செந்தழல் ரவி என்னைப் பற்றி எழுதிய அவதூறு கிசுகிசுக்களை இக்னோர் செய்து விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அந்த மனுஷன் ஆர்.வி.யின் இந்தப் பதிவில் என்னைப் பற்றி குறிப்பிட்டது ஒட்டகத்தின் மேல் போட்ட கடைசி துரும்பாகி விட்டது.
முதலில் அவதூறு ஆறுமுகம் என் மேல் எரிந்த சேறுகளை பார்ப்போம்.
//முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.//
முரளி மனோகர் என்னும் பிளாக்கர் பெயரில் வந்த பின்னூட்டங்களில் ஏதேனும் ஆபாசம் இருந்ததா என்பதை எதிர் முகாமில் இருந்த அத்தனை பேரும் தேடிப் பார்த்து களைத்து விட்டனர். ராஜ வனஜின் கம்பெனி பெயரை வெளியிட்டு விட்டேன் என முனக அதுவும் இல்லை என காட்டியாகி விட்டது. அப்போதெல்லாம் கூறாத பெரியார் விஷயம் இப்போது ஞாபகத்துக்கு வந்திருக்கு போலிருக்கு. முரளி மனோகராக இருந்து பெரியார் பற்றி போட்ட பின்னூட்டங்களைப் பார்த்து, அவரை நான் //சிறியார், கன்னடர்// என்று எங்கே சொன்னேன் என்பதை அவதூறு ஆறுமுகம் முடிந்தால் சுட்டிகளுடன் விளக்கட்டும்.
1. //கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நண்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.//
யாரைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. இம்மாதிரி ஏதும் நடந்ததாக நினைவில்லை. அப்படியே ஒரு பேச்சுக்கு அதை வைத்துக் கொண்டாலும், போன் செய்தது அவர். அவர் கையில் இரண்டரை ரூபாய் இருந்ததா, கையில் பெப்சி கோலாவை பிடித்திருந்தாரா என்பதெல்லாம் அறிய நான் என்ன ஞானதிருஷ்டியை வைத்திருக்கும் ரிஷிமுனிவரா? மிகவும் அல்பத்தனமான கிசுகிசு.
2. //ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.//
இந்த அவதூறு பற்றி எனது இந்தப் பதிவில் ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது. அவதூறு ஆறுமுகத்தின் பதில்கள் சுருதி குறைந்து கொண்டே வந்தன. இது சம்பந்தமாக அப்பதிவில் நான் எழுதியது:
அ. //ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ள தோரணையில் “போலி டோண்டுவுக்கு தகவல் கொடுக்குமளவுக்கு டோண்டுவுக்கு மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை.//
அவரது முதல் பதில்:
//செந்தழல் ரவி said...
பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா ?
நீங்கள் எதார்த்தமாக உங்களுக்கு நெருங்கிய யாரிடமாவது சொல்லிவைக்க, அது அப்படியே போயிருக்ககூட வாய்ப்பு உண்டு என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை இந்த செய்தியை வலையுலகில் யாருக்கும் சொல்லவில்லை என்ற அளவில் உண்மை..
உங்களுக்கு மேலும் தகவல்கள் வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.
September 22, 2009 6:17 PM
செந்தழல் ரவி said...
முன்பே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும் நினைத்தேன், நேரமின்மை. மன்னிக்க. அப்படி என்னுடைய வார்த்தைகள் வேறு அர்த்தம் கொடுத்திருந்தால் அது என்னுடைய மொழி குறைபாட்டையே காட்டுகிறது (நன்றி பைத்தியக்காரன் அல்லது ஜ்யோராம்)
September 22, 2009 6:20 PM//
மேலே அவதூறு ஆறுமுகம் கூறியதற்கு எனது பதில்:
//dondu(#11168674346665545885) said...
//பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா//?
அப்படியா, இதற்கு என்ன அர்த்தம்?
//18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?
எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன்?//
அதற்கு பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொன்னவை இன்னொசெண்ட் ரிமார்க் அல்ல.
September 22, 2009 7:30 PM ”
வேடிக்கை கந்தசாமி என்பவருக்கு நான் எழுதிய பதிலின் ஒரு பத்தியும் அதற்கு அவதூறு ஆறுமுகத்தின் பதிலும்:
//செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?
September 22, 2009 9:44 PM
செந்தழல் ரவி said...
செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?///
நான் கிண்டலுக்காகத்தான் அப்படி சொன்னேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்க. உங்களை சீண்டும் எண்ணமும் இல்லை, தேவையும் இல்லை. நன்றி.
September 22, 2009 10:13 PM//
செந்தழல் ரவி said...
முடிஞ்சதா ?
October 06, 2009 3:30 PM
dondu(#11168674346665545885) said...
நீங்கள் முடித்துக் கொண்டால் நானும் முடிந்தது என விடுவேன்.
ரொம்ப சீரியசான குற்றச்சாட்டை அதுவும் ஆதாரமில்லாத ஒன்றைக் கூறினால் நான் எப்படி வாளாவிருக்க முடியும்.
இப்போதும் கூறுவேன், நீங்கள் போலி டோண்டுவை பிடித்ததற்கு மிகவும் நன்றியுடையவனாகவே இருக்கிறேன்.
இவ்வாறாக இந்த விஷயம் முடிந்திருக்கும்போது அவதூறு ஆறுமுகம் தனது 21.04.2010 தேதியிட்ட இம்சை பதிவில் மறுபடியும் அதையே கிசுகிசுவாக வெளியிட்டிருப்பதை என்னவென்று கூறுவது?
இப்போது மற்ற அவதூறு கிசு கிசுக்களுக்கு செல்வோமா?
3. //சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.//
நான் கிளம்பும் சமயம் ரோசா வசந்த் தன் பங்காக 200 ரூபாய் தந்தார். எனக்கும் கணக்கு புரியாததால் 200 நானும் தந்தேன். பிறகு ஓகை அவர்கள் 1000 ரூபாய் தந்ததாகவும் கேள்விப்பட்டேன். வரவனையான் தன் பதிவில் இதை பெரிய மேட்டராக ஆக்க, அவதூறு ஆறுமுகத்துக்கு ஃபோன் செய்து மீதிப் பணத்தை டிராஃப்ட் எடுத்து அவருக்கே அனுப்புகிறேன், ஏனெனில் வரவனையானின் முகவரி எனக்கு தெரியாது என்பதால் என்றேன். அப்போது இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறி விட்டு இப்போது அதை எழுப்புவது அல்பத்தனத்திலும் அல்பத்தனம். அது சரி, நீங்கள் சென்னையில் வைத்து அவருக்கு வாங்கிக் கொடுத்த சாப்பாட்டுக்கான பணத்தை திரும்பத் தந்துவிடுவதாக உண்மைத் தமிழன் மனம் நொந்து கூற வைத்தீர்களே. அதன் பின்புலம் தெரியுமல்லவா?
4. //தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நண்பன்.//
லக்கிலுக் எனக்கு சிடி பிரிப்பேர் செய்து தந்ததற்கு இப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். ஆனால் அவரைப் பற்றி உண்மைத் தமிழன் போட்ட பதிவில் இன்னும் நன்றாகவே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.
5. //தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..//
இதுக்கெல்லாம் அருணே பதில் கூறிக் கொள்வார், ஆதாரங்களுடன், அவருக்கு நேரம் இருந்தால். எதற்கும் அவரது இப்பதிவையும் பார்க்கலாம்.
6. //தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.//
எங்கு தேடியும் இது பற்றிய ரெஃபரன்சுகள் கிடைக்கவில்லை. சுட்டியுடன் பேசவும்.
மீதி விஷயங்கள் பற்றி பேச ஒன்றும் இல்லை.
//இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்//
உங்களுக்கும் அவதூறு ஆறுமுகம் என்னும் பெயர் பொருத்தமாகவே உள்ளது.
மறுபடியும் கூறுவேன், போலியை அடையாளம் காட்ட உதவிய உங்கள் பங்கை யாரும் மறுக்க மாட்டார்கள், முக்கியமாக நான் மறுக்க மாட்டேன். அதற்காகவெல்லாம் யாரையோ காப்பாற்றுவதாக நினைத்து முடிந்து போன விஷயங்களையெல்லாம் கிசுகிசுவாக போட்டால் அவற்றை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க நான் ஒன்றும் விந்தை மனிதன் அல்ல.
அதுவும் உங்களது அந்த அவதூறுப் பதிவு பார்வதி அம்மாள் விவகாரத்தில் நான் தாக்கப்பட்டபோது சந்தடி சாக்கில் சைக்கிள் கேப்பில் ஆட்டோ விட்ட கதையாகப் போயிற்று.
உங்களுக்கு மட்டும்தான் டைமிங் வருமா? எனக்கும் வருமில்ல. அதாவது நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் பதிலளிப்பது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
34 comments:
//முரளி மனோகர் என்னும் பிளாக்கர் பெயரில் வந்த பின்னூட்டங்களில் ஏதேனும் ஆபாசம் இருந்ததா//
தனிமனித தாக்குதல் ஆபாசம் எதுமின்றி அந்த தகவல்களை 'சொந்தப்' பெயரில் எழுதியதால் இதில் நான் செந்தழல் ரவிமீது குறை காணவில்லை.
ஆபாசம் இல்லாமல் அவதூறுகளாக மட்டுமே அல்லது அதையும் கூட எழுதவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு எதற்கு 'முரளி மனோகர்' என்ற போலிப் பெயர் ? சர்வண்டீஸ், முகமது யூனூஸ் என்ற இஸ்லாமியர் பெயரில்(ஹாரிபாட்டர் என்ற பெயரில் பதிவு) இவை எல்லாம் உங்கள் புகழ்பாடியவை, திடிரென்று மறைந்த மர்மம் என்ன ? இவர்களெல்லாம் உங்கள் நண்பர்கள் என்றீர்கள், இப்போதும் தொடர்பில் இருக்கிறார்களா ? அவர்கள் உண்மையானவர்கள் என்று உங்களால் நிருபனம் செய்ய முடியுமா ? சல்மா ஜயராமனாக இருக்காது என்று நம்புகிறேன் என்று நீங்கள் சொன்னது போலவே சர்வண்டீஸ் மற்றும் முகமது யூணூஸ் மூர்த்தியின் போலி ஐடி என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இவற்றை நான் காழ்புணர்வாகக் கேட்கவில்லை என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
முதற்கண் அவதூறு ஆறுமுகம் என்னும் பெயரை பதிவுலகுக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி.
நீங்கள் கூறும் ஹாரி பாட்டர், செர்வாண்டிஸ் ஆகியோர் அச்சமயம் போலி டோண்டு மூர்த்தி செய்த கெடுபிடிகளால் நான் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வந்தவர்கள். இன்னும் தொடர்பில்தான் உள்ளனர்.
இப்போதும் சொந்தப் பெயரில்தான் வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை அவர்களாகக் கூறாதவரை நான் ஏன் கூற வேண்டும்.
//இவற்றை நான் காழ்புணர்வாகக் கேட்கவில்லை என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//
கண்டிப்பாக இல்லை. தகவல் அறியும் ஆவலில்தான் கேட்கிறீர்கள் என்பதை அறிவேன். அதுவும் நேரில் உங்களை சந்தித்ததும் பல விஷயங்கள் தெளிவாகின என்பதையும் சின்சியராகவே கூறுவேன்.
ஆனால் மற்றவர்கள் பற்றிய தகவல்களை நான் கூறுவது பொருத்தமாக இராது.
கூடவே நாட்டாமை, அறவாழி அந்தணன், வெங்கடேஷ் சர்மா ஆகியவர்களும் எனது நண்பர்களே. அவர்களே அதை எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.
மற்றப்படி அவர்கள் இன்னார் எனக்கூறி நிரூபிக்க வேண்டிய கடமை எனக்கில்லை. ஏதேனும் ஆபாசப் பின்னூட்டங்கள் வந்தனவா என்பதை மட்டும் பாருங்கள்.
அவர்கள் எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டவர்களை சகட்டு மேனிக்கு திட்டி பயமுறுத்திய போலி டோண்டுவின் செய்கைகளுக்கு பதிலாக வந்தனர்.
என்னவாயிற்றென்றால், எனது பதிவுகள் business as usual எனச் செயல்பட, அது போலியை மேலும் வெறியேற்றி (that was our intention), பல முட்டாள்தனமான செயல்களை செய்ய வைத்து கடைசியில் மாட்டிக் கொள்ள வைத்தது.
குறி வைத்த நோக்கம் நிறைவு பெற்றதும் அவர்கள் தேவையும் முடிந்தது. எனக்கு தங்கள் சொந்தப் பெயரிலேயே பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர்.
காலத்தின் கட்டாயத்தால் வந்தனர். கட்டாயம் முடிந்ததும் சென்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
:)
அவ்வ்வ்!
ஆரம்பிச்சிட்டேளா!
உலகப் பதிவர்களிலேயா முதன்முறையாக,
எலிக்குட்டி தத்துவம் சொன்னவர் நீங்கள்...! :)
உங்கள் பதிவுக்கு வரும் அனானிமஸ்(பெயரிலி) மறுமொழிகளை மட்டுறுத்தும் கலையை இன்னும் கற்றுத்தேறவில்லையே!
ஏனையா!?
@அத்திவெட்டி ஜோதிபாரதி
இக்கேள்வியை நீங்கள் அங்கும் கேட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும், ஏனெனில் ஆரம்பிச்சு வச்சது அவதூறு ஆறுமுகமே.
பல அனானி பின்னூட்டங்களை நிராகரித்துத்தான் வருகிறேன். எனது எலிக்குட்டி தத்துவம் நன்றாகவே செயல்படுகிறது, அதன் இலக்கே போலி பின்னூட்டங்கள்தான். அனானியால் பிரச்சினை இல்லை, ஏனெனில் அது அனானி எனத் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பல அனானி பின்னூட்டங்களை நிராகரித்துத்தான் வருகிறேன். எனது எலிக்குட்டி தத்துவம் நன்றாகவே செயல்படுகிறது//
ஐ.பி.எல் மோடியின் தத்துவமானது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உங்கள் எலிக்குட்டி தத்துவமும்!
பி.கு: இங்லீச் பிரீமியர் லீக்,சுபானியர் லீக் இவைகள் எல்லாம் ஐ.பி.எல் -ஐ பார்த்து காப்பியடிச்சு ஆரம்பிச்சதுதான்!
:)
//உலகப் பதிவர்களிலேயா முதன்முறையாக,
எலிக்குட்டி தத்துவம் சொன்னவர் நீங்கள்...! :)//
டோண்டு சாரின் எலிக்குட்டி தத்துவத்தால் மாட்டியது 'முரளி மனோகர்' தான். முரளி மனோகரை கொண்டுவந்து முச்சந்தியில் நிறுத்தியது போலி டோண்டு என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எலிக்குட்டி சோதனையால் முரளி மனோகரை அமுக்கியது ஒரு பிரபலப் பதிவர் (கண்டிப்பாக நான் கிடையாது) மற்றப்படி இதை டோண்டு சார் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர் இன்னார் எனக்கூறி அல்லது அது எப்படி போலி டோண்டுவுக்கும் தெரியும் என்று நிரூபிக்க வேண்டிய கடமையோ அதன் தொடர்போ எனக்கில்லை. எனக்கு தகவல் தெரியும் அம்புட்டு தான்.
எனக்கு இதில் என்ன ஆதங்கம் என்றால் டோண்டு சார் அறிமுகப்படுத்திய எலிக்குட்டி சோதனையில் முரளிமனோகர் சிக்கியது உட்பட பிறர் கண்டுபிடித்து அளித்த தகவலெல்லாம் போலி டோண்டு கண்டுபிடித்தாகக் கூறி அதன் பெருமை போலி டோண்டுவுக்கு போவது தான்.
//டோண்டு சாரின் எலிக்குட்டி தத்துவத்தால் மாட்டியது 'முரளி மனோகர்' தான்//
அது உண்மைதான். பிளாக்கர் திடீரென செய்த சொதப்பலால் வந்தது.
ஆனால் போலி டோண்டு எனது போட்டோவெல்லாம் போட்டு வந்தபோது அதை அதுதான் காட்டிக் கொடுத்தது என்பதும் உண்மைதான். அதை செய்து பார்க்கக்கூட பல பதிவர்கள் சோம்பினர் என்பதும் உண்மைதான்.
அன்புடன்,
டோண்டு அரகவன்
//அனானியால் பிரச்சினை இல்லை, ஏனெனில் அது அனானி எனத் தெரியும். //
உங்களுக்கு நெருக்கமானவர் வால்பையன் என்றாலும் கூட 'ஈரோட்டு கத்துக் குட்டி' என்று உங்கள் பதிவில் அனானிகள் திட்டினாலும் உங்களுக்கு பிரச்சனையாக தெரியாது. கஷ்டம்.
:(
// 'ஈரோட்டு கத்துக் குட்டி' என்று உங்கள் பதிவில் அனானிகள் திட்டினாலும் உங்களுக்கு பிரச்சனையாக தெரியாது. கஷ்டம்.//
அதே மாதிரி அவரது பதிவிலும் என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களாலும் எனக்கு பிரச்சினை இல்லை. நானும் அவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். அது போதும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், நீங்க தப்பா நினைக்கிலனா ஒரு விஷயம்.
போலிடோண்டு நீங்க ,ரவி,உன்மைத்தமிழன்,லக்கிலுக் எல்லாம் ப்லொக்ல famous ஆகுறதுக்கு பயன்படுத்தின ஆளா. ஏன் விடாம அவரப்பத்தியே பேசுறீங்க
@ஜயசங்கர் ஜகன்னாதன்
எனது இந்த வலைப்பூவிலே போலி டோண்டு லேபலுக்கு கீழே வரும் பதிவுகலை படித்துக் கொள்ளுங்கள். இப்போ இங்கே வச்சு அதெல்லாம் சொல்ல நேரம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களுக்கு நெருக்கமானவர் வால்பையன் என்றாலும் கூட 'ஈரோட்டு கத்துக் குட்டி' என்று உங்கள் பதிவில் அனானிகள் திட்டினாலும் உங்களுக்கு பிரச்சனையாக தெரியாது. கஷ்டம்.//
அது என்னை சொன்னதாகவே நான் ஏற்று கொள்ளாதபோது, அவைகள் என்னை பாதிப்பதில்லை!, நான் பின்னுட்டங்களை மட்டுறுத்துவதில்லை, அதனால் சில சமயம் தனிமனித தாங்குதல் ஏற்ப்பட்டுவிடும்!, டோண்டுசாரும் என்னை போலவே எடுத்து கொள்வார் என்று நினைக்கிறேன்!
//எலிக்குட்டி சோதனையால் முரளி மனோகரை அமுக்கியது ஒரு பிரபலப் பதிவர் (கண்டிப்பாக நான் கிடையாது)//
முடியல!!!! (சிரிக்கவா? அழுகவா னு)
பிரதர் அந்த பதினாலு அம்பது இன்னும் வரல.
எலிக்குட்டி சோதனையால் முரளி மனோகரை அமுக்கியது ஒரு பிரபலப் பதிவர் (கண்டிப்பாக நான் கிடையாது///
நான் பார்த்த ஒரு பின்னூட்டத்தில் மேலே முரளி மனோஹர் ஐடியும் கீழே அன்புடன் டோண்டு ராகவன் என்றும் இருந்ததே ?
எங்கே பிராமணன் அடுத்த எப்பிச்சோடு எப்போ ஸார் ?
//நான் பார்த்த ஒரு பின்னூட்டத்தில் மேலே முரளி மனோஹர் ஐடியும் கீழே அன்புடன் டோண்டு ராகவன் என்றும் இருந்ததே?//
No it was the reverse. It was having my id and signed as Murali Manohar (in the vanakkaththutan.blogspot).
It was due to a bug in the blogger. But you waited with that information and revealed it at what you considered as opportune time.
Unfortunately for you, I had allowed anonymous comments in my blog posts only a day prior to that exposure.
Had it been otherwise, I would have been in a more embarrassing position. I have to thank you for your messing up the timing.
//பிரதர் அந்த பதினாலு அம்பது இன்னும் வரல.//
And it shall be returned next time we meet. You only declined my offer at that time. That you have second thoughts is no longer amazing to me after having seen so much of your blow hots or blow colds.
//எங்கே பிராமணன் அடுத்த எப்பிச்சோடு எப்போ ஸார் ?//
Tonight.
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னவாயிற்றென்றால், எனது பதிவுகள் business as usual எனச் செயல்பட, அது போலியை மேலும் வெறியேற்றி (that was our intention), பல முட்டாள்தனமான செயல்களை செய்ய வைத்து கடைசியில் மாட்டிக் கொள்ள வைத்தது.
//
ஒருத்தர intention ஆ மாட்டிவைக்க வேண்டும். புத்தி சொல்லி அனுப்ப்லாமே
@Jaisankar Jagannathan
He was like a malignat tumour in the Tamil Blogsphere for quite a number of years.
He had to be surgically removed without any false mercy and that is what we did.
Please know the full circumstances before making some pious utterancesso so as to have a good feeling as to what a great guy you are.
Dondu N. Raghavan
ஜெய்சங்கர் ஜெகன்நாதன் அவர்களே, கூகிளில் 'குச்சிக்காரி' என்று தேடிப்பார்க்கவும்.
பின்னர், புத்தி சொல்லவும். நானும் கேட்டுக்குறேன்.
//ஒட்டகத்தின் மேல் போட்ட கடைசி துரும்பாகி விட்டது.
//
அப்படின்னா?
இங்கிலீசில் இங்கே டோண்டு என்.ராகவன் என்ற பெயரில் வந்த் பதில்கள் பதிவர் டோண்டு எழுதிய மாதிர் தெரிய்ல. ஆரையாவது கூலி கொடுத்து வைத்திருப்பது மாதிரிய்ல்ல தெரிது.
ஒரு யூகந்தான்.
வய்தான காலத்தில நல்லா நேரம் போற்து இல்லையா ராகவனுக்கு ?
எனக்கு ராகவனைபபடிச்சு போரடிச்சிட்டு.
வாலிப வயது காதல் அனுபவனங்களை எழுதுங்கள். நான் படிக்கிறேன் பின்னூட்டம் போடாமல்.
ஜோ !!!அண்ணாத்தை,
உங்க பின்னூட்டத்துக்கு இரசிகர் மன்றமே இருக்கும் போது ஏன் அப்படி சொல்றீங்கோ ? ஆர் உங்களை அந்த மாத்ரி பேச வைக்கிறது.
நீங்க சிங்கப்பூர் ஆளு கூட உட்கார்ந்து விவாதம் பண்ண ரெடியா ? என்னைப் பொறுத்தவரையில் அது 20:20 மேட்சை விட நல்லா ஜாலியா இருக்கும்னு தோனுது.
எப்ப எங்க வச்சுக்கலாம், சிங்கபூர் தம்பிய நாங்க கூட்டி வாரோம்.
அன்பின் நடையன்
ஜோ அமலன் ரையான் பெரனாண்டஸ்!!
டெய்லி நெட் பார்க்க மாட்டீங்களா ? நேத்து எங்க போய்டீங்க.
அடிக்கடி பின்னூட்டம் போடுங்க சார்.
”உங்கள் ரசிகன்” நடையன்
//ஜெய்சங்கர் ஜெகன்நாதன் அவர்களே, கூகிளில் 'குச்சிக்காரி' என்று தேடிப்பார்க்கவும்.
பின்னர், புத்தி சொல்லவும். நானும் கேட்டுக்குறேன்.
//
தமிழ் மொழி வளர்ச்சிக்கு நீங்கள் இரு தரப்பினரும் ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. என்ன ஒரு நடை. கவிதை . கவிதை கவிதை.
சங்க காலம் திரும்பின மாதிரி இருக்குது.அடேங்கப்பா
//தமிழ் மொழி வளர்ச்சிக்கு நீங்கள் இரு தரப்பினரும் ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. என்ன ஒரு நடை. கவிதை . கவிதை கவிதை. //
இரு தரப்பினரும் என்றால் என்ன அர்த்தம்?
போலி டோண்டு தரப்பையும் உண்மை டோண்டு தரப்பினரையும் இருவரும் ஒன்றே எனக்கூற வருகிறீர்களா?
விஷயம் புரியாமல் பேசுவது என்பது இதுதான். போலி டோண்டு வீழ்ச்சியின் தருணத்தில் வந்ததால் அவனிடமிருந்து தப்பித்தீர்கள், இல்லாவிட்டால் உங்கள் கதையும் கந்தலாகியிருந்திருக்கும்.
ஓக்கே, உங்களுக்கு பழைய கதையெல்லாம் கூற இங்கு எங்களுக்கு நேரம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// போலி டோண்டு வீழ்ச்சியின் தருணத்தில் வந்ததால் அவனிடமிருந்து தப்பித்தீர்கள், இல்லாவிட்டால் உங்கள் கதையும் கந்தலாகியிருந்திருக்கும்.
//
இது உண்மைதான். அவரின் பின்னூட்டங்களைப்பார்ர்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. (மத்தவங்க கஷ்டம் நமக்கு சிரிப்பாத்தான் இருக்கு).அவருக்கு மனநிலை சரியில்லையென்றால் மருத்துவரிடம் போயிருக்கலாம்.
@ஜெயசங்கர் ஜகன்னாதன்
சிரிப்பா வருகிறது?
இந்தப்பதிவை படியுங்கள்.
http://dondu.blogspot.com/2008/07/blog-post_24.html
அவன் செய்தது வெறும் வசைகள் மட்டுமல்ல.
மின்னஞ்சல் மோசடிகள் மூலம் எனது மகளின் போட்டோக்களை திருடி அவனது தளத்தில் போட்டான், என் மனைவி மகள் பெயரில் ஆபாச தலங்கள் ஆரம்பித்தான். எனக்கு பின்னூட்ட மிட்ட பதிவர்களுக்கு, முக்கியமாக பெண் பதிவர்களுக்கு ஆபாசமாக மெயில்கள் அனுப்பினான்.
இன்னும் எவ்வளவோ செய்தான்.
இப்போது பின்னோக்கி பார்த்து ஹிட்லர்/ஸ்டாலின் காலங்கலை என்ணி நோஸ்டால்ஜியா செய்வதெல்லாம் வேண்டாமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை சிரிப்பை வரவழைக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆடு மே மேன்னு கத்துற மாதிரி இருக்கு ? ஓ இது மே மாதமோ ?
உங்களின் மனக்கஷ்டத்துக்கு மன்னிக்கவும். நான் பின்னூட்டம் மட்டும் தான் பார்த்தேன். அதனால் தான்
ஆஹா! ஆடு கத்துனா, எப்பிடியோ கசாப்பு கடைக்காரனுக்கு தெரிஞ்சுடுதே!!! சரி, சரி. அவனுங்க நோக்கமே எப்பிடியாவது ஆடுங்கள வெட்டி பணம் பண்ணோணும். அதானே?
ரவி ஆடுன்னு சொன்னது என்னை இல்லையே. யோசிச்சு சொல்லுங்க
//சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.//
நான் கிளம்பும் சமயம் ரோசா வசந்த் தன் பங்காக 200 ரூபாய் தந்தார். எனக்கும் கணக்கு புரியாததால் 200 நானும் தந்தேன். பிறகு ஓகை அவர்கள் 1000 ரூபாய் தந்ததாகவும் கேள்விப்பட்டேன். வரவனையான் தன் பதிவில் இதை பெரிய மேட்டராக ஆக்க, அவதூறு ஆறுமுகத்துக்கு ஃபோன் செய்து மீதிப் பணத்தை டிராஃப்ட் எடுத்து அவருக்கே அனுப்புகிறேன், ஏனெனில் வரவனையானின் முகவரி எனக்கு தெரியாது என்பதால் என்றேன். அப்போது இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறி விட்டு இப்போது அதை எழுப்புவது அல்பத்தனத்திலும் அல்பத்தனம். அது சரி, நீங்கள் சென்னையில் வைத்து அவருக்கு வாங்கிக் கொடுத்த சாப்பாட்டுக்கான பணத்தை திரும்பத் தந்துவிடுவதாக உண்மைத் தமிழன் மனம் நொந்து கூற வைத்தீர்களே. அதன் பின்புலம் தெரியுமல்லவா?
//
இதெல்லாம் அல்பத்திலும் அல்பம்
Post a Comment