எபிசோட் - 81 (10.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரி வீட்டுக்கு மேற்கொண்டு கேஸ் இணைப்பும் வருகிறது. யார் அனுப்புகிறார்கள் என்னும் நிலையில் அந்த வீட்டில் ஒரே குழப்பம். நடுவில் புது வீட்டு வாடகை வேறு பாக்கி நிற்கிறது. சுப்புலட்சுமியின் வற்புறுத்தல் பேரில் வேம்பு தயக்கத்துடன் சாம்புவின் உதவியை கேட்க ஒத்துக் கொள்கிறார்.
நாதன் வீட்டில் அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன என வசுமதி கேட்க, மனுஸ்ம்ருதி என அவர் பதிலளிக்கிறார்.
என்ன சார் இது இவர் மனு ஸ்ம்ருதியைப் படிக்கிறார். அதிலே என்ன சொல்லியிருக்கப் போறாங்க? பாப்பான்தான் ஒசத்தி. அவன் சொன்னபடி கேளுங்கோ அப்படீன்னுதானே எழுதியிருக்கப் போறாங்க என சோவின் நண்பர் அசுவாரசியமாக கூற, சோ மனுஸ்ம்ருதியை பற்றி மிகத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது என பல எடுத்துக் காட்டுகளுடனே கூறுகிறார். அதில் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மாக்களை பார்த்தால் பிராமணன் ஆகும் ஆசையே ஒருவருக்கும் வராது எனவும் கூறுகிறார்.
அது ஒரு அருமையான அரசியல் வழிக்காட்டு நூல். அதை சரியாக புரிந்து கொண்டு நடந்தால் நாடு நன்றாகவே ஓகோன்னு வரும் என சோ எடுத்துரைக்கிறார். இங்கு நான் அவற்றைக் கூறப்போவதில்லை. வீடியோவில் காண்க என்று மட்டும் சொல்வேன்.
நாதன், வசுமதி மற்றும் பிச்சுமணி ஆகியோர் கூடிப் பேசி, காதம்பரியையும் அசோக்கையும் சந்திக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கின்றனர். அசோக்கும் ஒத்துக் கொள்கிறான்.
(தேடுவோம்)
எபிசோட் - 82 (11.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(சுட்டி பாதிலிலிருந்துதான் ஆரம்பிக்கிறது)
அசோக்கும் காதம்பரியும் சந்தித்து பேசுகின்றனர். அசோக் தனது நிலைப்பாட்டை விளக்குகிறான். அவன் வர்ணரீதியான பிராமணனை தேடுவதாக தான் அறிந்ததாக காதம்பரி கூற, அவனே இப்போது தன்னுள்ளேயே பிராமணனை தேடுவதாகவும், தேடுவதை விட தேடப்படும் பொருளாக மாறுவது நல்லதல்லவா என்றும் கூறுகிறான். அவன் தான் முதல் கட்டமான பிரும்மச்சரியத்தை முடித்து விட்டதாக கூற, காதம்பரி bachelorhood? எனக் கேட்கிறாள். பிரும்மச்சாரிகள் எல்லோருமே கல்யாணம் ஆகாதவாத்தான் ஆனாக்க கல்யாணம் ஆகாதவா எல்லோருமே பிரும்மச்சாரிகள்னு சொல்லிட முடியாது என அசோக் எடுத்து கூறுகிறான்.
அதே போலத்தான் கிருகஸ்தாஸ்ரமம் என்பதும் வெறுமனே குடும்ப வாழ்க்கை மற்றும் சந்ததிகலை பெருக்க மட்டுமே இல்லை என்றும் குறிப்பிடுகிறான். பிறகு தர்ம பத்தினியின் குணநலன்களை அடுக்குகிறான். இக்காலத்தில் எல்லாராலுமே இது எல்லாம் முடியாது என்பதை தானும் அறிவதாகவும், ஆகவே சில சமரசங்கள் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறான். பிறகு காதம்பரியாக யோசித்து நிதானமாக முடிவைச் சொன்னால் போதும் எனவும் குறிப்பிட்டு விடுகிறான்.
தன் வீட்டில் காதம்பரியும் அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கை திருமணம் செய்து கொள்ளுவதன் சாதக பாதகங்களை அலசுகிறார்கள். தனது ஆட்சேபணைகளை ஒவ்வொன்றாக காதம்பரி கூறக்கூற, அவற்றுக்கு பதிலும் அளிக்கப்படுகிறது. அசோக் மூணு வேளையும் சந்தி பன்ணுகிறான் என அவள் திகைப்புடன் கூற, அந்தந்த நாளின் பாவத்தை அன்றே முறிக்கிறான் என அவளுக்கு பதில் வருகிறது.
அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்க, அது சந்தி செய்வதின் நோக்கங்களில் ஒரு சிஇய பகுதியே எனக் கூறி, சந்தியாவந்தனம், பிராணாயாமம், மற்றும் காயத்ரி மந்திரங்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். இப்போது மேலேறப்பட்டிருக்கும் வீடியோ துண்டில் அது கவர் செய்யப்படவில்லை என்பது ஒரு குறையே. கூடிய சீக்கிரம் அதை சரி செய்வார்கள் என நம்புகிறேன். (அப்பாடா சரி செய்து விட்டார்கள். முழு வீடியோவையுமே இப்போது பார்க்க இயலுகிறது).
காதம்பரி மற்றும் அவளது அக்காவின் அலசல் தொடர்கிறது. அவளது அத்திம்பேரும் இதில் கலந்து கொள்கிறார். இப்போதுதான் கவலை தரும் ஒரு டெவலப்மெண்ட் வருகிறது. என்ன வேண்டுமானாலும் வாக்கு தந்து விட்டு காதம்பரி அசோக்கின் மனைவியாகிவிட வேண்டும் என்றும் பிறகு எல்லாவற்றையும் நாளடைவில் தூக்கி எறியலாம் என அபாயகரமான கருத்தை அவள் அக்கா முன்வைக்க, காதம்பரியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறாள். (இது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை)
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
1 hour ago
3 comments:
இப்போதெல்லாம் "சந்தியாவந்தனம்" என்பது வெறும் காயத்திரியோடு பலர் முடித்துவிடுகிறார்கள்.
நீ என்ன மாதிரி தர்மபத்தினி எதிர்பார்க்கிறாய் என்ற கேள்விக்கு அசோக்கின் பதிலை கேட்டால் இந்த காலத்தில் இவனுக்கு பெண் கிடைப்பாளா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும்.பிராமணனை தேடுவது போல் இதையும் தேடவேண்டிவரும்! அது அடுத்த சீரியலா? :-)
நன்றி! இரண்டு நாள்களாக பார்க்காத குறை தீர்ந்தது! இதில் வரும் விளக்கங்களுக்காகவே இதை பார்க்கிறோம்!
//அவன் தான் முதல் கட்டமான பிரும்மச்சரியத்தை முடித்து விட்டதாக கூற, //
:)
உண்ணாவிரதம் முடிச்சாச்சு என்றால் பழரசம் குடிப்பாங்க, பிரம்மச்சாரியத்தை முடித்துவிட்டதாகச் சொன்னால் என்ன பொருள் ?
Post a Comment