மற்றவர்கள் உழைப்பைத் திருடித் தான் செய்ததாகக் கூறிக் கொள்வது எல்லா துறையிலும் உள்ளது. எழுத்துத் துறை மட்டும் விதி விலக்கா? சாரு நிவேதிதா ஆபிதீன் அவர்கள் எழுதியக் கதை தான் எழுதியதாகக் கூறிக் கொண்டது பற்றி நாகூர் ரூமி எழுதியதற்குப் பின்னூட்டமிட்ட பிறகு இப்போது இதை எழுதுகிறேன்.
பிரபல எழுத்தாளர்கள் எல்லோருமே இதை செய்திருக்கிறார்கள். கல்கியையே எடுத்துக் கொள்வோம். ஏட்டிக்குப் போட்டியில் தான் ஏதோ கட்டுரை படித்து விட்டு தனக்கு ஏதோ மருத்துவக் கோளாறு என்று பயந்ததை நகைச்சுவையுடன் கூறியிருப்பார். ஆனால் அது "ஒரு படகில் மூவர், அதில் நாயைப் பற்றிச் சொல்லாமலா" என்று ஜெரோம் கே. ஜெரோம் ஆங்கிலத்தில் எழுதிய கதையிலிருந்து அப்படியே சுடப்பட்டது. கல்கியின் வாழ்க்கை வரலாற்றை "பொன்னியின் புதல்வர்" என்றத் தலைப்பில் எழுதிய சுந்தா அவர்களிடம் இதை சுட்டிக் காட்டிய போது அவரும் அதை ஒத்துக் கொண்டு தன் புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
தேவி பாலாவையே எடுத்துக் கொள்ளுங்கள். குங்குமத்தில் அவர் எழுதிய "சக்தி" தொடர்கதை எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியான "சபதம்" என்றத் திரைப்படத்தின் அப்பட்டக் காபி. இதை நான் குங்குமம் பொறுப்பாசிரியர் சாருப்ரபா சுந்தரிடமும் கூறினேன். அவர் தேவி பாலாவிடம் அதைப் பற்றிக் கூறியிருப்பார் போல. பின்னவரும் வலுக்கட்டாயமாக சக்தியில் சம்பவங்கள் மற்றும் புது கதாபாத்திரங்களைப் புகுத்தி என்னென்னவோ செய்தார். அவை அனைத்தும் கதையுடன் ஒட்டவேயில்லை. நான் கூறியதை அப்படியே நம்ப வேண்டாம். சபதம் படத்தை உங்களில் நிறையப் பேர் பார்த்திருப்பீர்கள். சக்தி தொடர்கதையை இப்போது படித்துப் பாருங்கள். நான் கூறியது உண்மை என்று தெரிந்து விடும்.
அதே போல தேவி பாலாவின் "மடிசார் மாமி" கதைக் கரு ஏற்கனவே அறுபதுகளில் விகடனில் வெளியான கிருஷ்னாவின் " சந்தன மரம்" கதையிலிருந்தே எடுக்கப் பட்டது.
மற்ற எழுத்தாளர்கல் செய்ததைப் பற்றி நான் பிறகு எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
9 hours ago
5 comments:
சாருவின் திருட்டை நான் நிச்சயம் நியாயப்படுத்தவில்லை. ஆபிதீன் ப்ளேங்க் செக் கொடுப்பதற்கு முன் இன்னும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் என்றுக் கூறுவதுதான் நான் நாகூராரின் வலைப்பூவிலிட்டப் பின்னூட்டத்தின் நோக்கம். அந்தப் பின்னூட்டத்தை இங்கு மறுபடியும் இடுகிறேன்.
"முதல் தவறு சாருவுடையது அல்ல என்றுதான் நீங்கள் கூறியதிலிருந்து எனக்குத் தோன்றுகிறது. என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள் என்றுக் கூறி விட்டுப் பிறகு ஏன் ஆபிதீன் குதிக்க வேண்டும் என்று சாரு கேட்டிருப்பதில் என்ன தவறு? ஆனால் சாரு ஒன்று செய்திருக்கலாம். இது ஆபிதீன் தனக்கு மனப்பூர்வமாகக் கொடுத்தக் கதை என்று போட்டிருக்கலாம். நன்றியும் கூறியிருக்கலாம். அதைச் செய்யாதது அவர் முட்டாள்தனம். தேவையில்லாமல் பகையைத் தேடிக் கொண்டார். அப்படிப்பட்டவரிடமிருந்து அதை எதிர்பார்த்தது உங்கள் பேதைமை என்று உங்களுக்கு இப்போதுப் பின்னோக்கிப் பார்க்கும் போது புரிந்தால் உங்களுக்கு நல்லது. எந்தப் படைப்பையும் தேவையின்றி மற்றவர்களுக்கு முன்னமே காட்டக் கூடாது என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்."
மேலே குறிப்பிட்டதைப் பின்னூட்டமாக இட்டப் பிறகு இப்போதைய விஷயத்துக்கு வந்தேன். இது பொதுவாக நடக்கும் திருட்டைப் பற்றியது. இதைப் பற்றி மேலும் பதிவுகளில் பேசுவேன்.
தகவல்கள் ஜாகிரதையாகப் பாதுகாகப் பட வேண்டியவை. அவற்றை வெளியிடுவதில் ரொம்ப ரேஷன் முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். சொல் ஒரு முறை உங்கள் வாயிலிருந்து வெளிப் பட்டு விட்டால் அது இனி உங்களுக்குச் சொந்தம் அல்ல என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொதுவாக நீர் கூறிய கருத்தை (நீர் என்ன நாங்களும் தான் அதே தொனியில் படித்தோம்) எப்படி திரித்து அபிதீன் குதித்திருக்கிறார் என்பதை அந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் பார்க்கவும். ரொம்ப அசிங்கமாக பேசியிருக்கிறார். யாரோ மீதுள்ள கோபத்தை யார் மீதோ காட்டுகிறார்கள் இந்த எழுத்தாளர்கள். எங்கே நோவதென்பது தெரியவில்லை. அவர்களுக்குள் பிரச்சனையிருந்தால் சண்டையிட்டு மாயாட்டுமே. பொதுவில் கொண்டுவந்து பொதுபார்வையாக கொடுக்கும் போது, எழுத்தாளர் தான் செய்த பிழையின் கோபத்தை எவ்வளவு கேவலமான வார்த்தைகளில் பயன்படுத்தியிருக்கிறார் என்று போய் பாரும். இவர்களை நினைத்தாலே வெட்கமாகத் தான் இருக்கிறது.
விஜய்,
ஆபிதீன் தன் பினூட்டத்தில் என்னைப் பற்றி எழுதியிருப்பதாகத் தெரியவில்லையே. ரோஸாவசந்தைப் பற்றி எழுதியதாகத்தான் எனக்குப் பட்டது. (சிம்புவின் ஆண்குறியை அறுக்க வேண்டும்). அதற்கேற்றாப்போல் ரோஸாவசந்தும் ஆபிதீனுக்கு 5 மணி நேர அவகாசம் கொடுதிருக்கிறாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஔஅய்யா, ரூமி பதிவில் குழப்பத்திலும் குழப்பம் மக குழப்பமய்யா. எந்த நேரத்தில் அபிதீன் லெட்டர் ரூமிக்கு கொடுத்தாரோ, எல்லோரையும் திட்டுவதாக அமைந்திருந்தது எதிர்பாரதது. பின்னாடி இன்னொரு ஆள் பின்னூட்டமிட்டு தீ மூட்டிக் கொண்டிருந்தார். ரூமி எல்லாவற்றையும் அகற்றிவிட்டார். நல்லது தான்.
ரோஸாவைப் பற்றி அப்பட்டமாக சொல்வாதாக பட்டது. அங்காங்கே வரிகள் நீங்களிட்ட பின்னூட்டத்திற்கும் கேவலமான முறையில் பதில் சொல்வதாகவும் இருந்தது. எனக்கும் ஒரே குழப்பம் தான். இது எந்த வகை எழுத்தில் சேர்த்தியோ.... ஒன்னுமே புரியலை உலகத்தில. குழம்பி போய் தான் உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டேன். தற்காலத்தில் எழுத்தாளர் ஆவதற்கு முன் குண்டாராக வேண்டுமென நினைக்கிறேன்.
Post a Comment