வால்பையன் இட்ட இப்பதிவுதான் எனது இப்பதிவுக்குனான தூண்டுதல்.
அதில் வடக்குப்பட்டு ராமசாமி வால்பையனுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறர். “ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா”?
அதற்கு நான் அளித்த பதில்: “கசப்பானாலும் அதுதான் உண்மை. வேறு வழியில்லை. மோசஸின் தந்தை தனது அத்தையைத்தான் மணம் புரிந்ததாக பழைய ஏற்பாடு கூறுகிறது. பார்க்க: http://bible.cc/exodus/6-20.htm
நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தன. அதற்கு என்ன இப்போது”?
நெருங்கிய உறவினரிடையே உடலுறவு என்பது பல கலாச்சாரங்களில் குற்றமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. நம்மவரிடையே சகோதரியின் மகளை ஒருவன் மனம் முடிக்கலாம். அதற்கும் மேலாக அம்மாதிரியின்றி வெளியில் மணம் முடித்தவர்களிடையே மனைவி கணவனை மாமா என்றே கூப்பிடுவார், அல்லது அத்தான் என்று. மாமியாரை அத்தை என்றும் மாமனாரை மாமா என்றும் அழைப்பார்கள். மாமியார் மாமனாரை அம்மா என்றும் அப்பா என்றும் கூட அழைப்பதுண்டு? காரணம் என்ன? யோசிக்க வேண்டிய விஷயம்.
அதுவே வட இந்தியாவில் இம்மாதிரி எல்லாம் திருமண விஷயத்தில் அங்குள்ளவர்கள் யோசித்தால் பல்லின் மேலேயே போடுவார்கள். இந்து சட்டப்படி முந்தைய பாராவில் உள்ள உறவு முறைகள் சட்டப்படி விரோதம். இருப்பினும் தென்னிந்தியர்களின் வழக்கத்துக்கு மட்டும் விதி விலக்கு தரப்பட்டுள்ளது.
வால்பையனின் பதிவுக்கு வருவோம். நான் ஏற்கனவேயே கூறியபடி ஆதாம் ஏவாளைன் குழந்தைகள் தங்களுக்குள்ளிருந்துதான் வாழ்க்கைத் துணையை நாட வேண்டிய கட்டாயம். ஈதன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதமும் ஏவாளும் கடவுளின் ஆணைப்படி கூடி குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மனித இனம் பெருகி, இம்மாதிரியான திருமணங்களை தடுக்கும் சட்ட திட்டங்கள் வரமுடிந்தது.
இதையெல்லாம் முன்கூட்டியே யோசிக்க முடியாதவரா கடவுள் என்று கேட்பது விதண்டாவாதமே.
கடவுள் பற்றி வால்பையனிடம் வைக்கப்பட்ட கேள்வியும் அவர் பதிலும்:
கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?
தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.
கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.
கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?
ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!
நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!
கமல் பற்றி பேசும்போது அவரது தசாவதாரம் படம் நினைவுக்கு வருகிறது.
கடைசி காட்சியில் அசின் அவரிடம் கூறுவார், இப்படியெல்ல்லாம் அவர் பெருமாள் இல்லையென்றால் அவர்களது மணவாழ்க்கைக்கு சாத்தியம் இல்லையென்று. கமல் கூறுவார், பெருமாள் இல்லையென்று நான் எப்போது சொன்னேன், இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதனே சொன்னேன்”. அசின் இதில் சமாதானம் அடைவார்.பூர்வஜன்ம கணவன் மனைவியர் இங்கும் ஒன்று சேர்ந்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சி கலந்த திருப்தியே. ஆனால் யோசித்து பாருங்கள் கமல் தன் ஐடியாவை மார்றிக் கொள்ளவே இல்லை. அசினும் முட்டாள் இல்லை. இப்போதைக்கு அது போதும், கமலை விடாமல் பிடித்துக் கொள்வதே முக்கியம் என நினைக்கிறார்.
ஆத்திகர் நாத்திகராவதும், நாத்திகர் ஆத்திகராவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இது முடிவடையாத விவாதம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
17 hours ago
10 comments:
//ஆதாம் ஏவாளைன் குழந்தைகள் தங்களுக்குள்ளிருந்துதான் வாழ்க்கைத் துணையை நாட வேண்டிய கட்டாயம். ஈதன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதமும் ஏவாளும் கடவுளின் ஆணைப்படி கூடி குழந்தைகள் பெர்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.//
சிறந்த விளக்கம்!
பரிணாம கொள்கையின்படி ஒரு ஜோடி ஆதாம் ஏவாள் மட்டுமே ஆதியில் தோன்றி இருக்க வாய்ப்பில்லை! மனிதனுக்கு முன்னரே பல உயிர்கள் வளர்ச்சி பெற்றுவிட்டன! முன்னோடி குரங்குகளும் நிறையவே இருந்தன! சிதை மாற்றம் மெல்லவே நடைந்தேறியிருக்கும்!
குரங்குகள்,மனிதக் குரங்குகள்,முடி இழந்த குரங்குகள், குரங்குதாடை கொண்ட மனிதன்,பிறகு இன்றைய மனிதன்..நாளை தலைமுடி அற்ற மனிதன், பருத்த பெருத்தவன்..பயணம் எங்கே?
@வெங்கடபதி
இங்கு கேள்வி குரான் மற்றும் பைபிள் பற்றியது. அதில் உள்ள கதையைத்தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் கொடுக்கும் விளக்கம் தான் இது. பரிணாமக் கொள்கையும் இவ்வாறு தான் ஆதிகால மனிதன் இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்று அனுமானிக்கிறது. ஆனால் ‘குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்’ என்று கொள்ளாமல் ‘குரங்குகளில் இருந்து மனிதர்கள் தோன்றினார்கள்’ என்று கொண்டால் எல்லாம் சரியாக வரும்!
ஆனாலும் அதிலும் கூட கிராமத்தில் சொல்வது போல ‘நடக்க முடியாதவன் சித்தப்பன் வீட்டுக்கு பொண்ணுக்கு போனானாம்’ கேசுகளும் இருக்கத்தான் செய்யும்!
//
நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தன. அதற்கு என்ன இப்போது”?
//
விவிலியத்து மதங்கள் கூறும் கதை/கற்பனை/வரலாற்றுக் கற்பனை யில் தான் நடத்தைவிதிகளை மோசசுக்குப் பின் என்று சொல்லலாம்.
அதற்கு முன்னர் சில லட்ச ஜனத்தொகை கொண்ட நாகரீகங்கள் உலகெங்கும் தோன்றி வளர்ந்துள்ளன. அதில் எல்லாம் தந்தையும் மகளும், தாயும் மகனும் கூடி குழந்தைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
யூத பைபிளை உலக வரலாறு என்று நம்பும் கூட்டத்துக்கு வேண்டுமானால் உலகம் 5000 வருடத்திற்கு முன் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். உண்மை வேறு.
ஆதாம், ஏவாளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
ஆயின், காபேல் என்று பெயர் அதில் ஒருவன் மற்றொருவனை கொன்று விடுவான், பின் அவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தபட்டு விடுவான், பின் அவனுக்கான துணையை தேர்தெடுத்தான் என பைபிளில் உள்ளது, அந்த துணை எங்கிருந்து வந்தது!
எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை பெரியார் சொல்லி கொடுத்து வந்ததல்ல, மாறுவதற்கு.
எனது சிந்தனை அது தெளிவுறாமல் நான் எனது கொள்கையை மாற்ற இயலாது!
வால்பையன், நீங்கள் கேன் ஏபலை குறிக்கிறீர்கள் என நினைக்கிறேன். தோட்டத்திலிருந்து துரத்தப்படுவது ஆதாம் ஏவாள்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த வசனம் அப்படியா உள்ளது?
ஆதாம் முதல் தூதர் என குரான் சொல்கிறது, தூதரை கூடவா துரத்தி விடுவார்கார்கள்.
கடவுள் செய்களைகளை பார்த்தால் அவன் பெரிய முட்டாள் போல தோணுதே!
கடைசி பின்னூட்டம் நான் போட்டதில்லை!
ஆதாம் துரத்தப்பட்டதாக நான் எங்கேயும் சொல்லவில்லை!
//கடைசி பின்னூட்டம் நான் போட்டதில்லை!
ஆதாம் துரத்தப்பட்டதாக நான் எங்கேயும் சொல்லவில்லை!//
உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருடி போட்டிருக்கலாம். பின்னூட்டம் உங்கள் வலைப்பூ லாகிந்லிருந்துதான் வந்தது.
ஆதாம் துரத்தப்பட்டது உண்ஐதானே. அதை நான் கூறினேன். இதில் என்ன பிரச்சினை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment