Children should be seen but not heard
ஆங்கிலத்தில் உள்ள இந்தச் சொலவடை நிரம்பவும் பிரசித்தி பெற்றது. குழந்தைகள் முந்திரிக் கொட்டையை போல எல்லோரும் இருக்கும் சபையில் பேசலாகாது என்ற நோக்கத்தில் கூறப்பட்டதை பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் இயல்பாக உற்சாகத்துடன் இருப்பதை தடை செய்யும் நோக்கத்தில் இதையே உரக்கக் கூறுகின்றனர்.
The honorable Prime Minister wants to be obscene but not heard
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஆவேசமாக உரையாற்றும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென சப்தம் செய்யாமல் “அடப் போங்கடா தேவடியாப் பசங்களா” என வாயசைத்தார். இதை பார்த்து டென்ஷனான எதிர்க் கட்சியினர் கத்த ஆரம்பிக்க, பிரதமரோ தான் ஒன்றுமே கூறவில்லை என சாதித்தார். ஸ்பீக்கர் தமாஷாகக் கூறினார், “The honorable Prime Minister wants to be obscene but not heard”.
போன பதிவில் பார்த்தீர்களே, எல்ல்லோரும் தாங்கள் படிக்கும் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா என்பது வாயசைப்பின் மூலமே காட்டுகிறார்கள்.
இது போலத்தான் தேமெனென்று என வடிவேலு வெற்றிலை பாக்கு போட்டு மெல்ல, அவரை தூரத்திலிருந்து பார்க்கும் ஒரு மொட்டை அவர் தன்னை வண்டை வண்டையாக திட்டுகிறார் என்றும், தன் குடும்பத்தையும் திட்டினார் எனக் கூறி அவரை சாத்தோ சாத்து என சாத்துகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பூ.
நைஜீரியா மோசடி 419
திடீரென மின்னஞ்சல் ஒன்று வரும். அதில் ஒரு பணக்காரன் வாரிசில்லாது இறந்துவிட்டதாகவும், சொத்து மதிப்பு பல மில்லியன் லாலர்கள் எனவும் வரும். அத்தனையும் உங்களுக்கே கிடைக்கும் என ஆசையெல்லாம் காட்டுவார்கள். டெபாசிட்டாக சில ஆயிரம் டாலர்கள் அனுப்பச் சொல்வார்கள். அப்படி அனுப்பி ஏமாந்த அசடுகள் அனேகம். ஆமாம் அதென்ன 419? வேறு ஒன்றுமில்லை, நம்ம ஊரில் செக்ஷன் 420 என்றால் அங்கெல்லாம் 419 அவ்வளவுதான்.
அப்படிப்பட்ட மோசடிக் காரர்களையே கலாய்ப்பவர்களும் உண்டு. இங்கே பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: வடிவேலு வந்த அப்படத்தின் பெயர் “பிறகு”. அக்காட்சி கீழே தந்துள்ளேன், எஞ்சாய்!!
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
3 comments:
நைஜீரியா மோசடி 419.....
கலக்கல்...
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
டோண்டு சார்,
வடிவேலு வெட்டியானாக வந்து கலக்கும் அந்தப் படத்தின் பெயர் 'பிறகு'. அந்த மொட்டையும் கிட்டத்தட்ட எல்லா வடிவேலு படங்களிலும் அவருடன் வரும் ஒரு அல்லக்கைதான் (பெயர் தெரியவில்லை).
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
நன்றி சினிமா விரும்பி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment