கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (14.08.2009 காலை 09.31-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
பதில்: இதற்கான பதில் ஏற்கனவேயே டோண்டு பதில்கள் - 13.08.2009-ல் கொடுக்கப்பட்டு விட்டது.
2. அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
பதில்: அதுக்காக வில்லன் சிரிப்பு புகழ் வீரப்பாவையும் அழுகை திலகம் எம்.வி ராஜம்மாவையும் நம்பலாம்னு சொல்லுவீங்களா?
3. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
பதில்: கேளுங்கள் தரப்படும்.
4. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
பதில்: அதுக்காக சிரிச்சு வைக்காதீங்க, லூசுன்னு சொல்லிடப்போறாங்க.
5. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
பதில்: வீட்டுல வார்த்து வார்த்து போட்டா பத்து தோசைக்கு மேல், ஹோட்டலிலோ ஒரு தோசைக்கு மேல் பேசப்படாது.
6. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
பதில்: பரவாயில்லை, மெத்தையாவது கிடைக்குமா?
7. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
பதில்: எப்படியும் ஜோதி தியேட்டர் பிட்டு பட க்யூவில அப்பா கண்ணில் பட்டாச்சு, அவரும் கருவிக்கிட்டே வீட்டுக்கு போயாச்சு. இப்போ போய் பிட்டை பாக்காம போனாக்க எப்படியும் விழப்போற அடி என்ன குறைச்சலாகவா விழப்போவது?
8. அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான்
பதில்: தானும் வாழமாட்டான், பிறத்தியானையும் வாழவிடான்.
9. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
பதில்: அதுக்காக அறிவுள்ளவர் பெண்ணாக இருந்தால் அங்கே போய் ஆண்மையை எதிர்ப்பார்க்கலாங்களா?
10. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
பதில்: ஆனால் அறிவில்லாதவர்கள்தான் தேவை என கட்சித் தலைவர்கள் கூறுகிறார்களே.
எவனோ ஒருவன் (பெஸ்கி)
1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?
பதில்: இல்லையே புத்த மதமும் பரவியதே. என்ன், பிற்காலத்தில் சைவம் வைணவம் அதிகமாக பரவியதில் புத்தமதமும் சரி சமணமதமும் சரி நலிந்தன.
2) நெய்வேத்தியம் சரியா அல்லது நைவேத்தியமா? விளக்கம் ஏதும் தர முடியுமா?
பதில்: நைவேத்தியம் என்பதன் ஆரம்பகால அர்த்தம் "அறிவிப்பது" என்பதுதான். தெய்வத்துக்கு முன்னர் படையல் இட்டு, அதனை தெய்வத்திற்கு அறிவிப்புச்செய்தல் அந்த சடங்காகும். அதுதான் "நெய்வேத்தியம்" என்றாகி, நெய்யில் செய்யப்பட்ட சோற்று
வகையாக்கப்பட்டுவிட்டது என்பது எனது புரிதல்.
3) தாவணி, மாராப்பு இதெல்லாம் (தமிழ் நாகரிகத்தில்) பழைய காலத்தில் கிடையாது என்கிறார் என் நண்பர், உண்மையா?
பதில்: தெரியவில்லையே. ஏன் இந்த தேவையற்ற ஆராய்ச்சி? இருந்தாலும் தாவணி, மாராப்புன்னு கூகளிட்டா பலான சைட்டுகள் சில பார்க்கக் கிடைத்தன.
4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)
பதில்: எஸ்.எம்.எஸ்கள் வருவது மட்டும்தான் உண்மை. மற்றப்படி குணமாகிறது என்பதை நான் நம்பவில்லை.
5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)
பதில்: கணவன் ஒருவனுக்கு எயிட்ஸ் இருந்தாலே போதுமே. அத்தனை மனைவிகளுக்கும் வந்து விடுமே. பல மனைவிகள் இருந்தால் என்ன ஓசியில் கிடைப்பதை விட்டு விடுவானா?
6) சென்னை நகரப் பேருந்துகளில், இடது பக்கம் பெண்கள் எனவும் வலது பக்கம் ஆண்கள் எனவும் இருப்பது ஏன்? (எங்களது பக்கத்தில், முன் பகுதியில் பெண்கள் என்பதும், பின் பகுதிகளில் ஆண்கள் என்பதும் எழுதப்படாத வழக்கம்... பார்க்கப்போனால் இதில்தான் ’இடிபாடு’ கம்மி.)
பதில்: இடது பக்கம் பெண்கள் மட்டுமே என்பது உண்மையே. ஆனால் வலது பக்கம் பொதுதான். வெறுமனே ஆண்களுக்கு மட்டும் எனக் கூறவியலாது. உங்களது எந்த ஊர்?
7) ஹிந்தி வார்த்தைகள் தமிழில் (பேச்சில்) கலந்திருப்பதுபோல (சாவி) தமிழ் வார்த்தைகள் ஏதும் ஹிந்தியில் கலந்திருக்கிறதா?
பதில்: கலந்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு குறிப்பிட்டு சொல்லத் தெரியவில்லை. இராமகி ஐயாவுக்கு போக வேண்டிய கேள்வி இது.
ரமணா
1. சரித்திர நாவல்களில் சாண்டில்யன் பாணி/கல்கி பாணி/கோவி மணிசேகரன் பாணி என்ன என்ன வேறுபாடுகள் விளக்குக?
பதில்: கல்கியின் எழுத்துக்கள் ஆபாசக் கலப்பின்றி எல்லா தரப்பினரையும் படிக்க வைத்தன. சாண்டில்யனின் எழுத்துக்கள் சிருங்கார ரசத்தில் தோய்ந்தவை. ஆனால் கல்கி அளவுக்கு சரித்திர கதைக்கான உழைப்பு இல்லை. கோவி மணிசேகரனது எழுத்துக்கள் என்னைப் பொருத்தவரையில் எரிச்சல் கிளப்பக் கூடியவை. வைரமுத்து கவிதைகள் போல நிரம்பவே செயற்கைத்தன்மை வாய்ந்தவை, அலட்டுபவை.
2. தற்சமயம் யாருடைய சரித்திர நாவல்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு?
பதில்: சாதாரணமாக சரித்திரக் கதைகள் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகத்தான் வந்து கொண்டிருந்தன. இப்போது தொடர்கதைகளே ரொம்பவும் புழக்கத்தில் இல்லாதபோது சரித்திரக் கதாசிரியர்கள் என்று இப்போது யாரும் என் கண்ண்ல் படவில்லை. ரவிகுலதிலகன் போன்ற சரித்திரக் கதைகளை கி.ராஜேந்திரன் எழுதியிருந்தாலும் அது கல்கியின் நடையையே அதிகம் நினைவூட்டியது.
3. வைமுகோதை நாயகி,லட்சுமி போன்ற பழைய நாவலாசிரியர்கள் போல் தற்சமயம் யார் பிரபலம்?
பதில்: ரமணி சந்திரன், அனுராதா ரமணன், தேவிபாலா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் எழுதினால் இப்போதும் படிக்க ஆட்களிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் ரமணி சந்திரன், அனுராதா ரமணன், ஜோகிர்லதா கிரிஜா.
4. தமிழ்வாணன் துப்பறியும் நாவல்கள் (சங்கர்லால்,மாது,கத்திரிக்காய்) மாணவப் பருவத்தில் படித்தது உண்டா?
பதில்: படிக்காமல் இருந்திருக்க முடியுமா. ஆனால் இப்போது திரும்பிப் பார்த்தால் அவையெல்லாம் Sexton Blake கதைகளைத்தான் நினைவூட்டுகின்றன.
5. மந்திரஜாலக் கதைகள் ,அம்புலிமாமா கதைகள் வாசிப்பதில் சிறுவயதில் ஆர்வம் இருந்ததா? அனுபவம் எப்படி?
கண்டிப்பாக. அப்போது த்ரில்லிங் அனுபவங்கள்தான். இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம்? ஹாரி பாட்டர் புத்தகங்களை விடவா?
அனானி (15.08.2009 மாலை 05.29-கு கேட்டவர்)
1. Bird flue virus and swine flu virus will join and become new virus and the people all over the world will be affted as 1918-19 spanish flu-AS PER WHO NEWS. IS it nature's punishment to the people, who have endangered the eco set up?
பதில்: முன்பெல்லாம் இது கடவுளின் கோபத்தால் வருகின்றன என்றார்கள். இப்போது சற்றே விஞ்ஞான முலாம் பூசி சுற்றுப்புறச் சூழலை கடவுளாக்கி விட்டார்கள். மற்றப்படி இங்கு சொல்வதற்கு ஏதும் அடிப்படை இருப்பதாகத் தெரியவில்லை.
2. Is the recent meeting( statue function) between cms of tamilnadu and karnataka, a perlude to jont political action at india level by BJP and DMK?
பதில்: அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உடைப்பதற்கு இரண்டு சிலைகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. அவ்வளவே.
3. Dmk decided to face all elections with thirumangalam formula (rich nv food, money,freebies), what will happen to other parties (less money) in tamilnadu?
பதில்: நான் ஒரு சாத்தியக்கூறை சொல்கிறேன், பாருங்கள். 2010 வாக்கில் காங்கிரஸ் திமுக பிரிவு ஏற்பட்டு தமிழக மந்திரிசபை கவிழ்கிறது. கருணாநிதியை கேர்டேக்கர் முதன் மந்திரியாக வைக்காது கவர்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள். அப்போது தேர்தல் நடந்தால் திருமங்கல பஜனை நடத்தவியலாது. அப்போது ஏதேனும் நல்லது நடக்கலாம்.
4. will rahul formule work in tamilnadu.?
பதில்: ராகுலின் பாட்டி செய்த குளறுபடியால் தமிழகத்தில் வீழ்ந்த காங்கிரஸ் மறுபடி எழ ராகுலின் ஃபார்முலா போதும் என நினைக்கிறீர்களா?
5. Will the central government put an end to the on line trading of rice and other food grains to save the poor people?
பதில்: உற்பத்தி அதிகமானால் ஒழிய அரசின் வேறு எந்த நடவடிக்கையும் இதில் பலன் தரவியலாது. அது சரி, வால் பையன் போன்றவர்கள் மேல் உங்களுக்கு இந்த கோபம்?
அனானி (17.08.2009 இரவு 08.26-க்கு கேட்டவர்)
1. டோண்டுவைப் பற்றி டோண்டுவின் கருத்து?
பதில்: வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அவனே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறவன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் அவனுக்கு ஆசை.
2. டோண்டுவைப் பற்றி முரளிமனோகரின் கருத்து?
பதில்: வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அவனே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறவன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் அவனுக்கு ஆசை.
(டோண்டு, முரளிமனோகர் ஆகிய இருவரும் ஒருவரே என்னும் போது வேறு என்ன பதில் வரும் என எதிர்ப்பார்த்தீர்கள்?)
3. டோண்டுவைப் பற்றி போலிடோண்டுவின் கருத்து?
பதில்: @#$%^ ***** <>/[]{} @@@@@@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!
4. டோண்டுவைப் பற்றி ஓவியாவின் கருத்து?
பதில்: எத்தனை முறை பெரியார் சொன்னதையெல்லாம் கட் அன் பேஸ்ட் செய்து போட்டாலும் கீழ்வெண்மணி விஷயத்தையும், 1965-ல் நடந்ததையும் மறக்க விட மாட்டேன் என்கிறாரே.
5. டோண்டுவைப் பற்றி அன்புடன் பாலாவின் கருத்து?
பதில்: தெரியாத்தனமா இவருக்கு வலைப்பூவுக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷனா இருந்தாலும் இருந்தேன், அடிக்கடி அதை எடுத்து கூறி, எனக்கு அவ்வப்போது நன்றி சொல்லி, போட்டுக் கொடுத்து, எல்லோரையும் என்னை திட்ட வைத்துவிடுகிறதே இந்தப் பெரிசு.
ரமணா:
1. டோண்டுவைப் பற்றி வால்பையன் கருத்து?
பதில்: ஒவ்வொரு முறையும் பதில்கள் பதிவு வந்ததும் எனது ஒவ்வொரு பதிலுக்கும் மாற்று பதிலை அளித்து கலகல்ப்பூட்டும் அவரையே இக்கேள்விக்கான பதிலை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.
அனானி (18.08.2009 காலை 06.04-க்கு கேட்டவர்)
1. சமவேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையின் இன்றைய நிலை எப்படியுள்ளது?
பதில்: சமவேலைக்கான சம ஊதியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குள்ளேதான் பார்க்க வேண்டும். வங்கி ஊழியருடன், கூட்டுறவு வங்கி ஊழியரை ஒப்பிடுதல் என்பதெல்லாம் பிராக்டிகல் அல்ல. அதை விடுத்துப் பார்த்தால் இந்தியாவில் நிலை ஒத்து கொள்ளக்கூடியதாகவே உள்ளது. இதை விளக்க கல்ஃபில் உள்ள நிலையை பார்க்க வேண்டும். நம்மவர்கள் பொறுப்பான வேலையில் பெறும் சம்பளம் அதே வேலையை செய்யும் உள்ளூர்காரர்கள், மேல்நாட்டவர் ஆகியோர் பெறும் சம்பளத்தைவிட மிகக்குறைவாகவே இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது நம் நாட்டில் நிலைமை எவ்வளவோ மேல்.
2. உள்ளாட்சித்துறை, மாநில அரசுத்துறை, மாநில தலமைசெயலகத்துறை, மத்திய அரசுத்துறை, அஞ்சல்துறை, பொதுத்துறை, காப்பிட்டுதுறை, வங்கித்துறை ஆகிய துறைகளில் எழுத்தர் பணியாளர்களுக்குள் அடிப்படை கல்வித்தகுதி சமமாய் இருக்கும்போது சம்பள வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல இருப்பது நியாயமா?
பதில்: அந்தந்த நிறுவனங்களுக்குள் சம ஊதிய நிலை இருக்கும் என்பதைப் பார்த்தோம். அதையே எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே பொதுவிதியாக மாற்றவியலாது. அது பிராக்டிகல் இல்லை.
3. லாப அடிப்படையில் இந்த சம்பளங்கள் என்றால், சேவைத்துறையில் பணிஆற்றுவோர் செய்த பிழை என்ன?
பதில்: நான் இருப்பதும் சேவைத்துறைதான். இங்கு என்ன பிரச்சினை? நீங்கள் செய்யும் மார்க்கெட்டிங் பொருத்துத்தான் உங்கள் சம்பாத்தியம் இருக்கும்.
அனானி (18.08.2009 பிற்பகல் 01.56-க்கு கேட்டவர்)
1. As per latest rules in India will the benefits of reservation be extended to a girl who belongs to general category and has married to a boy who belongs to schedule caste.
பதில்: அம்மாதிரி திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் சலுகை என நினைக்கிறேன். எதற்கும் இங்கும் போய் பாருங்களேன். ஆகவே நீங்கள் சொல்வது போல முற்பட்ட சாதியில் இருக்கும் பெண் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை மணப்பதால் அப்பெண்ணுக்கு சலுகை கிடைக்காது என்றுதான் நினைக்கிறேன்.
2. Tell whether the present reservation policy helped the poor among the poorest?
பதில்: இல்லை. அதனால்தான் கிரீமி லேயர் சித்தாந்தமே வருகிறது.
3. In India all the political parties are supporting the reservation to sc/st with out any question.Is it for vote bank or real concern?
பதில்: விடையைத் தெரிஞ்சுண்டே கேள்வி கேட்டால் என்ன சொல்லறது?
4. There is demand for reservation quota in time bound promotions also. Will it be granted? when?
பதில்: தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் மலை சாதியினருக்கு இது ஏற்கனவேயே இருக்கிறதே.
5. will the inter caste marriage be the final solution to eradicate the cast sysytem?
பதில்: இட ஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதிகள் ஒழியாது, ஒழிய விட மாட்டார்கள். கூடவே தேர்தல்களும் வருகின்றன. சாதி போவதாவது? நோ சான்ஸ்.
அனானி (18.08.2009 இரவு 08.38-க்கு கேட்டவர்)
1. தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஆட்களுக்கு கறியும் சோறு படைத்து, ஓசி கலர் டிவி பாருண்ணு கவர் செய்து, ஓட்டுக்கு ரூபாய் 200 கொடுத்த பிறகும் 2010 பொது தேர்தலில் அனைத்தும் கோவிந்தாவானால் இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
1. திருவாரூரார்; 2. தளபதியார்; 3. அஞ்சாநெஞ்சார்; 4. கவிதாயினியார்; 5. நகரத்தார்
6.வட புலத்து அம்மையார் 7.வருங்கால பிரதமர்
பதில்: கேள்வி கேட்டபோது இடைதேர்தல் முடியவில்லை. இப்போது முடிந்து விட்டது. ஆகவே அக்கேள்வியை அடுத்த பொதுத் தேர்தலுக்காக மாற்றுகிறேன்.
பதில்: விடை ரொம்ப சுலபம். ஜெயித்தால் உண்மை வென்றது என்பார்கள். தோற்றால் தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் என்பார்கள். அதைத்தானே பெரிய தலை ஒவ்வொரு முறை தோற்றபோதும் சொன்னார்? அது சரி, யார் அது நகரத்தார்? ப.சி.தானே?
அனானி (20.08.2009 காலை 06.42-க்கு கேட்டவர்)
1. பாஜக வின் மூத்த தலைவர்களில் சிறந்த அறிவுஜீவி என பல நிலைகளில் நிரூபித்த ஜஸ்வந்த் சிங் ஜின்னாவை பாராட்டி புத்தகம் எழுதியதின் அடிபடை நோக்கம், அதன் விளவு பற்றி?
பதில்: ஜின்னா என்பவர் ரொம்ப காம்ப்ளிகேடட் ஆசாமி. அவரை எல்லாம் கருப்பு வெள்ளை ரேஞ்சில் வகைபடுத்த இயலாது. நமக்கு காந்தி எப்படியோ, அப்படித்தான் ஜின்னா பாகிஸ்தானுக்கு. அவரைப் பற்றி எழுதினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அது கிடக்கட்டும். பாஜக இப்போதிருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கருத்து மோதல்கள் பா.ஜ.கா.வுக்கு நல்லதல்ல. நம் நாட்டு ஜனநாயகத்துக்கும் நல்லது அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் அதை புரிந்து கொள்வது நல்லது.
2. ஒருவரை ஒருவர் புரிந்து பல வருடங்களாய் காதலித்து காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனும் விவாகரத்து செய்ய பரஸ்பர சமரச முயற்சி .இது மாதிரி செயல்களுக்கு அடிப்படை காரணம், சந்தேக உணர்வுகளா, தட்டு மீறும் செயல்களா?
பதில்: சினிமா கலைஞர்களும் நம்மைப் போன்றவர்களே. என்ன, சற்று அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்கள் செயல்பாடுகளை எல்லோரும் கூர்ந்து பார்ப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. பிரபலமானதற்கான விலை அது. இதற்கு மேல் அவர்கள் பிரச்சினை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை.
3. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தீட்சதர்கள் ஆதிக்கத்தை அரசின் கட்டுக்குள் கொண்டு வந்ததது சரியா? அரசு இந்து மதத்தில் மட்டும் இப்படி செய்வது மாறும் நாளும் வருமா?தீட்சதர்கள் பார்ப்பனர் என்பதால் கழக அரசின் இந்த தலயீட்டுக்கும் கரணமா? உயர்/உச்ச நீதி மன்றம் ஒருவேளை அரசின் செயல்களுக்கு மாறிய தீர்ப்பை வழங்கினால்?
பதில்: வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. இப்போதுன் கருத்து சொல்வது உசிதம் அல்ல. மற்றப்படி இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து குளறுபடிகள் செய்வது நமது அரசியல் நிர்ணயச்சட்டத்திற்கே புறம்பானது. ஒன்று எல்லா மதங்களையும் கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் பேசாமல் இரு என்பதுதான் சரியான நிலை என நான் கருதுகிறேன்.
4. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் கட்டுபடுத்த முடியாது என வீர வசனம் பேசும் பழநெடுமாறனின் இனப்பற்று தூய்மையானதா? இல்லை பிற வாய்ச் சொல்வீரர்கள் மாதிரிதானா?ஒரு சமயம் திமுகவின் பயங்கர தாக்குதலில் இருந்து இந்திரா அம்மையாரை காப்பாற்றிய இந்த காங்கிரஸ்காரார் இப்படி மாறியது எதனால்?யார் காரணம்? உங்கள் விமர்சனம்?
பதில்: இந்திரா காந்தியை காப்பாற்றியது 1977-ல். அது நடந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலைமை மாறாதா என்ன? சமீபத்தில் 1977 என்று டோண்டு ராகவன் வேண்டுமானால் கூறுவான். எல்லோரும் கூறுவார்களா?
5. இன்றைய தொழில் நுட்ப வசதிகளில் பொறிவைத்து பிடிக்கும் தன்மைகள் தெரிந்த பெங்களூரு இளைஞர் பொறியாளர் இனியன் நடிகை சிநேகாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து மாட்டிக்கொண்டதற்கு காரணம் மன்ப்பிறழ்வு என சட்டத்தில் உள்ள ஓடைகளை காட்டி தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதே.இது மாதிரி செயல்களை அவர்கள் செய்யத் தூண்டுவது நடிகைகளின் கவர்ச்சி செயல்களா இல்லை அவர்கள் பற்றி வலையுலகில் ஆபாசமாய் கிராபிக்ஸ் முறையில் பரப்பும் படச் செய்திகளா?
பதில்: இதைத்தானே கூறுகிறீர்கள்? I feel revolted. அந்த இனியனுக்கு மனோதத்துவ சிகிச்சை தேவை.
கிருஷ்ணகுமார்:
1. Tell the causes for economic slowdown?
பதில்: எம்.ஏ. பொருளாதார பேப்பருக்கான கேள்வியை என்னிடம் வைப்பது நியாயமா? இதற்கு சாதாரணமாக 100 அதிகப்படியான பேப்பர்களை மாணவர்கள் வாங்கி எழுதுவார்களே?
2. How do we get rid of our past and guilt of mistakes and still be bold?
பதில்: முக்கியமாக உங்களை நீங்களே மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். பலர் தாங்கள் செய்த தவறுகளுக்காக பாச்சாதாபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்களைத் தாங்களே சாடுவார்கள். இது ஒரு சுய துன்புறுத்தல் விஷயம். இதிலிருந்து மீள வேண்டும். செய்த தவறுக்காக உங்களுக்கு நீங்களே மன்னிப்பு கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் அவற்றை மறக்காதீர்கள். அப்போதுதான் அவற்றைத் திரும்பச் செய்யாது இருக்கலாம். வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
3. Differnce between phsycologists and pshychiartists?
பதில்: குன்ஸா சொல்லணும்னாக்க, சைக்கியாட்ரிஸ்ட் என்பது டாக்டர் படிப்பு படித்த டாக்டர். சைக்காலஜிஸ்டுன்னா மனோதத்துவம் படித்து பி.எச்.டி. வாங்கும் டாக்டர். மருத்துவர் ப்ரூனோ மேலே சொல்லுவார்னு நினைக்கிறேன்.
4. Narrate one of your embarrassing moments ever?
பதில்: அதெல்லாம் சொல்லறதுக்கு ரொம்பவுமே எம்பராஸ்ஸிங்கா இருக்குங்கோவ்.
5. The reasons for the economic weakness of a country like India?
பதில்: பொருளாதார முன்னேற்றம் பரவலாக இல்லை. அதற்காக சோஷலிச முறையெல்லாம் திரும்ப கொண்டு வரவியலாது. அவ்வாறு செய்தால் மறுபடியும் எல்லோரும் ஏழையாவதுதான் நடக்கும். மக்களது கல்வியறிவு மேலும் பலருக்கும் பரவ வேண்டும். தமது சுயநலத்தால் அரசியல்வியாதிகள் தரும் பிச்சைக்காசுக்காக கண்டவருக்கு ஓட்டளிப்பது குறைய வேண்டும். இன்னும் என்னென்னவோ நடக்க வேண்டும். அவற்றையெல்லாம் இங்கே கூற இடமில்லை. ஆனால் ஏற்கனவே கூறியவை முக்கியமானவை.
6. Tell the problem of elder brother in life and family?
பதில்: சம்பந்தப்பட்ட நபர் எப்படிப்பட்ட அண்ணனாக இருந்தார் என்பதை பொருத்துத்தான் அவரது கஷ்டமோ சுகமோ அமையும். தங்கை தம்பிகளுக்கு உழைக்க வேண்டியதுதான், ஆனால் அதற்காக தியாக தீபமாக எல்லாம் ஆகக்கூடாது. குடும்பத்தின் சுமையை மற்றவர்களும் சுமக்கச் செய்ய வேண்டும்.
7. Ways to overcome shyness?
பதில்: இந்த சங்கோஜம் என்பது தாழ்வு மனப்பான்மையால் வருகிறது. அதற்கு அடிமையாகாது இருக்க வேண்டும். தம்மைப் போலத்தான் பிறருக்கும் தயக்கங்கள் இருக்கும் என்பதையும் மறக்கலாகாது.
8. The easier steps for becoming mentally rich?
பதில்: கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. இதற்கு மேல் என்ன சொல்ல உள்ளது?
9. The difference between Love and Infatuation?
பதில்: பிள்ளைகள் பெற்று இனவிருத்தி செய்யத்தான் காம உணர்வையே இயற்கை
நமக்கு தந்திருக்கிறது. அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த காதல் உதவுகிறது.
ஒன்றுக்கொன்று துணையாகவே இருத்தல் நலம்.
10. If given a chance, what a normal person will select between life and wife and why?
பதில்: மனைவியே வாழ்க்கை என இருக்கும் டோண்டு ராகவனிடம் இக்கேள்விக்கான பதில் இல்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
39 comments:
// 3. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தீட்சதர்கள் ஆதிக்கத்தை அரசின் கட்டுக்குள் கொண்டு வந்ததது சரியா? அரசு இந்து மதத்தில் மட்டும் இப்படி செய்வது மாறும் நாளும் வருமா?தீட்சதர்கள் பார்ப்பனர் என்பதால் கழக அரசின் இந்த தலயீட்டுக்கும் கரணமா? உயர்/உச்ச நீதி மன்றம் ஒருவேளை அரசின் செயல்களுக்கு மாறிய தீர்ப்பை வழங்கினால்?
பதில்: வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. இப்போதுன் கருத்து சொல்வது உசிதம் அல்ல. மற்றப்படி இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து குளறுபடிகள் செய்வது நமது அரசியல் நிர்ணயச்சட்டத்திற்கே புறம்பானது. ஒன்று எல்லா மதங்களையும் கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் பேசாமல் இரு என்பதுதான் சரியான நிலை என நான் கருதுகிறேன். //
டோண்டு சாரிடம் இருந்து நான் இதில் வேறுபடுகிறேன். அமிர்தசரஸ் குருத்வாராவானாலும் சரி, ஜும்மா மசூதி ஆனாலும் சரி, சிதம்பரம் கோவிலானாலும் சரி - அரசுக்கே மேலாண்மை இருக்க வேண்டும். இல்லை என்றால் நாளை மீண்டும் அமிர்தசரஸ் குருத்வாராவில் துப்பாக்கிகள் பரவலாம். மீனாட்சி கோவிலுக்கு இன்னொரு வைத்யநாத ஐயர் தேவைப்படலாம். வைக்கத்தில் இன்னொரு பெரியார் அவசியம் ஆகலாம். இவை எல்லாம் வழிபாடு இடங்களில் தலையீடு இல்லை. கோவில்களும், மசூதிகளும், சர்ச்களும், குருத்வாராக்களும் மக்கள் பணத்தில் கட்டப்பட்டவையே. அவை எல்லாருக்கும் சொந்தம் - ஜும்மா மசூதியில் ஹிந்துவான எனக்கும் உரிமை இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. இந்த கோட்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இன்னும் நாளாகலாம். மைனரிட்டி ஓட்டை கண்டு அரசும் கட்சிகளும் பம்மலாம். கோட்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் நாம் அனைவரும் கேட்க வேண்டும் - அவனை திருந்த சொல்லு, அப்புறம் நான் திருந்தறேன் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே ரசிக்கலாம். அவனும் அதையேதானே சொல்லுவான்? யாராவது ஒருவர் ஆரம்பிக்கத்தான் வேண்டும்.
ஆனால் கோர்ட் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை மதித்து நடக்க வேண்டியதுதான். கோர்ட் தீர்ப்பை மதிக்காவிட்டால் (கர்நாடகா போல) அப்புறம் வேறுபாடுகளை தவிர்க்க ஒரே வழி வன்முறை என்றாகிவிடும். சட்டம் தவறு என்றால் சட்டத்தை மாற்றுவோம்.
இதை பற்றி நான் எழுதிய சில பதிவுகள் இங்கே.
http://koottanchoru.wordpress.com/2009/07/23/கோவில்கள்-அரசு-ஆத்திகர்/
http://koottanchoru.wordpress.com/2009/08/03/சிதம்பரம்-கோவில்-ii/
@ஆர்.வி.
//அமிர்தசரஸ் குருத்வாராவானாலும் சரி, ஜும்மா மசூதி ஆனாலும் சரி, சிதம்பரம் கோவிலானாலும் சரி - அரசுக்கே மேலாண்மை இருக்க வேண்டும். இல்லை என்றால் நாளை மீண்டும் அமிர்தசரஸ் குருத்வாராவில் துப்பாக்கிகள் பரவலாம். மீனாட்சி கோவிலுக்கு இன்னொரு வைத்யநாத ஐயர் தேவைப்படலாம். வைக்கத்தில் இன்னொரு பெரியார் அவசியம் ஆகலாம். இவை எல்லாம் வழிபாடு இடங்களில் தலையீடு இல்லை. கோவில்களும், மசூதிகளும், சர்ச்களும், குருத்வாராக்களும் மக்கள் பணத்தில் கட்டப்பட்டவையே. அவை எல்லாருக்கும் சொந்தம் - ஜும்மா மசூதியில் ஹிந்துவான எனக்கும் உரிமை இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. இந்த கோட்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இன்னும் நாளாகலாம். மைனரிட்டி ஓட்டை கண்டு அரசும் கட்சிகளும் பம்மலாம். கோட்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் நாம் அனைவரும் கேட்க வேண்டும் - அவனை திருந்த சொல்லு, அப்புறம் நான் திருந்தறேன் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே ரசிக்கலாம். அவனும் அதையேதானே சொல்லுவான்? யாராவது ஒருவர் ஆரம்பிக்கத்தான் வேண்டும்.//
மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது ஆனால் ஒருவன் மட்டும் கட்டுப்பட வேண்டும், மற்றவர்கள் தம்மிஷ்டப்படி இருக்கலாம் என்க் கூறுவது மட்டும் எப்படி சரியாகும்?
இப்போது நடப்பது பாரபட்சமான நடவடிக்கை. கொண்டு போகும் முறையில் கோர்ட்டுக்கு கொண்டு போனால் அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் அடிபடும் வாய்ப்பு உண்டு. இம்மாதிரி கலகம் செய்தால்தான் நியாயம் பிறக்கும்.
அதென்ன எங்காவது யாராவது ஒருவன் ஆரம்பிக்க வேண்டும் என சொல்வது? இங்கு ஆரம்பித்து 80 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. மற்ற இடங்களில் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இல்லையே?
மசூதிகளில் தமிழில் தொழுகை நடத்த வேண்டும் ஒரு சமயம் சில முசல்மான்கள் கோரிக்கை விடுக்க, சம்பந்தப்பட்ட ஜமாத் அவர்களை விலக்கி வைத்து தண்டித்தது.
இன்னொரு முக்கிய விஷயம். இந்து அறநிலைத்துறை வந்தது பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில். அப்போதே அவர்கள் சர்ச்சுகளையும் மசூதிகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? யோசியுங்கள்.
சர்ச்சைகளில் ஒரு சாரார் மட்டும் தியரிட்டிகலாக பேசி தம் கட்சியை விட்டுக் கொடுத்தால் எதிராளியே அவர்களை மதிக்க மாட்டான்.
இப்படித்தான் போலி டோண்டு விஷயத்தில் எல்லோரும் எனக்கு மட்டும் அட்வைஸ் செய்தார்கள். அவனை விட்டு விட்டார்கள். அவன் அப்படித்தான், நாம் ரீசனபிளாக இருப்போமே என்று நியாயஸ்தர்களாக பேசினர், தாங்கள் பாதிக்கப்படாதவரை. ஒரு கட்டத்தில் அவன் எல்லோரையும் திட்ட ஆரம்பித்தப் பிறகுதான் அவர்கள் விழித்து கொண்டார்கள். பிறகு நடந்தது எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் இப்போது கூட அவனது அல்லக்கைகள் என்னமோ நானே அவனை ஊக்குவித்ததாகக் கூறி வருகின்றனர். அவர்களை நான் லட்சியம் செய்வது இல்லை என்பது வேறு விஷயம்.
ஆக, இம்மாதிரி ஒரு தலை நியாயவாதங்கள் ஆபத்தானவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dmk decided to face all elections with thirumangalam formula (rich nv food, money,freebies), what will happen to other parties (less money) in tamilnadu?
பதில்: நான் ஒரு சாத்தியக்கூறை சொல்கிறேன், பாருங்கள். 2010 வாக்கில் காங்கிரஸ் திமுக பிரிவு ஏற்பட்டு தமிழக மந்திரிசபை கவிழ்கிறது. கருணாநிதியை கேர்டேக்கர் முதன் மந்திரியாக வைக்காது கவர்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள். அப்போது தேர்தல் நடந்தால் திருமங்கல பஜனை நடத்தவியலாது. அப்போது ஏதேனும் நல்லது நடக்கலாம்.//
ragul & actor vijay met in new delhi to start the count down of 2010
//கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?//
புத்தமதத்தின் அடிப்படையில் கடவுள் என்று யாரும் கிடையாது! ஞானம் அடைபவர்கள் யாவரும் கடவுள் என புத்தரே சொல்லியிருக்கிறார்!
நம் மக்கள் பேண்டஷி விரும்பிகள்,
சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி என்றால் வாயில் ஈ போவது தெரியாமல் பார்ப்பார்கள்!
இப்போது பரவலாக இருக்கும் மதங்களில் கடவுளே பிரதானம், ஆங்காங்கே தூதர்கள் உண்டு, அவர்களும் சித்து வேலைகள் செய்ததாக செவிவழி கதைகள் தற்போது காகிதவழி கதைகளாக இருக்கின்றன!
தற்போது தான் பெளத்தமதத்தை தோற்றுவித்த புத்தரையே கடவுளாக்கியிறுக்கிறார்கள்!
கொஞ்ச நாளில் தம்மபதம் யார் கையிலாவது சிக்கி பல மேஜிக் வேலைகள் இணைத்து அதுவும் ஒரு ஆட்கொல்லி மதமாக(ஏற்கனவே ஆயிபோச்சு) மாறலாம்!
//தெய்வத்துக்கு முன்னர் படையல் இட்டு, அதனை தெய்வத்திற்கு அறிவிப்புச்செய்தல் அந்த சடங்காகும். //
அறிவிப்பு மட்டும் தான்!
சாப்பிடுவது எல்லாம் நாம் தானே!
அப்போ அது ”பொய்வேத்தியம்” தானே
//தாவணி, மாராப்பு இதெல்லாம் (தமிழ் நாகரிகத்தில்) பழைய காலத்தில் கிடையாது என்கிறார் என் நண்பர், உண்மையா?//
அந்த பெயர்களில் இல்லாமல் இருக்கலாம்!
ஆனால் சீலை பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது! கச்சை இருந்திருக்கிறது!
தாவணி=அரைச்சீலை
மாராப்பு=முந்தானை!
//பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)//
பலருடன் உறவு வைத்து கொள்வது எயிட்ஸ் பரவ மட்டுமே காரணம், உருவாக காரணமல்ல!
எயிட்ஸ் என்றால்(Acquired immune deficiency syndrome) நம் உடலில் நோய் எதிப்பு சக்தி சுத்தமாக நீர்த்து போய் விட்டது என்று அர்த்தம், அதற்கு காரணம் தற்கால உணவுசுற்றும், சுற்றுபுற சூழலுமாக இருக்கலாம்!
பண்டைய காலத்தில் வெட்டை என்னும் பால்வினை நோய்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது, தற்போது அதை V.D என்று அழைக்கிறார்கள்!
//அறிவிப்பு மட்டும் தான்!
சாப்பிடுவது எல்லாம் நாம் தானே!
அப்போ அது ”பொய்வேத்தியம்” தானே//
நாம் உண்பதற்கு முன்னால் கடவுளுக்கு காட்டி விட்ட் அவரது ஆசியுடன் உண்ணுகிறோம். கிறித்துவர்களில் உண்ணும் முன்னால் கிரேஸ் சொல்வதை இம்மாதிரியான கோட்பாடுதான். இந்த நன்றியறிவித்தல் எல்லா இடங்களிலும் உண்டூ. நீங்கள் கூட தண்ணி பார்ட்டிக்கு செல்லும்போது சில சமயம் எதிராளி குடிக்காமல் இருப்பவராக இருந்தால், “To your health" எனக்கூறிவிட்டு குடிப்பதும் அம்மாதிரியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Will the central government put an end to the on line trading of rice and other food grains to save the poor people? //
வார பத்திரிக்கைகளில் வெள்ளையன் போன்ற சொகுசு வியாபாரிகள் அறிக்கை விடுவதை பார்த்து சொல்லி கொண்டிருக்கிறார் இவர், என் மேல் என்ன கோபம் இருக்கப்போகிறது!
ஆன் லைன் வர்த்தகத்திலிருந்து அடிப்படை உணவு பொருள்களை எடுத்து சில வருடங்களாக்கிறது!
மற்ற நாடுகளிலும் ஏற்றுகொள்ளப்பட்ட பொருள்கள் மட்டுமே உள்ளன!
உணவு பொருள் விலையேற வேறு காரணங்கள் எதுவுமே உங்களுக்கு தெரியாதா!? இல்லை நடிக்கிறீர்களா!?
//வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அவனே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறவன்.//
ஏன், உங்களுக்கு ஆன மாதிரியே அவுங்களும் முட்டி மோதிக்க ஆசைப்பட கூடாதா!?
நீங்க ஏன் தனியா சொல்லனும்!
//டோண்டுவைப் பற்றி போலிடோண்டுவின் கருத்து?
பதில்: @#$%^ ***** <>/[]{} @@@@@@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!//
இதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் பலருண்டு! ஆனால் பண்ணமாட்டார்கள்!
//டோண்டுவைப் பற்றி வால்பையன் கருத்து?
பதில்: ஒவ்வொரு முறையும் பதில்கள் பதிவு வந்ததும் எனது ஒவ்வொரு பதிலுக்கும் மாற்று பதிலை அளித்து கலகல்ப்பூட்டும் அவரையே இக்கேள்விக்கான பதிலை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.//
ஒரு மனிதனின் கருத்தும், கொள்கையும் அவரது குழு மனிதத்தை அடையாளப்படுத்தாது!
டோண்டு எனக்கு அப்பா மாதிரி!
இந்த வார பதில்கள் அருமை.
கேள்விகள் அதிகமாக வரும் போது வாரம் இருமுறையாக கேள்வி பதில்கள் பதிவு வந்தால் நன்றாக இருக்கும்.
கேள்வி கேட்பவர் செப்டம்பர் 10 தேதி வரை காத்திருப்பது சரியாக இருக்குமா?
இதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் பலருண்டு! ஆனால் பண்ணமாட்டார்கள்!
:)))))))
//ஏன், உங்களுக்கு ஆன மாதிரியே அவுங்களும் முட்டி மோதிக்க ஆசைப்பட கூடாதா!?//
ஏனெனில் அவனுக்கு புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இட ஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதிகள் ஒழியாது, ஒழிய விட மாட்டார்கள். கூடவே தேர்தல்களும் வருகின்றன. சாதி போவதாவது? நோ சான்ஸ்.//
கூடவே தான் இன்ன சாதி என்று சொல்லி கொள்பவர்களும் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நல்லாயிருக்கும்
!
//டோண்டு எனக்கு அப்பா மாதிரி!//
நல்லது. எனது பேத்தியை நல்லபடியாக பார்த்து வளர்க்க உனக்கு என் ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து குளறுபடிகள் செய்வது நமது அரசியல் நிர்ணயச்சட்டத்திற்கே புறம்பானது. ஒன்று எல்லா மதங்களையும் கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் பேசாமல் இரு//
மற்ற மதங்களிலும் இதே மாதிரி சாதி பிரிவினைகள் உண்டா!?
அதாவது பிராமனம் நெத்தியிலிருந்து வந்தான்!
சூத்திரன் சுத்தியிலிருந்து வந்தான்னு!
அப்படி நிறுபிச்சா தலையிடுவாங்களோ என்னவோ!
மேலும் சிதம்பரம் பிரச்சனையில் மக்கள் குற்றசாட்டின் பேரில் உச்சநீதி மன்றம் தலையிட்டுள்ளது!
ஒரு இந்திய பிரச்சனையின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது நீதியின் கடமை!
மற்ற மதத்தில் இருக்கும் ஒற்றுமை உங்க இந்து மதத்தில் இல்லைன்னு தெரியுது! ஏன்னு யோசிங்க!
// Differnce between phsycologists and pshychiartists?//
ஒருவர் மருந்துகள் மூலம் குணப்படுத்துபவர், ஒருவர் பேசியே கவுன்சிலிங் மூலம் குணப்படுத்துபவர்!
என்று நினைக்கிறேன்!
மேலதிக தகவலுக்கு டாக்டர் தான் துணை!
//The easier steps for becoming mentally rich?//
திலைதூரம் நடக்கும் போதோ, தூக்கம் வராத இரவுகளிலோ பத்து கோடி ருபாய் கிடைத்தால் என்னன்ன தொழில் செய்து எப்படி பெருக்கலாம் என்று யோசிப்பேன்!
மெண்டலி ரிச் ஆகிட்டேனா!
இல்ல மெண்டலாவே ஆயிடேனா!?
@வால்பையன்
எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மசூதிகளில் தமிழில் த்ழுகை நடத்த வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுக்க சம்பந்தப்பட்ட ஜமாத் அவர்களை தள்ளி வைத்தது. அஹமதியா பிரிவைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பெண்மணி இறந்ததும் அவரை அசுலாமிய இடுகாட்டில் புதைத்ததை ஆட்சேபித்து சம்பந்தப்பட்ட காஜி பிணத்தைத் தோண்டி எடுத்து கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கிறித்துவர்களில் தலித்து கிறித்துவர்களை மற்ற உயர்சாதி கிறித்துவர்களை ஒடுக்குவதும் நடக்கத்தானே செய்கிறது.
இந்து மதத்தில் ஏன் தலையீடு என்றால் இந்துக்களுக்குள் ஒற்றுமையில்லை என நீங்கள் குறிப்பிடுவது யோசிக்க வேண்டிய விஷயம்தான். யாராவது இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// The difference between Love and Infatuation?//
இனகவர்ச்சி என்ற சொல் இப்போ வேலையில்லாம போச்சு!
ஆணும்,ஆணும் கல்யாணம் பண்ணுவது எந்த வகை இனகவர்ச்சி!
ஆனால் அதிலும் எதோ ஒரு செக்ஸ் தேவை இருக்குது இல்லையா!?
//மனைவியே வாழ்க்கை என இருக்கும் டோண்டு ராகவனிடம் இக்கேள்விக்கான பதில் இல்லை.//
முன்னாடி “வீட்டில் மட்டும்” என்ற சொல் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்!
//நீங்கள் கூட தண்ணி பார்ட்டிக்கு செல்லும்போது சில சமயம் எதிராளி குடிக்காமல் இருப்பவராக இருந்தால், “To your health" எனக்கூறிவிட்டு குடிப்பதும் அம்மாதிரியே.//
அப்படியெல்லாம் வேற சொல்லிகுவாங்களா!?
நாங்க சியர்ஸ் சொல்ற மாதிரி அளவு சரியா இருக்கான்னு மட்டும் செக் பண்ணிக்குவோம்!
//அவரது குழு மனிதத்தை//
”முழு” என்று சொல்லவந்தேன்!
//முன்னாடி “வீட்டில் மட்டும்” என்ற சொல் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்!//
ஆகா, முரளி மனோகருக்கு ஜோடியா நீங்களும் போட்டுக்ம் கொடுக்கிற வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எல்லா மதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மசூதிகளில் தமிழில் த்ழுகை நடத்த வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுக்க சம்பந்தப்பட்ட ஜமாத் அவர்களை தள்ளி வைத்தது. அஹமதியா பிரிவைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பெண்மணி இறந்ததும் அவரை அசுலாமிய இடுகாட்டில் புதைத்ததை ஆட்சேபித்து சம்பந்தப்பட்ட காஜி பிணத்தைத் தோண்டி எடுத்து கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கிறித்துவர்களில் தலித்து கிறித்துவர்களை மற்ற உயர்சாதி கிறித்துவர்களை ஒடுக்குவதும் நடக்கத்தானே செய்கிறது.//
நானும் இவ்விசயத்தை கேள்விபட்டேன்!
ஒரு இஸ்லாமிரின் இடுகாட்டில் மற்ற மத நம்ப்பிக்கையாளர்களை புதத்தைதால் என்ன ஆகுமாம்!
சாமி கண்ண குத்திருமா!?
அவர்களது நம்பிக்கை படி எல்லாவற்றையும் கடவுள் தான் படைத்தார் என்றால் அந்த கடவுள் படைத்த மற்றொரு உயிரை நிராகரிப்பது கடவுளை நிராகரிப்பதற்கு சமம் தானே!
மறுமையில் சொர்க்கம் என்று நம்பும் இவர்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று தெரியாது போலும்!
”உன் தியாகத்தால் கிடைக்கும் மனநிம்மதியே சொர்க்கம்”
//ஒரு இஸ்லாமிரின் இடுகாட்டில் மற்ற மத நம்பிக்கையாளர்களை புதைத்தால் என்ன ஆகுமாம்!//
மற்ற மதம் கூட இல்லை இங்கே. அஹமதியாக்களும் இசுலாமியர்தான். ஆனால் இல்லை என இசுலாமியரின் ஆளும் வர்க்கம் சொல்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அஹமதியாக்களும் இசுலாமியர்தான். ஆனால் இல்லை என இசுலாமியரின் ஆளும் வர்க்கம் சொல்கிறது.//
வினவு தளத்தில் இதை பற்றி படித்தேன்!
அஹமதியர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடான நபிகள் தான் கடைசி தூதர் என்பதை ஒப்பு கொள்ள மறுக்கிறார்களாம்.
இஸ்லாமியர்களின் கடவுள் அல்லாவா, நபிகளா!?
அடிப்படையில் யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய மத புத்தகங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை என அனைத்து மத ஆராய்ச்சியாளர்களும் சொல்லிவிட்டார்கள்!
இஸ்லாத்தில் உள்ள சுன்னத் பைபிளில் விருத்த சேதம் என்று உள்ளது! பைபிளில் உள்ளது போலவே ஆறாம் நாள் மனிதனை படைத்தார் கடவுள்! இப்படி பல ஒற்றுமைகள்!
நபிகள் காலத்துக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட இஸ்லாம் புனித நூலில் நபிகளே கடைசி தூதர் என குறிப்பிடக்காரணம் இஸ்லாத்தில் இனி புது கோட்பாடுகள் நுழைய கூடாது என்பதற்காக இருக்கலாம்!
வரலாற்று ஆசிரியர்கள் நபிகளை ஒரு குழு தலைவராகவே சித்தரிக்கின்றனர்! சிதறி கிடந்த குழுக்களை இஸ்லாத் என்ற மதத்தின் கீழ்(அதுவும் போர் புரிந்து தான்) ஒருங்கிணைத்தது வேண்டுமானால் நபிகளின் சாதனையாக இருக்கலாம்!
மறுஜென்மம் உண்டு, கடவுளுக்கு உருவம் உண்டு, பல கடவுள்களுண்டு, கடவுளுக்கு எதிராக சாத்தான் என்ற ஒன்று உண்டு என்று பல நம்பிக்கைகள். என்ன செய்ய!
எனக்கு தான் ஒரு புண்ணாக்கும் கிடையாது!
//Arun Kumar said...
இந்த வார பதில்கள் அருமை.
கேள்விகள் அதிகமாக வரும் போது வாரம் இருமுறையாக கேள்வி பதில்கள் பதிவு வந்தால் நன்றாக இருக்கும்.
கேள்வி கேட்பவர் செப்டம்பர் 10 தேதி வரை காத்திருப்பது சரியாக இருக்குமா?//
very good idea.
one more question posting on monday is welcome
டோண்டு சார் சொன்னது:
/கல்கியின் எழுத்துக்கள் ஆபாசக் கலப்பின்றி எல்லா தரப்பினரையும் படிக்க வைத்தன. சாண்டில்யனின் எழுத்துக்கள் சிருங்கார ரசத்தில் தோய்ந்தவை. ஆனால் கல்கி அளவுக்கு சரித்திர கதைக்கான உழைப்பு இல்லை./
கல்கி தொட்ட சரித்திரம், அல்லது உழைப்பு பொன்னியின் செல்வனுக்கே.தன்னுடைய மண் என்ற ஒரு பெருமிதம் மறைமுகமாக! சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவிலேயே, தொடங்கி விரிந்தது அதனால் தனியாக ஒன்றுமில்லை.
அதற்காக,சாண்டில்யன் தன்னுடைய கதைக் களங்களைக் கடுமையான உழைப்பு, முயற்சி எதுவுமே இல்லாமல் தேர்ந்தேடுத்ததாகச் சொல்வது தவறல்லவா! எனக்குத் தெரிந்து சாண்டில்யனுடைய கதை ஒவ்வொன்றும், மிக நீண்ட சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. சிருங்கார ரசம் தூக்கலாக இருந்ததென்னவோ உண்மை. அதையும் அவர், உள்ளூர் காளிதாசன்களிடமும், தமிழ் இலக்கியங்களிலும் இருந்து தான் எடுத்துக் கொண்டார் தவிர, கல்கியைப் பற்றி நீங்கள் முன்பு எழுதினதைப் போல, ஆங்கில இலக்கியங்களில் இருந்து இரவல் வாங்கவில்லை.
தவிர, அவருக்குத் தளம் அமைத்துக் கொடுத்த குமுதம்--அந்தநாட்களில் சரோஜாதேவி புத்தகங்களில் வருவதைப் போல, நிஜமாகவே, ரவிக்கை முட்டிக் கிழங்கு என்ற பெயரில் கதை வெளியிட்ட பத்திரிக்கை, அதில் இந்த அளவுகூட இல்லாமல் இருந்தால் அடுத்த வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கல்கி அந்தப் பிரச்சினையைச் சந்திக்காதவர் என்றபோது ஒப்பிடுவதுமே கூடத் தவறாகத் தான் இருக்கும்.
சரித்திரம் என்றாலே போர், பேஜார் என்று சொல்லும் வால்பையன்களைக் கூடக் கட்டிப்போட்டு, சரித்திர பாடத்தை நடத்திய திறமை சான்டில்யனைத் தவிர வேறு எவருக்குமே தமிழில் இருந்ததில்லை.
ஆர்வி சொன்னது:
/அமிர்தசரஸ் குருத்வாராவானாலும் சரி, ஜும்மா மசூதி ஆனாலும் சரி, சிதம்பரம் கோவிலானாலும் சரி - அரசுக்கே மேலாண்மை இருக்க வேண்டும்/
நூற்றுக்கு நூறு சரி.
முதலில் ஹிந்து அறநிலையத்துறை என்று வந்த மாதிரி, மற்ற மதங்களுக்கும் அறநிலையத்துறை ஏற்படுத்தும் ஆண்மை, குறைந்தபட்சம் இப்படி ஒரு கருத்தையாவது தைரியமாக பேசக் கூடிய நேர்மை, இங்கு எந்த அரசியல்வாதி, கட்சிக்காவது இருக்கிறதா,என்று விசாரித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் மேலாண்மையைப் பற்றிப் பேசலாம்!
டோண்டு சார், உங்கள் அணுகுமுறை தவறாக இருக்கிறது. அவனை திருந்த சொல்லு, அப்புறம் நான் திருந்தறேன் என்பதை விட, நான் திருந்திட்டேன், நீயும் திருந்து என்பதுதான் சரி. உங்கள் எழுதில்லோ உக்கும் நான் மட்டும் எதுக்கு மாறணும் என்ற உணர்ச்சிதான் தெரிகிறது. அதற்கு பதிலாக நீ மாறணும் என்ற உணர்ச்சி தெரிவது மேலும் பொருத்தமானதாக இருக்கும்.
@ஆர்வி
கட்டுப்பாடுகள் எல்லாம் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் என்றிருப்பது எந்த வகையில் நியாயம். அதுவும் இவற்றை கொண்டு வந்தது வெள்ளை அரசு. கிறித்துவர்களை அது தொடாது, முசல்மான்கள் அதன் செல்லப் பிள்ளைகள். இது சரித்திர உண்மை.
இப்போது நடப்பதோ ஓட்டுப் பொறுக்கி அரசியல். இந்த விஷ சூழ்நிலையில் இந்துக்கள் மட்டும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
கேட்பவர்கள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் போய் ஏன் இந்த உபதேசம்? ”திருந்த வேண்டியது” இந்துக்கள் அல்ல.
அதுவும் அறநிலையத் துறை என்ன செய்கிறதென்றால் கோவில் உண்டியல் வருமானங்களை வேறு செலவினங்களுக்கு அனுப்புகிறது, ஏனெனில் கடவுள் பக்திதான் கிடையாதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அறநிலையத் துறை என்ன செய்கிறதென்றால் கோவில் உண்டியல் வருமானங்களை வேறு செலவினங்களுக்கு அனுப்புகிறது, ஏனெனில் கடவுள் பக்திதான் கிடையாதே.//
கிருஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் உண்டியல் வைத்தால் அங்கும் அறநிலைத்துறை நுழையும்!
என்ன நான் சொல்றது!
// கிறித்துவர்களை அது தொடாது, முசல்மான்கள் அதன் செல்லப் பிள்ளைகள். இது சரித்திர உண்மை.
இப்போது நடப்பதோ ஓட்டுப் பொறுக்கி அரசியல்.//
டோண்டு சார், நானும் மறுக்கவில்லை. இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் உங்களிடம் வேறுபடுகிறேன். சர்ச்களும் மசூதிகளும், குருத்வாராக்களும் அரசின் மேலாண்மையை ஏற்க வேண்டும், அரசு மைனாரிட்டி ஓட்டை கண்டு பம்மக்கூடாது என்று போராடுவதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அஸ்கு புஸ்கு கோவில்களையும் கட்டுப்படுத்தக் கூடாது என்று போராடுவதுதான் சரி என்று சொல்கிறீர்கள். இதையே நீட்டித்தால் - முஸ்லிம்களுக்கு வேறு சிவில் சட்டங்கள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன, ஹிந்துக்களுக்கு தனி சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதா? சாரதா சட்டம் எதிர்ப்பு, விதவைகள் மறுமணம், தலித்களுக்கு ஆலய பிரவேசம் எதிர்ப்பு, சதி தடுப்பு, வரதட்சினை கேட்டல், ஜாதி கொடுமைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஹிந்து மதம், பழக்க வழக்கத்தில் இடம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு பொது சிவில் சட்டம் வரும் வரைக்கும் இது எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டுமா?
வணக்கம் டோண்டு ஸார்!
என்னுடைய கேள்விக்கு பதிலும் இல்லை அதைப்பற்றிய தகவலும் இல்லை. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை.
விளக்கவும் please
@இளைய கரிகாலன்
நீங்கள் உங்கள் கேள்வியை எனது 20.08.2009 பதில்கள் பதிவில் கேட்டிருந்தீர்கள். அதற்கு அங்கேயே பதிலளித்து விட்டேனே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
nice!
Post a Comment