ஒரு நல்லப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்று சரியாகத்தான் கூறுகிறார்கள். அம்மாதிரி சிலப் படங்களையும் காட்சிகளையும் உங்களுடன் இங்குப் பகிர்ந்துக் கொள்கிறேன்.
1968. பெர்க்லீ கலாசாலையில் மாணவர் போராட்டம். துப்பாகிச் சூடு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. ஒரு மாணவன் கீழே இறந்துக் கிடக்கிறான். அவன் பக்கத்தில் அவன் 14 வயதுத் தோழி அமர்ந்துக் கொண்டு, ஒரு கையை அவன் உடல் மேல் வைத்து, இன்னொரு கையை மேலே உயர்த்திக் காட்டி, பார்வையையும் மேல் நோக்கிக் கதறுகிறாள். அது ஒரு ஸ்டில்லில் உலகம் முழுதும் பயணம் செய்தது. என்னைப் பல நாட்கள் தூங்க விடாமல் செய்தது.
1968 (?). தென் வியட்னாமில் ஒரு நெடுஞ்சாலையில் நெருப்புக் குண்டால் காயமடைந்தக் குழந்தைகள் நெருப்பில் உடைகள் எரிந்து நிர்வாணமாக ஓடி வருகிறார்கள். எல்லோருக்கும் முன்னால் ஓடி வரும் சிறுமி இப்போதும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள். சில வருடங்கள் கழித்து அதே பெண்னை டிரேஸ் செய்து இன்னொரு ரிப்போர்ட் வந்தது. நலமாக இருக்கிறாள் என்றுப் படித்ததும்தான் அமைதி வந்தது.
எண்பதுகளில் தூர் தர்ஷனில் ஒரு காட்சி. ஜனாதிபதி திரைப்பட விருதுகளை ஏசியாட் கிராமத்து அரங்கில் வழங்குகிறார். ராஜ் கபூரின் முறை. அப்போது பார்த்து அவருக்கு மாரடைப்பு. மூச்சுத் திணறல் மற்றும் இருமல். ஒரு நிமிடம் அரங்கமே உறைந்துப் போனது. பிறகு? வெங்கட்ராமன் கீழே இறங்கி வேகமாக ராஜ் கபூரை நோக்கி நடக்க, சுதாரித்துக் கொண்டு மெய்க்காப்பாளர்கள் அவர் பின்னாலேயே ஓடி வருகின்றனர். ராஜ் கபூரிடம் வந்து விட்டார். அத்தருணத்திலும் ராஜ் கபூர் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து வணக்கம் போடுகிறார். வெங்கட்ராமன் அவருக்கு பதக்கச் சங்கிலியை அவர் கழுத்தில் இடுகிறார். தனக்காக வைத்திருந்த ஆம்புலன்ஸில் ராஜ் கபூரை மருத்துவ மனைக்கு அனுப்புகிறார். என்னை மிகவும் பாதித்தது இந்த நிகழ்ச்சி.
இன்னும் மேலே பின் வரும் பதிவுகளில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
12 hours ago

3 comments:
அப்படங்கள் தங்களிடமிருந்தால் இங்கு காண்பியுங்களேன்.
முயற்சி செய்தேன். கிடைக்கவில்லை.
அன்புடன் டோண்டு ராகவன்
வியட்னாம் குண்டு விபத்து 1972ம் வருடம் நடதது. அச்சிறுமி பின்னர் யுனெஸ்கோ அமைப்பினால் நல்லென்னத் தூதராக நியமிக்கப்பட்டார்.
படங்களுக்கு:
http://www.vietnampix.com/fire9a2.htm (இத்தளத்திலுள்ள மற்ற படங்களைப் பார்ப்பதற்கு முன் மனதைத் திடப்படுத்திக் கொள்வது நல்லது.)
http://www.vietnamwar.com/PhanThiKimPhuc.htm
Post a Comment