இது பற்றி பலரும் பதிவு போட்டுள்ள நிலையில் நான் என்ன கூறப்போகிறேன்? எல்லாமே ஏற்கனவே பார்த்தது போன்ற ஃபீலிங்கையே உருவாக்கியுள்ளன. இதை déjà vu என்று கூறுவார்கள்.
போலி டோண்டு என்னை பீடித்தபோது நான் அவன் யார் என்பதை வெளிப்படையாகக் கூறாது தவிர்த்ததை பலர் குறை கூறினர். இன்னும் சிலர் நேராக சைபர் கிரைமுக்கு போக வேண்டியதுதானே என்றும் கூறினர். ஆனால் அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என நான் கூறியதை கேலி செய்தனர்.
விஷயம் என்னவென்றால் சாதாரண் நபர் போலீசுக்கு போனால் அதுவும் சைபர் போலீசுக்கு போனால் ஒன்றும் நடபதில்லை என்பதே என் அனுபவம். முதலில் கம்ப்ளைண்ட் எடுக்கவே அலைகழித்தனர். சிடி போலீஸ் சிபிசிஐடியை கை காட்டியது. அங்குள்ள டிஎஸ்பியோ தான் என்ன செய்ய முடியும் என சலிப்பைக் காட்டினார். ஆக உற்சாகமான அனுபவமாக இலை.
எனது யுக்தி வேறுமாதிரி இருந்தது. போலி டோண்டு எதிர்பார்த்தது போல நான் முடங்காமல் போனதே அவனை எரிச்சலூட்டி மேலும் தாக்குதல்களை நிகழ்த்த வைத்தது. அதில் பலர் அடிபட்டார்கள். அவற்றில் ஒருவருக்கு தமிழக அரசு மந்திரி ஒருவரின் பி.ஏ.வை தெரிந்திருந்தது. அவரை வைத்து மூவ் செய்து கடைசியில் போலியை வேருடன் அறுத்தார்கள்.
ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. அவராகவே மூவ் செய்து கைதுகளை நடத்தி வைக்க முடிந்தது. இப்போ கையா முய்யா என அக்யூஸ்டுகளின் தோழர்கள் குதிக்கிறார்கள்.
சின்மயி விவகாரத்திலும் போலி டோண்டு விவகாரத்திலும் காமனாக என்ன இருந்தது என்பதை பார்த்தால் அதுதான் பார்ப்பன வெறுப்பு. சின்மயி பாப்பாத்தி, டோண்டு பாப்பான். போதாதா தாக்குதல்கள் நிகழ்த்த? இதை நான் மிகைபடுத்தவென்று கூறவில்லை. எனது பல பதிவுகளில் விவாதங்கள் வருமோது எனக்கு போலி டோண்டுதான் சரி என வன்மத்துடன் கூறியவர்களும் உண்டு.
அதிலொருவர் எழுதினார், “போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான்
இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை
சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!” (தான் யார் பக்கம் என்பதை இங்கு தெளிவாகவே காட்டி விட்டார்)..
இப்போது கூட போலி டோண்டுவுக்காக பிரலாபிப்பவர்களது மோட்டிவேஷன்களில் முக்கியமானது பார்ப்பன வெறுப்பே.
என்ன செய்வது, I will have to call a spade a spade.
அன்புடன்,
டோண்டு ராகவன்
32 comments:
I know a few who think so....You aren't alone my friend.
'டோண்டு பதில்கள் - சீசன் 3' ஆரம்பியுங்களேன்! அதில் அனானி ஆப்ஷன் இருக்கவேண்டும். சீசன் 1 ல் அனானி கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது '23-10-2010 காலை 11.40 க்குக் கேள்வி கேட்டவர்' - என்பது போலக் குறிப்பிடுவீர்கள். அந்த சிரத்தை வியப்பாக இருக்கும்!
Sir,
As you have rightly handled the Poli Dondu character, these Cyber Rowdies who are trying to divert the issue from their crime to as if Chinmayi has committed a crime, have never expected Chinmayi, a brahmin, to retaliate the way she went ahead & filed a police compliant against those criminals. Thats why they are now gathering all Brahmin-hater crowds & doing a jugalbandhi of turning the table towards Chinmayi as the criminal instead of she being a victim. They realise now that that is the only way for them to escape from law. I hope & pray that Truth Should prevail in this matter & culprits should be punished as per law.
Arun
என்னையும் ஒருவன் மிகவும் ஆபாசமாக திட்டி டெய்லி கமெண்ட் போட்டு கொண்டு இருக்கிறான். என்னால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை...கமெண்ட் moderation வைத்தாலும் அந்த கமெண்ட்ஸ் நான் படிக்க வேண்டியது உள்ளது..இது போன்ற சில புகார்களில் அவர்கள் பயந்து திருந்தினால் தான் உண்டு...
இந்த சம்பவத்தில் முரளிமனோகரின் கருத்து என்ன சார்?
***ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. ***
She herself says that it is two-edged sword. She is not sure what she did is a smart move.
செலிப்ரிட்டியாக இருப்பதால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. இந்த குற்றம் சாட்டப்பட்ட 6 பேர், போலி டோண்டுபோல் மறைமுகமாக தாக்கவில்லை. போலி டோண்டுவைவிட பல மடங்கு நல்லவர்கள். தங்கள் கருத்துச் சுதந்திரம் என்று தவறாக எண்ணிவிட்டார்கள் என்று அழகாக வாதாடலாம்.
சரி, நாளிக்கு இவர்கள் தண்டனை அனுபவித்தால், சின்மயி மேல் பலருக்கும் வெறுப்புத்தான் வரும். இதே ஹீரோயின், வில்லனாகத் தெரியும். இதுதான் உலகம்.
சினம்யி ஆயிரக்கணக்கான விசிறிகளை இழக்கலாம், இரக்கமில்லாதவராக சித்தரிக்கப் படலாம், சில சினிமா மற்ரும் பல வாய்ப்புகளையும் இழக்கலாம். That is also the "price" for being a celebrity!
I think the more the defendants gets punished, more hatred towards சிமயி will be generated among public. So I am not sure whether she is a winner or loser! I am not sure being a celebrity is good or bad either.
இதற்கெல்லாம் காரணம் பெரியார் பிள்ளையாரைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்ப அவர்கள் தம்பிரான்கள் குரங்கைப் பிடித்துக் கொண்டதன் கோளாறுதான்.....
இணையத்தில் கருத்துக் கூறுபவர்களை மட்டறுத்தல் மிகக் கடினம், ஆனால் வரன்முறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறே இல்லை.
போலி டோண்டு விவகாரத்தில் காவல் துறை மெத்தனமாக இருந்தது ஏனெனில் டோண்டு ஒன்றும் மக்கள் நாயகம் இல்லை, அவர் ஒரு பெண் கூட இல்லை.
ஆனால் ! சின்மயி விவகாரத்தில் அவர் ஒரு மக்கள் நாயகம், பெண் என்பதால் இந்திய காவல் துறை விரைந்து செயல்படும்.
அத்தோடு பார்ப்பனர்களை - தமிழர்கள் இகழ்வதும், தமிழர்களை - பார்ப்பனர்கள் இகழ்வதும் இரண்டுமே ஒரேக் கூடைக்குள் தான் வைக்க வேண்டும். சாதி மேன்மைத் தனமும், சாதி வெறித் தனமும் கூடாத ஒன்று தான் ! அது பார்ப்பனராக இருந்தாலும், ஆதிக்கச் சாதி தமிழர்களாக இருந்தாலும், அடக்கப்பட்ட சாதி தமிழர்களாக இருந்தாலும் ஒன்றே தான்... !
சுருக்கமாக சொல்லப் போனால் -
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து;
மில்லதனிற் றீய பிற
என்ற வள்ளுவார் வாக்கினைப் பகிர்ந்துக் கொள்கின்றேன் ! ஐயோடா !!!
வருண்!
ராஜன் அன் கோ தண்டிக்கப்பட்டால் சின்மயி பேர் கெடாது. அவரின் இரசிகர்கள் (குரலுக்கு) குறைய மாட்டார்கள். அவர்தான் தன்னிலை விளக்கம் கொடுத்தாயிற்று. அவர்கள்தான் கொடுக்க வேண்டும். அனாவசியக் கற்பனை பண்ணவேண்டாம்.
ராஜ்!
நீங்கள்தான் பார்ப்பனரில்லையே? உங்கள் மீது எப்படி வெறுப்பு வரும்? சின்மயி, ராகவன் இவர்கள்தான் ஐயங்கார்கள்.
ராகவன்!
பார்ப்பன வெறுப்புக்குக்காரணம் என்னவென்று உங்கள் அபிப்ராயம் ?
**வருண்!
ராஜன் அன் கோ தண்டிக்கப்பட்டால் சின்மயி பேர் கெடாது. அவரின் இரசிகர்கள் (குரலுக்கு) குறைய மாட்டார்கள். அவர்தான் தன்னிலை விளக்கம் கொடுத்தாயிற்று. அவர்கள்தான் கொடுக்க வேண்டும். அனாவசியக் கற்பனை பண்ணவேண்டாம்.***
பாஸர்பை: கருத்துச் சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு. அதை எப்படி வரையுறுக்குறீங்க? சைபர் க்ரைம்னு கருத்த்து சுதந்திரம் புரியாத தெரியாதவங்க எல்லாம் நீங்க "கொலைக் குற்றவாளி" "என்னை கற்பழிக்கப் பார்த்தான்" னு குற்றவாளி ஆக்க முடியாது.
தெருச் சண்டையில், தேவடியாள், ஊர் மேய்றவனு எதிர்த்த வீட்டுப்பெண்ணை திட்டுறவங்கள நான் பார்த்து இருக்கேன். அவர்களை ஒரு நாளும் போலிஸ் உள்ள தூக்கிப் போட்டதில்லை.
அதேபோல் இணையத்தில் பலவிதமான சண்டைகள் நடக்குது. நடந்துகொண்டேயிருக்கு. இதெல்லாம் எல்லாரும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
It is much more complicated than what we think. There is going to be lots of sympathy wave for those guys as nobody is perfect when it comes to online debate or discussion! People lose it one time or other!
சரி, இந்த ரேப், கொலை முயற்சி, ஹராஸ்மெண்ட் எல்லாம் 6 பேரும் சொன்னார்களா? ஒரு ஆள் சொன்னாரா? 6 பேரையும் நீங்க எப்படி ஒண்ணா சேர்ப்பீங்க? அவரவர் ட்வீட்டுக்குத்தான் அவரவர் ரெஸ்பாண்சிபிள்.
இதில் இதுபோல் பல சிக்கல்கள் இருக்கு. அதனால இந்த கேஸ் உடைக்கப்பட்டு சின்மயி தோற்றால் என்ன ஆகும்?
ஜெயித்து, அவர்கள் ஆறுபேரும் வேலையிழந்தால்?
Yeah, I appreciated her for taking it to the police. That is only first step. Now you need to prove all the six of them did the same crime! You have to prove that crossed the line of "freedom of speech"!
We have to wait and see!
ட்டோண்டு,
இதே பார்ப்பன வெறுப்புதானே மருத்துவர் ருத்ரன் விவகாரத்தில் வந்தது.
அவரை மனநலம் இல்லாத மருத்துவர் என்று எதிர்ப்பாட்டு பாடிய நீர், திடீரென்று பம்மிப் போய் வாலை, காலுக்குள் நுழைத்துக் கொண்டது ஏன்?
அப்போதும் பார்ப்பன சேவியர் அவதாரத்தை மெயின்டெய்ன் பண்ணியிருக்கலாமே?
@வாசகன்
நீங்கள் அச்சாமயம் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை.
டோண்டு ராகவன்
@ passerby
நான் பார்பனர் இல்லை. பார்பனர் என்கிற வார்த்தையை நான் தமிழ் இணையம் முலமாக தான் தெரிந்து கொண்டேன். நான் படிக்கும் காலத்தில் ஐயர்களை வேறு பெயரில் சொல்லி குப்பிடுவோம். பார்பனர் என்கிற சொல் பேச்சு வழக்கத்தில் இல்லை என்பது என் கருத்து. நான் தாக்க ஆபாசமாக திட்டு வாங்குவதருக்கு காரணமே வேறு. அது சாதாரண பதிவுலக சண்டை. மத சண்டை லிஸ்ட்டில் அது வராது.. :)
Varun !
Freedom of speech is not finely defined in our law. Cyber law is new, yet to have precedent cases and judgements to rely upon.
In US, the freedom may have more liberal limits whereas in ours, it will have strict limits. We are a religious and conservative society; and judges come from such soceity here.
So, we cant argue here and now what r the limits of that freedom under our cyber law, till we get a clear pciture from the courts.
For e.g I am addressing you just Varun or Dondu Ragavan just Dondu Ragavan. This is not according to Indian culture. DR's age is well known. He should be addressed either as Sir, or Ragavanji or Mr Ragavan.
But I am dropping all honorifics. Am against the culture you know.
In USA or similar countries, u can call ppl disregarding their ages, just using their Xian names only.
In our culture, there is also an unwritten rule that women and men are different in general life also, and one needs to respect that fine distinction. The 6 accused men fail to understand that. U too, unhopefully !
Tit for tat is only with men that men should practise. With women, they should give up, allowing her to feel victorious. This is called gallantry. Gallantry should at least be shown in internet discussions. If they differ with u, just leave them. No harassements !
Dondu Ragavan!
Why many Tamilians suffer from the hatred of paarppnanars. Can we say they were spoilt by Dravidian parties ?
Ur reply pl Ragavanji !
In today news, I hav read that Los Angeles Ram, a twitter and FBier and a blogger, has revealed that Cinmayi's mother has boasted to him in a threatening letter that she is from a HIGH CASTE, implying he is from lower caste unequal to her.
He has threated to go to court with the letter.
Ur comments please.
ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார் என்ன என்று பார்ப்பது நலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கவும், மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கும் சின்மயிக்குக் கருத்துரிமை உண்டு. சின்மயி தன் புகாரில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:
'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .
இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ஏன் அது ஒரு சட்டசபை விவாதமாகக் கூட ஆகிருக்கும்.
சமாதானத்திற்கு முயற்சித்த பின்பு சின்மயி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துள்ளார். பின்பு இப்படி எழுதினால் இந்த கும்பலைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சுவார்களா?
என்ன செய்தாலும் சொன்னாலும் பார்ப்பனர்கள் வாயை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை இது உடைப்பதால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.
ஜெகனாத்:
இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.
சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.
மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் பதிவுலகில் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறகவில்லையே அது ஏன்???
ஏன், நியாயஸ்த்தன் உம்முடைய கண்டனங்களையும் நான் பார்க்கவில்லையே!
திராவிடர்கள்போல் திறந்த மனதில்லாதா பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!
இதே சின்மயி ஒரு இஸ்லாமியப்பெண்னாகவோ, தலித்தாகவோ, கிருத்தவப் பெண்ணாவோ இருந்தால் பார்ப்பாணர்கள் எல்லாம் அவன் அவன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பான். நீரும் ஏதாவது 18+ அடல்ட் கார்னர் ஜோக் படிச்சு சிரிச்ச்க்கிட்டு இருப்பீர்!
//'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .
//
If these words are exchanged as private conversation between two individuals in their own blog/tw/fb etc., no one need to bother.
If the same is posted in tw of fb of a paarppnar, it is to be legally protested.
Where were these words posted?
http://dinamani.com/latest_news/article1311877.ece
பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' ."
இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? சும்மா கதை விடாதீங்க. இப்படித்தான் உத்தம எழுத்தாளரும், காம வெறி எழுத்தாளரும் கதை விட்டு கிட்டு இருக்காங்க
ஏதேது, பரவாயில்லையே நல்லா சரியா கோடு பிடிச்சு ஒரு ஒளிய நோக்கி போய்க்கிட்டுருக்கற மாதிரி தெரியுது.
// அத்தோடு பார்ப்பனர்களை - தமிழர்கள் இகழ்வதும், தமிழர்களை - பார்ப்பனர்கள் இகழ்வதும் இரண்டுமே ஒரேக் கூடைக்குள் தான் வைக்க வேண்டும். சாதி மேன்மைத் தனமும், சாதி வெறித் தனமும் கூடாத ஒன்று தான் ! அது பார்ப்பனராக இருந்தாலும், ஆதிக்கச் சாதி தமிழர்களாக இருந்தாலும், அடக்கப்பட்ட சாதி தமிழர்களாக இருந்தாலும் ஒன்றே தான்... !//
1 > பார்ப்பனர்கள் X தமிழர்கள்
2 > தமிழர்கள் X பார்ப்பனர்கள்
3 > ஆதிக்கச் சாதி தமிழர்கள் X அடக்கப்பட்ட சாதி தமிழர்கள்
இது உங்கள் தவறு இல்லை, ஆனால் ஒரு பானை சோற்றுக்கான பதம் - A tip of an iceberg
ஒளி மிக்க எதிர்காலம் நிதர்சனமாகியது. நன்றி!
1. பார்ப்பனர்கள் X தமிழர்கள்
2 தமிழர்கள் X பார்ப்பனர்கள்
3 ஆதிக்கச் சாதி தமிழர்கள் X அடக்கப்பட்ட சாதி தமிழர்கள்
முதலிரண்டும் சரியல்ல. கடைசி சரி. எப்படிச்சரியென்ப்தை இன்றைய பரமக்குடி காட்டுகிறது.
//முதலிரண்டும் சரியல்ல.//
முதலிரண்டும் சரி என்று டோண்டுவே நிரூபிப்பார்
@ Passerby
QN ///'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .
//
If these words are exchanged as private conversation between two individuals in their own blog/tw/fb etc., no one need to bother.
If the same is posted in tw of fb of a paarppnar, it is to be legally protested.
Where were these words posted?//
ANSWER !!!:
//ஜெகனாத்:
இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.
சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.
மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் பதிவுலகில் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறகவில்லையே அது ஏன்???
ஏன், நியாயஸ்த்தன் உம்முடைய கண்டனங்களையும் நான் பார்க்கவில்லையே!
திராவிடர்கள்போல் திறந்த மனதில்லாதா பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!
இதே சின்மயி ஒரு இஸ்லாமியப்பெண்னாகவோ, தலித்தாகவோ, கிருத்தவப் பெண்ணாவோ இருந்தால் பார்ப்பாணர்கள் எல்லாம் அவன் அவன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பான். நீரும் ஏதாவது 18+ அடல்ட் கார்னர் ஜோக் படிச்சு சிரிச்ச்க்கிட்டு இருப்பீர்!//
இந்த இரண்டு பின்னூட்டங்களிலேயே தெரிகிறதே நமது எண்ண அழகு.
இதுவும் இரண்டு தனிப்பட்டவர்களுக்கிடயே ஆன வார்த்தைப்பரிமாற்றமா?
இங்கே ஜகன்னாத் அவர்களுக்கு வந்த புழுதி வாரி தூற்றல் எதன் அடிப்படையில் - அவரது கருத்துக்களின் அடிப்படையிலா அல்லது அவரைப்பற்றிய - அவரது நோக்கம் பற்றிய தூற்றுவோரின் கருதுகோள்கள் முன் முடிவுகளின் படியா?
ஒன்று நன்றாகப்புரிபடுகிறது தி சோ கால்ட் திராவிடர்கள் ஒரு விஷயத்தில் ஒன்று பட வேண்டுமானால் கூட எதிரே ஒரு தி சோ கால்ட் பிராமணர் இருந்தால் மட்டுமே நடக்கும்!!!
//மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் பதிவுலகில் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறகவில்லையே அது ஏன்???//
இதற்கு முதலில் மீனா கந்தசாமி அவர்கள் அல்லவா எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அதன் பிறகு யார் யார் அவரை ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
ஹரியானா விஷயத்தில் தமிழ் பதிவுலகில் பார்ப்பனர்கள் குரல் கொடுத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.
ஒரு சிறு யோசனை (அ) கேள்வி : நீங்கள் ஏன் ஒருமுறை தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காத பார்பனர்களை வரிசையாக நினைவு படுத்திப்பார்க்க முயற்சிக்கக்கூடாது?
அல்லது உங்களுக்கு தெரிந்த தங்களைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்களில் உள்ளவர்களை மற்றும் தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காதவர்களில் உள்ளவர்களை தங்களுடைய மஞ்சள் கண்ணாடி வடிகட்டி வழியாக ஒரு முறை உற்று நோக்கி வரும் விடையை இங்கு பகிரக்கூடாது?
ittiam or whatever:
The question passerby asked was,
/'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல'
WHERE WAS the PHRASES shown above POSTED or Jaganath made it up by himself?
Now, you are giving a LONG ANSWER without answering the QUESTION. :-)
I mean, YOU DON'T SHOW where it was posted.
But you are claiming as if you are answering the question.
YOU ARE NOT answering the question!
Now let us conclude that, Jaganath "made up" those phrases himself!
திருமிகு. வருண் அவர்களே, முதலில் என்னுடைய பின்னூட்டத்தின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். மிக அவசரமாக பதிலளிக்க முயற்சிப்பதில், தாங்கள் சில விஷயங்களை விட்டு விடுகிறீர்கள் என்று காண்கிறது - அதில் அந்த தேவை இல்லாத "வாட் எவர்" ம் அடங்கும்!.
ஒன்று : Passerby ன் பின்னூட்டம் கேட்ட கேள்வி - யார் அது போல வசை மொழி அளித்தது, எங்கு? அது எப்படி பிரச்சினை ஆகும் (அ) ஆகாது என்பது மற்றும் அது இரு தனியர்களுக்கிடயே ஆன பேச்சா அல்லது பொதுவிலா என்பது.
இதற்கடுத்த தங்களின் பின்னூட்டம், உள்ளடக்கமாக கொண்டிருந்தது திரு. ஜெகன்நாத் ன் பின்னூட்டம் சொல்லும் பிரச்சினைக்கு சற்றும் குறைவில்லாத மொழிநடையில், வசைமொழியாக, தங்களிருவருக்கும் தொடர்பில்லாத ஒரு மூன்றாம் மனிதர் பொதுப்பார்வைக்கு வைத்துள்ள தளத்தில் அளிக்கப்படிருந்தது.
இரண்டு : தங்களுக்கு திரு. ஜெகன்நாத் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் சொல்லும் கருத்தில் உண்மை இல்லை என்று தோன்றும் போது, நேரடியாக அதை அல்லவா கூறி இருக்கவேண்டும். அல்லது அவரது பின்னூட்டத்தில் கண்டது போன்ற கருத்துகளில் தங்களுக்கு ஒப்புமை இல்லை எனில் அதை தெரிவித்து கண்டித்திருக்கலாமே. இல்லை அப்படியான ஒரு வசை மொழிநடையில் பதிலிறுப்பது சரி என்று தங்களுக்கு தோன்றுமேயானால் அதற்கு யார் என்ன செய்ய முடியும். At the end of all, you are the master of your thoughts and actions.
மூன்று : நானும், என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில், தங்களுக்கு முன் வைத்தது, ஒரு கேள்வியே.
//இதுவும் இரண்டு தனிப்பட்டவர்களுக்கிடயே ஆன வார்த்தைப்பரிமாற்றமா?
இங்கே ஜகன்னாத் அவர்களுக்கு வந்த புழுதி வாரி தூற்றல் எதன் அடிப்படையில் - அவரது கருத்துக்களின் அடிப்படையிலா அல்லது அவரைப்பற்றிய - அவரது நோக்கம் பற்றிய தூற்றுவோரின் கருதுகோள்கள் முன் முடிவுகளின் படியா?//
மற்றும் //இதற்கு முதலில் மீனா கந்தசாமி அவர்கள் அல்லவா எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அதன் பிறகு யார் யார் அவரை ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
ஹரியானா விஷயத்தில் தமிழ் பதிவுலகில் பார்ப்பனர்கள் குரல் கொடுத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.
ஒரு சிறு யோசனை (அ) கேள்வி : நீங்கள் ஏன் ஒருமுறை தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காத பார்பனர்களை வரிசையாக நினைவு படுத்திப்பார்க்க முயற்சிக்கக்கூடாது?
அல்லது உங்களுக்கு தெரிந்த தங்களைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்களில் உள்ளவர்களை மற்றும் தங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காதவர்களில் உள்ளவர்களை தங்களுடைய மஞ்சள் கண்ணாடி வடிகட்டி வழியாக ஒரு முறை உற்று நோக்கி வரும் விடையை இங்கு பகிரக்கூடாது?//
again I am saying : At the end of all, you are the master of your thoughts and actions.
உங்களுக்கு என்ன புரியலைனா, நீங்க என்னை விமர்சிக்க என்னத்துக்கு பாஸர்பை கேள்வியை "மேற்கோல்" காட்டுறீங்க?
ஏதோ பதில் சொல்லிவிட்டதுபோல் நடிக்கிறீங்க? அந்தக் கேள்வி ஜெகநாத்தை நோக்கி எய்தது. அதை எதுக்கு நீங்க பிடிச்சு தொங்குறீங்க, -அதற்கான பதிலும் இல்லாமல்???
ஜெகநாத் உண்மை போல ஒரு பொய்யையும் சேர்த்துச் சொல்லுகிறார். சின்மயி கொடுத்த புகாரில் இந்த வரிகள் இருந்ததா அவருக்கு யார் சொன்னது???
அந்த வரிகள் எங்கேயிருந்து வந்தன என்பதற்கு பதில் இன்னும் சொல்லவில்லை. அவர் சின்மயி புகாரை வாசிச்சாரா? கேட்டுச் சொல்லவும்!
சின்மயி, மீனுக்காக அழலாம். ஒங்களோட கூடி ஒப்பாரியும் வைக்கலாம். அது அவர் பிரச்சினை.
ஆனால் மீனவர்கள் சாகும்போது மீனுக்காக கண்ணீர் விடுவது அரைவேக்காட்டுத்தனம்.
மேலும், அவர் பேசும் வியாக்யாணம் என்ன வென்றால், எல்லாரும் பிறப்பால் சமமே என்பது. அதனால் ரிசெர்வேசன் தேவையில்லை என்கிறார். அப்புறம் என்ன எழவுக்கு "ஹையங்கார்" என்று தன் சாதிப்புகழ் பாடிப் பிதற்றுகிறார்?
அதனால் சின்மயின் அரைவேக்காட்டுத்தனம் அவர் பேசுவதை கவனித்துப் பார்த்தால் விளங்கும். அது விமர்சிக்கப் பட வேண்டியதே! அதனால் அவரை எப்படி வேணா தாக்கலாமா? என்றால்... "தாக்குவது தவறு" "வரம்பு மிறுவது தவறு" என்பதே என் நிலைப்பாடு.
மற்றபடி ஜெகநாதன் சொன்னதுபோல் இந்த விசயத்தில் எல்லாரும் சின்மயிக்கு எதிரணியில் இல்லை.
ஆக, ஜெகநாத்தின் வரிகளில் பொய்தான் அதிகமாக இருக்கு. பொய் சொல்றவரை எல்லாம் கொஞ்ச முடியாது. பொய்யர்னுதான் சொல்லி தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டிவரும். புரிந்துகொள்ளவும்.
திருமிகு. வருண் அவர்களே, முதலில் ஒரு விடயத்தை கூறி தெளிவு படுத்தி விடுகிறேன்.
இந்த பின்னூட்டமே இந்த பதிவில் / இடுகையில் இது தொடர்பாக நான் இடப்போகும் / இடும் கடைசி பின்னூட்டம் ஆகும். ஏனெனில், எனக்கு, திரு. டோண்டு அவர்களின் இந்த பதிவு / வலைப்பூ நம்மிருவரின் விவாத மேடை ஆகிவருவதாகவும் மற்றும் அது சரியான ஒன்று அல்ல என்றும் தோன்றுகிறது. மேலும் நேரமின்மையும் ஒரு காரணம். ஒருவேளை நீங்களே அடுத்து பதில் அளிக்க விரும்பி அளித்தால் அதுவே இது தொடர்பிலான கடைசி சொல்லாக இருக்கும் - ஆரம்பித்தவரே முடிவுரையும் எழுதியவராக இருப்பதே முறை என்றே எண்ணுகிறேன்.
1> பதில் சொல்லி விட்டது போல நடிக்க வேண்டிய அவசியம் ஏதும் எனக்கு இல்லை. ஏனெனில் இதில் எனது முகமோ / தன்மானமோ அல்லது வேறு எந்த வகை உரிமைப்பொருளுமோ ஆட்டத்தில் இல்லை.
2> paaserby ன் கேள்வி யின் சாரம் மட்டுமே மேற்கோளாக காட்டப்பட்டது. அதற்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் உள்ள தொடர்பு வெள்ளிடை மலை மற்றும் எந்த விதத்தில் எனக்கு அது தொடர்புடையதாக தோன்றியது என்பதையும் என்னுடைய பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.
a > தாங்கள் தங்கள் பதிலில் கூறியவை தனிப்பட்ட முறையில் திரு. ஜகன்னாத் அவர்களை மட்டும் வசைமழை பொழியவில்லை. விளித்தலும் சுட்டலும் வேறாக இருந்தது.
b > இது உங்களின் தற்போதைய வரிகள் //ஆக, ஜெகநாத்தின் வரிகளில் பொய்தான் அதிகமாக இருக்கு. பொய் சொல்றவரை எல்லாம் கொஞ்ச முடியாது. பொய்யர்னுதான் சொல்லி தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டிவரும். //
அவரை நீங்கள் முதல் முறை பொய்யர் என்று மட்டும் தான் சொன்னீர்களா? மற்றும் நீங்கள் அந்த நேரத்தில் கூறியது வெறும் 'தனிநபர்' தாக்குதல் மட்டுமேதானா? அதுதான் உங்களின் 'தனிநபர்' விமர்சன மொழியா?
3> //சின்மயி, மீனுக்காக அழலாம். ஒங்களோட கூடி ஒப்பாரியும் வைக்கலாம். அது அவர் பிரச்சினை.ஆனால் மீனவர்கள் சாகும்போது மீனுக்காக கண்ணீர் விடுவது அரைவேக்காட்டுத்தனம்.//
நான் மீன்களுக்காக ஒப்பாரி வைப்பது இல்லை.
4> //அதனால் சின்மயின் அரைவேக்காட்டுத்தனம் அவர் பேசுவதை கவனித்துப் பார்த்தால் விளங்கும். அது விமர்சிக்கப் பட வேண்டியதே! அதனால் அவரை எப்படி வேணா தாக்கலாமா? என்றால்... "தாக்குவது தவறு" "வரம்பு மிறுவது தவறு" என்பதே என் நிலைப்பாடு.
மற்றபடி ஜெகநாதன் சொன்னதுபோல் இந்த விசயத்தில் எல்லாரும் சின்மயிக்கு எதிரணியில் இல்லை. //
//அவரை எப்படி வேணா தாக்கலாமா? என்றால்... "தாக்குவது தவறு" "வரம்பு மிறுவது தவறு" என்பதே என் நிலைப்பாடு.//
a > இதுவே நான் எண்ணுவதும். தாங்களும் இவ்வாறே எண்ணுவது மகிழ்வளிக்கிறது.
b > மேலும், இப்போதும், அவர் பேசுவது அரைவேக்காட்டுத்தனமா இல்லையா என்பதை அவருக்கு என்ன சொல்லி புரியவைக்க முடியும் என்பதையோ அல்லது அதன் காரணங்களை ஆராய்வதையோ எப்படி செய்யக்கூடும் என்பதை இங்கு நான் விவரிக்கப்புகவில்லை.
5> தங்களின் அக்கறைக்கும் மதித்து பதிலிறுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் புரிதலுக்கும் நன்றி.
//...பார்பனர் என்கிற வார்த்தையை நான் தமிழ் இணையம் முலமாக தான் தெரிந்து கொண்டேன்... பார்பனர் என்கிற சொல் பேச்சு வழக்கத்தில் இல்லை என்பது என் கருத்து.//
@ராஜ்
தமிழ்நாட்டில் ஜாதிப்பெயர்கள் உண்டல்லவா அனைவருக்கும்? அப்படியொரு பெயர்தான் பார்ப்பனர். ஐயர் என்றால் ஆதிசைவர்களைக்குறிக்கும். ஐயங்கார்களைச்சேர்க்காது. ஐயங்கார்கள் ஆதி வைணவர்கள். இருவரையும் சேர்த்துக்குறிப்பிட பார்ப்ப்னர் என்ற சொல். இச்சொல் அவர்களாலேயே தவிர்க்கப்படுகிறது. காரணம் அவர்களை சமூக தளத்தில் தாக்கிய பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் இப்பெயரையே பயன்படுத்தியதால். திராவிட இயக்கத்தினர் பிராமணர் என்ற பெயரைத் தவிர்க்கக் காரணம் அது வருணாஷ்ரத்தின் வழி வருவதால். அத்தருமம் பிராமணர் என்போரைப் பிறரைவிட உயர்த்திக்காட்டுவதாக விமர்சனம். எனவே அச்சொல் தவிர்க்கப்பட்டது. பிராமணர் என்ற சொல் தங்களைத்தாங்களே உயர்த்திக்கொள்வதற்காக அவ்விரு ஜாதியினரும் வைத்துக்கொண்டு பிறமக்களையும் அழைக்கும்படி பண்ணுகிறார்கள் என்பதும் விமர்சனம். இதையுணர்ந்த அச்சாதியினர், தங்களை அந்தணர் எனவழைத்துக்கொள்கிறார் தற்போது. அந்தணர் வரலாறு பல பாகங்கள் விற்பனையாகின்றன. அஃது அச்சாதியினரின் புகழ்பாடும் அநியாயமாகன்று. நியாயமாக.
இது போக, தமிழறிஞர்கள் பார்ப்பனர் என்ற சொல்லையே எடுத்துப்பேசுவர். அவ்வறிஞரகள் எவராயினும் சரி அப்படித்தான் பேசுவர். அவ்வறிஞர்களுள் அச்சாதியைச்சேர்ந்தோர் தமிழ் இலக்கியம், அதன் விமர்சனம், தமிழக வரலாறு என்று பேசும்போது மட்டும்தான் அச்சொல். அவர்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதும்போது 'பிராமணர்கள்'என்றெழுதுவர். எ.கா உவேசா. பார்ப்ப்னர் என்ற சொல்லே தன் மேடைப்பேச்சு, எழுத்துக்களில். தனிப்பட்ட முறையில் பிராமணர்கள்தான். பரிதாமற்கலைஞர், ரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார் (இவ்விருவரும் உங்களுக்குப்பிடித்த பாடகியின் கொள்ளுப்பாட்டனார்கள் என்று உங்கள் பாடகி சொல்கிறார்.) இவர்களெல்லாம் தமிழ் உலகில் பெரியோர். பெருங்கொடையைத் தமிழுக்கு ஈந்தோர். இவர்கள் பார்ப்பனர் என்ற சொல்லையே எழுதினர்.
இச்சாதியறிஞரகள் மட்டுமல்லாமல் எல்லாத் தமிழறிஞர்களும் இச்சொல்லையே எடுப்பர். அந்தணர் என்ற சொல்லை அவர்கள் எடுக்காக் காரணம். அச்சொல்லில் பொருள் வேறுபடுமாதலால். அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளில் வள்ளுவர் ஜாதியைச் சொல்லவில்லை. ஒரு பொதுவுண்மையை சொல்கிறார் என்பதாகும்.
பார்ப்ப்னர் என்ற சொல் ஒரு அசிங்கமான சொல்லன்று. இச்சொல் தூய தமிழ்ச்சொல்.
அதன் உட்பொருள், வெளிப்பொருள் இவற்றையெல்லாம், மாபெரும் தமிழறிஞரும், கல்விக்கடல் என்று பெருமதிப்புடன் தமிழ்பால் காதலுள்ளோரால் அழைக்கப்படும் தெய்வத்திரு கோபாலையர் அவர்களின் 'தமிழ்ப்பார்ப்பனர்கள்'என்ற கட்டுரையைப் படித்து அறிந்து கொள்க. அதாவது இனியாவது அறிக
Read the next one also.
சின்னாட்களுக்கு முன் ஒரு செய்தி: திருவரங்கக்கோயில் முன் உள்ள ஒரு உணவு விடுதி ஒரு ஐயரால் நடாததப்படுகிறது. பெயர்ப்பலகையில், பிராமாணாள் கஃபே என்றெழுதியதைக்கண்டித்து தி கவின் ஒரு பிரிவினர் போராட்டம் அக்கடைக்கு முன் செய்தார்கள். அவர்களிடம் நிருபர்கள் கேட்டதற்கு பிராமணர் என்றெழுதாமல், இவர் பார்ப்பனர் என்றெழுதினால் எங்களுக்குப் பிரச்சினையில்லை. பிராமணர் என்ற பெயர் வருணாஷ்ரமப்பெயர். தங்களை உயர்த்திக்கொள்ளவே அவ்வாஷ்ரமம். எனவே வேண்டாம். சமூகத்தில் அனைவரும் சமம்; அதைக் குறைந்தது பெயர்ப்பலகையிலாவது காட்டலாமே என்றனர்.
அக்கடைக்காரர் சொன்னது: பிராமணர் என்ற பெயர் பன்னெடுங்காலமாக தமிழகத்தில் ஜாதிப்பெயராகவே இருந்து வருகிறது. அது வருணாஷ்ரமப்பெயர் என்று எவரும் கவலைப்படவில்லை. என் பள்ளிச்சான்றிதழிலில் என் ஜாதியின் பெயர் இந்து பிராமின் என்றுதானே இருக்கிறது?
இங்கு நாம் ஒன்றைக்கவனிக்க வேண்டும். அரசே இப்பெயரை எடுக்காமல் வைத்திருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலிருந்து. திராவிடக்கட்சிகள் வந்த பின்னராவது, பள்ளிச்சான்றிதழ் இந்து பார்ப்ப்னர் என்று எழுத ஆணையிட்டிருக்கலாம். செய்யவில்லை. எனவே கடைக்காரர் பக்கம் நியாமிருக்கிறது.
ஏன் செய்யவில்லையென்றால் - என் கணிப்பின்படி - பிராமணன் என்பது இந்துமதமொட்டி வருவது.செட்டியார், முதலியார் போன்ற இன்னபிற ஜாதிப்பெயர்கள் அப்படிவரா. எனவே இப்பெயரை மாற்று என்று திராவிடக்கட்சியொன்று ஆட்சியாணையிட்டால் இந்துமதத்தையே இழிவுபடுத்துகிறார்கள் என்ற் பேச்சுவருமன்றோ ?
நான் கடைசியாக இட்ட பின்னூட்டத்தின் நீட்சியாக இன்றைய தினமலரில், "திராவிடர் கழங்களை கண்டித்துபிராமணர் சங்கம் உண்ணாவிரதம்' என்ற செய்தியை படிக்கவும். யுரல்...http://www.dinamalar.com/News_Detail.asp?Id=579994
***தாங்கள் தங்கள் பதிலில் கூறியவை தனிப்பட்ட முறையில் திரு. ஜகன்னாத் அவர்களை மட்டும் வசைமழை பொழியவில்லை. விளித்தலும் சுட்டலும் வேறாக இருந்தது. ***
Jaganath says..
///இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ///
What was Jaganath doing?? Does he finger at only 6 people who have been accused of???
When "you guys" are mentioned, you CARE so much about yourself and immediately respond starting an "id" and condemn and what not. The same thing was started by jaganath which you conveniently overlook! The same story repeats million times no matter where I go.
Anyway, you want to stop now , as you have more important things to do? I am stopping right now! Good luck to you! :)
திரு. டோண்டு அவர்களே,
இந்த சுட்டியினை பார்க்கவும் : பிரச்சினையின் அடுத்த பக்கம்.
இந்த பதிவு கண்டுகொள்ளப்படாமல் போவதாக தோன்றியதால் பகிர்கிறேன். மற்றபடி உண்மை மற்றும் எதிர்வாதங்கள் தனி. இதனை இடுகையில் பின்னூட்டமாக அனுமதித்து இடுவதா அல்லது இதன் மேல் தனி பதிவைக இடுவதோ / சாரத்தினை உங்கள் கருத்தாக இடுவதோ என்பது தங்கள் முடிவு.
http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html
// ஆண்டான்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிர, ஆதிக்க சாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள் விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இவர்களின் இன்றைய வெற்றி நாளைய தோல்வியில் முடிந்துவிடும். //
Post a Comment