என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.
அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.
வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும்.
டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.
நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.
எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.
ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).
ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.
நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும்.
நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான்.
நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
2 hours ago