6/02/2011

டோண்டு பதில்கள் - 02.06.2011

Arun Ambie
கேள்வி-1. மு.க.இசுடாலின் அவர்கள் கொளத்தூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே! (நியாயப்படி குளறுபடி செய்த அலுவலர்களுக்கல்லவா நன்றி சொல்லவேண்டும்?)
பதில்: இதென்ன போங்கு, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதையெல்லாம் நேரடியாகவோ வெளிப்படையாகவோ கூற முடியுமா?

கேள்வி-2. மு.க. அழகிரி மதுரையில் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லையே... அவரையே நம்பியிருக்கும் வடிவேலு முதலிய அடிப்பொடிகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?
பதில்: தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதாதா என்ன?

கேள்வி-3. ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளுக்கு நிர்வாகிகள், பங்குதாரர்கள் பொறுப்பல்ல என்ற சமீபத்திய (நெஞ்சுக்கு) நீதி பற்றி உங்கள் கருத்து...
பதில்: பின்னே என்னதான் பொறுப்பாம் அவங்களுக்கு? பொறுப்பில்லாத வாதம் இது.

கேள்வி-4. தோட்டா தரணி செட் போட்ட சட்டசபைக் கட்டிடத்தின் திட்ட மதிப்பைக் கூட்டிச் சொல்லி சில கோடிகள் சுருட்டப்பட்டனவாமே?
பதில்: இம்சை அரசன் புலிகேசியில் உளவுத் தலைவன் வல்லவராயன் படையெடுத்து வருவதாகச் சொல்லும் ரேஞ்சில் பழைய செய்தி எல்லாம் தருவது நியாயமா?

கேள்வி-5. டாடாவுடனான நிலபேரம் தொடர்பாக ஜாபர்சேட் முக்கிய ஆவணக் கோப்புகளை கார்டனில் கொடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிக்கொண்டாராமே? நம்பிக்கை துரோகமில்லையா இது?
பதில்: அவரவர் நலன் அவரவருக்கு. இதில் என்ன துரோகம்?

கேள்வி-6. கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜ் அந்தர் பல்டிவாஜ் ஆனதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா? காங்கிரசு தலைமையின் ஆசியோடு தானே இத்தனை நாளும் ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுவந்தார். திடீரென்று எட்டியூரப்பா மீது பாசம் பொங்க என்ன/யார் காரணமாக இருக்க முடியும்?
பதில்: அரசியல் யதார்த்தம்.


hayyram
கேள்வி-7. சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: எதிர்பார்த்ததுதானே. சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் தரமற்றவை என்பது ஜெயின் ஆக்சனுக்கு வலு சேர்க்கிறதே.

கேள்வி-8. பகவத் கீதை , உபநிஷத்துக்களை எல்லாம் எந்த அளவு படித்திருக்கிறீர்கள்? உங்களால் வாரம் ஒரு முறை இவற்றிலிருந்து ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு பதிவு போட முடியுமா?
பதில்: அவை மகாசமுத்திரங்கள் அல்லவா? இந்தச் சிறியோன் அவற்றின் அருகே கூடச் செல்ல முடியாதே.

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-9. இப்போது நடப்பது திமுகவை ஒழிப்பதற்கான சதி. இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞரான ஜெத்மலானி வாதாடிய பிறகும், கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வில்லை என்றால், இமாலயம் முதல் கன்னியாக்குமரி வரை, திமுகவை ஒழிக்க ஒரு சதி வலை பின்னப்பட்டிருப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

பதில்: ஆக, நாடு தழுவிய தேசபக்திச் செயல்பாடு நடக்கிறது என்பதை வயிற்றெரிச்சலுடன் ஒப்புக் கொள்கிறார் எனக் கொள்ளலாமா?

கேள்வி-10. அமைச்சர் சாவில் மர்மம்; முதல்வர் ஜெ., திடுக்.,- சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
பதில்: அது உண்மையானால் அது வெளியே வருவதுதானே முறை?

கேள்வி-11. சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்
பதில்: ஏனாம்?

12. கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி
பதில்: இதே மகளைத்தானே அவர் பிறந்தபோது இவர் தன் மகளல்ல எனக் கூறினார்?

கேள்வி-13. கடைசி வரிசையில் அமர்ந்த ஸ்டாலின்!
பதில்: அவராகவே அமர்ந்தார அல்லது அமர்த்தி வைக்கப்பட்டாரா?

கேள்வி-14.இனி அடிக்கடி கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்
பதில்: அரசியல் சட்டப்படி முடிவு எடுப்ப்து முதல்வர். அதை அவர் “ஆலோசனையாக” கவர்னரிடம் கூற, பின்னவர் அதற்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். வேறுவகையில் ஆலோசனைக்கே இடமில்லை.

கேள்வி-15. எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் உறுதி
பதில்: Let us keep our fingers crossed.

கேள்வி-16. சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்துவது பற்றி பரிசீலனை
பதில்: எப்போதோ செய்திருக்க வேண்டிய விஷயம்

கேள்வி-17. எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? கருணாநிதி
பதில்: பாட்டில் பொருட்குற்றம் உள்ளது எனக்கூறும் நக்கீரனிடம், இருக்கும் குற்றத்துக்காக குறைத்துக் கொண்டு மீதி வெகுமதியைத் தரலாமே எனப் புலம்பும் தருமி நினைவுக்கு வருகிறார்.

கேள்வி-18. கோர்ட் தீர்ப்பின்படி நான் பதவி விலகியுள்ளேன், ஆனால் சட்டத்தின்படி நான் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை என மாஜி ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷனர் பி.ஜெ.தாமஸ் கூறினார்.
பதில்: மீசையில் மண் ஒட்டவில்லை.


ரமணா
கேள்வி-19. திமுகவின் தலைவர் டெல்லியில் 2 லட்சம் தின வாடகை கொடுத்து பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியதாக வரும் செய்தி பற்றி?
பதில்: பின்னே என்ன? அவர் கரோல்பாக் ராமானுஜம் மெஸ்ஸில் தங்குவார் என நினைத்தீர்களா?

கேள்வி-20. கனிமொழி பெண் என்பதால் அவர் பால் இரக்க உணர்வு இந்தியா முழுவதும் பரவுவதாய் ஆங்கில சேனல் சொல்வது பற்றி?
பதில்: தகுதியற்ற இரக்க உணர்வு.

கேள்வி-21. அழகிரி இனி?
பதில்: மந்திரி எந்திரி என வராத வரைக்கும் க்ஷேமம்.

கேள்வி-22. வடிவேலுவின் சினிமா எதிர் காலம் கோவிந்தாவா?
பதில்: ஒரு சாதாரண கரப்பான் பூச்சியை அடிப்பது விஜயகாந்த்துக்கு அழகில்லை.

கேள்வி-23. மீண்டும் ஹெல்மெட் கண்டிப்பு தள‌ர்வு?
பதில்: சம்பவாமி யுகே யுகே.

கேள்வி-24. சமச்சீர்கல்வி பற்றிய முடிவில் முதல்வரின் பிடிவாதம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
பதில்: ரத்தாகும். வேறு என்ன நடக்கும்?

கேள்வி-25. ஒருவழியாக தள‌பதி ஸ்டாலின் திமுக சட்டசபைத் தலைவர் ஆகி கருணாநிதியின் வாரிசாக ஆவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன போலுள்ளதே இது நிலைக்குமா?
பதில்: நிலைக்கும் என்றுதான் நினைகீறேன். அழகிரி இந்த நிலைமையில் கட்சித் தலைமை ஏற்க விரும்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-26. உண்மையில் நடிகர் ரஜினிக்கு என்னாச்சு? ஏதாவது சதியா?
பதில்: தெரியவில்லையே.

கேள்வி-27. தயாநிதி‍‍ ‍‍சோனியா சந்திப்பு, திமுகவில் ஏதும் புயலடிக்குமா?
பதில்: தயாநிதிக்கு அந்த அளவுக்கு கட்சியினுள்ளே ஆதரவு இல்லை போலிருக்கே.

கேள்வி-28. கருணாநிதியின் அதீத குடும்ப பாசம் கண்டு கலங்கும் திமுக தொண்டர்கள், வைகோ பக்கம் வர வாய்ப்பு உண்டா?
பதில்: இல்லை.


RS
கேள்வி-29: டோண்டு சார், இந்தப் பதிவில்
ஒரு ஜந்து இப்படி குலைத்திருக்கு. //..என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள்.//
இதோட கூத்து படி கருணாநிதி ஒரு பிராமணர். தன் குடும்பம் பிழைக்க வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தியவர். இந்த ஜந்து அப்ப குலைக்க வக்கில்லாம இப்ப வந்து குலைக்கிறது.
இத மாதிரி ஜந்து இருக்கும் வரை நான் பிராமணனாக இருக்க பெருமை படுகிறேன்.
இதை அந்த ஜந்துவின் பதிவில் கருத்துரைத்துள்ளேன் வெளியிடுமா என்று பார்ப்போம்.
இதற்கு தங்கள் பதில் கிடைக்குமா.

பதில்: எது என்னவானாலும் கருணாநிதி பிராமணர் அல்ல. அவ்வாறு நீங்கள் வாதத்துக்காக கூறுவதையும் நான் ஆட்சேபிக்கிறேன். வன்கொடுமை புகழ் தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்கள், பிள்ளைமார் ஆகியவர்கள் செய்யும் வன்கொடுமைகளையே பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் கும்பலுக்கு நீங்கள் கூறுவது துணைபோகிறது என்பதால்தான் இந்த ஆட்சேபணை என் தரப்பிலிருந்து.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.கட்டாயப்படுத்தி ரத்தப் பரிசோதனை செய்யக்கூடாது: என்.டி. திவாரி
2.இலவச மகப்பேறு சிகிச்சைத் திட்டம் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்
3.எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை: அமைச்சர் தயாநிதி மாறன்
4.வீட்டுச் செலவுக்கு ரூ. 1 லட்சம் எடுக்க ராசாவுக்கு அனுமதி
5.லோக்பால் மசோதா: பொது விவாதத்துக்குத் தயாரா? பிரணாபுக்கு சாந்தி பூஷண் கடிதம்

Unknown said...

டோண்டு சார்!கனிமொழியை ஒரு போதும் தனது மகளல்ல என்று கருணாநிதி கூறியதில்லை.கனிமொழி எனது மகள்.தர்மாம்பாள் கனிமொழியின் தாயார் என்றுதான் கூறினார்.இது சட்டசபைக்குறிப்பில் கண்ண்டிப்பாக இருக்கணும்.

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.பிறந்த நாள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்: கருணாநிதி
7.இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி
8.பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்: தவிர்க்க அரசு தீவிர முயற்சி
9.ஜி வழக்கு: தயாளுவுக்கு எதிரான மனு தள்ளுபடி
10. பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா

dondu(#11168674346665545885) said...

@தமிழன்
எம்.கே.டி. சுப்பிரமணியம் என்பவர் கலைஞரின் நண்பர். அவர் தான் நடத்திவந்த ஜவகரிசம் என்னும் பத்திரிகையில் ராஜாத்தி அம்மாளின் பெண்குழந்தைக்கு ஆஸ்பத்திரி பதிவேடுகளில் குழந்தையின் தந்தை மு. கருணாநிதி என்னும் பெயரிடப்பட்டதாக எழுதி, யார் அந்த கருணாநிதி என்று வேறு கேட்டு எழுதியிருந்தார். இச்செய்தி சமீபத்தில் 1970-ல் வந்தது.

அந்தப் பெண் யாரென எனக்குத் தெரியாது, அவள் குழந்தை என்னுடையதல்ல என கருணாநிதி அவர்கள் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, சுப்பிரமணியத்துக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

பிறகு சட்டசபையில் ராஜாத்தி அம்மாள் சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டபோது, “அந்தப் பெண் என் மனைவியில்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்” என விசித்திரமான விளக்கம் தந்தார்.

ஆக, உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்தவர் கருணாநிதி. கோர்ட்டில் பொய்யுரைத்திருக்கிறார். நியாயமாக பொய்சாட்சிக்கான தண்டனையான ஏழாண்டு கடுங்காவல் தண்டனை பெறவேண்டிய பேர்வழி அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நன்றி, குமுதம் ரிப்போர்டர், தேதி: 05.06.2011, பக்கம் 14, 15, 16.

pt said...

//thamizhan said...

டோண்டு சார்!கனிமொழியை ஒரு போதும் தனது மகளல்ல என்று கருணாநிதி கூறியதில்லை.கனிமொழி எனது மகள்.தர்மாம்பாள் கனிமொழியின் தாயார் என்றுதான் கூறினார்.இது சட்டசபைக்குறிப்பில் கண்ண்டிப்பாக இருக்கணும்.//

SMT.RAJATHTHIAMMAL IS THE MOTHER OF MRS.KANIMOZHI.

IS IT CORRECT DONDU SIR?

dondu(#11168674346665545885) said...

//தர்மாம்பாள் கனிமொழியின் தாயார்//
தவறாக தட்டச்சு செய்திருக்கலாம். அல்லது தர்மாம்பாள் என்றும் ராஜாத்தி அம்மாளுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாம், யார் கண்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரமணா said...

1.கருணாநிதியின் அனைத்து நலத்திட்டங்களையும் ரத்து செய்வதை பார்த்தால்?
2.மோனோ ரயில் திட்டம் தோல்வித் திட்டமாமே?
3.காங்.‍‍‍ கழகத்தை கண்டுகொள்ளாத் தன்மை என்ன‌ தகவல் சொல்கிறது?
4.தயாநிதியின் அரசியல் எதிர்காலம்?
5.கூடா நட்பு கேடாய் முடியும் ‍‍‍‍‍‍_ திமுகவின் தலைவர் யாரை சொல்கிறார்? யாருக்கு சொல்கிறார்? எதற்காக சொல்கிறார்

arul PANNINAAN said...

//கேள்வி-11. சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்
பதில்: ஏனாம்?//

இதென்ன கேள்வி
எல்லாம் சமூக நீதிக்கு தான்

ரமணா said...

6.பாபா ராம்தேவ் டெல்லி ராமலீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத நிகழ்வுகள்?
7.கருப்புபணம் விவகாரம் முடிவுக்கு கொண்டுவர அரசியல்வாதிகள் சம்மதிப்பார்களா?
8.போகிற போக்கை பார்த்தால் மத்திய அரசுக்கு சிக்கல் போலுள்ளதே?
9.அருமையான திமுகவின் திட்டங்களுக்கு கருணாநிதி தன் பெயரை வைக்காமாலிருந்தால் ஒருவேளை?
10.கருணாநிதி இனி என்ன‌ செய்தால் அவருக்கு புகழ் சேர்க்கும்?

pt said...

//ரமணா said...


3.காங்.‍‍‍ கழகத்தை கண்டுகொள்ளாத் தன்மை என்ன‌ தகவல் சொல்கிறது?//

it is reported that karuna sends a warning message in his tiruvarur meeting held on 5/6/11

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது