10/15/2012

பெண்ணாசை அடங்கியது

ஒரு ஆணுக்கு மூன்று ஆசைகள் உண்டு அவை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. இப்பதிவு இடையில் உள்ள பெண்ணாசை பற்றியது.

முதலில் நான் இட்ட “சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்” என்னும் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூற்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

மேலே குறிப்பிட்ட போர்னோகிராஃபி ரசனை கூட பெண்ணாசையால் உருவானதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொழுது போகவில்லையென்றால் பலான சைட்டுகள் பார்க்கவெல்லாம் வசதி வந்துள்ளது. எல்லாவற்றையும் செய்து வைத்தேன் என்பதை ஒளிவு மறைவின்றியே கூறுவேன்.

இப்போது இதையெல்லாம் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், மேலே சொன்னவை இப்போது நிகழ்காலத்தில் கடந்த சில மாதங்களாய் இல்லவேயில்லை. நானும் முதலில் இதை உணரவில்லை. இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பலான சைட்டில் கதை ஒன்றை படித்தபோது வாந்திதான் எடுக்க வந்தது.

பிறகுதான் என்னையே இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன். காரில் செல்லும்போது தெருவில் செல்லும் கவர்ச்சியான பெண்களை பார்த்து உணர்ச்சி ஒன்றும் வரவில்லை. ஒரு பெண் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் மார்பகங்கள் விம்மி எழுந்த வன்ணம் இருந்தன. ஐயோ பாவம் அவளுக்கு என்லர்ஜ்ட் இதயம் போலிருக்கிறதே என்ற பரிதாபம்தான் வந்தது.

சந்தேகப்பட்டு கூகளில் தேடியதில் இப்பக்கம் கிடைத்தது. ஆக நான் அவதானித்தது மருத்துவ உண்மைதான்.

இதில் எனது மன்நிலை என்ன? ஒரு நிம்மதிதான் ஏற்பட்டது. அடேடே கேன்சரில் இந்த நல்ல பக்க விளைவு உண்டா? இப்பெண்ணாசையால் விரயமாகும் நேரம் பற்றி இனி கவலையில்லை. அவ்வாசை போனது எனக்கு நிம்மதியாகவே இருக்கிறது.இணையத்தில் பலான சைட்டுகளை இனி தேடிப் போகவும் வேண்டாம், வைரஸ் அபாயத்துக்கு உட்படவும் வேண்டாம்.

இளம் வயதில் உள்ளவர்களுக்கு தாம்பத்திய பிரச்சினைகள் வரும்தான், ஆனால் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. ஆகவே எனக்கு அக்கவலைகள் இல்லை.

பார்ப்போம் மேலே என்ன நடக்கிறது என்.

அதற்காகவெல்லாம் நான் முன்னால் எழுதிய பலான பதிவுகளை எடுக்க வேண்டுமா என்ன? அவ்வாறு செய்பவன் டோண்டு ராகவன் இல்லை.

அவன் என்ன நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறமின்றி இருப்பவனா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்






10 comments:

Prem S said...

ஒளிவு மறைவில்லா பதிவு தொடருங்கள் அன்பரே

siva gnanamji(#18100882083107547329) said...

sare, engeyoo pooitteenga........

suvanappiriyan said...

'வீழ்வேன் என்று நினைத்தயோ' என்ற பாரதியின் பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது.

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
Packirisamy N said...

Chee... Cheee .... Indha pazham pulikkum.

எல் கே said...

உண்மையை ஒத்துகொள்ள தில் வேண்டும்

கிருஷ்ண மூர்த்தி S said...

பெண்ணாசையைத் துறக்க கேன்சர் தான் வரவேண்டுமென்பதில்லை! அளவுக்கு மீறிய சர்க்கரைச் சத்து உடம்பில் இருந்தாலே ஒன்றும் செய்ய இயலாது. அது செயல் ரீதியாக! சில மருந்துகளைத் தெரிந்தோ தெரியாமலோ உட்கொண்டால்கூட, அதன் பக்க விளைவு இதுதான்!

ஆனால், காமம் என்பது மனரீதியானது, இச்சையின் முதிரா வடிவம். அது பழுத்து (பகவத்) ப்ரேமையாக மாறாத வரைக்கும் உண்மையில் காம உணர்வு இறுதிவரை அகல்வதில்லை.

ப.கந்தசாமி said...

அன்புள்ள ராகவன்,
என்னுடைய இந்தப் பதிவில்
http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_17.html

உங்கள் பெயரை உபயோகித்துள்ளேன். அதில் ஏதாவது தவறாகத் தெரிந்தால் சொல்லவும். நீக்கிவிடுகிறேன்.

சரவணன் said...

டோண்டு சார், உங்கள் பெயருக்குப் பின்னால் பிளாக்கர் எண்ணை பிராக்கெட்டுக்குள் கொடுப்பதை விட்டுவிட்டீர்களே? எலிக்குட்டி சோதனையெல்லாம் இனி தேவையில்லை என்றா?

dondu(#11168674346665545885) said...

@சரவணன்
இல்லவே இல்லை. எண்ணை கொடுத்துத்தானே இருக்கிறேன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது