4/22/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.04.2011

சோ, குஷ்பு, ராஜ்தீப் சர்தேசாய் செவ்வி
தமிழகத் தேர்த்தலில் பணம் விளையாடியது பற்றி சோ மற்றும் குஷ்புவுடன் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சர்தேசாயின் புதல்வரும் பிரபல பத்திரிகையாளருமான ராஜ்தீப் சர்தேசாய் பேசுகிறார்.

முதலில் வீடியோக்களைப் பாருங்கள்.

வீடியோ 1:


வீடியோ-2: ஆ, அந்தோ! என்ன ஏமாற்றம்! மொத்தம் மூன்று வீடியோக்கள் என்றார்கள், ஆனால் மீதி இரண்டுமே முதல் வீடியோவாகத்தான் உள்ளன. அதாங்க இது என்கிறார்களா? (நன்றி செந்தில்)

கடன் கொடுத்தல் பற்றிய மேலும் சில எண்ணங்கள்
நர்சிம் பற்றி பதிவர் வெண்பூ எழுதியிருந்தது எனக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. தான் ஃபோர்ட் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவெல்லாம் பலரிடம் தேவையற்றப் பொய்களை கூறி வந்திருக்கிறார். பலருக்கு கடன்கள் தந்திருக்கிறார் (பைத்தியக்காரன் மற்றும் பலர்), வெண்பூ போன்றவர்களிடம் பணமும் பெற்றிருக்கிறார். பெற்ற பணத்தைத் திருப்புவதில் சுணக்கமும் காட்டியுள்ளார். கடைசியில் கடனைத் திருப்பித் தந்துவிட்டார் என வெண்பூ எழுதியுள்ளார். இருப்பினும் நர்சிம்மின் இமேஜ் விழுந்தது விழுந்ததுதான்.

ஒரு பதிவுக்லக நண்பருக்கு போன் போட்டு பின்புலன் பற்றி கேட்டதில், அவரோ வெண்பூ எழுதியது பனிப்பாறையின் முனை மட்டுமே என பொருள்படக் கூறினார். இது பற்றி நான் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் ராம்ஜி யாஹூவிடமிருந்து வந்த கேள்வி என்னை இது பற்றி குறிப்பிட வைத்து விட்டது.

ராம்ஜி_யாஹூ said...
பதிவர் நரசிம் அவர்களின் பண, நட்பு விவகாரங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன. புதிய பதிவர்கள், பஸ்சர்கள், த்விட்டர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

கடன் வாங்குவது இருவகைப்படும். ஒன்று தினசரி வாழ்க்கைக்கான செலவுகளுக்கே தன்னால் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவது. என் தந்தை கூறுவார், “யாராவது ரேஷன் வாங்க வேண்டும் என கடன் கேட்டால் கடன் தருவதும் தராததும் உன் விருப்பம். ஆனால் அது முக்கால்வாசி நேரங்களில் திரும்ப வராது என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது நலம்”. சத்தியமான வார்த்தைகள்.

இன்னொரு வகை, தான் மற்றவருக்கு கடன் தருவதற்காக வேறு பலரிடம் கடன் வாங்குவது. அவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு காலணா கடன் கூட தரலாகாது. வேறு சிலர் உதார் விடுபவர்கள், தேவையற்ற பொய்களைக் கூறி தமது இமேஜை உயர்த்திக் கொள்ள முனைபவர்கள். இதில் ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால், உண்மை எப்போதாவது வெளியானால் இருந்த இமேஜும் கோவிந்தா.

ராம்ஜியின் கேள்வியின் அடுத்த பாகம், இணையத்தில் இவ்வாறெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு செயல்படுவது? சூதனமாக இருந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றியத் தகவல்களை கண்டவருக்கும் தர வேண்டாம். இணையத்தில் நண்பர்களாக வருபவர்களிடம் ஒரு எல்லைக்குள் பழகுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்களை அவ்வாறானவர்களிடம் தவிர்ப்பது நல்லது.

உங்கள் தொழில் தொடர்புகளையும் பதிவர் தொடர்புகளையும் வெவேறு தளங்களில் வைத்துக் கொள்வது நலம்.

எதற்குத்தான் கோபப்படுவது என்றில்லையா?
நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் “தெய்வத் திருமகன்” என்னும் திரைப்படத்தில் அவர் மூளை வளர்ச்சி குறைந்தவராக வருகிறாராம். அது சம்பந்தமாக வந்த இச்செய்தியைப் பார்க்கவும்.

சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.


தெரியாமல்தான் கேட்கிறேன், இதைவிட முட்டாள்தனமாக யாராவது எதிர்வினை தரமுடியுமா? இவ்ர்களாகவே ஒருவரை ஒரு பெயரை வைத்துக் கூபிடுவார்களாம். ஆனால் அப்பெயரை வேறு யாருக்கும் வைக்க முடியாதாம். என்ன காப்பிரைட்டா வாங்கியுள்ளனர் அப்பெயருக்கு?

அதே போலத்தான் நீல பத்மநாபன் அவர்களது நாவலான பள்ளிகொண்டபுரம் தலைப்பை ஒரு திரைப்படத்துக்கு வைத்ததை ஆட்சேபித்து அவர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது. இதிலும் எனது கருத்து அதுவேதான். நீல பத்மநாபன் தனது நாவலின் தலைப்பை திரைப்படத் தலைப்பாக அதற்கான அமைப்பில் பதிவு செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாத பட்சத்தில் அவர் கேஸ் ஆட ஒன்றுமே இல்லை என்பதுதான் என் கருத்து. அதே கருத்தை வெளியிட்டு ரவிஸ்ரீனிவாசின் பதிவிலும் நான் மேலே சொன்னதன் சாரமாகத்தான் பின்னூட்டமிட்டேன்.

இது நடந்து கிட்டத்தட்ட மூன்றுகள் ஆகிவிட்ட நிலையில் மேலே என்ன நடந்தது என்று பார்த்தால் இச்செய்தி கிடைக்கிறது. நீல பத்மநாபனின் தரப்பை நீதிபதி ஒத்துக் கொண்டதாக அறிகிறேன். வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை கேஸ் பேப்பர்களில் மேல் விவரங்கள் தந்திருப்பார்களாக இருக்கும். எனக்கென்னவோ திரைப்படத் தயாரிப்பாளர் அப்பீலுக்கு போனால் அவர் பக்கம் தீர்ப்பு வரும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

hayyram said...

//விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.// "சிவ சிவா" என்று நேரடியாக பிராமண ஜாதியை தாக்கியே படம் வருகிறது. அதை கம்பேர் பண்ணினா 'தெய்வத்திருமகன்' எல்லாம் ஜுஜுபி!

ezhil arasu said...

//hayyram said...

//விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.// "சிவ சிவா" என்று நேரடியாக பிராமண ஜாதியை தாக்கியே படம் வருகிறது. அதை கம்பேர் பண்ணினா 'தெய்வத்திருமகன்' எல்லாம் ஜுஜுபி!//


பிராமண ஜாதியை தாக்கி படம் எடுப்பவர்களில் பெரும்பாலோர் யார்?

வஜ்ரா said...

தெய்வத் திருமகன் கதையே iam sam என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான வெக்கங்கெட்ட அச்சு அசல் தமிழ் காப்பி போல் தான் தெரிகிறது. அதை கேட்க எவனுக்கும் வாய் வரல்லையா ?

ரமணா said...

மே 13 அன்று


1.அதிமுக ஆட்சிக்கு வந்தால்?
2.திமுக ஆட்சி தொடர்ந்தால்?
3.ஜெயலலிதாவின் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு பாதகமாய் அமைந்தால்?
4.பாமக,வி.சி ஜெயலலிதா அணி மாறினால் என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
5.கருணாநிதி என்ன அறிக்கை விட்டு சாடுவார்?

அதிமுக,காங் கூட்டணி ஆட்சி வந்தால்

6.கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லி திட்டுவார்கள்?
7.இலங்கைப் பிரச்சனை சூடு தணியுமா?
8.மீனவர் பாதுகாப்பு என்னவாகும்?
9.வைகோ?
10.விஜயகாந்?

ரமணா said...

1.2ஜி வழக்கில் திமுக தலைவரின் துணைவியாரின் பெயரும் இருக்கும் என வந்த செய்திக்கு மாறாய் அறிக்கை இருப்பதன் காரணம்?
2.திமுக,காங் கூட்டணி டமாலா?
3.2ஜி பற்றிய செய்தியை திரும்பத் திரும்ப போடும் ஜெ.சேனல்கள்,செய்தியே போடாத சன் டீவி பற்றி உங்கள் கருத்து?
4.நடுநிலையான பத்திரிக்கை,டீவி சேனல் இனி கானல் நீரா?
5.சவுக்கு எழுதும் பரபரப்பு பிளாக்குகள் படிப்பதுண்டா?-http://www.savukku.net/

dondu(#11168674346665545885) said...

@ரமணா
//1.2ஜி வழக்கில் திமுக தலைவரின் துணைவியாரின் பெயரும் இருக்கும் என வந்த செய்திக்கு மாறாய் அறிக்கை இருப்பதன் காரணம்?//

மன்னிக்கவும் உங்களது இந்த ஐந்து கேள்விகள் 05.05.2011-க்கான டோண்டு பதில்கள் பதிவின் முன்வரைவுக்குச் சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ezhil arasu said...

//ரமணா said...


3.2ஜி பற்றிய செய்தியை திரும்பத் திரும்ப போடும் ஜெ.சேனல்கள்,செய்தியே போடாத சன் டீவி பற்றி உங்கள் கருத்து?//

வாய்பிளந்து நிற்கும் ஓநாய் கூட்டத்தின் நடுவே நிற்கும் அழகிய கள்ளம் கபடமற்ற புள்ளிமானின் நிலைகண்டு தமிழ்ச் சமுதாயமே, கலங்கி நிற்கும் துர்பாக்கிய நிலை.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தருமம் வெல்லும். மேகத்தை கிழித்து வெளிவரும் முழு மதி போல் கழகம் மாசு மருவற்ற தங்கம் என ஜொலிப்பதை ஆதிக்க சக்திகள் பார்க்கத்தான் போகிறது.
1950ல் தொடங்கி கழகத்தின் பால் இது போன்ற தாக்குதல் தொடுத்தோர் பற்றிய வரலாறு நாடறியும்.
வழக்கின் முடிவில் திமுக ஒர் தூய்மையான மக்கள் இயக்கம் என உலகிற்கு தெரியவரும் என சொன்ன தலைவரின் கூற்றே உண்மை.
ஒருவேளை பொய்ப் பிரச்சாரம் காரணமாய் தலைவரின் ஆட்சி தமிழகத்தில் தொடராமல் போனால்,தமிழ்ச் சமுதாயம் 1000 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளப்படும்.ஏழை எளியோரின் நலத்திடங்கள்?
இட ஒதுக்கீட்டு சலுகைகள்?
தமிழ் மொழியின் நிலை?

தமிழினத்தை காக்கவந்த காவல்காரர்
புகழ் பாடிடுவோம்.
துயர் கண்டு துவளாமல் தொண்டாற்றும் தலைவர் புகழ ஓங்குக.
நேர்மைக்கே நேர்மை செய்யும் ஏந்தல் போற்றி போற்றி
சுயநலம் பேணா சுத்தாத்மா வாழ்க வாழ்கவே.
வாழும் வீட்டை கூட மக்களுக்கு தானமாய் அளித்து மகிழ்ந்து வாழும் வள்ளுவன் போற்றி போற்றி
திரைப்படம் மூலம் பெரும் ஊதியத்தை மக்களுக்கே தரும் வள்ளல் வாழ்க
குடிசை எல்லாம் கான்கிரீட் வீடாய் மாற்றும் நவீன மயன் வாழ்க.

செம்மொழி மாநாடுகண்ட செந்தமிழன் வாழ்க இன்னும் ஒரு நூற்றாண்டு

நீவிர் லட்சத்தில் ஒருவரல்ல
கோடியில் ஒருவர்.

சரித்திரம் சொல்லும் உண்மைகள்
ராஜராஜ சோழன் வென்றார்.
குந்தவை நாச்சியார் வென்றார்.

thenkasi said...

//
Blogger ezhil arasu said...தமிழினத்தை காக்கவந்த காவல்காரர்
புகழ் பாடிடுவோம்.
துயர் கண்டு துவளாமல் தொண்டாற்றும் தலைவர் புகழ ஓங்குக.
நேர்மைக்கே நேர்மை செய்யும் ஏந்தல் போற்றி போற்றி
சுயநலம் பேணா சுத்தாத்மா வாழ்க வாழ்கவே.
வாழும் வீட்டை கூட மக்களுக்கு தானமாய் அளித்து மகிழ்ந்து வாழும் வள்ளுவன் போற்றி போற்றி
திரைப்படம் மூலம் பெரும் ஊதியத்தை மக்களுக்கே தரும் வள்ளல் வாழ்க
குடிசை எல்லாம் கான்கிரீட் வீடாய் மாற்றும் நவீன மயன் வாழ்க.

செம்மொழி மாநாடுகண்ட செந்தமிழன் வாழ்க இன்னும் ஒரு நூற்றாண்டு

நீவிர் லட்சத்தில் ஒருவரல்ல
கோடியில் ஒருவர்.

சரித்திரம் சொல்லும் உண்மைகள்
ராஜராஜ சோழன் வென்றார்.
குந்தவை நாச்சியார் வென்றார்.//

கழகத்தின் உடன்பிறப்பு எழில் மன்னன் -> வைகைப்புயல் இரண்டா?.

thenkasi said...

//வாய்பிளந்து நிற்கும் ஓநாய் கூட்டத்தின் நடுவே நிற்கும் அழகிய கள்ளம் கபடமற்ற புள்ளிமானின் நிலைகண்டு தமிழ்ச் சமுதாயமே, கலங்கி நிற்கும் துர்பாக்கிய நிலை.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தருமம் வெல்லும். மேகத்தை கிழித்து வெளிவரும் முழு மதி போல் கழகம் மாசு மருவற்ற தங்கம் என ஜொலிப்பதை ஆதிக்க சக்திகள் பார்க்கத்தான் போகிறது.//

இந்த ஆண்டின் சுப்பர் ஜோக்
துக்ளக் சோவுக்கு தெரிந்தால் ஒரு பைசா மணிஆர்டர் அனுப்புவார்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது