வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.
கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.
ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை.
துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாறாளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அவர் பத்திரிகையின் 35-ஆம் ஆண்டு முடிந்ததற்கானத் தன் மீட்டிங்கில் அவர் பேசியதுடன் 100% ஒத்துப் போகிறேன் என்றுக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதை மறுபடி அழுத்தம் திருத்தமாக உறுதி செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
சினிமாக் கவர்ச்சி, இலவசப் பரிசுத் திட்டம் ஒன்றும் இல்லாது வெற்றிகரமாகத் தன் பத்திரிகையை நடத்தி வருகிறார். அவர் பேசும் பொதுக் கூட்டங்கள், நடத்தும் நாடகங்கள் ஆகியவை அடையும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுபவர் பலர். என்ன செய்வது ஐயாமார்களே? உண்மையை உண்மை என்றுதான் ஒத்துக் கொள்ள முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
22 hours ago
21 comments:
எல்லாம் சரிதாங்க டோன்டு ஐயா, அனால் இந்த காஞ்சி ஆச்சாரியார் விஷயத்துல சோ.ராமசாமி கொஞ்சம் "குரு"பக்தியோட பார்த்தாமாதிரி இல்லிங்களா? நான் நினைத்தது தப்புன்னா, என்னை திருத்துங்கள்.
//சினிமாக் கவர்ச்சி, இலவசப் பரிசுத் திட்டம் ஒன்றும் இல்லாது வெற்றிகரமாகத் தன் பத்திரிகையை நடத்தி வருகிறார்.//
உண்மை தான். தொடர்ந்து எழுதுங்கள்.
சோவின் ஒரு தனித்தன்மை என்று நான் கருதுவது என்னவென்றால் அது அவருடையத் தன்னம்பிக்கை நிறைந்தத் துணிச்சல் என்பதுதான். சங்கராச்சாரியாரின் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். தருமபுரி வழக்கை இழுத்தடிக்கும் அம்மாவின் அரசு இதில் இவ்வாறு முனைவது ஏன் என்று அவர் கேட்பதில் என்னத் தவற்றைக் கண்டீர்கள்? அதை விடுங்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். போலீஸார் வேண்டுமென்றே எல்லா விவரங்களையும் பத்திரிகைகளுக்கு லீக் செய்யவில்லையா? சங்கராச்சாரியார் ஒப்புதல் வாகுமூலம் கொடுத்து மன்னித்து விடுமாறுக் கதறி அழுததாக நக்கீரன் எழுதியது முன்னால். இப்போது பேச்சு மூச்சே இல்லை. உச்ச நீதி மன்றத்தில் துளசி வழியாத அசடா?
சங்கராச்சாரியார் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை கோர்ட் பார்த்துக் கொள்ளும் அதற்கு முன்னரே நம்முடைய கிசு கிசு பத்திரிகைகள் அவரைப் பற்றி நாக்கூசாமல் எழுதின. எந்த அடிப்படையில்? சோவிற்கு இவ்வாறு எல்லோரும் சேர்ந்து ஒரு பட்சமாக ஒருவருக்கு தர்ம அடி கொடுப்பது பிடிக்காது. அதனால் அவர் தன் தரப்பிலிருந்து எழுதுவது ஒரு பேலன்ஸிங் செயலாகத்தான் இருக்க முடியும். குற்றச்சாட்டுகளில் இருக்கும் முரண்பாட்டுக்கு அரசால் என்னச் சமாதானம் கூற முடிந்தது?
சங்கரராமன் ஒரு ப்ளாக்மெயிலர் என்று அன்று மீட்டிங்கில் குறிப்பிட்டார். அவர் கொல்லப்பட்டார் என்றுக் கூறியதற்கு "அதனால் அவர் ப்ளாக்மெயிலர் என்பது பொய்யாகி விடாது" என்று கர்ஜித்தார். ம்யூஸிக் அகாடெமி ஹாலில் இது எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. இக்கேஸைப் பற்றிய அவருடையப் பேச்சுக்களிலும் எல்லாத் தரப்பையும் பார்த்துத்தான் அவர் பேசினார். நான் அதற்கு நேரடி சாட்சி. இந்த நியாயமான அணுகுமுறை மற்றப் பத்திரிகையாளர்களுக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்தப் பதிவை இடும்போது நிறைய எதிர்மறை பின்னூட்டங்களை எதிர்ப்பார்த்தேன் இது வரை இல்லை. மேலும் பார்க்கலாம். நான் எதற்கும் தயார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
cho is a misogynist.he is a hypocrite as he opposed emergency but supported POTA.he defended modi and his inaction during gujrat riots. he is a staunch supporter of hindutva and rss.when dmk govt. came to power in 1989 and when some measures affected the udayars he opposed it but the fact was his father was a director in a brewery of udayar group.he never revealed this but jnani and others brought it out in the public. he has no respect for human rights and is anti labour.he still says that jayalalitha should not have reversed the decisions that were against govt.when pucl was formed in tamil nadu he joined first but resigned later as he did not want to criticise police for human rights violations.i agree that he did oppose emergency.but had nda brought emergency he would have supported it.his opposition to emergency had more to do with his opposition to indira gandhi than with his concern for democracy.in bofors issue he defended rajiv gandhi for the simple reason he was against v.p.singh.in short i consider him as an anti-social element. i have little respect for him.
ask yourself whether he adopted the same norms and journalistic ethics you talk of when he exposed dmk govt. or criticised them.did he try to get their views and publish it.it is an irony that he condemns tamil nadu govt. on the bus burning case while it is he who defended modi govt in his speeches.
he still says that jayalalitha should not have reversed the decisions that were against govt.
it should be
govt. employees.
read what jnani has wriiten about his role.it is in thatstamil sites
ஆங்.. என்ன ஒரே விவாதமா? எனக்கு இதுதான் பிடிக்க மாட்டேங்குது! இருந்தாலும் ஏற்கனவே ஒருமுறை சொன்னதை மீண்டும் சொல்றேன்.
சோவை ஒருவர் நேர்மையாளர், துணிச்சல்காரர் இன்ன பிற வார்த்தைகளில் வர்ணிக்கும்போது, வர்ணித்த நபரின் பிரச்சனைகளை பார்பது லாட்டரல் திங்கிங். இட் வொர்க்ஸ்! மாறாக அதற்கு தர்க்கபூர்வமாய் பதிலளிக்க முயல்வது அவர்கள் விரும்பும் வலையில் விழுவது!
இந்த பஞ்ச் லைனை இதுக்கு முன்னாடி யாருக்கு பின்னூட்டமா சொன்னேன்னு நினைவில்லை.
(பின்னூட்டங்களை பார்கும்போது.."இன்னும் எத்தனை காலம்தான்..!"
சோ பெண்களை வெறுப்பவர் இல்லை. அவ்வாறானத் தோற்றம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. என்ன பெண் என்பதற்காக அவர்கள் தவறு செய்தால் கண்டிக்காமல் இருப்பது அவருக்குப் பிடிக்காது. பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார். அதில் என்னத் தவறு? இப்போதுதான் பார்க்கிறோமே. பெண்கள் பஞ்சாயத்துத் தலைவிகளாக இருக்கும் பஞ்சாயத்தில் அவர்கள் கணவர்மார்கள்தானே கோலோச்சுகிறார்கள். இப்போது 33 1/3 % ஒதுக்கீடு வந்தாலும் அதுதானே அனேகமாக நடக்கும்? ஆகவே தனிப்பட்டப் பெண்கள் தங்கள் சொந்த பலத்தில் தேர்தலை ஜெயித்து வரட்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். அது அவர் கருத்து. இதில் பெண் வெறுப்பு எங்கிருந்து வந்தது? அவர்களை கிண்டலடித்து எழுதும் அதே நேரத்தில் மற்ற ஆண்களை மட்டும் விட்டு விடுகிறாரா என்ன?
எமர்ஜென்சியை எதிர்ப்பதும் போடாவை ஆதரிப்பதும் எவ்வாறு முரண்பாடாகும்? போடாவை தவறாக பயன்படுத்தியதற்காக அதையே கூடாது என்பவர்களிடம் இதே லாஜிக்கை வைத்து எல்லா சட்டங்களையும் நீக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறுவது என்னத் தவறு? நெருக்கடி நிலையைப் பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன்.
பாரபட்சமாகச் செயல்பட்ட எலெக்ஷன் கம்ஷனரயும் மீறி மோதி ஜெயித்தப் போது அவர் சந்தோஷப்பட்டதில் என்னத் தவறு? நான் ஏற்கனவே கூறியபடி அவர் ரிப்போர்டுகள் சில சமயம் ஒரு பேலன்ஸை வரவழைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். அது அவர் கருத்து. அவர் பத்திரிகையில்தான் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதுகிறாரே. அதைப் போய் படியுங்கள்.
நான் கூற விட்டுப்போனதை இப்போது எழுதுகிறேன். எந்தத் தலைவரிடமும் போய் தனக்காக எந்தத் தனிப்பட்ட உதவியையும் அவர் கேட்டதில்லை. அதனாலேயே அவர் தனித்து நிற்கிறார். நெருக்கடி நிலையின் போது அவர் இந்திரா காந்தியை பிரதமர் இந்திரா காந்தி என்று வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. இதை அவர் 1977 தேர்தலுக்கு முன் பீச்சில் நடந்தப் பொதுக் கூட்டத்தில் கூறியபோது சென்ஸார் அதிகாரிகள் அசடு வழிந்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"சோவை ஒருவர் நேர்மையாளர், துணிச்சல்காரர் இன்ன பிற வார்த்தைகளில் வர்ணிக்கும்போது, வர்ணித்த நபரின் பிரச்சனைகளை பார்பது லாட்டரல் திங்கிங். இட் வொர்க்ஸ்!"
இதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் ரோஸா வஸந் அவர்களே. லாட்டெரல் திங்கிங்கிற்கும் தயார்.
"மாறாக அதற்கு தர்க்கபூர்வமாய் பதிலளிக்க முயல்வது அவர்கள் விரும்பும் வலையில் விழுவது!"
அப்படிப் போடுங்க அறுவாள.
அரசு ஊழியர்கள் விஷயத்தை முதலில் வெற்றிகரமாகக் கையாண்ட ஜெயலலிதா சோ கூறியதுப் போன்று சரியானத் தருணத்தில் அவர்களை மன்னித்திருந்தால் அவர் வெற்றி நிலைப்பட்டிருக்கும். அதன்றி தோற்றவுடன் தன் நடவடிக்கைகளை வாபஸ் வாங்கி நகைப்புக்குரியவராகப் போனதுதான் நடந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோ:
1.திறமையானவர்: ஆமாம்
2.துணிச்சல்காரர்: ஆமாம்
3.நல்ல பத்திரிகையாளர்: ஓரளவு
4.நடுநிலைமையானவர்: ஓரளவு(அவர் பக்கம் புரிந்துகொண்டு நாம் சில அன்னப்பறவை வேலைகள் செய்துகொண்டால்)
5.தேவையானவர்: ஆமாம். அரசியல்வாதிகளுக்கு
6.நம்பகமானவர்: -4-
7. உள்நோக்கமில்லாதவர்: சத்தியமாக உள்நோக்கமில்லாமல் எதையுமே எழுதமாட்டார்
8. சமூகத்துக்கு அவசியமானவர்: அவர் எழுதாவிட்டால் ஒண்ணும் நாட்டுக்குப் பெரிய இழப்பில்லை.
9. தன்னலம் கருதாதவர்: ஹிஹி...அப்படியா? தன்னலம் இல்லாமல் அவரால் எதுவுமே சிந்திக்கமுடியாது.
இது என் கருத்துமட்டுமே. இது பல ஆண்டுகாலம் அவதானித்த நிகழ்வுகளால் வருவது. உங்களை நானோ, என்னை நீங்களோ இந்த விவாதத்தால் புரியவைக்கமுடியும் என்றோ மாற்ற முடியும் என்றோ நான் நம்பாததால், இதோடு நான் ஜூட்...
அன்புடன்,
-காசி
உள் நோக்கம் இல்லாதவர் என்று நான் கூறவில்லையே. இருந்தாலும் இப்போது அது குறிப்பிடப் படுவதால் கூறுகிறேன் அவர் உள்நோக்கம் உள்ளவர்தான். அதாவது தன் பத்திரிகையை இவ்வாறு பயமின்றி நடத்திச் செல்ல வேண்டும் என்பது. அதனால்தான் அவர் எந்தத் தலைவரிடமும் போய் தனக்காக உதவி கேட்டவர் இல்லை.
தன்னலம் இல்லாதவர் என்று எங்கே நான் கூறினேன்? அவரே மீட்டிங்கில் வெளிப்படையாகத் தெரிவித்தாரே. "நஷ்டம் ஏற்பட்டால் துக்ளக்கை நிறுத்தி விடுவேன்" என்று.
"சமூகத்துக்கு அவசியமானவர்" நான் எப்போது அவ்வாறு கூறினேன்? இருந்தாலும் அதை இப்போது வழி மொழிகிறேன், நீங்கள் அதை மறுத்தாலும் அதுதான் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'திருவிளையாடல்' வசனத்தைக் கேட்காமல் எப்படி ஒருவர் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியாதோ அப்படியே சோ ராமசாமியின் 'துக்ளக்' ஐ ஒரு முறையாவது படிக்காத தமிழர்கள் இருக்க முடியாது. நானும் என் பங்குக்கு ஒரு ஆண்டாவது பதினைந்து நாளுக்கொருமுறை தவறாமல் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன். அதற்கப்புறம் திருவிளையாடல் வசனம் மாதிரி துக்ளக்கை எங்காவது, எப்பவாவது ஓசியில் மட்டும் தான் 'அனுபவித்தது'. அந்த பத்திரிகையை முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரே ஸ்வரத்தில் நடத்தும்/எழுதும் சோவின் சாதனையை விட சிலர் ஓராண்டுக்கும் மேலே தொடர்ந்து படித்து அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய சாதனை.
சில கேள்விகள்: இன்னும் கூட அவருடைய 'காரியாலயம்' 'மவுண்ட் ரோடி'ல் தான் செயல்படுகிறதா அல்லது 'அண்ணா சாலை'க்கு மாற்றிவிட்டார்களா? துக்ளக் அச்சிடும் அச்சகத்தில் சின்னவயதில் அன்னம் வரைய பயன்படுத்திய 'லை' தேய்ந்துபோனதா; தேயாமல் இன்னும் பயன்படுத்தப்படுகிறதா?
சுமு, அண்ணாசாலையாய் மாறியிருக்க வாய்பிருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் 'லை'யை பின்னர் மாற்றிகொணடதை நானறிவேன். இது தகவலுக்கு!
சுமு பின்னூட்டத்தை தொடர்ந்து ஒரு செய்தியாய், செய்தியாய் மட்டும்... நான் என்னுடைய 14 வயதில் துக்ளக்கால் ஈர்க்கப்பட்டு, இப்போது டோண்டு மாற்றி மாற்றி வக்காலத்து வாங்குவதில் காண்பிப்பதை விட, பல மடங்கு தீவிரத்துடன் சோ ரசிகனாய் பல வருடங்கள் இருந்தேன். இடையில் +2போன்ற படிப்பின் காரணமாய் தடைபட்டது, பின்பு மீண்டும் (இது கொஞ்சம் ஓவர்தான் எனினும) 87இலிருந்து 92வரை (என்னுள் நிகழ்ந்த மாற்றங்களினூடே) தீவிர துகளக் வாசகனாய் இருந்திருக்கிறேன். எப்போது (காத்திருந்து 1, 15தேதிகளில் வாங்கி) வாசிப்பதை நிறுததினேன் என்று நினைவில்லை.
அரசியல் பார்வையாளராய், விமரிசகராய் இருந்த சோ ராமஸ்வாமி, எப்போது நேரடி அரசியலில் இறங்கி அரசியல் தரகரானாரோ, அப்போதே அவரது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. நானும் சின்ன வயதிலிருந்து ரெகுலராக "துக்ளக்" படித்து வந்தவந்தான். அவரது சந்தர்ப்பவாதங்களை பார்த்த பின்னர், பிறர் வியக்கும் அவரது மதிநுட்பம் அவரது சறுக்கல்களை மறைக்க மட்டுமே இக்காலத்தில் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது கண்டுகொண்டேன்.
இன்னமும் சோவை வியந்து கொண்டிருப்பவர்கள்
1. அவருடைய வேடம் போடும் திறமையை முழுதும் அறியாதவர்கள்.
2, இருந்தும் அவர் மீது கொண்ட அபிமானத்தால், அவர் செயல்களை நியாயப்படுத்த முனைபவர்கள்.
அவரது அகராதியில், யாராவது ப்ளாக்மெயில் செய்தால், உடனே போலிஸை நாடாமல், தானாகவே கோயிலில் வைத்து போட்டுத் தள்ளிவிடவேண்டும். சட்டம், ஒழுங்கு
civic sense எல்லாம் போஒதிக்கும் இந்த போதகுரு, சங்கரமடத்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளித்து விடுவார். அப்படித்தானே..??
ப்ளாக்மெயிலர் என்றால் கொல்லப்பட வேண்டும் என்று யாரும் இங்குக் கூறவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல சோவின் ரிப்போர்டுகள் ஒரு வித சமன் செய்வது போலத்தான். எல்லோரும் ஒரு பக்கத்தையே வலியிறுத்திக் கொண்டிருந்தால் சொல்லாமல் விட்டதையும் ஒருவர் கூற வேண்டும் அல்லவா. முதலில் போலீஸ் தரப்புச் செய்திகள் மட்டும் அதிகம் வந்தன. பிறகு மெல்ல மெல்ல அவற்றின் முரண்பாடுகளைக் காண்பிக்க ஆரம்பித்ததும் அவை வலுவிழக்க ஆரம்பித்தன. இப்போது போலீஸ் வேண்டுமென்றே ஆதாரமற்றப் பல செய்திகளை லீக் செய்து வந்திருக்கிறது என்றுத் தெரிந்ததும் அதை பெருமளவுக்கு வெளியில் கொண்டு வந்த குருமூர்த்தியின் மேல் போலீஸ் பாய்ந்தது. அவருடையக் கட்டுரைகளை தன் பத்திரிகையில் வெளியிட்ட சோ பாராட்டுக்குரியவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோவை ரொம்ப ஆதரிக்கிறேன் என்பது ஒரு பக்கம். அவரைப் போலவே எனக்கும் சமன் செய்வது பிடிக்கும். இன்னொருப் பதிவு ஒன்றில் சம்பந்தமில்லாமல் அவர் பெயரை இழுத்திருந்தார்கள். சோவுக்காக அதில் கீழ்க்கண்டப் பின்னூட்டமிட்டேன். பார்க்க:http://aruls.blogspot.com/2005/02/blog-post_15.html
"திடீரென்று சோ எங்கிருந்து இந்த விவாதத்தில் வந்தார் ஐயாமார்களே?
மாஸ்கோவைப் பற்றி அவர் எழுதியது உண்மை என்று 1991-க்குப் பிறகு ருஷ்யாவில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ ஆவணங்களே சாட்சி. கம்யூனிஸ்டுகள் தனக்குத் தொல்லை கொடுக்காமலிருக்குமாறு அவர்களிடம் சோவியத் யூனியன் கூற வேண்டும் என்று அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி பிரஷ்னெவிடம் முறையிட்டிருந்தது உங்கள் எல்லோருக்கும் மறந்து விட்டதா? அதே போல ஸ்டாலின் இறந்ததற்கு நம் மத்திய அரசாங்கம் இரண்டு நாட்கள் விடுமுறை விட, சோவியத் யூனியனிலோ அரை நாள் கூட விடுமுறை இல்லை. நாம் அசடு வழிந்ததுதான் மிச்சம். செக்கொஸ்லாவோகியாவில் சோவியத் யூனியன் 1968-ல் செய்த அட்டூழியத்துக்கு எல்லோரும் அதைக் கண்டிக்க இந்தியா மட்டும் நடுநிலைமை வகித்தது வெட்கக் கேடான விஷயம் அல்லவா? இதையெல்லாம் பார்த்துத்தான் சோ அவ்வறு எழுதினார்.
கம்பாசிட்டர் கவிதை? சோ கூறியது முற்றிலும் உண்மை. கவிஞர் சுரதாவின் கவிதையிலிருந்த இலக்கணப் பிழைகளை அவர் விகடனில் எடுத்துக் காட்ட வாயடைத்துப் போய் ஒரு பதிலையும் அப்போது சம்பந்தப் பட்டவர்களால் கூற முடியவில்லை என்பதுதான் உண்மை. இவ்விஷயத்தில் இவையெல்லாம் நான் நேரடியாகப் படித்தேன்.
சோ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப் பார்க்கிறீர்கள்? அவர் பத்திரிகையாளராகத் தன் கடமையையே செய்து வருகிறார். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் தனியாக வலைப் பதிவு போடுங்கள் அங்கும் வந்துப் பின்னூட்டம் இடுகிறேன்."
இது வரை அதற்கு எதிர்ப் பின்னூட்டம் வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இது வரை அதற்கு எதிர்ப் பின்னூட்டம் வரவில்லை.//
ஆகவே, திரு. ராகவன் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்படுகிறார் :-)
இந்த மாதிரி எதையாவது எழுதி அதற்கு யாரும் மறுப்பு எழுப்பவில்லையென்றால் ஒரு எள்ளலோடு வெற்றிப் பிரகடனம் செய்து தன் முதுகில் தானே தட்டிக்கொள்வது சோவின் பாணி.
பலருக்கு பல முன்னுரிமைகள் இருக்கலாம். ஒரு விஷயத்தை எடுத்துப்போட்டு 'நீயா, நானா என்று பார்த்துவிடுவோம்' என்கிற தேவை உங்களைப் போலவே எல்லோருக்குமா இருக்கும்?
ஜெயேந்திர சரஸ்வதி விஷயத்தில் சோவிடம் ஞாநி எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் வரவில்லை என்பதும் தான் பதிவாகியிருக்கிறது. எண்பதுகளில் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை "அப்பனுக்கு சாராயம், பிள்ளைக்கு சத்துணவு" என்று சோ கிண்டலடித்தபோது, இப்போது 'திண்ணை' ஆசிரியராக இருக்கும் கோ. ராஜராம் 'இங்கே இன்று' வில் (பெங்களூரில் வெளியிடப்பட்ட சிறுபத்திரிகை), கர்நாடகத்தில் சோவின் ஆதர்ஷ புருஷரான ஹெக்டேவின் ஆட்சியில் "அப்பனுக்கு சாராயம், பிள்ளைக்குப் பட்டினி" என்ற சிறந்ததோரு கட்டுரை எழுதினார். அதற்கும் தான் சோவிடமிருந்தோ, அவருடைய பக்தர்களிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. சத்துணவு திட்டத்தின் வெற்றி இப்போது வரலாற்றில் பதிவான ஒன்று. சோவின் "நேர்மை"க்கும், "தீர்க்கதரிசன"த்திற்கும் இது போல இன்னும் பல உதாரணங்கள் இருக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்ட பதிவில் முதலில் சோவை (சம்பந்தத்தோடுதான்) இழுத்தது நான் தான். மற்றவர்களின் வசதிக்காக என்னுடைய அந்த பதில்:
//னீங்கள் குறிப்பிட்டபடி இப்போது காணும் முன்னேற்றத்தில் சமூக முதலீட்டுக்கு அதிமுக்கிய பங்குண்டு. உதாரணமாக, காமாரஜர் காலத்தில் இலவச பள்ளிக் கல்வி, பின்னர் திமுக ஆட்சியில் பல புதிய அரசு கலைக்கல்லூரிகள் திறப்பு (குறிப்பாக தனியார் கல்லூரிகள் அதிகம் இல்லாதிருந்த வடமாவட்டங்களில்), எம்.ஜி.ஆர். ஆட்சியில் புதிய பல்கலைக்கழகங்கள், சுயனிதி தொழிற்கல்விக் கல்லூரிகள் என்று படிப்படியாக ஏதோ முன்கூட்டியே திட்டமிட்டு செய்தது போல
னடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதனிடையே சோ போன்ற அறிவுஜீவிகள் செய்துக்கொண்டிருந்தது பெயர் சூட்டல் போன்ற புறவயச் சடங்குகளை கிண்டலடித்துக் கொண்டிருந்தது மட்டுமே.//
அதற்கு அருள் எதிர்வினையாக எழுதியபின்
நீங்கள் களத்தில் குதித்தீர்கள்.
மத நம்பிக்கையாளரையத்த பக்தியுடைய உங்களிடம் வாதாடுவதற்கு விருப்பமோ, முப்பதாண்டு கால துக்ளக் இதழ்களோ, அவர் பேச்சுக்களின் பதிவுகளோ எனக்கு/என்னிடம் இல்லை. ஆகவே உங்கள் வெற்றிக் களிப்புக்கு சவால் விடும் நோக்கமும் இல்லை. (அதற்காக சோவைப் பற்றி பிற இடங்களில் என் கருத்தை சொல்லமாட்டேன் என்று அர்த்தமில்லை)
சோ வகை அரசியல் அலசல் செய்யக் கற்றுக்கொள்ளவோ, அவர் எந்த சமூகப்பிரிவின் நலன்களுக்காக போராடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவோ ஓராண்டுக்குமேல் துக்ளக் படிக்கத்தேவையில்லை என்று என் முந்தைய பின்னூட்டத்தில் சொன்னதையேத் திருப்பிச் சொல்லி விடை பெறுகிறேன்.
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
சுந்தரமூர்த்தி
என்னுடைய கருத்து இங்கே திரு.இராகவன்:
http://ntmani.blogspot.com/2005/02/blog-post_21.html
"பிராமணத் தலைமை உள்ள கட்சியை ஆதரிப்பார்."
அப்படித் தட்டையாகக் கூறி விட முடியாது. 1996-ல் ஜெயலலிதாவை எதிர்த்துக் கருணாநிதியை ஆதரித்ததை மறந்து விட்டீர்களா? அதுவும் அ.தி.மு.க தலைவி பிராமணப் பெண் என்பது எதேச்சையே. எல்லோரும் நினைப்பது போல ஒருவர் பிராமணரா அல்லவா என்பதை ஒற்றி சோ ஆதரவு அளிப்பதில்லை. அதைப் புரிந்துக் கொள்ள முடியாதது சம்பந்தப்பட்டவெர் பிரச்சினை.
"பின்னாளில் ஜெயலலிதா ஜெயேந்திரர் பிரச்னை என்றால் ஜெயலலிதாவை எதிர்ப்பார்."
ஜயேந்திரர் விஷயத்திலும் சோ சமன் நிலையில்தான் இயங்கினார். தேவையான சாட்சியங்கள் இல்லாது அரசு இதில் நடவடிக்கை எடுக்காது என்றுதான் முதலில் கூறினார். பிறகு மெதுவாக அரசுத் தரப்பு வாதங்கள் சொதப்பலாகப் போக, அதை மறைக்க அது பொய் மேல் பொய்யாய் உறைக்க, அப்போதுதான் அவர் அரசுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். தர்மபுரி வழக்கில் இவ்வளவு காலம் கடத்தும் அரசு இங்கு மட்டும் முனைவது ஏன் என்றுதான் கேட்டார். அவர் ஆண்டு விழாக் கூட்டத்திலும் அவர் அதையே வலியுறுத்தினார். அப்போது கூட தான் தன் பத்திரிகையில் இருக்கும் ஒருவரைக் கொல்வது போன்ற சினேரியோ எழுப்பி எல்லோரையும் சிரிக்க வைத்தார். ஆழ்ந்து சிந்தித்து எடுக்கும் முடிவில் தெளிவாக இருக்கிறார். பத்திரிகையை தொய்ய விடாது நடத்துகிறார். அதனுடைய சர்குலேஷனைப் பர்றிக் கேட்டதற்கும் வெளிப்படையாகவே பதிலளித்தார். (சுமார் 75000). இப்பதிவைப் போட்டு எல்லோரையும் உசுப்பி விட்டதற்காக மகிழ்ச்சியே அடைகிறேன். இந்தத் திருப்தியுடன் இன்னொருப் பதிவுக்குச் சென்றுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment