சற்று நேரம் முன்னால் பிரபாகரன் என்பவர் ஃபோன் செய்தார். சற்று நேரம் கழித்து அஞ்சா சிங்கம் செல்வின் என்பவரும் ஃபோன் செய்தார்.
இருவருமே சொன்னது என்னவென்றால் நாளை காலை 9 மணிக்கு சத்யம் தொலைகாட்சியில் ஒரு கலந்துரையாடல் என்றும், லைவாக ஒளிபரப்பப்படும் என்றும் அதற்கு நானும் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. நானும் ஒத்துக் கொண்டேன். பத்ரி அவர்களும் கலந்து கொள்கிறார்.
தலைப்பு: மக்கள் கணக்கெடுப்பு சாதிவாரியாகவும் செய்வது சரியா? நான் சரியே என வாதிடப் போகிறேன். நேரமிருப்பின் பார்க்கவும்.
எந்த வேளியில் சாதிகளின் அவசியம் பற்றி பதிவு போட்டேனோ தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதத்தின் மெய்ஞானத்தரப்பு
-
மதத்தின் மெய்ஞானத்தரப்பு என்ன? மதத்தை எந்தெந்த வகைகளில் நாம் அறிகிறோம்?
நம்பிக்கை சார்ந்து, தர்க்கபூர்வமான ஆய்வு சார்ந்து. இன்னொரு வழி உண்டா?
22 hours ago
5 comments:
Nasama Pochu!!
சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?
http://arulgreen.blogspot.com/2012/04/23.html
சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!
http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_24.html
@ அருள்
உங்க போன் நம்பரையும் தேடினோம் கிடைக்கவில்லை... உங்கள் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்... வேறொரு பொருத்தமான தலைப்பு அமையும்போது அழைக்கிறோம்...
//திண்ணையில் சாதிகள் அவசியம் கட்டுரைக்கு இட்ட அதே பதில் இங்கேயும் இடுகிறேன் //
இன்றைய நிலையில் அவரவருடைய சாதியை அவரவர் பெற்றோர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் தானே பிறப்பு சான்றிதழுடன் சாதி சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்வது. அப்புறம் இதற்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் பேச வேண்டிய அவசியம் என்ன?
சாதி சார்ந்த கல்வி வேலை வாய்ப்பு சலுகைகளை எடுத்து விட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். தனியார் பள்ளிகளில் பெரும் கட்டணம் தவிர சிறப்பு பயிற்சிகள் பெற்று படிக்கும் எந்த சாதி மதப் பிள்ளைகளுக்கும் எந்த சலுகைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
அரசு, அரசு சார் பள்ளிகளில் மற்றும் சில தொண்டு நிறுவனங்களில் படித்து தேறும் பிள்ளைகளுக்கு மட்டுமே சலுகைகள் என்று சொல்லிவிட்டால் பின் சாதியோ அதை நிரூபிக்க சான்றிதழோ தேவையே இருக்காது. பிறகு இந்த வித்யாசங்கள் எல்லாம் குடும்ப அளவில் மட்டுமே சில காலம் கோலோச்சும். காலப் போக்கில் குறைந்து கொண்டே வரும்.
சாதி கணக்கெடுப்புக்கு அரசு இப்படி மெனெக்கெட வேண்டியதே இல்லை.
வர்ணாசிரம முறையைப்பற்றி என் நண்பர் எந்த வர்ணத்தில் பிறப்பது என்பது ஒருவனுடைய பூர்வ ஜென்ம கர்மவினையால் விளைவது என்றும் ஒரு வர்ணத்தில் பிறந்தவன் கடைசி வரை அதே வர்ணத்தில்தான் இருக்கவேண்டும் எனவும் தெய்வத்தின் குரலை மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். ஆனால் வர்ணம் என்பது ஒருவன் தன்னுடைய Aptitude க்குத் தக ஈடுபடும் தொழிலைப்பொருத்து ஒருவனுடைய வர்ணம் மாறும் என்பது போல தாங்கள் போஸ்ட் செய்துள்ள கட்டுரை கூறுகிறது. எது சரி விளக்குவீர்களா?
Post a Comment