களில், அவ்வளவே.
//
//ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்வது சரி என. நாங்கள் இருவரும்தான் மொத்த பார்ப்பனர்களின் குரலாக இருப்பதாக நீங்களும் ஏன் எண்ண வேண்டும்? உங்களுக்கு சுய அறிவே கிடையாதா?//
சொ.செ.சூ.
பல அல்லது சில பார்பனர்கள் பார்பனர்களின் குரலை பதியவில்லை பயப்படுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்கள். நீங்களே கிழே வேறு மாதிரியும் சொல்லுகிறீர்கள். இரண்டையும் சேர்த்துப் பார்த்தாலே, நீங்களும் சோ இராமசாமியும் தான் பார்பனர்களின் குரலை தைரியமாக பதிகிறோம் என்பதன் ஒப்புதல் தானே. இதுக்கு மேல என்ன உதாரணம் காட்ட முடியும் ?, சுய அறிவு கூட இதைத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை, முன்னேயும் பின்னேயும் படித்து பொருள் விளங்கும் பொது அறிவு இருந்தாலே போதும்.
//பல அல்லது சில பார்பனர்கள் பார்பனர்களின் குரலை பதியவில்லை பயப்படுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்கள். நீங்களே கீழே வேறு மாதிரியும் சொல்லுகிறீர்கள். இரண்டையும் சேர்த்துப் பார்த்தாலே, நீங்களும் சோ இராமசாமியும் தான் பார்பனர்களின் குரலை தைரியமாக பதிகிறோம் என்பதன் ஒப்புதல் தானே. இதுக்கு மேல என்ன உதாரணம் காட்ட முடியும் ?//
தைரியமாகப் பதிக்கிறோம் என்பது உண்மைதான். அதனாலேயே நாங்கள்தான் பார்ப்பனர்களின் ஒட்டுமொத்தக் குரலையும் ஒலிப்பதாகக் கூறியதாக எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?
உண்மை கூறப்போனால் முக்கால்வாசி பார்ப்பனர்கள் இதையெல்லாம் பெரிய விஷயமாகவே நினைப்பதில்லை என்பதுதான் உண்மை. என்னை நேரில் பார்க்கும்போது அவர்களில் பலர் ஏன் சார் இந்தப் பேர்வழிகளுடன் பேசி சண்டை போடுகிறீர்கள் எனக் கேட்பதும் உண்மை.
அதே நேரத்தில் நான் குறிப்பிட்ட தொடைநடுங்கிப் பேர்வழிகளை நான் சாடுவதும் நிற்காது.
அப்படியே நான் கூறியிருந்தாலும் அதை உண்மை என நினைத்துக் கொண்டுதானே என்னைத் திட்டியிருக்கிறார்கள் என் பதிவில். அவர்களுக்குத்தான் சுய அறிவு இல்லை எனக்கூறினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உண்மை கூறப்போனால் முக்கால்வாசி பார்ப்பனர்கள் இதையெல்லாம் பெரிய விஷயமாகவே நினைப்பதில்லை என்பதுதான் உண்மை.//
'3/4 வாசி பார்பனர்கள் அப்படித்தான்' என்பது இது உங்கள் தனிப்பட்ட கருத்து. 3/4 வாசி இப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எதைவைத்து அடையாளம் காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்தவரியில் அவர்களில் பலர், பலர் என்றால் 3/4 வாசியில் 3/4 வாசி அதாதவது கிட்டதட்ட பார்பனர்களின் 50 விழுக்காடு உங்களைப் போன்றே கருத்து கொண்டவராக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்.
// என்னை நேரில் பார்க்கும்போது அவர்களில் பலர் ஏன் சார் இந்தப் பேர்வழிகளுடன் பேசி சண்டை போடுகிறீர்கள் எனக் கேட்பதும் உண்மை.//
ஆக பார்பனர்களில் பெரும் விழுக்காடு பார்பனர் அல்லாத பிறரின் பொதுக்கருத்துடன் முரண்பாடு உடையவர்கள், வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா ? அப்படி என்றால்,
பார்பனர்களில் பெரும்பாலோர் பார்பனர்களைப் பார்த்ததும் அவரும் பார்பனர் என்பதற்காக பார்பனர்களாகவே குலைவார்கள் என்று நீங்களே போட்டுக் கொடுக்கிறீர்கள், நீங்களே பார்பனர்களின் செயல் இப்படிப்பட்டது என்பதாக கட்டமைக்கிறீர்கள், இதில் ஒட்டுமொத்த பார்பனர்களை பார்பனர் அல்லாதோர் குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு கடிந்து கொள்வது முரண்பாடாக இருக்கிறது.
//நீங்களே பார்பனர்களின் செயல் இப்படிப்பட்டது என்பதாக கட்டமைக்கிறீர்கள்,//
அது உண்மை என பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதை அப்படியே நம்பி பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக திட்டுபவர்கள் சுய அறிவை உபயோகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன்.
தலைகீழ் எண்ணிக்கைக்கு இன்று பொருத்தவரை இனிமேல் உதவாவிட்டாலும் (ஒரே கணினியிலிருந்து இப்பக்கத்தை சுட்டுவதை ஒரு முறைதான் ஹிட் கவுண்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளும்) பின்னூட்டங்களின் எண்ணீக்கையை கூட்டுவதற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது உண்மை என பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதை அப்படியே நம்பி பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக திட்டுபவர்கள் சுய அறிவை உபயோகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன்.//
ஒரு பானை சோற்றுக்கு.....ஒரு சோறு பதம் .....அல்லது ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் ஆக இரண்டுமே அடையாளம் குறித்தல் தான்.
//தலைகீழ் எண்ணிக்கைக்கு இன்று பொருத்தவரை இனிமேல் உதவாவிட்டாலும் (ஒரே கணினியிலிருந்து இப்பக்கத்தை சுட்டுவதை ஒரு முறைதான் ஹிட் கவுண்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளும்) பின்னூட்டங்களின் எண்ணீக்கையை கூட்டுவதற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
பை த வே முதல் பின்னூட்டம் தவிர்த்து மறுபின்னூட்டங்களை நான் நேரடியாக பின்னூட்டப் பக்கத்திற்கே சென்று பின்னூட்டுவதால், அது உங்கள் ஹிட் கணக்கில் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
//பை த வே முதல் பின்னூட்டம் தவிர்த்து மறுபின்னூட்டங்களை நான் நேரடியாக பின்னூட்டப் பக்கத்திற்கே சென்று பின்னூட்டுவதால், அது உங்கள் ஹிட் கணக்கில் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
இன்று இனிமேல் எனது பதிவின் பக்கத்திற்கே வந்து கமெண்ட் பக்கத்திற்கு பிறகு வந்தாலும் ஹிட் கவுண்டர் ஏறாது என்பதைத்தான் நானும் கூறினேன்.
ஆகவே இம்முறையும் உங்கள் இன்னும் ஓர் பின்னூட்டத்திற்காகத்தான் நன்றி கூறுகிறேன்.
அது மட்டுமல்ல, கோவி கண்ணன் டோண்டு ராகவன் பின்னூட்ட பரிமாறல்கள் என்றால் அதை பார்ப்பதற்கென்றே புதிதாக வேறு சிலரும் வருவார்கள் அல்லவா, அந்த அளவுக்கு ஹிட் கவுண்டர் ஏறும் அதற்கும்தான் நன்றி என் தரப்பிலிருந்து.
இப்போது காலை சரியாக பத்து மணிக்கு தலைகீழ் எண்ணிக்கை 39, 38, 37.. என வந்து விட்டது.
இப்படித் தமாஷாக பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள். நானும் தமாஷாக நன்றி நவின்று கொண்டே இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை பார்த்தால், நான் பார்வதி அம்மாள் பற்றி இட்ட அப்பதிவில் வெளியிட்ட பாயிண்டுகள் அவர்களாலும் யோசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அப்பதிவின் அடிநாதம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6 00 000
5 99 999
ஆறு லட்சம் எண்ணிக்கை காலை 10.26, 03.05.2010 அன்று வந்தது.
5 லட்சத்துக்கும் 6 லட்சத்துக்கும் இடைவெளி 173 நாட்களுக்கு கிட்டத்தட்ட 13 மணி நேரங்கள் குறைவு.
எல்லோருக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்
//இப்படித் தமாஷாக பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள். நானும் தமாஷாக நன்றி நவின்று கொண்டே இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
May 03, 2010 10:03 AM//
அனானி பின்னூட்டங்களெல்லாம் கூட வருது, அதற்கு யாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பதை நீங்கள் (மட்டும்) தான் அறிவீர்கள் என நினைக்கிறேன். அதற்காக நீங்களே அனானி பின்னூட்டம் போடுவதாக நான் சொல்வதாக பொருள் கொள்வதாக இருந்தால் நான் பொறுப்பு இல்லை. :)
டோண்டு ராகவன், சோ ராமசாமி போன்றவர்களில் குரல் ஒட்டுமொத்த தமிழ்பார்ப்ப்னர்களின் குரலா இல்லையா என்பதை இப்படி ஆராயலாம்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலைத்தாக்கினார்கள். பம்பாய் இசுலாமியர்கள் தங்கள் மீது தாக்கம் வருமோ என நினைத்து டி.விகள் பேட்டி கொடுத்தார்கள். ஒரு சிலர் செய்வது ஒட்டுமொத்த இசுலாமியர்கள் செய்ததாகாது. நாங்கள் இந்தியரகள் என்றார்கள்.
இவ்வாறாகவே, எங்கு குண்டுவெடிப்பு நிகழிலும், இசுலாமியர்கள் சொல்வது இதுவேதான்.
ஆனால் நடப்பது என்ன? இசுலாமியர்கள் வலைபதிவுகளில் கோரமாக இழித்துப்பேசப்படுகிறார்கள். ஒவ்வொரு இசுலாமியனும் தீவிரவாதிக்கு உடந்தை எனத்தான் நினைக்கப்படுகிறான். அவனது இந்தியத்தன்மை கேள்வியாக்கப்படுகிறது.
இதைப்போலத்தான். இங்கே சோ ஒரு பிரபலமான்் பத்திரிக்கையாளர். தன்னை பார்ப்பனர் என பெருமையாக அறைகூவலிட்டு சொல்லிக்கொண்டு இருப்பவர். என்வே மக்கள் அவர் கருத்தைச் சந்தேககக்ண்ணோடுதான் பார்ப்பார்கள்.
ஒரு இசுலாமியனை சந்தேகக்கண்ணொடு பார்க்கும்போது, அது சரியில்லையென்று எத்தனை பார்ப்பனர்கள் சொல்வார்கள்? ஆனால் அவர்களுக்கென்றால் எழுதிவிடுகிறார்கள் அல்லவா?
இங்கு ஆரைத் தொடைநடுங்கிகள் என கேலிபண்ணுகிறார் டோண்டு. தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்ல விரும்பா பார்ப்பனர்கள், அல்லது ஜாதிஅமைப்பையே வெறுப்பவர்கள்; அதைவிட ஆயிரம் நல்ல செயல்கள் வாழ்க்கையில் உள என நினைத்து வாழும் பார்ப்ப்னர்கள் - இவர்களைத்தான் தொடைநடுங்கிகள் என்கிறார.
இது எப்படி இருக்கிறதென்றால், இந்துத்வா தீவிர அமைப்புகளில் சேராமல் தேமே வென தன் தெய்வத்தை கும்பிடுவன் இந்து இல்லை. தெருவில் நின்று பிறம்தத்தத்னரை அடிப்பவனே இந்து!
ஒசாமாபின் லேடன போன்ற தீவிரவாதக்கூட்டாம் செய்வதை சரியென்பவனே இசுலாமியன். மற்றவன் தொடைநடுங்கிகள்.
இதுதான் டோண்டு ராகவனின் உலகம்.
அருள்/கோவி.கண்ணன்:
நீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை,
பௌதிகத்திலோ,
இரசாயனத்திலோ,
பொருளாதாரத்திலோ,
அல்லது
மருத்துவத்திலோ செய்தால்,
மேலும் ஒரு இந்தியருக்கு
அதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம்.
என்ன செய்வீர்களா?
//தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்ல விரும்பா பார்ப்பனர்கள், அல்லது ஜாதிஅமைப்பையே வெறுப்பவர்கள்; அதைவிட ஆயிரம் நல்ல செயல்கள் வாழ்க்கையில் உள என நினைத்து வாழும் பார்ப்ப்னர்கள் - இவர்களைத்தான் தொடைநடுங்கிகள் என்கிறார்.//
தவறான புரிதல். தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டிவிட்டால் தப்பித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் பார்ப்பனரைத்தான் தொடைநடுங்கி எனக் கூறினேன்.
மற்றப்படி இசுலாமியத் தீவிரவாதமும், பார்ப்பனர்கள் வெறுமனே கருத்து சொல்வதும் ஒன்றாகி விடுமா? என்ன பேசுகிறீர்கள்?
ஏற்கனவே நான் குறிப்பிட்ட மாதிரி நீங்கள் ஆதிசேஷன் என்னும் பெயரில் சிலகாலம் இங்கெல்லாம் வளையம் வந்தவரை நினைவுபடுத்துகிறீர்கள். மொத்தத்தில் ஒரு காமெடி பீஸ். வந்து இம்மாதிரியே தமாஷ் பின்னூட்டங்கள் போடுங்கள். ஏதோ அவற்றைப் படித்து டைம் பாஸ் செய்ய விரும்புபவர்களும் இங்கு வருவதால் அந்தளவுக்கு எனது ஹிட் கவுண்டரை ஏற்றுகிறீர்கள்.
உங்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதற்காக நீங்களே அனானி பின்னூட்டம் போடுவதாக நான் சொல்வதாக பொருள் கொள்வதாக இருந்தால் நான் பொறுப்பு இல்லை. :)//
அப்படியே நீங்கள் நினைத்துக் கொண்டாலும் எனக்கு கவலையில்லை என நான் ஏற்கனவே கூறியதாக ஞாபகம்.
இன்று உங்கள் தயவால் 6 லட்சம் என்ணிக்கை சற்றே சீக்கிரம் கடக்கப்பட்டது.
நேற்று ஞாயிறாக இல்லாது வேலை நாளாக இருந்திருந்தால், ஆஃபீசில் மட்டும் தமிழ்மணம் பார்ப்பவர்களின் புண்ணீயத்தால் நேற்று மாலையே அது தாண்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
சில அனானி பின்னூட்டங்கள் மற்றவர்களை தேவையில்லாது தாக்கி வருகின்றன. அவற்றை போடுபவர்கள் என்னை சிக்கலில் சிக்கவைக்க வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். அந்த வலையில் நான் விழ மாட்டேன். உடனே டெலீட்டுதான். இந்த செய்தி அம்மாதிரி நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள் என்பதை கூறத்தான். ஏனென்றால் அவர்றை டெலீட்டுவதை வெளியேயும் சொல்ல மாட்டேன், அவர்களும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டிவிட்டால் தப்பித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் பார்ப்பனரைத்தான் தொடைநடுங்கி எனக் கூறினேன்.
மற்றபடி இசுலாமியத் தீவிரவாதமும், பார்ப்பனர்கள் வெறுமனே கருத்து சொல்வதும் ஒன்றாகி விடுமா? என்ன பேசுகிறீர்கள்?//
முதல் பாரா:
அப்படியென்றால், மிகப்பிரப்லமான தமிழ்பார்ப்ப்னர்கள் தொடைநடுங்கிகளாவார்கள் உங்கள் கணிப்பின்படி:
பாரதியார், மற்றவர்களோடு சேர்ந்து பார்ப்ப்னரகள நன்றாக திட்டி இருக்கிறார்.
வ.வே.சு ஐயருக்கு தமிழ்பார்ப்ப்னர்கள் செயலகள் பல பிடிக்காது.
மேற்சொன்ன இருவரின் உரையாடல்கள் நிறைய உள. தனியாகவும் உள.
பார்ப்பனர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள்வேண்டும் என பாரதி எழுதியும் சொல்லியும் வந்தார்.
அவர்கள் முரண்டுபிடித்ததாலும், சொன்னதற்காக தன்னையே ஓரங்கட்டியதற்காகவும், முரட்டுகவிதைகளை எழுதினார்..
பிறஜாதியினர் முன்னாலேயே செய்தார. அவர்களோ மரியாதை கருதி அமைதி காத்தனர்.
மேற்சொன்ன இருவர் வாழ்க்கையும் பிற ஜாதியனர் மத்தியிலேயே கழிந்தது.
அக்ரஹாரத்தில் அடங்கவில்லை.
பெரியாரின் பலகருத்துகளைச் சரியென்ற வ.ராஜகோபாலயைங்காரையும் (வ.ரா) இதில் சேர்த்துக்கொள்ளலாம்!
இன்று, ஞானி போன்றோர் இருக்கின்றனர்.
இவர்களெல்லாம் ‘தொடை நடுங்கிகள்’ சொன்ன நான் காமெடி பீசு.
இரண்டாவது பாரா:
ஒப்பீடு அல்ல. ஒரு உதாரணம்.
மக்களின் பொதுவான பார்வை என்ன என்று சொன்னேன்.
தெருவில் போற ஆரோ ஒரு பார்ப்பனர் தன்னை உயர்வாக நினைத்து, ஜாதிப்பெருமை பேசினால், அதைக்கேட்ட ஒருவரோ சிலரோதான் சங்கடப்படுவாரகள்.
ஒரு celebrity செய்யும் போது, அது பிரபலமாகும். முதிர்ச்சியடையா சிந்தனையுடையோர், அது அவர் சார்ந்த அமைப்பின் குரலாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.
இதைத்தான் நான் இசுலாமியர் படும்பாடாக எடுத்துக்காட்டி, டோண்டு, சோ, சு.சுவாமி போன்றொரின் செயலகளுக்காக அப்பாவி பொதுப்பார்ப்பனர்கள் who dont care about their caste, nor do they have any problem in associating with others; nor do they ever feel any kind of superiority, they believe in equality, and dont bother at all about any kind orthodoxy; they mind their business; and lead their daily lives just like others: and they put these words of Coleridge in their life:
"He prayeth well, who loveth well
Both man and bird and beast.")
தண்டம் கட்டுகிறார்கள் என்கிறேன்.
சரியா?
சராங்க்கூன் ரோடு அண்ணனையும் அமலன் பிரனான்டூவையும் ஒரு அறையில் அமரவைத்து விவாதிக்க வைக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.
அவர் சிங்கையில் இருந்து வரும் பொது அமலன் அங்கிள் சென்னை வந்து இதை நடத்தினால் நன்றாக இருக்கும்.
எத்தனை தினுசாக உளற முடியும் என்பதில் இவர்கள் கில்லாடிகள் கூடவே நம்ம ஈரோடு கத்துக்குட்டியும் சேர்ந்தால் செம ஜாலி தான்.
கர்த்தரோ கந்தனோ யாரவது ஒருவர் மனது வைத்தாலும் இது நடக்கும்
நம்பிக்கையுள்ள
நடையன்
//Anonymous said...
அருள்/கோவி.கண்ணன்:
நீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை,
பௌதிகத்திலோ,
இரசாயனத்திலோ,
பொருளாதாரத்திலோ,
அல்லது
மருத்துவத்திலோ செய்தால்,
மேலும் ஒரு இந்தியருக்கு
அதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம்.
என்ன செய்வீர்களா?//
நோபல்பரிசு கமிட்டி ஆராய்ச்சி செய்பவர் பார்பனரா இல்லையா என்று பார்பதில்லைன்னு தான் நான் நினைக்கிறேன். பார்பனர்கள் தான் நல்லா ஆராய்கிறார்கள் என்று நீங்கள் சொல்றேள். சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்ந்தவர்களுக்கு, ஆரியர்களின் பூர்வீகம் ஆராய்ந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தால் மகிழ்வேன். பை த வே பார்பனர்கள் உட்பட இந்தியர்கள் யாரும் நோபல் பரிசு பெறுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
Anonymous said...
///அருள்/கோவி.கண்ணன்: நீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை, பௌதிகத்திலோ, இரசாயனத்திலோ, பொருளாதாரத்திலோ, அல்லது மருத்துவத்திலோ செய்தால், மேலும் ஒரு இந்தியருக்கு
அதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம். என்ன செய்வீர்களா?///
பார்ப்பான பத்தின எல்லா ஆராய்ச்சியையும் ஏற்கனவே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் செய்து முடிச்சுட்டாங்க. இன்னும் உங்களபத்தி ஆராய்ச்சு செய்ய என்ன இருக்கு ?
ஆனாலும், அப்பப்ப பார்ப்பன கட்டுகதைகளை அள்ளிவிட்டு புதுசா வருகிறவர்களை ஏமாற்ற முயலும் போது பதிலடி கொடுத்தா போதும்.
"பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.. வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலமும் போச்சே"ன்னு பாடினான் பார்ப்பன சாதியில் பிறந்த பாரதி.
ஆனால், வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலம் தானே போச்சு, இன்னும் பார்ப்பானை அய்யரென்ற காலமும் போகலையே - இன்னும் தமிழர்கள் பார்ப்பான் கிட்ட ஏமாறுவதும், பார்ப்பனர்களால் சுரண்டப்படுவதும் தொடரத்தானே செய்கிறது. அதுதான் என்னோட கவலை.
Congragulations DONDU .. Keep Going!
மொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன ?
//மொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன ?//
அதற்கும் ஒரு வழிமுறை உண்டு. மொபைல் ஃபோனில் டைரக்டாக இணைப்பு இருக்கக் கூடாது.
ஒரு லெதர் பவுச் பெல்டுடன் இருத்தல் நல்லது. அந்த பவுச்சில் மொபைல் போனை வைத்துக் கொண்டு கழுத்தில் பெல்டை மாட்டிக் கொள்ளோணும். அந்த பவுச்சை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதையும் மறக்கக் கூடாது. அந்த பாக்கெட்டில் வேறு ஏதும் வைக்கலாகாது என்பதையும் மறக்கக் கூடாது.
ஆகவே ஒரு சட்டைக்கு முன்னால் இரு பாக்கெட்டுகள் வைப்பது அவசியம்.
பவுச்சில் வைக்காது வெறுமனே செல்லை மட்டும் சட்டையில் வைத்து ஞாபகமின்றி முன்னால் குனியும்போது செல்பேசி ஏடாகூடமாக கீழே விழுந்து டேமேஜ் ஆவது உறுதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// Anonymous said...
மொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன ?//
அதென்ன பூணூலா சாதி அடையாளத்திற்காக மாட்டிக் கொள்ள ? யார் வேண்டுமானாலும் பாதுகாப்பிற்காக மாட்டி தொங்கவிட்டுக் கொள்ளலாம்னு டோண்டு சார் சொல்லுவார் என நினைக்கிறேன்
@கோவி கண்ணன்
Great men think alike.
It is a pity that your friendship was not earned by me before it went to another wrong person, which caused you so much heartburn.
This I say sincerely. Hope you understand the spirit behind this statement of mine.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
It is a pity that your friendship was not earned by me before it went to another wrong person, which caused you so much heartburn.
This I say sincerely. Hope you understand the spirit behind this statement of mine.
அன்புடன்,//
சரி, அதைவிடுவோ, செல்போனை பாக்கெட்டில் வைப்பது நல்லது அல்ல, செல்போன் பேட்டரிகள் பாதுகாப்பானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. லைப் இன்சுரன்ஸ் எடுக்காதவர்களுக்கு செல்போன் எப்போதுமே ரிஸ்க் தான். பாக்கெட்டில் அதுவும் இதயத்திற்கு பக்கத்தில் வைக்கும்போது ஏடாகூடமாக பேட்டரி வெடித்துவிட்டால் பேராப்பத்து தான். தொங்கவிடும் போது செல்போன் உடலுக்கு அவ்வளவு நெருக்கத்தில் இருக்காது (தொப்பை உடையவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம்) பாக்கெட்டில் நெஞ்சுக்கு பக்கத்தில் வைப்பதற்கே அப்படி என்றால் பாக்கெட்டி வைக்கும் போது இருக்கும் ஆபத்து பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தொங்கவிடுவதில் கீழே விழுந்து அடிபடுவதைவிட பாக்கெட்டில் இருந்து போன் நழுவி விழும் எண்ணிக்கை அதிகம். தொங்கவிடுவதால் அப்படியே எடுத்து ஒரு ரிங் அடித்து முடித்ததுமே பேசமுடியும், இந்த வசதி பாக்கெட்டில் வைப்பதால் அவ்வளவு எளிது அல்ல. இன்னொன்னு தொங்கவிடும் போனை ஒரு போன்பண்ணிட்டு தருகிறேன் என்று கேட்பவர்கள் குறைவு. மிஸ்டு கால் என்று மிஸ்டு கால் கொடுப்பவர்களின் அழைப்பு தவிர்த்து, நாம 'இவன்கிட்ட பேசனுமா ? என்று நினைத்து தவிர்ப்பது தவிர்த்து பிற கால் எப்போதுமே மிஸ்டு அழைப்புகள்.
இப்போதெல்லாம் சைனா போன் மிகுதியாகவருது அதன் பேட்டரி தரம் சொல்லத் தேவை இல்லை, விலைமலிவு என்பதற்காக தொடுதிரை போன்களை பலரும் வாங்குகிறார்கள், வாங்கி மேல் கீழ் பாக்கெட்டில் வைத்தால் நெஞ்சுக்கும் ஆபத்து... அப்பறம் நான் சொல்லத் தேவை இல்லை.
Great men think alike.
It is a pity that your friendship was not earned by me before it went to another wrong person, which caused you so much heartburn.
This I say sincerely. Hope you understand the spirit behind this statement of mine.
அன்புடன்,
டோண்டு ராகவன்
English is not allowed in this blog. Please write in Tamil.
வாழ்த்துக்கள் டோண்டு.
பார்வதி அம்மாள் குறித்த பதிவில் அவர் கூட்டம் போட்டு அழுவார் என்பவை போன்று தேவையற்று எழுதியதை தவிர்த்து அரசியல் பூர்வமாக உங்களுடன் உடன்படுகிறேன்.
அவரவரின் அரசியல் தலைவர்களை எதிர்த்தோ / ஆதரித்தோ எழுத விருப்பபடாதவர்கள் உங்களை திட்டுவதற்கு வாகாக அந்த பதிவு இருந்தது. பயன்படுத்திக்கொண்டனர். நீங்கள் ஹிட் கவுண்டரை எண்ணிக்கொண்டு இருந்தீர்கள்.
ஏதோ ஒரு சமீபத்தில் 1970 இல் கிழவர் ஆனவர் எழுதிய கருத்து என்று அனைவரும் விட்டிருந்தால் இந்த பதிவு வர இன்னும் ஓர் மாதம் ஆகி இருக்கலாம்.
ஆறு லட்சம் ஹிட்ஸ் தாண்டிருச்சு...
பதிவின் நோக்கம் பூர்த்தியாகிவிட்டமையால் அருள், கோவிகண்ணன், ஜோ.அ.ரே.ஃபெ ஆகியோர் தங்களது பார்ப்பானீய/ஆரிய/சிந்து சமவெளி ஆராய்ச்சியை இத்துடன் இங்கு முடித்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
-இத்தகய (பைசா பிரயோசனமில்லாத) ஆராய்ச்சிகள் செய்ய உங்களுக்கு இவ்வளவு நேரம் இருப்பதைக்கண்டு காண்டு ஆகிக்கொண்டிருக்கும் ஒரு பழைய பதிவர்.
//ஆக பார்பனர்களில் பெரும் விழுக்காடு பார்பனர் அல்லாத பிறரின் பொதுக்கருத்துடன் முரண்பாடு உடையவர்கள், வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா ?//
Govi Kannan ularinaal adhu podhu karuththaa? Nalla kadhai!
//Anonymous said...
வாழ்த்துக்கள்.மேலும் வளர்க
டோன்டு,தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு பெரிய சதி வியூகத்தின் நடுவே சிக்கியுள்ளீர்கள்.அதுதான் பார்பன எதிர்ப்பு என்ற ஒரு வெறி பிடித்த பதிவர் கும்பல்..உங்களை முன்னிறுத்தி அந்த கும்பல், பகை மற்றும் பழி உணர்வை மற்றவர்களிடம் வளர்க்கிறது.
இவர்களிடம் என்னதான் கரடியாக கத்தினாலும் உங்கள் வாதம் எடுபடாது.ஏனெனில் இவர்கள் இருப்பது கி.மு 2010 இல்.
உங்கள் வாயை பிடுங்கி வார்த்தைகளை பெற்று பிறகு அதை உங்களுக்கு எதிராக உபயோகிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்.எனவே ஜாதி மற்றும் இலங்கை தமிழர் சம்பந்தமான பதிவுகளை தவிர்க்கவும்.இது கோழைத்தனம் அன்று.சிந்தித்து செயல்படவும்.
நன்றி. //
Anonymous !
டோண்டு ராகவன் என்ன பச்சைக்குழந்தையா?
” உளறிவிடாதீர்கள். சிந்தித்து செயல்படவும் ...”
என எச்சரிக்கை 70 வயதைத்தாண்டியவருக்கு...?
ஜோ அமலன் ராயன் பெர்னாட்ஷா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
தங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கமான்... கமான்...கமான்...
காத்திருக்கும்
நடையன்
ஒரு பழைய வலைபதிவரே!
இங்கு வாதப்பொருள் டோண்டு ராகவனின் கருத்து ஒட்டுமொத்தம் பார்ப்பனர்களின் கருத்தா இல்லயா என்பதே.
அதற்கு அவர் ’இல்லை’யென்று அவர் பாணியில் சொல்லி விட்டார். ஆனால் தன்னைப்போல் பேசாத பார்ப்ப்னர்களை, including பாரதி போன்றோரை ‘தொடை நடுங்கிகள்’ என்று சொல்லிவிட்டார். பாரதியார் தன்னை ‘சுப்பிரமணிய ஐயர்’ என்று எப்போதும் சொல்ல்வில்லை. ஐயர் என்று சொல்லிவிடுவான்களோ என நினைத்து, ‘பாரதி’ என்ற் surnameஐ எடுத்துக்கொண்டு, ‘சுப்ரமணிய பாரதி’ என்றே கையெழுத்திட்டு வந்தார். பிறர், including Bhaati daasan, ஐயர் என்றழைத்தனர். காரணம் அக்காலப் பழக்க தோஷம். பாரதி அதை அனுமதித்ததில்லை.
அருள் சொல்லியது போல,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!’
என்றும் ஆனந்தப்பள்ளு பாடினார்.
இப்படிப்பட்ட பாரதி போன்றோரை, தொடைநடுங்கிகள் என்கிறார் டோண்டு ராகவன். இவர் ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ என்று போட்டுக்கொள்ளுங்கள்.
//பார்ப்பானை ஐயரென்ற காலமும் வந்திச்சே!//
என ஆனந்தக்கூத்த்தாடுங்கள். செய்யாவிட்டால் ’நீங்கள் தொடைநடுங்கிகள்’ என்கிறார்.
அதாவது, காலம் என்னும் வண்டியை பின்னோக்கி ஓட்டப்பார்க்கிறார். முடியுமா?
//ஆனால் தன்னைப்போல் பேசாத பார்ப்ப்னர்களை, including பாரதி போன்றோரை ‘தொடை நடுங்கிகள்’ என்று சொல்லிவிட்டார். //
உங்கள் வாசிப்பு ஆழ்மற்றது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். சுப்பிரமணிய பாரதியார் காலத்தில் யாரும் பார்ப்பனர்களை திட்டவில்லை. அக்கால செட்டப்புக்கும் இப்போதையதுக்கும் சம்பந்தமே இல்லை.
நான் கூற விரும்பிய தொடை நடுங்கி பார்ப்பனர் யார் என்பது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே விளங்கும். ஆகவே நீங்கள் வெளி ஆள் இங்கு அது பற்றிப் பேசவேண்டாம்.
அதெல்லாம் உமக்கெதுக்கு. நீர் பார்ப்பனர் இல்லையென்றால் இது சம்பந்தமாக உங்களுடன் பேச இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்.
இப்படித்தான் ஒரு பார்ப்பனப் பதிவரிடமும் (அப்போது அவர் பார்ப்பனர் என்பது வெளிப்படையாக கூறப்படவில்லை) கூறினேன். பிறகுதான் அவர் பார்ப்பனர் என்பதே தெரிந்தது. அவரது உயிர்த்தோழரே அவரை ஒரு வாதத்தின்போது கிராஸ்பெல்ட் என இகழ்ந்தார். அது எல்லாம் இங்கே வேண்டாம்.
பூணூலை மறுத்த ஞாநி, கமலஹாசன் ஆகியோர் சமயம் வரும்போதெல்லாம் பாப்பான் என இகழப்பட்டனர்.
ஆகவேதான் அவர்களிடம் நான் கூறுகிறேன், அப்படியெல்லாம் அபார்ப்பன சிகாமணிகளிடம் எல்லாம் வழிந்துதான் சான்றிதழ் பெறவேண்டும் என்ற தலைவிதி இல்லையென்று
டி20-ல் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு ஏதேனும் உண்டா?
டோண்டு ராகவன்
//தங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகி்ன்றன.
கமான்... கமான்...கமான்...
//
போட்டாச்சு.
// Jo Amalan Rayen Fernando said...
//தங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகி்ன்றன.
கமான்... கமான்...கமான்...
//
போட்டாச்சு.//
ஜோ அமலின் ராயன் பெர்னாட்ஷா ,
நீங்க இங்க தான் சார் நிமிந்து நிக்கிறீங்க !!
ரசிகர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் ஒரு சூப்பர் சடார்
வாழ்க்கைய ரசிப்பதில் நீங்க ஒரு கலை ந்ஜானி !!
புரபைல் போட்டோ போடுவதில் நீங்க புரட்சிகாந்த் !!!
நட்புள்ள நடையன்
@ஜோ
மீண்டும் மீண்டும் சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை. நான் சொன்ன செய்தி உமக்கில்லை. வெளி ஆளான உம்மிடம் அது பற்றி நான் மேலும் பேசத் தயாராக இல்லை.
ஆகவே உங்கள் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது. மேலே பேச வேண்டுமானால் உங்கள் பதிவில் போய் அதை செய்யவும்.
டோண்டு ராகவன்
Congratulations Dondu Sir.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள், டோண்டு சார்!
Post a Comment