வண்டியோட்டிகள் கற்க வேண்டிய முதல் பாடம் சுயபாதுகாப்புடன் கூடிய வண்டியோட்டம். அதாகப்பட்டது சாலையில் உள்ள மற்ற வண்டியோட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் இடியட்ஸ், சும்பன்கள் என்ற உணர்வுடன் அவர்களது சொதப்பல்களையும் அவதானித்து ஒரு மார்க்கமாக செல்ல வேண்டும் என்பதே அது.
இது சம்பந்தமாக சீயட் கம்பெனியினரின் விளம்பரங்கள் நல்ல கற்பனை திறத்துடன் உள்ளன. முதல் படத்தைப் பாருங்கள்.
எச்சரிக்கைப் பலகை வைப்பவன் சொதப்பினாலும் வண்டியோட்டுபவர் சாக்கிரதையாகவே செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் படத்தில் இரண்டு மாது சிரோன்மணிகள் வம்புப் பேச்சில் ஈடுபட குழந்தை ஸ்கூட்டரில் மாட்டிக் கொள்வதில் இருந்து தப்பிக்கிறது, சீயட்டின் உபயத்தால். இப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனைவிக்கு ஆத்திரம் வரும் பாருங்கள், “ஒவ்வொருத்தியையும் கன்னம் கன்னமாக இழைத்து அறைய வேண்டும்” என்பார்.
இன்னொரு நாதாரி செல்போனில் பேசிக் கொண்டே குழந்தையின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் கூத்தையும் பாருங்கள்.
மற்றவர்களுக்கான பச்சை விளக்கை கவனிக்காமல் சென்றாலும் சம்பந்தப்பட்டவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் விதிதான்.
ஆனால் ஒன்று, இந்த விளம்பரங்கள் சீயட் கம்பெனிய்ன் டயர்களுக்காத்தான் என்றாலும், கூடவே பொது நலன் பாதுகாக்கப்படுவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்துக்கு பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
20 hours ago

6 comments:
"சிரோன்மணி" என்ன அர்த்தம்?
டோண்டு சார்,
நீங்கள் அன்புடன் கூறும் 'வீட்டம்மாவை' 'என் மனைவி' என்று ஆக்கி விட்டீர்களே?
//
டயருடன்...பிரேக்கும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா இப்படி நிறுத்த? எந்த கம்பெனி பிரேக் பேடுகள் உபயோகித்தனர் இந்த வண்டிகளில் என்று சொன்னால் நலம்!
//
ரோட்டில் மட்டுமல்ல இணையத்திலும் இடியட்ஸ் எக்கச்செக்கமாக திரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
what a brilliant comment Mr.Vajra! You must be the proud owner of the CEAT company!
@அட்ரா அவன
வஜ்ரா சொன்னதில் என்ன தவறு? ஒரு விளம்பரப் படத்தை அவ்வளவு செலவழித்து எடுக்கும் ஒரு கம்பெனி தனது பிராடக்டைத்தான் முன்னிறுத்தும். பிரேக் பாட் செய்கிறதா சீயட் டயர் கம்பெனி?
விட்டால் அவ்வளவு துரித எதிர்வினையுடன் வண்டியை நிறுத்திய ஓட்டுனரையும் அடையாளம் காட்டச் சொல்வார்கள் போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment