1. எம்.ஜி.ஆர் சடையப்ப வள்ளலாக நடித்தப் படத்தின் வில்லன் நடிகர்கள் யார் யார்?
2. உத்திரன், சவ்யசாசி, கண்ணன் .... அடுத்து வருவது யார்?
3. பகவத் கீதையில் பேசும் முதல் 4 பேரை வரிசைப் படுத்த இயலுமா?
4. ராமும் ஷ்யாமும் இரட்டையர்கள். இருவரும் வசிப்பது அமெரிக்காவில். ராமுக்கு அமெரிக்கா போர் அடித்து விட்டது. அவன் ஷ்யாமிடம் இங்கிலாந்துக்குக் குடி பெயரலாம் என்றுக் கூற, ஷ்யாம் தனக்குக் கார் ஓட்டத் தெரியாது என்றுக் கூறி மறுத்து விடுகிறான். என்ன நடக்கிறது இங்கு? (இன்னும் முழுமையான விடை இங்கு வரவில்லை).
5. நிஜமாக நடந்த நிகழ்ச்சி இது. ஒருவன் மருத்துவ மனையில் இருக்கும் அவன் மனைவியைப் பார்த்து விட்டு ஒரு முக்கியப் பொருளை வாங்குவதற்காக அவள் வார்டு இருக்கும் 14-வது மாடியிலிருந்து லிஃப்டில் கீழே வருகிறான். வெளி கேட்டை தாண்டும் போது அவனுக்குத் தெரிகிறது, அவன் மனைவி இறந்து விட்டாள் என்று. எப்படி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
10 hours ago

4 comments:
testing
2. Sigandi
3. In order - ThirudhaRashtiran, Sanjayan, Krishnan, Arjunan.
மன்னிக்கவும், சிகண்டி சரியான விடை அல்ல. திருதிராஷ்ட்ரன் மற்றும் சஞ்சயனுக்கு அடுத்து நீங்கள் கொடுத்தப் பெயர்கள் தவறு.
சிகண்டி என்றுக் கூறக் காரணம்? விடையை ஆதாரத்துடன் கொடுத்தல் நலம். சிகண்டி இல்லை என்பது நிச்சயம்.
விடைகள் அளிக்கும்போது நான் காரணங்களை அவசியம் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விடைகள் பின்னொருப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment