4/19/2012

அரசியல்வாதிகளும் கார்ட்டூன்களும்

அரசியல்வாதிகள் பயப்படும் ஒரு விஷயம் கார்ட்டூன்கள் மற்றும் நையாண்டி சித்திரங்களே.

சமீபத்தில் எண்பதுகளில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, விகடன் அட்டைப்பட ஜோக் ஒன்றில் அமைச்சரையும் எம் எல் ஏ ஐயும் கேலி செய்ததற்காக விகடன் ஆசிரியர் பால சுப்பிரமணியம் மூன்று நாட்கள் சிறைதண்டனை பெற்றார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அந்த ஜோக்:
மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி...?

ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி...!





ஆனால் ஒன்றை சொல்லியாக வேண்டும். அரசியல்வாதிகள் கேலிச்சித்திரங்களுக்கு பொங்குவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஹிட்லரை கிண்டல் செய்து டேவிட் லோ என்னும் கார்ட்டூனிஸ்ட் போட்ட கேலிச்சித்திரங்களுக்கு பொங்கியது ஹிட்லர். அவரது சில கார்ட்டூன்கள் கீழே:





தற்சமயம் மமதா பானர்ஜியின் முறை எனத் தோன்றுகிறது. கல்கத்தா பேராசிரியர் ஒருவரை அரெஸ்ட் செய்யும் அளவுக்கு அது சென்றுள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.


அங்கிருந்து ஒரு சாம்பிள்: (மீதி கார்ட்டூன்களை அங்கேயே பார்த்து கொள்ளவும்)


ஒரு சராசரி அரசியல்வாதி தன்னைப் பற்றி மிக உயர்வாகவே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரை கிண்டல் செய்வதன் மூலம் ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல்வதி அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்பதைக் காட்டிவிடுவதை எந்த அரசியல்வாதியாலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என்பதே அடிப்படை உண்மை.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

J.P Josephine Baba said...

உண்மை தான்!

baleno said...

எம்ஜிஆரினால் விகடன் ஆசிரியர் சிறைதண்டனை பெற்றிருக்கிறார். தெரியாத தகவல் நன்றி

Bala K A said...

அந்த விகடன் ஜோக்கை எழுதியவர்...படுதலம் சுகுமாரன். அதற்கு அடுத்த இதழில் விகடனின் தலையங்கம் : “படுதலம் சுகுமாரா! நீ பலே ஆளய்யா!”

dondu(#11168674346665545885) said...

@மஹிலன்
எனக்கும் தெரியும். ஆனால் பெயரை போட மறந்து விட்டேன். பிறகு படுதலம் சுகுமாரன் முழுநேர ஊழிய்ராக விகடனில் சேர்ந்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது