5/25/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

529 comments:

«Oldest   ‹Older   401 – 529 of 529
dondu(#11168674346665545885) said...

இகாரஸ் பிரகாஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://icarus1972us.blogspot.com/2005/09/blog-post.html#comments

அதெல்லாம் இருக்கட்டும். அரசூர் வம்சத்துக்கு இன்னொரு அவார்ட் கிடைத்திருப்பதாக நேற்று இராமு அவர்கள் எஸ்.கே. அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கூறினார். அதற்காக அவருக்கு முதலில் வாழ்த்துக்கள் சொல்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தெருத்தொண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://theruththondan.blogspot.com/2005/09/blog-post_11.html#comments

At 6:41 AM, dondu(#4800161) said...
பொங்குதமிழில் இட்டு ஒருங்குறியில் கொடுத்துள்ளேன்.
நடிகர் சங்கம் கடன் அடைக்கப்பட்டு விட்டது. சூப்பர்ஸ்டார் ஒத்துழைப்பு கொடுத்தார். ஆக, உங்கள் இரண்டு பயங்கள் பொய்த்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Now over to your hyperlinked letter:

To : Vijaykanth@dmk.com
Copy to : maniratnam@iruvar.com
cheran@desiyageetham.com
sub : படைப்பாளிகளின் சுதந்திரம் அடமானப் பொருளா ?

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு,

வணக்கங்க. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கற ரசிகர்கள் முதல் தலைநகரத்தில் இருக்கற முதல்வர் வரை ஆர்வம் காட்டற தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்னு சொல்லுவாங்க. அதுல போட்டியில்லாம நீங்க தலைவராத் தேர்ந்தெடுக்கப் பட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்க மொழில சொல்லணும்னா நானெல்லாம் 'சி' சென்டர் ங்கற பிரிவுல வருவேன்னு நினைக்கறேன்ங்க. ஏழை ஜாதியின் நல்வாழ்வுக்குப் போராடற நல்லவனாத் தொடங்கின உங்க சினிமா வாழ்க்கை இப்போ வல்லரசு மாதிரியான நடிகர் சங்கத் தலைவர் இடத்துக்கு வந்திருக்கிறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்ங்க. அடுத்த படத்துக்கு 'சிம்மாசனம்'னு பெயர் வைச்சிருக்கீங்களாம். புல்லரிச்சுப்போயிட்டேன்ங்க இதைக் கேட்டு.

தமிழக முதல்வரா கோட்டைக்கு வரணும்னா அதுக்கு வழி கோடம்பாக்கம்தான்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்கங்கறது உங்களுக்குத் தெரியுமா? பஸ் புறப்படறதுக்கு முன்னாடி ஏறி தோள்ல இருக்கற துண்டெடுத்து இடம் பிடிக்கறதுக்குப் போடறதை, மதுரை பக்கத்துல பார்த்திருப்பீங்க. அதே மாதிரி 'அந்த' சிம்மாசனத்துக்கு துண்டு போட்டுட்டு நிறைய பேர் காத்திருக்காங்க. புரியுதுங்களா?

இதுக்காக யாரைங்க குறை சொல்ல முடியும்? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து முதல்வரானவங்க எல்லோரும் கோடம்பாக்கத்தோட தொடர்பு இருக்கறவங்களாத்தான் இருக்காங்க. சரியாத் தெரியற சரியான உண்மைகள் எல்லாம் தப்பான நபர்களுக்கு சரியான உதாரணங்களாத் தப்பாத் தெரியறதை நினைச்சா, எது சரி எது தப்புன்னு புரியவே இல்லீங்க.

ஒரு மன்றத்தில பாதி அறை நிரம்பற அளவு கூட்டம் கூடினாலே அங்க வருங்கால முதல்வர்னு கோஷம் கேட்குதுன்னு கலைஞர் சொன்னாரு. அதன்படி பார்த்தா ஏகப்பட்ட வருங்கால முதல்வர்கள் சேர்ந்து உங்களை அவங்களோட தலைவராத் தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா, நிச்சயம் நீங்களும் வருங்கால முதல்வராத்தான் இருக்கணும் இல்லீங்களா..?

ஏற்கனவே அரசியல் கட்சிகள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. போதாக்குறைக்கு புதுசு புதுசா முளைக்கற சாதிச் சங்கங்கள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. நடிகர் சங்கத்துக்குள்ள பொறுப்புலயும், பொறுப்பு எதுவும் வகிக்காமலும் நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. இன்னும் வருங்கால முதல்வர்ங்கற இறுதி இலக்கை அடையறதுக்காக கிராமங்கள்லேர்ந்து எத்தனை பேர் டிக்கெட் இல்லாம சென்னை வந்து ஹீரோ ஆகறதுக்காக புறப்பட்டுட்டு இருக்கிறாங்களோ தெரியலீங்க. உங்க ரசிகர்களோட குரல் இந்தக் கும்பல்ல கரைஞ்சு போயிடுதுங்கறதுதான் வேதனையா இருக்குதுங்க.

சரி விடுங்க. அதெல்லாம் அதுக்கான காலம் வரும்போது பார்த்துக்கலாம். நீங்க தலைவராப் பதவி ஏற்றவுடனே நடிகர் சங்கக் கடனைத் தீர்க்கறதுதான் முதல் கடமைன்னு பேசியிருக்கீங்க. ரொம்ப யோசிச்சு நிதானமா முடிவெடுக்கறவர் நீங்க. அதுக்கப்புறம் எடுத்த முடிவுல உறுதியா செயல்படறவர் நீங்க. எல்லோரும் பேசறமாதிரி நீங்களும் பேசி மாட்டிக்கக் கூடாதேன்னு கவலையா இருக்குதுங்க.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து நடிகர் சங்கக் கடன் பத்தியும் கேள்விப்பட்டுக்கிட்டு தாங்க இருக்கேன். செவாலியே சிவாஜி சார் காலத்துலேர்ந்து கேட்கறதால, இது காற்றோட கரையப் போற வெறும் கோஷமோங்கற சந்தேகம் வர்றதைத் தவிர்க்க முடியலீங்க.

நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கறோம், கடனை அடைக்க மாட்டோமா என்ன என்கிற கேள்வியை இப்போ கேட்க முடியுதுங்க. சினிமா இன்டஸ்ட்ரி வளமா இருக்கும் போதும், நடிகர்கள் கொடிகட்டிப் பறந்த போதும் நடக்காத காரியம், இப்போ இன்டஸ்ட்ரியே தடுமாறிக்கிட்டு இருக்கும்போது நடக்கவாப் போகுதுன்னு ஒரு வேதனை கலந்த விரக்தியும் வருதுங்க.

அப்போதான் ஒரு பத்திரிகைல பார்த்தேன் ஒரு செய்தியை. சூப்பர் ஸ்டார் உங்ககிட்ட ரெண்டு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னதாக அந்த செய்தி சொல்லிச்சுங்க. கூட்டத்துக்குக் கூட்டம் ஜெய்ஹிந்த் சொல்ற தேசியவாதி ரஜினிகாந்த், மதுரையில் நடந்த கார்கில் வீரர்களுக்கான ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கே வரலியே. இதுக்கு வந்துடுவாரான்னு தோணுதுங்க. வந்தா தேசத்தைவிட நடிகர் சங்கம் தான் அவருக்குப் பெரிசான்னு தோணும். வரலைன்னா நடிகர் சங்க நிகழ்ச்சிக்குக் கூட வரமாட்டேங்கறாரேன்னு தோணும்.

இதைத்தான் பக்கத்து வீட்டு படிச்ச தம்பி சொல்லும். உன் மனைவியை நீ அடிக்கறதை நிறுத்திட்டியாங்கற கேள்விக்கு பதில் சொல்ற மாதிரியான சங்கடமான நிலைமைன்னு.

சரி. அதையும் விட்டுடுங்க. சினிமாத் துறைக்கு முதல்வர் உதவிகள் இருக்கறதால இருவர், தேசிய கீதம் மாதிரி படம் எடுக்காதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. இதைத்தான்ங்க என்னால தாங்க முடியலை.

குடிக்கத் தண்ணீர் இல்லாம அத்திப்பட்டு கிராம மக்கள் நடத்துன போராட்டத்தை பாலசந்தர் அவரோட 'தண்ணீர் தண்ணீர்' படத்துல காட்டினாரே.

வேலை இல்லாமையும், வறுமையும், திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமையும், அன்றாட வாழ்வாகிவிட்ட ஒரு சமூகத்துல இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறுவதை அற்புதமா பாரதிராஜா 'நிழல்கள்'ல காட்டினாரே.

தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பென்ஷனுக்காக அரசு அலுவலகத்தின் படிகளில் துவண்டு போன காந்தியவாதி, இறுதிக் காட்சியில் ஆயுதம் தூக்க வைத்தாரே மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரத்தில்'.

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமிச்சு, ஒரு மனை வாங்கி வீடு கட்டி நொந்து நூலாப் போன இளம் தம்பதிங்க தலைல லஞ்சம், அம்மி தூக்கிப் போட்டதை பாலுமகேந்திரா அவரோட 'வீடு' படத்தில் கவிதையாய்க் காட்டினாரே.

இதற்கெல்லாம் அவ்வப்போது அதிகார பீடத்தில் இருப்பவர்கள் படைப்பாளிகள் மீது விஷங்களைக் கக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறுங்க.

அவையெல்லாம் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த கன்டனங்கள். இப்போது நீங்க உங்கள் இயக்குநர் தோழர்களது சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கறீங்க.

சமகால அரசியலில் பலம் வாய்ந்த இருவரைத் தனது படைப்பிலே பதிவு செய்தல் தவறுங்களா? எனக்குப் புரியலீங்க.

மதுரைலேர்ந்து வந்து கனவுத் தொழிற்சாலையின் தலைவரானதுனால, சாலைகளும், குடிநீரும், தெரு விளக்குகளும் இல்லாத குக்கிராமங்கள் மதுரையைச் சுத்தி இருக்கறதை நீங்க மறந்திருக்க மாட்டீங்க. இதைத் தானே சேரன் 'தேசிய கீதம்'ல சித்தரிச்சாரு.

இந்தப் படங்கள் எல்லாம் அந்தப் பிரச்சினையை முழுமையாகச் சரியாச் சித்தரிச்சதா என்றால் அது வேறு விஷயம். இது மாதிரி சப்ஜெக்ட்டையே படமாக எடுக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றது ரொம்ப வேதனையா இருக்குதுங்க.

இந்த மாதிரிப் படம் எடுக்கறவங்க எல்லாருக்கும் அந்த படத்துல நடிகர்கள் மிகக் குறைஞ்ச சம்பளத்துல நடிச்சுக் கொடுப்பாங்கன்னு வாக்குறுதி கொடுக்கறதுக்குப் பதிலா, அப்படிப் படமே எடுக்காதீங்கன்னு சொல்றீங்களே. அதை என்னால தாங்கவே முடியலீங்க.

'சிம்மாசனம்'னு படத்துக்குப் பெயர் வைச்ச உடனேயே மன்னராட்சி மனோபாவம் உங்களுக்கு வந்திட்டுதோங்கற கவலைலதான்ங்க இந்த லெட்டரை எழுதினேன்.

ஏற்கனவே சினிமா இன்டஸ்ட்ரில படைப்பாளிகளுக்கு ஒரு சுதந்திரமும் இல்லைங்க. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்க எல்லாரும் அந்த சுதந்திரத்தை ஆளுக்குக் கொஞ்சம் பறிச்சிட்டுப் போயிடறாங்க.

மிச்சம் மீதி இருக்கற சுதந்திரத்தையும்கூட, நீங்க அடமானமா கேட்கறீங்களே. ஒரு கேப்டன் கிட்டேயிருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்க.

தெருத்தொண்டன்
theruthondan@negotiations.com

dondu(#11168674346665545885) said...

தெருத்தொண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://theruththondan.blogspot.com/2005/09/blog-post_11.html#comments

அடடா இதற்கெல்லாம் என்ன அனுமதி தேவையா? உங்கள் அனுமதி பெற்றா நான் உங்கள் வெப் உலகச் சுட்டிப் பதிவை ஒருங்குறியில் இட்டேன்? எல்லாம் ஒருவருக்கொருவர் உதவிதானே. உங்கள் எதிர்க்காலத் தேவைக்கு:
பொங்குதமிழ் எழுத்துருமாற்றியை உங்கள் வன்தகட்டில் இறக்கிக் கொள்ளுங்கள். புழக்கத்திலிருக்கும் பல எழுத்துருக்களை ஒருங்குறியில் மாற்றிக் கொள்ளும் வசதி அதில் உள்ளது. பார்க்க:
http://www.suratha.com/reader.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தெருத்தொண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://theruththondan.blogspot.com/2005/09/blog-post_11.html#comments

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். முகமூடியின் பின்னூட்டத்தைப் படிக்கும் வரை உங்கள் சுட்டியில் உள்ள கடிதம் மற்றவர்களால் நேரடியாகப் படிக்க முடியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் என் கணினியில் அக்கடிதத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையும் எழவில்லை. ஆகவே அதுவே எனக்கு ஒரு நியூஸ்தான். நிற்க.

நான் விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருக்கிறேன். TSCu Paranar மற்றும் theeniuni fontS-களை செலக்ட் செய்துள்ளேன். ஆகவே பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோ ராகவன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://gragavan.blogspot.com/2005/09/blog-post_12.html#comments

dondu(#4800161) said...
பேஷ் திருச்செந்தூரில் சிறுபிராயத்தை கழித்தீர்களா? அப்படியானால் தேவன் அவர்கள் எழுதிய மிஸ் ஜானகி படியுங்கள். கதையின் முக்கால் பகுதி அந்த ஊரில்தான் நடைபெறுகிறது. தேவன் பெரிய முருக பக்தர். அவர் திருச்செந்தூர் கோவிலைப் பற்றி இக்கதையில் எழுதியிருப்பதை முடிந்தவரை இங்கு தருவேன்.

"இருபுறமும் இரு மனைவிமார்கள் இணைந்து நிற்க, சக்திவேலும் குக்குடத்வஜமும் கரத்தில் மின்ன, ஷண்முகநாயனார் என்ற பெயருடன் நிற்கும் செந்தில் முருகனுக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை யதோக்தமாக நடந்து கொண்டிருந்தது. கமகமவென்று சுகந்தம் வீசும் புஷ்பப்பந்தலில் அமர்ந்திருப்பதும், ஜிலுஜிலுவென்ற பன்னீரில் அபிஷேகம் செய்து கொள்வதும் முருகனுக்குப் பழகிப்போன விஷயங்களே. பக்த கோடிகள்தான் அலுக்காமல் சலிக்காமல் பார்த்தார்கள், போய்விட்டுத் திரும்பிவந்தும் பார்த்தார்கள்.கண்ணை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் அந்தச் சுந்தர விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்துகொள்ள முயன்றார்கள். அடுத்தடுத்து நடந்த ஐந்தடுக்கு தீபாராதனைகளின்போது வாய்விட்டுத் துதித்தார்கள். எங்கு நிற்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து போனார்கள்."

"வெட்ட விடியற்காலத்தில் வெள்ளை வெளேரென்று உடை உடுத்து, ருத்ராக்ஷம் அணிந்து, அவன் அப்பாவைப் போல் வருவான்; மாலையில் பச்சைப் பீதாம்பரம் கட்டிக் கொண்டு அவன் மாமாவைப் போல் வருவான். என் முருகன் விளையாட்டுப் பிள்ளை ஆயிற்றே, மிஸ்டர் நடராஜன்! நம் உள்ளக்கோயிலில் விளையாடுகிறான் இங்கே! ஷண்முகனை நம்பினால், ஒரு காலும் அவன் கைவிடமாட்டான். இது நிச்சயம்!"

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தேன்துளி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://www.domesticatedonion.net/blog/?item=607&comment=3482#comment3482

வெகு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை இங்கு முன் வைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் திலகவதி ஐ.பி.எஸ். தன் முன்னாள் கணவர் குமரன் ஐ.பி.எஸ்ஸுடனான மணவாழ்வில் எதிர்க்கொண்ட பிரச்சினைகளை பற்றி விகடனில் கட்டுரை வந்தது. அது முழுக்க குமரனுக்கு சார்பாகவே எழுதப்பட்டிருந்தது. விவாகரத்துக்கு பிறகு திலகவதி அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அதே சமயம் குமரனின் ஒழுக்கம் எப்படி என்பதை பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. கட்டுரையாசிரியருக்கு முந்தையதைப் பற்றித்தான் கவலை போல.

கட்டுரையின் நடுவில் குமரனின் வீட்டைப் பற்றி குறிப்பு வந்தது. திலகவதி விகடனுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த வீடு தன்னுடையது என்றும் கட்டுரையாசிரியர் பொறுப்பில்லாமல் அது குமரனுடையது என்று குறிப்பிட்டு விட்டதாகக் கூறினார்.

கட்டுரையாசிரியர் கூறிய விளக்கம் என்ன தெரியுமா? சாதாரணமாக கணவனும் மனைவியும் ஒரு சொந்த வீட்டில் வசித்தால் அதற்குக கணவன்தான் உரிமையானவராக இருப்பாராம். இங்கு வேறு விஷயம் என்று தெரியாதாம். அதனால்தான் அப்படி எழுதினாராம். மற்றப்படி தான் தவறாக எழுதியதற்கு ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை. விகடன் ஆசிரியரும் இது விஷயமாக வருத்தம் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரா முருகன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://vembanattukkaayal.blogspot.com/2005/09/blog-post_17.html#comments

எண்பதுகளில் நான் தில்லியில் இருந்தபோது எப்போது சென்னைக்கு வந்தாலும் தூர்தர்ஷனில் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" படம் போடப்படும். அது இல்லாவிட்டால் கொங்கு நாட்டுத் தங்கம் போடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://bhaarathi.net/ntmani/?p=172

அப்படியே போகிற போக்கில் 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஈ.வே.ரா. அவர்கள் ஆதரித்தாரா இல்லையா, விடுதலையில் அப்போது என்ன எழுதினார் என்பதையும் எழுதினால் புண்ணியமாகப் போகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

காயத்ரி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://yaalisai.blogspot.com/2005/09/blog-post_22.html

ஜூன் 23, 1980 அன்று சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார். அதற்கு அடுத்த நாள் முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரி இறந்தார். அவ்வளவுதான், அதற்கும் அடுத்த நாள் பலர் இறந்ததாக வதந்திகள் ஆரம்பித்தன. முதலில் நடிகை சாவித்திரி, ஜெமினி கணேசன், தேவிகா, சிவாஜி கணேசன் என்றெல்லாம் இறந்தவர்கள் லிஸ்டில் பேரைச் சேர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஒவ்வொருவராக கட்சி ஆரம்பிப்பதாக செய்திகள் வர ஆரம்பித்து உள்ளன. செந்தில், கவுண்டமணி ஆகியோரை இன்னும் காணோமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/09/blog-post_23.html#comments

"5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க..."

அச்சமயத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் பேராசிரியர் நன்னன் கலந்து கொண்டார். அவர் முடிவுக்கு ஆதரவாகப் பேசினார்.

அவரிடம் "ஐயா, தங்கள் பேரப் பசங்கள் மட்டும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கலாமா?" என்று கேட்டதற்கு அவர் "அது வேறு விஷ்யம், இங்கு அதைப் பற்றி என்ன பேச்சு" என்று கூறி விட்டார்.

நான் கூற நினைப்பது இதுதான். தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது சம்பந்தப்பட்ட பெற்றோர் எடுக்க வேண்டிய முடிவு. அரசியல் வியாதி இங்கு வரத் தேவையில்லை. அப்படி வர வேண்டுமென்றால் முதலில் தத்தம் வீட்டை ஒழுங்கிபடுத்தி விட்டு வரட்டும். அவ்வாறு இல்லாமல் ஜல்லியடித்தால் இம்மாதிரி பேச்சு கேட்க வேண்டியதுதான். அவர்களுக்கு ஆதரவாக ஜல்லியடிக்கும் வலைப்பதிவர்களே தத்தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன நீட்டி முழக்கிக் கொண்டு வருவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கொசப்பேட்டையின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kosappettai.blogspot.com/2005/09/blog-post.html#comments

"இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க?"
இது சோ அவர்கள் கூறியது.

"பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா,"
இது நீங்கள் கூறியது.

விருப்பம் இருக்கும் பெண்கள் வருவதை யார்தான் தடுக்க முடியும்? சொல்லப் போனால் அவர்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. அதைத்தான் சோ கூறுகிறார். அவங்களை வரவிட வேண்டும் என்று நீங்கள் கூறுவதுதான் சற்றுப் பிற்போக்காகத் தெரிகிறது.

ஆண்கள் யார் அவர்களை அனுமதிக்க? இட ஒதுக்கீடு வந்தால் என்ன நடக்கும்? அவர்களை பினாமியாக்குவதுதான் நடக்கும். இதற்கு போய் மெனக்கெட்டு ஏன் இட ஒதுக்கீடு என்றெல்லாம் தொல்லை என்றுதான் சோ கேட்கிறார். நானும் அதையேதான் கேட்கிறேன்.

மற்றத் தலைவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். அவர்களுக்கெல்லாம் சோ பேசுவது புரியாதுதான்.

"இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு."
இதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்? அவர் பதில் இவர்களுக்குத் தேவையானால் கேட்கிறார்கள். அவ்வளவுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கொசப்பேட்டையின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kosappettai.blogspot.com/2005/09/blog-post.html#comments

இந்த விஷயத்தில் சோ கூறியதுடன் நான் 100% ஒத்துப் போகிறேன்.

ஆற்றல் இருந்து வருபவர் வரட்டும். அதைப் போய் இட ஒதுக்கீடு என்றெல்லாம் நிருவகப்படுத்துவது தேவையில்லை என்று சோ கூறுகிறார். நானும் அதை உறுதியாக நம்புகிறேன்.

இதே கருத்தைத்தான் எல்லா கட்சிகளும் கொண்டுள்ளன. ஆனால் வெளியில் கூறத் தயங்குகிறார்கள் அவ்வளவே.

நம் வலைப்பதிவர்கள் பலருக்கும் அதே எண்ணம்தான். ஆனால் தங்களுக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தி விடுவார்களோ என்றுதான் அவர்கள் அச்சம். எனக்கு இணையத் தாசில்தார்களிடம் நல்லப் பெயர் வாங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்குத் தேவையுமில்லை.

முதலில் கட்சிக்காரர்கள் தங்கள் வேட்பாளர் லிஸ்டில் 33% கொடுக்கட்டும். பிறகு வாய்கிழியப் பேசலாம். இங்குள்ளப் பதிவாளர்களில் அக்கட்சிகளுக்கான கொ.ப.செ.க்கள் உள்ளனர். அவர்கள் இதற்கு பதிலளிக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆரோகியம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennamopo.blogspot.com/2005/09/blog-post_25.html#comments

அதாவது அரபி மொழிக்கு முன்னால் தமிழ் நீச பாஷை (ஹராம் என்று கூறலாமோ? அதே போல கிறித்துவர்களுக்கு லத்தீன மொழியே உயர்ந்தது. இப்போதும் போப்பின் பிரார்த்தனைகள் லத்தீனத்தில்தானே வழங்கப் பெறுகின்றன.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆரோக்கியம் உள்ளவன் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_112770961244412415.html#comments
இங்கு போலி டோண்டு மறுபடியும் வந்து பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்ரி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thoughtsintamil.blogspot.com/2005/09/blog-post_30.html#comments

"இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?"

எல்லாவற்றுக்கும் ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றவர்களை மக்கள் ஒதுக்கியதில் ஆச்சரியம் இல்லைதான். 1939-ல் ஸ்டாலின் - ஹிட்லர் ஒப்பந்தத்தில் ஆரம்பித்து சோவியத் யூனியன் அழியும்வரை அதன் ஊதுகுழலாக இருந்தவர்கள்தானே கம்யூனிஸ்டுகள்.

சைனாவும் உலகமயமாக்கலுகுத் தாவிவிட என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார்கள் அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Abaththam's post vide http://apaththam.blogspot.com/2005/09/blog-post_112636972876969751.html#comments

"Do germans really call themselves as "germans" and their language as "German". May be, dondu can throw some light on this.."


Germans call their country Deutschland and the language is Deutsch.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

பத்ரி அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thoughtsintamil.blogspot.com/2005/10/blog-post_04.html#comments

பத்ரி அவர்களே,

போலி டோண்டு வந்துவிட்டான் பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மருதூரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ithayumpadinga.blogspot.com/2005/10/blog-post.html#comments
இதையே யூதர்கள் ஷலோம் அல்லெஷெம் என்று கூறுவார்கள், பதிலுக்கு அல்லெஷெம் ஷலோம் என்று கூற வேண்டும்.
ஷலோம் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் யூதர்கள், சலாம் என்று பெயர் வைத்துக் கொள்ளும் இசுலாமியரும் உண்டு.

சுவாரசியமான ஒற்றுமை. ஆனால், இரு மதத்தினருக்கும் ஒரே மூதாதையர் என்பதை எண்ணிடும்போது வியப்பு ஒன்றும் இல்லைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nunippul.blogspot.com/2005/10/blog-post_112859501346376926.html#comments
மிக்க மகிழ்ச்சி உஷா அவர்களே. முதல் சில நாட்கள்தான் க்ரிட்டிக்கலாக இருக்கும். உங்களை மறுபடியும் எரிச்சலடையச் செய்யும் முயற்சி நடைபெறக்க்குடும். ஜாக்கிரதை. மனதைத் தளர விடாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்ரி அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thoughtsintamil.blogspot.com/2005/10/blog-post_04.html#comments
"பார்ப்பன திருமலை சென்னை வந்ததும் ஓடோடிச் சென்று வலைப்பதிவு சந்திப்புக்கு அழைத்து கூடிக்குலாவி குசலம் விசாரித்து மகிழ்ந்த மனது தலித் ஆதரவாளர் ரோசாவசந்த் வந்ததபோது ஓடி ஒழியச் சொன்னதே..."
என்ன பொய்யான உளறல். ஆனால் உம்மால் வேறு என்ன செய்ய முடியும் உளறுவதைத் தவிர?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:http://dharumi.weblogs.us/2005/10/06/99

என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு கஷ்டமும் இல்லை. காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே, முக்காலணா 5 நயேபைசே, ஒரணா 6 நயேபைசே. ஒன்றரையணா 10 நயேபைசே, மூன்றணா 19 நயேபைசே மற்றும் நாலணா 25 நயேபைசே. நாலணாவுக்குப் பிறகு பேட்டர்ன் அப்படியே ரிப்பீட் ஆகும்.
நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:http://dharumi.weblogs.us/2005/10/06/99

ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்ல முடியாது. நான் கூறிய மாற்றுகள் அதிகாரபூர்வமானவை. ஒரணாவிலிருந்து கூறுவேன்.

8 நயே பைசே ஒன்றேகாலணா, 10 நயே பைசே ஒன்றரையணா, 11 நயே பைசே ஒன்றேமுக்காலணா, 12 நயே பைசே இரண்டணா, 14 நயே பைசே இரண்டேகாலணா, 15 நயே பைசே இரண்டரையணா, 17 நயே பைசே இரண்டேமுக்காலணா, 19 நயே பைசே மூன்றணா, 21 நயே பைசே மூன்றேகாலணா, 22 நயே பைசே மூன்றரையணா, 24 நயே பைசே மூன்றேமுக்காலணா மற்றும் 25 நயே பைசே நான்கணா.

இதன் பிறகு பேட்டர்ன் ரிப்பீட்டுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://theevu.blogspot.com/2005/10/blog-post.html#comments

கிலோமீட்டருக்கு என்று நிர்ணயித்துள்ள 10 ரூபாயே எம்ப்டி ரிடர்னையும் மனதில் வைத்துத்தான் உருவாயிற்று. மேலும் அவர்கள் அப்படியே காலியாகத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். ஃபாஸ்ட் ட்ராக், பாரதி போன்ற டாக்ஸிகள் பயணிகளை ஓரிடத்தில் விட்டதும் அவர்களுக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து விட்ட இடத்திற்கு அருகாமையில் இருக்கும் வாடிக்கையாளர் வீடுகளுக்கு அனுப்புவார்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் காலி ஓட்டம் என்பதே இருக்காது. நான் முதலில் குறிப்பிட்ட ரேட் அப்போது லாபம்தானே.
மக்களுக்கு என்ன லாபம் என்றால் மீட்டருக்கு மேல் தர வேண்டியதில்லை. ஃபோன் செய்தால் வீட்டுக்கு வண்டி வரும். ஏறி அமர்ந்த பிறகே மீட்டர் போடுவார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் உதிர்க்கும் ஆசிர்வாதச் சொற்களை கேட்க வேண்டாம். என்ன சந்தோஷம்தானே. கால் டாக்ஸி பற்றி தனிப்பதிவும் போட இருக்கிறேன். அதில் இன்னும் விவரமாகக் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெட்டை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://peddai.blogspot.com/2005/10/blog-post.html#comments

உங்கள் கருத்துடன் முழுக்கவே ஒத்து போகிறேன். ஆண் பெண் கற்புநிலையை பற்றி நானும் பதிவு வரிசை ஆரம்பித்துள்ளேன். அதன் முதல் பதிவின் உரல் இதோ: http://dondu.blogspot.com/2005/10/1_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெட்டை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://peddai.blogspot.com/2005/10/blog-post.html#comments

பெட்டை அவர்களே தயவு செய்து "அதர்" ஆப்ஷன மற்றும் அனானி ஆப்ஷனை செயலிழக்கச் செய்யுங்கள். அந்த போலி டோண்டு மறுபடியும் வந்து விட்டான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீரவன்னியனின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html#comments
"கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ?"
கருவறைக்குள் அர்ச்சகர் மட்டுமே செல்ல முடியும். மற்ற யாரும் பார்ப்பனர் உள்பட செல்ல முடியாது.

குழலி நன்றி. மேலே வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல.
ஜோசஃப் அவர்களே, என்னுடைய இப்பதிவைப் பாருங்கள். உங்களுக்கு விளங்கும்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்


"கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ?"
கருவறைக்குள் அர்ச்சகர் மட்டுமே செல்ல முடியும். மற்ற யாரும் பார்ப்பனர் உள்பட செல்ல முடியாது.

குழலி நன்றி. மேலே வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல.
ஜோசஃப் அவர்களே, என்னுடைய இப்பதிவைப் பாருங்கள். உங்களுக்கு விளங்கும்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இராயகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://tamilarangam.blogspot.com/2005/10/blog-post_112940472638175841.html#comments

உங்கள் பெயரிலும் அவ்வாறு பின்னூட்டம் இட ஆரம்பித்து விட்டார்களா? இந்த கேடுகெட்ட பழக்கம் என்னையும் படுத்தி விட்டது. இது பற்றி நானும் பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

“மருது பாண்டியர்கள்பெரிய பூகம்பத்தால் டெல்லி அழியும் ஆபத்து”: ???

ஒன்றுமில்லை முந்தையப் பதிவின் பெயரும் அடுத்தப் பதிவின் பெயரும் ஒன்றொடு ஒன்றாய் சேர்ந்ததன் பலன். மேலே பார்க்க.

அது இருக்கட்டும். இதில் வரும் நான் யார்? நீங்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennar.tamilpayani.com/blog/2005/10/16/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b5/

"மருது பாண்டியர்கள்பெரிய பூகம்பத்தால் டெல்லி அழியும் ஆபத்து": ???

ஒன்றுமில்லை முந்தையப் பதிவின் பெயரும் அடுத்தப் பதிவின் பெயரும் ஒன்றொடு ஒன்றாய் சேர்ந்ததன் பலன். மேலே பார்க்க.

அது இருக்கட்டும். இதில் வரும் நான் யார்? நீங்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennar.tamilpayani.com/blog/2005/10/16/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b5/

“சிலம்புச்செல்வர்,”ஜெமினி அதிபர் எஸ்.எஸ.வாசன் ஒரு சமயம் என்னை அணுகி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றைத் திரைப்படமாக்க தாம் விரும்புவதாகவும், நான் கதை வசனம் எழுதி உதவி புரிய வேண்டுமென்றும் என்னைக் கேட்டுக் கொண்டார்.”

மன்னிக்கவும் வாக்கியம் சரியாக அமையவில்லை. நான் கூறும் மாற்று வழியைப் பார்க்கவும்.

மாவீரமன்னன் கட்டபொம்முவின் நினைவு நாளான இன்று அத்திரைப்படம் உருவானது பற்றி சிலம்புச் செல்வர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இங்கு பார்த்து அதை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். சிலம்புச் செல்வரின் வார்த்தைகளில்:

“,”ஜெமினி அதிபர் எஸ்.எஸ.வாசன் ஒரு சமயம் என்னை அணுகி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றைத் திரைப்படமாக்க தாம் விரும்புவதாகவும், நான் கதை வசனம் எழுதி உதவி புரிய வேண்டுமென்றும் என்னைக் கேட்டுக் கொண்டார்.

அந்த அளவுக்கு சினிமாத்துறையோடு இரண்டறக் கலந்துவிட என் மனம் விரும்பவில்லை….”

அன்புடன்,
டோண்டு ராகவன்

Leave a Reply

dondu(#11168674346665545885) said...

சுரேஷ் அவர்கள் பதிவில் நான் இட்ட இரு பின்னூட்டங்கள் இதோ. பார்க்க: http://sureshinuk.blogspot.com/2005/10/blog-post_112958554444429947.html

அன்பு அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. சுரேஷ் அவர்களே உங்கள் பதிவில் போட்டோ எனேப்ள் செய்யப்பட்டிருந்தால் இப்பின்னூட்டத்தில் என் புகைப்படம் வரும். இப்போது நான் ப்ளாக்கராகப் பதிவு செய்கிறேன். மேலே உள்ள போலி டோண்டு "அதர்" ஆப்ஷனை உபயோகித்து பின்னூட்டமிட்டுள்ளான். அவனது பின்னூட்டத்தில் என் புகைப்படம் வராது. அதே சமயம் நீங்கள் ப்ளாக்கர் கணக்கை மட்டும் அனுமதிக்கும் பட்சத்தில் என் பெயரை டிஸ்ப்ளே பெயராக வைத்து என் புகைபடத்துடன் ஒரு அக்கௌண்ட் வைத்துள்ளான். அதன் பெயரில் பின்னூட்டமிடுவான். ஆனால் டோண்டு பெயர் மீது எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் அவன் உண்மையான ப்ளாக்கர் எண் தெரியும். என்னுடைய எண் 4800161. அவ்வளவுதான் விஷயம். இது பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டிருக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
இந்த கீர்த்தி மிகுந்த மனிதன் அடங்குவதாகத் தெரியவில்லை.

இப்போது பழையகால விளையாட்டுகளுக்கு வருவோம்.
"நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை. இந்த விளையாட்டின் பெயர் மறந்துவிட்டது." இவ்விளையாட்டின் பெயர் "கிச்சுக்கிச்சு தாம்பாளம்". இப்போது கூட வடசென்னையில் கோலி, பம்பரம், பாண்டி முதலிய விளையாட்டுகள் ஆடப்பட்டு வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 18, 2005 11:02 AM


dondu(#4800161) Hat gesagt…
இன்னொரு விஷயம் கூற மறந்து விட்டேன். மற்றப் பதிவுகளில் நான் இடும் பின்னூட்டங்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

October 18, 2005 11:06 AM

dondu(#11168674346665545885) said...

அரசு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://arrasu.blogspot.com/2005/10/blog-post_112964140989310125.html#comments
"திருமணத்திற்கு முன் உடல் இச்சையை தணித்துக் கொள்வது தவறு என்று சொல்வதால் எல்லோரும் ஒழுக்கமாக நடப்பதில்லை அது போல நீங்கள் சரி என்று சொல்வதாலும் எல்லோரும் அதன்படி நட்ட்க்கப் போவதுமில்லை அவரவர் மண இச்சைப்படி அவர்கள் நடந்து கொள்வார்கள்."
Exactly, then where is the problem? I highlighted the double standard adopted by all especially the men about a female's sexuality. I am aware of all the complications mentioned by you. That's why I said that it is very imperative that one should not get caught. I was very clear that what I advocated was only for a person knowing what she wants and going about it in a cautious manner.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

அரவிந்த் நீலகண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://arvindneela.blogspot.com/2005/10/blog-post_18.html#comments
இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற தன் ஆசையை ஒளிவு மறைவில்லாமல் ஒத்துக்கொண்டது பாலஸ்தீன தீவிரவாத கும்பல். அதனிடம் போய் மனித நேயம் எதிர்பார்த்தது இஸ்ரவேலர்களின் தவறுதான்.

இஸ்ரேலைப் பற்றி நான் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள். அவற்றின் சுட்டிகள் இதோ:
1. http://dondu.blogspot.com/2005/03/1.html
2. http://dondu.blogspot.com/2005/04/2.html
3. http://dondu.blogspot.com/2005/04/3.html
4. http://dondu.blogspot.com/2005/04/4.html
5. http://dondu.blogspot.com/2005/09/5.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: நீங்கள் இது சம்பந்தமாக எழுதவிருக்கும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

காசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kasi.thamizmanam.com/?item=206&comment=2151#comment2151

"இதனை இங்கு எழுதுவது உண்மையான பிகேசிவக்குமார்தான். சந்தேகம் உள்ளவர்கள் மரத்தடியில் எனது பதிவினைப் படித்துக் கொள்ளவும். இதோ அதற்கான சுட்டி:
http://groups.yahoo.com/group/Maraththadi/message/27657..."

மேலே இருப்பதை எழுதியது ஒரிஜினல் பி.கே. சிவகுமார் அல்ல. குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியும் அவரது அல்ல. அது ராமசந்திரன் உஷா அவர்கள் எழுதிய மடலாகும். சுட்டியை வெரிஃபை செய்ய மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்திருக்கிறார் மேலே உள்ள புருடாவை எழுதியவர். போலி டோண்டுவின் டச் நன்றாகவே தெரிகிறது. இதையெல்லாம் தன் பெயரில் எழுதத் துணியாதவர்கள் அனானி பெயரில் எழுதலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் வைத்தியனாதன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

October 19th, 2005 at 8:14 pm-ல் என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையது அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennulagam.blogspot.com/2005/10/blog-post_21.html

தமிழ்மணம் இவ்வளவு பாதிப்புக்குள்ளானதற்கு ஒரு முக்கியக் காரணம் போலி டோண்டு. அவன் மற்றவர்கள் பெயரில் முக்கியமாக என் பெயரில் பின்னூட்டமிட்டு தமிழ்மணத்தையே நாற அடித்துவிட்டான். நீங்களே அவன் இட்டப் பின்னூட்டத்தைப் பார்த்து http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html#comments உரலில் என்னை பற்றி கோபமாக எழுதினீர்கள் அல்லவா? பிறகு குழலி உண்மையை கூற என்னிடம் மன்னிப்பு கூட கேட்டீர்களே.

ஆனால் ஒன்று கவனித்தீர்களா? என் பெயரில் வந்துள்ள போலி பின்னூட்டத்தை அது போலி என்று உணர்ந்தபின்னரும் வீரவன்னியன் அவர்கள் நான் உங்கள் இப்பதிவில் இப்பின்னூட்டம் இடும் வரை அப்படியே எடுக்காது வைத்திருக்கிறார். இது அவருடைய பார்ப்பன எதிர்ப்பு வெறியைத்தானே காட்டுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennulagam.blogspot.com/2005/10/blog-post_21.html
"பார்ப்பன எதிர்ப்பு, முதலியார் எதிர்ப்பு, செட்டியார் எதிர்ப்பு என்பது இந்த புது யுகத்திலுமா இருக்கிறது?"

மற்ற எதிர்ப்புகளை பற்றித் தெரியாது. பார்ப்பன எதிர்ப்பு அப்படியே இருக்கிறது. இது கசப்பான உண்மை.

வீரவன்னியன் அவர்களின் பதிவின் தோரணையும் அவர் போலிப் பின்னூட்டத்தை அப்படியே வைத்து ரசிப்பதும் வேறு எதை குறிக்கின்றன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பூபா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://laadlabakdas.blogspot.com/2005/10/blog-post_21.html#comments
பூபா அவர்களே,
மஹாபாரதத்தை சரியாக படித்துவிட்டு பதிவெழுதுங்கள். கீதோபதேசம் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் செய்யப்பட்டது. அர்ஜுனனுக்கு அதற்குள் என்ன காயம் ஏற்பட்டிருக்க முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீரவன்னியன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_112944584603762613.html#comments

பொன்பரப்பி சம்பவம் நடந்த சமயத்தில் வந்த ஜூனியர் விகடனின் ரிப்போர்ட் என் நினைவிலிருந்து தருகிறேன்.

தமிழரசன் குழு இரண்டு மூன்று முறை சுட்டிருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் பெரிய அளவில் இருக்கவே ஓரிருவர் பட்ட காயங்கள் தவிர பெரிய விளைவு இல்லை. தங்களை அடிப்பவர்களைப் பார்த்து தமிழரசன் தான் யார் என்று கூறி, தன் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கிராமத்தைப் பழி வாங்குவார்கள் என்று கூற, வெறிகொண்ட மக்கள் கொள்ளையர்களைச் மேலும் சரமாரியாக அடித்து கொன்றனர். அதற்கப்புறம் மற்றக் கொள்ளையர்களும் பொன்பரப்பியில் வாலாட்டவில்லை என அறிகிறேன். திருடுவர்களையெல்லாம் பொன்பரப்பியில் செய்ததைப் போல செய்ய வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

இப்போது இப்படி ஒரு கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வலைமேடை பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://valaimedai.blogspot.com/2005/10/blog-post_113004525619277312.html

நீங்கள் யார் ஐயா காசியை அவருடைய சொந்த வீட்டிலிருந்து விலக்குவது? உங்களை இங்கு இருக்குமாறு யாரும் கையை பிடித்து கெஞ்சவில்லையே. பிட்க்கவில்லையென்றால் இடத்தைக் காலி செய்யலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

ரவி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ravisrinivas.blogspot.com/2005/10/blog-post_22.html#comments

மன்னிக்கவும் ஸ்ரீனிவாஸ் அவர்களே. சற்று நேரத்துக்கு முன்னால் மெனக்கெட்டு தட்டச்சு செய்தபிறகு பின்னூட்டமிட முயன்றால் "நீங்கள் இந்த வலைப்பூக்கான குழு உறுப்பினர் இல்லை என மறுத்து விட்டது. ஆகவே இம்முறை வெறுமனே டெஸ்டென்றடித்து பார்த்தேன். இப்போது பின்னூட்டத்திற்கு செல்வோமா.

"இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினுள் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அது பிற்பட்டோர்,மிகவும் பிற்பட்டோர் ஒதுக்கீட்டினை பாதிக்கும். தனியாக 5% ஒதுக்கினால் இட ஒதுக்கீட்டின் அளவு74% ஆகி விடும். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் இது குறித்து முடிவெடுப்பதே சரியானமுடிவாகும்."
இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இப்போதே இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டால், பிற்காலத்தில் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தால் இவர்கள் அதன் மேல் பழியை போட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? Pure vote politics.


"பகுத்தறிவின் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சி வீரமணி கூறியிருப்பது. இவரை நவீன வர்ணாஸ்ரமவாதி என்று அழைக்கலாம். என்ன இந்த வர்ணாஸ்ரமம் பார்ப்பனரை முதல் தட்டில்நிறுத்தாமல் பிற்பட்டோரை முதல் தட்டில் வைக்கிறது. அதுதான் முக்கியமான வேறுபாடு."
இதை முற்றிலும் ஒத்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.blogspot.com/2005/06/16_03.html
தருமி அவர்களே,

தலித்துகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி நான் இரண்டு பதிவு போட்டுள்ளேன். முதலாவது டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறையைப் பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html

இரண்டாவது காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post.html

இரண்டு பதிவுகளை மட்டும் பார்க்காமல் அவற்றில் வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். யார் யார் எப்படி எதிர்வினை செய்தார்கள் என்று பார்த்தால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

காசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kasi.thamizmanam.com/?item=209&comment=2233#comment2233

கேட்கவே கஷ்டமாயிருக்கிறது காசி அவர்களே. மாமியாருக்கும் மருமகளுக்கும் என்ன சண்டையோ தெரியவில்லை. ஆயினும் இப்போது இருக்கும் மருமகளுக்கு இது பெரிய தண்டனைதான். கிழவியும் தான் இறக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே சண்டை போட்டிருப்பார் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

காசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kasi.thamizmanam.com/?item=208&comment=2235#comment2235

"இந்தப் பொதுமைவாதம்: 'இவன் காலி அவன் காலி என்று ஆபாசமாக எழுதிக்கொண்டார்கள்.' -
யார் காலி என்று யார் ஆபாசமாய் எழுதிக்கொண்டார்கள்? காசியை தர்ம அடி போடும்
அணியினர்தானே. மற்றவர்களின் ஆபாசத்தை (மனம் பிறழ்ந்த போலி டோண்டுவை
விட்டுப்பார்த்தால்) காட்டமுடியுமா?"
எல்லா ஆபாசங்களையும் ஒரு தட்டில் வைத்து போலி டோண்டு எழுதிய ஆபாசங்களை இன்னொரு தட்டில் வைத்தால், தராசு முள் இரண்டாம் தட்டுப் பக்கம்தானே சாயும்? போலி டோண்டு மட்டுமா? போலி காசி, போலி மாயவரத்தான், போலி எஸ்கே, போலி விஜய், போலி திருமலை என்று எத்தனை அவதாரங்கள்?

"போலி டோண்டு ஒன்றும் தாமாகவே அசிங்கமாக எழுதவில்லை. எழுதத் தூண்டியது அந்த ப்ராமணக் கிழங்கள்!"
ஆக தான் எழுதியது அசிங்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாகி விட்டது.

"என் பெயரிலான பின்னூட்டங்கள் என்று 452 பதிவுகள் வரை எழுதி என்றைக்குமே என் வலைப்பூ தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் இருக்குமாறு செய்தது இல்லை."
453-ம் பின்னூட்டமும் வந்து விட்டது. இப்பதிவில் இப்பின்னூட்டத்தின் நகல் 454-வது பின்னூட்டம் அப்பதிவில். ஒவ்வொரு முறையும் அப்பதிவு பார்க்கப்படும்போது போலி டோண்டுவின் லீலைகள் படிக்கக் கிடைக்கும் அல்லவா?

"பெண்கள் வயதுக்கு வந்த நாள்முதல் அவர்கள் கல்யாணம் ஆகும்வரை செக்ஸ் கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்; எனவே அவர்களும் உடலுறவு கொள்வதில் தப்பில்லை என தப்புத்தப்பாய் உளறியதில்லை."
கட்டுப்பாடு என்பது ஆண்களுக்கும் வேண்டும் என்று ஒப்புக்காகக்கூட ஒரு வார்த்தையும் இங்கு இப்பின்னூட்டத்தில் போலி பேர்வழி கூறவில்லை.

எது எப்படியாயினும் இன்னொருவர் பெயரில் எழுதுவது இன்னொருவர் இனிஷியலை போட்டுக் கொள்வது போலத்தான். லாடு லபக்தாஸ் என்னுடைய 454-பின்னூட்டப் பதிவில் கூறியது போல "அடுத்தவர் பெயரில் ஒன்னுக்கடிப்பவர் ஆண்மையில்லாதவர் .. தன் பிள்ளைக்குக்கூட அடுத்தவர் இனிஷியலை போட்டு அழகுபார்ப்பார்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவிஒல் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mayavarathaan.blogspot.com/2005/10/blog-post_23.html#comments
வருக மாயவரத்தான் அவர்களே.

Plus ça change, plus c'est la même chose, more the things change, more they keep the same.

அதாவது, எவ்வளவு மாற்றங்கள் வரினும் நிலைமை அப்படியே இருக்கும்.

போலி டோண்டுவின் வரவேற்பு எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://alexpandian.blogspot.com/2005/10/blog-post_24.html#comments

"ஆறு போல் செல்லும்போது அழகு, வெள்ளமாகப் பொங்கும் போது வேதனை"

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் வாடும்.
(இது ஆண்டவன் கட்டளை)

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோ அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://cdjm.blogspot.com/2005/10/blog-post.html#comments
ஜோ அவர்களே,
நம்பினால் நம்புங்கள், பச்சை விளக்கு என்றவுடன் எனக்கு சமீபத்தில் 1964-ல் வெளியான "பச்சை விளக்கு" படமே ஞாபகத்துக்கு வந்தது. "ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ" என்ற பாடல் அடிகளை முணுமுணுத்தவாறே பதிவைப் படித்தேன். கடைசி வரியைப் பார்த்ததும்தான் இப்போதைய பச்சை விளக்கின் ஞாபகமே வந்தது.

அருமையான படம். அப்போதெல்லாம் படம் முடிந்ததும் இந்தியக் கொடியுடன் தேசீய கீதம் போடுவார்கள். யாரும் நிற்காமல் தியேட்டரை விட்டு வெளியே சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் இப்படத்தில் கடைசி ஷாட்டாக தேசீயக் கொடியை காண்பித்து அப்படியே பாட்டாகப் போட்டார்கள். அதற்குப் பிறகே "வணக்கம்" என்று ஸ்லைட் வந்தது. அக்காலத்தில் எல்லோரும் இதை பாராட்டினார்கள்.

பாடல்கள் அத்தனையும் அருமை. "ஒளிமயமான எதிர்க்காலம்" என்று சோகமான வெர்ஷனில் பாடப்பட்டப் போது பார்வையாளர்கள் நெஞ்சமே கலங்கியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/10/25/117
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி, பி.யு. சின்னப்பா மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஜோடிகளை பற்றி நான் எழுதிய பதிவு கீழே பார்க்கலாம்.
http://dondu.blogspot.com/2004/12/inevitable-pairs-in-tamil-cinema.html

எம்.ஜி.ஆர். 1967 ஜனவரி 17-ஆம் தேதியன்று சுடப்பட்டார்.

எம்.ஜி.ஆரை எனக்குப் பிடிக்கும், ஆனால் அவர் நடிப்புக்காக அல்ல. அவருக்கு இரு முகபாவம்தான் வரும் என்று ஒருவர் கூறினார், அதாவது ஒன்று தேள் கொட்டிய முகபாவம், இன்னொன்று தேள் கொட்டாத முகபாவம்.

ஆனாலும் அவர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கறுப்பி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://karupu.blogspot.com/2005/10/blog-post.html#comments
Hello pretty young lady,

பல நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி.

ஆக, தமிழைப் பற்றி எல்லோரும் ஆங்கிலத்திலேயே உரையாடியிருக்கிறார்கள். பேஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/10/25/117

"அப்புறம் என்ன? எம்.ஆர்.ராதாவை ஜெயில்ல போட்டாங்க. எத்தனை வருஷம் என்ன ஏது, அதில்லாம் வேணும்னா நம்ம எல்லோரும் டோண்டுவிடம் கேட்டிடுவோம்."

முதலில் ஒரு சிறு திருத்தம். எம்ஜிஆர் சுடப்பட்டது ஜனவரி 12-தான், 17 அல்ல. எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை. தண்டனை காலத்தில் இன்டர்னேஷனல் மோசடிப் பேர்வழி வால்காட்டுடன் சிறையில் பழக்கம். பிரெஞ்சு அவரிடம் கற்றுக்கொண்டாராம், முக்கியமாக கெட்ட வார்த்தைகளை. எனக்கே அவை சரியாகத் தெரியாது. அல்லியான்ஸ் பிரான்ஸேசில் கேட்டிருந்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்.

5 ஆண்டுகள் முடியும் முன்னரே அவர் விடுதலை அடைந்ததாக ஞாபகம். எழுபதுகளில் மறுபடியும் படங்களில் நடித்திருக்கிறார். உதாரணம்: தசாவதாரம், மேளதாளங்கள், கந்தர் அலங்காரம் (இதில் முருக பக்தராக வந்து காலட்சேபம் எல்லாம் செய்தார்). சரியோ தவறோ கடைசி வரை தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/10/26/121

"இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை "அவன்,இவன்" என்றும், எம்.ஜி.ஆரை "அவர், இவர்" என்றும் பேசுவது வழக்கம்."

"நான் ஏன் பிறந்தேன்" என்ற தன்னுடைய தொடரில் எம்.ஜி.ஆர் குமுதத்தில் வந்த ஒரு கேலிச் சித்திரத்தைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அதாவது, ஒரு சிவாஜி ரசிகர் சைக்கிளில் உட்கார்ந்திருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகர் விளக்குக் கம்பத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறார். சிவாஜியின் ரசிகர் பேன்ட் ஷர்ட் போட்டிருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகரோ சாதாரண வேட்டிச் சட்டை. தன்னுடைய ரசிகரை பட்டிக்காட்டானாகக் காட்டிவிட்டு சிவாஜி ரசிகரை நாசுக்கான பேர்வழியாகக் காட்டுவதே குமுதத்தின் வேலையாகப் போயிற்று என்று எம்.ஜி.ஆர். குறை கூறியிருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் வைத்தியநாதன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://arunhere.com/pathivu/?p=105
வாழ்த்துக்கள் அருண் அவர்களே. உங்கள் நண்பர் மாயக்கூத்தன் அவர்கள் பெருங்குளத்தைச் சேர்ந்தவரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆபடிப்போடு அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post_27.html#comments
அப்பிடிப்போடு அவர்களே,
உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுவானது. இதில் ஆணுக்கு பூரண சுதந்திரம், பெண்ணுக்கு பூரணக் கட்டுப்பாடு. இரண்டுக்கும் சமுதாயம் சார்ந்த பலக் காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நான் போட்டப் பதிவுகள் இதோ. பார்க்க:
1. http://dondu.blogspot.com/2005/10/1_11.html
2. http://dondu.blogspot.com/2005/10/2_14.html
3. http://dondu.blogspot.com/2005/10/3.html

"ஆனால் அடுப்படியில் காலம் முழுதும் கிடந்த எங்கள் பாட்டி, எந்த அச்சுருத்தலும் இல்லாமல், வன்முறைகளை எதிர்கொள்ளாமல் (பெரும்பான்மையாக) பாதுகாப்பாக இருந்தாள். அந்தப் பாதுகாப்பிற்கு நாங்கள் ஏங்குகின்றோம்."
உங்கள் பாட்டிகாலப் பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்ததைக்கூட பெரும்பான்மை என்ற டிஸ்க்ளைமருடனுடனேயே எழுத வேண்டியிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா. 7 வயதுகூட நிரம்பாத சிறுவயது விதவைகள் பருவமடைதபின் வாழ்ந்த கொடூர வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? இது வெறும் சிறை காக்கும் காப்புதானே? இப்போது நீங்கள் நோஸ்டால்ஜியாவுடன் பார்க்கும் அக்காலம் மறுபடியும் வரவே வேண்டாம்.

பெண்களின் காம உணர்ச்சி என்பது இயற்கையின் நியதி. இதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை மனு உணர்ந்துகொண்டதால்தானே சிறு வயது திருமணங்கள் புழக்கத்துக்கு வந்தன? பருவமடைந்த பெண்ணுக்கு அவள் தகப்பன் திருமணம் செய்து வைக்கவில்லையென்றால் அவளே தன் கணவனைத் தேடிக் கொள்ளலாம் என்று மனு கூறியதற்கும் இதுதான் முக்கியக் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அபு உமர் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nihalvu.blogspot.com/2005/10/blog-post_30.html#comments

பாலஸ்தீனியர்களின் கொடுஞ்செயலைப் பார்க்க: http://images.google.com/imgres?imgurl=http://www.leyden.net/washpost2.gif&imgrefurl=http://www.leyden.net/washpost.html&h=998&w=659&sz=111&tbnid=WAlx3oOsJGYJ:&tbnh=149&tbnw=98&hl=en&start=7&prev=/images%3Fq%3Dplo%2Bterrorism%2B%26svnum%3D10%26hl%3Den%26lr%3D%26newwindow%3D1%26sa%3DG

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிமுலேஷன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://simulationpadaippugal.blogspot.com/2005/08/embarrassment.html#comments

வருக சிமுலேஷன் அவர்களே,
நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் ஒன்று பாக்கியிருக்கிறது. அதாவது தமிழ்மணத்தின் நட்சத்திர வோட்டிங்கையும் செயல்படுத்த வேண்டும். அதற்கான மீயுரையை உங்கள் டெம்ப்ளேட்டில் சேர்க்கவும். அப்போதுதான் உங்கள் பதிவுக்கு யார் பின்னூட்டமிட்டாலும் அது இற்றைப்படுத்தப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அபு உமர் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nihalvu.blogspot.com/2005/10/blog-post_30.html#comments
அபு உமர் அவர்களே மன்னிக்கவும். ஹைப்பர்லிங் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. பதிவு போடும்போது அதற்கான ஏற்பாடுகள் இருப்பதால் பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போடும்போது அதை செயல்படுத்தத் தெரியவில்லை.

நல்லடியார் அவர்களே, நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே. அது பற்றி ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது படிக்கவும்.

"ஒருவேளை ஜெர்மானிய நியோநாஜிக்களுடன் இருக்கும் தொடர்பால் இருக்கலாம்."
உங்கள் லாஜிக் எனக்குப் புரியவில்லை. ஜெர்மானிய நியோநாஜிக்கள் எப்போது இஸ்ரவேலர்களின் ஆதரவாளர் ஆனார்கள்?

தங்கள் நாட்டை உலக வரைபடத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறுபவர்களிடம் இஸ்ரேல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

கூறப்போனால் இந்தியா இப்போது எதிர்க்கொள்ளும் தீவிரவாதத்தை இஸ்ரேலின் துணையை நாடினால் சற்று நல்ல முறையில் எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/4.html
நீங்கள் எழுதியதை படித்ததும் எனக்கு இன்னொரு முதலமைச்சரைப் பார்த்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

சில மாதங்கள் முன் நாங்கள் வந்த கார் விழுப்புரம் அருகே லெவல் க்ராஸிங்கில் காத்து நிற்க வேண்டியிருந்தது. நிறைய கார்கள் வரிசையாக நின்றன. எங்கள் காருக்குப் பின்னால் வந்த காரில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கார் நின்றது. எங்கள் ஓட்டுனர் அதைப் பார்த்து என்னிடம் கூற, நான் உடனே காரை விட்டு இறங்கி முதல்வரின் காரை நோக்கி, கை கூப்பியவாறே சென்றேன். என் வீட்டம்மா இந்த பிராம்மணனுக்கு திடீரென என்ன ஆயிற்று என விழித்தார்.

நான் வருவதை பார்த்த முதலமைச்சர் தானும் காரிலிருந்து இறங்கினார். ஒரு கெடுபிடியும் இல்லை. கறுப்புப் பூனைகள் என்னைப் பிடித்துத் தள்ளவில்லை. அவ்வளவு எளிய மனிதர் ரங்கசாமி அவர்கள்.

அவரிடம் நான் பாண்டிச்சேரி மாநிலத்துக்கு செல்பவர்கள் நுழைவு அனுமதிக்காக கஷ்டப்படுவதைக் கூறினேன். மானிலத்துக்குள் வரும் எல்லா சாலைகளிலும் சுங்கச் சாவடிகள் வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் புன்முறுவலுடன் ஆவன செய்வதாகக் கூறினார். செய்கிறாரோ இல்லையோ தெரியாது. இன்முகத்துடன் பேசியதே முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/4.html

நான் பெரியார் அவர்களை ஆதரித்து பதிவே போட்டிருக்கிறேனே. அதை இங்கு பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/11/02/122
வாழ்த்துக்கள் தருமி அவர்களே. எனக்குத் தெரிந்து நீங்கள், நான், ஜோசஃப், என்னார், கிச்சு ஆகியோர் 50 வயதைத் தாண்டியவர்கள். வெங்கட் சாமினாதன் அவர்கள் தீவிரமாகப் பதிவுகளில் இன்னும் இறங்காததால் அவரை நான் இங்கு சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்தான் சீனியர், அடுத்து நீங்கள் பிறகு நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருணா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://aruna52.blogspot.com/2005/11/blog-post.html

நன்றாக எழுதியுள்ளீர்கள். சாதாரணமாக வெளியூரில் வசிப்பவரின் பிள்ளைகள் வளர்ந்ததும் இம்மாதிரித் தலைமுறை இடைவெளி ஊர்ப்பாச விஷயத்தில் சர்வ சாதாரணமாக வந்து விடுகிறது. அதுவும் 15-20 வருடங்களுக்குள்.

ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த ஊர்க்கனவை மனதில் வழையடிவாழையாகச் சுமந்த யூதர்களை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலர்களை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அது வேறு விஷயம். இந்த சொந்த ஊர்ப்பற்றில் மட்டும் அவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவு பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://theevu.blogspot.com/2005/10/blog-post.html#comments
என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.weblogs.us/2005/11/05/127
"அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன? - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும்."

அந்த பாய்லர் பஸ்களை பற்றி என் தந்தை கூற கேள்விப்பட்டிருக்கிறேன். நான் குழந்தையாக இருந்த போது அவை இருந்தனவாம். அவை இப்போது எங்கே என்று நான் அக்காலத்தில் கேட்டதற்கு தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார். அவற்றையெல்லாம் உங்கள் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீர வன்னியன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_113119812767940119.html#comments
"சாதியைப் பற்றி எழுதுவது சாதி வெறி என்றால், ஒவ்வொரு முறையும் அந்த சாதியைப் பற்றி நக்கலாகவும், ஏளனமாகவும் பேசுவதும், எழுதுவதும் கூட சாதி வெறி தான்."
ரஜினி ராம்கி உங்கள் ஜாதியை எங்கு ஏளனமாகப் பேசினார்? உதாரணங்கள் அவருடைய எழுத்துக்களிலிருந்து தர இயலுமா?

உங்கள் பதிவு http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html பார்ப்பன வெறுப்பைத்தானே காட்டுகிறது. அங்கு வந்து போலி டோண்டு பின்னூட்டம் இட்டான் என்பதை தெரிந்த பின்னாலும் அதை அப்படியே வைத்து அழகு பார்க்கும் ஆசை உங்களுக்கு இருப்பது உங்களுக்கு சரியாகப் படுகிறதா?

உங்கள் கொலுவை பற்றிய பதிவு http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_12.html பற்றிப் பேசுவோமா? உம்மை யார் ஐயா கொலு வைக்க வேண்டாம் என்று தடுத்தது? பார்ப்பனரா? உங்கள் அப்பவும் தாத்தாவும் கூறியத்ற்கு அச்சாதியினரா பிணை? இப்போது வைப்பதுதானே? யார் தடுத்தது?

முன்னேறப் பாருங்கள். நீங்கள் உங்கள் சாதி மேல் அபிமானம் வைப்பது உங்கள் உரிமை. அதற்காக தேவையில்லாமல் பார்ப்பனரை வம்புக்கிழுப்பது ரொம்ப அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீர வன்னியன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_113119812767940119.html#comments

"தனிப்பட்ட யார் மீதும் எதிர்ப்பு காட்டுவது என் நோக்கம் அல்ல"
அப்படியா, அதனால்தான் போலிடோண்டுவின் பின்னூட்டங்களை அப்படியே வைத்து அழகு பார்க்கிறீர்களா?

"நாங்கள் முன்னேறி கொண்டு தான் இருக்கிறோம்."
மிக்க மகிழ்ச்சி. அப்படியானால் ஏன் கொலு குறித்து இவ்வளவு ஆதங்கம்? அதனால்தானே நான் அவ்வறு கூற நேர்ந்தது? உங்கள் அப்பாவோ தாத்தாவோ கூறியதில் உண்மை இருந்தால், முன்னேற்றம் உங்களுக்குத் தேவைதான்.

அது இருக்கட்டும், ரஜினி ராம்கி உங்கள் ஜாதியை எங்கு ஏளனமாகப் பேசினார்? உதாரணங்கள் அவருடைய எழுத்துக்களிலிருந்து தர இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீர வன்னியன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_113119812767940119.html#comments

"நான் திரு.ராம்கி எனது பதிவில் தொடர்ந்து எழுதி வரும் பின்னூட்டங்களைப் பற்றி தான் இந்தப் பதிவையே எழுதியுள்ளேன்"

நீங்கள்தான் ராம்கியை குற்றம் சாட்டினீர்கள். தகுந்த சுட்டியுடன் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை. அவர் உங்கள் ஜாதியை அவதூறாகக் கூறினார் என்பதை அவருடையப் பின்னூட்டங்களிலிருந்து காட்ட முடியுமா?

உங்கள் தனிப்பட்ட பார்ப்பனர் எதிர்ப்பு போலி டோண்டுவின் பின்னூட்டங்களை வைத்து அழகு பார்ப்பதன் மூலம் நிரூபணமாகி விட்டது.

Ein bisschen Reife Ihrerseits wuerde Ihnen sicher nicht schaden, Herr Veeravanniyan!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பிரகாஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://icarus1972us.blogspot.com/2005/11/blog-post.html#comments
உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா பிரகாஷ் அவர்களே. எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானும் உங்களுடன் வெசா அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பேன் அல்லவா.

எது எப்படியோ, அவருக்கு தமிழ் தட்டச்சு எனேப்ள் செய்ததற்கு மகிழ்ச்சி.

மதி அவர்களே, வெசாவின் டெம்ப்ளேட்டில் தமிழ்மணதுடனானத் தொடர்புக்கான மீயுரையை ஏற்றியிருந்தேன். கூடிய சீக்கிரம் அவருடைய லிங்கை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://penathal.blogspot.com/2005/11/to-kill-mockingbird.html#comments
பதிவைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டேன். சமீபத்தில் 1963-ல் படித்த புத்தகம், அதற்கு அடுத்த ஆண்டு திரைப்படமும் பார்த்தேன். கிரகரி பெக் மிக அருமையாக அட்டிகஸாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த நடிகரே, எனக்கு மிகவும் பிடித்த பாத்திரத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

மனதை தொட்ட இடங்கள் பல. அவற்றில் சில இங்கே.

1. கோர்ட்டில் ஒரு செஷன் முடிந்து எல்லோரும் வெளியே செல்வர். மாடியில் உள்ள சீட்டில் அமர்ந்து ஸ்கௌட் தூங்கி விடுவாள். திடீரெனா அவள் தட்டி எழுப்பப்படுவாள். "Wake up and stand up, your father is passing" என்று அவளிடம் கூறப்படும். கீழே அட்டிகஸ் வெளியே செல்ல, எல்லா கருப்பர்களும் எழுந்து நிற்பார்கள்.
2. ஜிம்மையும் ஸ்கௌட்டையும் பூ ராட்லி காப்பாற்றும் நிகழ்ச்சி.
3. வெறி நாயை அட்டிகஸ் ஒரே தோட்டாவில் சுட்டு வீழ்த்தும் காட்சி.
4. கொலை வழக்கிற்கான மற்ற காட்சிகள்.

கூறிக்கொண்டே போகலாம். நான் மேலே சொன்ன காட்சிகள் புத்தகத்திலும் சரி, திரைப்படத்திலும் சரி பிரமாதமாக வந்திருந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://theevu.blogspot.com/2005/11/blog-post_07.html#comments
இது என்ன கூத்து? எரிதங்களை தவிர்க்க வழி கேட்கிறீர்கள் என்று நினைத்தேன். கூர்ந்து பார்த்தால் எரிதம் நீங்கள் எப்படிப் போடுவது என்று கேட்பது போல இருக்கிறது.

முன்னதற்காக நான் ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரம்யா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ramyanags.blogspot.com/2005/08/blog-post.html
"கடைசி காலத்தில் இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தை
சொன்னப்படம் ஒன்று செளகார் ஜானகி, ஜெமினி கணேசன் நடித்தது... பெயர் என்ன?"

படம் ஸ்கூல் மாஸ்டர். சமீபத்தில் 1974-ல் வந்தது. இதே படத்தின் ஹிந்தி ஆக்கத்தில் சிவாஜி அவர்கள் ஒரு துணை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://penathal.blogspot.com/2005/11/08-nov-05.html#comments
"டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க,"
அகிலனில் வந்த வேங்கையின் மைந்தன் கதாநாயகனாக ஜெமினி கணேஷையே கற்பனை செய்திருந்தேன். இரண்டு கதாநாயகிகளில் வைஜயந்திமாலா மற்றும் பத்மினியை நினைத்திருந்தேன். பார்த்திபன் கனவுக்கு நான் நினைத்த ஜோடியே திரைப்படத்தில் வந்தது.

படித்த கதை திரைப்படமாக வரும்போது வெற்றி பெறுவது கடினமே. என் அனுபவத்தில் இரண்டு உதாரணம் கூறுவேன்.

முதல் புத்தகம் "Pot bouille" என்றத் தலைப்பில் பிரெஞ்சு எழுத்தாளர் எமில் ஜோலா எழுதியது. அதன் திரைப்படம் புத்தகத்தை விட சிறப்பானதாக வந்திருந்தது. Gerard Philippe நடித்த இப்படத்தின் திரைக்கதையை Jean Pierre Armand
சிக்கென்று அமைத்திருந்தார்.

இரண்டாவது புத்தகம் தில்லானா மோகனாம்பாள். புத்தகம் மிகப் பெரியது. அதை சுவைபட திரைக்கதையாக்கி வெளியிட்டனர். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன் என்று ஒரு பெரிய கோஷ்டியே வேலை செய்தது. கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை திரையில் மிகக் கச்சிதமாக வந்தது.

ஆனால் புத்தகத்திலிருந்து பல பகுதிகள் மற்றும் பாத்திரங்கள் படத்தில் இடம் பெற இயலவில்லை. நாவலைப் படித்தால்தான் திரைப்படத்தை எவ்வளவு கச்சிதமாகக் கூறினார்கள் என்பது புரியும்.

தில்லானா மோகனாம்பாளை அப்படியே எடுக்க வேண்டுமானால் ஒரு மெகா சீரியல் ரேஞ்சில் யாராவது எடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மலர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2005/11/blog-post_08.html

"முன்பு ஒருமுறை இதுபோல் கேரளா ஐ.எஸ்.ஆர்.ஓ மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணனும் ஒரு ஐ.ஜியும் சேர்ந்து இது போல் ராணுவ ரகசியங்களை ஒரு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு கைமாறிய சம்பவம் நடந்தது. பின்னர் அந்த விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது."

என்ன உளறல் இது. நம்பி நாராயணன் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். நீங்கள் சொல்வது போல யாரும் கேஸை அமுக்கவில்லை.

பார்க்க: http://rehendhi.tripod.com/spicegirls/index.html
அதில் உள்ள ஒவ்வொரு சுட்டியாக சுட்டவும்.

குற்றம் செய்பவர் எல்லா சமூகத்திலும் உள்ளனர். அதற்காக நீங்கள் பார்ப்பனரை குறி வைப்பது விஷமத்தனமானது.

நீங்கள் இதை விடாப்பிடியாகக் கூறினால் இதற்கு மட்டும் பதில் கூறிவிடுங்கள். நாட்டைத் துண்டாடியது முஸ்லிம் லீக் என்பதை மறுக்க இயலுமா? பாக்கிஸ்தான் வந்தது சரியா தவறா?

இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்கில் ஒரு இந்து உறுப்பினரையாவது காட்ட இயலுமா? பி.ஜே.பி. யில் முஸ்லிம்கள் உறுப்பினராக இருப்பதை காட்ட இயலும். இதற்கெல்லாம் உங்கள் பதில்?

இந்திய இசுலாமியர் இந்திய தேசப் பற்றில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நான் அறிவேன். நான் கேட்டக் கேள்விகள் ஒரு தர்க்கத்துக்கு மட்டுமே என்பதை இங்கு தெளிவாகக் கூறி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மலர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2005/11/blog-post_08.html

வணக்கம் நல்லடியார். உங்களுக்கு ஒரு அதிசயச் செய்தி. சிவசேனாவில் ஒரு இசுலாமியர் இதோ. பார்க்க: http://www.hindunet.org/alt_hindu/1995_Apr_1/msg00027.html

நீங்கள் என்னை தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். இப்பதிவாளர் தேவையில்லாமல் பார்ப்பனர்களை துரோகிகள் என்று கூறியதால் நான் சில கேள்விகளை எழுப்ப நேர்ந்தது. கேள்விகளை எழுப்பி விட்டேன், பதில் அவரால் கூறமுடியுமா என பார்க்க வேண்டும்.

I am sure you will understand the opoint I am trying to make.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சுந்தரின் அகரமுதல பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://agaramuthala.blogspot.com/2005/11/blog-post_113138425311814477.html#comments
நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் போன நவம்பரில் கமலைப் பற்றி எழுதிய இப்பதிவையும் பாருங்கள். 116 பின்னூட்டங்கள் வந்தன.

அதற்கு மட்டும் இப்பதிவைக் கூறவில்லை. தமிழ்மணத்தில் நடந்த பல விஷயங்களுக்கு இதிலிருந்து க்ளூ கிடைக்கும்.

பார்க்க: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இறை நேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://copymannan.blogspot.com/2005/11/blog-post_09.html

நீங்கள் இந்தப் பதிவையும் அதில் என் பின்னூட்டத்தையும் பாருங்கள்.
http://nihalvu.blogspot.com/2005/10/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமச்சந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nunippul.blogspot.com/2005/11/blog-post_10.html#comments
ஒரு பிப்ரவரி -14-ல் என் வீட்டம்மாவுக்கு ஹேப்பி வேலண்டைன் டே என்று கூறியதற்கு ஒரு நிமிடம் என்னை விழித்துப் பார்த்து விட்டு, இன்னைக்கு பிரதோஷம், கோயிலுக்குப் போகணும் என்று கூறிவிட்டு எங்கள் ஊர் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுக்கு விரைந்தார்.

அன்று முதல் எங்கள் வீட்டில் பிரதோஷமெல்லாம் வேலண்டைன் டேயாகவும், vice versa ஆகவும் உருவெடுத்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி.ராஜ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://seeking-spring.blogspot.com/2005/11/blog-post_11.html#comments
One day God was looking down at Earth and saw all of the evil that was going on. He decided to send an angel down to Earth to check it out. So He called one of His best angels and sent the angel to Earth for a while. When she returned she told God, yes it is bad on Earth, 95% is bad and 5% is good.
Well, He thought for a moment and thought maybe He'd better send down a second angel to get another point of view. So God called another angel and sent him to Earth for a time too. When the angel returned he went to God and told him "Yes, the Earth is in decline. 95% is bad and 5% is good." God said this was not good.

So He decided to send e-mail to the 5% that were good. He wanted to encourage them, give them a little something to help them keep going.

Do you know what that e-mail said?

Oh, you didn't get one either, huh? Bummer.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சாத்தான்குளம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_13.html#comments
"பி.பி.கு: கூகிளில் வலை போட்டுத் தேடியும் கிடைக்காத "மேற்படி" படத்தை, எப்படியும்
வருங்கால முதல்வராகக் கூடுமென்பதால் தனது கணினியில் கவனமாகச் சேகரித்து வைத்திருந்து
'ஆபத்பாந்தவனாக' படத்தைத் தந்துவிய 'பெனாத்தல்' சுரேஷ் அண்ணாச்சிக்கு நன்றி!!"

சுரேஷுக்கு உங்கள் மேல் என்னக் கோபம்? இப்படி மாட்டிவிட்டாரே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/13.html

"சும்மா சொல்லக்கூடாது. அதன் பிறகு எந்த அரை வட்டம், முழு வட்டமும் திறப்பு விழா தினம் வரை என்னை நெருங்கவில்லை."

நல்ல வியூகம்தான் அமைத்தீர்கள். எம்.ஜி.ஆரின். செயல்பாட்டை நீங்கள் இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும். 1977-ல் பதவிக்கு வந்ததும் அவர் மிக தூய்மையான ஆட்சியை கொடுத்தார். கட்சிக்காரர்கள் எல்லோரையும் தலையில் தட்டி உட்கார வைத்திருந்தார். 1980-ல் கருணாநிதி அவர்கள் தூண்டுதலில் அவர் ஆட்சியை கலைத்து இடை தேர்தல் நடத்த அவர் மீண்டும் பதவிக்கு வந்தார். அப்போதிலிருந்து நேர் தலைகீழாக செயல்பட ஆரம்பித்தார்.

உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் அந்த நேரம் பார்த்து அவரை அணுகியிருக்கிறீர்கள். ஒரு வருடம் முன்னால் சென்றிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சங்கடமான அனுபவங்கள் வந்திராது என்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மலர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2005/11/blog-post_08.html

"எதனால் இஸ்ரேலை ஆதரிக்கிறீர்கள் என்பது இப்பொழுது விளங்குகிறது. இனம் இனத்தோடு தானே சேரும்.
மற்றபடி உண்மைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!"

என்ன உளறல் ஐயா? நீங்கள் இப்போது பின்னூட்டமிட்டது போலி டோண்டு என்ற இழிபிறவி எழுதியதற்கு. எலிக்குட்டியை அப்பெயரின் மேல் வைத்துப் பாருங்கள். சரியான ப்ளாக்கர் எண்ணைக் காணலாம். உம்மால் அடையாளம் காணமுடியவில்லையா அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?.

துவேஷ எண்ணங்களை எல்லாம் வைத்திருப்பது உமது விருப்பம். ஆனால் அறிவை இழந்து பின்னூட்டமிடாதீர்கள். என்னுடைய இப்பதிவைப் பாருங்கள்.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

சாத்தான்குளத்து வேதம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_14.html
சிறிய எழுத்துக்களை படிப்பதில் parallellaxe தவறில் குழம்பி விட்டேன். ஆகவே இறைநேசன் அவர்களே உங்களுக்கு எதிராக எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கறுப்பி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://karupu.blogspot.com/2005/11/blog-post_14.html#comments

Hello pretty young lady,

முதலில் உங்கள் தமிழ் புரிதல் கடினமாக இருந்தது. இருப்பினும் விடாப்பிடியாகப் படித்தேன். நல்ல கதை ஒன்று படிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே அடைந்தேன்.

இப்படித்தான் வாழ்க்கையிலும் நடக்கிறது. கஷ்டப்பட்டு குழந்தையின் தாயை விட அதிக பிரயத்தினப்பட்டு வளர்த்திருப்பாள் ஒருத்தி. அப்பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் நடக்கும்போது எங்கிருந்தோ வந்து அவளை ஒதுக்குவாள் அண்ணியின் அக்கா போன்றோர். ஏன், இவள் குழந்தை பெறாதவள் என்பதாலா?

நீங்கள் தரும் வர்ணனைகள் எனக்கு புகழ் பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை நினைவுபடுத்துகிறது. கஷ்டப்பட்டு உணர்ந்ததாலவோ என்னவோ உங்கள் தமிழ் வட்டார நடையும் பிடித்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_15.html#comments

அடேங்கப்பா நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன! இப்போதுதான் குட்டிப்பையனை பற்றி நீங்கள் எழுதிய இந்தப் பதிவை பார்த்தால் போல இருக்கு. அதற்குள் ஓர் ஆண்டா?

அது சரி, குழந்தைக்கு நான் கூறியது போல கண்ணேறு கழித்தீர்கள்தானே? அதானே, அதைக் கூட செய்யாமல் குழந்தையின் பெரியப்பாவிற்கு என்ன வேலை இருந்திருக்க முடியும்? கண்டிப்பாக செய்தீர்கள்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_15.html#comments
கூறியது திராவிடர், ஆனால் அவர்கள் அதற்கு பொருள் கொண்டது தமிழரே. அடிப்படையிலேயே பகுத்தறிவற்றச் செயல்.

எம்.ஜி.ஆர். மலையாளி, டாக்டர் ஹண்டே கன்னடியர் ஆனால் கன்னடியரான ஈ.வே.ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுப் பகலவன், தமிழ்த் தலைவர். அடித்துக்கொள்ள ஆயிரம் கைகள்தான் வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரே திராவிடர் ராஹுல் டிராவிட்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nunippul.blogspot.com/2005/11/blog-post_15.html#comments
உஷா அவர்களே,
நீங்கள் இப்பதிவில் எழுதியவை நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி போட்ட 3 பதிவுகளுடன் ஒத்துப்போவதாக எனக்குப் படுகின்றன. அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறுள்ளதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/15.html
போன பதிவில் கோடி காட்டியிருந்தீர்கள். நான் புரிந்து கொண்டேன். ஆனால் கூற மனமில்லை.

டாஷ்கண்டில் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் இறந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வா.மணிகண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://pesalaam.blogspot.com/2005/11/blog-post_13.html
உண்மையான டோண்டு என்று கண்டுகொள்ள 2 சோதனைகள் உள்ளன. என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அது Dondu(#4800161) என்று வரும். அதன் மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கவும்.

1. கீழேயும் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
2. போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் வரும்.

இரண்டும் சேர்ந்து வந்தால்தான் அது உண்மையான டோண்டு. மேலும் நான் இடும் பின்னூட்டங்களின் நகல் என்னுடைய இப்பதிவில் வரும். உங்களது இப்பதிவில் மேலே வரும் பின்னூட்டம் மனம் பிறழ்ந்த போலி டோண்டு போட்டது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்பின்னூட்டம் என்னுடைய இப்பதிவில் 498-ஆவது பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: மேலும், என்னுடைய எழுத்துக்களை அறிந்தவர்கள் ஒரே நொடியில் போலி டோண்டுவை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதையும் மீறி எல்லாம் தெரிந்தும் என் பெயரில் உள்ள போலி பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது? வெட்கம்!!

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mayavarathaan.blogspot.com/2005/11/218.html#comments
"எவனோ ஒரு கம்னா_டி கபோதி கழிசடை அடிக்கடி இப்படிதான் போகுமிடமெல்லாம் காலைத் தூக்கிவிடுவான்."
உங்களுக்கும் எனக்கும் தெரிந்தவன்தானே அவன்? எழுத்து நடை காட்டிக்கொடுக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mayavarathaan.blogspot.com/2005/11/south-lake-tahoe.html#comments
"என் அக்கா தங்கையைப் போட்டு....."
அவன் தன்னுடைய உறவினர்களைத்தான் அவ்வாறு செய்யப்போவதாக கூறியிருக்கிறான். அவனுக்கு ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வா.மணிகண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://pesalaam.blogspot.com/2005/11/blog-post_13.html

"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

மணிகண்டன் அவர்களே நான் எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்து நான் எழுதியிருக்கவே முடியாத தரக்குறைவில் ஒருவன் எழுதியிருக்கிறான். இதை விட ஒரு பெரிய தனிப்பட்ட தாக்குதல் இருக்க முடியுமா? இது கேரக்டர் கொலை. மேலே நான் சுட்டிய என் பதிவைப் போய் பாருங்கள். இணையத்துக்கு நீங்கள் புதிது என்றால் அது உங்களுக்கு தேவையான தகவல்களைத் தரும்.

இனி உங்கள் விருப்பம். போலி டோண்டுவின் பின்னூட்டங்களை இப்படியே அனுமதித்தால் எனக்கு நடத்தியதை மற்றவருக்கும் நடத்துவான். அவன் பின்னூட்டமிடும் வேறு பெயர்கள் மாயவரத்தான், ஹல்வாசிடி விஜய், மத்தளராயன் (இரா. முருகன்), எஸ்கே முதலியன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிதறல்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_15.html#comments
"முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அல்லர். அவர்கள் முதன்முதலில் இந்துக்களாக இருந்தவர்கள். அதுவும் குறிப்பாக பிராமனர்களாக இருந்தவர்கள்."

உளறல். மேலே கூறியதை நான் எழுதவில்லை. போலி டோண்டு அதர் ஆப்ஷனை உபயோகித்து என் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளான். இது உங்கள் தகவலுக்கு மட்டுமே. மற்றப்படி இந்த இழையில் எழுத எனக்கு விஷயம் இல்லை.

இப்பின்னூட்டம் என்னுடைய http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html பதிவிலும் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வா. மணிகண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://pesalaam.blogspot.com/2005/11/blog-post_13.html
வா. மணிகண்டன் அவர்களே,

போ. மணிகண்டன் வா.மணிகண்டனிடமிருந்து வேறுபட்டவர் என்பது வெள்ளிடை மலை. ஆனால் என் விஷ்யத்தில் போலி டோண்டு Dondu(#4800161) என்று அடைப்புக்குறிக்குள் என்னுடைய ப்ரொஃபைல் எண்ணையும் கொடுத்து, என்னுடைய போட்டொவையும் போட்டு பின்னூட்டமிடுகிறான். எலிக்குட்டியை Dondu(#4800161) மேல் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். அதை செய்யக்கூட சோம்பல்படுவார்கள் பலர் என்பதை அந்த இழிபிறவி எதிர்ப்பார்த்தே செய்கிறது. ஆகவே நீங்கள் இரண்டையும் ஒப்பிடுவது சரியானதில்லை.

இது தனிப்பட்ட தாக்குதலுக்கும் மேல் சீரியஸானது. கேரக்டர் கொலை இது. இந்த விஷயத்தில் வீர வன்னியன் பதிவில் ஜோசஃப் அவர்களே ஏமாந்துபோய் என்னைக் கடுமையாகப் பேச அங்கு குழலி வந்து உண்மையைக் கூறினார். ஜோசஃப் அவர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. என்னிடம் மன்னிப்பும் கோரினார்.

இனிமேல் உங்கள் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in Sneehithi's post. See:
http://snegethyj.blogspot.com/2005/11/i-now-pronounce-you-man-and-wife.html#comments

சினேகிதி அவர்களே,

நீங்கள் சொல்வதை ஏற்கனவே பலரும் கூறி இப்போதெல்லாம் பொலிடிகல்லி கரெக்ட் என்ற முறையில் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் கூறிய உதாரணங்களுக்கே வருகிறேன்.

Bachelor of Arts: No change
Master of arts: No change
Master of ceremony: compering person
Policeman: policeperson
Mailman: Mailperson
Tradesman: Tradeperson
Milkman: Milkmaid is already there
Mankind: Humankind
Manhole: One would be better off with the present word and not try to do anything. Hope you understand.

ஆனால் ஒன்று. முதலில் மேற்கூறிய வார்த்தைகள் வந்தபோது ஆண்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எல்லாம் புழக்கத்தில் இருந்ததால் அப்படியே ரிடைன் செய்யப்பட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Comment posted by me in Kuyali's blog. See:http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_25.html#comments

"சோழர்காலத்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ? தமிழ் பெண்கள் கண்ணகி மாதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??"

அப்படீங்கறீங்க? ஆண்கள் மட்டும் கேவலனாக (இது எழுத்துப்பிழை அல்ல) சோழர்கள் காலத்திலிருந்தே இருக்கலாம். பெண்கள் மட்டும் அப்படியே இருக்கணும். அதுதானே ஆண்களுக்கு சௌகரியம்.

புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Comment posted by in blog 1+1=2. See: http://bunksparty.blogspot.com/2005/11/blog-post_17.html#comments
சோ அவர்களை பற்றி நான் போட்ட இப்பதிவைப் பாருங்கள். முக்கியமாக அப்பதிவுக்கு வந்தப் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

சோவை எதிர்த்தவர்கள் கூட அவர் கண்ணியமான முறையில் பத்திரிகை நடத்துகின்றார் என்பதை மறுக்க இயலவில்லை. ஆனால் அதையே ஒரு குறையாக திரித்தவர்களும் உண்டு. பலரது மூளைகள் எப்படியெல்லாம் வேலை செய்னின்றன என்பதை பார்ப்பதிலுன் சுவாரசியம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.weblogs.us/2005/06/03/23

தருமி அவர்களே,

இதே பதிவு உங்கள் http://dharumi.blogspot.com/2005/06/16_03.html -ல் வந்த போது நான் இட்டப் பின்னூட்டம் இங்கு காணாமல் போய் விட்டதே? அப்பின்னூட்டத்தை நான் இங்கு மறுபடி இடுகிறேன்.

"தலித்துகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி நான் இரண்டு பதிவு போட்டுள்ளேன். முதலாவது டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறையைப் பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html

இரண்டாவது காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post.html

இரண்டு பதிவுகளை மட்டும் பார்க்காமல் அவற்றில் வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். யார் யார் எப்படி எதிர்வினை செய்தார்கள் என்று பார்த்தால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in Nilavunanban blog vide http://nilavunanban.blogspot.com/2005/11/blog-post_19.html#comments

For people moaning about their helplessness with computers, here are some examples showing the state of knowledge in others. You are definitely better off than they are, given the fact that you have succeeded in coming to read this page! Here goes:

True telephone conversations recorded from various Help Desks around the U.K

Helpdesk: What kind of computer do you have ?

Customer: A white one...

> > ====

Customer: Hi, this is Celine. I can't get my diskette out.

Helpdesk: Have you tried pushing the button ?

Customer: Yes, but it's really stuck.

Helpdesk: That doesn't sound good; I'll make a note ..

Customer: No ... wait a minute... I hadn't inserted it yet... it's still on my desk... sorry .

> > ====

Helpdesk: Click on the 'my computer' icon on to the left of the screen.

Customer: Your left or my left ?

> > ====

Helpdesk: Good day. How may I help you ?

Male customer: Hello... I can't print.

Helpdesk: Would you click on start for me and ...

Customer: Listen pal; don't start getting technical on me ! I'm not Bill Gates damn it !

> > ====

Hi good afternoon, this is Martha, I can't print. Every time I try it says

'Can't find printer'. I've even lifted the printer and placed it in front

of the monitor, but the computer still says he can't find it...

> > ====

Customer: I have problems printing in red...

Helpdesk: Do you have a colour printer ?

Customer: No.

> > ====

Helpdesk: What's on your monitor now ma'am ?

Customer: A teddy bear my boyfriend bought for me in the supermarket.

> > ====

Helpdesk: And now hit F8.

Customer: It's not working.

Helpdesk: What did you do, exactly ?

Customer: I hit the F-key 8-times as you told me, but nothing's happening.

> > ====

Customer: My keyboard is not working anymore.

Helpdesk: Are you sure it's plugged into the computer ?

Customer: No. I can't get behind the computer.

Helpdesk: Pick up your keyboard and walk 10 paces back.

Customer: OK

Helpdesk: Did the keyboard come with you ?

Customer: Yes

Helpdesk: That means the keyboard is not plugged in. Is there another keyboard ?

Customer: Yes, there's another one here. Ah...that one does work !

> > ====

Helpdesk: Your password is the small letter a as in apple, a capital letter V as in Victor, the number 7.

Customer: Is that 7 in capital letters?

> > ====

A customer couldn't get on the internet.

Helpdesk: Are you sure you used the right password ?

Customer: Yes I'm sure. I saw my colleague do it.

Helpdesk: Can you tell me what the password was ?

Customer: Five stars.

> > ====

Helpdesk: What antivirus program do you use ?

Customer: Netscape.

Helpdesk: That's not an antivirus program.

Customer: Oh, sorry...Internet Explorer.

> > ====

Customer: I have a huge problem. A friend has placed a screensaver on my computer, but every time I move the mouse, it disappears !

> > ====

Helpdesk: Microsoft Tech. Support, may I help you ?

Customer: Good afternoon! I have waited over 4 hours for you. Can you please tell me how long it will take before you can help me ?

Helpdesk: Uhh..? Pardon, I don't understand your problem ?

Customer: I was working in Word and clicked the help button more than 4 hours ago. Can you tell me when you will finally be helping me ?

> > ====

Helpdesk: How may I help you ?

Customer: I'm writing my first e-mail.

Helpdesk: OK, and, what seems to be the problem ?

Customer: Well, I have the letter a, but how do I get the circle around it?
-------------------
Customer: Hello, I need to replace a broken part of my computer.

Help desk: Which one?

Customer: The glass holder.

Help desk: The WHAT???

Customer: You know, that tray with the hole in the middle that pops out when you push the small button...

See: http://www.proz.com/topic/29094

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/18.html
மனதுக்கு நிறைவாக இருக்கிறது இப்பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் செல்வன் said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.weblogs.us/2005/06/03/23

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.weblogs.us/2005/06/03/23
அப்பதிவில் உங்கள் பின்னூட்டம் ஒன்றும் காணவில்லையே? ஒரு வேளை மாடரேஷனுக்காக காத்திருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தேசிகன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://www.desikan.com/blogcms/?item=104&comment=233#comment233
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை பற்றி படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. நவ திருப்பதிகள் எல்லாமே அருமைதான்.

என் அப்பனை பற்றி நான் போட்ட பதிவு இதோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நவீன் பிரகாஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://naveenprakash.blogspot.com/2005/11/blog-post_22.html#comments
Haben Sie Deutsch schliesslich gelernt oder nicht?

Mit freundlichen Gruessen,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

மரபூர் சந்திரசேகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_17.html#links
நல்ல பதிவு சந்திரசேகரன் அவர்களே. விடை இவ்வளவு எளிது ஆனால் செய்யத்தான் மனம் இல்லை.

நிற்க. இளங்கோ அவர்களுக்கு நான் இட்ட மின்னஞ்சல் இதோ.

Dear Mr. Elango,

It seems you are the man I am looking for. Let me explain. I am seized of the disgraceful system of separate tea glass for Dalits in village tea stalls of Tamil Nadu. I posted about this in my Tamil blog vide http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html

It is self-explanatory. What is amazing was the majority of the comments I received for this post were negative. Many were harping that the Government should do something and no one else. Please read the post along with the comments. I would like to have your valued opinion.

Then there was this matter of keeping on limbo Dalit IAS officers by the Tamil Nadu Government. I posted about this too vide http://dondu.blogspot.com/2005/05/blog-post.html

I request your comments on this post too. But the priority is for the first post about separate tea glasses. Can you initiate at least one tea stall in any one Harijan colony affected by this infamous system? It is clear that the full cooperation from the local Dalits is a must for the success of this endeavour. It is but a small step but a very important one.

Regards,
N.Raghavan

உங்கள் பதிவுக்கு என் வலைப்பக்கத்தில் சுட்டி கொடுத்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

யோசிங்க அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://yosinga.blogspot.com/2005/11/blog-post_23.html
இதே கேள்வியை நான் இம்மாதம் 2-ஆம் தேதி கேட்டு, 3-ஆம் தேதியே புதுவை பித்தன் பதிலளித்தாகி விட்டது.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_02.html

அது சரி, ப்ளாக்கர் பின்னூட்டங்கள் எங்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமச்சந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nunippul.blogspot.com/2005/11/blog-post_113285280813111378.html#comments
கமண்ட் மாடரேஷனை செயலாக்கவும். ஆட்சேபகரமான பின்னூட்டங்களை கருவிலேயே கிள்ளி எறியலாம். எழுத்துக்களை அடையாளம் காணும் வசதியையும் செயலாக்கவும்.

உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோ. ராகவன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://gragavan.blogspot.com/2005/11/blog-post_25.html#comments
எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.
1)
2)

அப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி ராஜ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://seeking-spring.blogspot.com/2005/11/3.html
பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/11/49-23_28.html
"நீங்க சொல்றது மிகவும் சரியான வார்த்தை. யாராவது நம்மைப்பற்றி மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு முன் நாமே நம் தவற்றை முறைப்படி அறிவித்துவிடுவது மேல்."

ஆனந்த விகடனில் சமீபத்தில் 1954-ல் முன்னால் படித்த ஜோக் அப்போது புரியவில்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னால்தான் புரிந்தது. (அதுவும் என் அனுபவத்திலேயே நடந்த பின்னே, ஹி ஹி ஹி)

"அப்பா (மகனிடம்): மனசாட்சி என்றால் என்ன?
மகன்: நான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் உங்களிடம் போட்டுக்கொடுப்பதற்கு முன் நானே கூறிவிடுவதற்கு பெயரே மனசாட்சியாகும்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_21.html#comments
"அல்ல அல்ல. எங்கள் வீட்டுப் பெண்களுக்கு(ஆண்களுக்கும்)) வயது ஐம்பதே ஆனாலும் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்ள நிச்சயம் அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு அவர்களை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து இருக்கிறோம். இது எழுதப்படாத சட்டம். இதனை மீறி ஏதேனும் நடந்தால் வெட்டிப் பொலி போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கணக்கு எழுத தயங்க மாட்டோம். கற்பு எங்களுக்கு உயிரினும் மேலானது."

அப்படீங்கறீங்க? இம்முறையில் எத்தனை மகன்கள் தங்கள் தந்தை மற்றும் தமையனால் கொல்லப்பட்டனர் என்று கூற முடியுமா? அவனுக்கென்ன ஆம்பிளை, இப்படி அப்படியென்றுதான் இருப்பான், கால்கட்டு போட்டால் சரியாகிவிடும் என்றுதானே சாதாரணமாகப் பேசுகிறார்கள்?

அதிலும் வெட்டிப் போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதி விடுவதா? சொந்த உயிர் மேல் ஆசைதானே அது? இன்னொரு உயிரைக் கொன்றதற்கு மனத்திண்மையுடன் தண்டனையை ஏற்பதுதானே முறை? அப்படி செய்யாதவனை அவன் பெண் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகையைச் சேர்ந்தது?

ஐம்பது வயசு வரை கல்யாணம் கட்டிக்கொடுக்கத் துப்பில்லாத தகப்பனெல்லாம் பெண் உடல் இச்சையைத் தணித்துக் கொண்டால் மட்டும் அரிவாளை தூக்குவது என்ன நியாயம்? ஆனால் அவன் மட்டும் ஊரெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வான். என்ன போங்கு இது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_21.html#comments

//அப்படீங்கறீங்க? இம்முறையில் எத்தனை மகன்கள் தங்கள் தந்தை மற்றும் தமையனால் கொல்லப்பட்டனர் என்று கூற முடியுமா?//

"டோண்டு, நான் முன்பே சொன்னமாதிரி கற்பினை உயிரினும் மேலாக மதிக்கிறவர்கள் நாங்கள். எனவே முறைதவறி நடப்பவர்களள நிச்சயம் கொல்வோம். அவ்வாறில்லாமல் இன்னும் பலருக்கும் கூட்டிக்கொடுக்கும் பரம்பரை நீங்கள் என்றால் நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை."

இந்த மழுப்பல் எல்லாம் செல்லாது மங்குண்டான். எவ்வளவு சொந்த குடும்பத்து ஆண்கள் அவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் என்று கூறவும். முக்கியமாக நீங்களே முக்காடு போட்டுக் கொண்டுதானே இங்கு எல்லாவற்றையும் கூறுகிறீர்? சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத கோழைகள் இங்கு வந்து தைரியமாகப் பேசுவது நகைப்புக்குரியது. அப்போதுதானே உங்கள் பரம்பரை பற்றியும் நாங்களும் தெரிந்து கொள்ள முடியும். வாதம் செய்யத் தெரிந்தால் செய்யும். மற்றவர் பரம்பரையை இழுக்கும் முன்னால் நீங்கள் ஒழுங்காக நடக்கிறீர்களா என்பதைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_21.html#comments
"டோண்டு என்பது உம் தந்தை, தாய் வைத்த பெயரா? அல்லது ஆசான் சூட்டிய நாமகரணமா?? உம் பிள்ளைக்கு 'டோ' என்பதுதான் இனிஷியலா? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். அரசு கெஜெட்டில் டோண்டு என்றா உள்ளது? முகமூடி என்பது மறைபெயர்தானே? சொன்ன கருத்தினைப் பாருங்கள். பேர் எல்லாம் எதற்கு உமக்கு?"

டோண்டு என்பது என் தாய் தந்தை எனக்கு இட்ட செல்லப் பெயர். இதை பற்றி ஏற்கனவே நான் பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்க:
1)
2)

உம்மை மாதிரி முக்காடு போட்டுக் கொண்டு வருபவன் நான் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://enkathaiulagam.blogspot.com/2005/12/blog-post.html
"தலைவா .. தமிழ் மணத்தின் . காமெடி கிங் என்று உங்களை கூறலாம்.அதுவும் அந்த
(டோண்டு வித் போட்டோ அண்ட் டோண்டு வித்தவுட் போட்டோ )...கலக்கீட்டிங்க"

அப்படியே வழிமொழிகிறேன். (சொல்லாததில் சொல்லப்பட்டதைத் தவிர)

அன்புடன்
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோ.ராகவன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://gragavan.blogspot.com/2005/06/blog-post.html
பெண்ணைப் பெற்றவன் மன நிலையை நான் என்னுடைய "திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்" பற்றியப் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் இவ்வாறு பதித்துள்ளேன்.

"மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்து அவரை மகளாய் பெற்றார். சீதையைப் போல அவரும் பூமியிலிருந்து மார்க்கண்டேயருக்கு கிடைத்ததால் அவருக்கு பூமிதேவி என்று பெயர். அவள் திருமணப் பருவத்துக்கு வரும்போது கிழ வேடத்தில் திருமால் மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். வந்தவர் யார் என்று தன் ஞான திருஷ்டியால் புரிந்து கொண்டார் மார்க்கண்டேயர். அவரிடம் பவ்வியமாக நீரோ முதியவர் என் மகளோ மிகச் சிறியவள், உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாதவள் என்று கூற எம்பெருமானும் உப்பில்லாத பண்டமே எமக்கு சிறப்பு என்று கூறி திருமகளை மணந்தார்.

ஆகவே இக்கோவிலில் பிரசாதங்களில் உப்பு இருக்காது. ஆனால் என்ன ஆச்சரியம்! அவை மிக ருசியாகவே உள்ளன. அதுவும் புளிய்போதரையின் சுவையே சுவை.

தன் மனைவியால் முடியாது என நினைத்த காரியத்தையே தனக்கு தேவையில்லை என்று கூறிய திருமாலின் அருள் அளவற்றது. மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்! ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?"
பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அவரது மர்ருறுத்தலுக்காக காத்திருக்கிறது.
பார்க்க: http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_21.html
முகமூடி அவர்களே,

பின்னூட்டங்களை அழிக்கும்போது லிங்குகளை அப்படியே வைக்கவும். அடையாளம் இன்றி அழிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் புது பின்னூட்டங்கள் வந்தால் தமிழ்மணத்தால் இற்றைப்படுத்த முடியாது.

நீங்கள் சுமார் 17 பின்னூட்டங்களை அழித்துள்ளீர்கள். மேலும் அதே எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்த பிறகே இற்றைப்படுத்தல் நடக்கும்.

அந்த மனம் பிறழ்ந்தவனுக்கு இதுவே வேலை. கல்யாணம் ஆகியும் பைத்தியம் குறையவில்லை. அவன் மனைவி பாவம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாராயணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://urpudathathu.blogspot.com/2005/12/blog-post_113354088187253188.html#comments
"என் வாழ்நாளில் நான் குடித்த மிக சிறந்த தேநீர் அதுவாக தான் இருக்கும்."

மனம் நெகிழ வைத்த வாக்கியம். மூவேந்தர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பாரியின் இரு மகளிரும் தாங்கள் இருக்கும் கஷ்ட நிலையிலும் தங்கள் குடிசைக்கு வந்த ஔவையாருக்கு வழங்கிய கூழ்தான் தான் உண்ட கூழிலேயே சிறந்தது என்று அவர் நினைத்தார். அதை அவர் பாடலில் வெளிபடுத்தினார். பாடல் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஆனால் பொருள் அதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோ அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூற்றம் இதோ. பார்க்க: http://cdjm.blogspot.com/2005/12/blog-post_03.html
சிங்கையில் உள்ள முருகன் கோயிலில் சீனர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://kurangu.blogspot.com/2005/12/blog-post_03.html
வெள்ளத்தைப் பற்றி நான் போட்ட பதிவுகள் பின்வருமாறு:
1)
2)

அவற்றின் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://enkathaiulagam.blogspot.com/2005/12/blog-post.html
"நீங்க சொல்லாதத்தானே சொல்லாததுல சொன்னதா எழுதியிருக்கேன். அப்புறம் ஏன் நீங்க சொல்லாததுல சொன்னத தவிரன்னு விளக்கும் குடுக்கறீங்க."

சொன்னது, சொல்லாதது என்று பத்திரிகைகளில் சாதாரணமாகக் குறிக்கும்போது, "சொல்லாதது" என்பதன் பொருளே மனதில் நினைத்து வெளியில் சொல்லாதது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு உதாரணத்துடன் விளக்குவேன். குமுதத்தில் வந்தது. அதாவது ஒரு டுபாக்குர் நிறுவனத்தின் ஒரு விழாவுக்கான விளம்பரத்தில் சொன்னது: "நிர்வாகியின் தேதி அடுத்த மாதம் பத்தாம் தேதிதான் கிடைக்கும். ஆகவே விழாவும் அன்றுதான் நடக்கும்".

சொல்லாதது: :ஏனெனில் அன்றுதான் அவருக்கு வேலூர் ஜெயிலிலிருந்து விடுதலை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2005/12/blog-post.html#comments
"நான் கூட ஓரிரு தடவை, மழையில் மாட்டிக் கொண்டபோது, "சனியன் பிடித்த மழை" என்று கோபத்தில் உம்மைத் திட்டியிருக்கிறேன்."
நீங்கள் மட்டுமா, திருவள்ளுவரே "துப்பார்ர்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாயத் தூமழை" என்று துப்பியிருக்கிறாரே.

"சென்னை நீர் நிரம்பிய தொன்னை போல் காட்சியளிக்கிறது!"
அதுவும் தொன்னையில் ஓட்டை விழுந்து அதில் உள்ள பாதாம்கீர் இலை வழியே ஓடி ஆங்காங்கு பக்கத்து இலைக்கும் புசிக்குமாம் என்றல்லவா நிலைமை இருக்கிறது?

"உமது கைங்கர்யத்தால், இவ்வளவு நாள் பெயர் கேள்விப்படாத ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிரம்பி வழிவதை பார்க்கிறோம் !"
இவ்வளவு ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதையும் அறிகிறோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோ அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://cdjm.blogspot.com/2005/12/blog-post_04.html#comments
"இயக்க வரலாற்றிலேயே ஒரே பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்று ,தானே தன் சாதனைகளை முறியடித்துக்கொண்டிருக்கும் ,பின்னூட்ட வித்தகர் டோண்டு ஐயா அவர்களே!"
அது!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.weblogs.us/2005/12/04/147
“நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க"

வேப்பம் பழத்தைத் தின்று கொட்டையை எச்சமாக இடும் காகம். அவ்வாறு அக்காகத்தின் ஜீரண உறுப்புகள் வழியாக மறுபடியும் தரைக்கு வரும் அக்கொட்டை அமோகமாக விளையும்.

அதே போல ஒருவர் தான் உட்கொண்டதை ஜீரணித்து வெளியே தரும் கருத்துக்கள் புடம் போட்டது போல பிரகாசிக்கும். அவ்வாறு செய்பவர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்பதே இதன் பொருள்.

முடிந்தால் பரிசு தாருங்கள், குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அதற்காகக் கழித்துக் கொண்டு பரிசு தாருங்கள். (இந்தக் கழித்தல் வேறு பொருளுடையது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நண்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://nigarshaji.blogspot.com/2005/12/25.html
"சிகரெட் பிடிப்பதை விடுவது மிகச் சுலபம். ஏனெனில் நான் அதை பலமுறை விட்டிருக்கிறேன்" என்று ஒரு நகைச்சுவை எழுத்தாளர் எழுதினார். அதுதான் உண்மை. பழக்கத்தை விடுவது சுலபம், ஆனால் அதை நிலைநிறுத்திக் கொள்வது கடினம்.

"அதே போல Marlboroughவின் குதிரை மனிதன் என்னைக் கடத்திக் கொண்டு போய்விட்டான் ஒரு கட்டத்தில் - கடந்த மூன்று வருடங்களாக இந்த சிகரெட்டைத்தான் பிடித்துக் கொண்டிருந்தேன்."
அந்த மாடல் புற்றுநோயால் இறந்தார்.

நானும் சிகரெட் பிடிப்பேன். 12 சிகரெட்டுகள் - ஒரு வருடத்திற்கு. அதுவும் என் வாடிக்கையாளர்களுடன் negociation செய்யும்போது அவர் ஆஃபர் செய்தால் முதல் தடவை ஒத்துக் கொள்வேன். அதனால் வியாபாரம் சீக்கிரம் படியும் என்பதை நான் கண்டு கொண்டதால். மாதத்துக்கு ஒன்று என்று கணக்கு. ஒரு மாதம் பிடிக்காவிட்டால் அந்த கோட்டாவை அடுத்த மாதத்துக்கெல்லாம் கேரி ஓவர் செய்வதில்லை. கடைசியாக சிகரெட் பிடித்து சில ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு கெட்டப் பழக்கத்தை துறக்கும் முன்னால் அது ஏன் நம்மைப் பிடித்துக் கொண்டது என்பதையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும்.

1. நண்பர்கள் மூலம் கட்டாயம்.
2. நாம் மதிப்பவர்கள் அதை செய்கிறார்கள்.
3. சிகரெட் பிடிக்கும் போது மனம் அமைதி பெறுகிறது. இதுதான் மிகுந்த அபாயகரமானக் காரணம். இந்த விளைவு மூச்சை ஆழமாக இழுப்பதாலும் பெறக்கூடியதே. அதற்கு சிகரெட் தேவையில்லை.
4. புகை வாசனை பிடிக்கும். இது போதை தரும் விஷயம். இங்குதான் சிகரெட் கம்பெனியினரின் திருட்டு வேலை அதிகம் நட்க்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhali.blogspot.com/2005/12/blog-post.html#comments
என்ன ஆச்சரியம்! என்னுடைய கடைசி பதிவும் தன்னைத் தானே அறிவதை பற்றித்தான் குறிப்பிடுகிறது.பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html

நல்ல நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்,

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_05.html#comments

"(பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)"

கி. ராஜேந்திரன் அவர்கள் எழுதிய "ரவிகுல திலகன்" என்ற நாவல் நீங்கள் குறிப்பிடும் காலக் கட்டத்தைப் பற்றி எழுதுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலும் எழுதப்பட்டது. அதில் பல்லவர்கள் எவ்வாறு ஒப்பந்தத்தை மீறினார்கள் என்று கூறப்பட்டது. இரு நாவல்களும் கல்கி பத்திரிகையில் தொடர் கதைகளாக எண்பதுகளில் வந்தன.
நாவல்கள்தான் என்றாலும் ஆசிரியருக்கு எழுதிக் கேட்டால் அவர் ஆதாரங்களைக் கொடுப்பார் என நினைக்கிறேன்.

இன்னொரு துணுக்கு. ரவி குல திலகன் நாவலின் கதாநாயகியின் பெயர் குழலி!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கனவுகள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://web.ics.purdue.edu/~ykalyana/blog/2005/11/blog-post.html#comments
அப்படியே நம்ம போலி டோண்டுவையும் பிடிச்சுடலாம்போலே இருக்குபா. நம்பிக்கை வருது. சிங்கப்பூரிலே கூட திறமையான போலீஸாமே. ரெண்டு போலீஸும் சேந்து ஒத்துழைப்பாங்களாமா?

அம்புடன்(no spelling mistake this),
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பல்லவி அவர்களின் இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் ககத்திருக்கிறது.

பல்லவி அவர்களே,

உங்கள் ஆதங்கம் புரிகிறது. கற்பு என்பதை பெண்ணுக்கு மட்டுமே வைத்து விட்டார்கள் ஆண்கள். தான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் தனக்கு வரப்போகும் மனைவி மட்டும் பத்தரைமாற்றுத் தங்கமாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு.

இதே கண்ணோட்டம் பல பெண்களுக்கும் இருப்பதே சோகம். தன் பிள்ளை ஒரு பெண்ணைக் கெடுத்து விட அப்பெண் அவன் தாயிடம் முறையிடும்போது எத்தனை பெண்மணிகள் "என் பிள்ளை ஆண்பிள்ளை. அவன் அப்படி இப்படித்தான் இருப்பான். உனக்கு எங்கே போச்சு அறிவு?" என்று கூறாமல் இருக்கிறார்கள்? அப்படியே கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாலும் சீர் வரிசைகள் கேட்டுப் பிடுங்குவதும் அவர்கள்தானே?

இந்த இரட்டை நிலையை கண்டித்து நான் சில பதிவுகள் போட்டுள்ளேன்.

1)
2)
3)
4)

என் இப்பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். எப்படி ஆணாதிக்கம் நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது என்பதையும் பார்க்கலாம். என்னை எவ்வாறெல்லாம் திட்டினார்கள் என்பதையும் பார்க்கலாம். பின்னூட்டமிட்ட வெகு சில பெண்களும் சங்கடமான நிலையில் நினைத்ததைக் கூற முடியாமல் மென்று முழுங்கினர்.

நீங்கள் கூட என் இந்தப் பின்னூட்டத்தை எப்படி எதிர்கொள்வீர்கள் எனத் தெரியாது. நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. அப்படியே புண்படுபவர்களும் உண்மை சுடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய இந்தப் பதிவிலும் ஒரு பின்னூட்டமாக நகலிடப்படும். அப்பதிவைப் பார்த்தால் நான் ஏன் அவ்வாறு செய்கிறேன் என்பதும் புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

«Oldest ‹Older   401 – 529 of 529   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது