இந்தத் தலைப்பில் தான் எழுதிப் பதிவு செய்ததை நாகூர் ரூமி நீக்கி விட்டார். கோணல் பக்கப் புகழ் சாருவைப் பற்றிய இப்பதிவும் முதலும் கோணல் முற்றும் கோணலாய் மாறியது ஒரு சோகமே. "எண்ணித் துணிகக் கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு" என்றுதான் இங்குக் கூற வேண்டியுள்ளது.
நான் பார்த்தவரை சாரு என்னும் மனிதர் சுயநலத்தின் உருவமாகத்தான் காணப்படுகிறார். சுயநலக் காரனுக்குத் தேவையானத் தந்திரமும் அவரிடம் இல்லை. ஆபிதீன் விஷயத்தைத்தான் குறிப்பிடுகிறேன். ஒரு சிறு நன்றிக் குறிப்பைக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்திருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. இவருக்கு ஏதோ தன்னையே அழித்துக் கொள்ளும் ஆசை வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. (death wish).
சாருவை இப்போதைக்கு விட்டு விடுவோம். ரூமியும் சொதப்பி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆபிதீன் தனக்கெழுதியக் கடிதத்தை அது ஒரு பின்னூட்டம் போலத் தோன்றவைத்து வெளியிட்டதில் குழப்பம் இன்னும் அதிகமானது. சரி செய்வதாக நினைத்து பின்னூட்டங்களைத் நீக்க அது மேலும் குழப்பம் விளைவித்தது. இப்போது பார்த்தால் மொத்தப் பதிவையே நீக்கியிருக்கிறார். சுத்தம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
10 hours ago

2 comments:
இன்று அசோகமித்திரன் - 50 நிகழ்ச்சிக்கு வந்திருந்த சக வலைப்பதிவாளர்கள் நான் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த ரூமி அவர்களின் பதிவு உண்மையில் நீக்கப்படவில்லை என்றும் அது தற்காலிகமாகத்தன் எடுக்கப்பட்டு இப்போது மறுபடி இடப்பட்டதாகக் கூறினர். இப்போதுதான் நிகழ்ச்சி முடிந்த பின் வீட்டிற்கு வந்தேன். பதிவு நீக்கப்படவில்லை. இருந்தாலும் என்னுடைய இப்பதிவு அப்படியே இருக்கட்டும் என முடிவு செய்தேன்.
ரூமி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post.html
முத்து அவர்களே, ஆபிதீன் பிரச்சினை சம்பந்தமாக நாகூர் ரூமி அவர்களின் பதிவுக்கான சுட்டி இதோ. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=28&fldrID=1
அது பற்றி நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post.html
இபின்ன்னூட்டத்தின் நகல் என்னுடைய மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment