இந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.
சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா?
கஷ்டம்தான், முடியவே முடியாது என்றும் சொல்லலாம். முதலில் மாற்று தளத்தில் வந்த கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற தலைப்பில் வந்துள்ள இப்பதிவிலிருந்து சில வரிகளை பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.
///////////////////////////////////////////////////////////////////////////////////
மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.
மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.
நாவலின் கதை
காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.
தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.
அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.
////////////////////////////////////////////////////////////////////////////////////////
மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.
தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.
நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.
மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.
ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).
தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).
இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////
கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.
1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.
பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
இஸ்லாமும் சாதியும் பற்றி ஜெயமோகனின் பதிவிலிருந்து சில வரிகள்:
இஸ்லாமுக்குள் சாதி இல்லை என அவர் எப்படி நம்பினார் என்று கேட்டேன். சாதி என்ற சொல் ஜாத என்ற வேர்ச்சொல் கொண்டது. பிறப்பு என்று பொருள். பிறப்பு சார்ந்த குல,குடி, இனக்குழு அடையாளம் இல்லாத மக்கள் உலகில் எங்குமே இல்லை. நவீன ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் குலம்,குடி சார்ந்த அடையாளம் சென்ற இருநூறாண்டுக்காலத்தில் மெல்லமெல்ல மழுங்கியுள்ளது.
ஆனால் அங்கும் இனம் சார்ந்த அடையாளங்கள் திட்டவட்டமானவை. அமெரிக்க சமூகத்த்தின் உச்சியில் ஆங்கிலோ சாக்ஸன் இனம்தான் இன்றும் உள்ளது. யூதர்கள், இத்தாலியர்கள், ஹிஸ்பானியர்கள், சீனர்கள், கறுப்பர்கள் எனத் தெளிவான இனப்பிரிவினை அங்குள்ளது. அது உண்மையில் ஒரு நவீன சாதியடுக்குத்தான். சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தது போல அங்கே ஒவ்வொரு இனமும் தங்களுக்குரிய குடியிருப்புப்பகுதிகளில் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். பொதுவான புழங்குதளத்தில் ஒரு சுமுகமான உறவிருக்கிறதென்பதைத் தவிர்த்தால் அவர்களுக்குள் தனிப்பட்ட, குடும்ப உறவுகள் ஏதுமில்லை. ஆம், அக்ரஹாரங்களும் சேரிகளும் புதிய வடிவில் அங்கே உள்ளன.
அரேபிய சமூகத்தின் இனக்குழு அடுக்குகளைப்பற்றி இன்று எந்த ஒரு சமூகவியல் நூலிலும் வாசிக்கலாம். அதன் உச்சியில் இன்றும்கூட குறைஷிக்குலமே உள்ளது, நபி அக்குலத்தில் பிறந்தாரென்ற தனி அடையாளத்துடன்.
இஸ்லாம் பரவிய எந்த நாட்டிலும் அங்குள்ள இனக்குழு வேறுபாடுகள் இல்லாமலானதில்லை. இன்னும்கூட மன்னராட்சியும், பாரம்பரியப் பதவிமுறைகளும் நிலவும் இஸ்லாமிய நாடுகளில் இனம்,குடி,குலம் போன்ற பிறப்படையாளங்களைத் தவிர்ப்பது சாத்தியமே அல்ல என்பதே உண்மை.மனிதர்கள் அவர்களின் பாரம்பரியத்தாலன்றி உழைப்பாலும் திறனாலும் அடையாளப்படுத்தக்கூடிய நவீனக்கருத்துக்கள் வளரக்கூடிய சூழல் கொண்டஒரு சமூகத்திலேயே சாதி போன்ற பிறப்படையாளம் காலப்போக்கில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பாவை விட்டால் இந்தியாவில்தான் அதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்திய இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும் அதற்கான பிறப்படிப்படையிலான பிரிவினைகளைப் பேணி, அப்பிரிவினைகளுக்குள் கடுமையான வெறுப்புகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது. சுன்னி-ஷியா என்ற பிரிவினைகூட இன்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மாறிமாறிக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளத்தில் எழுநூறாண்டுகளுக்கு முன்னால் மதம் மாறியவர்கள் இன்றும்கூட முஜாஹிதுகள் என்று சுன்னிகளால் சற்றே தள்ளித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகக்கூட அவர்கள் ஒன்றுபடமுடியவில்லை. தமிழகத்தில் இன்றும்கூட பட்டாணிகளும் மரைக்காயர்களும் தங்களை ஒரே சமூகமென உணர்வதில்லை.
////////////////////////////////////////////////////////////////////////////////////////
இப்போது டோண்டு ராகவன். எனது இப்பதிவுக்கு நான் அதிகமாக இசுலாமிய உதாரணங்களை காட்டியதன் நோக்கமே இசுலாமில் சாதி இல்லை என்ற ஒரு பொது புத்திதான். மனித இனம் உருவாகி வரும்போதே சாதிகள் உருவாகி விட்டன. அவற்றை மதங்கள் வரையறுத்துள்ளன என்று வேண்டுமானால் கூறலாம், அவ்வளவுதான்.
இது இப்படியிருக்க என்னவோ பாப்பானே சாதிகளுக்குக் காரணம் என பல பதிவர்கள் கும்மி அடிப்பதுதான் சகிக்கவில்லை. அவ்வாறு கும்மி அடிப்பவர்களை ஊன்று கவனித்தால் தத்தம் சாதி சங்கங்களில் முக்கிய பணியார்றுபவராகக் கூட இருக்கலாம். ஆளை விடுங்கள்.
இப்போது பதிவின் இரண்டாம் பகுதிக்கு வருவோம். சாதியை ஒழிப்பது தேவைதானா? இல்லை என்றுதான் நான் கூறுவேன். அவற்றை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது. ஒரு செட் சாதி அடையாளங்களை அழித்தால் அது வேறொரு செட்டாக சில ஆண்டுகள் கழித்து வரப்போகிறது, மீனாட்சிபுரத்தில் நடப்பதுபோல.
பொருளாதாரக் காரணங்களால் சாதிக்கொடுமைகள் அழிந்தால் நல்லதுதான். எந்த சாதியும் உயர்ந்தது அல்ல, எதுவும் தாழ்ந்ததும் அல்ல என்ற எண்ணப் போக்கை மேற்கொள்வது நலம். முடியுமா? தெரியவில்லை. முடிய வேண்டும் என்று மட்டும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
6 hours ago
69 comments:
பின்னூட்டம் இருநூறை தொட வாழ்த்துக்கள்! :-)
சார்!
”பிராக்டிக்கலாக சாதியை ஒழிக்க முடியாது. எனவே அது இருந்துக்கொண்டு போகட்டும்” என்பதாகவே சாதி குறித்த உங்களது கருத்தை புரிந்துகொள்கிறேன்.
கொள்கை அடிப்படையில் (குறைந்தபட்சம் தியரிட்டிகலாகவாவது) சாதியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
அல்லது
”சாதி இருக்கலாம். ஆனால் சாதிக்கொடுமைகள் இருக்கக்கூடாது” என்பதுதான் உங்கள் நிலையா?
@யுவகிருஷ்ணா
உங்கள் கேள்விக்கான விடை எனது கடசி இரு பத்திகளில் உள்ளனவே. இருப்பினும் மீண்டும் கூறுவேன்.
சாதி இருக்கலாம். ஆனால் சாதிக்கொடுமைகள் இருக்கக்கூடாது
அன்புடன்,
டோண்டு ராகவன்
@சுவனப்பிரியன்
நன்றி. ஹாஜியார் நலமா?
அன்புடன்,
டோண்டு ராகான்
//சாதி இருக்கலாம். ஆனால் சாதிக்கொடுமைகள் இருக்கக்கூடாது//
ஊழல் இருக்கலாம். ஆனால் யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பது மாதிரியில்லையா இது?
@யுவகிருஷ்ணா
இல்லை.
சாதிக்கொடுமைகள் எழும் அளவிலேயே அடக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட சாதியினர் தாங்கள் கொடுமைப்படுத்தப்படாமலிருக்க விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாதியை ஒழிப்பது என்றால் என்ன தெரியுமா..?
உங்கள் சாதி என்ன என்று கேட்டால் 'திரு திரு திரு' என்று விடை தெரியாமல் முழிக்கணும்..!
//"சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா?//---நம் இந்தியாவில் இருபது கோடி பேர் நம் தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஒழித்துக்காட்டி உள்ளார்கள்..!
//அது தேவைதானா?"//---சாதி மூலம் சுய/சமூக/அரசியல் ஆதாயங்கள் அடைபவர்களுக்கு மிகவும் அவசிய தேவைதான்.
மீனாட்சி புரம் பற்றி மீண்டும் மீண்டும் 'உங்களைப்போன்றோர்' அவர்களின் சாதியை பதிவு போட்டு மறக்காமல் சொல்லிக்காட்டிக்கொண்டு சாதி ஒழிப்பு எனும் மருந்தில் அழிக்கப்பட வேண்டிய நச்சுக்கிரிமிகளாக இருந்தாலும்...
உங்களின் பேரனின் பேரனுக்கு மீனாட்சி புரத்தின் சாதி என்ன என்று தெரியாது...
அதாவது,
எனக்கும்...
சுவனப்பிரியனுக்கும்...
இன்னும் ஒரு கோடி தமிழர்களுக்கும்...
இன்னும் இருபது கோடி இந்தியர்களுக்கும்...
தங்கள் சாதி தெரியாமல் போனது மாதிரி..!
//இருப்பினும் மீண்டும் கூறுவேன்.
சாதி இருக்கலாம். ஆனால் சாதிக்கொடுமைகள் இருக்கக்கூடாது//
---என்ன ஒரு வைரஸ்..!
அப்ப மாமிசம் சாப்பிடாத ஒரு பாப்பான் உங்களை ஒதுக்குவது நடக்கிறதா?
சாதி நாம் மறந்தாலும் ........ நாட்டு மக்கள் மறப்பதில்லை
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
இது எப்பிடி இருக்குன்னா... "கடவுள் இல்லைன்னு நான் சொல்லலை, இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்"....
வணக்கம் டோண்டு சார்...... நல்லாருக்கீங்களா....
திரு டோண்டு ராகவன்!
//நன்றி. ஹாஜியார் நலமா?//
தாத்தா நலமாக இருக்கிறார். கொஞ்சம் கண் பார்வைதான் மங்கலாகி வருகிறது. வயதாகி விட்டதல்லவா!
//அதாவது,
எனக்கும்...
சுவனப்பிரியனுக்கும்...
இன்னும் ஒரு கோடி தமிழர்களுக்கும்...
இன்னும் இருபது கோடி இந்தியர்களுக்கும்...
தங்கள் சாதி தெரியாமல் போனது மாதிரி..!//
இந்த பதிவின் சாரத்துக்கு இந்த பின்னூட்டம் ஒரு சரியான தீர்வை சொல்கிறது. ஒரு தலைமுறைக்கு அவர்கள் கொஞ்சம் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். இரண்டு தலைமுறை சென்று விட்டால் பழைய முஸ்லிம்களின் நிலையை அவர்களும் அடைந்து விடுகின்றார்கள்.
//பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.
பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர்,//
அவர்களின் மதமாற்றத்தக்கு உண்மையான காரணத்தையும் அந்த பதிவு தொட்டு செல்கிறது. மேலும் ஒரு கதையை அதன் ஆசிரியர் தனது கற்பனை திறமையால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அந்த கதையில் வரும் கதாபாத்திங்கள் அனைத்தும் இன்றும் நடந்து வருவதற்கு ஆதாரங்களும் இல்லை.
புதிய தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வந்த முஸ்லிம்கள் இன்று கொஞ்சம் சிரமப்பட்டாலும் அவர்களின் வாரிசுகள் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும். பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
ஜாதிகள் எனப்வை வருணாசிரமத்தின் திரிபுகள். வருணாசிரமம் ஒரு வைதீகமதக்கோட்பாடு. குலக்கல்வி, குலத்தொழில் எனத்திரிந்தபடியால் அவை அத்தொழில்களுள் எவை அருவருப்பானதாக நோக்கப்பட்டனவோ அக்குலத்தொழிலாளர்கள் கீழ் நிலையில் சமூகத்த்தில் வைக்கப்பட்டனர். அத்தொழிலகளுள் இறைவனைப்பற்றி செய்யப்படுபவை உயர்வாக மதிக்கப்பட்டன். இருப்பினும் இறைத்தொழில் செய்யவேண்டியவருக்கு மட்டும் பல தனியான கட்டுப்பாடுகள் விதித்து அவர்களை சமூகத்திலிருந்து தனியே காட்டத்தொடங்கி அதை அவர்கள் வேறுவிதமாக தங்கள் குலச்சிறப்புக்காக பயன்ப்டுத்தினர்.
இப்படியாக ஜாதிகள் வளர்ந்தன. இஃது இன்றும் தொடர்கிறது.
இதற்கும் தலித்துகள் மீது பிறஜாதியார் செய்யும் வன்கொடுமைகள், அல்லது தலித்துகள் பிறஜாதியினரோடு மோதும் செயல்களும் ஒன்றல்ல இன்றைய நோக்கில் !
அதேபோல, ஐரோப்பாவில், ஆங்கிலேயரிடம், அமெரிக்கரிடம், இராக்கியரிடம், ஜாதிகள் இருக்கின்றன என்று ஜெயமோகன் சொல்வது சற்றும் பொருத்தமில்லா இந்துத்வா வாதமாகும். இந்துதாவாவினர் வருணாசிரமம் சரியேவெனச்சொல்ல செய்யும் உபாயத்தை ஜெயமோகன் செய்கிறார். அவர் சொல்வது எத்னிசிடி, ரேசஸ் போன்றவைகளுள் வரும். வருணாசிரம் ஒரு உட்சமூகத்தில் நடப்பது. அங்கே அனைவரும் ஒரே எத்னிசிடி.
ஜாதிகள உண்டா? அவற்றை ஒழிக்கப்பட முடியுமா ? என்ற கேள்விகளுக்குமுன், 'ஜாதிகள்' என்பதன் டெஃபினிசன் சொல்லிவிட்டே தொடங்க வேண்டும்.
ஜாதிகள் என்றால் எவை ?
சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
அன்பின் பெரியவர் டோண்டு ராகவன் அவர்களே,
சாதியை தாங்கள் தூக்கி பிடிப்பது தங்கள் உரிமை. இந்து என்றும் எவரெல்லாம் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்களோ அவர்கள் சாதிய அடையாளத்தை துறப்பது கடினம். ஆனால் தாங்கள் இஸ்லாத்திலும் சாதி இருக்கிறது என்று நிறுவ கடின முயற்சி மேற்கொள்கிறீர்கள். ஆனால் தோல்வியையே தழுவுகிறது உங்களின் முயற்சிகள். இன்று இருபது கோடி நபர்களின் சாதிய அடையாளத்தை துடைத்தெறிந்தது "இஸ்லாம்" மட்டுமே. இதற்கு உங்களின் பதில் என்ன? இந்த இருபது கோடி நபர்களும் அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
சாதி/சாதிக்கொடுமைகள் போன்றவைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன.மலேசியா/சிங்கபூர் போன்ற நாடுகளில் வாழும் புதிய தலைமுறை இந்துக்கள் யாருக்கும்,தான் எந்த சாதியை சேர்ந்தவன் தெரியாது.மேலும் சாதியை வைத்து இந்து மதத்ததை விமர்சிக்கும் இஸ்ஸாமியர்கள்,முதலில் தன் மதத்தில் நடக்கும் சன்னி-ஷியா பிரச்சனையை கவனியுங்கள்.ஒரு வேளை மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் ஷியா முஸ்லிம்களாக இருந்திருந்தால் சன்னி முஸ்லிம்கள் அவர்களை கொன்றுகுவித்துக்கொண்டிருப்பார்கள்.
//ஆனால் தாங்கள் இஸ்லாத்திலும் சாதி இருக்கிறது என்று நிறுவ கடின முயற்சி மேற்கொள்கிறீர்கள்.//
நான் எழுதியதில் உண்மை இல்லை என்றால் அதை நிறுவுங்கள். பொத்தாம்பொதுவாக ஏன் பேசுகிறீர்கள்? இசுலாமியரிடையே வேறுபாடுகளே இல்லை என நீங்கள் குருட்டுத்தனமாக நம்பினால், அதனால் உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் கிட்டுமென்றால் அப்படியே அமைதி கொள்ளுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது இப்பதிவு சாதி பர்றியதே. இப்பிரிவினைகள் உலக முழுதும் நிலவி நிற்கின்றன என்று கூறுவதே அதன் நோக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் அய்யா
சாதி எனபதும் இனக்குழு என்பதும் ஒன்றுதான்.நம் நாட்டில் உயர்வு தாழ்வு எனில் பிற நாடுகளில் அடிமைமுறை,இன பாகுபாடு என்ற தளங்களில் இருந்தது.சாதி என்பது தம் இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் செய்யும்வரை இருக்கவே செய்யும்.ஆகவே சாதியை ஒழிக்க விரும்புவோர் சாதி மறுப்பு திருமணங்கள் செய்யட்டும்,ஊக்குவிக்கவும்.இந்த சாதி அடுக்கு முறை கூட பலமுறை மாறியுள்ளது.பல புதிய சாதிகள் தோன்றியதும்,பல் சாதிகள் பெயர்,மொழி மாறியதும் கூட வரலாறு.
இப்போது உயர்வு தாழ்வு என்பது சாதியை விட பணம்,அதிகாரம் இருப்பதை பொறுத்தே வருகிறது. மதம் மாறினால் புதிய இனக்குழுக்கள் உருவாகும்,ஒருவேளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க்லாம்.மற்றபடி எந்த மதத்திலும் இனக்குழுக்களை தாண்டி அதிக அளவில் திருமணம் நடகிறதாக தெரியவில்லை.சில நாடுகளில் அவர்கள் நாட்டுப் பெண்களை பிற நாட்டவர் திருமணம் முடிப்பது தவறு என்று கூட சட்டம் உண்டு.
நன்றி
ஊழலை ஒழிக்க முடியுமா? அது தேவை தானா? ஆகையால் அனைவரும் அதை சட்ட பூர்வமாக மாற்றுவோம். ஊழலை போற்றுவோம்.
இது போன்று உள்ளது தங்களின் யோசனை.
தவறேன்பதை எதிர்த்தால் அது குறையவாவது செய்யும், அதை சரி என்றால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சரி திருமணம் ஆகவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளவேண்டுமா அதுவும் நால்வர், இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது, இருப்பினும் கூறுகிறேன், தற்கொலை செய்து கொண்டால் நேரடி நரகம் என்கிறது இஸ்லாம், இதை தெரியாத அந்த நபர்கள் இஸ்லாத்தில் இல்லாமல் இருந்திருந்தாலும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள், ஆக நீங்கள் இங்கு அவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரை இஸ்லாத்தை சரியாக படியுங்கள் என்பது தான்.
என்ன்ன்ன ஒரு வில்லத்தனம்...
சகோ டோண்டு ராகவன்,
இந்த பதிவிற்கு ஒரு நெகடிவ் வோட்டு போட்டுவிட்டு ஆரம்பிக்கிறேன். காரணம் இந்த உலகத்தில் சாதியை ஒரு மார்க்கத்தால்(மதத்தால்) ஒழிக்க முடியும் என்றால் அது இஸ்லாம் தான், உங்கள் வர்ணாசிரம கொள்கையை சரி காண்பதற்காக அதில் கை வைப்பதால்.
நீங்க மீனாட்சிபுறம் , அங்க இங்க எல்லாம் போய் கஷ்டப்பட வேண்டாம். என்னைய எடுத்துக்கங்க, எங்க வம்சா வழி நிச்சயம் ஒரு முஸ்லிமில் இருந்து தொடங்கியது இல்லை. எங்கள் தலை முறையில் யாரோ ஒருவர் 4 அல்லது 5 தலைமுறைக்கு முன் , பிற மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவியவர்களே. ஏன் தழுவினார்கள், எதற்காக தழுவினார்கள்??? எந்த மதத்தில் இருந்து தழுவினார்கள்???? எதுவும் எனக்கு தெரியாது. ஒரு ௦.0000000000000000000001 சதவிகிதம் கூட தெரியாது. இதற்க்கு மேல் என்ன வேண்டும் உங்களுக்கு உதாரணம்????
அய்யா எங்களுக்குள் இருக்கும் பிரிவினைகள் எல்லாம் பிறப்பை வைத்து வருவபை அல்ல. கொள்கையில் வருபவை. உதாரணம் தமிழகத்தின் இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகள். அவர்கள் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் இயல்பில் நாத்திகர்களே. ஆனால் உங்கள் கொள்கை???? பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கிறீர்களே ஐயா... அதுவும் சொந்த மதத்திற்குள், சொந்த மக்களுக்குள்.....
இறுதியாக, இஸ்லாத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட யார் வேண்டுமென்றாலும் ஹசரத் ஆகலாம். மார்க்க அறிவு இருந்தால் போதும். ஆனால் நீங்கள்??? ஹி..ஹி..ஹி... போங்க சார்.
காமெடி பண்ணிக்கிட்டு.
பொருளாதாரக் காரணங்களால் சாதிக்கொடுமைகள் அழிந்தால் நல்லதுதான். எந்த சாதியும் உயர்ந்தது அல்ல, எதுவும் தாழ்ந்ததும் அல்ல என்ற எண்ணப் போக்கை மேற்கொள்வது நலம். முடியுமா? தெரியவில்லை. முடிய வேண்டும் என்று மட்டும் கூறுவேன்.//
இது நடந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும், சாதிகளுக்குள் கலப்பு மணம்,பொருளாதார,வழிபாட்டுச்சமநிலை இன்றைய தேவை, சாதி அதுவாகவே ஒழியும் அல்லது உருமாறும்.
/* இப்போது பதிவின் இரண்டாம் பகுதிக்கு வருவோம். சாதியை ஒழிப்பது தேவைதானா? இல்லை என்றுதான் நான் கூறுவேன். அவற்றை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது. ஒரு செட் சாதி அடையாளங்களை அழித்தால் அது வேறொரு செட்டாக சில ஆண்டுகள் கழித்து வரப்போகிறது, மீனாட்சிபுரத்தில் நடப்பதுபோல. */
சூப்பர். பூனை குட்டி வெளியில் வந்து விட்டது.
சரி சார். ஒங்க கூற்று படி ஒழிக்கவெல்லாம் வேணாம். உங்க கோஷ்டி கொஞ்சம் கோயில்களில் இருந்து வெளியில் வந்து, மற்ற இந்துக்களுக்கு அந்த இடங்களை விட்டு கொடுக்கலாம் இல்லையா????
அப்படி செய்தால் மத மாற்றங்களே இருக்காதே????? இந்த சின்ன விசயத்த செய்றத விட்டுட்டு எதற்காக கஷ்டப்பட்டு அடுத்த மதங்களை பார்த்துகிட்டு இருக்கீங்க???
சரி ஒரு நூர்ஜஹான் பாதிக்க பட்டதாகவே இருக்கட்டும். உங்கள் கண் முன்னாடி, ஆயிரம் சிராஜ்கள், ஆசிக்குகள், ஹுசைனம்மாக்கள், சுவனப்பிரியங்கள் இருக்கிறோமே, எங்க இருந்து வந்தோம் என்பது தெரியாமலே. எங்களை பாருங்கள் சார். வர்ணாசிரமத்தை விடாதவரை உங்கள் கோஷ்டி தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும், இஸ்லாத்திற்கான தாழ்த்தப் பட்டோர் என்று அழைக்கப்படும் என்னுடைய சகோதரர்களின் வருகையை தடுக்க முடியாது. வாருங்கள் சகோ, நாம் இருவரும் ஒரே தட்டில் சோறு சாப்பிடுவோம். நான் சாப்பிடுகிறேன் உங்களோடு என்னுடைய உயர்வான சகோதரேனே....
சாதி பிராமணர்களை தவிர மற்றவர்களிடம் திருமணத்தில்,கிராமத்தில் வெட்டியாக பேசி கொண்டு வாழும் போது மட்டும் வாழ்கிறது (அவனாக சொன்னால் தவிர அவன் சாதியை நம்மால் கண்டு பிடிக்க முடியாது.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பனாக இருப்பவர்களின்(அவர்களின் திருமணங்கள் ,இறப்புகளுக்கு சென்றால் கூட) சாதி கூட இன்னும் எனக்கு தெரியாது.ஆனால் மூன்று மணி நேரம் பழகினால் கூட பிராமணரின் சாதி தெரிந்து விடும்.அதனால் சாதி எதிர்ப்பு போராட்டங்கள் அவர்களை அதிகமாக சாடுவதில்,எதிரியாக எடுத்து கொள்வதில் தவறு ஏதுமில்லை
மற்ற சமூகங்கள் அவர்கள் கிராமங்களில் மட்டும் தான் ஜாதிகள்.வெளிய வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான்.சென்னையில் ஜாதிகளுக்கு இடையே குறிப்பான பழக்கங்களோ,சுடுகாடுகளோ கிடையாது.அவர்கள் திருமணங்களையோ ,இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட அவர்களாக சொன்னால் தான் எந்த சாதி என்று தெரியும்.
வெளி மாநிலங்களில் தமிழ் சங்கங்கள் உண்டு.அங்கு பொது துறை,தனியார் துறையில் வேலை செய்யும் தமிழர்கள் பலர் உண்டு.அவர்களோடு பல ஆண்டு பழகினாலும் அவர்களாக சொன்னால் தான் சாதி தெரியும்.ஆனால் அவர்களில் பிராமணர்களை ஒரு சில மணி நேரத்திற்குள் அறிந்து கொள்ளலாம்.
சாதி என்பதை வெளிப்படையாக அணிந்து கொள்பவர்கள் என்பதால் சாதி எதிர்ப்பில் அவர்கள் எதிர்ப்பு போல் தோற்றம் கொள்வதை தவிர்க்க முடியாது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தையோ ,ராமதாசையோ யாரும் எதிர்க்காத மாதிரியும் பிராமணர்களை மாத்திரம் எதிற்பதாகவும் உருவாக்கப்படும் மாயை ஒரு பெரிய பொய்.அதை எதற்காக பல வருடங்களாக சொல்லி கொண்டே இருக்கிறார்கள் எனபது ஒரு புரியாத புதிர்
கருணாநிதியை திட்டுவதை போல் ஜெயலலிதாவை திட்டுவது கிடையாது.இதில் யார் எந்த சாதி
தென்னாப்பரிக்க அழைத்து செல்ல பட்ட லட்சகணக்கான தமிழர்களில் ஆதி திராவிடர்கள்,வன்னியர்கள்,முதலியார்கள் உண்டு.பிராமணர்கள் கிடையாது.ஒரே நூற்றாண்டுக்குள் அவர்களிடையே சாதி ஒழிந்து விட்டது.மலேசியாவில் பிராமணர் சங்கம் உண்டு.பிராமணர்களும் அவர்கள் மந்திரங்களும் உண்டு.அங்கு இன்னும் சாதி வாழ்கிறது.
நேசனல் ஜியோகிராபிக் சானல் எடுத்த Inside mecca எனும் டாக்குமென்டரியில் ஹஜ் யாத்திரைக்கு வந்த கறுப்பினத்தவர் எவ்வாறு மெக்காவில் ஒதுக்கப்படுகிறார் என ஆவனப்படுத்தியிருப்பார்கள் [National Geographic Inside Mecca ( A Documentary about the Holly City of Mecca ) 3 of 5-Youtube]. நம்ம ஊரில் சொல்லவே வேணாம். இவ்வாறு இன ஒதுக்கல், சாதி மத இன மற்றும் நிற அடிப்படையில் உலகெங்கும் நடந்தவாறுதான் உள்ளது. இதற்கு காரணம் மனித இனம் குழுக்களாவே வாழும் ஒரு விலங்கினம், யானையைப் போல. குழுவாக இயங்குவதுதான் பாதுகாப்பு என மனிதன் நம்பி வாழ துவங்கி பல மில்லியன் ஆண்டுகளாகிவிட்டது. மேலும் தனது இனத்தினை அடுத்த இனத்தினைவிட சிறந்தாக நிறுவுவது தனது சர்வைவலுக்கு மிகவும் அவசியம் எனவும் மனிதன் நம்புகிறான். இவை நாம் காடுகளில் அலைந்த போதும், கம்பு கத்தி வைத்து சண்டையிட்ட போதும் தேவையாக இருந்திருக்கலாம். ஆனால் இவை நவீனயுகத்தில் முட்டாள்தனமானது. ஆனால் இவை பல தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு நமது ஜீன்களில் பதிந்து (பரம்பரை வியாதிகளை போல) இருப்பதினால் இவற்றை விடுவது கடினம். இதனால்தான் மனிதன் சாதி மத இன நிற அல்லது மொழி அடிப்படையில் குழுக்களை உருவாக்கி அதனுள் செயற்பட விரும்புகிறான் . சாதிகளை ஒழிப்பதாக காட்டிக்கொள்ளும் யுவகிருஷ்ணாவினாலும் அவரது வழிகாட்டிகளாலும் மற்றும் குழுவினராலும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த திராவிடயிசத்தை ஆதரிப்பதையும் தன்னை உயர்ந்தாக கருதும் சாதி அடிப்படையிலான ஒரு இனத்தை வெறுப்பதையும் தவிர்க்க இயலவில்லை என்பதிலிருந்து இதை மேலும் புரிந்து கொள்ளலாம். (சாதிக் குழுக்களை போன்றதுதானே திராவிட அல்லது தமிழினம் என உறுமுவதும்.) இதைதாண்டி நம்மனைவரும் மனிதர்களாய் சிந்திப்பது மிகவும் கடினம் ஆனாலும் அதை நோக்கி நாம் பயணிப்பது அவசியம்.
சாதிகளின் வரலாறும் பிராமணர்களை தவிர மற்றவர்களுக்கு கிடையாது.சோழனும் பல்லவனும் எங்கள் சாதி என்று பள்ளி,பள்ளர்,கள்ளர்,சானார் ,செங்குந்தர்,சோழிய வேளாளர்,கொங்கு வெள்ளாளர் என அனைத்து சாதிகளும் கூவுவதில் இருந்தே அவற்றின் fluidity புரியும்.இடங்கை சாதிகள் ,வலங்கை சாதிகள் என்று பிரிவுகள் மோதி கொண்டிருந்ததாக வரலாறு உண்டு.இதில் இப்போது உள்ள சாதிகளில் யார் இடங்கை,யார் வலங்கை என்று கூற முடியுமா
சாதி ரீதியான பழக்க வழக்கங்கள்,பேச்சு மொழி அனைத்தும் முக்கால்வாசி ஒழிந்து விட்டன பிராமணர்களை தவிர்த்து.வன்னியர் குடும்பம்,ஆதித்ராவிடர் குடும்பம்,முதலியார் குடும்பம் என்று விளம்பரத்தில் காட்ட முடியுமா.சாதியை சொல்லாமல் சாதியை குறிப்பால் உணர்த்த முடியுமா இப்போது தமிழ் matrimony விளம்பரத்தில் வருவது போல
தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் சமண மதம்,புத்த மதம் ,சைவ மதம் என்று ஒரு சுற்று வந்தவர்கள்.சென்ற தலைமுறை வரை கிராமத்திற்கு வெளியே,குடும்பத்திற்கு வெளியே பெண் எடுக்க.கொடுக்க மாட்டார்கள்.ஒரே சாதியின் பெயரில் வரும் உட்பிரிவுகளுக்கு இடையே கூட திருமண பந்தம் நடக்காது.ஒரே தலைமுறையில் எந்த செட்டிய்யாரவது,முதலியாராவது என்று பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலையே வரவில்லையா
குழு மனப்பான்மை என்பது இயற்கை உந்துதலில் ஒன்று. அதை ஆக்கப்பூர்வமாக செய்தால் நல்லது. சாதிகளும் குழுமனப்பான்மையின் ஒரு வெளிப்பாடே.
ஆயிரம் ஆண்டுகாலமாக இருந்து வரும் சாதி அதன் நேர்மறை விளைவுகளாலேயே இருந்து வந்திருக்கிறது. அது முழுவதும் தீமை என்று சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு போகட்டும். அப்படி இல்லை என எதிர்க்கும் என் போன்றவர்கள் நாங்கள் கூறுவதை கூறிக் கொண்டு போகிறோம்.
இசுலாத்தில் ஜாதி இல்லை, அப்படி இருந்தாலும் சில தலமுறைகளுக்கு பின்னால் அவை மறந்துவிடும் எனக் கூறும் இசுலாமிய பதிவினர் தமது மன அமைதிக்காகவே அதை கூறிக் கொள்கின்றனர்.
இப்பதிவில் வெளிவந்த தகவல்களை குறிப்பிட்டு அவை பொய்யென யாரும் இதுவரை நிறுவவில்லை.
என்னவோ பார்ப்பனர்தாம் சாதி பார்க்கின்றனர், வன்னியர், கவுண்டர், பிள்ளைமார் போன்றோர் சாதி பார்ப்பதில்லை எனக் கூறுபவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குறிப்பிட்ட சாதி/மதத்தினர் சிறுநீர் கழிக்கமாட்டார்கள், மலம் அவர்களுக்கு வராது, குறிப்பாக பாலியல் வேட்கை அவர்களுக்கு இருக்கவே இருக்காது என்று யாரும் நிருபனம் செய்தால் நானும் சாதி/மதம் இருப்பதையும் அவை மிகத் தேவை என்பதையும் நான் ஒப்புக் கொள்வேன்.
// கோவி.கண்ணன் said...
குறிப்பிட்ட சாதி/மதத்தினர் சிறுநீர் கழிக்கமாட்டார்கள், மலம் அவர்களுக்கு வராது, குறிப்பாக பாலியல் வேட்கை அவர்களுக்கு இருக்கவே இருக்காது என்று யாரும் நிருபனம் செய்தால் நானும் சாதி/மதம் இருப்பதையும் அவை மிகத் தேவை என்பதையும் நான் ஒப்புக் கொள்வேன். //
முதலில் இந்த விடியோ காணுங்கள்.
////////
கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி video ////////
SEE picture
click to see picture
http://govikannan.blogspot.com/2009/06/1.html
அதாவது ஐய்யபனின் நிரந்தர வயதில் சபரிமலை சென்றிருக்கிறேன்
பம்பை நதிக் கரை வந்தது .... ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல அசிங்கம் ... சாமிகளின் கழிவுகள் ... திட திரவ வடிவங்களில் அந்த நதியெங்கும் ஊர்ந்து செல்ல ... அதைப் பற்றி கவலைப் படாமல் அதே குளிர் நீரில் எல்லோரும் குளிக்க ... வேறு வழியில்லாமல் நானும் குளித்தேன்.
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_06.html
கிறிஸ்துவம் என்னை ஈர்க்கிறது, ஏசு கிறிஸ்துவின் போதனைகளில் நான் ஈர்க்கப்பட்டுவிடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது, நான் கிறிஸ்துவத்திற்கு மாறினால் எனக்கு உடல் சேதம் எதுவும் தேவைப்படாது, அதாவது காது குத்துதல் உள்ளிட்ட என்று புரிந்து கொள்ளவும், மேலும் பிடிக்கவில்லை என்று வெளி ஏறினாலும் தேடி வந்து உதைக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கிறிஸ்துவ மதத்தின் மீதான என் பற்றுதல் பள்ளிக் காலத்தில் சனிக்கிழமை வேத பாட வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து துவங்கி விட்டதாக நினைக்கிறேன், ஏசு கிறிஸ்து இன்னும் என்னை நாடவில்லை என்பதால் இன்னும் தயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
நான் ஏன் கிறிஸ்துவத்தை விளம்பரம் செய்யக் கூடாது ? மிசனெறிகள் பொருள் உதவி செய்தால் அதுவும் எனக்கு வேண்டாம், ஏதாவது ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு பணமாக அனுப்பி வைத்துவிட்டு அதன் பற்றுச் சீட்டை எனக்கு அனுப்பினாலே போதும் நான் திங்களுக்கு 30 பதிவுகளை கிறிஸ்துவ மதம் வளர்க்க எழுதுவேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் மதங்களை விளம்பரப்படுத்த தடையேதும் இல்லை அவை பிற மதங்களை தூற்றாவிடில் என்கிற புரிந்துணர்வு வாசகர்களிடையே உள்ளது.
உண்மையானவரும் ஆண்டவருமான ஏசு கிறிஸ்து என்னை விரைவில் நாடுவாராக, அதற்கு உங்கள் பிரார்தனைகள் தேவை. மேலும் மேலும் கிறிஸ்துவம் பதிவுகள் வழியாக பரப்ப, தமிழ்மணம் திரட்டியின் மகுடத்தைக் கைப்பற்ற வேண்டும், ஏற்கனவே துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் மகுடாதிபதிகளை வீழ்த்தி இந்தப் பதிவை தமிழ் மணத்தில் மகுடம் ஏற்ற விரும்பினால் அதற்கு 38 - 40 வாக்குகள் தேவைப்படுகிறது.
ஏசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட பதிவர் ராபின் உள்ளிட்டவர்கள் போலி ஐடிகளையாவது உருவாக்கி இந்தப் பதிவை மகுடம் ஏறறி திரட்டியை நாறடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
http://govikannan.blogspot.com/2012/02/blog-post_10.html
எனது இப்பதிவு சாதி பர்றியதே. இப்பிரிவினைகள் உலக முழுதும் நிலவி நிற்கின்றன என்று கூறுவதே அதன் நோக்கம்.// - டோண்டு ராகவன்
இந்து மதத்ததை விமர்சிக்கும் இஸ்ஸாமியர்கள்,முதலில் தன் மதத்தில் நடக்கும் சன்னி-ஷியா பிரச்சனையை கவனியுங்கள்.ஒரு வேளை மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் ஷியா முஸ்லிம்களாக இருந்திருந்தால் சன்னி முஸ்லிம்கள் அவர்களை கொன்றுகுவித்துக்கொண்டிருப்பார்கள்- ரெங்கா
உலகமுழுவதும் நிலவி நிற்பவைகளுக்கு எப்படி ஜாதிப்பிரிவினைகள் என்று பெயர் டோண்டு ராகவன் வைக்கிறார் என்று தெரியவில்லை. நான் ஏற்கனவே எழுதியது போல அப்பிரிவினைகள் ஜாதிப்பிரிவினைகள் அல்ல. அவை ஒரு மதத்தினருக்குள்ளே இருப்பின் - ஷ்ன்னி, ஷியா - நிரக்காரி- சீக்கியர், சைவம் - வைணவம், திகம்பர ஜெயின் - மற்ற் ஜெயின், ஹீனாயன புத்தம் - மஹாயான புத்தம், ப்ரொட்டஸ்டண்டு- கத்தோலிக்கம், வட்கலையைங்கார்கள் - தெனகலையங்கார்கள். - என்ற பிரிவினைகள் மதக்கோட்ட்பாடுகள் சம்பன்தப்பட்டவையாகும். மதத்துக்கப்பால், சமூகப்பிரிவினைகள் - வாழும் இடத்தால் - நாடார் உவர்-ப்ரதவர் உவரி - வாழும் முறையால் - வெஜிட்டேரியன் - நான் வெஜிட்டேரியன் - பேசும் மொழியால் - தெலுங்கர்கள் - தமிழர்கள, சவுராட்டிய்ரகள் - தமிழர்கள் (மதுரையில்). இப்படி பலபல். இவை பலவேளைகளில் சகிப்புத்தன்மையால் பிரச்சினைகளில்லாமலிருக்கும். பலவேளைகள் தக்ராறு பிரச்சினகள், வன்முறைகள் என்று போய் முடியும். வைணவத்துக்கும், சைவத்துக்கும் நடன்த சண்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று டோண்டு ராகவனுக்கு நன்றாகத் தெரியும்.
ரெங்கா, ஷன்னி-ஷியா பிரிவினை இசுலாமில் உள்ள ஒரு கோட்பாட்டை வைத்து இருவேறுபாடான பார்வையும் மதவாழ்க்கையுமாகும். இது எப்படி ஜாதிப்பிரச்சினையாகும்?
இஸ்லாம் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் காஷ்மீர் .அங்கு இஸ்லாமியர் பிராமண சாதி பெயர்களுடன் உலா வருவார்கள்.முடி வெட்டுபவர்,பழங்குடியினர் அனைவரும் அவரவர் சாதி பெயரோடு அதே சாதியில் தான் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வார்கள்.பழங்குடியினர் உண்மையான இஸ்லாமியர் அல்ல என்றும் கீலாநிக்கள் கூவுவார்கள்.
மதத்தின் பெயரால் பிரிந்த பாகிஸ்தான் மொழியினால் இருவதியிந்து ஆண்டுகளுக்குள் துண்டானது எதை காட்டுகிறது.மதமும் சாதியும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.மதம் மாறுவதால் சாதி அழியாது.புது மதம் வந்தால் சில,பல சாதிகள் ஒன்றாகி வலுவாக்கி கொள்ள கூடும்.
எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள்,பெருமைகள் இல்லாத சாதிகளிடம் சாதிபிரிவினை குறைந்து அல்லது அழிந்து விடும்.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
கர்நாடகவிற்க்கு நானூறு ஆண்டுகள் முன் சென்ற அய்யங்கார்களோ அல்லது ஒரிஸ்ஸா எல்லையில் வாழும் பிராமணர்களோ பல நூற்றாண்டுகளாக அதே சாதியாக தான் உள்ளார்கள்.ஆனால் மற்ற சாதிகள் அங்குள்ள சாதிகளோடு ஐக்கியமாகி விடும்.
நாயர்,எழவ சாதிகளோடு ஐக்கியமான தமிழ் சாதிகள் பல.அதே போல் தெலுங்கு பேசும் மக்களோடு புலன் பெயர்ந்து சென்றதால் தெலுகு சாதியில் ஐக்கியமான தமிழ் சாதிகள் பல உண்டு.
தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.
பர்மாவில் வாழ்ந்து அங்கேயே தங்கி விட்ட தமிழர்களோ ,வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கோ இரண்டு தலைமுறைகளுக்குள் அங்கே உள்ள குழுக்களோடு உறவுகள் ஏற்பட்டு அவர்களில் ஒருவராகி விடுவது தான் நடக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து தமிழகத்தை விட்டு பல நூறு,ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ தொடங்கியவர்களில்,அங்கேயே வீடு வாங்கி குடிபெய்ரந்தவர்களில் பிராமணர்களை தவிர்த்து மற்றவர்கள் சாதியை தொலைப்பது எளிது.
இந்த நாவலை பற்றி திரு பத்ரி அவர்களின் கட்டுரையில் நான் அளித்த பின்னூட்டம்
கோவத்தால் மதம் மாற கூடாது.முதலாளித்துவ கொள்கையின்படி highest bidder /negotiated benefits பின் சென்றால் இந்த குழப்பம் இல்லை.மதத்தால் வரும் பிரயோசனங்கள் என்ன என்று பார்த்து மாறினால் நன்மை தான்.அதுவும் பெரிய அளவில் நடக்க வேண்டும்.
பிரிவினையின் போது பாகிஸ்தானில் விடப்பட்ட ஹிந்துக்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான்.அவர்களில் பெரும்பான்மையோனோர் இஸ்லாத்திற்கு மாறி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.அங்கு இந்த பிரட்சினைகள் கிடையாது.இங்கு கிறுத்துவராக மாறிய தலித்துகள் பெண்/மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டபடுவது கிடையாது.மகாராஷ்ட்ரத்தில் இருந்தால் புத்த மதத்திற்கு மாற வேண்டும்,வட கிழக்கு,தென் மாநிலங்களில் கிருத்துவத்திற்கு மாறினால் பலன்கள் அதிகம்.மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் கூட இந்த பிரச்சினை உண்டு.
கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.
திடீரென்று பார்சியாக(குறைவாக உள்ள குழுவுக்கு) மதம் மாறினால் எங்கே பெண்/மாப்பிள்ளை கிடைக்கும். ஒரு தலைமுறைக்கு முன் மாறியவர்/படித்தவர்/பணக்காரராய் ஆனவர், இப்போது மாறியவரை விட உயர்ந்தவர் என்ற நினைப்பு எல்லா குழுக்களிடமும் உண்டு.
ஆங்கிலோ இந்தியர்கள் ஆண்,பெண் கிடைக்காமல் கச்டபடுவதில்லை.அவர்களில் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை.நன்கு படித்த,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பெண் கிடைப்பதில் கஷ்டம் கிடையாது.படிப்பு,வேலை இல்லை என்றால் இன்று எல்லா சமூகங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது.
எனக்கு விளம்பரமாக என் பதிவின் தகவல்களை தனது கண்டுபிடிப்பு போல் காட்டும் அந்த மதவெறியர், எடுத்து தின்றவற்றின் ஒவ்வாமை வாந்தியாக, அதே வாந்தியை பல இடங்களில் எடுத்துவருகிறார். இன்னிக்கு உங்க பதிவில் வாந்தி
அன்பு சகோ டோண்டு.,
சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா? அது தேவைதானா?
இப்படித்தான் தொடங்குகிறீர்கள்....
ஆனால் அவை ஓழிக்கப்பட வேண்டும் அதற்கு தீர்வு என்ன... என்பதை மையப்படுத்தி சொல்லி இருந்தால் அதை இஸ்லாம் மட்டுமே சாதிக்குமென நான் உட்பட எவரும் இங்கே சொல்லி இருக்க மாட்டோம். இஸ்லாத்தாலும் சாதியை ஒழிக்க முடியாது ஆக சாதிகள் இருக்க வேண்டும் என்பதே உங்களின் மறைமுக எண்ணமாக இருக்கிறது.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவியதால் மீனாட்சிபுர மக்களின் முன்னாள் சாதி இதுவென நிறுவி தற்போதைய சமூக சூழலில் தேவையற்ற நிலைபாட்டை ஓப்பிட்டு குறை சொல்கிறீர்கள். சுமார் நானூறு~ நானூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னாள் இஸ்லாத்தை தழுவியர்கள் இன்றும் கடலோர பகுதிகளில் வாழ்கிறார்கள் ஆம்! என்னைப்போன்ற கடலோர முஸ்லிம்கள் வம்சாவழியில் இஸ்லாத்தை ஏற்று சுமார் 500 வருடங்களே ஆகின்றது. எங்களின் பூர்விக சாதியை உங்களால் கண்டறிய முடியுமா... (எங்களாலே கண்டுப்பிடிக்க முடியவில்லை)
நாங்களும் இஸ்லாத்தை தழுவியர்கள் தான் எங்களுக்கு யாரும் பெண் கொடுக்க தயங்குவதில்லையே... உங்களின் தவறான புரிதலை பொதுவாக்கி கொள்ளாதீர்கள் சகோ டோண்டு.
உங்களின் குழப்பமான புரிதலுக்கு ஒரு சான்று பாருங்கள்
//சாதி இருக்கலாம். ஆனால் சாதிக்கொடுமைகள் இருக்கக்கூடாது//
சாதி இருக்கலாம் என்றால்....?
என்ன மாதிரியான சாதி...?
ஐயா... கொடுமைகள் நடப்பதே சாதிகளின் அந்தஸ்தின் அடிப்படையில் தான். அப்படியிருக்க கொடுமைகள் கூடாதென்றால் அவற்றை மையப்படுத்தும் சாதிகளே முதலில் கூடாது.! என்பதை அறிந்து அவற்றை களைவதே உண்மையான சிந்தனை!
//சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா?
கஷ்டம்தான், முடியவே முடியாது என்றும் சொல்லலாம்.//
இப்படி சொல்வதற்காக தான் இந்த ஆக்கம் எழுதப்பட்டிருந்தால் அதற்கு காழ்ப்புணர்ச்சி ஒன்றுதான் உங்களின் அடிப்படை எண்ணமாக இருக்கும்.
-மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
// கோவி.கண்ணன் said...
கிறிஸ்துவம் என்னை ஈர்க்கிறது, ஏசு கிறிஸ்துவின் போதனைகளில் நான் ஈர்க்கப்பட்டுவிடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது, கிறிஸ்துவ மதத்தின் மீதான என் பற்றுதல் பள்ளிக் காலத்தில் சனிக்கிழமை வேத பாட வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து துவங்கி விட்டதாக நினைக்கிறேன், ஏசு கிறிஸ்து இன்னும் என்னை நாடவில்லை என்பதால் இன்னும் தயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
Source: http://govikannan.blogspot.com/2012/02/blog-post_10.html //
February 14, 2012 5:11 AM
கோவி.கண்ணன் said...
//குறிப்பிட்ட சாதி/மதத்தினர் சிறுநீர் கழிக்கமாட்டார்கள், மலம் அவர்களுக்கு வராது, குறிப்பாக பாலியல் வேட்கை அவர்களுக்கு இருக்கவே இருக்காது என்று யாரும் நிருபனம் செய்தால் நானும் சாதி/மதம் இருப்பதையும் அவை மிகத் தேவை என்பதையும் நான் ஒப்புக் கொள்வேன். //
கடவுளாக திரிக்கப்படும் ஏசுகிறிஸ்துவே சிறுநீர் கழித்தார். அவருக்கு மலம் வந்தது. அது மட்டுமில்லை குசுவும் போடுகிறார்.
கர்த்தரின் காற்றுபிரியுமாம் சங்கீதமாய்!!??.. பைபிள்
கர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக? பைபிள்,
பைபிள்: ஏசாயா 16 அதிகாரம் ஸ்லோகம் 10 - 11
BIBLE: ISIAH. CHAPTER 16 VERSE: 10-11
_________________________
10. பயிர் வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
10. And gladness is taken away, and joy out of the plentiful field; and in the vineyards there shall be no singing, neither shall there be shouting: the treaders shall tread out no wine in their presses; I have made their vintage shouting to cease.
11. ஆகையால் மோவாபினிமித்தம் (மோஆபுக்காக) என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப் ( சுரமண்டலம்= HARP. ஹார்ப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் வீணையை போன்று ஒலி எழுப்பும் சங்கீத வாத்தியம்.) போல் தொனிக்கிறது.
11.Wherefore my bowels shall sound like an harp for Moab, and mine inward parts for Kirharesh.
bowels shall sound குடல்கள் தொனிப்பது (சப்தமிடுவது) என்றால் எப்படி? எதன் மூலமாக? ஆசனவாயில் மூலமாக காற்று பிரிவது தானே?
SOURCE:http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_15.html
சாதியை எதிர்ப்பதாக சீன் காட்டுபவர்கள் தங்களை ஏதோ மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு தமது முடிவுகளை மற்றவர் மேல் தினிக்கவே விரும்புகின்றனர் என எனக்கு தோன்றுகிறது.
நான் கூறுகிறேன், சாதி வேண்டுமென்று, ஏனெனில் அதற்கான சரித்திர காரணங்கள் உண்டு, அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டு சமூகத்தில் அதனுடைய பங்கை செலுத்தி வருகிறதே. அதை யாராலும் மறுக்க முடியாதே.
சாதி எதிர்ப்பாளர்கள் தங்களை மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு வைத்து பேசுவதை நான் ஏற்கவில்லை. அவர்கள் ஆஷாடபூதிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதாவது,
எனக்கும்...
சுவனப்பிரியனுக்கும்...
இன்னும் ஒரு கோடி தமிழர்களுக்கும்...
இன்னும் இருபது கோடி இந்தியர்களுக்கும்...
தங்கள் சாதி தெரியாமல் போனது மாதிரி..!//
அப்படியா? உங்களுக்கு இப்பதிவிலேயே விடை இருக்கிறதே.
இந்திய இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும் அதற்கான பிறப்படிப்படையிலான பிரிவினைகளைப் பேணி, அப்பிரிவினைகளுக்குள் கடுமையான வெறுப்புகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது. சுன்னி-ஷியா என்ற பிரிவினைகூட இன்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மாறிமாறிக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளத்தில் எழுநூறாண்டுகளுக்கு முன்னால் மதம் மாறியவர்கள் இன்றும்கூட முஜாஹிதுகள் என்று சுன்னிகளால் சற்றே தள்ளித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகக்கூட அவர்கள் ஒன்றுபடமுடியவில்லை. தமிழகத்தில் இன்றும்கூட பட்டாணிகளும் மரைக்காயர்களும் தங்களை ஒரே சமூகமென உணர்வதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன செஞ்சாலும் செல்ப் எடுக்க மாட்டீங்குது போல. இதே ஒரு மூனு வருஷத்துக்கு முன்னால் என்றால் பதிவு தீப்பிடித்த மாதிரி பின்னூட்டங்களால் நிரம்பி இருக்கும். மக்கள் உங்களை இக்னோர் செய்கிறார்களா டோண்டு சார்?
//மக்கள் உங்களை இக்னோர் செய்கிறார்களா டோண்டு சார்?//
இருக்கலாம், அல்லது எனது வாதங்களுக்கு சரியான பதில் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் நீங்கள்??? ஹி..ஹி..ஹி... போங்க சார்.//
திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் சைவ மடாதிபதிகள் பிராமணரா?
வைகுந்த ஏகாதசி அன்று ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்தில் அவரை தோளில் சுமந்து வருபவர்கள் பிராமணர்கள். ஆனால் நம்மாழ்வார் ஈழவ சமுதாயத்தை சேர்ந்தவர்!!!!
இதற்கு உமது பதில் என்ன??
/* குறிப்பிட்ட சாதி/மதத்தினர் சிறுநீர் கழிக்கமாட்டார்கள், மலம் அவர்களுக்கு வராது, குறிப்பாக பாலியல் வேட்கை அவர்களுக்கு இருக்கவே இருக்காது என்று யாரும் நிருபனம் செய்தால் நானும் சாதி/மதம் இருப்பதையும் அவை மிகத் தேவை என்பதையும் நான் ஒப்புக் கொள்வேன் */
வாறே வா... கோவி கண்ணன்!!!! தத்துவத்தில் உங்களை அடிச்சிகிற தமிழ் பதிவுலகில் ஆளே இல்லை. சும்மா பொழியிறீங்க போங்க. இவை எல்லாம் இல்லாம இருந்தா சாதி மதத்த ஏற்று கொள்வீர்கள், அப்படிதானே????
நீங்க சொன்ன எல்லாத்தையும் நாயும், பண்ணியும் செய்யும். அப்போ நீங்களும் அந்த வகையறாவா?????
அனைத்து சாதிகளுக்கும் சங்கங்கள் உண்டு.ஆதி திராவிடர்,நாடார்,வன்னியர்,முதலியார்,உடையார்,ரெட்டி)சங்கங்களில் பல கிருத்துவர்களை காணலாம்(ரஜெசெகர ரெட்டி ஒரு கிருத்துவர்.ஆனால் ஆந்திரத்தை ரெட்டிகள் ராஜ்ஜியமாக தான் செய்தார். அவர் மகன் செயித்தான் என்று கர்நாடக பா ஜ க ரெட்டிகள் திருப்பதிக்கு பனிரெண்டு கோடியில் வைர கிரீடம் கொடுத்தார்கள்.ரெட்டிகள் இன்றும் அவர் மகன் பின்னால் பெருமளவில் உள்ளனர்.அவர் மருமகன் பிராமணராக பிறந்து கிறுத்துவராக மாறி தீவிர கிருத்துவ மத பிராசாரம் செய்பவர்.அவரை நம்ம ஆளு என்று பிராமணர்கள் சேர்த்து கொள்வார்களா
தெரசாவிற்கு அடுத்து தலைமை பொறுப்பிற்கு வந்தவர் கிறுத்துவராக மாறிய பிராமண பெண்.அவரை பிராமண சமூகம் தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுமா.மற்ற சாதிகள் கண்டிப்பாக கொண்டாடும்,பெருமை படும்.அவர்களுக்கு இப்படி இருந்தால் தான்,இந்த கடவுளை வழிபட்டால் தான் இன்ன சாதி என்று எதுவும் கிடையாது.கிறுத்துவராக,புத்த மதத்தை சேர்ந்தவராக,சீக்கியராக (கன்ஷி ராம் ஒரு தலித் சீக்கியர்)சைவராக இருந்தாலும் சரி,மாட்டு கறி,பன்றி கறி தின்றாலும் சரி சாதி சங்கத்தில் பொறுப்பு வகிக்கலாம்.அரசியலுக்காக அதிக எண்ணிக்கைக்காக நம் சாதியும் வெள்ளாளரும் ஒன்று தான் என்று சாதிகளை இணைத்து கொள்ளலாம்.
கள்ளர் மறவர் தேவர் மூன்று சாதிகள் அவர்களுக்குள் பெண் கொடுக்க எடுக்க மாட்டார்கள்.இட ஒதுக்கீட்டிலும் வேறு வேறு பிரிவுகளில் வருபவர்கள்.ஆனால் அதிக சக்தி வேண்டும் என்று ஒன்றாக ஒரே குடையின் கீழ் வந்து விட்டார்கள்
பால் வியாபாரம் செய்வதால் இந்தியாவில் உள்ள யாதவர் அனைவரும் ஒன்று தான் என்று ஒரே கட்சியின் கீழ் சேரலாம்.வன்னியரும் குஜ்ஜரும் ஒன்று தான் என்று இணைந்து மத்திய அரசில் வேலை வாய்ப்புக்கு ,இட ஒதுக்கீட்டுக்கு போராடலாம்(ராஜஸ்தானத்தில் குஜ்ஜர்கள் அதிகம் உள்ள dausa தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கபட்டது.இஸ்லாமிய குஜ்ஜர்கள் பழங்குடியினர் பட்டியலின் கீழ் வருவார்கள்.அதனால் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியரை நிற்க வைத்து மூன்று லட்சம் வோட்டுக்கள் விழ வைத்து காங்கிரஸ் பா ஜ க இரண்டையும் மூன்றாம் நாலாம் இடத்திற்கு தள்ளியதும் தேர்தலில் நடந்தது. . அதே போல் பிராமண சங்கத்தில் பார்க்க முடியுமா.
பிராமண சாதிக்கு என்று சில பல வழக்கங்கள் உண்டு.அதை கடைபிடிக்கும் வரை தான் அவர்கள் சாதியில் ஒருவராக இருப்பார்.மாறாக நடந்து கொண்டால் அவர் அந்த சாதியை சேர்ந்தவராக பிராமணரால் ஏற்று கொள்ள படமாட்டார்.
கிறுத்துவராக,சீக்கியராக ,இஸ்லாமியராக மாறினால் ,புத்த மதத்தை தழுவினால் அவர் பிராமணர்களில் ஒருவராக சேர்த்து கொள்ள பட மாட்டார்.ஷேக் அப்துல்லாஹ்வின் தந்தை ஒரு காஷ்மீர் பிராமணர் .நூறாண்டுகளுக்கு முன் தான் மதம் மாறினார். அவரைஅவர் வாரிசுகளையும் முதல்வராக ,மத்திய மந்திரிகளாக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் பிராமணர் சங்கம் அழைக்குமா,சேர்த்து கொள்ளுமா ஆனால் மற்ற சாதிகளில் அப்படியா .பி எம் சயீத் பழங்குடியினர் தொகுதியில் ஒன்பது முறை செயிதவர்,சங்கமா கிறுத்துவராக இருந்தாலும் இருவரும் பழங்குடியின தலைவர்கள்.சீக்கியர் கன்ஷிரமோ,சான் பாண்டியனையோ,ஜே சி டி பிரபாகரனையோ பீட்டர் அல்போன்சையோ மதத்தை காரணம் காட்டி அவர்கள் சாதிகள் ஒதுக்குவதில்லை.அவர்களுக்கு போராட ஒரு தலைவன் தேவை.சாதிக்கு என்று தனித்தன்மை வாய்ந்த பழக்கங்கள் வெகு குறைவு,அவையும் பெரும்பாலும் அழிந்து விட்டன .அவர்களுக்கு சாதி ஒரு சொல் தேவைபட்டால் பயன்படுத்தி கொள்ள,வேண்டாம் என்றால் எளிதில் தூக்கி போட்டு விட
சாதி என்பதும் மதம் போல தான்.சாதிக்கு என்று குறிப்பான பழக்க வழக்கங்கள் உள்ள குழுக்களிடம் தான் சாதி வாழ்கிறது.அப்படி சாதிரீதியான பழக்கங்கள்,முறைகள்,தொழில்கள் அழிந்த மற்றவர்கள் அதை உதறுவது/அல்லது சில பல சாதிகளோடு இணைந்து பெரிய சாதியாக ஆவது எளிது.
நூல் விமரிசனம் என்ற வரை உங்கள் மதிப்புரை நன்கு அமைந்துள்ளது; அப்புத்தகத்தை நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.
சாதிப் பிரச்னைமீது சர்ச்சை குறைந்துவிட்டது போலவே தோன்றுகிறது.
சில கோணங்களில் பின்னூட்டங்கள் வந்திருந்த போதும், முழுமையான விவாதம் இல்லை. சுருக்கம் இவ்வாறு இருக்கலாம்: இஸ்லாமியர்களில் சாதிகள் உள்ளன; ஆனால் இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப பின் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளன.
இந்துக்கள் இடையிலும் புலம் பெயர்ந்து சென்றவர்கள்மத்தியில் (பிராமணர்கள் தவிர) சாதியின் தாக்கம் குறைவு; காலப் போக்கில் அழிந்து போகும் சாத்தியம் உள்ளது. குறிப்பிடத்தக்க சதவீதம் சாதிகள் ஒழியவேண்டும் (இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது மாறும்/ மாற வேண்டும் ) என்ற எண்ணம் காணப் படுகிறது. அது பிராமணர்கள் இடையே குறைவு. தங்களின் பதிவின் கருவே சாதிகள் ஒழியா (து) என்ற எண்ண ஓட்டத்தை தாங்கிப் பிடிப்பதைக் காண சற்று சங்கடமாக உள்ளது.
வணக்கம் நலமா டோண்டு சார்! ரொம்ப அழகா உங்கள் பார்பனிய வர்ணாசிரம சித்தாந்த்தத்துக்கு வலு சேர்த்து இருக்கீங்கள்.
ஜாதி வேண்டுமாம் ஆனால் ஜாதி கொடுமை வேண்டாமாம். ஏன் ஜாதி வேண்டாம் என்று சொல்லுங்களேன் அப்படி சொல்ல உங்களால் முடியாது இல்லையா?
ஹிந்து ராச்டிரியம் அமைக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்றுபடுங்கள் என்று சொல்லும் அத்வானியோ, ராமகோபால ஐயரோ தங்களது பார்பன உயர்சாதியை மறந்து தாழ்ந்த ஜாதியில் திருமண உறவு கொள்வார்களா?
முடியாது ஏன் என்றால் ஹிந்துத்துவா கோட்பாடே ஜாதிகளின் அடிப்படையில்தான். இந்த வர்ணாசிரம ஜாதிகொடுமையால் தானே ஹிந்துக்களாக இருந்த இருபது கோடி பேர் முஸ்லிம்களாக மாறியது.
நீங்கள் தொடர்ந்து ஆதரித்து எழுதினால் ஹிந்துத்துவா மொத்த கூடாரமும் காலியாகும் அங்கே பார்பனர்கள் மட்டும் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.
நான் எழுதிய்வற்றை டோண்டு ராகவன் பார்க்க மறுக்கிறார். வருணசாசிரம் இல்லையென்றால் இவர் தன்னை வடகலை ஐயங்கார் என்று சொல்லிக்கொள்ளவியலாது. இவருக்கு ஜாதியே கிடைக்காது அப்போது.
எங்கு படிப்பறிவு இல்லையே அங்கு பழமைவாத்ம் பேசப்படும். பழமையான பழக்கங்கள் தொடரும். அப்பழக்கங்கங்கள் வெகுவாகப் போற்றப்படும். அவைகளுக்குத் தெய்வத்தன்மையும் கொடுக்கப்படும். மக்களை அடக்கிவைக்க.
படிப்பறிவு இருக்குமிடத்திலும் பழமைவாதம் தீவிரமாகப் பேசப்பட்டால், அப்படிப் பேசுபவர்களுக்கு அதில் ஒரு ஆதாயம் இருக்கிறது என்பது மறை பொருள். டோண்டு ராகவனுக்கு படிப்பறிவு இருக்கிறது. வாழ்வதோ சென்னையில். இவருக்கு என்ன ஆதாயம இதில் இருக்கிறது என்பதே ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு வெளியில் காட்டப்படவேண்டும். இவர்களை அப்போதுதான் சமூகம் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கும்.
பொதுவாக, பலர் இங்கே சொன்னதுபோல, தமிழ்ப்பிராமணர்கள் எங்கு சென்றாலும் பழமைவாதிகள். தங்கள் ஜாதியுணர்வுக்கு உரமிட தமிழ்ச்சங்கள் அமைத்து, கணபதி ஹோமம் நடத்துவார்கள். நடராஜ ஐ.பி.எஸ், சென்னையில் குற்றங்களைக்குறைக்க மருந்தீசுவரராலும் வடிவுடையம்மானாலுமே முடியும். எனவே காவலர்கள் அத்தெய்வங்களை வணங்க வேண்டும்!' என காவலர்களுக்கு அறிவுரை ஒரு கூட்டத்தில் நல்கியிருக்கிறார். இவர் ஒரு ஐ.பி.எஸ். என்ன படித்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் இவர்கள் இப்படித்தான். ஏனெனின், அக்கால உலகம் அவர்களைப்போற்றியது. மன்னர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கென்று தனி பழக்கங்கள். பிறமக்கள் அவர்களை சிறப்புச் செய்தார்கள். 'சாமி...சாமி' என்று கூழைக்கும்பிடு இவர்களுக்குப் போட்டார்கள். அவர்கள் எழுதிய இந்து மதத்தால் இது அவர்களுக்கு வந்தது. இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் இம்மாற்றத்தை ஏற்க முடியவில்லை. எனவே பழமையைப்போற்றுகிறார்கள். அதன் ஒரு தாக்கமே டோண்டு ராகவன் ஜாதிகளை அழிக்கமுடியாதென்பதும் அவை வேண்டுமென்பதும் ஆகும். இதற்காக இவர் இசுலாத்தையும், பிறமக்களையும் காட்டுகிறார்கள். ஜெயமோகனைத் துணைக்கழைக்கிறார்.
இன்றைய சென்னையில் பிற மாநில மக்கள் பெருகிவருகிறார்கள். அவர்கள் ஆதிக்கம் பெருகப்பெருக தாமும் தம் வாழ்க்கைமுறையும் நிலபுலங்களும் அழிக்கப்படுமோ, பறிக்கப்படுமோ என்ற பயம் வரும். தமிழர்களிடையே ஒரு ஒற்றுமை நேரலாம். ஓரிடத்தில் ஒரு பெரும் கொள்ளைநோய், அல்லது பூகம்பம் அல்லது வெள்ளப்பிரளயம் வரும்போது ஆங்கு மக்கள் அனைத்தையும் மறந்து ஒன்று சேர்ந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதைப்போல. அப்போது தமிழரிடையேயிருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஜாதியுணர்வு ஒழிந்து, மார்வாடி, பஞ்சாபி, பீஹாரி, ஒடியா, தெலுங்கர் என எத்னிக் பிரிவினைகள் தோன்றி, அவற்றை எதிர்நோக்கத் தமிழர் என்று ஓருணர்வு தோன்றியே தீரும். பீஹார் இளைஞர்கள் இப்போது தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் காணப்படுகிறார்கள். ரயில்வே, வங்கிகள் என்று அனைத்தையும் பிடிக்கிறார்கள். பம்பாயிலிருந்து அடித்து விரட்டப்படுவதால் அவர்கள் படையெடுப்பு தமிழகமும் கேரளமும் ஆகும். இன்னும் சில பத்தாண்டுகளேயாகும் தமிழ்கம் இந்தி தேசமாக. அப்போது ஜாதி பேசிக்கொண்டிருந்தால், ஜாதிகளை அழிக்க முடியாதென்ற வாழ்ந்து முடியப்போகும் டோண்டு ராகவனையும் எழுத்தால் வயிறுகழுவும் எழுத்தாளனையும் கேட்டுக்கொண்டிருன்தால் நம் குழந்தைகள் கதியென்னாவது?
ஜாதிகளுக்கு கரணியங்கள் வேண்டும். உந்துக்கள் வேண்டும். இல்லாவிட்டால் ஓடா. இக்கரணியங்களும் உந்துக்களும் காலாவதியாகும்போது ஜாதிகளும் காலாவதியாகும். குழ மனப்பான்மை இருக்கும். ஆனால், அது, மத வாரியாக, மாநில வாரியாக (எத்னிசிட்டி)இருக்கும். .
சாதியை எதிர்ப்பதாக சீன் காட்டுபவர்கள் தங்களை ஏதோ மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு தமது முடிவுகளை மற்றவர் மேல் தினிக்கவே விரும்புகின்றனர் என எனக்கு தோன்றுகிறது.
டோண்டு சார் சாதி எதிர்ப்பிற்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்.அம்பேத்கர்,பெரியார் என்று சொன்னாலாவது சரி.வர்ணாஸ்ரம முறையை ஆதரித்தவர் காந்தி .இறப்பதற்கு சில காலம் முன் தான் சாதி விட்டு சாதி திருமணங்கள் பரவாயில்லை என்ற அளவிற்கு மாறியிருந்தார்.அவரை மாற்றியதில் பெரும் பங்கு அம்பேத்கருக்கு உண்டு.
இதில் எதிர்க்கவோ ஆதரிக்கவோ என்ன இருக்கிறது.இந்தியன்,தமிழன்,இந்து,கிருத்துவன், செங்கேல்பட்டுக்காரன் எனபது மாதிரி அது ஒரு அடையாளம்.அதை மாற்றி கொள்ளும் உரிமை எல்லாருக்கும் உண்டு.மாறவே மாறாது என்று சொல்வது தான் இடிக்கிறது.
பிராமணர்களிலேயே இப்போது வெளிநாடுகளில் வசிப்பவர் பல லட்சங்களில் இருக்கலாம்.அங்கேயே பிறந்து வளர்ந்த அவர்களின் குழந்தைகள் எவ்வளவு பேர் அதே சாதியில் திருமணம் செய்வர்.ஒரு சதவீதத்தை கூட அது தாண்டாது.இந்துவாக,இந்தியனாக இருந்தால் பரவாயில்லை என்று தான் பெற்றோர் எண்ணுவர்.சாதி வாழ அக்ரஹாரம்,சாதிக்கு ஒரு தெரு,சாதிக்கு மட்டுமே உரித்தான வேலை எனபது முக்கியம்.அவை இல்லாமல் போகும் போது அதற்க்கு சங்கு தான்.
IAS அதிகாரிகள்,அரசியல் தலைவர்களில்/கலைஞர்களில்,பைலோட்களில்,விமான பணிப்பெண்களில் ,மருத்துவர்களில்,வெளிநாடுகளில்,வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள்,பனி புரிபவர்களில் (அனைத்து சாதி,மத மக்களுடன் சேர்ந்து படிக்க,வேலை செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்) சாதி விட்டு சாதி திருமணம் அதிகம் இருக்கும்.சாதிக்கு மட்டுமே உரித்தான தொழில்கள் புரியும் அர்ச்சகர் போன்றவர்களிடம் அது மிக குறைந்த அளவில் /அல்லது இருக்கவே இருக்காது.அனைத்து தொழில்களிலும் அனைத்து சாதிகளும் இடம் பெறும் போது,அனைவரும் ஒன்றாக ஒரே அடுக்கு மாடி குடியிருப்பு,அரசு விடுதி,வீடுகளில் குடியிருப்பது பெருமளவில் நடக்கும் போது சாதி எளிதில் வலுவிழக்கும்
//இல்லை.
சாதிக்கொடுமைகள் எழும் அளவிலேயே அடக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட சாதியினர் தாங்கள் கொடுமைப்படுத்தப்படாமலிருக்க விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
விழிப்புடன் எப்படி செயலாற்றுவது? திருமாவளவன், ஜான் பாண்டியன், கிருஸ்ணசாமி, பசுபதி பாண்டியன், சுபாஷ் பண்ணையார் போனற ஜாதி திலகங்கள் செயவதைப்போல வெட்டு, குத்து, அடித்து ஒடுக்கியா ?
அவர்களைக்கேட்டால் 'தாங்கள் செயவது கொடுமைப்படுத்தலன்று; எதிர்களை அடக்க என்பார்கள். ஆக உங்கள் எண்ணம் குறும்புத்தனமானது. சாதிககொடுமைகள் எழும் அளவிலேயே அடக்க, வன்முறையாலேயே முடியும். அப்படித்தான் நடக்கிறது இன்றைய தமிழ்கத்தில்.
வேறெதாவது முயற்சியுங்கள் 'சாதிகள் இருந்தே தீரவேண்டும்' என்ற கருத்தை நிலை நாட்ட ! Good Luck !!
Mr Dondu,
Do you agree that in your community the children are taught you are the superior and rest are all inferior caste/people?
I guess you too were brought up in the same way. Am I right?
One cant get rid of lot of things..
Diseases such as cancer, Diabetes, Hypertension etc.
Feelings such as Jealousy, arrogance, ignorance etc
Debates such as "existence of God" etc.
Just like that "Caste", "religion" are going to exist for a while. Sure, you cant get rid of them completely, at least, in our lifetime.
So, let us live with caste and prejudices as we cant get rid of them. Let us not fight against them or protest against them. Especially when we are not the one who is LEAST affected because of its consequences and whatsoever.
Just like that, Let us not fight against cancer, diabetes, HT. Let us learn to live with them. Let people those who get such diseases die and meet wtih God. The earlier you meet with the God, the better or not?
Just like that let us not preach not to have jealousy, arrogance, or ignorance or greed either. Let us learn to live with them. God wanted us to have such things. He created them for US. We should not fight against it either. If you fight against them it is wrong, "unnatural". Even if you do, it is waste of your time, you cant win anyway, against God's will. Right?
So, what is important is, not to fight against any harmful "things".
May be God created them for us to have them and learn to live with them. Right?
Let us all go, pray God. He will take care of our probelms. Why worry about natural causes, right? LOL
@வருண்
கேன்சரும் சாதியும் ஒன்றல்ல. சாதி என்பது மனிதனுக்குள் இருக்கும் குழுமனப்பான்மை அது ஒழியவே ஒழியாது.
மேலும் நீங்கள் கூறுவது போல அது வெறுக்கத்தக்கதல்ல என்பதே எனது இப்பதிவு. ஆகவே உங்கள் உவமைகளை நிராகரிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழை தாய்மொழியாக கொண்டவருக்கு பிறந்தவன் தமிழன் .அவனும் தமிழில் பேசுபவன்.அல்லது தமிழத்தில் நெடுங்காலமாக வசிப்பவன்.தமிழ் அறிந்தவன்.வேறு மொழியை தாய்மொழியாக கொண்டாலும் தமிழை நேசிப்பவன்.தமிழ் தமிழ் என்று உருகுபவன் என்று தமிழர்களை அடயலாபடுத்தலாம்.இதிலும் மரபணு சோதனை மூலம் யார் யார் உண்மையான தமிழர் என்று ஆராய்ச்சியில் வரும் முடிவு தான் சரி என்பவர்கள்,இரு பெற்றோரும் தமிழராக இருந்தால் தான் தமிழர்கள் என்று கூவுபவர்கள் வேறு வரையறைகள் வைத்திருக்கலாம்.
ஆனால் இப்போது தமிழ் மொழியே தெரியாமல் தென்னாப்ரிக்காவில் வசிப்பவர்கள் யார். அவர்கள் தமிழக வம்சாவழியினர்.அவர்கள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சமபந்தம் இருக்கிறதோ அதை விட குறைவாக தான் இப்போது சாதிக்கும் பெரும்பான்மையான மக்களுக்கும்
சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .
ஒரே சாதிக்குள் திருமணம் எப்படி சாதிக்கு/வர்ணத்துக்கு முக்கியமோ(அது கூட ராஜாக்களுக்கும் ராஜகுருக்களுக்கும்,ஆண்களுக்கும் கிடையாது.நம்பூதிரிகள் வர்மா இன பெண்களை மணந்தாலும் அவர்களின் வாரிசுகள் கோவில் பணி செய்யலாம்.அவர்கள் நம்பூடிரிகலாக தான் கருதப்படுவார்கள்.ஆனால் வேறு வர்ண பெண்களை மணந்தால் அவர்கள் தாயின் வர்ணத்தை சேர்ந்தவர்கள்.தந்தையின் வர்ணத்தை மூன்று,ஐந்து,ஏழு தலைமுறைக்கு வழுவாமல் பின்பற்றினால் தந்தையின் வர்ணத்தை பெறலாம் என்று இருந்தது.ஒரே வர்ணத்துக்குள் திருமணம் என்பதில் பெரிய தடை கிடையாது.ஆண் தனக்கு கீழே உள்ள வர்ணத்தில் உள்ள பெண்ணை திருமணம் செயாவோ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் அவர்களின் வாரிசுகள் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரில் தான் சேர்த்தி ) அதை விட முக்கியம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தொழில்.அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா.அது மாறி விட்ட பின் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்,எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்று வந்த பின் சாதியின் அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டது.
இப்போது சாதி எனபது எல்லா வேலைகளிலும் ,ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று கேட்டு சாதியின் அடிப்படையான சாதிக்கே உரித்தான தொழில் வேண்டாம் என்று போராட மட்டும் தான் பயன்படுகிறது.
1.சாதி என்பது மனிதனுக்குள் இருக்கும் குழுமனப்பான்மை அது ஒழியவே ஒழியாது.
2.மேலும் நீங்கள் கூறுவது போல அது வெறுக்கத்தக்கதல்ல என்பதே எனது இப்பதிவு - டோண்டு ராகவன்
குழுமனப்பான்மை ஒழியாது. ஆனால் சாதிகள் ஒழியாதென்பது தவறு. சாதி என்பது கற்பனை. குழ மனப்பானமையை உருவாக்க உதவும் ஒரு கருவி.
குழுமனப்பான்மை ஒழியாது ஏனென்றால் அஃதொரு இயறகை சுபாவமாதலாலே. சாதி என்ற உணர்வு இயற்கை சுபாவமில்லை. வெறும் கற்பனை.
குழுமனப்பான்மை பலபல இயற்கை, செயற்கை காரணிகளால் உருவாக்கபடும். எ.கா. தமிழர், தெலுங்கர், மலையாளி, பஞ்சாபி போன்ற எத்னிக் இயல்புகள் இயற்கை. அவற்றால் உருவாக்கப்படும் குழுமன்ப்பான்மை நிரந்தரம்.
சாதிகள் என்பவை கற்பனைக்காரணி. நிரந்தரமன்று.
உதாரணம். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரன் பீஹாரிலிருந்தும் சென்னை மாகாணத்திலிருந்தும் இந்தியர்களை, பிஜி மற்றும் கிழக்கிந்திய தீவுகளுக்கு கட்டாயப்படுத்தி கப்பலேற்றினான். அவன் அப்படிச்செய்யுங்கால், சென்னையிலிருந்து சென்றவர்கள் சாதிவாரியாகத்தான் - நாயுடுக்கள், செட்டியார்கள், பிள்ளைகள், வன்னியர்கள் என்றுதான் இருந்தார்கள். பீஹாரும் அப்படியே. இந்தியாவில் சாதிப்பேயால் பீடிக்கப்பட்ட மிகவும் மோசமான மாநிலம் பீஹாராகும்.
ஆனால் இன்று நிலைமையென்ன ? அவர்கள் அனைவரின் சாதிகள் அழிந்துவிடடன். இந்திய வம்சாவளிகள் என்ற ஒரே அடையாளமே அவர்களுக்கு. எப்படி சாத்தியாமாயிற்று?
டோண்டு ராகவனின் இரண்டாவது கருத்துக்கு வருவோம். "அது வெறுக்கத்தக்கதல்ல."
இது முதல் கருத்தைவிட மிகவும் தவறானது. ஆபத்தானது. பொய்.
குழுமனப்பான்மை வெறுக்கத்தக்கதா இல்லையா என்பதை வாழ்க்கைதான் சொல்லும். அதை ஒரேயடியாக மாறாத்தத்துவமாகச் சொல்ல்வியலாது.
ஒரு செயல் அஃது சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப்பொறுத்தே கணிக்கப்படும். சாதிக்குழு உணர்வு என்ன விளைவை ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது என்பது இங்கு படிப்போருக்கெல்லாம் தெரியும் டோண்டு ராகவனைத்தவிற. அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறார். அதன் விளைவைப்பார்த்து நாம் தாராளாமாக 'வெறுக்கத்தக்கதே' என உரக்கச்சொல்லலாம்.
தமிழ்ச்சான்றோர்களும், ஆன்றோர்களும் காலங்காலமாக தமிழருக்குச் சொன்னது: சாதி வெறுக்கத்தகதே. இப்படிச்சொன்ன, பாரதியார் பொய்யரா? திருநாவுகக்ரசர் பொய்யரா? அவ்வையார் பொய்யரா?
//குழுமனப்பான்மை வெறுக்கத்தக்கதா இல்லையா என்பதை வாழ்க்கைதான் சொல்லும். அதை ஒரேயடியாக மாறாத்தத்துவமாகச் சொல்ல்வியலாது.
//
இதை நான் மேலும் சிறிது விரிக்கவேண்டியதாகிறது. நேற்றைய அல்லது இன்றைய செய்தித்தாள்களைப் படித்திருப்பீர்கள். உததபுரத்துக்கு மக்கள் மதுரை கலெக்டரை நேற்றைக்கு முந்திய தினம் சந்தித்து தங்கள் ஊருக்கு என்னென்ன்ன உதவிகள் வேண்டுமென விண்ணப்பம் கொடுத்தார்கள். தாங்கள் இப்போது ஒன்றாக உடன்பிறவாக சகோதரர்கள். இங்கு இப்போது எந்த ஜாதித்துவேசமும் கிடையாது என்று இரு ஜாதியினரும் நேரில் கலெக்டரிடம் நிருபர்களிடம் சொல்ல அஃதொரு ப்ரபரபப்பான செய்தியானது. கலெக்டர் சரியென்றார். தி இந்துவின் மதுரைப்பதிப்பில் முதல்பக்கத்தையும் நேற்றைய தினமலரின் முதல்பக்கத்தையும் பார்க்க
இன்றைய உத்தபுரம் ஒரு புது உலகத்தை நோக்கி மகிழ்ச்சிய்டன் பயணிக்கிறது. வரும் காலங்களில் இரு ஜாதியினரும் பலபல பொதுதுயரங்களை எதிர்நோக்கி அவைகளைச்சமாளித்து வெற்றிகாணும்போது அவ்வெற்றியில் பங்கு பெரும்போதும், அல்லது துயரங்களை வெல்ல முடியாமல் ஒன்றாகத்துவலும்போதும் அவர்களின் சகோதரப்பாசம் இறுகும். இறுகஇறுக அவர்கள் ஒன்றாவார்கள். அப்போது இரு ஜாதியினரின் "ஜாதிகள்" காலாவாதியாகும். பிஜித்தீவில் நடந்தது போல.சவுத் ஆப்பிரிக்காவில் நடந்தது போல. எல்லாம் காலத்தில் கையில்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை இன்றைய உத்தபுரம் காட்டுகிறது. வெறுப்பென்பதற்கிடமில்லை.
எனினும் டோண்டு ராகவன் கடையில் "ஜாதிகள் ஒழியா'வென்ற வியாபாரம் ஜோராக நட்க்கிறது. அஃது ஏன்? என்ற கேள்விக்கு விடையைப் வரும் நாட்களில் சொல்கிறேன்.
பின்னூட்டம் எழுதியவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு அரசாங்கமே செய்கிறது.
தமிழ் நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களில், பெயருக்குப் பின்னால் surname போட்டுக்கொள்ளும்
நடைமுறை உள்ளது. surname என்பது ஜாதிப் பெயரே. surname - ஐ வைத்து ஒருவரின் ஜாதியைக் கண்டு பிடித்து விடலாம்.
குறைந்த பட்சம் அந்த நபர் மேல் ஜாதியா அல்லது கீழ் ஜாதியா என தெரிந்து விடும்.
பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் , தற்சமயம், surname சேர்க்க ஆரம்பித்துள்ளார்கள். அய்யர், செட்டியார், நாடார் என்று பெயருக்குப் பின்னால்
போட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
ஜாதி கிடையாது, வேண்டாம் என்பவர்கள் கூட, பிற ஜாதியில் மணமுடிப்பதில்லை. கலப்பு மணம் எந்தனை விழுக்காடு நடக்கிறது என்று
விஷயம் அறிந்தவர்கள் தக்க விபரங்களுடன் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஜாதி வேண்டாம் என்று சொல்பவர்கள், இட ஒதுக்கீட்டின் படி வேலையோ அல்லது பிற சலுகைகளோ தேவையில்லை என்று கூறுவார்களா?
கேட்டால் அது உரிமை என்பார்கள்.
Sir,
Sorry, I forgot to add my name.
Also I am waiting for your answer.
:)
Hariprasad
Dear Mr.Dondu,
perhaps the only benefit we derived from your article is we get to read the brilliant observations of 'when it is high time' and few of our muslim friends. if you still stick to your point on casteism not even god can save you.
however the most alarming issue is the poison you might have infected on young kids/read ers who may happen to read your blog or kids in your immediate family who gets influenced by your stupid opinion.
@கலீல்
முட்டாள்கள் சொர்க்கத்தில் நீங்கள் இருக்க நினைத்தால் அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu,
You have conveniently ignored the commnents of "When it is high time" on the absence of caste amongst the indian community in Souh Africa, Fiji and Mauritius. Please note: Groupism still exists in these communities as indians but not on any caste lines. How do you explain that?
Also, you tend to equate castist and classist tendencies as identical behavioral attitudes. The class differences in the western societies are based on economical considerations. If a working class guy got rich he would automatically move into the rich class but the same mobility would be nearly impossible in the caste hierarchy. There might be a few exceptions but they do not constitute the norm. It is this aspect that makes the caste classification a kind of stigma. This needs to go period. Your attempt at equating the group and caste tendencies alike is at best provocative.
@தாறுமாறு
பெயருக்கேற்ற மாதிரி நீங்கள் எனது படிவை தாறுமாறாகத்தான் புரிந்து வைத்துள்ளீர்கள்.
நான் கூறியது என்ன, குழு அமைப்பது மனித இயற்கை அவ்வளவுதான். அதன் ஒரு வெளிப்பாடே சாதியமைப்பு. அது போல இடத்திற்கேற்ப வெவ்வேறு அமைப்புகள் உள்ளன.
நீங்கள் விதந்தோதும் தென் ஆப்பிரிக்காவில் குழு அமைப்பு வேறு ரூபத்தில் உள்ளது, அதுவும் நிறவெறி ரூபத்தில் கூட இருந்துள்ளது.
ஒரு வெளிப்பாட்டையே பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu,
Groupism is a natural tendency of human beings but in the same breathe you go on to say that castism is one other manifestation of this tendency. This is plain wrong. Several comments have pointed this out but you either ignore them or tend to say what you have been saying all along. enna kodumai saravanan! ungalaith thiruththa mutiyAdhu.
கல்வி,வேலையில் ஒதுக்கீடு செய்யபடுவதால் அவர்களையும் கணக்கெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்த படுகிறது.OTHERS உள்ளிட்ட நான்கு குழுக்களை அது உருவாக்குகிறது.
அரசு உருவாக்கிய சாதிகள் SC /ST /OBC .பல சாதிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கி உள்ளது.OC யாக உள்ள சாதிகள் BC யாக, BC யாக உள்ள சாதிகள் SC /ST
வேண்டும் என்று போராடுவதும் அரசு முடிவுகளால் இடம் மாறுவதும் உண்டு.இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் ஏழு பேர் கொல்லபட்டதர்க்கோ அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சாத்திய அடக்குமுறைகளுக்கோ எதிராக குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள வேறு மொழி,உணவு,கலாசாரம் கொண்டவர்களையும் ஒன்றாக போராட வைக்க உதவியுள்ளது.
இந்தியாவெங்கும் உள்ள அரசு ,பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் தொழில் சங்கங்கள்,மற்றும் ஊழியர் தொழிற்சங்கங்கள் சாதி விட்டு சாதி திருமணங்களுக்கு ஆதரவாக தான் உள்ளன.பல திருமணங்களை நடத்தியும் வைக்கின்றன. சாதிவெறியோடு ஒரே சாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.பல சாதி உறுப்பினர்களை கொண்ட சங்கங்கள் /கட்சிகள் சாதி விட்டு சாதி நடக்கும் திருமணங்களுக்கு ஆதரவாக தான் இருக்க முடியும்.
சாதி கிடையாது என்று யாரும் கூறவில்லை.அது தேவை இல்லாத ஒன்று என்றும்,சாதி பார்த்து வீடு வாடகைக்கு விடுவதோ,வசிக்குமிடம் முடிவு செய்வதோ,திருமணம் செய்வதோ வேண்டாம் என்று தான் சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புபவர்களால் பிரச்சாரம் செய்யபடுகிறது.
சாதி வலுவிழக்க மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் விட முக்கிய காரணம் பெண் விடுதலை,பெண் கல்வி,குடும்ப கட்டுபாட்டு முறைகளால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மேல் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள் .இங்கே இஸ்லாம் அடிபட்டு போகிறது.ஹிந்துக்களில் சாதி மறைந்தாலும் இஸ்லாமியர் இடையே சாதி நீடிக்க கூடிய வாய்ப்பு இதனால் உண்டு.படித்து கணினி பொறியாளர்,கலெக்டர்,மருத்துவர்,ராணுவ போலீஸ் அதிகாரி ,விமான பணிப்பெண்,நடிகை யாரும் கண்ணை மூடி கொண்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணமுடித்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுடன் படித்த ,வேலை செய்பவர்களில் மனதுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
சாதி,மதம் இரண்டும் ஆணாதிக்கத்தின் வேர்.பெண் விடுதலை அதை வெட்டாமல் அதன் இலக்கை அடைய முடியாது.பாலியல் தொழில் செய்யும் பெண்ணை கல்லால் அடிப்பதை காப்பாற்றும் நிறுத்தும் கடவுள்கள் தான் உண்டே தவிர பல பெண்களிடம் செல்லும்/திருமணம் செய்யும் ஆணை ஓரமாக நிற்க சொல்லும் மதமோ,சாதியோ ஒன்று கூட கிடையாது.அப்படி இருந்திருந்தால் அது அக்பரின் தீன் இல்லாஹி போல ஒரு தலைமுறை கூட தாண்டாது.
கலெக்டர் ஆக,போலீஸ் ஆக,அரசியல்வாதியாக இருக்கும் ஆண் தன ஒரு மகளோ,இரு மகள்களோ தன்னை போல் ஆக வேண்டும் என்று தான் விரும்புகிறான்.ஐந்து ஆண் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த போது பெண்களை பள்ளியோடு நிறுத்தி திருமணம் செய்த முறை அடியோடு ஒழிந்து வருகிறது.இருக்கின்ற ஒரிரண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது தவறு என்ற எண்ணமும் வலுப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களும் இப்போது அதிகம்.அந்த குழந்தைகளும் தன பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டுமானால் காதல் திருமணம் அவர்களுக்கு கை கொடுக்கும்.பெற்றோர் பார்த்து வைக்கும் ஒரே சாதி திருமணங்கள் பெற்றோருக்கு முழு டாடா காட்டி விட்டு செல்ல தான் செய்யும்.
திருமண முறையின் புதிய மாற்றங்களான ஒத்த வயது உள்ளவர்களிடையே(நான்கு,ஐந்து வயது வித்தியாசங்களுக்கு மேல் இப்போது பெற்றோர் பார்த்து சொன்னாலும் எந்த பெண்ணும் ஒத்து கொள்வதில்லை) மணமுடிக்கும் பழக்கமும்,வயதானாலும் பரவாயில்லை,படித்து வேலை கிடைத்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்,இருவரும் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையும் சாதிக்கு சாவுமணி அடித்து விடும்.போலீசோ,விமான பணிப்பென்னோ கோவிலில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.அதே வேலை /அதோடு சம்பந்தப்பட்ட வேலை /அவளோடு பணிபுரிபவரை திருமணம் செய்தால் தான் நல்லது,புரிந்து கொண்டு வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம் என்று நினைப்பார்கள்.
ஒத்த வயது,படிப்பு,வேலை என்று வரும் போது இருபாலருக்கும் அதே சாதியில் துணை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.பெண் குழந்தை சுமை என்று எண்ணியதால் குறைந்த பெண்களின் சதவீதமும் ஒரு காரணம்.
1.ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு அரசாங்கமே செய்கிறது. தமிழ் நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களில், பெயருக்குப் பின்னால் surname போட்டுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. surname என்பது ஜாதிப் பெயரே. surname - ஐ வைத்து ஒருவரின் ஜாதியைக் கண்டு பிடித்து விடலாம்.குறைந்த பட்சம் அந்த நபர் மேல் ஜாதியா அல்லது கீழ் ஜாதியா என தெரிந்து விடும்.
2.ஜாதி கிடையாது, வேண்டாம் என்பவர்கள் கூட, பிற ஜாதியில் மணமுடிப்பதில்லை. கலப்பு மணம் எந்தனை விழுக்காடு நடக்கிறது என்று விஷயம் அறிந்தவர்கள் தக்க விபரங்களுடன் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.
3.ஜாதி வேண்டாம் என்று சொல்பவர்கள், இட ஒதுக்கீட்டின் படி வேலையோ அல்லது பிற சலுகைகளோ தேவையில்லை என்று கூறுவார்களா? கேட்டால் அது உரிமை என்பார்கள்.
திரு நாகராஜன்!
ஜனநாயகம் வந்து 60 ஆண்டுகள்தான் ஆகின்றது. அரசியலவாதிகள் ஓட்டுவங்கிகளை கணக்கில் வைத்தே ஓட்டு வேட்டையாடுகிறார்கள். ஜாதிக்கூட்டம், மதக்கூட்டம் அவர்களுக்கு ஓட்டுவங்கிகளாகின்றன. ஓட்டுவங்கிகளை அரசியல்வாதிகள் நாடாமலிருக்க தேர்தல் சட்டம் மாற்றப்பட்டால் ஜாதிரீதி கணக்கெடுப்பு காலாவதியாகும். ஜாதிகளின் முக்கியத்துவம் நீர்த்துப்போகும்போது அரசாங்கம் வேறுகணிப்பை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பும். நான் சொல்வதென்னவென்றால், அரசாங்கம், அரசியல்வாதிகள் செயல்கள் சந்தர்ப்பு சூழ்நிலையால் தாற்காலிமாக நடைபெறுவதே. அச்செயலகளை அடிவைத்து 'சாதிகளை ஒழிக்க முடியா" என்ற வணடியோட்ட முடியாது.
2. கலப்பு திருமணங்கள் நிறைய நடக்க நாம்தான் ஒத்துழைக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஏதுக்கரணிகளை நாம்தான் உருவாக்க வேண்டும். அவ்வேதுக்கள் உருவாவதை இப்படிப்பட்ட டோண்டு ராகவன் ப்திவுகளும் பேச்சுக்களும், தடைக்கற்களாக இருக்கின்றன என்பதே நாம் பார்க்கவேண்டியது. கனடா சென்ற தமிழர்கள் இன்று கலப்புமனங்கள்தான் புரிகின்றனர். எனவே சமூகச்சூழ்னிலை கலப்புத்திருமணங்களை உருவாக்க்கியே தீரும். அப்போது "இவர் செய்ய்வில்லை!" "அவர் செய்யவில்லை!" என்பனவெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சுகளாகும். டோண்டு ராகவனின் ஜாதிசசமூகத்தை (தமிழ்ப்பார்ப்பனச்சமூகம்) உற்று நோக்கிப்படியுங்கள். அங்கு ஏன் கலப்புத்திருமணங்கள் பெருகி ஜாதியையே அழித்துவிடுமோ என்ற பயம் உருவாகிறதென்பது.
3. சர் நேம்,. இதைப்பற்றித்தனியாக எழுதுகிறேன்.
4. இடஒதுக்கீடு எனப்து சமூகத்தில் ஒரு காலகட்டத்தின் நிர்ப்பந்தம். அது நிரந்தரமன்று. 100 ஆண்டுகளுக்கு முன்பிரிந்த சமூகம் இன்றில்லை. இன்றைய சமூகம் சில பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்று சொல்ல முடியுமா? ஆனால் கண்டிப்பாக மாறித்தான் இருக்குமல்லவா.? இதைப்பற்றி என் அடுத்த மடலையும் பார்க்கவும்.
ஆனால் டோண்டு ராகவனின் 'சாதிகளை ஒழிக்க முடியா' எனப்தும் ஜெயமோகனின் நீட்டி முழுக்கும் சாதிபற்றிய கட்டுரைகளும் ஒரு சித்தாந்த தத்துவமாகும். அதை நிரந்தரம் என நிலைநாட்ட இருவரும் துடிக்கிறார்கள். அது பொய்யான தத்துவம் மட்டுமல்ன்று; அஃதொரு நல்ல சமூகத்தை உருவாக்கத் தடை செய்யும் என்பதே என் வாதமாகும்.
வெள்ளைக்காரந்தான் ஜாதிவாரிக்கணக்கைத் தமிழகத்தில் எடுத்தான் முதன்முதலாக.
இடஒதுக்கீட்டிற்கன்று. எந்த ஜாதிக்கு எந்தக் குணம்; அதை வைத்து அவர்களை எப்படிப்பயன்படுத்தலாம். அல்லது துன்புறுத்தலாம் என்றே.
அதன் படி, அவன் தேவர்ஜாதியினரில் கள்ளர்களை, குற்ற்ப்பரம்பரையென எடுத்து ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தெரியப்படுத்தினான். இன்று துள்ளும் தேவர்கள் அன்று அவனை எதிர்க்கமுடியவில்லை. அவன் கையிலிருந்தது துப்பாக்கியல்ல்வா?
பார்ப்ப்னர்களை அறிவுசார்ந்த வேலைக்கு இலாயக்கானவர்கள் என்று முத்னமப்ப்படுத்தினான். ஃபார்வர்டு ஜாதி.
இவன் தம்மை பிற்படுத்திய ஜாதியாக்கிவிடுவானோ எனப்பயந்து, ஒவ்வொரு ஜாதி அமைப்பும் இரகசியமாக சென்சஸ் கமிஷனரைச் சந்தித்தனராம்!! இந்த மன்னர் ப்ரம்பரை, அந்த மன்னர் பரம்பரை எனவே ஃபார்வர்டு ஜாதியில் சேர்க்கவேணுமெனா கெஞ்சினார்களாம்!!. வெள்ளைக்காரன் சிரித்துக்கொண்டானாம்.!!!
இன்று ? பார்ப்ப்ன அர்ச்சகர்கள் தமிழ்நாடு கவர்னரிடம் தங்களை பிற்படுத்த ஜாதியாக்கி சலுகைகள் தரவேண்டுமென மனுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்த்தில் 90 விகிதத்துக்கு மேலே அனைவரும் பிசிக்களாகிவிட்டார்கள்.
நாளை? இடஒதுக்கீடு போயின் என்னவாகும்? அல்லது பார்வர்டு சாதிக்குத்தான் சலுகைகள் என்றால்?
எனவேதான் சொல்கிறேன். காலகட்டங்களை வைத்து நிரந்தர சித்தாந்தம் வரையக்கூடாது. அல்லது நிரந்தர சித்தாந்தத்தை தாற்காலிக கரணிகளை வைத்து வலுப்ப்டுத்த முடியாது.
முன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னதை நான் இப்பொழுது நினைவு கூறுகிறேன்.ஜாதிகளை ஒழிக்கமுடியாது அது இருந்தே தீரும்.
//முன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னதை நான் இப்பொழுது நினைவு கூறுகிறேன்.ஜாதிகளை ஒழிக்கமுடியாது அது இருந்தே தீரும்.
//
ஜெயகாந்தன் என்ன தீர்க்கதரிசியா? அவருக்கு கடவுள் மாபெரும் சக்தியைக்கொடுத்து மக்களுக்கு தீர்க்கதரிச்னம் கொடு என்றாரா ?
எதை வைத்து இப்படி அவர் சொன்னாரென்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் ?
ஏன் சார் எல்லோரும் ஜாதி இருக்கனுமா இருக்கக்கூடாதா என்றே யோசிக்கிறீங்க? ஜாதி தேவையா தேவையில்லையான்னு மாத்தி யோசிக்கலாமே?
யதார்த்தமா பாக்கப்போனா பஸ் ரயிலில் பயணம் செய்ய ஜாதி தேவையில்லை, ஓட்டலில் கையேந்தி பவனில் சாப்பிட ஜாதி தேவையில்லை, மார்கெட்ல காய்கனி வாங்க ஜாதி தேவையில்லை, இஞ்சூட்டுல கம்ப்யூட்டர் படிக்க ஜாதி தேவையில்லை, ஆத்தல குளத்துல கடல்ல குளிக்க ஜாதி தேவையில்லை. இப்படி நடைமுறையில் பல விஷயங்களுக்கு ஜாதி தேவையில்லை.
மெய்யாலுமே ஜாதி எங்கே தேவைப்படுது? கல்யாணத்துக்கும் கட்சிக்கும்தானே.
அதனாலே 'ஜாதி இரண்டொழிய வேறில்லை' அதாவது 'ஜாதி தேவைங்குற ஜாதி', 'ஜாதி தேவையில்லைங்குற ஜாதி'
டோண்டு சார்...இது சரியா வருமா..?
எல்லா மதத்திலும் ஜாதிகள் உண்டு. முஸ்லீகளைக் கேட்டால் உத்யோக அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள் அந்தகாலத்தில் என்று ஜல்லியடிப்பார்கள். அதையே ஹிந்துக்கள் சொன்னால் இல்லை அது ஜாதி கொடுமை என்பார்கள்.
இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா என்கிற கேள்விக்கு விடையை இவர்கள் கற்றரிந்து தெளிவடைய வேண்டும்.
http://hayyram.blogspot.in/2010/06/blog-post.html
முஸ்லீம்கள் சில ஜாதிகளில் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து எடுக்க மாட்டார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்
முஸ்லிம்கள் எப்படி அஹமதியா காரரைக் கூட்டமாகக் கொல்கிறார்கள் என்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=x8TJTG4yUSQ
Just look at this from MK...
http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586
ஹேராம்!
டோண்டு ராகவன் தொடர்ந்து சொல்லும் கருத்து சாதிகளை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.
அதை நீங்கள் எதிர்நோக்குங்கள். உங்கள் பதிலென்ன?
அப்படி அவர் கருத்தை நீங்கள் ஏற்காமல் "இல்லை சாதிகளே வேண்டா" என்றால், இசுலாத்தில் இருக்கிறது, கிருத்துவத்தில் இருக்கிறது என்று சொல்வது சாதிகள் வேண்டுமெனபதாகும். உங்கள் வீட்டில் அழுக்கிருந்தால் அதை முதலில் தூயமை பண்ணத்தான் வேண்டும். 'அடுத்த வீட்டைப்பார். அங்கும் அழுக்கிருக்கிறது' என்றால் என்ன பொருள்?
கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்
www.scribd.com/siraj2025
Post a Comment