pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி
பதில்: வெற்றி தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். திமுக என்னும் சூரியன் கருணாநிதி என்னும் மேகத்தால் களங்கப்பட்டு நிற்கும் நிலையும் மாறும். அவர் மட்டும் சாஸ்வதமா என்ன?
கேள்வி-2. இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு
பதில்: இலங்கையில் நடப்பதை தமது கட்சிக்கு சாதகமாக திரிப்பதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
கேள்வி-3. இலங்கை தமிழர்களை அழித்த பெருமை தி.மு.க.,வையே சாரும்: விஜயகாந்த் பேச்சு
பதில்: இப்போது இவர் வேறு சேர்ந்து கொண்டார்.
கேள்வி-4. குடிக்க கூடாது என சொல்வது நான் மட்டும்தான்: ராமதாஸ்
பதில்: அப்படிச் சொல்லி என்ன பிரயோசனம்? அவர் கட்சிக்காரர்களே அவர் சொல்வதைக் கேட்பதாகத் தெரியவில்லையே?
கேள்வி-5. 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
பதில்: என்ன பேசி என்ன பலன்? கடைசியில் அவர் உண்ணாவிரதமே கேலிக்கூத்தாக முடிந்து விட்டதே.
IT IS REPORTED THAT DMK WILL WITHDRAW ITS SUPPORT TO CONGRESS GOVERNMENT IN THE SPECIAL GENERAL COUNCIL MEETING AND WILL ACT ON THE BASIS OF ISSUES IN FUTURE.
கேள்வி-6. ANY MID TERM POLL TO CENTRE IS POSSIBLE?
கேள்வி-7. WILL BJP CAPUTURE POWER?
கேள்வி-8. CONG,AIADMK,DMDK AND OTHERS ALLAINCE POSSIBLE IN TAMILNADU?
கேள்வி-9. IT SEEMS ADMK GOVT MOVEMENTS ARE PLANNING TO WIN ALL THE 40 MP SEATS ?
கேள்வி-10.WILL MARAN BROTHERS?
பதில்: (மேலே உள்ள 5 கேள்விகளுக்கும் சேர்த்து). அதுதான் திமுக ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லையே. விலக்கினால் சங்குதான் என்பதை அறிந்தே உள்ளது.
கேள்வி-11. "குறைகளை சுட்டிக்காட்டும் கட்சியாக தே.மு.தி.க., செயல்படும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
பதில்: ஆரோக்கியமான சிந்தனை. 1991 தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சியாக அமர்ந்த காங்கிரஸ் ஜெக்கு பயங்கர ஜால்ரா அடித்தது. அடுத்த 5 ஆண்டுகள் சட்டசபையில் பல கூத்துக்கள் நடைபெற்றன. அம்மாதிரியெல்லாம் இம்முறையாவது நடக்காமல் இருக்கட்டும்.
கேள்வி-12. ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ஜெயலலிதா தகவல்
பதில்: அது ஒரு வருமானம் மட்டுமே. மற்ற வகை வருமானங்களைச் சேர்த்தால் தலையே சுற்றும்.
கேள்வி-13. சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடும் வகையில், அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பதில்: இடைக்காலத் தடை எல்லாம் தீர்ப்பாகுமா? மேல் முறையீட்டு மனுவும் கொடுத்துள்ளனர். பார்ப்போம்.
கேள்வி-14. "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசு தலையிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
பதில்: எவ்வளவு நேரம்தான் வலிக்காதது மாதிரி நடிப்பது என்னும் அழும் வடிவேலுதான் நினைவுக்கு வருகிறார்.
கேள்வி-15. "தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பதில்: ரொம்பவுமே தன்னடக்கம் உள்ளவர்கள்தான். தாங்களாகவே படுதோல்வி அடைய முடியும் என்பதை அடக்கத்துடன் மறைக்கின்றனர்.
Surya
கேள்வி-16. திருமாவளவன் திருவாக்கு மலர்ந்திருக்கிறார் இவ்வாறு. "பொன்னர் - சங்கரை 'தலித்’ என்று குறிப்பிட்டது சாதிய அடிப்படையில் அல்ல. பார்ப்பனர் அல்லாத பிற உழைக்கும் மனிதர்கள் யாவரும், கட்டுப்பாட்டுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருமே 'தலித்’தான். இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாதியக் கண்ணோட்டத்தோடு அதைப் பார்க்கக் கூடாது. பொன்னரும் சங்கரும் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவாதத்துக்கே நான் வரவில்லை." பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பற்றி இவர் விளக்கம் பார்த்தீர்களா? வீரமணியையே இவர் வெட்கமடையச் செய்து விடுவார் போல் இருக்கிறதே!
பதில்: பார்ப்பனர் என்னும் பூச்சாண்டியைக் காட்டி ஓப்சி, பிசி ஆகியோர் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க நாடகம் போடும் வீரமணி வகையறாக்களையும் இவர் மிஞ்சி விட்டார் என்பதை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.
கேள்வி-17. கனி மொழி இந்த வெய்யிலில் திகார் ஜெயிலில் கஷ்டப்படுகிறார் என்ற கலைஞரின் கவலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
கேள்வி-18 தயாநிதிக்கு எதிராக சிவசங்கரனை இயக்குபவர் ராஜாத்தி அம்மாள் என்ற வதந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் வரும்தானே.
கேள்வி-19. பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அது புஸ்வாணம் என்பதுதான்.
Simulation
கேள்வி-20. உங்களிடம் கேள்வி கேட்பவர்கள கேள்விகளைக் "கேள்விகளாகக்" கேட்காமல் வெற்று வாக்கியங்களாகக் கேட்பதேன்?
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன்
கேள்வி-21. இனிமே எவனுமே கேள்வி கேட்க மாட்டான் போல இருக்கு...எவனாவது எதையாவது கேட்டால் உடனே கேள்வி பதில் பகுதிக்கு கேள்வியை எடுத்துக்றேன் என்கிறீர்கள்...
பதிவு போடுவதையே விட்டுவிட்டீர்கள்...வெறும் கேள்வி பதில் வைத்தே எவ்வளவு நாள் இப்படி ஓட்டப்போகிறீர்கள்
பதில்: இரு கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்து விடுகிறேன்.
@சிமுலேஷன்: அந்த வெற்று வாக்கியங்கள் செய்திகளில் வருபவை. அவை குறித்து எனது நிலைப்பாடு என்ன என்பதை அறியும் நோக்கத்தில் கேட்கப்படுகின்றன. அவற்றை வெறுமனேயே கூகளில் அடித்தால் சுட்டிகள் வந்து விழுகின்றன. அவற்றின் பின்புலனைப் பார்த்து பதிலளிக்க இயலுகிறது. இக்கேள்விகள் மற்றும் பதில்களே ஒருவகை கருத்துப் பரிமாற்றமாற்றம்தான். இரண்டு நண்பர்கள் கூடினால் பேசும் பல விஷயங்கள்தான் இவை. நான் எனது நிலைப்பாட்டை அவர்கள் கேட்பதால் கூறுகிறேன். மேலே ஏதேனும் சொல்ல வேண்டுமானால் பின்னூட்டங்களில் நண்பர்கள் கூறுகின்றனர்.
@கம்யூனிஸ்டுகளை காயடிப்பவன்: என்ன செய்வது பதிவுகள் போட நேரம் இல்லை, அதிக கருத்துக்களும் தோன்ற மாட்டேன் என்கின்றன. கேள்வி பதில்கள் வாரம் ஒரு முறை என்பதை வைத்துக் கொண்டதால் ஒரு வகை டிசிப்ளின் வருகிறது. ஓடும் வரை ஓடட்டுமே.
ரமணா
கேள்வி-22. மாறன் சகோதரர்கள் மேல் சுமத்தப்படும் பகிரங்க குற்ற்ச்சாட்டுகளுக்கு பின்னால் இருந்து இயக்குபவர் யார்?
பதில்: அவரது போட்டியாளர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளதே.
கேள்வி-23. திமுக,காங் உறவு முறிக்கப்பட்டால் என்னவாகும்?
பதில்: கருணாநிதிக்கு சங்குதான். ஏன் அவர் வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள்?
கேள்வி-24. அடுத்த கோர்ட் வழக்கு என்னவாயிருக்கும்?
பதில்: பல வழக்குகளுக்குள் இது விஷயமாக போட்டி எனக் கேள்வி.
கேள்வி-25. முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை நடவடிக்கைகள் எப்படி?
பதில்: இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும்.
கேள்வி-26. வட இந்திய ஆங்கிலச் செய்திச் சேனல்கள் பார்ப்பனர் சார்பு என குற்றம் சாட்டும் திமுகழகத்தின் செயல் பற்றி?
பதில்: அப்படி பார்ப்பனர்களால்தன் அவர் பதவி போனது என அவர் கூறியது உண்மையானால், பார்ப்பனரது தேச சேவை உணர்ச்சியை பாராட்ட வேண்டியதுதான் என இட்லி வடை எழுதியது சரிதான்.
கேள்வி-27. நீதி மன்ற தடையானைக்கு பிறகும் சமச்சீர் கல்வியில் முதல்வரின் செயல் பற்றி?
பதில்: தடையாணை தீர்ப்பாகாது. அரசு மேல் முறையீட்டு மனு கொடுத்துள்ளது.
கேள்வி-28. இலங்கைப் பிரச்சனையில் அதிமுகவின் இரட்டைவேடம் என குற்றஞ்சாட்டுபவர் பற்றி?
பதில்: தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் அவ்வாறுதான் செய்கின்றன.
கேள்வி-29. முதல்வரின் டெல்லி விஜயம் மீண்டும் அதிமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வித்திடும் என வரும் செய்திகள் பற்றி?
பதில்: முதல்வரின் நோக்கம் முதலில் திமுக மற்றும் காங்கிரசை பிரிப்பதே. பிறகுதான் மற்றதெல்லாமே.
கேள்வி-30. மாறன் சகோதரர்கள் சிவசங்கரனுடன் சமாதானத் தூது பற்றிய செய்தி பற்றி?
பதில்: இதுதான் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பதற்கு உதாரணமோ?
கேள்வி-31. லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாய் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் எஸ்.எம்.எஸ் பற்றி?
பதில்: வேலையில்லாதவன்கள் செய்யும் வேலை.
ராஜரத்தினம்
கேள்வி-32. திமுகவின் தோல்விக்கு சில பார்பனர்கள்தான் காரணம் என்கிறாரே? இதே சில பார்பனர்கள்தானே ரஜினியை வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தார் என்பதை அவர் மறந்தாரோ?
பதில்: 15 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம் எல்லாவர்றையும் துல்லியமாக நினைவில் வைக்க அவர் என்ன டோண்டு ராகவனா?
கேள்வி-33. இலைகாரன் என்பவர்தான் எழிலரசுவாக மாறியிருகிறாரோ?
பதில்: அது விருச்சிககாந்த் என்ற கோமாளிதான் என நினைக்கிறேன். அவர்தான் இலைக்காரன் என்று சொன்னால் அது வேறு விஷயம். விருச்சிககாந்த் யார் என்பதையும் எனக்கு ட்விட்டர் நண்பர்கள் கூறிவிட்டனர். மொத்தத்தில் ஒரு காமெடி பீஸ்.
baleno
கேள்வி-34. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த நாட்டை கடுமையாக தண்டிக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகாளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிறைவேற்ற போவதாக வைத்துக் கொள்வோம். இலங்கையில் அதிகம் பாதிக்கபடபோவது யார் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: பொருளாதாரத் தடை எல்லாம் வித்திக்கும் அளவுக்கு இந்தியாவிடம் பலம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
1 day ago
4 comments:
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.அ.தி.மு.க.,வின் வீம்பால் வீண் செலவு: கருணாநிதி குற்றச்சாட்டு
2.இலங்கை தீர்மானத்தால் அரண்டு போயுள்ள மத்திய அரசு
3."முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
4.மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தமிழக அரசுக்கு காங்., எம்.எல்.ஏ., பாராட்டு
5.தோட்டங்களாகும் மாடிகள்: வேளாண் பல்கலை திட்டம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை எல்லாம் விதிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் பலம் இருந்தால் கூட இப்படிபட்ட கோமாளித்தனமான ஸ்ரண்ட் தீர்மானங்களை இந்திய மத்திய அரசு நிறைவேற்றாது என்று நம்புகிறேன்.
1.லோக்பால் மசோதா நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா?
2.இந்த மசோதா வெற்றி பெறுமா இல்லை?
3.அமைச்சர் கபில் சிபிலின் பேட்டிகள் எப்படி?
4.அதிமுக தலைவிக்கு இன்னும் அமைச்சர் சிதம்பரம் மேல் கோபம் குறையவில்லையா?
5.மீண்டும் ஜெயபிரகாஷ் நாறயணன் டைப் எழுச்சி இந்தியாவில் வர வாய்ப்பு அகஸ்டு 15 க்கு மேலே?
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.அதிமுக அரசின் திட்டங்களுக்கு அமோக வரவேற்பு: லயோலா கருத்துக்கணிப்பு
7.பாஜக தலைவர் முண்டே விலகலா?
8.தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?
9.லோக்பால் மசோதா: அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த முடிவு
10.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை: ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்
Post a Comment