1/27/2011

டோண்டு பதில்கள் 27.01.2011

hayyram
கேள்வி-1. நேருவின் ஆங்கிலேய பாசத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது பற்றி உங்கள் கருத்து?
பதில்:எட்வினா என்னும் தலைப்பில் காதெரின் க்ளெமெண்ட் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் லேடி மவுண்ட்பேட்டன் பற்றி ஒரு நாவலாக எழுதியிருந்தார். அது பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் பிரெஞ்சு மூலத்தில் நான் படித்தவை அப்படியே வந்திருக்குமா எனத் தெரியவில்லை.

நான் படித்தவரை பிரெஞ்சு மூலத்தில் எட்வினாவின் நடத்தை அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லைதான். அவரை ஒரு நிம்ஃபோமேனியாக் ரேஞ்சுக்கே விவரித்திருந்தார்கள். மவுண்ட்பேட்டனோ இதையெல்லாம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நேரு பற்றியும் பெண்கள் விஷயத்தில் சபலமுள்ளவராகவே காட்டப்பட்டது. அவருடைய காதலிகளில் எட்வீனாவும் ஒருவர்.

நேருவை தன் கணவர் சொற்படி நடக்குமாறு எட்வினா செய்தார், அதாகப்பட்டது பட்டேல் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானியரை மும்முரமாக விரட்டியபோது இவராக குடுகுடுவென ஐநாவிடம் ஓடியதையே குறிப்பிடுகிறார்கள். அச்சமயம் நேரு அனாவஸ்யமான வாக்குறுதிகளையும் தந்தார், பிரிவு 370, பொதுமக்கள் வாக்கெடுப்பு இத்யாதி, இத்யாதி. அதன் பலனை இன்னும் அனுபவிக்கிறோம்


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-2. காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்
பதில்: திரும்பத் திரும்ப உண்மைத் தமிழனை கேட்க வேண்டிய கேள்விகள் எனக்கு அனுப்பப்படுகின்றன.

இளைஞன் ஓடாது முதுமையடைந்து விட்டானா? இதில் என்ன ஆச்சரியம்? கருணாநிதி வசனம் எழுதி படம் போண்டியாவது இது முதல் தடவை இல்லையே. எது எப்படியானாலும் கருணாநிதி தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு ஏதாவது சாராய பெர்மிட் கொடுத்து விட்டுப் போகிறார் (நன்றி சோ அவர்களே).

கேள்வி-3. வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!
பதில்: நான் உழவர் சந்தையில் நேரடியாகவே பார்த்தது என்னவென்றால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை சப்ளை பொருத்தே அமைகிறது. அதிக மழையில் வெங்காய பயிர்கள் காலி என்றால் விலை ஏறாமல் என்ன செய்யும்? அரசு இதில் ஏதேனும் உள்புகுந்து மார்க்கெட் விலை ஏற அல்லது சரியச் செய்யும் என நினைக்கவில்லை.

கேள்வி-4. ஆவின் பால் முதல் அனைத்து நிறுவன பால் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தது 50 பைசா முதல் 2 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
பதில்: ஆவின் பால் விலை அப்படியே உள்ளது. திருமலா toned பால் லிட்டருக்கு 2 ரூபாய் ஏறியுள்ளது. ரிலையன்ஸ் பால்விலை அப்படியே உள்ளது. சில இடங்களில் ரீட்டைல் வியாபாரிகள் விலை உயர்ந்த பால்களை வாங்கி வைக்காது புறக்கணித்தனர்.

கேள்வி-5. “ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தி, ஐகோர்ட் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பதில்: முதலில் அவர் கட்சியில் அதை செய்யட்டும். எல்லா ராஜ்யசபா எம்பி விவகாரத்திலும் வன்னியருக்கே (அன்புமணி) இட ஒதுக்கீடு.

கேள்வி-6. என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
பதில்: காவலன் படம் சற்றே தேறிவிட்டது என கேள்விப்படுகிறேன்? மற்றப்படி முதல்வரின் எல்லா வீடுகளும் திரைப்பட உலகைக் கைப்பற்றியது என்னமோ நிஜம்.

கேள்வி-7. ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்புடன் சிபல் செயல்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
பதில்: அதெல்லாம் உப்பு போட்டு சாப்பிடுபவருக்குத்தான் உரைக்கும். கபிலுக்கு ஆகவே கவலையில்லை.

கேள்வி-8. அரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார்.
பதில்: புத்திசாலி. முதலில் தனது தொழிலில் சூதனமாக நடந்து கொள்ளட்டுமே.

கேள்வி-9. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பதில்: இந்தச் செய்தியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அக்கிரமம். இதென்ன கொடுங்கோன்மை.

அமெரிக்காவில் பள்ளி புதிதாகக் கல்வியாண்டை ஆரம்பிக்கும்போது முதல் நாள் பழைய மாணவ மாணவியர் வரவேண்டும் எனக் கட்டாயச் சட்டம் உள்ளது. இந்தியாவிலும் பல பள்ளிகளில் அப்படித்தான் எனக் கேள்விப்படுகிறேன்.

ஆனால் மிட் டெர்ம் விடுமுறைக்கும் அதே மாதிரி இந்தக் கல்லூரி செயல்படுகிறது என்பது வியப்பாக உள்ளது. குறைந்த பட்சமாக இந்த விதி இருப்பதை கல்லூரி நிர்வாகம் சரியான அளவில் முன்கூட்டியே நிலைநிறுத்தியதா என்பதைப் பார்த்தல் அவசியம்.

கேள்வி-10. நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பதில்: அன்புமணியோ அவர் தந்தையோ பெங்களூர் ஆகிய இடங்களில் ஒன்றும் நிலம் கிலம் வாங்கவில்லையோ?

கேள்வி-11. மதிமுகவிலிருந்து விலகியுள்ள லேட்டஸ்ட் திரையுலக பிரமுகர் வரிசையில் சேர்ந்துள்ளார் இயக்குநர்-நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்.
பதில்: சுந்தரராஜனின் நடிப்பு எனக்கு பிடிக்கும் அவ்வளவே. மற்றப்படி அவரது அரசியல் பற்றி ஒன்றும் அறியேன். ஆகவே கருத்து ஏதுமில்லை.


ரமணா
கேள்வி-12. தமிழக சட்டசபைக்கான திமுக+காங் கூட்டணி முடிவான நிலையில் ரிசல்ட் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?
பதில்: இழுபறியாகத்தான் இருக்கும் என எனக்குப்படுகிறது.

கேள்வி-13. ஸ்விஸ் வங்கி கணக்கு வைதிருப்போரின் விபரம் தெரிய வந்தால் ரிசல்ட் மாறுவதற்கு வாய்ப்பு உண்டா?
பதில்: அந்த விபரம் வருவதற்கே வாய்ப்பு இல்லாத போது இது அனுமானக் கேள்வி மட்டுமே.

கேள்வி-14. ஆளுநரின் செயல் பாட்டை எதிர்த்து கர்நாடக முதல்வரின் ஹர்த்தால் சரியா?
பதில்: இருவருமே லேசுப்பட்டவர்கள் இல்லைதான். மற்றப்படி சோ சொல்வதுபோல எடியூரப்பாவால் பாஜகாவுக்கு சங்கடமே.

கேள்வி-15. துக்ளக் ஆசிரியரின் ,ஆண்டுவிழா பேச்சை திருமப்த் திரும்பப் போடும் ஜெயா டீவியின் செயல்பாடு தேர்தலில் பயனளிக்குமா?
பதில்: விற்பனைக்கு இருக்கும் மீட்டிங்கின் டிவிடியின் சேல்ஸ் வேண்டுமானால் குறையும், ஏனெனில் வாங்க நினைப்பவர்கள் ஜெயா டிவியிலேயே பார்த்து விடுவார்கள். மற்றப்படி சோ சொல்வதை எல்லாம் ஒப்புக் கொள்பவர்கள் கூட ஓட்டு என வரும்போது மாற்றிப் போடுவதுதான் அதிகம் நடந்துள்ளது.

கேள்வி-16. சேலம் மாநாட்டில் மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகு- இந்தத் தடவையாவது புரட்சிதலைவியும், இரண்டாம் புரட்சித் தலைவரும்(வி.காந்த்) ஓர் அணியில் வருவார்களா?
பதில்: அவ்வாறு நடப்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பார்ட்டிகளுக்குமே நல்லது என்பதுதான் தற்போதைய நிலவரம். அது நடக்காமல் முட்டுக்கட்டை போடக்கூடியது அவர்தம் ஈகோதான். ஆகவே பார்ப்போம் என்ன நடக்கிறது என.


நக்கீரன் பாண்டியன்
தமிழக தேர்தலில் ஒரு வேளை வி.காந்த் + திமுக + காங் கூட்டணி அமைந்தால்(50+134 +50 தொகுதிகள் - தகவல் ஜூ.வி)
கேள்வி-17. ஜெ.ன் எதிர்காலம்?

பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்தான். நீங்கள் கூறியது போல நடந்தால் ஜெ அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கொடநாட்டுக்கெல்லாம் போனால் அங்கேயே இருக்க வேண்டியதுதான்.

கேள்வி-18. மருத்துவரின் நிலை?
பதில்: தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கலைஞர் காலில் விழுந்து கதறிவிட மாட்டாரா என்ன? அன்புமணிக்கு கவுன்சிலர் பதவி கிடைத்தாலும் போதுமே என எண்ணுவாரோ?

கேள்வி-19. கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு?
பதில்: தமிழகத்தை பொருத்தவரை அவர்களது நிலை அப்படியே இருக்கும், அதாவது செல்லாக் காசாக.

கேள்வி-20. வைகோ?
பதில்: மீண்டும் வாலிபால் ஆட வேண்டியிருக்காது என நம்புவோம்.

கேள்வி-21. தமிழகம்?
பதில்: ஐயகோ.

மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

ராம்ஜி_யாஹூ said...

டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா


உதாரணமாக- இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா.

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?
1.படம் ஓடுகிறதோ, இல்லையோ சம்பளத்தை ஏற்றுவதை நிறுத்துவதே இல்லை ஹீரோக்கள். ஒவ்வொரு படம் நஷ்டம் அடையும் போதெல்லாம் தன் சம்பளத்தை மட்டும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார் என்று முன்னணி நடிகர் ஒருவரை பற்றி மேடையிலேயே புலம்பி தள்ளினார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
2.சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.
3.எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில், ரஜினியை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல், ஷங்கரால் தனியா ‘ரோபோ’ பண்ணி இருக்க முடியாது. ரஜினியை இனி யாரும் தாண்டிப் போக முடியும்னு தோணலை!”-நாகார்ஜுனா
4.உயரத்தில் பூண்டு விலை..-ஒரு கிலோ பழைய பூண்டு, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5.வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு 36 தொகுதிகள் உட்பட, 16 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்குரிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.\
6.பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்குள் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற அவல நிலையை ஒழிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
7.மூழ்கப்போகும் சென்னை – நெருங்கிவரும் அபாயம்-தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
8.”உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே… உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!” என்ற பீடிகையுடன் ‘ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ.
9.இதுவரைக்கும் பணத்துக்காக நடிச்சாச்சு. இனிமேல் பணம் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும் என்று கதை சொல்ல போனவர்களின் மயிர் சிலிர்க்கும்படி பேசுகிறாராம்.-ஸ்ரேயாவின் இந்த திடீர் மாற்றம்
10.கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டதட்ட எல்லா நடிகர்களும், நடிகைகளும் ‘ட்விட்டர், பேஸ் புக்’ தங்களுடைய அன்றாட சம்பவங்களை எழுதி வருகின்றனர். அதில் சிலர் தேவையற்ற கருத்துக்களை எழுதி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. சமீபத்தில் ‘ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது. ஆனால் என் பெயரில் போலியாக யாரோ இதை நடத்துகின்றனர்’ என்கிறார் அசின்.

ஞாஞளஙலாழன் said...

கருப்பு பணம் பற்றிய தங்களது பதில் அருமை. எல்லா கட்சிகளையும் சேர்ந்த பெரிய தலைகளுக்கு இதில் தொடர்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது என்ற அரசின் பதில் நகைப்புக்கு உரியது. ஒழுங்காக வரி கட்டுபவர்கள் எல்லாம் ஏமாளிகளோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

Arun Ambie said...

For டோண்டு பதில்கள்:

மஹாராஷ்ட்ராவில் ஓரு உதவி கலெக்டர் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்கிறார். அரசு, தண்டனை இவை பற்றிய அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லவே இல்லையே? Any way to get out of this?

Unknown said...

அடுத்த தேர்தலில் திமுக,காங் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என
பெரும் நம்பிக்கையில் உள்ளதாக வரும் செய்திகளின் அடிப்படையில்,திமுகவின் தலைவர் அடுத்த முதல்வராய் ஸ்டாலினை வழிமொழிந்தால், தேர்தல் நாள் அறிவிக்கப்ட்டதும், இவர்களின் ரியாக் ஷன் எப்படி இருக்கும்?

1. மகன் அழகிரி
2.மகள் கனிமொழி
3.பேரன் தயாநிதி
4.துரை முருகன்
5.வீரபாண்டி ஆறுமுகம்

ezhil arasu said...

/நக்கீரன் பாண்டியன் said...

அடுத்த தேர்தலில் திமுக,காங் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என
பெரும் நம்பிக்கையில் உள்ளதாக வரும் செய்திகளின் அடிப்படையில்,திமுகவின் தலைவர் அடுத்த முதல்வராய் ஸ்டாலினை வழிமொழிந்தால், தேர்தல் நாள் அறிவிக்கப்ட்டதும், இவர்களின் ரியாக் ஷன் எப்படி இருக்கும்?

1. மகன் அழகிரி
2.மகள் கனிமொழி
3.பேரன் தயாநிதி
4.துரை முருகன்
5.வீரபாண்டி ஆறுமுகம்/

ஆதிக்க சக்திகளின் பகல் கனவு இது.
தலைவரின் குடும்பத்தில் இது மாதிரி சிண்டு முடிய குறு மதி படைத்த குள்ள நரிக் கூட்டங்கள் நினைப்பதை கழக உடன் பிறப்புகள் நன்றாகவே அறிவர்.
தலைவரின் சொல்லுக்கு மறு சொல் இனி கிடையாது என்பது திட்ட வட்டம்.
அங்கொன்று இங்கொன்றாக சிறு சிறு சல சலப்புகள் ஏற்பட போவதாய் எழுதும் ஆதிக்க சக்திகளின் பிற்போக்கு கொள்கை கொண்ட பத்திரிக்கைகளின்
தவறான கணிப்பை எப்படி கையாள்வது என்பது தலைவருக்கு கைவந்த கலை.
இன்றைய அரசியல் சூழலில்,மபெரும் மக்கள் சக்தியின் துணையுடன் திமுகவிற்கு தனியாகவே பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.
தமிழ் சமுதாயம் மிகவும் நன்றி உணர்ச்சியுடன் உதயசூரியனுக்கு வாக்களிக்க தயாராய் விட்டது.
திமுக வின் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு பலன் கூட பெறாத குடும்பமே இல்லாச் சுழலில் வெற்றி என்பது உறுதி செய்யபட்ட ஒன்று.
குஜராத்,பீஹார் மாநிலங்களில் நடந்த அதிசியம் மீண்டும் தமிழகத்தில் 2011 ல் நிகழும்.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி
வெற்றி வாகை சூடி சரித்திரம் படைக்கப் போகிறது.

வஜ்ரா said...

@எ.ராசா (எழில் ராஜா)

அறிவுகெட்ட ________ , அஞ்சு வருசமா ஆட்சிப்பீடத்தில் ஒம்ம தலைவன் தான் அமர்ந்துகிட்டு இருக்கான். அப்புறம் வேற யாரையோ பாத்து "ஆதிக்க சக்தி" ஆதிக்க சக்தின்னு கத்துர.

ஆதிக்க சக்தியே உம்ம தலைவனும் அவனது குடும்பமும் தான்.

ezhil arasu said...

பலன் பெற்றவர்கள் 8 கோடி!கூட்டணி எப்படி இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்துள்ள நலத்திட்டங்கள் எதிர்பார்த்த ஓட்டுகளை பெற்றுத் தரும் என, ஆளுங்கட்சி கருதுகிறது. அதாவது, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்களில் பலனடைந்தவர்கள் விவரம்:

திட்டம் பலன் பெற்றவர்கள்: * ரூ.7,000 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி 23 லட்சம்
* ஒரு ரூபாய் அரிசி திட்டம் ஒரு கோடியே 88 லட்சம்
* கலர், "டிவி' திட்டம் ஒரு கோடியே 50 லட்சம்
* 37 நலவாரியங்களில் உறுப்பினர்கள் 2 கோடியே 14 லட்சம்
* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு கோடியே 34 லட்சம்
* அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் அமல் 13 லட்சம்
* பென்ஷன் பெறுவோர் 6 லட்சம்
* புதிதாக அரசு வேலை பெற்றவர்கள் 5 லட்சம்
* பணி வரன்முறை 3 லட்சம்
* முதல் தலைமுறை பட்டதாரிகள் கட்டண சலுகை 80 ஆயிரம்
* தனியார் வேலைவாய்ப்பு 1 லட்சத்து 50 ஆயிரம்
* திருமண உதவித் திட்டம் 3 லட்சம்
* முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 22 லட்சத்து 26 ஆயிரம்
* கான்கிரீட் வீடு 2 லட்சத்து 50 ஆயிரம்
இதுதவிர, 108 ஆம்புலன்ஸ், பயிர்க் காப்பீடு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல திட்டங்களில் மொத்தம் எட்டு கோடி பேருக்கு பலன் சென்றடைந்துள்ளதாக ஆளுங்கட்சி கணக்கிட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் திட்டங்கள் சேராத வீடுகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.,வினர் பெருமைப்படுகின்றனர்.
-நன்றி-தினமலர்-26.1.2011

ezhil arasu said...

//வஜ்ரா said...

@எ.ராசா (எழில் ராஜா)

அறிவுகெட்ட ________ , அஞ்சு வருசமா ஆட்சிப்பீடத்தில் ஒம்ம தலைவன் தான் அமர்ந்துகிட்டு இருக்கான். அப்புறம் வேற யாரையோ பாத்து "ஆதிக்க சக்தி" ஆதிக்க சக்தின்னு கத்துர.

ஆதிக்க சக்தியே உம்ம தலைவனும் அவனது குடும்பமும் தான்.//

அறிவுச் சான்றோரே!
பகுத்தறிவு பகலவன் பெரியார் மிகச் சரியாய் சொல்லியிருக்கார்
பாம்பையும் ---------------
கண்டால் பாம்பை விட்டு விடு ஆனல் --------
உங்கள் கண்ணுக்கு தலைவர் ஆதிக்க சக்தியாய் தெரிவது விபரீதம்.
அவர் ஏழை பாழைகள் மனதில் சிங்கார சிம்மாசனம் போட்டு கொலுவிருக்கும் காவல் தெய்வம்.
அவர் சுட்டு விரல் அசைவுக்காக அகில இந்திய அரசியலே காத்திருகிறது.
இனி உங்கள் ஜம்பங்கள் தமிழ் சாதியிடம் எடுபடாது.
உங்களிடம் அடிமை பட்டுக் கிடந்த திராவிட சமூகம் விழிப்புணர்வுடன் செயல் பட ஆரம்பித்ததால்தானே தமிழன் ஆட்சி தொடர்கிறது.
இனியும் ஏமாற தன்மானத் தமிழ் இனம் தயாராயில்லை.

RS said...

//இனியும் ஏமாற தன்மானத் தமிழ் இனம் தயாராயில்லை.//

இந்த மாதிரி தன்மான தமிழ் இனத்த அப்படியே வெச்சு இருக்க, பகுத்தறிவு பகலவன் துனைவி (அல்லது மனைவியா) எல்லாம் வல்ல நெல்லையப்பரை வேண்டியது வீண் போகவில்லை.

வாழ்க தமிழ் இனம். தமிழுக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்.

//அவர் சுட்டு விரல் அசைவுக்காக அகில இந்திய அரசியலே காத்திருகிறது.// 2011இன் முதல் சோக்கு (சோ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை)

மற்றும் ஒரு முட்டாள் தயாராகி விட்டார்.

Krishnakumar said...

Hi dondu sir,

Can you read about this and write about it

http://www.nytimes.com/2011/01/16/world/middleeast/16stuxnet.html?pagewanted=4&_r=1

This shows how US and Isreal have thwarted Iran's nuclear program without physically attacking it.

Also this wiki link would help.

Read the wiki link first.
http://en.wikipedia.org/wiki/Stuxnet

வஜ்ரா said...

//
அவர் ஏழை பாழைகள் மனதில் சிங்கார சிம்மாசனம் போட்டு கொலுவிருக்கும் காவல் தெய்வம்.
அவர் சுட்டு விரல் அசைவுக்காக அகில இந்திய அரசியலே காத்திருகிறது.
//

அங்கே கூட அவர் குடிசையில் வாழமாட்டார். சிங்கார சிம்மாசனம் போட்டு அதில் தான் உட்காருவாராக்கும். அங்கேயும் எலக்ட்ரிக் சிம்மாசனம் தானே...? பொத்தானை அழுத்தினால் முன்னாடி போகுமே...அது.

அவர் சுட்டுவிரல் அசைவுக்கு அகில இந்திய அரசியலே காத்திருக்கும் போது, ஈழத்தமிழர்கள் விசயத்தில் நல்லாவே ஆட்டினார். என்ன சுட்டுவிரலில் சுழுக்கு என்பதால், உங்களிடம் நடுவிரலை காட்டி அசைத்தார் என்று நினைக்கிறேன். இல்லையா ?

அதிகாரத்தை சுட்டுவிரல் அசைவில் வைத்துக்கொண்டு வேற எவனோ அதிக்க சக்தின்னு சொன்னா ? உங்களையெல்லாம் அறிவுச் சான்றோன் என்றா கொஞ்சுவாய்ங்க ?

Arun Ambie said...

நம்ம தமிளு பாசையில எலக்கணம் படிக்கையில வஞ்சப் பொகள்ச்சி வஞ்சப் பொகள்ச்சின்னு ஒரு வெவரம் சொல்லித்தருவாக. அண்ணன் அளகு ராசா(அட நம்ம எளிலரசு அண்ணனத்தேன் சொல்றேன்) அந்த வஞ்சப் பொகள்ச்சிய வஞ்சகமில்லாம பயனடுத்துறாரோன்னு தோணுது.

இருந்தாலும் மனசுல பட்டதச் சொல்லணுமால்லியா? இந்தப் புள்ளிவெவரக் களுத முக்காவாசி புளுகு, காவாசி தப்பு! விசயகாந்து சினிமால வசனம் பேசுன கணக்கா இதவேற அடுக்கிக்கிட்டு! போங்கய்யா போயி புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வைங்கய்யா!!!

Surya said...

டோண்டு சார் அவர்களின் "கேள்வி பதில்" பகுதிக்காக!

1)சமீபத்தில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தென் மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ததையும் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டதையும் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். முதல்வர் தந்தை பெரியாரின் கருத்தை ஒட்டி தன் சொந்தக் கருத்திலிருந்த மாறுபட்டாலும் வீட்டுப் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என மகிழ வேண்டுமா? அல்லது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா என்று வருத்தப் பட வேண்டுமா?

2)ஜெயலலிதா முன் போல் இல்லாமல் மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களை மதித்துப் பழக ஆரம்பித்துள்ளார் என்ற பரவலான அபிப்பிராயம் பரவி வருகின்றது. இது நிலைத்து இருக்குமா? உங்கள் கருத்து என்ன?

3) கனிமொழி அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டு இருக்கின்றீர்களா? சமீபத்தில் அவர் கலைஞர் டீ.வி. பட்டி மன்றத்தில் பேசக் கேட்டேன். அவர் பேச்சுத் திறன் சராசரிக்கும் கீழே என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

4)சோவின் உடல் நிலை குறித்து உங்கள் கட்டுரையில் வந்த குறிப்பைக் கண்டு வருத்தமுற்றேன். துக்ளக்கைப் பொறுத்த வரை அவர் succession plan வைத்திருக்கிறாரா? ஆண்டவன் அவருக்கு நிறைந்த ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும். துக்ளக் அவருடன் நின்று விடக் கூடாது.

Surya

hayyram said...

//அவர் சுட்டுவிரல் அசைவுக்கு அகில இந்திய அரசியலே காத்திருக்கும் போது, ஈழத்தமிழர்கள் விசயத்தில் நல்லாவே ஆட்டினார். என்ன சுட்டுவிரலில் சுழுக்கு என்பதால், உங்களிடம் நடுவிரலை காட்டி அசைத்தார் என்று நினைக்கிறேன். இல்லையா ?// HA HA HA :D

D. Chandramouli said...

I watched Cho's Tughlak anniversary speech on Captain TV. As usual, his talk was witty, with very pertinent points. For the first time ever, I heard Gurumurthy's speech - what an analytical presentation! If he joins hands with Swamy (along with Cho), Swamy could fight a better battle in the courts. Secondly, on possibility of DMK winning, I expect MK would still anoint Stalin as CM but make Alagiri as Party Head, thus creating a fine balance. All others in family would be expected to fall in line. Just a guess, though, and let us hope that a change of government takes place this time. If JJ comes back to power, she must rule like a democrat, not like a monarch, so that any one can approach her with their grievances. On this count, MK is way better. As Cho says, if DMK wins, we can be sure that 2G scan will be buried fathoms deep.

Arun Ambie said...

//அவர் ஏழை பாழைகள் மனதில் சிங்கார சிம்மாசனம் போட்டு கொலுவிருக்கும் காவல் தெய்வம்.//
பொதுவாக கருணாநிதி தான் தேர்தலில் சீட் கேட்டால் இதயத்தில் இடம் கொடுப்பார். அவருக்கு ஏழை பாழைகளின் இதயத்தில் சிம்மாசனமா? தேர்தலில் அவருக்க சீட்டே கிடையாது என்று எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?

ஞாஞளஙலாழன் said...

//அவர் சுட்டுவிரல் அசைவுக்கு அகில இந்திய அரசியலே காத்திருக்கும் போது, ஈழத்தமிழர்கள் விசயத்தில் நல்லாவே ஆட்டினார். என்ன சுட்டுவிரலில் சுழுக்கு என்பதால், உங்களிடம் நடுவிரலை காட்டி அசைத்தார் என்று நினைக்கிறேன். இல்லையா ?//

நண்பர் எழிலரசு, இதற்கு உங்கள் பதில் என்ன?

ezhil arasu said...

//ஞாஞளஙலாழன் said...

//அவர் சுட்டுவிரல் அசைவுக்கு அகில இந்திய அரசியலே காத்திருக்கும் போது, ஈழத்தமிழர்கள் விசயத்தில் நல்லாவே ஆட்டினார். என்ன சுட்டுவிரலில் சுழுக்கு என்பதால், உங்களிடம் நடுவிரலை காட்டி அசைத்தார் என்று நினைக்கிறேன். இல்லையா ?//

நண்பர் எழிலரசு, இதற்கு உங்கள் பதில் என்ன?//

இந்த விதண்டா வாதத்தை வைத்து இன்னும் எத்துணை நாள் ஓட்ட முடியும் பார்க்கலாம்.



இலங்கை பிரச்சனையை கலைஞர் மிகச் சரியாய் கையாண்டர் என பெரு வாரியான மக்களின் தீர்ப்பு உலகறிந்த உண்மை.
இதற்கான விளக்கம் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் கழகத்தின் இமாலய வெற்றியே சான்று.



வரும் தேர்தலிலும் இந்தப் பிரச்சரம் மக்களிடம் எடுபடாது.
முடிந்தால் முயற்சிக்கவும்.
அவாளுக்கெல்லாம் ஒரு சவால்.

உலகிலுள்ள அனைத்து தமிழரின் நலம் காக்கும் தலைவர் கலைஞர் வர்களின் செயல் பாட்டில் குற்ற குறை காணத் துடிக்கும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் சுற்றிச் சுற்றி வருவதை தமிழச் சமுதாயம் நன்றாகவே அறியும்.
இப்பொழுது நீலிக்கண்ணிர் வடிக்கும் கொடிய நச்சு பாம்பு மனம் படைத்தோரயும் நன்கு அறிவர் தமிழர்கள்.
இலங்கை வாழ் தமிழர் இன்னல் களையும் காவலன் கலைஞர் பற்றிய உங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கண்டு தமிழன்னை வெட்கித் தலை குனிவாள்.

அவர் அடிக்கடி சொல்லுவதை உங்கள் கூட்டத்திற்கு நினைவூட்டுவது நன்று.

“தமிழர்களே,தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டலும் நான் உங்களை கவிழ்க்க மாட்டேன்,உங்களுக்கு கட்டுமரமாய் மாறி காத்திடுவேன் காலம் உள்ள வரை”

செம்மொழிக் காவலர்
வாழும் வள்ளுவர்
இரண்டாம் ராஜ ராஜ சோழன்
சாணக்கியனின் மறு பிறவி
இருபதாம் நுற்றாண்டின் தீர்க்க தரிசி
தமிழன்னையின் தவப் புதல்வன்
வாரிக் கொடுக்கும் எட்டாம் வள்ளல்
வாழ்க வாழ்கவே

ezhil arasu said...

//Arun Ambie said...

//அவர் ஏழை பாழைகள் மனதில் சிங்கார சிம்மாசனம் போட்டு கொலுவிருக்கும் காவல் தெய்வம்.//
பொதுவாக கருணாநிதி தான் தேர்தலில் சீட் கேட்டால் இதயத்தில் இடம் கொடுப்பார். அவருக்கு ஏழை பாழைகளின் இதயத்தில் சிம்மாசனமா? தேர்தலில் அவருக்க சீட்டே கிடையாது என்று எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?//

உங்கள் கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.

dondu(#11168674346665545885) said...

//இலங்கை வாழ் தமிழர் இன்னல் களையும் காவலன் கலைஞர் பற்றிய உங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கண்டு தமிழன்னை வெட்கித் தலை குனிவாள்.//
அது எப்படி இதையெல்லாம் சிரிக்காமல் சொல்லறீங்க? Hats off to your sense of humour.

டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
வாழும் வள்ளுவர்
//

கலைஞரை வாழும் வள்ளுவர் என்று சொல்வது கலைஞருக்கு அவமானம்.

வள்ளுவனை வேண்டுமானால் "வாழ்ந்த கலைஞர்" என்று சொல்லலாம்.

--
ஈழப்பிரச்சனைக்குப் பின் தமிழர்கள் தி.மு.க வுக்கு வோட்டு போட்டார்கள் என்றால் ஈழப்பிரச்சனை பேச்சு, தமிழகத்தில் எடுபடவில்லை என்பதே பொருள். தமிழர்கள் கருணாநிதியில் கையாலாகாத தனத்தை ஆதரித்தனர் என்பது அல்ல.

Ganpat said...

1.சோ ஒய்வு பெற்றால் பிறகு துக்ளக் தொடர வாய்ப்பில்லை.அதனால் பெரிய impact உம்இருக்கப்போவதில்லை.
40 ஆண்டுகளுக்கு முன் துக்ளக் தொடங்கியபோது அது ஒரு குச்சியாக இருந்தது கழகங்கள் (தீமையிலும் வலிமையிலும்)மாடாக இருந்தன .இப்போ துக்ளக் அதே குச்சியாக உள்ளது.மாடுகளோ டைனோசார் ஆகிவிட்டன.இனி குச்சியால் ஒரு பயனும் இல்லை.
2.வரும் தேர்தலில் ஆளும் ஊழல கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்
வெற்றிக்கு பிறகு ஸ்டாலின் முதல்வர்;அழகிரி,அன்பழகன் துணை முதல்வர்கள்.கனிமொழி மத்திய அமைச்சர்.குடும்ப சண்டை எல்லாம் டூப்.ஊரை திசை திருப்புவதற்காக.

பி.கு.மேற்கண்ட இரண்டிலும் எனக்கும் உடன்பாடு இல்லை.ஆனால் சாத்திய கூறுகள் இதற்குத்தான் அதிகம்.

thenkasi said...

அடிக்கடி கழக பேச்சாளர்களால் பேசப்படும் கீழ்கண்ட வாசகங்களுக்கு உண்மையான அர்த்தம் இன்றைய சூழலில்?
1.தமிழர்களே,தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டலும் நான் உங்களை கவிழ்க்க மாட்டேன், கட்டுமரமாய் மாறி உங்களை காத்திடுவேன் காலம் உள்ள வரை.
2.இருப்பது ஓர் உயிர் அது போவதும் ஒரு முறைதான்.
3.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
4.உறவுக்கு கை கொடுப்போம்,
உரிமைக்கு குரல் கொடுப்போம்.
5.தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடோம்.
6.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
7.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
8.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
9.மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.
10.ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.

ஞாஞளஙலாழன் said...

------------------------------
ezhil arasu said...

>இலங்கை பிரச்சனையை கலைஞர் >மிகச் சரியாய் கையாண்டர் என >பெரு வாரியான மக்களின் தீர்ப்பு >உலகறிந்த உண்மை.
-----
-----
>உலகிலுள்ள அனைத்து தமிழரின் >நலம் காக்கும் தலைவர் கலைஞர் வர்களின் செயல் பாட்டில்
---------------------------------
நண்பரே, எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் உண்மையிலேயே மனம் திறந்து தான் எழுதினீர்களா இப்படி?
கலைஞர் நிறைய நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார், இல்லையென்று சொல்லவில்லை. மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினால் உயிர் பிழைத்தவர்கள் எனது குடும்பத்திலேயே இருக்கிறார்கள். ஒரு ரூபாய் அரிசி நிறைய ஏழை குடும்பங்களின் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் சரிதான்.
ஆனால்.. இலவச தொலைக்காட்சி, நிரா ராடியா டேப் மற்றும் குடும்ப அரசியல், திராவிடக் கொள்கைகளைக் குடும்பத்தவர்களே மீறுவது, சினிமா துறைக்கு காட்டப்படும் அளவுக்கு மீறிய சலுகைகள்...இதெல்லாம் என்ன சொல்வீர்கள்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது