சில நாட்களுக்கு முன் நடந்து சென்னையில் நடந்து முடிந்த பிளாக்கர் மகாநாட்டுக்கு தமிழ் பிளாக்கர்கள் மிகக் குறைந்த அளவிலேயே வந்தனர் என்று ஒரு பதிவாளர் வருத்தப்பட்டிருந்தார். அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்ட்ங்கள், மற்றும் அவற்றுக்கான பதில்கள் பின்வருமாறு.
"டோண்டு says:
September 11th, 2006 at 4:43 pm
யாரும் சரியாக ரெஸ்பாண்ட் செய்யவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. எங்கோ மூலையில் ஒரு பதிவு போட்டு விட்டு, எல்லாவற்றையும் ஆங்கிலப் பதிவிலேயே போட்டால் இப்படித்தான் நடக்கும். உங்கள் முந்தையத் தமிழ் இடுகைக்கு ஒரு பின்னூட்டமும் வராதபோதே விழிப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?
இப்போது கூட நிகழ்ச்சிகளை ஏனோதானோ என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். பெட்டர் லக் அடுத்த முறை."
அதற்கான பதில்:
"விக்னேஷ் says:
September 11th, 2006 at 6:31 pm
@ டோண்டு,
// யாரும் சரியாக ரெஸ்பாண்ட் செய்யவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
;)
// எங்கோ மூலையில் ஒரு பதிவு போட்டு விட்டு, எல்லாவற்றையும் ஆங்கிலப் பதிவிலேயே போட்டால் இப்படித்தான் நடக்கும்.
நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். மற்றபடி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இது ஒரு நிறுவனமோ அல்லது தனிநபர் ஒருவரோ நடத்தும்/நடத்திய நிகழ்ச்சி அல்ல. தன்னார்வத்தில் பல வலைப்பதிவு நண்பர்கள் பலரும் சேர்ந்து நடத்துவது/நடத்தியது. அதனால் Spread of word என்பது இது குறித்த செய்திகளை படித்தோ/கேட்டோ தெரிந்தவர்கள் தன்னால் முடிந்தளவுக்கு மற்ற நண்பர்களுக்கு பரப்புவதினால்தான் முடியுமே ஒழிய ஒருவரே செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தால் அது இயலாத காரியம். (அல்லது அந்த ஒருவருக்கு அதிகமான தனித்திறமை வேண்டும்). நான் என் பங்குங்கு இரண்டு பதிவுகளை பதிவிட்டேன். அந்த உரிமையில் தமிழ் வலைப்பதிவர்கள் (குறைந்தது அதனைப் படித்த நண்பர்களாவது) ஏன் விருப்பபடவில்லை என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பதிவில் எழுதியிருந்தேன்
// உங்கள் முந்தையத் தமிழ் இடுகைக்கு ஒரு பின்னூட்டமும் வராத போதே விழிப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும்.
வழக்கமாகவே நம்ம பதிவுக்கெல்லாம் 1, 2 comments வர்றதே ஆச்சரியமான விஷயம்
// இப்போது கூட நிகழ்ச்சிகளை ஏனோ தானோ என்றுதான் எழுதியிருக்கிறீர்கள்
\”நான் எழுத விரும்பும் சுவாரசியமான நிகழ்வுகள் நிறைய இருக்கிறது. முடிந்தளவுக்கு வரும் பதிவுகளில் கோர்வையாக எழுத முயற்சிக்கிறேன்.\” என்றுதான் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன்."
அதற்கு எனது பதில்:
"டோண்டு says: September 12th, 2006 at 7:20 am
“வழக்கமாகவே நம்ம பதிவுக்கெல்லாம் 1, 2 comments வர்றதே ஆச்சரியமான விஷயம்”
அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்மணம் இப்போது இருக்கும் நிலையில் எந்த ஒரு பதிவும் சில நிமிடங்களுக்கு மேல் முதல் பக்கத்தில் நிற்பதில்லை. ஆகவே உங்கள் பதிவு எதையும் பார்த்ததாக ஞாபகமேயில்லை.
என்னுடைய இம்மாதிரியான பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிட்டு (இதில் சிவஞானம்ஜி ஐயா முக்கியப் பங்கு வகிப்பார்) பதிவு மேலே வருமாறு பார்த்துக் கொண்டோம். அப்படியும் 11 பேர்தான் வந்தனர். ஃபோனில் பலருடன் தொடர்பு கொண்டு அவர்கள் வருவதாக உறுதி கூறியபோதும் அவர்களையும் இதே காரணத்துக்காகப் பின்னூட்டமிட அழைத்தேன்.
உங்கள் மகாநாட்டின் முதல் நாள் பதிவிலேயே பார்த்தேன். எங்கு மீட்டிங் நடக்கிறது என்ற அடிப்படைத் தகவல் கூட கிடைக்கவில்லை. அதையும் நான் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.
இது மிக அண்மையான உதாரணம் என்பதாலேயே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இப்பதிவின் நோக்கம் வேறு. கொடுக்கும் செய்திகளில் துல்லியம் மற்றும் முழுமை வேண்டும் என்பதே அது.
சமீபத்தில் 1978-ல் தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது) ஒரு படம் பார்க்க எண்ணினோம். பேப்பரில் வெறுமனே தினசரி 3 காட்சிகள் என்று போட்டிருந்தார்கள். மாட்டினி ஷோ எத்தனை மணிக்கு என்ற விவரமே இல்லை. சரி தியேட்டரில் போட்டிருப்பார்களே பார்த்துக் கொள்ளலாம் சென்றால் அங்கும் அந்தத் தகவல் இல்லை. மேனேஜர் அறைக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டால் "எங்கள் தியேட்டரில் மேட்டினி காட்சி 2.45 மணிக்கு என்பது எல்லோருக்கும் தெரியுமே" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. ஆனால் அதே தியேட்டரில் சில நாட்கள் கழித்து இன்னொரு படத்துக்காக மேட்டினி ஷோவுக்கு 2.30 மணிக்கு சென்றால் படம் 2.15-க்கே ஆரம்பித்திருந்திருக்கிறார்கள். இது என்னப்பா புதுக்கதை என்று பார்த்தால் சம்பந்தப்பட்ட படம் (மாமன் மகள்) பெரிய படமாதலால் 2.15-க்கே ஆரம்பித்து விட்டார்களாம். ஏன் அதற்கான அறிவிப்பு இல்லை என்று பார்த்தால் அவ்வாறு அவர்கள் செய்வது எல்லோருக்குமே தெரியுமாம். எங்கு போய் அடித்துக் கொள்வது?
அண்ணா சாலையில் சிம்ப்ஸன் எதிரில் பல பஸ் ஸ்டாப்புகள் உண்டு. செல்லும் டெர்மினஸ்களை பொருத்து பஸ்கள் வேவேறு இடங்களில் நிற்கும். ஆனால் எந்த ஸ்டாப்பில் எந்த பஸ் நிற்கும் என்பதை மட்டும் போடவேயில்லை. ஒரு பஸ் கண்டக்டரிடம் கேட்டால் அவர் தனது பஸ் எந்த ஸ்டாப்பில் நிற்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என சத்தியம் செய்கிறார்.
சிங்கார வேலன் படத்தில் கமல் ஆட்டோ டிரைவரிடம் கேட்பார், "என்னப்பா மனோ வீடு தெரியாதுங்கறையே, அது குழந்தைக்குக் கூடத் தெரியும் என்று மனோ சொல்லியிருக்கானே" என்று. ஆட்டோ டிரைவர் (கமல் கொண்டு வந்த கருவாட்டுக் கூடையின் வாசத்தால் பொங்கி வரும் வாந்தியை அடக்கிக் கொண்டு) கூறுவார், "நான் என்ன குழந்தையா" என்று.
ஆனால் சில சமயம் வேண்டுமென்றே சரியான செய்தியை தருவதில்லை. சமீபத்தில் 1975-ல் ரஜனிகந்தா என்ற ஹிந்தி படம் பார்ப்பதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தபோது திடிரென ட்ரன்ஸ்ஃபார்மர் அறையில் நெருப்பு பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் ஹிந்துவில் பார்த்தால் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு தியேட்டரில் என்று செய்தி போட்டிருந்தார்கள். என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது. ஆனால் அதனால் என்ன ஆயிற்றென்றால் விஷயம் தெரியாத பலருக்கு என்ன தியேட்டர் என்று தெரியவில்லை. ஆனந்தாக இருக்குமா, சாந்தியாக இருக்குமா என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதே போல கையெழுத்திடும்போது வேண்டுமென்றே தேதி போடுவதில்லை, அப்படியே போட்டாலும் வெறுமனே 24/08 என்று போட்டு விடுகின்றனர் வருடம் போடுவதில்லை. இதே மாதிரி பொறுப்பின்றி வருடங்களில் இரண்டு எண்களை மட்டும் போட்டுத்தானே Y2K பிரச்சினையே வந்தது? எவ்வளவு கால மற்றும் பணவிரயங்கள்?
இதெல்லாம் பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. விஷயங்களைத் தரும்போது அவை துல்லியமாக முழுமையாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்கக்கூட யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.
இந்தத் தருணத்தில் நியாயப்படுத்த முடியாத துல்லியம் பற்றியும் பதிவிட்டுள்ளேன். அதாவது துல்லியம் கொடாது இருப்பதும் சில இடங்களில் அவசியம். அது பற்றி துல்லியமாக அறிய அப்பதிவைப் பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
12 comments:
மன்னிக்கணும் - பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்..
Ich möchte mit dir in Verbindung treten. Kannst du mir dein email address geben?
Macht nichts. Meine Email-ID lautet: raghtransint at gmail.com
Mit freundlichen Grüßen,
Dondu N.Raghavan
மன்னிக்கணும் - பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்..
எனது பதிவுகளில் தலைப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனது பதிப்புகள் [no title] என்றே வருகின்றன. நான் உபயோகிப்பது ப்லொக்ஸ்பாட்.காம் இணையதளம். அங்கு எடிட் போஸ்ட் என்னும் ஆப்ஷனில் எடிட் ஹெச்.டி.எம்.எல் - ஐ சொடுக்கி ஏதோஏதோ செய்து பார்த்துவிட்டேன். ஆனால் தலைப்பு 'அனுப்பு' பட்டைக்கு மேலே வர மாட்டேன் என்கிறது. தயவு செய்து உதவவும்.
திருமொழியான்.
தலைப்பு எப்படி வராமல் போகும் திருமொழியான் அவர்களே?
Dashboard>new post என்று வந்தால், தலைப்பு பெட்டி தனியாக வரும் அதில் தலைப்பை நுழைக்க வேண்டியதுதானே. பதிவு விஷயத்தை மட்டும் கீழ்ப்பெட்டியில் போட வேண்டும். பிறகு பப்ளிஷ் பட்டனை அழுத்தவும். பிறகு ரீபப்ளிஷ் இண்டெக்ஸை அழுத்தவும். தீர்ந்தது விஷயம்.
தலைப்பையும் இரண்டாம் பெட்டியிலேயே இட்டால் நீங்கள் கூறியது போலத்தான் நடக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களது மறுமொழியில் நான் எதிர்பார்த்த பதில் இல்லையென்றாலும் ஒரு க்ளூ இருந்தது. அதாவது எனது ஸெட்டிங்ஸில் "Show title bar" என்பதை "No" என்று கொடுத்திருந்தது தவறு என்று அறிந்தேன்.
நன்றி ஐயா.
நல்லது திருமொழியான் அவர்களே. எப்படியானால் என்ன, பிரச்சினை தீர்ந்தால் சரிதானே.
ஆனால் ஒன்று நீங்கள் தலைப்புகள் எல்லாம் பழைய பதிவில் இட்டாலும், தமிழ்மண பக்கங்களில் பழையபடிதான் வரும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது//
Ich mag dieses Wörter für Ihren Ausdruck über Hindu
மகேந்திரன் அவர்களே, அக்காலக் கட்டத்தில் நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. பல அரசு அதிகாரிகள் திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்களை டிஃபண்ட் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் கூடத் தரப்படவில்லை. அம்மாதிரி டிஸ்மிஸ் செய்யப்பட்ட செய்திகளை ஹிந்துவும் மற்ற பத்திரிகைகளும் சம்பந்தப்பட்டவர் பெயர், விலாசம், வகித்த பதவியின் பெயர், துறை எல்லாம் துல்லியமாக வெளியிட்டன. அதனால் மனம் நொந்தவர்கள் அனேகம்.
ஆனால் இந்த தியேட்டர் விஷயத்தில் மட்டும் ஹிந்து பூசி மொழுகியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dies ist kein großes Geschäft. Welches ein kann machen, Deutsch einzutippen, ist, geht nur zur Stelle FreeTranslation.com und Typ auf Englisch. Und erhält es in irgendeiner Sprache. Mit einer grundlegenden Kenntnis von einer anderen Sprache können Sie veryfy, was Sie getippt haben.
Dies ist kein großes Geschäft --> It is no big deal. I know. But from the way the original English sentence has been translated into German, I can straight away say that it's machine translation.
No problem Vajra, as long as one does not end up with "Out of sight, out of mind" being translated as "invisible idiot"!
Regards,
Dondu N.Raghavan
Found the work-around. After pressing, 'Post your comment', it shows clearly.thanks
Found the work-around.
Good.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment