2/05/2005

Now the answers

பாக்கி விடைகள் இதோ.

இங்கிலாந்தில் ஏரியல் சர்வே விஷயத்துக்கு முதலில் வருவோம். அது வரை நிலத்திலிருந்தபடியே அளவுகள் எடுக்கப்பட்டன. ஏரியல் சர்வேயில் அதுவரை குறைந்த பரப்பளவுக்குத்தான் வரி விதிக்கப்பட்டது என்பது அரசுக்குத் தெரிய வந்தது. பிறகு என்ன. சரியான வரி விதிக்கப்பட்டது. அதிகப்படி வருமானம் ஏரியல் சர்வேயின் விலையை சுலபமாக ஈடு கட்டியது. நிலையான லாபமும் வந்தது.

சீரீஸ் 1, 1, 1, 2, 1, 3, 4 இத்யாதி, இத்யாதி....1, 12, 1, 1....
புரியவில்லையா? மணியடிக்கும் கடிகாரம் அன்பர்களே. 12=30, 1=00, 1=30, 2=00, 2=00 ஆகிய மணிகள்தான் அவை. மெரினா பீச்சைக் குறிப்பிட்டால் உங்களுக்கு மணிக்கூண்டு நினைவுக்கு வருகிறதா என்று பார்த்தேன். அவ்வளவுதான்.

ஐயோ அடிக்காதீர்கள் ஐயா!

ஆனால் ஒன்று தெரிந்துக் கொண்டேன். சிறிதளவே க்ளூ கிடைத்தாலும் நம்மவர்கள் விடை கண்டு விடுகிறார்கள். ஆனால் நான் பார்த்த வட இந்தியர்கள் அவ்வளவுக் கூர்மையாக இல்லை. உதாரணத்துக்கு ரங்கமணி ஐயங்கார் விஷ்யம். பென்ணியவாதிகள் என்றுத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பெண்களும் ஒரு ஆணைத்தான் கற்பனை செய்துக் கொண்டனர். ஆனால் இங்கோ முதல் விடையே அதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

dondu(#11168674346665545885) said...

சேர்க்க விட்டுப் போனது. ஆங்கிலத்தில் நான் கேட்டக் கேள்விக்கு விடை அதற்குள் யாராவது சரியான விடை கூறாமலிருந்தால் இன்று மாலை அளிக்கப்படும்.
மதியைக் கேட்ட கேள்விக்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் இதற்கும் வேறு யாராவது விடை அளித்தால் அது ஒரு பயங்கரமான ஹைப்பெர்லிங்க் என்றுதான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது