போன வருடம் நான் வலைப்பதிவாளராக வந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் என்னை அவ்வார நட்சத்திரமாக ஆக்கும் உத்தேசத்தை எனக்கு பத்ரி அவர்கள் தொலைபேசி மூலம் அறிவித்தார். அப்போது பம்பாயிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு அவர் சாதாரணமாக நான் பதிவுகள் போடுவதையே செய்தால் போதும் என்று கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேலைப்பளுவால் சரியானபடி பதிவுகள் போட இயலவில்லை. அந்த ஒரு வாரம் வெகுவேகமாகச் சென்று விட்டது. நான் நட்சத்திரமாக இருந்தேன் என்பதை உணர்வதற்குமுன் பறந்து விட்டது. வேறு ஒருவரும் அதை உணர்ந்ததாகவும் தெரியவில்லை.
போன மாதம் மதி அவர்களிடமிருந்து அக்டோபரில் ஒரு வாரம் நட்சத்திரமாக இருக்க முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் வந்தபோது அவரிடம் நான் போன தடவை மாதிரி சொதப்பாமல் இருக்க முயற்சிப்பேன் என்று கூறினேன். பார்ப்போம் என்னால் அது முடிகிறதா என்று. தயக்கமாகத்தான் இருக்கிறது, ஏனெனில் எனக்கு முன்னால் நட்சத்திரமாக வந்த தருமி அவர்களின் superb performance-க்குப் பிறகு வருவது பிரகாசிப்பது மிகக் கடினமே. இருந்தாலும் பாரத்தை உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் மேல் போடுவேன்.
1971 ஜனவரியிலிருந்து 1974 ஜூலை வரை பம்பாய் வாசம். பல சுவாரசியமான அனுபவங்கள், அவற்றைப் பற்றி எழுத ஆசை. ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிக்கப்பட்ட கற்பு நெறிகளையும் பேசுவேன். வரதட்சணை பிரச்சினையை நான் காணும் கோணத்திலிருந்து அலசுவேன். உலகமயமாக்கலால் எனக்கு என்ன பயன் என்பதை பற்றியும் பேசுவேன். இன்னும் பலவற்றையும் பற்றிப் பேசி பிறாண்டுவேன்.
ஜூட்டா? நான் ரெடி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
21 hours ago
22 comments:
congratulations& waiting for ur Blasters. Sorry for my post in English, tamil font not working properly. Do you know Ramki personally?
நன்றி தனு அவர்களே. அவசரத்துக்கு சுரதாவின் பெட்டியை உபயோகிக்கலாம். அதன் உரல் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றபோது அவ்வாறுதான் செய்தேன்.
எந்த ராம்கி? எனக்கு ரஜினி ராம்கியை தனிப்பட்ட முறையில் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருக!வருக!!
வாங்க ! வாங்க!...
நாங்க ரெடி......
நன்றி ஜோ மற்றும் ஜோசப்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே.
நன்றி தூளசி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
welcome back.
expecting more questions from you. (though I cant answer most of them).
Dear Suresh,
You too answered a few questions, didn't you?
Regards,
Dondu Raghavan
வாழ்த்துக்கள்!!!
நன்றி சுரேஷ்பாபு அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துகள் டோண்டு அய்யா, கலக்குங்க.
நன்றி
அப்ப இந்த வாரம் கொஞ்சம் சச்சரவா இருக்கும் போல;-)
வாழ்த்துக்கள்.
நன்றி குழலி மற்றும் வசந்தன் அவர்களே. ஏற்கனவே இரண்டு பதிவுகள் draft-ஆக உள்ளன. சரியான டோஸேஜில் விடுவிக்க வேண்டியதுதான் பாக்கி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹாய் மாம்ஸ்...
erinnern Sie sich an mich? Es ist mustdo. nach der langen Zeit! Ich erwarte mehr von Ihnen beste Wünsche
Hello Must Do, main Neffe. Ich habe ein starkes Gedächtnis. Darauf kann man sich verlassen. Wie geht es meiner Schwester (Ihrer Mutter).
இப்போது தமிழில். உம்மை மறக்கமுடியுமா மஸ்ட் டூ மருமகனே? என் தங்கை எப்படியிருக்கிறார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது என்ன பழமொழி...பழம் தின்னு கொட்டை போட்டவர் நீங்கள். சொல்லவா வேணும்.
நேரில் பார்த்தபோது கொடுத்த 'டிப்ஸ்'களுக்கு நன்றி.
எல்லோருக்கும் நல்ல வாரமாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி தருமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு ராகவன்..
ஏற்கனவே அணுகுண்டுகள் தயார் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏவுகணையில் ஏற்றி அனுப்ப வேண்டியதுதான் பாக்கி..விவாதம் தூள் பறக்கட்டும்.
நன்றி தெருத்தொண்டன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்கோ வாங்கோ டோண்டு ஐயா,
கலக்குங்கோ !!!
:-)
நன்றி குசும்பன் மற்றும் கும்பகோணம் கோவாலு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment