ஒருவர் உன்னை சீண்டினால் அதற்கு ரியேக்ட் செய்யும் சிறந்த முறையை இப்பதிவில் பார்க்கலாம்.
உறங்கிக் கிடக்கும் கிருஷ்ண சர்ப்பத்தை தூண்டும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த விளம்பரத்தை வெளியிட்டது.
ஹிந்து பத்திரிகை சும்மா இருக்குமா? அதன் விளம்பரங்களை பாருங்கள்.
இதே மாதிரி கோக்கோ கோலாவுக்கும் பெப்சிக்கும் இடையே நடந்த விளம்பர யுத்தங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை.
இங்கே தமிழ்நாட்டில் நாற்பதுகளில் விகடனுக்கும் கல்கிக்கும் இடையே கூட இம்மாதிரி சொற்போர்கள் நடந்துள்ளன.
ஒரு முறை விகடன் ராஜாஜிக்கு வார்ணிங் கொடுக்க, கல்கி அதை ஒரு கார்ட்டூனாக்கினார். சிங்கத்துக்கு (ராஜாஜி) எலி (விகடன்) வார்ணிங் கொடுப்பது போல இருந்தது அது.
அதே கார்ட்டூனை விகடன் மேற்கொண்டு, சிங்கத்தின் வாலில் ஒரு ஈயை வரைந்து அதற்கு கல்கீஈஈஈ என பெயரிட்டது.
கல்கி இவ்வாறு எழுதினார்.
“இதில் ஒன்று நிச்சயமாகி விட்டது. ராஜாஜி சிங்கம்தான், விகடன் எலிதான், மற்றப்படி அப்படிப்பட்ட சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
8 hours ago
4 comments:
Almost all my relatives (in Chennai)-including me - who were ardent HINDU readers earlier, have stopped subscribing to this newspaper once the TOI was launched in Chennai. This is true in my friends' circles also. whatever The HINDU and you may say / write, HINDU has lost its predominance and TOI is the clear winner.
சபாஷ் சரியான போட்டி.........
"Mark...
prcompanionpr@gmail.com
www.prcompanion.com"
டோண்டு எதைப்பற்றி எழுதினாலும் கடைசியில் ராஜாஜியிடம் வந்துவிடுவார். ராஜாஜியை விமர்சித்து அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டால் டோண்டு உடனே அது காலத்தின் கட்டாயம் என்று கழக பாணியில் பதில் தருவார்.
"இதே மாதிரி கோக்கோ கோலாவுக்கும் பெப்சிக்கும் இடையே நடந்த விளம்பர யுத்தங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை."
அமெரிக்காவுக்கு ஏன் போகவேண்டும், இங்கேயே ஜடேஜா/அசாருதீன் காலத்தில் நடந்ததுண்டே.
"Eat Cricket, Sleep Cricket, Drink only Coco-Cola" என்று கோக் விளம்பரிக்க, ஜடேஜாவையும் அசாருதீனையும் வைத்து பெப்ஸி வம்பிழுக்க, ஸ்பிரிண்ட் விளம்பரத்தில் கோக் பதிலடி கொடுக்க என்று களேபரமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.
Post a Comment