10/12/2012

மனதை கொள்ளை கொள்ளும் 7 C

சில நாட்கள் முன்வரை நான் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணியை ஆவலுடன் எதிர்நோக்கி வந்தவன். அந்த எதிர்பார்ப்பு இப்போது இரவு 8 மணிக்கு சென்று விட்டது. என்ன செய்வது, சீரியல் 7 C-ன் நேரத்தை மாற்றி விட்டார்களே.

இம்மாதிரியான நேர்மறை என்ணங்களுடன் கூடிய சீரியலை நான் அரிதாகவே பார்க்கிறேன். ஒரு நல்லாசிரியர் தன் மாணவர்களை எவ்வாறு கரையேற்றுகிறார் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

கவனக் குறைவு பிரச்சினைக்ளுடன் கூடிய குழந்தைகளை இந்த எபிசோடில் டீல் செய்திருக்கிறார்கள். அக்குறையுடன் இருக்கும் குழந்தைக்கு த்னது கவன விருத்தியை பார்த்து முகத்தில் வரும் பெருமிதம், பிரமிப்பு ஆகியவற்றை அந்த மாணவராக நடித்தவர் அழகாகக் காட்டியுள்ளார்.

அற்புதம் என்னும் சொல்லைத் தவிர கூற வேறு வார்த்தைகளே இல்லை


7C Part 2 by khajal

எவ்வளவு கச்சிதமாக விஷயத்தைக் கையாண்டுள்ளார்கள்!! இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஒவ்வொரு சீனும் ஒரு காவியம். முக்கியமாக ஆசிரியர் ஸ்டாலின் மேல் அப்பெண் சிவகாமி வைத்திருக்கும் காதல், அதை வெளிப்படுத்தும் முறை ஆகியவை கவிதைகள் என்றால் மிகையாகாது.

சோவின் எங்கே பிராமணன் சீரியலைப் பார்க்கவே ஜெயா டிவிக்கு சென்றது போல இந்தச் சீரியலை பார்க்க மட்டுமே விஜய் டீவிக்கு செல்கிறேன் என்றால் மிகையாகாது.

7C சீரியலை விஜய் டீவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை காணலாம்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Unknown said...

நாங்கள் எங்கள் வீட்டில் மெகா தொடர்களில் "சரவணன் மீனாட்சி " மட்டும் பார்ப்போம். 7C அதற்க்கு முன் வரும் தொடர் என்பதால் சில சமயம் பார்ப்பது உண்டு. நன்றாக இருக்கிறது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது