6/09/2011

டோண்டு பதில்கள் - 09.06.2011

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 02.06.2011":
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கட்டாயப்படுத்தி ரத்தப் பரிசோதனை செய்யக்கூடாது: என்.டி. திவாரி

பதில்: இல்லையா பின்னே? எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருந்ததுன்னு தெரிஞ்சுடாதோ?

கேள்வி-2. இலவச மகப்பேறு சிகிச்சைத் திட்டம் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்
பதில்: நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.

கேள்வி-3.எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை: அமைச்சர் தயாநிதி மாறன்
பதில்: இப்போது வந்திருப்பது கலகம். பிறகு வரட்டும் நியாயம்.

கேள்வி-4. வீட்டுச் செலவுக்கு ரூ. 1 லட்சம் எடுக்க ராசாவுக்கு அனுமதி
பதில்: ஒரு மாதத்துக்கா ஒரு நாளுக்கா?

கேள்வி-5. லோக்பால் மசோதா: பொது விவாதத்துக்குத் தயாரா? பிரணாபுக்கு சாந்தி பூஷண் கடிதம்
பதில்: சபாஷ் சரியான சவால்.

கேள்வி-6. பிறந்த நாள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்: கருணாநிதி
பதில்: தனிப்பட்ட முறையில் துயரம்தானே. அதை மதிப்போமே.

கேள்வி-7. இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி
பதில்: அவை தலித்துகள் அல்லது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து மாற்றப்பட்ட நிதி என்பது போல நான் படித்த ஞாபகம்.

கேள்வி-8. பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்: தவிர்க்க அரசு தீவிர முயற்சி
பதில்: உண்ணாவிரதம் என்பது இருபக்கமும் கூர்மையான ஆயுதம். கையாளும்போது கவனம் தேவை. இப்போதெல்லாம் ஆ ஊ என்றால் உண்ணாவிரதம் இருக்க துவங்கி விடுகிறார்கள்.

கேள்வி-9. ஜி வழக்கு: தயாளுவுக்கு எதிரான மனு தள்ளுபடி
பதில்: அது மட்டுமல்ல, மனுவைத் தாக்கல் செய்தவர்களுக்கு அபராதம் வேறு விதிக்கப்பட்டதாமே.

கேள்வி-10. பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா
பதில்: காங்கிரசில் இருக்க வேண்டியவர். பி.ஜே.பி.க்கு இவரைப் போன்றவர்கள் கரும்புள்ளிகளே.

ரமணா
கேள்வி-11.கருணாநிதியின் அனைத்து நலத்திட்டங்களையும் ரத்து செய்வதை பார்த்தால்?
பதில்: ஏற்கனவேயே இவற்றையெல்லாம் பார்த்து விட்டோமே.

கேள்வி-12. மோனோ ரயில் திட்டம் தோல்வித் திட்டமாமே?
பதில்: இது சம்பந்தமாக பதிவர் அருள் எழுதியதை இத்தருணத்தில் பார்ப்பது நலம்.

கேள்வி-13. காங்.‍‍‍ கழகத்தை கண்டுகொள்ளாத் தன்மை என்ன‌ தகவல் சொல்கிறது?
பதில்: வேண்டாத விருந்தாளியை கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன் என்கிறாரே என காங்கிரஸ் கருதுவதைத்தான்.

கேள்வி-14. தயாநிதியின் அரசியல் எதிர்காலம்?
பதில்: இப்போதைக்கு இறங்குமுகமே.

கேள்வி-15. கூடா நட்பு கேடாய் முடியும் ‍‍‍‍‍‍_ திமுகவின் தலைவர் யாரை சொல்கிறார்? யாருக்கு சொல்கிறார்? எதற்காக சொல்கிறார்
பதில்: அவரைப் பொருத்தவரை என்றால் பெரிய லிஸ்டே உள்ளது. அதே போல அவர் யாருக்கெல்லாம் கூடா நட்பாய் இருந்தார் என்பதைப் பார்த்தாலும் தலை சுற்றுகிறது. எதைக்கூற, எதை விட?

கேள்வி-16. பாபா ராம்தேவ் டெல்லி ராமலீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத நிகழ்வுகள்?
பதில்: கேலிக்கூத்து.

கேள்வி-17. கருப்புபணம் விவகாரம் முடிவுக்கு கொண்டுவர அரசியல்வாதிகள் சம்மதிப்பார்களா?
பதில்: யானை வாயில் போட்ட கரும்பை அது திரும்பத் தருமா?

கேள்வி-18. போகிற போக்கை பார்த்தால் மத்திய அரசுக்கு சிக்கல் போலுள்ளதே?
பதில்: Understatement of the year!!!!!

கேள்வி-19. அருமையான திமுகவின் திட்டங்களுக்கு கருணாநிதி தன் பெயரை வைக்காமாலிருந்தால் ஒருவேளை?
பதில்: அவற்றுக்கு கனிமொழியின் பெயரை வைத்திருக்கலாமோ?

கேள்வி-20.கருணாநிதி இனி என்ன‌ செய்தால் அவருக்கு புகழ் சேர்க்கும்?
பதில்: அதுதான் நிறையச் சேர்த்து விட்டாரே. மேலும் தேவையா அவருக்கு?


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி
2.இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு
3.இலங்கை தமிழர்களை அழித்த பெருமை தி.மு.க.,வையே சாரும்: விஜயகாந்த் பேச்சு
4.குடிக்க கூடாது என சொல்வது நான் மட்டும்தான்: ராமதாஸ்
5.11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு

Simulation said...

உங்களிடம் கேள்வி கேட்பவர்கள கேள்விகளைக் "கேள்விகளாகக்" கேட்காமல் வெற்று வாக்கியங்களாகக் கேட்பதேன்? - சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

@Simulation
சுவாரசியமான கேள்வி. அடுத்த கேள்வி-பதில் வரைவுக்கு இக்கேள்வியும் சென்று விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இனிமே எவனுமே கேள்வி காட்க மாட்டான் போல இருக்கு...எவனாவது எதையாவது கேட்டால் உடனே கேள்வி பதில் பகுதிக்கு கேள்வியை எடுத்துக்றேன் என்கிறீர்கள்...

பதிவு போடுவதையே விட்டுவிட்டீர்கள்...வெறும் கேள்வி பதில் வைத்தே எவ்வளவு நாள் இப்படி ஓட்டப்போகிறீர்கள் ?

dondu(#11168674346665545885) said...

@Castrator of communists
சுவாரசியமான கேள்வி. அடுத்த கேள்வி-பதில் வரைவுக்கு இக்கேள்வியும் சென்று விட்டது.

:))))))))))))))))))))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரமணா said...

1.மாறன் சகோதரர்கள் மேல் சுமத்தப்படும் பகிரங்க குற்ற்ச்சாட்டுகளுக்கு பின்னால் இருந்து இயக்குபவர் யார்?
2.திமுக,காங் உற‌வு முறிக்கப்பட்டால் என்னவாகும்?
3. அடுத்த கோர்ட் வழக்கு என்னவாயிருக்கும்?
4. முதல்வர் ஜெயலலிதாவின் சட்ட சபை ந‌டவடிக்கைகள் எப்படி?
5.வட இந்திய ஆங்கிலச் செய்திச் சேனல்கள் பார்ப்பனர் சார்பு என குற்றம் சாட்டும் திமுகழகத்தின் செயல் பற்றி?

Surya said...

டோண்டு சாரின் பதில்களுக்காக.

1) திருமாவளவன் திருவாக்கு மலர்ந்திருக்கிறார் இவ்வாறு. "பொன்னர் - சங்கரை 'தலித்’ என்று குறிப்பிட்டது சாதிய அடிப்படையில் அல்ல. பார்ப்பனர் அல்லாத பிற உழைக்கும் மனிதர்கள் யாவரும், கட்டுப்பாட்டுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருமே 'தலித்’தான். இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாதியக் கண்ணோட்டத்தோடு அதைப் பார்க்கக் கூடாது. பொன்னரும் சங்கரும் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவாதத்துக்கே நான் வரவில்லை." பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பற்றி இவர் விளக்கம் பார்த்தீர்களா? வீரமணியையே இவர் வெட்கமடையச் செய்து விடுவார் போல் இருக்கிறதே!

2)கனி மொழி இந்த வெய்யிலில் திகார் ஜெயிலில் கஷ்ட்டப் படுகிறார் என்ற கலைஞரின் கவலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3) தயாநிதிக்கு எதிராக சிவசங்கரனை இயக்குபவர் ராஜாத்தி அம்மாள் என்ற வதந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

4) பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து?

Packirisamy N said...

What will happen to Karunanithi's accused love chid, if he dies now? (Sorry, Amma you never allowed me to say anything bad as I have "kari nakku")

dondu(#11168674346665545885) said...

@Samy
Your Amma is perfectly right.

Regards,
Dondu N. Raghavan

pt said...

IT IS REPORTED THAT DMK WILL WITHDRAW ITS SUPPORT TO CONGRESS GOVERNMENT IN THE SPECIAL GENERAL COUNCIL MEETING AND WILL ACT ON THE BASIS OF ISSUES IN FUTURE.
1.ANY MID TERM POLL TO CENTRE IS POSSIBLE?
2.WILL BJP CAPUTURE POWER?
3.CONG,AIADMK,DMDK AND OTHERS ALLAINCE POSSIBLE IN TAMILNADU?
4.IT SEEMS ADMK GOVT MOVEMENTS ARE PLANNING TO WIN ALL THE 40 MP SEATS ?
5.WILL MARAN BROTHERS ?

bala said...

Castrator of communists
சுவாரசியமான கேள்வி. அடுத்த கேள்வி-பதில் வரைவுக்கு இக்கேள்வியும் சென்று விட்டது.

:))))))))))))))))))))))))))))))
//


Dear "Castrator of communists",

(Oh what a graet occupation for a man,I mean castrating communists.I wish I had the skill and wherewithal to take up this great service for humanity).
One question to you.Have you by mistake castrated the CPM/CPI wallahs?The reason i am asking is that, these guys are not original communists, according to gilt edged communists like Vinavu and co,big beard + small beard couple and all the other Maoist terrorists.
BTW how do you do this when you encounter equally morbid and dangerous female maoists like Arundati etc?

baleno said...

டோண்டு பதில்கள் பகுதிக்கான எனது கேள்வி.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த நாட்டை கடுமையாக தண்டிக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகாளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிறைவேற்ற போவதாக வைத்துக் கொள்வோம்.
இலங்கையில் அதிகம் பாதிக்கபடபோவது யார் என்று நினைக்கிறீர்கள்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது