அம்பி ராகவன் என் பெரியப்பாவின் பிள்ளை. எங்கள் இருவருக்கும் தாத்தாவின் பெயரை வைத்தார்கள். பிறகு என் பாட்டி கணவன் பெயரைச் சொல்லி எங்களைக் கூப்பிட முடியாததால் அவன் அம்பியானான், அவனுக்கு நான்கு வருடம் கழித்துப் பிறந்த நான் டோண்டுவானேன். இந்தக் கதை இங்கு எதற்கு?
இப்போதுதான் அன்னியன் படம் பார்த்துவிட்டு வருகிறேன். எங்கள் ஊர் வெற்றிவேல் தியேட்டரில் (பழைய ரங்கா தியேட்டர்) ஓடுகிறது இப்படம். என்னைச் சேர்த்து பால்கனியில் 3 பேர் மட்டுமே. கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அன்னியன் படத்தில் அம்பி அம்பி என்று கேட்கும்போதெல்லாம் 3 வருடம் முன்னால் காலஞ்சென்ற எங்கள் அம்பியே நினைவுக்கு வந்தான். அவனும் அன்னியன் அம்பியைப் போலத்தான் ரூல்ஸ் எல்லாம் பேசுவான்.
சரி படத்துக்கு வருவோம். படம் முதல் காட்சியிலிருந்து விறுவிறுவென்று ஓடுகிறது. யோசிக்கவே இடம் தரவில்லை. சங்கர் அவர்களின் பிரம்மாண்டமானத் தயாரிப்பு மனதைக் கொள்ளை கொண்டது. கதை? ஸ்பைடெர்மேன், ஷக்திமான், மிஸ்டர் இண்டியா போன்றதுதான். அவற்றிலும் ஹீரோ அம்மாஞ்சியாக வருவான். ஹீரோயின் அவனை வெறுத்து ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியை காதலிப்பாள். இப்படி அரைத்த மாவையே அரைத்தாலும் அதை சுவைபட அரைத்தார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மெட்டி ஒலி ராஜம்மா ஐயங்கார் மாமியா? ரொம்ப லட்சணமா இருக்காள் போங்கோ. கதாநாயகியை விட அவள் அம்மா கொள்ளை அழகு. (வீட்டம்மாவிடம் உதை வாங்கப் போகிறாய் டோண்டு).
தியாகையர் ஆராதனைக் கச்சேரியில் முன்னணியில் சங்கீத ஜாம்பவான்களைப் பார்க்கும்போது மனம் ஆனந்தத்தால் விம்மியது. விவேக்கும் பிரகாஷ்ராஜும் அசத்துகின்றனர். விக்ரமோ கேட்கவே வேண்டாம். அவர் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இதுவே. ரொம்ப இம்ப்ரெஸ் செய்கிறார்.
மற்றப்படி சங்கர் பார்ப்பனர்களைத் தூக்கி நிறுத்தியதாகத் தோன்றவில்லை. பார்ப்பனர்கள் சாதாரணமாக கோழை மனதுடையவர்கள் என்ற ஸ்டீரியோடைப்பை உபயோகித்திருக்கிறார். இது பார்ப்பனர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஏதோ கிண்டல் செய்வது போலத்தான் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை. கதைதானே. போகட்டும்.
பாடல் காட்சிகளில் சில நேரம் பால்கனி சீட்டுகளில் வைப்ரேஷனை உணர்ந்தேன். அவ்வளவு சத்தம். சில இடங்களில் பேச்சே புரியவில்லை.
இன்னொரு முறை பார்க்கலாம் என யோசிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
19 hours ago
11 comments:
Dondu Sir,
Romba latea paathu vimarsanam potturukinga..interesting news podunga dondu sir. Ithu mathiri subjectla niraya peru ezhuthuranga. Unga blog differnta irukum..athuku than naan padikaren.
Ranga theater-le NS Krishnan paatukke balcony athirum saar! neenga romba naal kazichu padam paakareengannu nenaikkiren.
நன்றி முத்துக்குமார் மற்றும் சுரேஷ். அன்னியன் படத்தில் அவன் சதாவையும் நீலுவையும் மட்டும் கொல்லாமல் விடுவதை எல்லோரும் குறை சொன்னார்கள். இதில் சாதிப்பற்று எதையும் நான் பார்க்கவில்லை. சதா பயத்திலும் புத்திசாலித்தனமாக மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிக்குச் சென்று அடைக்கலம் பெறுகிறாள். அந்த சண்டை நடக்கும் நேரத்தில் அம்பியின் பெர்சனாலிடியும் வந்து விடுகிறது. ஏன்? அதுதான் காதலின் சக்தி. காதல் என்றக் காரணி வந்து விட்டால் ரூல்ஸ் எல்லாம் ரொம்ப நேரத்துக்கு நிற்க முடியாது என்றுதான் டைரக்டர் காட்ட நினைக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது.
நீலு? அவரால் காதலிக்குக் காரியம் ஆகிறது. அவ்வளவுதான். அப்போது அன்னியன்? காதலுக்கு முன் அவனும் ஒன்றும் இல்லைதான் என எனக்குப் படுகிறது.
ரங்கா தியேட்டர்? எழுபதுகளின் ஆரம்பத்தில் ஒரு டிக்கட்டுக்கு இரண்டு படங்கள் காட்டுவார்கள். இன்டர்வெல் வரைக்கும் முதல் படம், பிறகு இரண்டாம் படம். நண்பகல் 12 மணிக்கு ஒரு ஷோ, அடுத்த ஷோ இரவு 8.30-க்கு. முதல் படம் பழைய படம், அடுத்தப் படம் புதியது. இரவு ஷோக்களுக்கு நானும் என் மனைவியும் சென்று முதல் படம் முடிந்ததும் திரும்பி விடுவோம். ஹூம், அதெல்லாம் ஒரு காலம், கனவு போல இருக்கிறது. இப்போது?
அதன் சக தியேட்டரான வேலனில் சந்திரமுகி பார்த்தேன். பால்கனியில் என்னைச் சேர்த்து 15 பேர்தான். எப்படி தியேட்டர் முதலாளிக்குக் கட்டுப்படியாகிறது எனத் தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த சத்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும்.பல தியேட்டர்களில் நானும் பார்த்துள்ளேன்.
இங்கு பாருங்கள்
வடுவூர் குமார் அவர்களே, உங்களுக்கு 100 ஆயுசு. இப்போதுதான் உங்களைப் பற்றி நினைத்தேன், சிவில் இஞ்சினியரிங் பிரச்சினை ஒன்றின் சம்பந்தமாக. முக்கியமாக தண்ணீர் சுத்திகரிப்பு பற்றி.
எங்கள் ஊரில் பாலாறு தண்ணீர் என்று அவதூறாக அழைக்கப்படும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. என் வீட்டம்மாவுக்கு அதன் மேல் அலாதி நம்பிக்கை. சில மாதங்களாக அதன் வினியோகம் குறைந்து போய், இப்போது வருவதும் பலத்த க்ளோரின் வாசனையுடன் வருகிறது. அதைத்தான் உபயோகிக்க வேண்டும் என்னும் பெண்களுக்கே உரித்த பிடிவாதம் அவரிடம்.
நான் என்ன சொல்லுகிறேன் என்றால் நல்ல தண்ணீராக வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றிலேயே உள்ளது. சுற்று வட்டாரத்தில் எங்கும் வேதியல் பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை கூட இல்லை. அதையே உபயோகிப்போம் என்று கூறுகிறேன். எப்படியும் ஆக்வாகார்ட் உபயோகித்துத்தான் தண்ணீர் சுத்தம் செய்கிறோம்.
என் வீட்டம்மாவின் ஒரே ஆட்சேபணை என்னவென்றால் அந்த கிணற்று தண்ணீர் ருசியாக இல்லை என்பதுதான். அது தூய்மையானது என்பது குறித்து அக்கறையில்லை அவருக்கு.
எனது கேள்வி இதுதான். இந்த கிணற்று தண்ணீரில் சுவை ஏற்படுத்த ஏதேனும் ஆபத்தில்லாத பொருள் சேர்க்க இயலுமா? இயலும் என்றால் எந்தக் கட்டத்தில் செய்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு.ராகவன் சார்
இது முடியாத காரியம் என்று நினைக்கிறேன்.இதில் எனக்கு அவ்வளவு முன் அனுபவம் இல்லை அதனால் கருத்து சொல்லமுடியவில்லை.நாகையில் இருந்தபோது உப்புத்தண்ணீர் உள்ள கிணற்றில் நெல்லிக்கட்டையை போட்டால் ஓரளவு மேம்படும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
//உப்புத்தண்ணீர் உள்ள கிணற்றில் நெல்லிக்கட்டையை போட்டால் ஓரளவு மேம்படும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.//
நானும் அதை கேள்விப்பட்டிருக்கிறேன், அதுவும் முழு நெல்லி மரத்தின் கட்டையாக இருக்க வேண்டும், குட்டி குட்டியாக இருக்கும் அரைநெல்லிக்காய்கள் அல்ல. பெரிய நெல்லிக்காய், மிகவும் துவர்க்கும். அது ஒன்றை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் நாக்கில் இனிக்கும், ஒரு மாதிரி அசட்டு தித்திப்பு.
ஆனால் நான் கேட்பது வேறு. அதாவது, ஒரு டிரம் நிறைய ஆக்வா கார்ட் செய்யப்பட்ட தண்ணீரில் சில சிட்டிகைகள் ஏதாவது பொடி தூவினால் காரியத்துக்கு ஆகுமா என்பதே.
சரி, கூகளிட்டு பார்க்க வேண்டியதுதான். நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
u can use carbon Bed to absorb the Chlorine. Chlorine is added to kill the Bacterias and it is a must
Sir, I would like to know what steps you have taken for making your borewell water sweeter. Any success after searching in Google?
இல்லை, ஒன்றும் காரியத்துக்காகவில்லை. பாலாறு தண்ணீர்தான் உபயோகிக்க வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Saar!
Sujaathaa vin vasanamum, thirakadhaiyum thaan padathai thaangi niruthiyadhu !
Post a Comment