“மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என கூறியது ஜெயலலிதாதானே. அதை கோட் செய்திருக்கிறது நக்கீரன். அதிலென்ன தவறு?
எனக்கு நக்கீரன் மேல் பல விமரிசனங்கள் அப்படியே இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர் செய்தது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். சமீபத்தில் 1962-ல் சீன இந்திய யுத்த சமயத்தில் சீனா நம்மை முதுகில் குத்தியது என எல்லோரும் புலம்ப, அப்போது ராஜாஜி அவர்கள் ஒரு விஷயம் சொன்னார். “விரோதியின் வேலையே முதுகில் குத்துவதுதானே. ஆகவே அது பற்றி புலம்பாமல் மேலே காரியத்தை கவனிப்போம்” என்றார் அவர்.
அதைத்தான் இப்போது கூறுகிறேன். சிலர் கூறலாம், அதை ஜெயலலிதா கூறியிருந்தாலும் அட்டைப் படத்தில் பிராமினண்டாக போட வேண்டுமா என்று. எதிரி வேறு என்ன செய்வான் என நான் கேட்கிறேன். பத்திரிகைகள், அதுவும் நக்கீரன் போன்ற pulp பத்திரிகையின் வேலையே அதுதானே. உள்ளே செய்தியில் பார்த்தால் இந்த விஷயத்தை எம்ஜிஆரே கூறியதாகத்தானே ஜெயலலிதா எழுதியுள்ளார்?
எனது பதிவர் நண்பர் ஒருவர் தன்னை பீஃப் உண்ணும் பாப்பான் என குறிப்பிட்டு கொள்வார். அதை இன்னொருவர் கோட் செய்தால் அவர் கோபப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.
இதன் எதிர்வினையாக நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடியது மிகவும் அராஜகச் செயலே. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து அதை செய்ததும் கண்டனத்துக்குரியது.
பார்ப்பனர்களில் சிலர் (என்னையும் சேர்த்துத்தான்) அவ்வப்போது புலால் உணவு எடுத்துக் கொள்வது உண்டு. அதை பார்த்து அதிர்ச்சி அடைபவர்கள் அவர்களது பார்ப்பனரல்லாத நண்பர்களே. ஆக, பாப்பானை பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பிம்பம் உண்டு. அதெல்லாம் இக்கால கட்டத்தில் தேவையேயில்லை என்றுதான் நான் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
5 hours ago
19 comments:
சிறந்த இடுகை. நக்கீரன் கோபாலுக்கு அலுவலகத்தை தாக்கி செய்தியை பிரபல்யப் படுத்திய உடன்பிறப்புகளை ஜெயலலிதா என்ன செய்ய போகிறார்? :-)
இத்தாக்குதல் ஜெயின் ஆதரவின்றி நடந்திருக்காது. தமக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளரை தாக்குவதில் ஜெயும் கருணாநிதியும் ஒன்றே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிரச்னை பாப்பான் கறி சாப்பிடுவதா இல்லையா என்பதில்லை! அவர் சாப்பிட்டாரா? இல்லை சொன்னாரா என்பதுதான்! அவர் சொல்லவில்லை என்பதுதான் பொன்னையன் வாதம்! கொஞ்சம் ஓய்வு தேவையோ?
MK condemning the attack on Nakkeeran office is off the mark, considering what happened to Dinakaran's office and the death of their staff in Madurai. Kettle calling the pot black?
//மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என கூறியது ஜெயலலிதாதானே.//
சார், ஜெயா சாப்பிடுவாரா இல்லையா என்பது கோவாலுக்கு எப்படித் தெரியுமாம்? ஜெயலலிதா வீட்டில் அடுப்பு துடைக்கும் வேலையை பார்த்த அனுப்வத்தில் கோவால் சொல்கிறானா? அல்லது கோவாலின் பொண்டாட்டி ஜெயலலிதா வீட்டில் பத்துப்பாத்திரம் துலக்கும் போது ஜெயா அவ்வாறு பேசியதைக் கேட்டிருப்பாரா?
எந்த ஆதாரத்தில் இவ்வாறு ஜெயலலிதா சொன்னதாக கோவாலு சொல்லப்போச்சு? மேலும் ஒருவருடைய சொந்த விஷயங்களை, ஜாதீய துவேஷத்தோடு பிண்ணி கற்பனையா அவதூறு செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு மட்டுமே செய்தியாக பிரசுரித்த கோவாலின் செயல் மிகவும் மோசாமான அநாகரீகம்!
நித்யானந்தா ரூம்ல ஓபோடுவதை விளக்குப் பிடித்து ஊருக்கு காண்பித்தவன் எதை வேண்டுமானாலும் எழுதுவான். இவனுக்கு காட்டப்பட்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் சாதாரணமானது. அதிமுக இந்த விஷயத்தில் தி மு க ரௌடிகளைப் போல செயல்படுபவர்கள் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகிவிட்டது!
இந்த பிழைப்பு பிழைப்பதற்கு கோவாலு....சரி வுடுங்க!
//சார், ஜெயா சாப்பிடுவாரா இல்லையா என்பது கோவாலுக்கு எப்படித் தெரியுமாம்?//
அதிமுக பொதுக்குழ் கூட்டத்துக்கு பின்னால் ஜெ அப்படி பேசியதாகத்தான் நக்கீரன் கூறுகிறது. அவ்வாறு இல்லை என நீங்கள் கூறுகிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
///அவ்வாறு இல்லை என நீங்கள் கூறுகிறீர்களா?//
இல்லை என்று அடித்துக் கூற நான் ஜெ வுடன் இல்லை. என்றாலும் ஜெயலலிதா என்ன தான் முன்கோபக்காரி என்று சித்தரிக்கப்பட்டாலும், ராட்சசி என்று உருவகிக்கப்பட்டாலும் யார் முன்னால் என்ன பேசுவது என்பதையெல்லாம் தெளிவாக யோசித்துப் பேசக்கூடியவராகவே இருக்கிறார் என்பதை பல மேடைப் பேச்சுக்களிலோ , பத்திரிக்கைகாரர்கள் மீட்டிங்கிலும் பார்த்திருக்கிறோம்.
அதுவும் அவரை மதிக்கும் சகாக்களிடம் அவர் தன்னைத் தானே பிறிதொருவர் கிண்டல் செய்ததை எடுத்துச் சொல்லுவாரா? அதுவும் இதுமாதிரி ஒரு கௌரவமான பதவியில் இருக்கும் நேரத்தில் தனக்கு விமர்சனம் நேரும் படியான ஒரு விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் பேசியிருப்பாரா என்று யோசிக்க வேண்டும்!
என்னைப் பொறுத்தவரை நக்கீரனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, ஜெ ஆட்சியை பற்றி தரக்குறைவாக எழுத! விலை வாசி உயர்வைக் கூட மக்கள் சகித்துக் கொண்டு விட்டார்கள். அந்தம்மா என்ன பண்ணும் என்று மக்களே ஆதரவுக் குரல் கொடுத்து விட்டார்கள். எதிர்பார்த்த அளவு எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆக இப்போது எதையாவது இவர்களே கிளப்பினால் தான் உண்டு என்று இப்படி செய்தி போடுகிறார்கள். அது தான் நிஜம்.
இந்த சவுக்கை அவ்வளவு நம்பகமாக எடுத்துக் கொண்டுவிட முடியாது என்றாலும், அவரது சொந்த சண்டைகளின் காரணமாக சில உண்மைகள் வந்து விடும். கீழே செய்தி..
//இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல. மிக மிக விஷமத்தனமாகது. அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது. ///
http://savukku.net/home1/1427-2012-01-07-13-23-50.html
மாட்டுக்கறி சாப்பிடுவதிலும் சாப்பிடுபவர் மாமியாக இருப்பதிலும் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவிலலை. அதை நக்குகீரன் வெளியிட்டதிலும் கூட எந்தத் தவறும் இல்லை தான்.
முதலமைச்சர் பேசியதைப் போட வேண்டும் என்று துடிக்கும் கோவாலு மாமாவின் நல்ல எண்ணம் புரிகிறது. கருணாநிதி முதல்வராக இருந்த போது, டெல்லியில் வைத்து தினகரன் பத்திரிக்கை அலுவலகக் கொலைகளில் அழகிரியின் தொடர்பு பற்றிக் கேட்டப் பத்திரிக்கைக்காரரைப் பார்த்து "ங்கோ**** ஓ**, ஒங்கம்**** தாண்டா ***பண்ணி**, ****டா மகனே" என்று பேசியதை ஏன் கோவாலு மாமா போடவில்லை ?
டோண்டு,
நீர் என்ன சொல்ல வருகிறீர் என்றே புரியவில்லை!!
கோபால் சொன்னது உண்மை என சொல்கிறீர்களா?எந்த ஆதாரத்தின் அடிப்படையில்??
இதற்கு உம்முடைய விளக்கம் தெரிந்தபிறகுதான் என்னால் இதைப்பற்றி கூற முடியும்.
ஒரு செய்தி வருகிறது. தான் அவ்வாறு கூறவில்லை என்பதாக ஜெ சொல்லியிருக்கக்கூடிய செய்தி ஏதேனும் இருந்தால் அதை நான் பார்க்கவில்லை. இப்போதைய நிலை அதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிலுக்கு நன்றி.okay!உங்கள் நிலைப்பாடு புரிகிறது.இச்செய்தியை ஜெயா மறுக்க வேண்டியதுதானே என்பதுதான் அது.கண்ட கருமங்கள் சொல்வதெறகெல்லாம் மறுப்பு தெரிவிப்பதா ஒரு முதல்வரின் வேலை?
இதையே மு.க முதல்வராக இருக்கும்போது அவரைப்பற்றி இப்படி அவதூறான செய்தி வந்திருந்தால்,அவர் சும்மாவா இருந்திருப்பார்?
இப்போ சீன யுத்தம் பற்றி.சமீபத்தில் (எல்லாம் உங்க மொக்கைதான்)1956 முதல் 1960 வரை இருநாட்டினரும் நட்புடன்தான் இருந்தனர்.நேரு "இந்தி சீனி பாய்பாய் " என்ற கோஷத்தையும் உருவாக்கி மகிழ்ந்தார்.ஆனால் திடீரென்று sep.1962 இல் சீனர்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது அதை நாம் முதுகில் குத்தினார்கள் என சொன்னோம் இதில் தவறேதுமில்லை.
//ஒரு செய்தி வருகிறது. தான் அவ்வாறு கூறவில்லை என்பதாக ஜெ சொல்லியிருக்கக்கூடிய செய்தி ஏதேனும் இருந்தால் அதை நான் பார்க்கவில்லை. இப்போதைய நிலை அதுதான்.//
அப்ப பொன்னையன் அறிக்கையின் பொருள்? நீங்க மாட்டுக்கறியும், பண்ணிக்கறியும் சாப்ட்டா அதுக்கு சப்போர்ட்டா ஜெயலலிதாவின் மாட்டுக்கறி பொய் செய்தியை எடுத்து புள்ளரிக்கிறீங்க! ridiculous idealogy! by ridiculous person!
//அப்ப பொன்னையன் அறிக்கையின் பொருள்?//
நான் பார்க்கவில்லை. அவர் என்ன கூறினார் என்பதைத்தான் எழுதுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நக்கீரன் கோபால் இதை எதிர்பார்த்தே
செய்திருப்பார்.அவர் வலையில்' ஜெ'
விழுந்திருக்க வேண்டாம்.
இதை இக்னோர் செய்து வேறுவிதமாக
நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
என்னையா குறிப்பிட்டிருக்கிறீர்கள் சார்:-))
//என்னையா குறிப்பிட்டிருக்கிறீர்கள் சார்:-))//
ஆமாம். :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிராமணர்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்ற பொதுப்புத்தி இருந்த காலம் முடிந்து விட்டது.இது ஒரு விஷயமே இல்லை.எல்லாக் கறியும் சாப்பிடுவார்கள்.இதுக்கு எதுக்கு போராட்டம் என்று தெரியவில்லை. வேண்டுமானால் ஒரு முதல்வர் சாப்பிட்டது ஆட்டுக்கறியா இல்ல மாட்டுக்கறியா என்ற கவலையா ஒரு பத்திரிக்கை படணும் என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். அதுதான் நேர்மையான விவாதம்.
Dondu sir, I am shocked that you are in the habit of eating meat, even occasionally. I always held you in great respect and admiration, primarily because you were never ashamed of your brahmin identity. I thoroughly enjoy all your acidic rebuttals to the writings of the Kazhagam goons (DK & DMK). I cheered the way you handled the whole "poli dondu" affair, cutting that scoundrel Moorthy to size. Not that you asked for it, but I lost all respect for you after your admission of eating meat. You have violated a fundamental tenet of our dharma , which is ahimsa. People like you are the prime reason the brahmin community is the object of ridicule everywhere.
Post a Comment