நான் திரும்ப பதிவு போட முனைவதில் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவன் முரளிமனோகர்தான். “உடனடியாக நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவு ஒன்று வேண்டும் பெரிசு எனக் கேட்டான். ஆகவே இப்பதிவு.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சமீபத்தில் 1966-ல் காஞ்சீபுரம் பிரும்மோத்சவம் காண சின்னக்காஞ்சீபுரம் சென்றிருந்தேன். எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. ஐயங்கார் என்னை தன் குடும்பத்தாருடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். அவரது ஷட்டகர் ஜீயப்பையங்கார் வீட்டில் சன்னிதித் தெருவில் தங்கியிருந்தோம். தான் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். எங்கள் இருவரையும் ஒருசேர பார்த்ததில் உள்ளூர்க்காரர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. இல்லையா பின்னே, தென்கலை நாமக்காரரும் வடகலை நாமக்காரரும் (அடியேன்) ஒன்றாக உலா போவது ஆச்சரியம்தானே. சாதாரண சமயங்களில் உயிர்த்தோழர்களாக இருப்பினும் பிரும்மோத்சவ சமயத்தில் மட்டும் வடகலையாரும் தென்கலையாரும் கீழே இருப்பதுபோல ஒன்றாக சேரமாட்டார்கள் என எங்கள் வீட்டுக்கார மாமா கூறியுள்ளார். பை தி வே இவ்வளவு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்தாலும் நான் வீட்டுக்கார மாமா என குறிப்பது அவரைத்தான்.
அதை விடுங்கள். பதிவில் இனி நாமங்கள் வராது. நான் கூற வந்தது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் பற்றித்தான். திருப்பாவை பற்றிய அவரது உபன்யாசங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல ஞானஸ்தர். அவரை அண்ணா என்றும் குறிப்பிடுவார்கள். அவர் பற்றி இன்று வெளியான துகள்க்கில் சாரு நிவேதிதா எழுதியுள்ளார் (30.03.2011, பக்கம் 16-17). வாங்கி படிக்கவும், சுவாரசியமாகவே உள்ளது. அவர்தான் உண்மையான பேரறிஞர் அண்ணா என சாரு கூறுவதும் ஏற்கத் தக்கதே. [அவர் கூறியது, “தமிழில் எல்லா சொற்களுமே அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டன. பெர்னாட் ஷாவைப் படித்திருந்ததால் ‘தென்னகத்து பெர்னார்ட் ஷா’ என்ற பட்டம், ஆங்கிலம் அறிந்ததால் ‘அறிஞர்’ பட்டம்’].
30.03.2011 தேதியிட்ட துக்ளக்
மன்மோகன் சிங் பற்றி சில வரிகள்.
1. அன்றைய பாராளுமன்றத்தில் நடந்ததை, இன்றைய பாராளுமன்றத்தில் கவனிக்க முடியாது - என்றும் கூறியிருக்கிறார். உண்மைதான். ஆனால் இன்றைய பிரதமரின் புகழ்பெற்ற ‘நேர்மை’ அன்றே என்ன கதி ஆகியது என்பதை இன்றாவது அறிந்து கொள்ள மக்கள் கடமைப்பட்டவர்கள்.
2. [மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் என விக்கி லீக்ஸ் கூறியதற்கு பதில்]: விக்கிலீக்ஸ் ரகசியத் தகவல்களைத்தானே வெளியிடும்? இதில் என்ன ரகசியம் இருக்குது?
டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்?
96 வயது வரை வாழவேண்டும் மாமா
என் அத்தைப் பிள்ளையும் பிற்காலத்தில் என் மைத்துனனாகவும் தங்கையின் கணவனாகவும் வரவிருந்த ஸ்ரீதரனும் நானும் என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னதுதான் மேலே உள்ளது. எங்கள் இருவருக்கும் அப்போதைய வயது 12. அவன் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட என் தந்தை அது மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.
அவர் கூறியதாவது, “உன் சமகாலத்தவர் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள். உன் நினைவுகளை உனக்கு ஈடாகப் பகிர்ந்து கொள்ளவும் ஆட்கள் கிடைக்காது. அது ஒருவித சித்திரவதையே”.
இந்திரா பார்த்தசாரதி அவர்களது ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் கடைசி காட்சியில் அவரது தனிமை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தனை உறவினர்களைக் கொன்று வெற்றி பெற்ற அவருக்கு கடைசியில் அத்தனையும் வியர்த்தமே எனத் தோன்றுவதாக எனக்குப் பட்டது. ஏனெனில் அவர் வெற்றியை ஒரு புரிதலோடு ஏற்றுக் கொண்டு அட்மைர் செய்யவோ, பொறாமைப்படவோ யாருமே இல்லை என்பதுதான் நிஜம். He was just left alone and only an ignored man knows what this means.
பாண்டவ குமாரர்களை அவர்கள் தூங்கும்போது கொன்ற அசுவத்தாமனுக்கு அவன் இறப்பின்றி காலகாலத்துக்கும் பூமியில் அலைய வேண்டும் என்பதே பெரிய சாபமாக கிருஷ்ணர் தருகிறார். அதற்கு அவன் பதறுகிறான், புலம்புகிறான். ஆனால் பலன் ஏதுமில்லை. பல ஆண்டுகளாகத் திரியும் அவன் தனது கடந்தகால கசப்பான நினைவுகளுடனேயேதான் வளைவர வேண்டும். கூடவே புதிதாக அவனது செயல்பாடுகள் குறித்து சீறலோடு கேட்பவர்களையும் சமாளிக்க வேண்டும். ஆகவே என்ன செய்திருப்பான் என்றால் ஆட்டமேட்டிக்காக கிருஷ்ணர் சொன்னது போல் பூமியில் இங்குமங்கும் அலைய வேண்டும். அதுவும் தான் யார் என்பதை சட்டெனக் கூற முடியாத நிலை. யாருமே அவனது செயலை மறக்கத் தயாராக இல்லை என்பதுதானே அவனைப் பொருத்தவரை நிஜம்?
இங்கு ஸ்ரீதரன் விஷயத்துக்கு வருவோம். நீண்ட நாள் வாழ்வதின் வியர்த்தங்களை எடுத்துக் கூறிய என் தந்தை அவரது 67-ஆம் வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்? ஸ்ரீதரன்? 53 வயதுகூட நிரம்பாத நிலையில் எங்களை தவிக்க விட்டுச் சென்றான். உறவினன் பல வகையில் எனக்கு என்பதைவிட அவன் என்னுடைய சிறந்த நண்பன் என்பதுதான் நிஜம்.
நான்? இப்போதும் எங்களது பல பொது நினைவுகளை என்னால் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்களில் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் இருந்த மாதவராவ் என்னும் பையனை வம்புச்சண்டைக்கிழுத்து அடிப்பது. ஸ்ரீதரன் அவன் மரணத்துக்கு சில மாதங்கள் முன்னால் கூட நானும் அவனும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மாளவில்லை. அவன் மனைவி (என் தங்கை) “ ரெண்டு பேரும் துஷ்டப்பசங்களாகத்தான் இருந்திருக்கீங்க” என நொடித்தாள்.
இனி எனக்கு என்ன வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை.
ஒரு வேளை 96 வயது வரை வாழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இளைஞ்ர்களை அதிகம் நண்பர்களாகப் பெற்றுச் செல்வதுதான் ஒரே வழி. செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. யார் கண்டது, நான் ஏற்கனவே சொன்னதுபோல 2078-லும் உயிரோடு இருந்து, நான் பதிவிடும்போது சமீபத்தில் 2008-ல் என எழுத, அப்போதைய மடிப்பாக்க ஆஸ்தான பதிவர், “நம்ம கொள்ளுத் தாத்தா அடிக்கடி சொன்னது போலவே இந்த மாதிரி ஆள் ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறார் போலிருக்கே” எனப் புழுங்கலாம்.
கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி
நானும் கிரிக்கெட் பார்க்கும் விஷயத்தில் எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. அய்யங்காரைப் போலத்தான்.
அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.
அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".
மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.
நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அதை விடுங்கள். நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை இந்தியா ஆடும்போது பார்த்தேன். ட்விட்டரில் இந்தியர்கள் கோட்டை விடும்போது பாரா, மாயவரத்தான், போன்றவர்களது எதிர்வினைகளையும் பார்த்தேன். மாயவரத்தான் மடிக்கணினியுடன் ஆஜராகியிருந்திருக்கிறார். ஆகவே பந்துக்கு பந்து கீச்சுகள் அவரது கணினியிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் நான் மேட்சை முழுமையாக பார்த்ததாகக் கூற முடியாது. முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தங்கம், தென்றல் ஆகிய சீரியல்கள் மிஸ் பண்ண முடியாத கட்டங்களில் உள்ளன. இருப்பினும் மேட்சையும் அவ்வப்போது விளம்ப்ர சீரியல்களின் இடைவேளைகளில் பார்த்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியில் நானும் மடிக்கணினியுடன் டிவி முன்னால் ஆஜர் ஆனேன். மற்றவர்களைப் போலவே உடனுக்குடன் கமெண்ட் போடுவதும் நன்றாகவேதான் உள்ளது.
கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
57 minutes ago
32 comments:
// அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா." //
நீங்களும் சரி, உங்கள் மாமாவும் சரி வாய்க்கு வந்தபடி அடித்து விடுகிறீர்கள்.
வெங்கட் பிறந்தது 1945 -இல். அறுபதுகளில் இந்திய டீம் மேற்கிந்திய தீவுகளுக்கு ஒரே ஒரு முறைதான் போயிருக்கிறது. - 1962-இல். அந்த டூரின் போது வெங்கட்டுக்கு வயது 16. அவர் அந்த வயதில் ரஞ்சி கோப்பை கூட ஆட ஆரம்பிக்கவில்லை.
வெங்கட் ரஞ்சி ஆட ஆரம்பித்த பிறகு நாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு மூன்று முறை போயிருக்கிறோம் - 14 டெஸ்ட் விளையாடி இருக்கிறோம். அதில் 13 டெஸ்டில் வெங்கட் விளையாடினார். முதல் டூரில் - 1971-இல் - விளையாடிய ஐந்து டெஸ்டுக்கு பிறகு அவர் சோபிக்கவே இல்லை. 89-ஆம் ஆண்டு போனபோது வெங்கட் ரிடையர் ஆகிவிட்டார். அந்த டூரின் போது அவருக்கு வயது 43.
// டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்? //
மன்னிக்கவும்..
அவர் சப்பாத்தி சாப்பிடும் ஆளு..
அன்புள்ள டோண்டு,
ஏனோ இந்த கமெண்டை என்னால் ungaL மோடி பதிவில் போஸ்ட் செய்யமுடியவில்லை, சரி இங்காவது முயற்சித்துப் பார்க்கிறேன்.
அந்த ரிப்போர்டை சரியாக படித்தீர்களா? சிபி ஐ சொல்வது - "“It would have not been possible to quiz Modi regarding the transfer of the police officers in his state. Besides, nobody has testified against him so far,” said a senior CBI official." மோடிக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை; மேலும் மோடியை விசாரிக்க முடியவில்லை, அதனால் மோடி குற்றம் செய்தார் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள். இதைத்தான் நல்ல விசாரணை என்கிறீர்களோ?
ungaL பதிவு முழுதும் மோடி குற்றம் அற்றவர் என்று நிரூபணம் ஆனது என்று எழுதுகிறீர்கள். உண்மை அதுவல்ல என்பது தெளிவு. மோடி மீது உள்ள குற்றச்சாட்டை பற்றி பேச யாரும் முன்வரவில்லை, மோடியை சிபிஐ விசாரிக்கவும் இல்லை. அழகிரியைப் பற்றியும் இப்படித்தான் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன் வரவில்லை என்கிறார்கள். மோடி மாதிரி இல்லாமல் அழகிரியை கண்துடைப்பு விசாரணையாவது செய்திருக்கிறார்கள்.
அப்புறம் http://www.thenarendramodi.info/evidence-narendra-modi-sohrab-case/ என்ற முதல் லிங்கில் சொராபுதீன் போலி என்கவுண்டர் கேசில் மட்டுமே சிபி ஐ மோடி மீது குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். அது அடுத்த லிங்கில் - http://www.thenarendramodi.info/sit-clears-gujarat-cm-narendra-modi-wilfully-allowing-postgodhra-riots/ - கோத்ராவிற்கு பிறகு நடந்த எல்லா கலவரங்களிலும் மோடி குற்றமற்றவர் என்று சிபி ஐ சொல்கிறது என்று மாறுகிறது, நீங்களும் அதையே திருப்பி எழுதி இருக்கிறீர்கள். இரண்டு லிங்கையும் நீங்களே கொடுத்திருக்கிறீர்களே, பார்க்கலாமே!
வெங்கட் என்னுடன் இரண்டு வருடங்கள் சீனியர், அவர் 1945-ல் பிறந்தார் என்பதுவும் தெரியும்.
வெளிநாடு செல்லவிருக்கும் டீமில் அவர் இல்லை என்பதற்கு என் வீட்டுக்கார மாமா கொடுத்த கமெண்டும் நிஜமாகவே நடந்ததுதான். ஒரு வேளை வேறு நாடாக இருந்திருக்கலாம், அல்லது முதலில் டீமில் செலக்ட் செய்யாது பிறகு கூட செலக்ட் செய்திருக்கலாம்.
எது எப்படியானாலும் நான் சொன்ன நிகழ்ச்சி 1969-க்கு முன்னால் நடந்தது, ஏனெனில் அவ்வாண்டு பிப்ரவரியில் நாங்கள் நங்கநல்லூருக்கு வந்து விட்டோம். அக்கால கட்டத்தில் வெங்கட் டெஸ்ட் டீமுக்கு வந்து விட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மோதி விஷயத்தில் நீங்கள் சொல்வதையே வைத்துப் பார்ப்போம். சிபிஐ ஏன் மோதிக்கு எதிராக இன்னும் துடிப்பாக செயல்படவில்லை? யார் தடுத்தது? முன்வரும் சாட்சிகளை அவர் பயமுறுத்துவதாக எங்கேனும் வெளியாகியிருக்கிறதா? அல்லது அவருக்கு யாரேனும் அந்த நிறுவனத்தில் காட்ஃபாதர் இருக்கிறாரா?
சுப்ரீம் கோர்ட்டின் விசேஷ விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை ஏன் இன்னும் பொதுப் பார்வைக்கு விடவில்லை?
அவருக்கு பாதகமாக அதில் ஏதேனும் இருந்திருந்தால் காங்கிரஸ் மத்திய அரசு சும்மா விட்டிருக்குமா?
டெஹெல்கா டேப்பில் இவ்வளவு விஷயங்கள் இருந்தும் காங்கிரஸ் அரசு அதற்கு ஏன் லீகல் ஃபாலோ அப் தரவில்லை?
மோதிக்கு எதிராக இவ்வளவு ஸ்ட்ரிக்டாக வெளிப்படும் நீங்கள் ராஜிவின் 1984-செயல்பாடு பற்றி என்ன கூறுவீர்கள்?
ஒரு வாதத்துக்காக மோதி பற்றி நீங்கள் கூறுவதையெல்லாம் உண்மை என வைத்துக் கொண்டாலும் அவர் அளவுக்கு ஊழலற்ற ஆட்சி இவ்வளவு ஆண்டுகள் வேறெந்த முதலமைச்சர் செய்துள்ளார்?
இரட்டை அளவுகோல்கள் வைத்துக் கொள்வது அவ்வாறு வைப்பவரது prejudice-யே காட்டுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மோடி மீது உள்ள குற்றச்சாட்டை பற்றி பேச யாரும் முன்வரவில்லை// நம்ப முடியவில்லை. வடநாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட அனைத்து அலைவரிசைகளும் மோடிக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள் என்று பலருடன் பேசி இருக்கின்றன இந்த தொலைக்காட்சிகள். இவர்களுக்கு இத்தாலிக்காரியின் சப்போர்ட்டும் இருக்கும். இந்த நிலையில் ஒரே ஒரு பாதிக்கப்பட்டவரைக் கூட அவர்களால் முனைந்து கொண்டுவந்து விட முடியவில்லை என்றால் அத்தனை அலைவரிசைகளும் மோடிக்கு எதிராக பொய் சொல்லி இருக்கின்றன என்று தானே அர்த்தம். இத்தனை துவேஷம் பேசிய இத்தாலிக்காரியும் சரி, மீடியாக்களும் சரி ஒருவரைக்கூட காட்டிவிட முடியதபடிக்கு வக்கில்லாமலா போய்விட்டார்களா? குற்றச்சாட்டை பற்றி பேச யாரும் முன்வரவில்லை என்பது பொய் என்பதும் குற்றச்சாட்டே உண்மையில்லை என்பதும் தான் நிரூபணம் ஆகிறது.
அன்புள்ள டோண்டு,
வெங்கட் அறுபதுகளில் மற்றும் எழுபதுகளில் மிஸ் செய்த ஒரே டூர் 67-68 -இல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போனதுதான். முதல் முறையாக ஒரு அந்நிய நாட்டில் (நியூசிலாந்து) நாம் ஜெயித்தது அப்போதுதான். 3 டெஸ்ட் ஜெயித்து ஒரு டெஸ்ட் தோற்றோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் நாலு டெஸ்ட் விளையாடி நாலும் தோற்றோம். அப்போதுதான் பிரசன்னாவின் - பொற்காலம், எட்டு மாட்சில் 49 விக்கெட் எடுத்தார். உலகிலேயே சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்ற நிலையில் அதற்கப்புறம் நாலைந்து வருஷம் இருந்தார். அதனால் வெங்கட்டை தேர்ந்தெடுக்காதது தவறு என்று சொல்வதற்கில்லை. பிரசன்னா வெங்கட்டின் ஒரே போட்டியாளர், பம்பாய் டீமிலிருந்து யாரும் எப்போதும் வெங்கட்டுக்கோ, அல்லது மற்ற ஸ்பின்னர்களுக்கோ போட்டியாக இருந்ததில்லை.
neengaL மோடியைப் பற்றி சொல்லும் ஒவ்வொன்றையும் அழகிரியைப் பற்றியும் சொல்லலாம். அழகிரி சாட்சிகளை பயமுறுத்தியதாகவும் யாரும் சொல்லவில்லை. ungaL கட்டுரை சி பி ஐ மோடிக்கு சர்டி ஃ பிகேட் கொடுத்துவிட்டது, அதனால் அவர் குற்றமற்றவர் என்று எல்லாரும் ஏற்க வேண்டும் என்கிறது. அப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு நீங்கள் அழகிரியையும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பார்ப்பதில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன். அதே போல சி பி ஐ (அதுவும் ஒரே ஒரு விஷயத்தில் யாரையும் விசாரிக்கமுடியவில்லை, அதனால் அவர் மீது குற்றம் என்று சொல்வதற்கில்லை என்றுதான் சொல்கிறார்கள் - நரேந்திர மோடி தளத்திலேயே இவ்வளவுதான் செய்தி) இப்படி சொல்லி இருப்பதால் மட்டும் மோடியை குற்றமற்றவர் என்று நினைக்காதவர்கள் இருக்கலாம் இல்லையா?
மோடியைப் பற்றி எப்போது விமர்சித்தாலும் 84 -இல் ராஜீவ் என்கிறீர்களே? நான் என்ன ராஜீவ் செய்தது சரி என்று சொல்கிறேனா? இனி மோடியைப் பற்றி எழுதும்பொதெல்லாம் ராஜீவ் 84 கலவரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும், இந்திரா காந்தி எமர்ஜென்சிக்கு பொறுப்பேற்க வேண்டும், நிக்சன் வாட்டர்கேட்டுக்கு, எட்டப்பன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததற்கு என்று எல்லா சரித்திர விஷயங்களுக்கும் விளக்கம் கொடுத்துவிட்டுத்தான் மோடியைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
@ஆர்வி
வெங்கட்டை டூர் டீமில் எடுக்காதது தவறு என்று நானும் வீட்டுக்கார மாமாவும் அபிப்பிராயப்பட்டது எங்கள் தனிப்பட்ட கருத்து. வீட்டுக்கார மாமா கோபத்துடன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் நினைவிலிருக்கின்றன.
தமிழக ஆட்டக்காரர்களை ஒட்டு மொத்தமாகவே மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே இந்திய கிரிக்கெட் போர்ட் நடத்தி வந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் அதை நாங்கள் நேரடியாகவே உணர்ந்திருந்தோம்.
வேண்டுமென்றே சொதப்பலாக ஆடி கவாஸ்கர் இந்தியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்தாலும் அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் நிஜம்.
ஆக இதை நீங்கள் அப்ஜெக்டிவ் நோக்கத்தில் இவ்வளவு ஆண்டுகள் கழித்து விமரிசனம் செய்வது பதிவின் ஸ்பிரிட்டை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
அழகிரியையும் மோதியையும் ஒரே தளத்தில் கம்பேர் செய்ய இயலாது என்பது என் கருத்து.
ராஜீவ் செய்தது சரி என்று நீங்கள் கூறவில்லைதான். ஆனால் தவறு என்று எங்காவது கூறியுள்ளீர்களா? ஒரு ஆலமரம் விழுந்தால் பல செடிகள் அப்படித்தான் பாழாகும் என்று திமிருடன் அவர் கூறியது பற்றி உங்கள் கருத்தென்ன?
சீக்கிய கலவரத்தில் முக்கிய பாங்காறிய ஜகதீஷ் டைட்லர், எச்.கே.எல். பகத் ஆகியோர் பிறகு மந்திரிகளாக கொழிக்க வைத்த காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனக் கூறுவீர்களா?
1984 கலவரமும், 2002 குஜராத் கலவரமும் பற்றி பேசும்போது முந்தையதை மட்டும் சவுகரியமாக விடுவது என்ன நியாயம்?
மோதியின் இத்தனை ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றமும் சாட்ட முடியாமல் பேய் முழி முழித்து 2002 பற்றி மட்டுமே காங்கிரஸ் பேசினால் நான் அப்படித்தான் 1984-லையும் இழுப்பேன். மோதியாவது நல்லாட்சி தந்தார், தருகிறார். ஆனால் ராஜீவ் அவ்வாறு 1984-க்கு பிறகு தந்தார் என உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?
கோத்ரா ரயில் எரிப்பில் வந்த தீர்ப்பு மூலம் காங்கிரசார், லல்லு பிரசாத் கோஷ்டியினர் செய்து வந்த பொய் பிரசாரங்கள் தவிடு பொடியாயின என்பதையும் பார்த்தீர்கள்தானே.
கோத்ராவில் கொழுப்பெடுத்துப் போய் கரசேவகர்களை எரித்த தீவிரவாதிகளுக்கு சரியான பாடத்தை பொது மக்கள் ஸ்பாண்டேனியசாக கொடுத்துள்ளனர். அந்த நேரத்தில் காங்கிரஸ் பதவியில் இருந்தாலும் குஜராத் கலவரம் நடந்திருக்கும்.
குஜராத்தில் மதக் கலவரங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் 2002 கலவரத்துக்கு பிறகு ஒன்று கூட இல்லை. இதற்கு என்ன கூறுவீர்கள்?
என்ன, மைனாரிட்டி என இசுலாமியர்கள் ஓட்டுகளை வாங்க கசரத் போடுபவர் இல்லை மோதி. அப்படியும் அவருக்குத்தான் இசுலாமியர்கள் கடைசி தேர்தலில் (உள்ளாட்சி தேர்தல்) ஓட்டு போட்டுள்ளனர், பாகக வேட்பாளர்களாகவும் நின்றுள்ளனர்.
மோதி இப்போது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? தீக்குளித்து தன் தூய்மையை நிரூபிக்க வேண்டுமா? அப்படியானால் ராஜீவ், அழகிரி, கருணாநிதி ஆகியோருக்கும் அதே அளவுகோலை நீங்கள் பாவிக்கத் தயாரா?
நல்ல ஆட்சி மோதி தருகிறாரா இல்லையா என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்காமல் இடி போன்ற மௌனத்துடன் நழுவினாலும் குஜராத் மக்கள் பல முறை உரத்த குரலில் தெரிவித்து விட்டனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு,
தவறு என்னுடையதுதான், நான்தான் விவரமாக எழுதவில்லை. பொதுவாக தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்றே நானும் கருதுகிறேன். ஆனால் வெங்கட், மற்றும் ஸ்ரீகாந்த் இருவருக்கும் எக்கச்சக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன, அவர்கள் மீண்டும் மீண்டும் சொதப்பினார்கள். வெங்கட்டின் புகழ் அவர் 71-இல் ஆடிய எட்டு டெஸ்ட்களை மட்டும் வைத்துதான்; ஸ்ரீகாந்தின் புகழ் அவர் அடித்து ஆடியதால்தான். வெங்கட் ஒரு விக்கெட்டை வீழ்த்த கிட்டத்தட்ட முப்பத்தாறு ரன் கொடுத்திருக்கிறார்; ஸ்ரீகாந்த் முப்பது ரன் ஆவரேஜ் கூட இல்லாதவர். இருவரும் திறமைசாலிகள்தான், ஆனால் அவர்களது ரெகார்ட் படு சுமார்.
வெங்கட்டைப் பற்றி தவறான தகவலை கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்ல ஆரம்பித்து அனுமார் வால் மாதிரி நீண்டுவிட்டதோ?
ungaL தளத்தில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை, கமென்ட் எழுதும்போது பாதி நேரம் error message வருகிறது. அதனால் எல்லாவற்றையும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.
// ரு ஆலமரம் விழுந்தால் பல செடிகள் அப்படித்தான் பாழாகும்... // இதில் கருத்தென்ன கருத்து, அயோக்கியத்தனம் அவ்வளவுதான். ஆனால் // ராஜீவ் செய்தது சரி என்று நீங்கள் கூறவில்லைதான். ஆனால் தவறு என்று எங்காவது கூறியுள்ளீர்களா? // என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் ரவாண்டா நாட்டில் நடக்கும் படுகொலைகளை கண்டிக்கவில்லை என்பதற்காக அவற்றை ஆதரிக்கிறீர்கள் என்றா நான் பொருள் கொள்ள முடியும்? // 1984 கலவரமும், 2002 குஜராத் கலவரமும் பற்றி பேசும்போது முந்தையதை மட்டும் சவுகரியமாக விடுவது என்ன நியாயம்? // நான் பேசுவது 2002 கலவரம் பற்றித்தான், நீங்கள்தான் மீண்டும் மீண்டும் 1984 கலவரத்தை வலிய கொண்டு வருகிறீர்கள். நான் இரண்டையும் பற்றி பேசி, சவுகரியமாக எங்கே 1984 கலவரத்தை விட்டிருக்கிறேன்? அப்படி வலிய வேறு கலவரங்களை கொண்டு வருவதென்றால் ஏன் 1984 கலவரத்தோடு நிறுத்த வேண்டும்? 1992 -இல் பம்பாய் கலவரம், பிறகு குண்டு வெடிப்பு, 1947 பிரிவினை, 1943 பஞ்சம் என்று ஒவ்வொன்றாக இழுத்துக் கொண்டிருக்க முடியுமா? :-)
டோண்டு சார், மோதியின் வளர்ச்சிப் பணிகள் உங்களை கவர்ந்திருக்கின்றன, அது வரையில் சரி. அதனால் இது போன்ற கலவரங்களை நியாயப்படுத்த முடியுமா?
//அதனால் இது போன்ற கலவரங்களை நியாயப்படுத்த முடியுமா?//
எத்தனை கலவரங்கள்? 2002 கோத்ரா எரிப்பு படுகொலைகளுக்கு எதிர்வினையாக அப்போது குஜராத்தில் யார் முதல்வராக (மகாத்மா காந்தியாகவே) இருந்திருந்தாலும் கலவரம் வந்தேயிருக்கும். அதை மோதி திறமையாகவே கையாண்டு அமைதியை சீக்கிரம் கொண்டு வந்தார், அதுவும் 1984-ல் வந்ததை விட சீக்கிரமாகவே என்பதுதான் நான் கூற வந்தது.
அப்படியில்லை என்கிறீர்கள் நீங்கள். அதற்கு காரணமே ஆங்கில ஊடகங்கள், பொய்சாட்சி புகழ் டீஸ்டா ஆகியோரின் திட்டமிட்ட அவதூறுகள் என்கிறேன் நான். நான் நினைப்பது போலவே குஜராத்தியரும் நினைத்து(இசுலாமியர்கள் உள்பட) மோதிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் அமோக ஆதரவு தந்துள்ளனர்.
அந்த தேர்தல்களில் தலைமை தேர்தல் கமிஷனர்களாக இருந்த கோமாளிகள் காங்கிரசின் பூத் ஏஜெண்டுகளாகவே செயல்பட்டனர். அப்படிப்பட்ட தேர்தல்களிலும் ஜெயித்து மோதி நெருப்புச் சோதனையில் வெற்றி பெற்றுள்ளார். இப்படிப்பட்ட ஊழலறா முதல்வருக்கு எதிராக வரும் அவதூறுகளை என்னால் பொருத்துக் கொள்ள முடிவதில்லைதான்.
சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு விசாரணைக் குழு மோதியின் கண்ட்ரோலில் இல்லை. அவருக்கு எதிராக சாட்சியளிக்க யாரும் வர முன்வராததற்கு காரணத்தைத்தான் நீங்கள் தவறாக திரிக்கிறீர்கள்.
சொதப்பலாக அழகிரியையும் மோதியையும் கம்பேர் செய்கிறீர்கள். அழகிரியின் தந்தை போலீசை தன் கண்ட்ரோலில் வைத்து சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சிகளாக ஆக்கியது போல மோதி விஷயத்தில் நடக்கவில்லை, ஏனெனில் அதற்கான பலம் மோதியிடம் இல்லை. சாட்சிகளை மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது, ஊடகங்களும் எதிர்பார்த்தன. அப்படியும் வரவில்லை என்றால் மோதி குற்றமற்றவராக இருப்பதும் காரணமாக இருக்கலாமல்லவா என்று ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள்?
குஜராத்தின் சரித்திரத்தில் கலவரங்கள் மிக அதிகமே. ஆனால் 2002-க்கு பிறகு ஒரு கலவரம் கூட நடக்கவில்லை என்பதை சௌகரியமாக மறக்கிறீர்கள்.
ஒரு முறை குஜராத்தில் சில நாட்கள் இருந்து பாருங்கள், அப்போது நான் கூறியதை உணர்வீர்கள்.
வெங்கட் விஷயத்தில் நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் கூறிய நிகழ்ச்சியில் முக்கிய ரோல் வகிப்பவர் என் வீட்டுக்கார மாமா. வெங்கட் ஸ்ரீகாந்தை விட அதிகமாக சொதப்பிய காம்ளி, அகர்கர், சாவ்லா ஆகியோருக்கு சலுகைகளாக குவிக்கும் போது இவ்விருவருக்கு இழைக்கப்பட்டது அநீதியே என்பது என் மனதிலிருந்து மாறாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//டோண்டு சார், மோதியின் வளர்ச்சிப் பணிகள் உங்களை கவர்ந்திருக்கின்றன, அது வரையில் சரி.//
உங்களைக் கவரவில்லையா? மோதி அளவுக்கு ஊழலற்ற ஆட்சியை தந்த, தரும் ஏதேனும் இன்னொரு முதன் மந்திரியை காட்டுங்களேன் பார்க்கலாம் (ராஜாஜி தவிர)?
காமராஜ் காலத்தில் கூட ஊழல் புகார்கள் 1962, 1967 தேர்தல்களில் கூரப்பட்டன. ஆனால் மோதிக்கு எதிராக 2002, 2007 தேர்தலகள், 2010 உள்ளாட்சி தேர்தல்கள் ஆகிய எதிலும் எதிர்க் கட்சிகளால் ஊழல் புகார் ஒன்று கூட தரவியலவில்லை என்பது அகில இந்திய ரிகார்ட் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்னார் பிரதிவாதி குறித்த எழுதியமை குறித்து எனது வலையிலும் எழுதிருக்கேன்
RV,
இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
1.நீங்கள் காலையில் ராமபிரானை சந்தித்து வணங்கி அவர் ஆசி பெற்று,மாலை நாரத கான சபையில் ராவணனின் வீணை கச்சேரிக்கு போவீர்கள்.
2.ராமாயணத்தில் ராமரும் சில குற்றங்கள் புரிந்தவரே;மகாபாரதத்தில் பாண்டவர்களும் சில குற்றங்கள் புரிந்தவர்களே;ஆகவே ராமன்,ராவணன்;கெளரவர்,பாண்டவர் எல்லாரும் ஒன்றே என்பது உங்கள் நிலைப்பாடு.
ஒருவேளை அழகிரி மற்றும் மோடி உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் ஒட்டு யாருக்கு,RV?
Dondu Sir,
Please visit
http://asthigasamajam.blogspot.com/
for Namaprachara Vaibhavam Updates
Radhe Krishna!
அன்புள்ள டோண்டு,
// 2002 கோத்ரா எரிப்பு படுகொலைகளுக்கு எதிர்வினையாக அப்போது குஜராத்தில் யார் முதல்வராக (மகாத்மா காந்தியாகவே) இருந்திருந்தாலும் கலவரம் வந்தேயிருக்கும். // உங்கள் கருத்து உங்களுக்கு. அதி தீவிர ஹிந்துத்துவவாதியான சுப்ரமணியசாமி போன வருஷம் அமேரிக்கா வந்தபோது சொன்னது - எந்த அரசும் அதை யூகித்திருகக் முடியும், தடுத்திருக்க முடியும். மோதி தவறிவிட்டார். (கவனிக்கவும், மோதி தவறிவிட்டாராம் - incompetence என்கிறார், வேண்டுமென்றே செய்யவில்லையாம். :-))
// அப்படிப்பட்ட தேர்தல்களிலும் ஜெயித்து மோதி... // உங்கள் அளவுகோல்கள் ஆளுக்கேற்ப மாறுவது வினவின் அணுகுமுறையைத்தான் நினைவூட்டுகிறது. தேர்தலில் ஜெயிப்பதுதான் அளவுகோல் என்றால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் உத்தமர்கள். சிபி ஐயோ கோர்ட்டோ (அதுவும் மிக குறுகிய சொராபுதீன் போலி என்கவுண்டர் விஷயத்தில் மட்டும்) குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லிவிட்டால் போதும் என்றால் அழகிரியின் மீது மட்டும் என்ன குற்றம்? சொதப்பல் ஒப்பீடு என்று சொன்னால் மட்டும் போதாது, எப்படி ஒரே அளவுகோலை வைத்து அளக்கும்போது ஒன்று சரி, ஒன்று தவறு என்று காண்கிறீர்கள் என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்.
உண்மையில் உங்கள் அளவுகோல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொன்னதோ, தேர்தலில் ஜெயிப்பதோ இல்லை; அது மோதி செய்த வளர்ச்சிப் பணிகள் மட்டுமே. அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் மட்டும்தான் மோதிக்கு இணையாக இன்று யாரையும் சொல்ல முடியாத நிலை. (நிதீஷ் குமாரை சொல்ல முடியுமோ என்னவோ தெரியவில்லை) பிறகு அதைப் பற்றி எழுதுங்கள், வளர்ச்சிப் பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கலவரம் கிளவரம் என்பதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்று சொல்லுங்கள், வாதிடலாம். ஆனால் நீங்கள் மோடி பதிவில் முன் வைக்கும் அளவுகோலை வைத்து நீங்களே தமிழக அரசியல்வாதிகளைப் பார்ப்பதில்லையே?
கண்பத், // ராமன்,ராவணன்;கெளரவர்,பாண்டவர் எல்லாரும் ஒன்றே // இல்லை. மாறாக உங்கள் மற்றும் டோண்டுவின் நிலைப்பாடுதான் இப்படி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது - "யுதிஷ்டிரன் துரோணரைக் கொல்ல சொன்னது பொய்யே இல்லை ஏனென்றால் அரக்கு மாளிகை பற்றி துரியோதனன் பொய் சொன்னான்."
10 things to learn from Japan- after their catastrophe' :
1. THE CALM
Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.
2. THE DIGNITY
Disciplined queues for water and groceries. Not a rough word or a crude gesture.
3. THE ABILITY
The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
4. THE GRACE
People bought only what they needed for the present, so everybody could get something.
5. THE ORDER
No looting in shops. No honking and no overtaking on the roads. Just understanding.
6. THE SACRIFICE
Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever be repaid?
7. THE TENDERNESS
Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
8. THE TRAINING
The old and the children, everyone knew exactly what to do. And they did just that.
9. THE MEDIA
They showed magnificent restraint in the bulletins. No silly reporters. Only calm reportage.
10. THE CONSCIENCE
When the power went off in a store, people put things back on the shelves and left quietly
--
How do we spread this message to our people.
குஜராத் அரசாங்கத்தை உலகின் சிறந்த இரண்டாவது அரசாங்கமாய் ஒரு இண்டர்நேஷனல் கவுன்சில் அறிவித்துள்ளது. பத்து வருடஙக்ளுக்கு முன்னால் 50,000 கோடி உலக வங்கியில் கடங்காரனாய் இருந்த அரசு இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம். குஜராத்தில் டாஸ்மாக் இல்லை, மின்சார வெட்டில்லை, இலவசங்கள் ஏதுமில்லையாம். 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள்.
@ஆர்வி
மோதி தேர்தலில் ஜெயித்ததும் கருணாநிதி ஜெயித்ததும் ஒன்றா? கருணாநிதி இலவசங்கள் பல கொடுத்து, அவற்றை எலெக்ஷன் கமிஷன் கண்டு கொள்ளாது போய், மத்திய அரசும் தன் பங்குக்கு அவரை அடக்காமல் போய் என்றெல்லாம் இருக்கிறது.
மோதியோ இலவசமா மூச் என்றவர், வரிபாக்கி இருந்தால் கழுத்தில் துண்டு போட்டு வசூலிப்பேன் என்றவர், மேலும் தேர்தல் தலைமை கமிஷனர் கோமாளிகள் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டனர். இவற்றையெல்லாம் மீறி அவர் ஜெயித்ததும் கருணாநிதியின் அழுகினி வெற்றியும் ஒன்றாகி விடுமா, என்ன பேசுகிறீர்கள்?
அழகிரி மேல் நடந்த விசாரணை எவ்வளவு தில்லுமுல்லு செய்யப்பட்டது என்பதை திமுகாக்காரர்களே ஒத்துக் கொள்வார்கள். மோதியின் மேல் சுப்ரீம் கோர்ட் நடத்திய விசாரணை அப்படிப்பட்டதா? ஹாய்ராம் சொன்னது போல அவருக்கு விரோதமாக ஊடகங்கள், மத்திய அரசு அமைப்புகள் எல்லாமே இருந்து அவருக்கு எதிரான சாட்சிகளை ஊக்குவித்தாலும் அவ்வாறான சாட்சிகள் இல்லை என்பதைத்தானே சிபிஐ கூறுகிறது?
அழகிரியையும் மோதியையும் கம்பேர் செய்வது சொதப்பலான கம்பேரிசன் இல்லாமல் வேறென்ன?
//"யுதிஷ்டிரன் துரோணரைக் கொல்ல சொன்னது பொய்யே இல்லை ஏனென்றால் அரக்கு மாளிகை பற்றி துரியோதனன் பொய் சொன்னான்."//
துரோணரை அப்போது கொல்ல வேண்டிய கட்டாயம் ஏனெனில் அவர் பிரும்மாஸ்திரத்தை விடும் ஆயத்தத்தில் இருந்தார். போர் யுக்தி அது. அதற்கு முந்தைய தினம் வீரன் அபிமன்யுவை அத்தனை யுத்த தர்மங்களுக்கும் விரோதமாக எல்லா மகாரதர்களையும் அவனைத் தாக்கச் செய்து தானும் தாக்கினவர் அவர். ஏகலைவனின் கட்டைவிரலை வாங்கியவர், ஆகவே அவருக்கு வேண்டியதுதான் அந்தச் சாவு.
//அது மோதி செய்த வளர்ச்சிப் பணிகள் மட்டுமே. அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் மட்டும்தான் மோதிக்கு இணையாக இன்று யாரையும் சொல்ல முடியாத நிலை. (நிதீஷ் குமாரை சொல்ல முடியுமோ என்னவோ தெரியவில்லை)//
அப்பாடி, வேண்டா வெறுப்பாக கடைசியில் அது பற்றிப் பேசவாவது பேசுகிறீர்கள். நல்லது.
//பிறகு அதைப் பற்றி எழுதுங்கள், வளர்ச்சிப் பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கலவரம் கிளவரம் என்பதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்று சொல்லுங்கள், வாதிடலாம். ஆனால் நீங்கள் மோடி பதிவில் முன் வைக்கும் அளவுகோலை வைத்து நீங்களே தமிழக அரசியல்வாதிகளைப் பார்ப்பதில்லையே?//
கலவரம் கிளர்ச்சி விஷயத்திலும் மோதி மேல் தவறில்லை என்பதே என் வாதம். அதை எப்படி விட்டுத் தரமுடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
RV,
நாம் விவாதத்தின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன்.
தூங்குவதுபோல நடிக்கும் ஒருவரை எழுப்ப என்னால் முடியாது.ஆனால் முடிவாக ஒரு கேள்வி;உங்கள் மனதை தொட்டு பதில் சொல்லுங்கள்.
மோடியுடன்,கருணாநிதி .அழகிரி போன்றோரை சமமாக பாவிக்க உங்களுக்கு கூசவில்லை?
உங்களை போல படித்தவர்களே இப்படி குழப்பி அடித்தால்,பாமரர்கள் கதி என்ன?
விடை பெறுமுன் ஒரு வேண்டுகோள்:
ஒருவரை அவனித்து அவர் நேர்மையானவர் என முடிவு செய்த பின் அவரிடம் உள்ள குறைகளை மறந்துவிடுங்கள்.
அதேபோல ஒருவரை அவனித்து அவர் தீயவர் என முடிவு செய்த பின் அவரிடம் உள்ள நிறைகளை மறந்துவிடுங்கள்.
களைப்பயிர் பூத்தாலும்,காய்த்தாலும் அது அழிக்கப்படவேண்டியதே.
நன்றி.
மோதியை மரணத்தின் வியாபாரி என்றார் சோனியா 2007 தேர்தலில்.
2008 துக்ளக் மீட்டிங்கில் சோ மோடி பற்றி பேசுகையில் பூகம்ப நிவாரண வேலைகளை எல்லோருமே பாராட்டினர் என்பதை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட மனிதர் இங்கு இந்த மீட்டிங்குக்கு வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி விட்டு, ஒரு குண்டை போட்டார் சோ அவர்கள்.
சோனியா சொன்ன மோடி merchant of death என்பதை தானும் ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டு பார்வையாளர்களின் திகைப்பை அலட்சியம் செய்து மேலே கூறினார்:
Yes, I now invite this merchant of death:
- to corruption,
- to terrorism,
- to nepotism,
- to official lethargy,
- to bureaucratic negligence,
- to poverty and ignorance,
- to the doctrine of despair
to come and address this meeting.
இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல். மோடி அவர்கள் அரங்கத்துக்கு வந்தார். ஜெயகோஷம் அரங்கத்திலும் வெளியிலும். மணி மாலை 08.20. சோ மற்றும் மோடி என்னும் இருமாமனிதர்கள் மேடையில். மோடி அவர்கள் பேச ஆரம்பித்தார்.
பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
உண்மையில் உங்கள் அளவுகோல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொன்னதோ, தேர்தலில் ஜெயிப்பதோ இல்லை; அது மோதி செய்த வளர்ச்சிப் பணிகள் மட்டுமே. அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் மட்டும்தான் மோதிக்கு இணையாக இன்று யாரையும் சொல்ல முடியாத நிலை. (நிதீஷ் குமாரை சொல்ல முடியுமோ என்னவோ தெரியவில்லை) பிறகு அதைப் பற்றி எழுதுங்கள், வளர்ச்சிப் பணிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கலவரம் கிளவரம் என்பதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்று சொல்லுங்கள், வாதிடலாம்.
//
ஆமாம் ஆர்.வி. மோடி தேர்தலில் ஜெயித்தது போதும் என்று பா.ஜ.க கூட சொல்லவில்லை தான். அதை ஒரு அளவுகோலாக வைக்க எனக்கும் விறுப்பமில்லை தான்.
ஆனால், குஜராத், கோத்ரா என்றால் 2002 மட்டும் தான் உங்களுக்கு ஞாபகம் வரவேண்டிய காரணங்கள் என்னவென்று நீங்களும் விளக்குங்களேன் ?
என்று இஸ்லாம் அங்கு காலடி எடுத்துவைத்ததோ அன்றிலிருந்து அடிக்கடி மதக்கலவரம் வந்த பகுதி தான் கோத்ரா. பா.ஜ.க ஆட்சியில் கலவரம் வந்த உடன் அதன் முதல்வர் தான் காரணம் என்று சில எச்சக்கலைநாய்கள் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டு காலத்தை ஓட்ட குஜராத் மக்களே தயாராக இல்லாத போது சென்னையில் உட்கார்ந்துகொண்டு பொட்டி தட்டும் நீங்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?
2002 ல் கலவரம் வந்தது தான். அதற்காக என்ன இப்ப செய்யணும் ?
மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால்...
மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. மோடி அப்படி கேட்டால் நான் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க மாட்டேன். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள். மோடி என்ன, மோடியில் தாடி மசுரைக்கூட புடுங்கமுடியாது டீஸ்டா செதல்வாத், பர்க்கா தத், வீர் சங்கவி, போன்ற செயின்ட் ஸ்டீபன்ஸ் எச்சக்கலைநாய்களால். இதை எங்கு வேண்டுமானாலும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் படிக்கவேண்டிய கட்டுரை.
Whatever may be RV's argument, it is a sin to compare Karuna/Azagiri to Modi. This sin will bring what is due.
//சென்னையில் உட்கார்ந்துகொண்டு பொட்டி தட்டும் நீங்கள்//
அவர் கலிஃபோர்னியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன் [நிச்சயமாக அமெரிக்காவில்தான்].
He is just trying to bend backwards. அப்போதுதான் நடுநிலைமைவாதி என அவரைச் சொல்லுவார்கள் என உண்மையாகவே நம்புகிறார்.
அவர் தனது ஆசைப்படியே இருக்கட்டுமே. நெம்ப நல்ல மனுஷர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு,
// அவர் கலிஃபோர்னியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன் [நிச்சயமாக அமெரிக்காவில்தான்]. // ஆம்.
// He is just trying to bend backwards. அப்போதுதான் நடுநிலைமைவாதி என அவரைச் சொல்லுவார்கள் என உண்மையாகவே நம்புகிறார். // மாற்றுக் கருத்து உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும் என்கிறீர்கள். :-) மேலும் // வேண்டா வெறுப்பாக கடைசியில் அது (வளர்ச்சிப் பணிகள்) பற்றிப் பேசவாவது பேசுகிறீர்கள் // வினவு பக்கம் போவதை நிறுத்திய பிறகு இந்த இலவச psychiatric analysis எல்லாம் கிடைப்பதில்லை. :-) நீங்களே ஆரம்பிப்பது truly ironical.
இங்கே என்னென்ன மாதிரி வாதங்கள் வைக்கப்படுகின்றன?
1. மோதியோடு அழகிரியை ஒப்பிடுவது பாவம். (கோபால்) நல்ல வேளை, சாமி வந்து கண்ணை குத்திவிடும் என்று சொல்லாமல் விட்டார். கன்பத்தும் எனக்கு நா கூச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். :-) ஹிட்லர் பாழ்பட்டுக் கிடந்த ஜெர்மனியை மேலே கொண்டு வந்தார். அதனால் அவர் யூதர்களை கொன்றார் என்பதை மறந்துவிட வேண்டுமா? (தெளிவாகவே சொல்லிவிடுகிறேன், நான் மோதியை ஹிட்லருடன் ஒப்பிடவில்லை, உங்கள் வாதங்களில் உள்ள ஓட்டையைத்தான் சுட்டுகிறேன். உங்கள் வாதத்தை நீட்டினால் அப்படித்தான் போகும்.)
2. ஆமாம் அப்படித்தான் செய்வார். உங்களால் என்ன பிடுங்க முடியும்? (வஜ்ரா) இவர் தன் கருத்தை வெளிப்படுத்தும் நாகரீகம் எனக்கு வினவு தளத்தைத்தான் நினைவுபடுத்துகிறது.
3. சோ மோடி ஊழலுக்கும் மற்றவைக்கும் மரண வியாபாரி என்று சொல்லிவிட்டார். (டோண்டு) சோ வாட்? அதற்கும் என் வாதங்களுக்கும் என்ன தொடர்பு?
4. நல்லவரான மோடியின் குறைகளை மறந்துவிடுங்கள். (கண்பத்) நான் சரியாகத்தான் கணித்திருக்கிறேன். யுதிஷ்டிரன் சொன்னது பொய்யே இல்லை என்று வாதிடுகிறார் இவர். ஈ.வே.ரா. சொன்னதாக டோண்டு மேற்கோள் காட்டி நான் தெரிந்துகொண்டது - "எனக்கு சுயமாக யோசிப்பவர்கள் தேவையில்லை, என்னை கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள்தான் தேவை." எனக்கும் டோண்டுவுக்கும் தவறாகத் தெரிவது இவருக்கு சரி போலிருக்கிறது.
டோண்டு துரோணரை கொன்றதற்கான காரனனகளை பட்டியல் இடுகிறார். மீண்டும் எங்கெங்கோ போகிறார். ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி நான் பேசவில்லையே? அது யுதிஷ்டிரன் சொன்னதை நிஜமாக்கிவிடுமா என்றுதானே கேட்கிறேன்? அது பொய், வஞ்சனை என்பதை மறுக்கிறீர்களா? அச்வத்தாமனுக்குக் கூடத்தான் ஆயிரம் காரணம் இருந்தது, எல்லாரையும் எரித்ததை நியாயப்படுத்துவீர்களா?
எனக்கு வினவு தளம் ஞாபகம் மீண்டும் மீண்டும் வருகிறது. கண்பத் சொல்வது போல புரிந்து கொள்ள விருபாதவர்களிடம் பேசுவது வீணே. டோண்டு மேல் இருக்கும் மதிப்பினால் மட்டுமே இன்னும் பதில் எழுதுகிறேன்.
5 . // அவர் ஜெயித்ததும் கருணாநிதியின் அழுகினி வெற்றியும் ஒன்றாகி விடுமா? // (டோண்டு) நீங்கள் அவர்களின் செயல்கள் வேறு என்று இப்போது வாதிடுகிறீர்கள். ஆனால் முன்னால் சொன்னது என்ன? அவருக்கு ஓட்டு விழுந்தது, அதனால் அவர் மீது குற்றம் இல்லை. ஞாபகப்படுத்திப் பாருங்கள். அதனால்தான் சொல்கிறேன், உங்கள் அளவுகோல் ஓட்டு இல்லை; கோர்ட்டும், சி பி ஐயும் தரும் சர்ட்டி ஃ பிகேட் இல்லை; வளர்ச்சிப் பணிகள் மட்டுமே. ஹைராமுக்கும் அதுவே அளவுகோல் என்று தெரிகிறது.
6. // கலவரம் கிளர்ச்சி விஷயத்திலும் மோதி மேல் தவறில்லை என்பதே என் வாதம் // எப்படி என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும். போலி சொராபுதீன் விஷயத்தில் யாரும் சாட்சி சொல்ல வரவில்லை என்று சி பி ஐ சொன்னது மட்டும்தானா? இல்லை வேறு ஏதாவது உண்டா?
@ஆர்வி
// கலவரம் கிளர்ச்சி விஷயத்திலும் மோதி மேல் தவறில்லை என்பதே என் வாதம் // எப்படி என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.//
மோதிதான் தவறு செய்தார் என்பதை அவர் மேல் குற்றம் சாட்டுபவர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என நான் சொல்கிறேன்.
மோதி மீது தவறு என்பது உங்கள் கருத்து, இல்லை என்பது என் கருத்து.
மோதி தேர்தலில் பெற்ற வெற்றியும் கருணாநிதி பெற்ற வெற்றியும் ஒன்று என நீங்கள் நினைக்கலாம், நான் நினைக்கவில்லை.
ஹிட்லர் எனக் கூற வேண்டுமானால் ராஜீவைத்தான் கூற வேண்டும். ஏனெனில் உடனேயே வந்த தேர்தலில் அவர்தான் தீவிரவாதிகளாக சீக்கியர்களை போஸ்டர்களில் காட்டியவர்.
//சோ மோடி ஊழலுக்கும் மற்றவைக்கும் மரண வியாபாரி என்று சொல்லிவிட்டார். (டோண்டு) சோ வாட்? அதற்கும் என் வாதங்களுக்கும் என்ன தொடர்பு?//
அப்படி ஏதாவது இன்னொரு முதலமைச்சரைக் காட்ட முடிந்தால் காட்டுங்களேன்.
ஒரு ஒட்டுமொத்தப் பார்வை வேண்டும் என்பதுதான் என் வாதம். குஜராத் கலவர விஷயத்தில் நிரூபிக்க வேண்டியது அவரைக் குற்றம் சாட்டுபவர்களே என்று மறுபடியும் கூறுவேன். அதை மட்டும் வைத்து அவரை நிராகரிப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம்.
எது எப்படியானாலும், நான் என்ன கூறினாலும் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை and vice versa.
ஆகவே ஆளைவிடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆர் வி யின் வாதங்கள் தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள முற்படுவதாகவே இருக்குமே அன்றி கருத்தின் நடுப்பகுதிக்கு வரவே மாட்டார். உதாரணமாக பிராமணர்கள் பற்றி வினவு தளம் அவமரியாதையாய் எழுதினால் அவர்களோடு சண்டை போடுவார். அதே பிராணர்களை ஜெயமோகன் அவமரியாதையாக எழுதினால் "எங்களைப் பற்றி அப்படியே எழுதியிருக்கிறீர்களே, உங்களைப் போல வருமா? ஆகா ஓகோ" என்று ஜெயமோகனைப் புகழ்வார். மொத்தத்தில் ஒரு அறிவுஜீவி அச்சுப்பிச்சு இந்த ஆர்வி என்பது என் கருத்து.
//
2. ஆமாம் அப்படித்தான் செய்வார். உங்களால் என்ன பிடுங்க முடியும்? (வஜ்ரா) இவர் தன் கருத்தை வெளிப்படுத்தும் நாகரீகம் எனக்கு வினவு தளத்தைத்தான் நினைவுபடுத்துகிறது.
//
பத்துவருசமா எப்பப்பாரு ஒரு ஆளைப்பற்றி ஒரே பல்லவியைப் பாடினால் மனுசனா இருந்தா கோபம் வரத்தான் செய்யும். 2002 கலவரம் வந்தது தான். அதற்காக மோடி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? அவர் என்ன செய்தால் உங்களைப்ப்போன்றவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு உங்கள் வாயை மூடுவீர்கள் ? உங்கள் கருத்து என்னைப்போன்ற மற்றும் டோண்டு போன்றவர்களின் மோடி பற்றி கருத்தை ஒரு ஆங்ஸ்ட்ராம் கூட மாற்ற முடியாது என்பது வேறு விசயம். இருந்தாலும் உங்கள் visceral வெறுப்பை அவர் என்ன செய்தால் நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள் என்பது தெரிந்துகொள்ள ஆசை.
--
வினவும் நானும் ஒண்ணு என்று வினவிடம் போய்ச் சொல்லிப்பாருங்கள் அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியவரும். நீங்கள் இதுவரை வாழ்க்கையில் கேட்டிராத சங்கத்தமிழ் வார்த்தைகளைக் கேட்ப்பீர்கள். கூவத்திற்கு மூக்கிருந்தால் அதை கூவமே மூடிக்கொள்ளும் அளவுக்கு உங்களையும் உங்கள் தாத்தா பாட்டிகளையும் அவர்கள் முன்னோர்களையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.
...எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வினவு மற்றும்அவனது அல்லக்கைகளை நான் நாய்களாகவோ பன்றிகளாகவோ கூடப் பார்ப்பதில்லை. மலப்புழுக்களின் குடல் பூச்சிகள் அவர்கள். the parasites living inside bottom feeders.
// உதாரணமாக பிராமணர்கள் பற்றி வினவு தளம் அவமரியாதையாய் எழுதினால் அவர்களோடு சண்டை போடுவார். அதே பிராணர்களை ஜெயமோகன் அவமரியாதையாக எழுதினால் "எங்களைப் பற்றி அப்படியே எழுதியிருக்கிறீர்களே, உங்களைப் போல வருமா? ஆகா ஓகோ" என்று ஜெயமோகனைப் புகழ்வார். // பிராமணர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள், ஜாதி வெறியர்கள், ஜாதி பார்க்காதவர்கள், மோதி ஆதரவாளர்கள், மோதியை எதிர்ப்பவர்கள் எல்லா தரப்பினரும் உண்டு. ஜெயமோகன் சித்தரிப்பது அப்படி சில நெகடிவ் குணங்கள் உள்ள பிராமண மாமியை. வினவு ஒட்டுமொத்த பிராமணர்களையும் அவர்கள் பிறப்பை வைத்து இழிவுபடுத்துகிறார். இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள அறிவுஜீவியாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் கொஞ்சமாவது அறிவு வேண்டும்.
டோண்டு ஆளை விடுங்கள் என்று சொன்ன பிறகும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். :-) சரி வர வேண்டியதாகிவிட்டது. // குஜராத் கலவர விஷயத்தில் நிரூபிக்க வேண்டியது அவரைக் குற்றம் சாட்டுபவர்களே என்று மறுபடியும் கூறுவேன். // தா. கிருஷ்ணன் கொலை விஷயத்தில் நிரூபிக்க வேண்டியது யார், அங்கே இந்த அளவுகோல் ஏன் உங்களுக்கு போதவில்லை? 84 டெல்லி கலவரத்தில் ராஜீவுக்கு பொறுப்பு உண்டு என்று நிரூபிக்க வேண்டியது யார்? அப்படி நிரூபிக்கப்பட்டுவிட்டதா? உங்கள் அளவுகோல்கள் ஒரே மாதிரி இல்லை என்று நான் கருதுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நமக்குள் இசைவு ஏற்படப்போவதில்லை என்பதை உணர்கிறேன், அதனால் நானும் நிறுத்திக் கொள்கிறேன்.
It is better to jaw-jaw. But the jaw-jawing should be based on some facts. பத்திரிகைகள் உண்மைகளைத் திரித்தும் மறைத்துமே வெளியிடுகின்றன. விக்கிலீக்ஸ் வரை இதே கதைதான். இராகுல காந்தியார் வேலைக்காக மாட்டார் என்று குடும்ப நண்பர் கூறியதாக வெளின விக்கிலீக்ஸ் செய்தி தொலைக்காட்சிகளால் இராகுலர் அவ்வளவு மோசமில்லை என்பதாகத் திரித்து வெளியிடப்பட்டது. மோதிக்கு எதிராக கச்சைகட்டி கொடுமை கொடுமை என்று ஆடிய தீஸ்தா செதல்வாட் உச்சநீதிமன்றத்தில் திட்டுக்கு மேல் திட்டு வாங்குவது பற்றி இந்து உட்பட எந்தப் பத்திரிக்கையும் சிறு செய்தியாகவே வெளியிட்டன. டிவி சானல்கள் மேலும் கீழுமாய் இறுக்கமாகப் பொத்திக் கொண்டன.
காங்கிரசும் இடதுசாரியும் சாராத தவறுகளை வளைத்து வளைத்து எழுதும் வார இதழ்களும் கைகட்டி நின்றன. ஒரு எழுத்துகூட செதல்வாட்டின் குற்றம் பற்றி எழுதவில்லை.
தா.கிருட்டிணன் கொலையில் அவரது தம்பி மிரட்டப்பட்டது ஊரறிந்த ரகசியம். எல்லாப் பத்திரிக்கைகளிலும் செய்தி வந்தது. அழகிரி மறுக்கவில்லை. ஆகவே நிரூபணம் தேவையில்லை. ஆனால் மோதி பற்றிய செய்திகளை துவக்கத்திலிருந்தே சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். மோதியும் மறுத்துள்ளார். அவர் குற்றம் செய்தார் என்று சட்டபூர்வமாக நிரூபிக்கவும் முடியவில்லை. இன்னமும் மோதி குற்றவாளி மோதி குற்றவாளி என்று பேசிக் கொண்டிருப்பது ஏன் என்ன லாஜிக் என்று ஆர்வி விளக்கவேண்டும். ஆனால் அவர் எல்லோருக்கும் ஒரே அளவுகோல் என்கிறார். அழகிரி விளக்கெண்ணை. மோதி தங்கம். விளக்கெண்ணையை லிட்டர் கணக்கில் அளக்க வேண்டும். தங்கத்தை கிராம் கணக்கில் அளக்கவேண்டும். ஒரே அளவுகோல் செல்லாது.
நன்றாக சொன்னீர்கள் அருண் அம்பி.
எதற்கு எப்பேற்பட்ட அளவுகோல் பயன்படுத்தவேண்டுமோ அப்படி பயன்படுத்துவது தான் சரி.
இருந்தாலும், தேர்தல் வெற்றி மட்டுமே ஒரு அரசியல்வாதியின் குற்றங்களுக்கு சரியான தீர்ப்பு அல்ல. ஜனநாயகத்தில் இது ஒரு முக்கியமான விசயம்.
அந்த அரசியல்வாதி குற்றமற்றவர் என்று கோர்ட் சொல்லவேண்டும். என்னைப்பொருத்தவரை மோதி குற்றமற்றவர்.
//ஜெயமோகன் சித்தரிப்பது அப்படி சில நெகடிவ் குணங்கள் உள்ள பிராமண மாமியை// ஆர் வி, நெகடிவ் குணமுள்ளவர்களைக் காட்ட வேண்டுமென்றவுடனேயே பிராமணர்கள் தான் ஞாபகத்திற்கு வரவேண்டுமா என்கிற கேள்வி ஜெயமோகனுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட பிராண்ட் எண்னத்தை மனதில் கொண்ட எல்லோருக்குமான கேள்வி தான் அது. அதில் நீங்கள் மற்றவர்களிடம் குற்றமும் ஜெயமோகனிடம் புத்திசாலித்தனமும் பார்ப்பது போன்ற அறிவு ஜீவித்தனத்தை குறிப்பிட விரும்பினேன் அவ்ளோதான்!
// இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள அறிவுஜீவியாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் கொஞ்சமாவது அறிவு வேண்டும்// ஒத்துக்கிறேன். நீங்க அறிவு உள்ளவர்ன்னு ஒத்துக்கிறேன். நெக்ஸ்டு மீட் பண்றேன்!
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
-------------------------------
1.NAMATHU VARI PANAM IPPADI POKUTHU
http://enews.phpbb4free.org/namathu-vari-panam-ippadi-pokuthu-t39.html
**************OLD TOPICS************
2. Ananda Vikatan survey Result in Tamilnadu elections 2011
http://enews.phpbb4free.org/ananda-vikatan-survey-result-in-tamilnadu-elections-2011-t38.html
3.A word to karunanidhi?
http://enews.phpbb4free.org/a-word-to-karunanidhi-t36.html
Karunanidhi .....
4.ATHARANGAM AMBALAM
http://enews.phpbb4free.org/karunanidhi-atharangam-ambalam-t37.html
5. ARE YOU GOING TO VOTE "CONGRESS" OR "DMK"
http://enews.phpbb4free.org/are-you-going-to-vote-congress-or-dmk-amp-quot-t34.html
No new posts
6.TOP 10 REASON KARUNANITHI GOING TO LOSE
http://enews.phpbb4free.org/top-10-reason-karunanithi-going-to-lose-t33.html
Post a Comment